30

மறுநாள் சசி கேட்ட தொகையை அவனிடம் கொடுத்து விட்டு அலுவலகத்திற்கு வந்தவளுக்கு எப்படி வான்மதிக்கு தங்கத்தில் மோதிரம் வாங்குவது என்றே யோசனையாக இருந்தது..

மேனேஜரிடம்  அட்வான்ஸ் வாங்கலாம் என்று பார்த்தாலும் அதற்கும் மனம் வரவில்லை அவளுக்கு.. துகிலுரிக்கும் கழுகு பார்வையோடு  அந்த கிழட்டு கழுகு  பெண்களைக் கண்டாலே கள்ளப் பார்வை பார்க்க, எதற்கு வம்பென்று அந்த கழுகிடமிருந்து தள்ளியே இருப்பாள் தென்றல்.

கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்.. வயிற்றுப் பாட்டுக்கு வேலைக்கு வந்த  பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். வெளியே சொல்லவும் முடியாமல்  ரோஷப்பட்டு வேலையை விடவும் முடியாமல் ஊமை கண்ட கனா போல  அவர்கள் நிலை மாற்றப்படுகிறது.

யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். உணவு இடைவேளியில் சாப்பிடவும் பிடிக்காமல், கொண்டு வந்திருந்த  எலுமிச்சை சாதத்தை பிசைந்து கொண்டிருந்தாள் தென்றல்.

வாசுகி மகளுக்கு அழைத்தார்.

” என்னம்மா.. இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணிருக்க”

” எங்கடி இருக்க ஆபீஸ்லயா.. “

“ம்ம் சொல்லு”

“வானு வந்திருக்கா அங்க”

” எப்ப வந்தா.. என்கிட்ட சொல்லவே இல்ல”

” இன்னைக்கு காலையில தான் டி.. அகிலன் அப்பா வீட்டு பழக்கம். கல்யாணத்துக்கு முன்னாடியே  அவங்க பூர்வீக வீட்டுக்கு போய் கன்னி சாமிக்கு  பூச போடணுமாம்.. “

“ஓ ஆமால்ல.. அத்தை வீட்லதான் இருக்காளா.. நீயும் அப்பாவும் வரலையா..”

” ஆமாடி இன்னைக்கு கிளம்பி ஊருக்கு போறாங்களாம்.. இல்லடி அப்பாவுக்கு செக்கப் இருக்கு.. போன தடவையே போ முடியாம போயிடுச்சு.. நடக்கிறது எல்லாம் பார்த்தா நெஞ்சு வலி வராம என்ன வரும் உங்க அப்பாவுக்கு..வானு மட்டும் போயிட்டு வரேன்னு சொன்னா.. ” தென்றல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரம் அம்மாவோடு பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அம்மாவிடம் சொன்னால் இதெல்லாம் எதற்கென்று வாயை அடைத்து விடுவார்.. பணப்பிரச்சினை பல விதத்தில் அவளின் மூளையை பதம் பார்க்க  எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு வேலையை முடித்து வீடு வந்து சேர்ந்தாள்..

எப்பொழுதும் அவள் கேட்டை கடந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும்  வெளியே ஓடி வரும் பிள்ளைகள் இரண்டும்  இன்று ஆளையே காணோம். அவளுக்கிருந்த பண பிரச்சனையில் அதைப் பற்றி சிந்திக்க மறந்தாள்.

அறைக்கு சென்று முகம் கழுவி  சற்று நேரம் ஏசியை திறந்து விட்டு அமர்ந்த போது தான்  இன்னும் பிள்ளைகள் அவளை கண்டு ஓடி வரவில்லை என்பது புத்தியில் உரைத்தது..

புருவம் சுருங்க “குழலி.. கொடிம்மா” என்று அழைத்தபடி வெளியே வந்தாள் தென்றல்.. விசாலாட்சி சீரியலில் மூழ்கி கண்ணீரில் தத்தளிக்க  அவரிடம் கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால் தென்றல் பிள்ளைகளை தேடி வீடு முழுவதும் அலைந்தாள்..

வீட்டின் உள்ளே பிள்ளைகள் இல்லாததால் பயம் நெஞ்சை அடைத்தது.. வேகமாக ஓடிவந்து விசாலாட்சியிடம்

” அத்தை பிள்ளைங்க எங்க.. ” அவர் கவனம் முழுவதும் சீரியலில் பதிந்திருந்தது. தென்றலுக்கு வந்த ஆத்திரத்தில் உடனே ரிமோட்டை எடுத்து டிவியை  ஆப் செய்தாள். விசாலம் ஆங்காரத்தோடு ஏறிட

” பிள்ளைங்கள காணோம்.. ” பரிதவிப்போடு தென்றல் கேட்க

” இவ்ளோ பெரிய வீட்டுல பூதம் வந்து உன் பிள்ளைகளை பிடிச்சுட்டு போகுதா..” வெடுக்கென கழுத்தை திருப்பியவர் மீண்டும் தொலைக்காட்சியை உயிர்பித்து அதில் மூழ்கிப் போனார்.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே ஓடி வந்தாள் தென்றல். காவலாளியிடம் பிள்ளைகளைப் பற்றி கேட்க

” பிள்ளைங்க வெளியே போகலாம்மா.. ஸ்கூல் முடிஞ்சு வந்ததுலருந்து உள்ள தான் இருக்காங்க..” சற்று நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது அவளிடம்.

தென்றலின் கண்கள் தோட்டத்தை அலச  அதோ அங்கே வாஸ்து குளத்தின் அருகில்  கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார்கள் அவள் பெற்ற  செல்வங்கள்..

வேகமாக குழந்தைகளிடம் ஓடியவள் மூச்சு வாங்கிய படி குழந்தைகளை கட்டிக் கொண்டவள் கொடியை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள்.

” ஏண்டி.. எப்பவும் நான் வேலை முடிஞ்சு எப்படா வருவேன்னு பாத்துக்கிட்டே இருப்பீங்க.. இன்னைக்கு என்ன இங்க ரெண்டு பேரும் சோகமா ஒக்காந்து இருக்கீங்க? ஸ்கூல்ல ஏதாச்சும் சேட்டை பண்ணீங்களா? டீச்சர் திட்டிட்டாங்களா.. ” குழலியின் கூந்தலை கனிவாய் வருடியபடி கேட்டாள் தென்றல்..

குழந்தைகளிடம் அவள் உயிரையே வைத்திருந்தாள். அதேசமயம் கண்டிப்பான அம்மாவாகவும் குழந்தைகள் அவளைப் பார்ப்பதுண்டு. பள்ளியில் ஏதாவது சேட்டை செய்து தன்னிடம் சொல்ல பயந்து கொண்டு சோகமாய் இருக்கிறார்களோ என்கிற எண்ணம் அவளுக்கு..

கொடியும் குழலியும் தலையை தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க, தென்றல் குழலி முகத்தை நிமிர்தினாள்..

“ஹேய் என்னடி.. கன்னம் இப்படி செவந்து போய் இருக்கு.. என்ன ஆச்சு..” குழலிக் கன்னம் சிவந்து போயிருக்க அவளை யாரோ அடித்திருப்பது தென்றலுக்கு புரிந்தது.

குழலி கண்கலங்க அம்மாவை கட்டிக் கொண்டாள். குழந்தைகள் இருவருமே தென்றலை கட்டிக்கொண்டு  கேவ பெற்றவளின் மனம் என்ன பாடுபடும்?

” என்னடி சொன்னா தானே தெரியும்.. எதா இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு.. ” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் குழலி நடந்ததை தென்றல் காதில் சொல்ல ஆரம்பித்தாள்.

குழலிக் கொடி இருவருக்கும் வெவ்வேறு பள்ளிகள். பூங்கொடி காது கேட்காத வாய் பேச முடியாத பிள்ளைகள் பயிலும் சிறப்பு பள்ளியில் பயின்று கொண்டிருக்கிறாள். பூங்குழலி தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்..

முதலில் பள்ளி முடிந்து பூங்கொடி தான் வீட்டிற்கு வருவாள். அவள் வந்து அரைமணி நேரம் கழித்து பூங்குழலி வருவாள்.

அன்றும் அப்படி தான் கொடி  விரைவாக வீட்டிற்கு வந்து விட  தர்ஷினியின்  அண்ணன் மகன்  ஹாலில் அமர்ந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது  தர்ஷினி தாய் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் வருண் அங்கேயே இருந்து விடுவான். அவனை மீண்டும் வீட்டில் வந்து விடுவது  தர்ஷினி அண்ணன் மகனான சைதன்யாவின் வேலை.. அவனும் பிளஸ் டூ மாணவன்..விசாலாட்சி தலைவலி என்று அவரது அறையில் படுத்திருந்தார்..

கொடி அவனை கண்டதும் சிறு புன்னகையோடு தலையசைத்துவிட்டு மாடியில் இருந்த தன்னுடைய அறைக்குள் சென்றாள்.. சைதன்யா கள்ளப் பார்வை பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை  உறுதிப்படுத்தியவன் மாடி ஏறி அவனும் கொடி அறைக்கு சென்றான்.

பணக்காரர்கள் பெரிய வீடு கட்டுவதில் இது ஒரு அசோகரியம். எவன் எந்த மூலையில் செத்து கிடந்தாலும் ஒரு ஈ காக்கா இருக்காது.

கொடியோ வாய் பேச முடியாத குழந்தை.. சைதன்யா என்ற ரூபத்தில் ஒரு சைத்தான் தன்னை காயப்படுத்த வருவதை பாவம் அந்த வாயில்லாத குருத்து அறிந்திருக்கவில்லை..

அவள் பள்ளிப் பையை ஓரமாக வைத்துவிட்டு  முகம் கை கால் கழுவி  கொண்டிருந்தாள். சைதன்யா சத்தமே இல்லாமல் அறைக்குள் புகுந்து கதவைச் சாற்றினான்..

பிள்ளைப் பருவத்திலேயே  குழந்தைகளுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து  கெடுத்து குட்டிச்சுவராக்குவதில் இப்பொழுது உள்ள பெற்றோர்கள் பலர் முதலிடம் பிடிக்கிறார்கள். அதை அவர்கள் பெருமை என்றும் நினைக்கிறார்கள்.. தர்ஷினியின் குடும்பமும் அவ்வழியே. கை நிறைய பணமும் அதிகாரமும் இருந்த திமிரில்  பள்ளியிலேயே அடாத சிறுவனாக தான்  ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தான் சைதன்யா.

குளியலறையிலிருந்து வெளிவந்த கொடி அங்கே சைதன்யாவை கண்டதும் மிரண்டு விழிக்க  மெல்ல அவளை நெருங்கிய சைதன்யா
விலையுயர்ந்த சாக்லேட் ஒன்றினை எடுத்து நீட்டினான்..

கொடி வேண்டாம் என்று தலை அசைக்க

“ப்ச் வாங்கிக்கோ.. நல்லா இருக்கும்” அவளிடம் செய்கை மொழியில் பேச குழந்தையும் சமத்தாக வாங்கிக் கொண்டது.. அதனை சைதன்யா பிரித்து சாப்பிட சொல்ல, கொடி சாக்லேட்டை பிரிக்க முயல அவள் கரத்திலிருந்து அதனைப் பிடிங்கி அவனே பிரித்து கொடுத்தான்.

சிரிப்போடு அதனை குழந்தை உண்ண கள்ளச் சிரிப்போடு அவளை தூக்கிக் கொண்டான் சைதன்யா.. என்ன இருந்தாலும் எட்டு வயது குழந்தை அவள்.. தனக்கு நடக்க இருக்கும் ஆபத்தை அவள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் இதுவரை எட்ட நின்று தன்னை பார்த்து சிரிக்கும் சைதன்யா  கையில் தூக்கி வைத்திருக்கவும்  அசோகர்யமாக உணர்ந்தாள் கொடி.

கையில் கீழே இறக்கி விடும்படி செய்கை செய்தாள்.. ஆனால் அவள் அறியாத ஒன்று சைதன்யாவின் கரம் குழந்தையின் பள்ளி சீருடைக்கு மேல் பூரானை போல ஊர்ந்தது…

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கு  தொடுகையின் பேதமையை சொல்லிக் கொடுத்திருந்தாள் தென்றல்..
சைதன்யா தன்னை   தீண்டுவதை உணர்ந்த கொடி  சட்றென்று கண்கள் விரிய

“ங்கா.. ஞ்சா.. ங்கா.. ம்ம்ம்.. ம்ம்ம்” பேசவே முடியாமல் அவளது பாஷையில் கீழே இறக்கி விடச் சொல்லி  சைதன்யாவை விட்டு கீழே இறங்க முயன்றாள்.

“ஸ்ஸ்ஸ் மூச்.. சத்தம் போட்ட கொன்றுவேன்” பைக் கீயில் கோர்த்திருந்த  பேனா கத்தியை எடுத்துக்காட்ட  பாவம் குழந்தையின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது..

“ங்கா… ம்மா…மா.. ங்கா” தொண்டை விடைக்க  குழந்தை கண்ணீரில் அவன் முகத்தில் அடிக்க அந்நேரம் பார்த்து வேகமாக அறைக் கதவு திறக்கப்பட சைதன்யா அதிர்ந்து விழித்தான்.. குழலி அவனைக் கண்டதும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக கொடியை கீழ இறக்கி விட்டவன் அறையை விட்டு வெளியேறினான்..

எதற்காக அவன் தங்கள் அறையில் இருந்தான் என்று அவன் சென்ற திசையை குழலி பார்த்துக் கொண்டிருக்க  கொடி பயத்தில் விக்கித்து அழ ஆரம்பித்தாள்.. குழலியின் கவனம் இப்பொழுது தங்கை பக்கம் சென்றது.

காரணம் இல்லாமல் அழுது கொண்டிருந்த தங்கையை ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள்  என்ன ஏதென்று காரணம் விசாரிக்க, செய்கையில் நடந்த அனைத்தையும் தன்னுடைய அறிவுக்கு தகுந்த மாதிரி சொல்லி முடித்தாள் கொடி செய்கையில்..

ஒரு கையில் கொடியை பிடித்துக் கொண்டு  நேராக சித்தியின் அறைக்கு சென்றாள் குழலி.. வருண் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். தர்ஷினி வெளியே செல்வதற்காக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.

திடீரென்று கதவு திறக்கப்பட்டு குழந்தைகள் உள்ளே வருவதை கண்டவள்

“ஹேய் எத்தனை தடவை சொல்லிருக்கேன். வெளிய நின்னு கதவை தட்டனும்னு..” குழலி தர்ஷினியை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“என்னடி” அழுது கொண்டிருந்த கொடியையும் முறைத்துக் கொண்டிருந்த குழலியையும் பார்த்து தர்ஷினி கேட்க  நடந்த விஷயத்தை சித்தியிடம் முறையிட்டாள் குழலி.

” அவன் என் தங்கச்சிய பேட் டச் பண்ணிட்டான்.. நான் இதை என் அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொல்ல போறேன்.. ” தங்கைக்காக நெஞ்சை நிமிர்த்தி குழலி சொல்ல தர்ஷினி எழுந்த வேகத்தில் ஒரே அறை..

” யாரைப் பார்த்து என்னடி சொல்லிட்டுருக்க கொன்னுபுடுவேன்.. என்ன உங்க அம்மா இந்த வயசுல சொல்லி கொடுத்தாளா? பெரிய இடமா பாத்து இந்த மாதிரி பழியை தூக்கி போடுங்க லம்பானா அமவுண்ட கறந்துடலாம்னு.. மொளச்சி மூணு இலை விடல இந்த வயசிலேயே இவ்ளோ சாமர்த்தியமா..

இந்த ஊமச்சி சொன்னான்னு சுண்டக்கா நீ நியாயம் கேட்க வரியா.. தொலைச்சு கட்டிடுவேன்..” வருணை தூக்கி இடுப்பில் இடுக்கி கொண்டு  அறையை விட்டு வெளியேறும் போது கொடியின் முதுகில் சொத்தென்று ஒன்று வைத்து விட்டு சென்றாள் தர்ஷினி.

அனைத்தையும் கேட்டு முடித்த தென்றலின் உடல் நடுங்கியது. வாயில்லாத  குழந்தையிடம் கருணை வேண்டாம்.. மனிதத் தன்மை கூடவா அற்று விட்டது இவர்களுக்கு? சரியான நேரத்தில் பூங்குழலி மட்டும் வராமல் இருந்திருந்தால், நினைக்கவே நெஞ்சம் ஆயிரம் கண்ணாடி துண்டுகளாக உடைந்து சிதறியது..

தொடரும்