Advertisement

அத்தியாயம் – 12

செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர்.

தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள்.

“அ… அவந்திமா…நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே” என்று ‘எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்’ என்று பயத்திலே தயங்கி தயங்கி கேட்டார் செல்வம்.

அவரின் முகத்தைப் பார்த்ததுமே அவர் மனம் அறிந்த அவந்திகா, “கவலை படாதீங்க அப்பா. நான் கொடுத்த வாக்கிலிருந்து மாறமாட்டேன். அதனோடு இந்தக் காடு எனக்கு 400 வருடம் பழக்கமான ஒன்று. அதனால் நான் எளிதில் சென்று திரும்பிவிடுவேன்.” என்று செல்வத்தின் கைப்பற்றி நம்பிக்கை கொடுக்கும் விதமாக அழுத்தம் தந்தாள்.

அவ்வளவு எடுத்துச் சொன்னப் பிறகு அவளை வற்புறுத்த மனமின்றி, “சரி… உன் விருப்பம். ஆனால் இந்தா இந்தக் கைப்பேசியை வைத்துக்கொள், நான் அழைத்தால் நீ உடனே பதில் அளிக்க வேண்டும். 30 நிமிடத்தில் நீ வெளியில் வரவில்லை என்றாலோ, என் கைப்பேசி அழைப்புக்குப் பதில் அளிக்கவில்லையென்றாலோ, நான் காட்டுக்குள் உன்னைத் தேடி வந்துவிடுவேன்” என்றார் சிறுபிள்ளையின் விடாபிடியுடன்.

உடனே சிரித்துவிட்ட அவந்திகா, “சரிப்பா. இப்போது நான் போய் வருகிறேன்” என்றுவிட்டு காட்டுக்குள் சென்றாள்.

அவள் போவதையே சில நிமிடங்கள் பார்த்திருந்தவர், அவள் கண்ணைவிட்டு மறைந்ததும் பெருமூச்சுவிட்டு, தானூர்தியினுள் அமர்ந்துக் கொண்டு தன் கைப்பேசியில் நேரத்தைத் பார்த்தவண்ணம் இருந்தார்.

அவந்திகாவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், அவள் முன்பு ஆன்மாவாகத் தங்கியிருந்த குகையினை அடைந்தாள். பின் தன் வெள்ளை நிற கைக்காப்பின் இரு முத்தில் ஒன்றை தன் ஆள்காட்டிவிரலால் கண்களை மூடித்தொட்டாள். அவளது மனதிரையில் பல அடுக்குகள் கொண்ட பணியகம்(Bureau)(1) கண் முன் வந்தது.

அதன் ஒரு அடுக்கினை காண்பித்து, “கொடி, சிறிது காலம் நீ தனியாக இங்கே இருக்க வேண்டும். போ. அந்த அடுக்குதான் உன் தற்காலிக இருப்பிடம்” என்று தன் கையோடு சுற்றியிருந்த கொடியிடம் சொன்னாள்.

சின்ன சிணுங்களுடன்(whining) செல்ல மறுத்து அவந்திகாவின் உடலைச் சுற்றி சுற்றி வந்தது(S வடிவில்) கொடி.

அதன் மறுப்பு புரிந்தப் போதும் அவந்திகா, “நான் சொல்வதை கேட்க வேண்டும். நீ சமத்துதானே” என்று சிறிது நிறுத்தி, மனதில் ‘இந்த 7 வருடங்களில் இந்த மனித உலகில் உன்னைக் கட்டுப்படுத்த நான் படாத பாடு பட்டுவிட்டேன். அதனால் உன்னை இங்கு விட்டுச் சென்றே ஆக வேண்டும். ‘ என்று தீர்மானம் கொண்டவளாக மீண்டும் பேச ஆரம்பித்தாள் அவந்திகா.

அவந்திகாவின் குரலில், தான் சமத்துதான் என்பதுப் போல் செல்லம் கொஞ்சிக் கொண்டு நாய்க்குட்டிப் போல அவந்திகாவின் முன் நீண்டவடிவில் நின்று தலை இருப்பதுப் போல் சின்ன சிணுங்களுடன் ஆமாம் என்று தலையசைத்தது.

அதனைப் பார்த்து மென்னகையிட்ட அவந்திகா, “ம்ம்… அப்போ நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நீ என்னுடன் வந்துவிட்டால் யார் என்னுடைய கைக்காப்பை பாதுகாப்பது.?” என்று சிறுப்பிள்ளைக்கு சொல்வதுப் போல் எடுத்துச் சொன்னாள் அவந்திகா.

‘ஆனால் உங்க பாதுகாப்பு?’ என்று தன் ஆன்மீக விழிப்பில்(Spiritual Consciousness) அவந்திகாவிடம் உணர்த்தியது கொடி.

புன்னகை மாறாமலே, “இங்கு வா” என்று கொடியினை அணைப்பதுப் போல அழைத்தாள் அவந்திகா. கொடியும் அவந்திகாவின் இடையில் சுற்றிக் கொண்டது. கொடியினை தடவிய வண்ணம் “என்னைப் பற்றிக் கவலைப் படாதே கொடி.

நான் மனித உலகில் இருப்பதால் எனக்கு எந்த விபத்தும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் என் ஆன்மாவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. என் மனித உடல் அழிந்தாலும் நான் நேரே இங்கு வந்துவிடுவேன். அதுவரை, நீ எனக்காகக் காத்திருக்க வேண்டும்” என்றாள் நிதானமாக.

அவளது விளக்கத்தில் “சரி” என்பதுப் போல் முனங்கியவண்ணம் வேறு வழி இல்லாமல், சில நிமிட அணைப்பிற்குப் பின் பணியகத்தின்(1) ஒரு அடுக்கில் சென்று குட்டி பாம்புப் போலச் சுருண்டு படுத்துக் கொண்டது அந்தக் கொடி.

அதன் செயலைக் கண்ட அவந்திகா பெருமூச்சுவிட்டு, அடுத்த அடுக்கிலிருந்த செவ்வக வடிவ மரகதக்கல்லினை(2) எடுத்தாள். அந்தக் கல் குறைந்தது 6 சதமமீற்றர்(cm) நீளமும், 3 சதமமீற்றர் அகலமும் கொண்டது.

மரகதகல்லின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் ஆற்றலும் வேறுபடும். 7 சக்கர சக்தி நிலைக்கு ஏற்ப 7 வெவ்வேறு நிறத்தில் கல் மாறும்(3). கல்லின் தரத்திற்கு ஏற்ப அதன் அதிக பட்ச சக்தி சேர்த்து வைக்கும் நிலை நிர்ணயிக்கப்படும். சக்தி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து கல்லின் நிறம் மாறிக் கொண்டே வரும். சக்தி முழுதும் பயன்படுத்தியப்பிறகு அந்தக் கல் நிறமற்று கண்ணாடிப் போல் மாறிவிடும்

அவந்திகா வைத்திருப்பது பச்சை நிறகல். 4 வது சக்கர அளவு சக்தியுடன் அந்தக் கல் இப்போது இருக்கிறது. அதனைதான் அவந்திகா இப்போது கையில் எடுத்திருக்கிறாள்.

அந்தப் பச்சை நிற கல்லினை பார்த்தவண்ணம், ‘உன்னை நான் பயன்படுத்த வேண்டிய அவசியமே நேராது என்று நினைத்திருந்தேன். இன்று ஆன்மீக சக்தியுடைய என் யாளி உடலை இழந்து இப்படி சாதாரண மந்திரகட்டு சக்கரம் வரைய கூடச் சக்தி இல்லாமல் உன்னைப் பயன்படுத்தும்படி ஆகிவிட்டது’ என்று எண்ணி அந்தக் கல்லைத் தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டாள்.

சில வினாடிகளில் அந்த மாணிக்க கல்லிலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒளி ஏற்பட்டு அவந்திகாவின் நாடிகளில் பாய்ந்தது(Transmit). மெல்ல சக்தி அந்தக் கல்லிலிருந்து குறைந்து அதன் நிறம் பச்சை(4வது சக்தி நிலை) நிறத்திலிருந்து மஞ்சள்(3வது சக்தி நிலை) நிறத்திற்கு மாறியது.

தற்போது தேவைப்படும் சக்தி கிடைத்ததுப் போல் உணர்ந்தவளாக அவந்திகா அந்த மரகக்கல்லை தன் நெற்றியிலிருந்து எடுத்தாள். பின் மீண்டும் அந்தக் கல்லை அந்தப் பணியகத்தில்(1) வைத்துவிட்டு கைக்காப்பினை அந்தக் குகையினுள் புதைத்து வைத்தாள்.

பின் தன் வலது கையின் ஆள்காட்டிவிரலை உயர்த்தி தன் ஆன்மீக ஆற்றலைக் கொண்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒளியினை ஒளிர வைத்தாள். கண் மூடி விரலில் உண்டான ஒளியை கொண்டு கைக்காப்பு புதைத்த இடத்தை நோக்கி நட்சத்திரம்போல ஒரு சக்கரத்தை, மந்திரபூட்டினை (Locking Array)(4) வரைந்தாள். அந்த ஒளி, முன்பு கைக்காப்பு புதைத்த இடத்தில் விழுந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது.

ஒரு வழியாக வந்த வேலை முடித்தவளாக மீண்டும் தானூர்தி இருந்த பாதையை நோக்கிச் சென்றாள். அந்தக் குகையிலிருந்து சிறிது தூரம் நடந்து ஒரு ஆலமரத்தின் அடியில் வந்து நின்றாள். தன்னுடன் 400 வருடங்களாகத் தனக்காகவே இருந்த கொடியினை பிரிந்துவந்த பிரிவாற்றாமை மனதில் வலிக்க, மீண்டும் குகை நோக்கித் திரும்பிப் பார்த்தாள்.

அப்போது யாரோ உள்ளூர சிரிப்பது(chuckle) போலக் கேட்ட அவந்திகா திரும்பிப் பார்த்தாள். அந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒன்றில் வெள்ளை நிற ஆடையும் கருப்பு நிறகாலணியும்(boot), கலைந்த குதிரைவால் தலை கட்டுடனும் ஒருவன் அமர்ந்திருந்தான். (5)

அவள் எச்சரிக்கையுடன் அவனை பார்த்தப் போதும் அவனில் கொலைவெறி (killing intent) இல்லாததால் சற்று எச்சரிக்கை உணர்வைத் தளர்த்தினாள். பின் யார் என்ன என்று அவனை கேட்குமுன் மென்னகையிட்டுக் கொண்டிருந்த அவனது முகம் நொடியில் மாறி மரத்திலிருந்து வேகமாகத் தாவிகுதித்து சிறுப்பிள்ளையாக இருந்த அவந்திகாவை இருக்கைகளில் ஏந்தி சுற்றி வளைத்து அவள் நின்றிருந்த இடத்திலிருந்து அவளை விலக்கித் தூக்கிய வண்ணம் நின்றான்.

என்ன நடந்தது என்று புரியாமல், அவன் வேகமாக இழுத்ததில் அவந்திகா அதிர்ந்து அந்த வெள்ளை நிற சட்டையினை இறுக பற்றிக் கொண்டாள். அவள், நிலை உணர்ந்து கேள்விக் கேட்கும் முன்னரே, அவளைத் தரையில் இறக்கிவிட்டான். பாதி முகம் மறைந்திருந்தப் போதும் அவனது கண்கள் அவந்திகாவின் விழிகளை விட்டு அகலவில்லை.

அவந்திகாவும் அவளது விழியினை அகற்றும் எண்ணமில்லாதவளாகப் பிரமித்து அவனையே பார்த்திருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வெள்ளை நிற ஆள் தன் கழுத்திலிருந்து இறக்குடன் கூடிய கருப்பு நிற கயிற்றினை(6) கழற்றி அவள் கழுத்தில் அணிவித்து, “இந்தக் கயிறு உங்க கழுத்தில் இருக்கும் வரை பாம்பு, பூச்சி என்று எந்த விஷ உயிரினங்களும் உங்களை அனுகாது” என்று சொல்லிவிட்டு மீண்டும் மரத்தின் மீது ஒரே தாவில் ஏறி முன்பு அமர்ந்திருந்த கிளையின் மீது நின்று அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

அவனது விளக்கத்தில் ஏதோ உண்மை உணர்ந்து அவந்திகா முன்பு நின்றிருந்த இடத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். அங்கே ராஜ நாகமொன்று அவளை நோக்கிப் படமெடுத்து நின்றுக் கொண்டிருந்தது. அவன் சொன்னதுப் போல அந்தக் கயிற்றின் மாயமோ என்னமோ, அந்த நாகம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அவள் அருகில் வரவில்லை.

அவந்திகா அவனிடம் ‘யார் நீங்க’ என்று கேள்வி எதுவும் கேட்கும் முன்பே மேலும் இரண்டு தாவில் அவன் அந்த அடர்ந்த ஆலமரத்தின் உச்சிக்கே சென்றிருக்க வேண்டும் அவனது உருவம் இலைகளினால் முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது.

மரத்தின் மீது ஏறிச் சென்று அவனிடம் பேசலாமா என்று எண்ணியவளின் எண்ண ஓட்டம் அப்போது வந்த கைப்பேசி அழைப்பில் தடைப்பட்டது. கைப்பேசியினை எடுத்துக் காதில் பொருத்தியவள், “வந்துவிட்டேனப்பா. காட்டுக்குள் வந்துவிட வேண்டாம்” என்றுவிட்டு அந்த வெள்ளை நிற ஆளை மறந்து வேகமாகத் தன் தந்தையை நோக்கி ஓடிச் சென்றாள்.

அதன் பிறகு எத்தனையோ நாட்கள் சற்று அங்குத் தாமதித்து அவனிடம் யார் என்னவென்று கேட்டுவிட்டு வந்திருக்கலாமோ என்று எண்ணியது உண்டு. அந்த நிகழ்வுகள் இப்போது நடந்ததுப் போல் உணர்ந்த அவந்திகா தன் மார்போடு இருந்த அந்த இறகினை(6) தொட்டு பார்த்துப் பெருமூச்சுவிட்டாள்.

இன்று…

அவள் பெருமூச்சுவிட்டதை பார்த்த அந்த ஓட்டுநர், “என்னமா… எதுவும் பழைய நினைவுகளா?” என்று கேட்டான்.

அவனது குரலில் திரும்பி அவனைப் பார்த்த அவந்திகா, அரையிருளில் அவன் முகம் சரியாகத் தெரியாதவளாக, “ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.

அப்போதுதான், அவந்திகாவின் சுய உணர்வு வேலை செய்வதுப் போல, ‘இந்த ஓட்டுநரை உடன் அழைத்து வந்திருக்கிறோமே! எப்படி இவன் முன் என் கைக்காப்பை வெளியில் எடுப்பது என்று எச்சரிக்கை உணர்வே எனக்கு வரவில்லையே. ஏதோ மாயம் போல அவனையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டோமே!’ என்று காலம் தாமதித்து உணர்ந்தாள்.

‘இங்கிருந்து சிறிது தூரதில்தான் என் கைக்காப்பு இருக்கிறது. என்ன செய்யலாம், என்ன காரணம் சொல்லி இவனை இங்கேயே இருக்க வைக்கலாம். அப்படியே இவனை இங்கே இருக்க வைத்தாலும், அன்று போலப் பாம்போ அல்லது வேறு பூச்சியோ வந்து இவனை எதுவும் செய்துவிட்டால்’ என்று பலதும் யோசித்தவள் கடைசியில் குத்தூசி மருத்துவத்தை(acupuncture)(5) பயன்படுத்தி இவனை இங்கேயே தூங்க வைப்பது என்று முடிவடுத்தாள்.

அதனைச் செயல் படுத்தும் எண்ணம் கொண்டவளாக, அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தப் போது அவந்திகா, தன் ஆள்காட்டி விரலைக் கட்டைவிரலால் மடக்கி அந்த ஓட்டுநரின் கழுத்தின் இருப்புறமும் தூக்கம் வருவதற்கான நாடியினை சுண்டிவிட்டாள். அவள் சுண்டியதும் சிறு வெளிர் மஞ்சள் நிற ஒளி ஏற்பட்டு உடனே உறக்கம் வந்தவனாகச் சரிந்து கீழே விழப் போனான் அந்த ஓட்டுநர்.

அவனைக் கீழே விழாமல் தனது வலது கையால் அவனது முதுகில் தாங்கி மெதுவாகத் தரையில் கிடத்தினாள். பின் தன் ஆள்காட்டி விரலில் ஆன்மீக ஆற்றலை(Spiritual Energy) ஒளிரவிட்டு எந்த விச உயிரினமும் அவன் அருகில் வந்துவிடாதப்படி அவனைச் சுற்றி அந்தத் தரையில் தன் கையில் உண்டான வெளிர்மஞ்சள் நிற ஒளியில் மந்திர வட்டமிட்டாள்.

பின் வேகமாகக் குகையினை நோக்கி நடந்துச் சென்றாள். அவள் குகையினை அடைவதற்குள் கும்மிருட்டாகியிருந்தது. “சே யாளியாக இருந்தபோது மனித உருவிற்கு மாறி இருந்தாலும் இரவிலும் நன்றாகக் கண் தெரியும். ஆனால் இந்த மனித உடல் இருட்டுக்கு பயப்படுவதுப் போலல்லவா இருக்கிறது.” என்று கையிலிருக்கும் கைப்பேசியின் ஒளி போதாமல் முனுமுனுத்த வண்ணம் குகைக்குள் நுழைந்தாள்.

அவள் கஷ்டம் உணர்ந்ததுப் போல அந்தக் குகையின் சுவர்களில் இருளே இல்லாதவிதமாக மின்மினி பூச்சிகள் நிறைந்து வெளிச்சத்தை தந்துக் கொண்டிருந்தது. திகைத்து அந்தப் பூச்சிகளைப் பார்த்த அவந்திகா, ‘தான் இருந்த அந்த 400 வருடங்களில் ஒருநாளும் இந்தப் பூச்சிகள் இந்தக் குகைக்குள் வந்ததாக நினைவில்லையே. இப்போது மட்டும் எப்படி’ என்று வியந்தாள்.

ஆனால் அதிக நேரம் அப்படியே அசந்து நில்லாமல் வேகமாக வந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தாள். கடைசியாகத் தன்னிடம் இருந்த கொஞ்ச ஆன்மீக ஆற்றலைக் கொண்டு முன்பு போட்ட மந்திரகட்டினை திறக்கும் விதமாக மாற்றித் தலைக்கீழாக(Revers) திருப்பித் தன் ஆள்காட்டிவிரல் ஒளியால் சக்கரத்தினை திறந்தாள்.

அவள் வருகைக்காகவே காத்திருந்ததுப் போல மந்திரக்கட்டு திறந்ததும் கொடி அவளது கைக்காப்பின் பணியகத்திலிருந்து(1) வெளியில் வந்து அவந்திகாவை சுற்றி சிணுங்கிய வண்ணம் சந்தோஷத்தில் இங்கும் அங்கும் அலைந்து கடைசியில் அவளது இடது கையில் வந்து சுற்றிக் கொண்டது.

இருள ஆரம்பித்ததாளும், அந்த ஓட்டுநரை தனியே கிடத்திவிட்டு வந்ததாளும், கொடியிடம் தன் பல ஆண்டுகள் பிரிவாற்றாமைக்கு பின் ஏற்பட்ட சங்கமிப்பை வெளிபடுத்த அவளுக்கு நேரமிருக்கவில்லை. தன் தலைவியின் எண்ணம் உணர்ந்ததுப் போல அதிக சேட்டை செய்யாமல் கொடியும் அமைதியாக அவளது கைக்களுக்குள் அடங்கியது.

அவந்திகா அவசரமாக அந்தக் கைக்காப்பினை எடுத்துத் தன் வலது கையில் மாட்டிக் கொண்டு மீண்டும் வந்த வழியே வெளியில் செல்ல எத்தனித்தாள்.

அப்போது அந்தக் குகையிலிருந்த மின்மினி பூச்சிகள் அவளுக்குச் சிவப்பு கம்பளம் போட்டு வழிக்காட்டுவது போல அவள் முன்னே பறந்துச் சென்று பாதையில் வெளிச்சத்தை பரப்பியது. அவள் செல்லும் பாதை முன்பே அறிந்ததுப் போல அந்த மின்மினி பூச்சிகள் வேறெங்கும் பறந்துச் சென்றுவிடாமல் அவள் செல்ல வேண்டிய பாதையில் மட்டும் ஒளிக் காட்டி சென்றது.

விசித்திரமாக உணர்ந்த அவந்திகா, உடனே தன் குரு ஒருமுறை ‘பூச்சிகளையும் பறவைகளையும் தன் சொல்லுக்கு ஏற்பக் கட்டுப்படுத்துவது 6 சக்கர நிலை சக்தி உடைய யாளிகளால் மட்டுமே முடியும்’ என்று சொன்னது அவளுக்கு நினைவு வந்தது.

‘இந்த மின்மினிப் பூச்சிகளின் செயல் தற்செயலான ஒன்றா அல்லது 6 சக்கர சக்திக் கொண்ட யாளி இங்கு அருகில் இருக்கிறதா? எனக்குத் தெரிந்து அதனைக் கற்று தேர்ந்தவர்கள், தான் யாளி உலகில் இருந்த வரையில் யாருமில்லையே.’ என்று மனதில் எச்சரிக்கை உணர்வு தோன்ற வயிற்றில் ஏதோ பிசைய அந்த மின்மினி பூச்சிகளைத் தொடர்ந்து தனியே விட்டுவிட்டு வந்த அந்த ஓட்டுநரை நோக்கி வேகமாக ஓடினாள்.

ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு” என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா.

Author note:

(1)பணியகம் – அலமாரி. Bureau, which has many selves and door.

(2) மரகக்கல் – பச்சை நிற Jade. This stone stores little bit of spiritual energy like energy storage. இது ஆன்மீக ஆற்றலைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சக்தி களஞ்சியம். ஆன்மீக ஆற்றலைத் தானாக உருவாக்க முடியாத, மனித யாளிகளிடம் மற்ற யாளிகள் யாளி உலகில் இதனைப் பணத்திற்காக விற்பனை செய்வர்.

(3) 7 சக்கரங்களின் நிறங்கள் – ஊதா(7st), கருநீலம்(6nd), நீலம்(5rd), பச்சை(4th), மஞ்சள்(3rd), செம்மஞ்சள்(2nd), சிவப்பு(1st). இதில் ஊதா நிறமே அதிக சக்தி வாய்ந்தது.

(4) தீப்பொறிகளால்(மத்தாப்புப் போல) ஆன கோலம் போலக் கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

(5) குத்தூசி மருத்துவம் தமிழில் அலகுக்குத்தல் என்று அழைக்கபடும். English ல அக்குபன்சர்(Acupuncture)னு சொல்வாங்க.

(6) Sample Feather Neck-chain

Advertisement