Advertisement

அத்தியாயம் – 21

அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன்.

அவன் குரலில் ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா, அவ

ன் கேள்வியில் திகைத்தும் போனாள். ‘என்னைத் தெரியவில்லையா? இவனுக்கு!’ என்று திகைப்பில் அவள் கண்கள் சிமிட்டியது. பின் தான் மனித உருவில் இருப்பதால் இவனுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லையோ!. அதுவும் நல்லதுக்கேஎன நிம்மதியுற்று இதழ் விரித்தாள்.

அவன் கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லாமல் அவள் புன்னகைப்பதைப் பார்த்து எரிச்சலுற்ற முகிலன், அவனது வாளை இன்னமும் கழுத்தின் அருகில் நெருக்கி, “யாரென்று சொல்லாமல் என்ன சிரிப்பு?” என்றான் சத்தமாக.

அவன் கோபமாகக் கேட்டப் போதும் அவனுள் எந்தக் கொலைவெறியும் இல்லை என்பதை உணர்ந்த அவந்திகா, அவள் கழுத்திலிருந்த வாளைத் தன் ஒற்றை விரலால் விலக்கி, “நானா?” என்று தன் மற்றொரு கையிலிருந்த அந்தப் பாம்பு தகரை அவனை நோக்கி வீசினாள். முகிலனும் அனிச்சை செயலாக அந்தத் தகடை பிடித்தான்.

பின் அவனைக் கடந்துச் சென்று அவன்பின் இருந்த தாமரை குளத்தை நோட்டமிட்டப்படி, “நான் ஒரு வழிப்போக்கன்என்றாள்.

அவள் முதுகையே பார்த்திருந்த முகிலன், “வழிப்போக்கன் என்றால்? எங்கிருந்து வருகிறாய். எங்குச் செல்கிறாய்?” என்றான் குரலில் இளக்கம் இல்லாமல்.

அவனைத் திரும்பிப் பார்த்த அவந்திகா, “நான் எங்கிருந்து வருகிறேன்?” என்று ஒரு நொடி யோசித்தவள், “நான் எங்கிருந்து வருகிறேன் என்று சொன்னால் உனக்குப் புரியாது. ஆனால் நான் மகர அரசுக்கு அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்என்றாள்.

மகர அரசு என்றதும் திகைத்த முகிலன், “இங்கிருந்து…? மகர அரசுக்கு…? அவசரமாக…? மனித யாளியாகிய நீ…?” என்று வார்த்தைக்கு வார்த்தை நிறுத்தியவன், “ஹாஹாஹா” என்று சிரித்தான்.

ஏய் பெண்ணே! என்ன அவசரமாக என்றாலும், உன்னால் இடம்மாற்றும் சக்கரம் உருவாக்க முடியாது. நீ பறக்கும் சக்கரம் உருவாக்க முடியாமா என்றும் தெரியாது. அப்படியே முடிந்தாலும், உன்னுடைய சக்தியால் அதிக தூரம் பறக்கவும் முடியாது.

அப்படியிருக்க, எங்கும் நில்லாமல் சென்றாலும், நீ சென்று மகர அரசு சேர கிட்டத்தட்ட 6 மாதமாவது ஆகும். இதில் அவசரமாகச் செல்கிறேன் எங்கிறாய்என்று மீண்டும் ஹாஹாஹா…” என்று சிரித்தான் முகிலன்.

முகிலனை இங்குப் பார்த்ததுமே அவந்திகா இது பரியரசு என்று அறிந்துக் கொண்டாள். அவளுக்குமே இப்போது இங்கிருந்து மகர அரசுக்கு உடனே போவது சத்தியமில்லையென்று நன்கு தெரியும்.

ஏனென்றால், மகர அரசு தெற்கிலென்றால், பரி அரசு அதற்கு நேர் எதிரே வடக்கில் உள்ளது. கிழக்கில் சிம்ம அரசும், மேற்கில் மாதங்க அரசும் உள்ளது. இதனால், பவளனிடம் உதவிக் கேட்க எண்ணியிருந்தாள். இதையெல்லாம் முகிலனிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அதனால் அவனது சிரிப்பை வெட்டித் தரித்தாற்போல, “அது… என் கவலை. நீ கவலைப் பட வேண்டிய அவசியமில்லைஎன்றவள் அவனைக் கடந்து நடக்க ஆரம்பித்தாள்.

இருந்தும் அந்தப் பாம்பைப் பார்த்ததில் அவள் உள்ளம் எதுவோ பெரிய பிரச்சனை பரி அரசு பாதுகாப்பில் உள்ள மனிதயாளிகளுக்கு வந்திருப்பதை அசட்டையாக விட்டுச் செல்ல மனம் இல்லாமல் மீண்டும் அந்தக் குளத்தின் எதிரே வந்து நின்றாள்.

அவளையே பார்த்திருந்த முகிலன், அவள் துணிச்சலான பேச்சில் திகைத்துத்தான் போனான். மனித யாளிகள் பொதுவில் சக்தி குறைந்தவர்கள் என்பதால், எப்போதும் பரியாளிகளுக்கு இயல்பிலே அதிக மரியாதை கொடுப்பர். ஆனால் இந்தப் பெண் தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லையே!’ என்று நினைத்தான்.

அவன் மறுமடியும் வேறு கேள்விக் கேட்குமுன்னே, அவந்திகா, தன் இரு விரல்களைத் தன் நெற்றியில் வைத்து, கவனிக்கும் சக்கரத்தைக் குளத்தை நோக்கி உருவாக்கினாள். சில நிமிடம் ஊர்ந்து மனதிரையில் கவனித்த அவந்திகா, பின் பெருமூச்சுவிட்டு முகிலனிடம் திரும்பினாள்.

ரிஷிமுனி.! அந்தப் பாம்பு ஒரு பகடைக்காய் மட்டுமே.” என்ற அவந்திகா, தன் முகவாயில் கை வைத்து, கண்ணில் தீவிரம் தெரிய, “என் கணிப்பு சரியென்றால், இந்தப் பாம்பு தாமரை குளத்திலிருக்கும் உயிர் உறிஞ்சும் சக்கரத்தை(Soul Absorbing Array) பாதுக்காக்க யாராலோ ஏவப்பட்டிருக்க வேண்டும்.

பாம்பை நாம் அழித்ததால் இந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்தை நம்மால் எளித்தில் இப்போது அழித்திட முடியும். இதனால் இனி யாரும் புதிதாகப் பாதிக்கப் படமாட்டார்கள். ஆனால்…” என்று நிறுத்தி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவள் சொல்வதை இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்என்று வியப்பு குறையாமல் விழி விரித்துப் பார்த்திருந்த முகிலன், அன்னிச்சை செயலாக, “ஆனால்? என்ன?” என்றான்.

அவன் முகத்தைப் பார்த்தவள், ‘இவன் இன்னமும் மாறவில்லை. சிறுப் பிள்ளைப் போலக் கதை கேட்பதைப் பார்?!’ என்று பழைய நினைவில் பெருமூச்சுவிட்டு, “ஆனால், ஏற்கனவே இந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்தால் பாதிக்கப் பட்டிருந்தால், இந்தச் சக்கரத்தை உடைத்தவுடனே, அவர்கள் உடனே இறந்துவிட கூடும். அதனால் பிரச்சனையின் மூலக் காரணத்தைக் கண்டுப் பிடித்து அதனை அழிப்பது உசிதமான வழியாகும்என்றாள்.

அதனைக் கேட்ட முகிலனுக்கு அவள் சொல்வது சரிதான் எனப்பட்டது. அவள் சொல்வது புரிந்தது என்பதுப் போல ம்ம்…” என்று தலையசைத்தான். பின் தாமரை குளத்தின் அருகில் வந்து, அந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்திற்கு மேல் யாரும் இந்தக் குளத்திற்கு அருகில் வர முடியாதப்படி, மந்திரப் பூட்டு சக்கரம்(Locking Array) வரைந்தான்.

அவன் செய்வதை அமைதியாக ஓரத்திலிருந்து பார்த்திருந்த அவந்திகாவின் இதழ் மீண்டும் விரிந்தது. பின், “புரிந்தது என்றால், நான் கிளம்புகிறேன். 6 மாதமானாலும் என் தோழர்கள் எனக்காக மகர அரசில் காத்திருப்பர். அதனால், நான் வருகிறேன் ரிஷிமுனிஎன்று கரம் குவித்து வணங்கிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் போவதைப் பார்த்த முகிலன், கண நேரத்தில் காற்றைப் போல வேகமாக நகர்ந்து அவந்திகாவின் முன் வந்து நின்று, “நில்… உனக்கெப்படி உயிர் உறிஞ்சும் சக்கரம்பற்றித் தெரியும்.” என்றான்.

அவனது பார்வைக்கு சலிப்பு இல்லாமல் பதில் பார்வை பார்த்தவள், எரிச்சலுற்ற சிரிப்பை (Smirk) உதிர்த்து, “ஏன்? பரி அரசின் குலகுருவான சந்திர குருக்கு மட்டும்தான் உனக்கு எதுவும் சொல்லித் தரவில்லையா.

அல்லது அவருக்கு மட்டும்தான் உயிர் உறிஞ்சும் சக்கரம்பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதேனும் நிபந்தனை இருக்கிறாதா? ஆர்வமுள்ள யாரும் அதற்கான நூலைப் படித்தால் ஞானம் வரப் போகிறது.” என்று விற்றேற்றியாகச் சொல்லிவிட்டு அவனைக் கடந்து மேலும் நடந்தாள்.

முகிலனுக்கு அவளது பேச்சு முறையில் வன்னியின் நினைவு வர, அவனையும் அறியாமல் மனம் இளகியது. ‘இளவரசி(வன்னி) விளையாட்டாக 400 வருடங்களுக்கு முன் எழுதிய அனைத்து சக்கரங்கள் அடங்கிய காணாமல் அந்த நூல் இந்தப் பெண்ணிடம் கிடைத்திருக்குமோ!. அதில் தான் இவள் இவற்றைக் கற்றிருப்பாளோ!’ என்று அவனையும் மீறி நினைத்தான்.

அவள்புறம் திரும்பாமலே, “உன்உனக்கு வன்னி, என் இளவரசியைத் தெரியுமா?” என்றான்.

அவனது கேள்வியில் ஒரு நொடி உடல் விறைத்த அவந்திகா, அவள் நடை தடுமாறி நின்றது, பின் திரும்பி அவனைப் பார்த்தவள். “ஏன்? கேட்கிறீங்க ரிஷிமுனி?” என்றாள்.

கேட்டுவிட்டப்போதும் முகிலனின் மனம் வன்னி பற்றித் தொடர்ந்து பேச முடியாமல் வலிக்க, அந்தப் பேச்சை விடுத்து, “அதை விடு. எனக்கு இந்த உயிர் உறிஞ்சும் சக்கரத்தில் பிரச்சனை சரி செய்ய நீ உதவினால், நான் என் அரசிடம் சொல்லிப் பரி அரசுக்கும் மகர அரசுக்கும் பிரத்தேகமாகவும் அவசர காலங்களிலும் பயன்படுத்தும் இடம்மாற்றும் சக்கரத்தைப் பயன்படுத்த உனக்கு அனுமதி வாங்கித் தருகிறேன்.

நீ 6 மாதம்வரை பொடி நடையாக மகர அரசுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. இங்குப் பிரச்சனை முடிந்த, 2 நாளிலே அங்குச் சென்று விடலாம். என்ன சொல்கிறாய்?” என்று அவளிடம் பேரம் பேசிப் புன்னகைத்தான்.

அவனது வியாபார யுக்தியை நினைத்து அவந்திகா வியந்தாள். ‘இப்படி காரியம் முக்கியமாக முன்பு முகிலன் யோசித்ததில்லையே. இப்போது என்னவாயிற்று இவனுக்கு. இந்த 400 வருடத்தில் நல்லது, கெட்டது, முக்கியமானது, அவசரமற்றது என்று பிரித்தறியும் ஞானம் இவனுக்கு வந்துவிட்டதோ.!’ என்று நினைத்தவள், அவன் இன்னமும் தன் பதிலுக்குக் காத்திருப்பது உணர்ந்து,

தனக்குமே இந்த மக்களை அப்படியே விட்டுச் செல்ல விருப்பமில்லைதான். அதனோடு நான் கூடியவிரைவில் பவியை பார்க்க வேண்டும். அதனால் இந்த வாய்ப்பை நழுவ விடுவது முட்டாள்தனம் என நினைத்து, “சரி… ஆனால் ஒரு நிபந்தனைஎன்றாள்.

முகிலனுக்கு அவள் சரி என்றதே ஏனோ சந்தோஷமாகப் பட, “என்ன நிபந்தனை. எதுவென்றாலும் சரிதான்.” என்றான்.

அவனது பதிலில், ‘ம்ம்! (-_-) அவசர பட்டு யோசித்து செயல்படுபவன் என்று தவறாக முகிலனை நினைத்துவிட்டோமோ!. என்ன நிபந்தனை என்று தெரியுமுன்னே சரி என்கிறான்!’ என்று பெருமூச்சுவிட்டாள்.

பின், “என்னைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது. என் பெயர் அவந்திகா. அது மட்டும் இப்போது உனக்குத் தெரிந்தால்போதும்என்றாள்.

அவள் முகிலனை ரிஷிமுனி என்றப் போதும், முன்பு இருந்த பழக்கமான நீ வாப் போன்று ஒருமையில் பேசுவதை உடனே அவளால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவளது பேச்சு மாற்றம் முகிலனுக்கு அவளது சிநேகிதி, இளவரசி வன்னியில் நினைவைத் தர அவனுக்கும் அதனைப் பேதமாக மாற்றிப் பேசு என்று எடுத்துச் சொல்லத் தோன்றவில்லை.

முகிலனும், வேகமாகத் தன் தலையை அசைத்து, “சரி அவந்திகாஎன்றான் புன்னகையுடன்.

அவளும் பதிலுக்குப் புன்னகைத்து, “சரி. இப்போது பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு போகலாமா?” என்றாள்.

முகிலன், “போகலாம். என் கைப்பற்றிக் கொள். நான் பறக்கும் சக்கரம் உருவாக்குகிறேன்.” என்று அவளை நோக்கிக் கையை நீட்டினான்.

அவன் கையையேப் பார்த்த அவந்திகா, அவன் கையைப் பற்றாமல், “இங்கிருந்து அந்தக் கிராமம் கொஞ்ச தூரம் தானே இருக்கும். நான் நடந்து வந்துக் கொள்கிறேன்என்றாள்.

அவளது இந்தச் செயலில் முகம் சோர்ந்த முகிலன், “ம்ம்என்று தலைத் தாழ்தினான். பின் ஆனால் நாம் ஓடையைக் கடக்க வேண்டும். அங்கு வேதன், அந்தக் கிராம பஞ்சாயித்துத் தலைவர் எனக்காகக் காத்திருக்கிறார். அதுவரையாவது, பறக்கும் சக்கரத்தில் போகலாமே?” என்றான்.

அவன் முகத்தை ஏறிட்ட அவந்திகா இவனை வைத்துக் கொண்டு என்னச் செய்வதுஎன்று புரியாமல் பெருமூச்சுவிட்டு, “என்னால் பறக்கும் சக்கரம் உருவாக்கிக் கொள்ள முடியும். நீ முன்னே சென்றால் நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன்.” என்று தன் இரண்டு விரல்களை நீட்டித் தன் காலுக்குக் கீழே வெள்ளை நிற பறக்கும் சக்கரத்தை(Flying Array) வரைந்தாள்.

மனித யாளி, சக்கரம் வரைவதே வியப்பு என்றால், இவள் பரியாளிகளின் நிறமான வெள்ளை நிறத்தில் பறக்கும் சக்கரத்தைப் பட்டென வரைந்துவிட்டாள்என்று முகிலன் திகைத்து, “பரியாளியின் வகைச் சக்கரம். எப்படி?” என்றான்.

அவந்திகா அவனை முறைத்து, “என் நிபந்தனை அதற்குள் மறந்துவிட்டதா? என்னைக் குறித்து எதுவும் கேட்கக் கூடாதுஎன்றாள்.

அதற்கு அவசரமாக, “இல்லை, இல்லை. நான் கேட்கவில்லை.” என்றுவிட்டு, அதன் பிறகு தாமதிக்காமல் அக்கரைக்கு பறந்துச் சென்றான் முகிலன். அவந்திகாவும் அவனைத் தொடர்ந்தாள்.

அதன்பிறகு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் மூவரும் அந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டனர். அது நல்லிரவு போல, வீதியில் ஆங்காங்கே விளக்கெரிந்தப் போதும் முழு வெளிச்சமில்லை. மனித யாளிகள் அனைவரும் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வேதன், “ரிஷிமுனி, இன்று இரவு நீங்க ஓய்வெடுத்துக் கொள்ளுங்க.” என்றவர் உடன் வந்திருப்பது மனிதயாளி வகைப் பெண் என்பதை உணர்ந்து, அவள்புறம் திரும்பி, “அம்மா. அந்த டீபாய் மீது சில உணவு வைக்கச் சொல்லியிருக்கிறேன். உண்டுவிட்டு சிறிது உறங்கு. மற்றது நாளைப் பேசலாம்என்று தன் வீட்டு பெண்ணைப் போலக் கணிவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சரிங்க ஐயா! நன்றிஎன்று கரம் குவித்து சொன்னவள், அவரது செயலில் மனித உலகில் இருக்கும் தன் தாய் தந்தையரின் நினைவுவர மனம் சோர்ந்து, ‘அவர்களிடம் சொல்லாமல் கூட இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே! எப்படி இருக்கிறார்களோ!’ என்று கவலையுற்றாள்.

முகிலன் அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றுவிட்டான்.

அவந்திகா தன் மனித உலகின் பெற்றோர்களான, செல்வம் மற்றும் கனிதாவுடன், பிணைப்பு இல்லாமல் இருப்பதுப் போல இருந்ததாகதான் நினைத்திருந்தாள். ஆனால் அவர்களது அருகாமையை இழந்தப்பிறகே அவர்கள்மீதும் தான் பாசம் வைத்திருப்பதை அவந்திகா உணர்ந்தாள்.

பின் எதுவும் இப்போது செய்ய முடியாது என்பதை உணர்ந்த அவந்திகா பெருமூச்சுவிட்டு, ஒற்றை படுக்கையுடன் கூடிய அந்த அறையில் உண்டப் பின் படுத்துக் கொண்டாள்.

அப்போது, “இளவரசி. உங்க பெற்றோரிடம் உங்களைப் பற்றிய தகவலைத் தந்துவிட்டேன். அவர்கள் நலமுடம் இருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம். அதனோடு உங்க தோழி மற்றும் தோழரின் நினைவுகள் பூமியில் உள்ள யாராலும் நினைவுகூற முடியாதப்படி மேகனது குரு அவனுக்கு மந்திரம் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். இப்போது உங்களைத் தவிர அவர்கள் இருவரையும் அறிந்தவர்கள் பூமியில் யாருமில்லை.” என்றான் அவள் கவலை உணர்ந்தப்படி.

உடனே விழுக்கென்று அமர்ந்தவள், தன் பெற்றோர்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ந்தாள். ஆனால் பாவானா மற்றும் கார்திக்கைப் பற்றி அறிந்ததில் கவலையுற்றாள்.”என்ன சொல்றீங்க பவளன். அப்படியேனும் பவியை இந்த யாளி உலகுக்கு அழைத்து வர வேண்டிய அவசியமென்ன?” என்று கேட்டாள்.

பவளன், “மேகன் மற்றும், அவனது குருவின் இலக்கு பவியோ, கார்திக்கோ இல்லை இளவரசி. அது நீங்கதான் என்பது என் கணிப்பு. மேகனின் நடவடிக்கைகளைக் கவனித்துதான் நாம் அவர்கள் நோக்கம் அறிய முடியும்என்றான்.

அவந்திகாவும் பவளனைப் போலவே நினைத்ததால், “சரிதான்.” என்றாள். பின் நிறுத்தி, “உங்க ஆன்ம இணைப்பின் கடவுச்சொல்(password) என்ன? நீங்கத் திடீரென்று பேசுறீங்க. அப்பறம் காணாம போயிட்றீங்க. நான் பேச நினைத்தால் உங்களை எப்படி தொடர்புக் கொள்வது. ” என்று நேரடையாகக் கேட்டாள்.

அதனைக் கேட்ட பவளன், சின்னச் சிரிப்பை(chuckle) உதிர்த்து, “உங்களுக்கும் எனக்கும் இடையில் கடவுச்சொல் அவசியமில்லை. நீங்க என்னிடம் பேச நினைத்து உங்க நெஞ்சில் கை வைத்தால் நான் பேசுவேன்என்றான் பவளன்.

அதனைக் கேட்ட அவந்திகா, “பவளன், உங்களையும் சரி. நந்தனையும் சரி. என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. உங்க இருவரின் நோக்கமும் புரியவில்லை. உங்களைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை.” என்று சோர்ந்தாள்.

பவளன், “…(@_@)”.

அவனிடமிருந்து பதில் வராததும், “பவளன்?” என்றாள்.

பவளன், “இளவரசி, நேரமாகிவிட்டது. நான் அங்குதான் வந்துக் கொண்டிருக்கிறேன். நான் நேரில் எல்லாவற்றையும் சொல்கிறேன். இப்போது உறங்குங்கஎன்றான்.

அவன் இங்கு வருவதாகக் கேட்டதும் அவந்திகாவின் முகம் பிராகசம் அடையதான் செய்தது. உடனே, “ம்ம்சரிஎன்றுவிட்டு உறங்கவும் செய்துவிட்டாள்.

மறுநாள் காலையில்…

யாளி உலகில் ஒவ்வொரு அரசின் எல்லைகளில் மட்டுமல்லாமல் ஆங்காங்க பயணம் செய்பவர்கள் ஓய்வெடுப்பதற்காகவே பரவலாகப் பல சத்திரங்கள் கட்டபட்டு பயன்பாட்டிலிருந்தன. ஒவ்வொரு அரசும் அதனைப் பராமறிக்க அதற்காக மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருந்தது.

அந்தச் சத்திரங்களில் இலவசமாகத் தங்க நினைப்பவர்கள், பொது அறையில் அனைவருடனும் தூங்கலாம். காசு இருப்பவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப, பணம் செலவு செய்து அறைகளைப் பதிவு செய்து அதில் தங்கிக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஒரு சத்திரத்தின் ஒரு அறையில்தான் பாவனா உறங்கிக்கொண்டிருந்தாள். குளிர் அதிகமாக இருந்திருக்க வேண்டும். மெத்தை தைத்த கனத்த போர்வையை(Comforter) மேலும் இழுத்து தன் முகம் மறைய போர்த்திக் கொண்டாள்.

இருந்தும் குளிர் போகததால் அவள் படுத்திருந்த மெத்தையில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டாள். அப்போது உடலுக்குச் சூடான எதுவோ அருகில் பட அதனைப் பற்றிக் கொண்டு தன் கன்னத்தை அதில் உரசினாள்.

உடனே ஏனோ மாறுதலாகத் தோன்ற, லேசாக நெற்றி சுருக்கி, இமை விரித்து அரை கண்ணால் எதிரில் இருந்ததைப் பார்த்தாள். பார்த்தவள் ஏதோ வெள்ளை நிற ரோமம் போலத் தோன்ற குழப்பமாக மேலும் இமைப் படப்படத்து கண்களை நன்கு திறந்துப் பார்த்தாள்.

முகம் தெளிந்து தன் கன்னத்தின் அருகில் இருப்பது என்னவென்று உற்று நோக்கியவள், விதிர்விதித்து, “ஆ…என்று கத்தினாள்.

அவளது கத்தலில், அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளை நிற ஆட்டுக் குட்டி, துடுக்குற்று மெத்தையிலிருந்து தரைக்கு தாவிக் குதித்து அவளை ஏறிட்டு நின்றது. தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் ஆ… ஆட்டு குட்டி… ஆ…” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.

ஆம். பாவனாவிற்கு ரோமமுள்ள எந்த உயிரனங்களையும் தொட பிடிக்காது(Dora phobia-Fear to fur Animals). அப்படி இருக்க தன் அருகில் அழகாகவே இருந்தப் போதும் ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் ஒவ்வாமை(Allergy) வந்தவள் போலக் கத்த ஆரம்பித்துவிட்டாள்.

Advertisement