Advertisement

அத்தியாயம் -16

அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.’ என்று புரியாமலும் குழம்பியபடி, “சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்என்றான் கார்திக்.

அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு (ticket) வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக பூங்காவினுள் நுழைந்தாள்.

எங்கே ராட்சத ரங்கராட்டினம் இருக்கிறது என்று அவள் உள் நுழைந்ததுமே, இப்படியும் அப்படியும் பார்த்து, கண்டுபிடித்து, அதனை நோக்கி ஓடினான். ஆபத்தென்றால் சண்டையிட நேரிட்டாலும் நேரிடலாம் என்று நினைத்து, சுடித்தாரே அணிந்திருந்தாள் அவந்திகா.

அதனால் தவணியால் நடக்கும் போது ஏற்படும் தடையில்லாமல் விரைவிலே ராட்டினத்தின் அடிக்கு வந்துவிட்டாள். ஆனால் அங்கு கார்திக், பாவனா மட்டுமல்ல, அவள் அறிந்தவர்கள் என்று யாருமில்லை.

அதே இடத்தில் நில்லாமல் கண்ணில் அவர்கள் படுகிறார்களா என்று அவளது விழிகள் அவர்களை தேடியவிதமாக நடந்தாள். அதனோடு தன் கைப்பேசியில் பாவனாவிற்கும் அழைத்தாள். அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுஎன ஒலித்தது.

பாவனாவை காணாமலும், அவளிடம் பேச முடியாமலும், நேரம் ஆக ஆக அவந்திகாவின் பதற்றம் அதிகரித்துக் கொண்டே போனது. உடனே கார்திக்கின் அலைப்பேசிக்கு அழைத்தாள். அதுவும் தொடர்புக்குள் இல்லை என்று வர, அவள் வயிற்றில் குளிர் பரவியது. உடனே கண்கள் மூடி தன் ஆன்மீக விழிப்பில் (spiritual Conscious) தன் கைக்காப்பின் தூரத்தை கணித்தாள்.

அதன் தூரம் ஒரு வினாடி, 100 காததூரமாக இருந்து (166.7 km)(1) , மற்றொரு நொடி பல ஆயிர காததூரமாக பெருகியது. ஒவ்வொரு வினாடியும் அதன் தூரம் அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்த அவந்திகா அவளின் உடலில் உள்ள இரத்தமெல்லாம் உறைந்தது போல செயலற்று போனாள்.

அவளது கால்கள் சக்தியற்றது போல துவண்டு பொத்தென்று கற்காரை(Concrete) சாலை என்றும் உணராமல் முட்டிகால் மடங்கி விழுந்தது. இளக்கமே இல்லாமல் மோதிய அவந்திகாவின் முட்டியில் காயம் ஏற்பட்டு, சுடித்தாரின் கால்சட்டையையும் மீறி சிவப்பு நிறம் வெளிபட்டது.

அவந்திகாவின் உதடுகள், அவளையும் அறியாமல், “இடம்மாற்றும் சக்கரம்(Teleporting array)” என்று முனுமுனுத்தது. அவளது கண்கள் எங்கோ வெறித்து, அவள் கண்களில் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவளது உதடுகள், “பவி… பவிஎன்று திரும்ப திரும்ப சொல்லியவண்ணம் அவள் குரல் நடுங்க ஆரம்பித்தது.

எதிரில் யார் வருகிறார்கள் என்றும் தெரியாமல் விழி நீர் பார்வையை மறைக்க அதற்கு மேலும் தாங்க முடியாமல், “என்னால் நீயும் மாட்டிக்கொண்டாயே! யாளிகள் என் கைக்காப்பை உணராமல் இருக்க நம் அறையில் மந்திரபூட்டு சக்கரம்( Locking Array) போட்டேன். ஆனால் நான் உன் கைக்கும் அது அகபடாமல் எடுத்து வைக்க மறந்துப் போனேனே!” என்று முட்டி போட்டவிதமே தன் உள்ளங்கைகளில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்தாள்.

சூழலுக்கு மாறுப்பட்டு தெரிந்த அவந்திகாவை அந்த பூங்காவில் இருந்தவர்கள் திரும்பி திரும்பி பார்த்து அவர்களுக்குள் சலசலத்துக் கொண்டு சென்றனரே தவிர அவளை தேற்றுவாரில்லை.

நான் என்ன செய்வேன். உன் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வேன். நீஉனக்குஉன்னை… அவர்கள் எதுவும் செய்யவிட மாட்டார்கள்தானேஎன்று பிதற்றுகிறோன் என்று உணர்ந்த போதும் என்ன செய்வதென்று புரியாமல் இயலாமையிலும், கோபத்திலும் அவள் கன்னங்கள் சிவந்தன.

உடனே அவள் உள்ளமே அவளை எள்ளி நகையாடியது. ‘என்ன எதிர்பார்கிறாய். உன் கைக்காப்பால் பாவனாவை நீ என்று எண்ணி எந்த யாளி அவளை அனுகிருந்தாலும் உன் மீது உள்ள வெறுப்பில் உன் கைக்காப்பை பார்த்ததுமே யாளிகள் உண்மை அறியுமுன் அவளை கொன்றிருப்பர்.

ஓரிரு யாளிகளா 400 வருடத்திற்கு முன்பு உன் இறப்பை எதிர்பார்த்து நின்றனர். பலாயிரம் யாளிகள். அதுவும் ஆன்மீக சக்தியுள்ள யாளிகள். நிச்சயம் நீ யாளி உலகை விட்டு வந்ததும் உன் இறப்பை எண்ணி, மனித உலக தீபாவளி போல யாளிகள் கோலாகலமாகக் கொண்டாடி இருப்பர்.

அப்படி இருக்க உன் மரணத்திற்கு பிறகான இந்த ஜனனம் மனித உடலே என்ற போதும் அவர்களுக்கு அச்சுறுத்தல்தானே. அதனால் பாவனா உன் கைக்காப்புடன் யாளிகள் கையில் அகப்பட்டால் சாதரண மரணம் கூட அல்ல. சித்தரவதை மிகுந்த மரணத்தையே அவளுக்கு தருவர். நீ அனுபவித்தது உனக்கு மறந்துவிட்டதாஎன்றது.

அவளதுதான் அந்த மனம் என்ற போதும் அவளுக்கு கொஞ்சமும் ஆறுதல் தராமல், நெருப்பை அள்ளி அவள் மீது போட்டது. பாவனாவை தொலைத்தது ஒரு துயரமென்றால் அவள் மனம் சொன்னதால் உணர்ந்த குற்ற உணர்ச்சி மற்றொரு துயரம். இரண்டும் சேர்ந்து அவள் அடிவயிறு காந்த, உலர்ந்த உதடுகளுடன் பவிபவி.. நீயும் என்னை விட்டு போய்விடாதே.

அய்யோ முன்பாவது என்னிடம் 6 சக்கர ஆன்மீக ஆற்றல் இருந்தது. அதனால் என்னால் என்னை சுற்றியிருந்த சிலரையாவது காப்பாற்ற முடிந்தது. ஆனால் இப்போது..? நான் என்ன செய்வேன்என்று அவள் அலற்றினாள்.

அப்போது, “இளவரசிஎன்று ஆன்ம இணைப்பில்(soul Link)(2) ஒரு குரல் கனிவாக அவளை அழைத்தது. அந்த குரலில் நீரில் மூழ்குகிறவனுக்கு கிடைத்த பற்றுக்கோல் போல பவளன்என விழுக்கென்று நிமிர்ந்தாள்.

உங்க தோழிக்கு எதுவும் ஆகவில்லை. அவளை மஹர்லோகத்திற்கு(3) மேகன் அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறான். அவனிடம் உங்க தோழியை நோக்கி எந்தவித கொலைவெறியுமில்லை.அதனால்என்று அவன் ஆன்ம இணைப்பில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

அவந்திகா, “உண்மையாகவா? அவளுக்கு எதுவுமில்லையே. மேகன் நல்லவிதமாகதான் பவியிடம் நடந்துக் கொண்டான். அவன் அவளை எதுவும் செய்ய மாட்டான்தானேஎன்றாள் விழியில் உயிர்ப்பு மீண்டவளாக.

அவளது தெளிந்த குரலில், பெருமூச்சுவிட்டவனாக, “ம்ம்என்றான்.

மேகனை பற்றி பவளன் சொன்ன உடன் நம்பிய அவந்திகாவிற்கு ஏனோ பவளன் மீதோ, அல்ல முன்பு சந்தித்த நந்தன் மீதோ எந்த சந்தேகமும் உண்டாகவில்லை.

அவந்திகாவின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இப்போதைக்கு பாவனாவிற்கு ஆபத்தில்லை என்றதில் சிறிது குறைந்தது. ஆனால் அவளால் பிரச்சனை முடிந்தது என்று அயர்ந்து இருக்க முடியாது.

வேகமாக அவள் மனம் வேலை செய்தது. ‘நான் உடனே யாளி உலகம் செல்ல வேண்டும். அதற்கு குறைந்தது 4 சக்கர சக்தியாவது வேண்டும். கைக்காப்பும் இல்லாமல் சக்திகளை பெருக்க தெரியுமென்றப்போதும் இப்போது என்னால் அது முடியாது. என்ன செய்வதுஎன்று யோசித்தாள்.

அப்போது சட்டென்று நினைவு வந்தவளாக அவள் மாட்டியிருந்த கைப்பையிலிருந்து மந்திரகல்லை எடுத்தாள். ‘நல்லவேளையாக அன்று நரிகளிடம் சண்டையிட்டபோது வெளியில் எடுத்த மந்திரகல்லை என் கைக்காப்பின் பணியகத்தில் வைக்காமல் மனிதர்களின் வழக்கத்தில் என் கைப்பேசியுடன் என் கைப்பையில் வைத்துவிட்டேன்.’ என்று பெருமூச்சுவிட்டாள்

கூடவே எனக்கு இடமாற்றும் சக்கர மந்திரம் (Teleporting Array) தெரியும்(4) என்ற போதும், மந்திரகல்லில் மீதமிருந்த 3 சக்கர சக்தி போதாதே. இன்னும் ஒரு சக்கர சக்திக்கு என்ன செய்வது. நந்தனை இப்போது காண முடிந்தால்என்ற அவளது எண்ண ஓட்டம் பவளனின் குரல் தடுமாறியது.

இளவரசி, உங்க தோழி மட்டுமல்ல. உங்க தோழர் ஒருவரும் மேகனின் இடம்மாற்றும் சக்கரத்தில் இருப்பதை உணர்ந்தேன். அதனால் அவரும் யாளி உலகத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்என்று அவந்திகாவின் தலையில் மற்றொரு குண்டை போட்டான் பவளன்.

என்ன?!” என்று அதிர்ந்தாள்.

பவளன், “ம்ம்

அவளது சக்தியால் ஒருவரை காப்பாற்றி மீண்டும் மனித உலகிற்கு அழைத்துவருவதே இயலாத செயல் அப்படி இருக்க இன்னொருவருமா? என்று திகைத்தாள். கூடவே அந்த மற்றொரு தோழர் தன் கைப்பேசியின் தொடர்பில் வராத கார்திக் என்றும் உணர்ந்தாள்.

தன் வார்த்தைக்கு மதிப்புக்குக் கொடுத்து பாவனாவுடன் இருந்த அவரும் மாட்டிக் கொண்டாரரோ.’ என்று கார்திக் தன் வார்த்தைக்குக் கொடுத்த மரியாதையில் திகைத்தாள்.

ஆனால் அப்படியே திகைத்து நின்றால் யாரையும் காப்பாற்ற முடியாது என்று அவந்திகா நன்கு அறிவாள். நந்தனின் ஆன்மீக சக்தி குறைந்தது 6 சக்கரமாவது இருக்கும். அவனால் இருவரை என்ன ஐந்து பேரைக்கூட அசட்டையாக யாளி உலகிலிருந்து மனித உலகுக்கு அழைத்து வர முடியும். ஆனால் அவனை எப்படி தொடர்பு கொள்வது.

பாவம் தொடர்பில் இல்லாத நந்தனை யோசித்து தற்போது இணைப்பில் இருந்த பவளனை மறந்து போனாள் அவந்திகா. என்ன குழப்பத்தில் இருந்தப்போது எந்தவித அசம்பாவிதமும் நடக்குமுன் யாளி உலகம் போக வேண்டும்.’ என்ற எண்ணமே அவளுள் மேல் ஓங்கி நின்றது.

அவளது ஆழ்ந்த சிந்தனை, “இளவரசி, உங்க முட்டியில் இரத்தம்என்ற ஆன்ம இணைப்பில் கேட்ட குரலில் தடைப்பட்டது. அப்போதுதான் அழுகை நின்ற போதும் அவள் இன்னமும் நடுச்சாலையில் முட்டிப் போட்டு அமர்ந்திருப்பது உரைத்தது.

கூடவே எந்த அளவு வேகமுடன் தரையில் மோதியிருந்தால் முட்டியில் இரத்தம் வந்திருக்கும்என்று நினைத்தாள். அவள் மெதுவாக தரையிலிருந்து எழுந்து நின்றாள். அப்போது அவளது வலியை அதுவும் உணர்ந்ததுப் போல கொடி லேசாக முனங்கியது.

கூடவே இந்த பவளனுக்கு எப்படி என் முட்டியில் இரத்தம் என்று தெரியும். அவன் அருகில் இருக்கிறானாஎன்று எழுந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவசரமாக, “பவளன் நீங்க அருகில் இருக்கிறீர்களா? “ என்றாள் அவந்திகா.

பவளன், “இல்லை. ஆனால் அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன்என்றான்.

ஆ… என்றவள், “பிறகு எப்படி என் காலில் அடிப்பட்டது உங்களுக்கு தெரியும்?” என்று நேரடையாக கேட்டாள் அவந்திகா.

பவளன், “…”.

அவந்திகா கொஞ்ச நேரம் அவன் பதிலுக்கு காத்திருந்தவள், அவன் பேசாமல் இருப்பதை உணர்ந்து, அவனுக்கு அதுகுறித்து சொல்ல விருப்பமில்லை என்று உணர்ந்தாள்.

கூடவே, ‘நந்தன் வரவில்லை என்ற போதும், ஆன்ம இணைப்பில் எளிதாக தொடர்பு கொள்ளும் பவளன் குறைந்தது 5 சக்கர சக்தியாவது வைத்திருக்க வேண்டும். அவனால் எனக்கு உதவமுடியுமே.

அதுவும் அவன் இங்கு வந்து கொண்டிருப்பதாக சொல்கிறான். அவனிடமே உதவி கேட்கலாமேஎன்று அப்போதுதான் நினைத்தவள் என்ன செய்வது என்று இருந்த குழப்பம் தெளிந்தவளாக பவளனிடம் பேசினாள்.

பவளன். அதிகபடியாக கேட்பதாக என்ன வேண்டாம். உங்க அதிகபட்ச ஆன்மீக சக்தியின் சக்கர நிலை என்னஎன்றாள்.

அவள் பேசி முடிக்குமுன் அவள்முன் வந்து நின்ற பவளன், “ஏன் இளவரசிஎன்று அவன் சோடாபுட்டியை மூக்கின் மீது நன்கு நகர்த்தி கேட்டான்.

அவனை அதற்குள் எதிர்பார்க்காத அவந்திகா, அவனது குரலில் எதிரில் வந்த அவனை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு இல்லைஎனக்குகொஞ்சம் ஆன்மீக சக்தி கடனாக தர முடியுமா? நாநான் என் பவியை உடனே பார்க்க வேண்டும்.” என்றாள் திக்கியவண்ணம்.

பவளன் குரலின் தடுமாற்றம் உணராதவனாக, அவள் கைப்பற்றி, “முதலில் வாங்க அமர்ந்து பேசலாம்என்று அழைத்துச் சென்று புல்வெளிகளுக்கு நடுவே இருந்த கல் இருக்கையில் அவளை அமரவைத்தான். அவளும் வேறெதுவும் பேசாமல் அவன் கைப்பற்றி அவனுடன் சென்றாள்.

பிறகு அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து. அவளது காலைப்பற்றி அவள் காயம் பரிசோதிக்க அவள் முட்டியை தொட்டு பார்த்தான். நடக்கும் போதே சிறிது வலியை அவந்திகா உணர்ந்திருந்தாள். அவன் தொட்டதும் வலியை உணர்ந்து, “ஷ்என்றாள்.

அவன் இளவரசி என்று சொன்னதாலோ என்னமோ அவன் அவளுக்கு செய்யும் பணி அவளுக்கு பேதமாக தோன்றவில்லை. பலவருடமாக இளவரசியாக இருந்தவளுக்கு பணியாளர்களும் ஏராளம். அதனால் இது போல் ஒருவர் அவளை நடத்துவதும் அவளுக்கு புதிதல்ல.

அவளது வலியை உணர்ந்த பவளனின் புருவங்கள் சுருங்கியது, “என்னை மன்னித்துவிடுங்க இளவரசி. நான் தாமதமாக வந்துவிட்டேன்என்று விழி உயர்த்தி முட்டி போட்டபடியே அவளை ஏறிட்டான். அவளும் அவனையேதான் குனிந்து பார்த்திருந்தாள்.

சட்டென நிமிர்ந்த அவன் முகம் அவளது முகத்தை நெருங்கியிருக்க சட்டென அவந்திகா முகத்தை வேறுபுரம் திருப்பினாள்.

சிலவினாடி பார்த்தப் போதும், பாதி முகம் சோடாபுட்டியால் மறைந்திருந்த போதும் அவனது வேதனையை அவன் முகத்திலே அவந்திகா உணர்ந்தாள். கூடவே யாரிவன். எதற்காக எனக்கொன்று என்றதும் இப்படி வருந்த வேண்டும். மன்னிப்பு கேட்க்கும் அளவுக்கு எதுவுமில்லையே. இதில் இவன் தவறுதான் எதுவும் இல்லையேஎன்று குழம்பினாள்.

அவள் குழப்பமுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனது வலது உள்ளங்கை அவளது ஒரு முட்டியில் படிந்து வெளிர்மஞ்சள் நிற ஒளியை பரப்பியது. அந்த வெளிச்சம் சுடிதாரின் கால்சட்டையையும் மீறி அவள் முட்டி காயம் முழுதும் பரவி அவள் காயம் இருக்கும் இடம் தெரியாமல் குணமாக்கியது.

அதே போல் அடுத்த முட்டியிலும் செய்தான். வலி மறைந்து குளுமையாக உணர்ந்து திரும்பி பார்த்த அவந்திகா அப்போதுதான் அவன் அவனது ஆன்மீக ஆற்றலை கொண்டு அவள் காயத்தை குணப்படுத்தியது தெரிந்தது.

ஆம், யாளிகளால் வெளி காயங்களை அவர்களது ஆன்மீக சக்தியால் வடுவே இல்லாமல் உடனே குணப்படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்களைக் குணப்படுத்தவும் முடியும். என்ன அதற்கு அதிக ஆன்மீக சக்தி தேவைப்படும். மருந்து எடுத்துக் கொண்டால் காயத்தின் ஆழத்திற்கு ஏற்ப குணமாக எடுத்துக் கொள்ளும் நாட்கள் மாறும்.

இது அவந்திகாவுக்கும் தெரியும். அப்படி ஆன்மீக சக்தியை வீண் செய்து அவளை உடனே குணப்படுத்தும் அளவுக்கு அவளது காயம் ஒன்றும் உயிர் போகும் காயம் அல்லவே என்று நினைத்தவள் அவனை தடுத்து பேச முயன்றாள்.

ஆனால் அதற்கு வழியில்லாமல், அவன் அவள் காயத்தை அதற்குள் குணப்படுத்திவிட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்தான். பின், “என்னால், நீங்க விரும்பினால் உங்களை யாளி உலகம் அழைத்துச் செல்ல முடியும்என்றான்.

அவன் பதிலில், அவள் சொல்ல வந்தது மறந்து, உடனே முகம் மலர விழிவிரித்தவள், “உண்மையாகவா?” என்றாள்.

இவன் எதற்காக தனக்கு உதவவேண்டும் என்ற சந்தேகம் இருந்த போதும் பாவனாவை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் அதிகம் இருக்க அவனாக சொல்லாத அவனை பற்றிய இரகசியத்தை அதிகம் அவள் கேட்கவில்லை. அவள் உள்ளணர்வு இவனால் தனக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்ற நம்பிக்கையை அவளுள் வேறூன்றிவிட்டிருந்தது.

அவளது மலர்ந்த முகத்தை பார்த்து மென்னகையிட்டவிதமாக, “உண்மைஆனால் நான் உங்க நண்பர்களைத் தொடர்ந்ததை எப்படியோ மேகன் உணர்ந்திருக்க வேண்டும். அவன் என் தொடர்பை எதிர்த்து பாவனாவை சுற்றியும் கார்திக்கை சுற்றியும் பாதுகாப்பு சக்கர (defense Array) மந்திரமிட்டிருக்க வேண்டும். அதனால் யாளி உலகில் அவர்கள் எந்த இடத்தில் போய் சேர்வார்கள் என்று என்னால் இப்போது அறிய முடியாதுஎன்றான்.

அதனை அறிந்த அவந்திகா சற்று சோர்ந்தாலும், ‘மேகன் மகரயாளி, அப்போது மகர அரசுக்குதான் சென்றிருக்க வேண்டும். யாளி உலகம் சென்றதும் அங்கு சென்று தேட வேண்டி இருக்கும்.’ என்று நினைத்தாள்.

அதே மனநிலையில், “பரவாயில்லை பவளன். என்னை யாளி உலகில் நீங்க சேர்த்துவிட்டால் போதும். பிறகு நான் பார்த்துக் கொள்வேன். இப்போதே போகலாமா?” என்றாள் அவந்திகா.

பவளன், “ம்ம்“.

நண்பகல் என்பதாலோ, பவளனும் அவந்திகாவும் இருந்த இடத்தில் மரநிழலும் இல்லாமல் வெட்ட வெளியாக இருந்ததாலோ என்னமோ அவர்கள் இருந்த இடத்தில் ஆள் நடமாட்டமில்லை. அதனாலே பவளன் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு எந்தவித தயக்கமுமின்றி அவளை குணப்படுத்தினான்.

ஆனால் இடமாற்றும் சக்கரத்திற்கான மந்திரத்தை இங்கு வரைய முடியாது. எந்த நேரத்தில் யார் வர கூடுமோ என்று எச்சரிக்கையுடன் அதனை செய்வதைவிட, மறைவான இடம் செல்வது நல்லது என்பதை இருவருமே உணர்ந்தனர்.

அதே எண்ணத்தில் இருவரும் மெதுவாக அந்த பூங்காவில் இங்கும் அங்கும் அலைந்து பிறகு ஒரு பெரிய மாடி கட்டிடத்தின் பின் தெரிந்த அடர்ந்த மரங்களை நோக்கி சென்றனர்.

அந்த இடதில் யாரும் வர விரும்பாதவிதமாக ஒழுங்காக பராமரிக்க படாத கழிவு நீர் வழிந்துக் கொண்டிருந்தது. அதனை கண்டதும் அவந்திகா முகம் சுழிக்க, “வேறு இடம் செல்லலாமா இளவரசிஎன்றான் பவளன்.

அவசரமாக, “இல்லை இல்லை. வேறு இடமென்றால் எதாவது தங்கும் விடுதிக்குதான் செல்ல வேண்டும். ஆனால் என்னால் இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் சென்று குறைந்தது 4 மணி நேரமாவது ஆகியிருக்கும்.” என்று கவலையுடன் பாவனாவை மனதில் கொண்டு பவளனை ஏறிட்டாள்.

அதற்கு மேல் ஒரு நொடியும் காத்திராமல் உடனே இடமாற்றும் சக்கரத்தை வரைந்தான் பவளன். அவன் வரைந்ததும், வெளிர்நீல நிற ஒளியில் ஒரு குழல் போல வளையம் வானை நோக்கி உருவாகியது. அவள் எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றி பவளன் இடமற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.

Author Note:

(1) – ஒரு காததூரம் = 1667 மீட்டர். அல்லது 1.667 கிலோமீட்டர்

(2) – ஆன்ம இணைப்பு -soul Link is like mobile call. But only between two souls. தகவல் தொடர்புக்கு பயன்படுவது. ன்ம பிணைப்பு – soul binding is like link couples.

இரண்டும் வரும் போது confuse ஆகிடாதீங்க. ஒரு எழுத்துனாலும் மிக பெரிய வித்தியாசம் இருக்கு. 🙂 இப்போது இது use பண்ணலனாலும் பிறகு வரும்.

(3) – மஹர்லோகம் – 4வது மேல் உலகம். யாளிகளின் உலகம்.

(4) இடம்மாற்றும் சக்கரம் கற்றுக்கொள்ளதான் 6 சக்கர சக்தி வேண்டும். ஆனால் உருவாக்க 4 சக்கர சக்தி இருந்தாலே போதும். அவந்திகா இதனை அவள் யாளியாக இருந்த போது கற்றுக் கொண்டாள்.

Advertisement