Advertisement

திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும்,மணமக்கள் மணமகளின் அதாவது நந்தனாவின் வீட்டிற்கு வந்தனர். நந்தனா வீட்டின் முறைப்படி சாந்தி முகூர்த்தம் மணமகள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதால் மணமக்கள் நந்தனா வீட்டிற்கு வந்தனர்.

அவர்களை அமர வைத்து, மேனகா வேகமாக உள்ளே சென்று பாலும் பழமும் எடுத்து வந்தார். முதலில் பாலை விபீஷணனிடம் தர, அவன் பாதி அருந்தி விட்டு அதை அப்படியே நந்தனாவிடம் தந்தான். அவளும் அதை வாங்கிக் குடித்தாள். பின்னர் வாழைப்பழத்தை மேனகா விபீஷணனிடம் தர, அதிலும் பாதி சாப்பிட்டு விட்டு மீதியை நந்தனாவிடம் தந்தான். அவளும் சாப்பிட்டு முடித்தவுடன், நடராஜனின் ஒன்று விட்ட அக்கா அசோக்கிடம்,”அசோக் நீ மாப்பிள்ளையை நந்தனா ரூம்கு கூப்பிட்டு போ.” என்று அவனிடம் கூறிவிட்டு நந்தனாவிடம்,”நந்தனா நீ கொஞ்ச நேரம் ஹரிணி ரூம்ல போய் ரெஸ்ட் எடு.” என்றார் அவர்.

விபீஷணன் அவர் கூறியதும் உடனே எழுந்து செல்லவில்லை. அவனிற்குக் கல்யாணம் முடிந்த நேரம் முதல் நந்தனாவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டான். ஆனால் யாராவது ஒருத்தர் நந்தனாவுடனே இருக்கின்றனர். அப்படி இல்லை என்றால் அவனுடன் இருக்கிறார்கள். அதனால் அவனிற்கு அவளிடம் பேச வாய்ப்பே இல்லை. இப்போதும் இப்படித் தனியாக அனுப்பி விட, அவனிற்குக் கடுப்பாக இருந்தது. இதுவே அவனது வீடாக இருந்தது என்றால் யாரோ என்னவோ சொல்லுங்க என்று நந்தனாவை அவனது அறைக்கு அழைத்துச் சென்று இருப்பான். ஆனால் இது நந்தனா வீடு என்பதால் அமைதியாக அசோக் பின்னால் சென்றான்.

நந்தனாவிற்குக் களைப்பாக இருந்ததால் அவள் எதையும் யோசிக்காமல் ஹரிணியின் அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு நன்றாகத் தூங்கி விட்டால். ஆனால் விபீஷணனால் தான் தூங்க முடியவில்லை. அதனால் நந்தனாவிற்கு அழைக்கலாம் என்று அவளுக்கு அழைக்க, அவளோ அதை நேற்று போட்ட சைலைன்ட் மோட்டில் இருந்து எடுக்காமல் இருந்ததால் அவளிற்கும் அவன் அழைத்தது தெரியாமல் போய் விட்டது. சரி களைப்பாக இருப்பாள், இன்னும் சில மணிநேரங்கள் தானே என்று விட்டு விட்டான்.

இரவு, அனைவரும் உணவு உண்டு முடித்தவுடன் மேனகாவும் ஹரிணியும் நந்தனாவை தயார் படுத்தி அவளுக்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அவளது அறையில் விட்டு விட்டு இருவரும் வந்து விட்டனர்.

கதவைத் திறந்து கொண்டு நந்தனா உள்ளே நுழைய, வபீஷணன் மெத்தையில் உட்கார்ந்து அவனது கைப்பேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். கதவுத் திறக்கும் சத்தம் கேட்டு விபீஷணன் கைப்பேசியை வைத்து விட்டு கீழே இறங்கி,”வெல்கம் லட்டு. காலையிலிருந்து இந்த மொமென்ட்க்கு தான் மரண வெயிட்டிங்.” என்று அவன் கூற, அவளிற்கு அவனது பேச்சு கூச்சத்தைத் தந்தது.

“அச்சோ சும்மா இருங்க அத்தான்.” என்று அவனைப் பார்க்காமலே கூறி விட்டு, கையிலிருந்த பால் சொம்பை அங்கிருக்கும் மேஜை மேல் வைத்து விட்டு அங்கேயே நின்றாள் நந்தனா.

“அட லட்டு வெட்கப்படுறியா?” என்று கூறி அவள் பக்கத்தில் வந்து அவளது கண்ணத்தை அவனது கையில் தாங்கி அவளது கண்களைப் பார்க்க, இரு வினாடிகள் கூட அவளால் அவனைப் பார்க்க முடியாமல் கண்களை மூடி விட்டாள்.

அதில் சிரிப்பு வந்து விட்டது விபீஷணனிற்கு. அந்தக் கண்களில் மெதுவாக முத்தம் வைத்தான் விபீஷணன். பின்னர் அவளது இரு கண்ணங்களில் முத்தம் வைத்தான். அப்படியே கீழே இறங்கி அவளது உதட்டில் அவனது அச்சாரத்தைப் பதிக்க வரும் போது வேகமாக அவனைத் தள்ளி விட்டு பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள் நந்தனா. அவளிற்கு மூச்சு வாங்கியது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். ஆனால் ஒரு விதத் தயக்கம், பயம் எல்லாம் அவளது மனதில் வியாபித்து இருந்தது.

அது விபீஷணனிற்கும் புரிந்தது. என்றாவது ஒரு நாள் அது நடந்து தான் ஆகும். இருந்தாலும் அவளது பயத்தைப் போக்கி அவளது முழு மனதுடன் தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் மெதுவாகச் சென்று அவளை அப்படியே பின்னாலிருந்து கட்டி அணைத்தான்.

அதில் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டாள் நந்தனா. விபீஷணன் பற்றி நன்றாகத் தெரியும். இருந்தும் அந்த நிமிடம் வரும் பயத்தை அவளால் எவ்வளவு யோசித்தும் தடுக்க முடியவில்லை.

அவளது தோள்பட்டையில் அவனது தாடையை வைத்து அவளது கண்ணத்தில் முத்தம் வைக்க, அவனது உதட்டில் ஈரம் பட, பதறிவிட்டான் விபீஷணன். வேகமாக அவளை அவன் பக்கம் திருப்ப, அவளது கண்களிலிருந்து தான் கண்ணீர் வந்திருந்தது.

“ஹேய் பட்டுக் குட்டி என்ன டா இது? எதுக்கு இப்போ இந்த அழுக? நான் தானே? என்ன பண்ண போறேன்? உன்னோட விருப்பம் இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டான். அது உனக்குத் தெரியும் தான? அப்புறம் எதுக்கு அழுகனும்?” என்று அவன் மெதுவாகவே கேட்க, அவனது அன்பில் அவளிற்குக் குற்றவுணர்ச்சியாகி விட்டது.

“சாரி அத்தான்.” என்று அவள் சிறு குரலில் கூற, அவளை அணைத்துக் கொண்டான் விபீஷணன்.

“இங்கப் பார் லட்டுக் குட்டி, எல்லா பெண்களுக்கும் இந்த டைம் நெர்வஸ்ஸா இருக்கிறது சாதாரண விஷயம் தான். நீ எந்தத் தப்பும் செய்யலை ஸோ சாரி எல்லாம் கேட்கக் கூடாது புரியுதா?” என்று அவன் சற்று அழுத்தமாகக் கேட்க, அவனது நெஞ்சில் முகத்தை வைத்திருந்தாள் எதுவும் கூறாமல் அப்படியே சரியென்று தலை அசைக்க, அவளது தலையில் முத்தம் வைத்தான் விபீஷணன்.

பின்னர் அப்படியே அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். கதவை அடைத்து விட்டு,”டேய் நீ போய் நைட் ட்ரெஸ் போடுறதுனா போய் மாத்திக்கோ போ.” என்று அவன் கூற, அவள் வேகமாக உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள்.

சிறிது நேரத்தில் நந்தனா உடை மாற்றி விட்டு வர, அதற்குள் விபீஷணனும் உடை மாற்றி இருந்தான்.

“லட்டுக் குட்டி இனிமேல் நீ என் கூடத் தான் தூங்கனும். அதுக்கு நீ கண்டிப்பா பழகித் தான் ஆகனும். அதுக்கு எல்லாம் நோ எக்ஸ்க்யூஸ் சரியா.” என்று அவன் கூற, சரியென்று தலை அசைத்தாள்.

“என்ன டா எதுவும் பேச மாட்டீங்கிற? உன் கூடப் பேச காலையில் இருந்து வெயிட்டிங் தெரியுமா!! ஆனால் யாராவது ஒருத்தர் நம்ம கூடவே இருந்தாங்களா ஸோ பேசவே முடியலை. சரி இங்க வந்து உட்கார்.” என்று கூற அவளும் எதுவும் பேசாமல் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

அவன் சாதாரணமாகப் பேச ஆரம்பிக்க, அப்போது தான் அவளது மனம் சற்று சமன்படுத்த ஆரம்பித்தது. எது எதுவோ பேசி அவளையும் பேச வைத்து அவளைச் சாதாரணமாக உணர வைத்தான் விபீஷணன்.

“ஓகே லட்டுத் தூக்கம் வருது. நீ எந்த சைட் படுப்ப?”

“இல்லை அத்து அப்படி எல்லாம் கிடையாது. எந்த சைட் படுத்தாலும் நான் தூங்குவேன்.” என்று அவள் கூற, உடனே அவன் அப்படியே படுத்து அவளையும் இழுத்து அவனது நெஞ்சில் அவளைச் சாய்த்துக் கொண்டான் விபீஷணன்.

“மத்ததுக்கு தான் இப்போதைக்கு நோ. ஆனால் இதுக்கு எல்லாம் நோ கிடையாது சரியா. அதனால் பயப்படாமல் தூங்கு.” என்று கூறிக் கண்ணயர்ந்து விட்டான் விபீஷணன்.

அவனது அன்பை எண்ணி அவளது மனதைச் சீக்கிரம் அதற்குத் தயார்ப்படுத்த வேண்டுமென்ற முடிவுடன் நந்தனாவும் விபீஷணனின் நெஞ்சில் அப்படியே தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் முதலில் விழித்தது விபீஷணன். அவன் கண் திறந்ததும் முதலில் அவனது பார்வையில் பட்டது நந்தனாவின் முகம் தான். அப்படியே சில நிமிடங்கள் அந்தப் பால் வடியும் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் என்று தெரியாது. திடீரென நந்தனா கண் விழித்ததும் விபீஷணனின் முகத்தை அவ்வளவு பக்கத்தில் பார்த்ததும் பட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள் நந்தனா.

அதன் பின்னர் தான் அவள் செய்த தவறு புரிய, விபீஷணனைப் பார்த்து,”சாரி அத்தான்.” என்றாள்.

“ஏய் நேத்துல இருந்து நீ நிறைய சாரி கேட்டுட்ட. இனிமேல் நீ சாரி கேட்டாள் கண்டிப்பா எனக்குக் கோபம் வந்துரும். நான் தான் நேத்தே சொன்னேன்ல ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யூ டா. நீ பயப்படாத சரியா. இனிமேல் தினமும் என் முகத்துல தான் நீ முழிக்கனும். அதனால கொஞ்சம் கொஞ்சமா பழகிடும் சரியா.” என்று அவன் கூற, அவனது அன்பில் அவள் நெகிழ்ந்து தான் போனாள். வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள் நந்தனா.

பின்னர் இருவரும் தயாராகிக் கீழே வர, அவர்களை அழைத்துச் செல்ல கவுதமும் சுவாதியும் வந்திருந்தனர். அதன் பின்னர் அனைத்தும் துரிதமாக நடந்தது. விபீஷணன் மற்றும் நந்தனா இருவரும் நடராஜன், மேனகா, அசோக் மற்றும் ஹரிணியிடம் கூறிவிட்டு கவுதம் மற்றும் சுவாதியுடன் விபீஷணனின் வீட்டிற்குக் கிளம்பி விட்டனர்.

விபீஷணன் வீட்டில் நர்மதா ஆர்த்தி எடுக்க, வலது காலை எடுத்து வைத்து விபீஷணனுடன் உள்ளே நுழைந்தாள் நந்தனா. அவள் உள்ளே வந்தவுடன் சுவாதி அவளை சாமி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“சாமியை நல்லா கும்பிட்டுட்டு விளக்கு ஏத்து நந்தனா.” என்று சுவாதி கூற, அவளும் சாமியை வணங்கி விட்டு விளக்கை ஏற்றினாள். பின்னர் விபீஷணன் அவளை அவனது அறைக்கு அதாவது இனிமேல் அவர்களது அறை என்று தான் கூற வேண்டும். அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.

“நேத்து வரைக்கும் என்னோட ரூம்மா இருந்தது இனிமேல் நம்மளோட ரூம்மா இருக்க போகுது. இங்க உனக்கு ஏதாவது செய்ஞ்ஸ் பண்ணனும்னு நினைச்சா தாராளமா நீ பண்ணலாம் டா. என்கிட்ட கேட்கனும்னு அவசியமே இல்லை சரியா.” என்றான் விபீஷணன்.

“இல்லை அத்து எல்லாமே நல்லா இருக்கு. எனக்கு அப்படி மாத்தனும்னா கண்டிப்பா நான் உங்ககிட்ட கேட்காமலே மாத்திடுறேன் சரியா.” என்றாள் நந்தனா.

மாலை புதுப் பெண்ணைப் பார்க்கப் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், திருமணத்திற்கு வர முடியாத உறவினர்கள் என்று ஒருவர் மாற்றி ஒருவராக வந்து நந்தனாவைப் பார்த்து விட்டுச் சென்றார்கள்.

அன்றைய இரவும் விபீஷணன் மற்றும் நந்தனா நடுவில் எதுவும் நடக்கவில்லை. அவளிற்கு நேரம் தர வேண்டுமென்று அவனும் அவளைக் கட்டாயப்படுத்த வில்லை.

அடுத்த நாளே விபீஷணன் மற்றும் நந்தனா தேனிலவிற்காக ஏற்காடு கிளம்பிச் சென்றார்கள். அவனிற்குக் குறைந்த நாட்களே விடுமுறை அளித்திருந்ததால் இப்போதைக்கு ஏற்காடு போதும் என்று தீர்மானித்துத் தான் அங்குச் செல்ல முடிவு செய்தனர்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எல்லாம் கிளம்பிவிட்டார்கள். விபீஷணன் நந்தனாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றே காரில் செல்லலாம் என்று விபீஷணன் முடிவு செய்ததால் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டார்கள்.

நடுவில் காலை சாப்பிட்டிற்கு மட்டும் நிப்பாட்டினார்கள். மற்றபடி எங்கும் நிற்காமல் இருவர் மட்டும் காரில் பாட்டுக் கேட்டுக் கொண்டும் மணம் விட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டு சென்றனர்.

சரியாக மதியம் பண்ணிரெண்டு மணிக்கு ஏற்காடு சென்றடைந்தனர் விபீஷணனும் நந்தனாவும். விபீஷணன் ஏற்கனவே ஏற்காடு வந்திருந்ததால் அவனிற்கு எப்போது எங்குச் செல்ல வேண்டும் என்று எல்லா விவரமும் நன்றாகத் தெரியும்.

“லட்டு நாம முதல்ல சேர்வராயன் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம். அந்தக் கோவில் மலை மேல இருக்கு. அது மட்டுமல்ல அந்த மலையிலிருந்து பார்த்தால் ஏற்காடு முழுசா தெரியும். எப்படியும் போயிட்டு வர ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகிடும். அதனால சாப்பிட்டு போயிடலாம் டா.” என்றான் விபீஷணன்.

“எனக்கு எதுனாலும் ஓகே அத்து.” என்று அவள் கூறவும் அவனிற்குத் தெரிந்த நல்ல உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். கோவிலிற்குச் செல்வதால் சைவ உணவகத்திற்குத் தான் வந்தனர்.

இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு காரில் ஏறி கோவிலிற்குச் சென்றனர்.

சேர்வராயன் கோவில் ஆயிரம் வருடத்திற்கு மேல் இருக்கும் பழமையான கோவில். இந்தக் கோவிலில் சேர்வராயனையும்  காவேரியையும் தான் கடவுளாக மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் தான் போர் நடந்த போது திப்புசுல்தான் மறைந்திருந்தார். அதே போல் கோவில் பக்கத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் கோவிலிலிருந்து கல்லை எடுத்துக் கொண்டு திரும்பி நின்று ஒன்றை அந்தக் கிணற்றில் போட்டால் கூட நாம் நினைத்தது நடக்கும் என்பது அங்கு உள்ள மக்களின் நம்பிக்கை.

அதை விபீஷணன் நந்தனாவிடம் கூறியதும், அவளும் கோவிலிலிருந்து மூன்று கற்களைக் கொண்டு வந்து கண்ணை மூடி நன்றாகச் சாமியைக் கும்பிட்டு விட்டுத் திரும்பி நின்று முதல் கல்லைப் போட, அது கிணற்றில் விழவில்லை. பின்னர் இரண்டாவது கல்லைப் போட அதுவும் விழவில்லை.

அவள் சோர்ந்து போகவும் பக்கத்தில் வந்த விபீஷணன்,”லட்டு இது எல்லாம் சும்மா டா. நீ என்ன வேண்டிக்கிட்டனு என்கிட்ட சொல்லு நான் நிறைவேத்துறேன் சரியா.” என்றான்.

“அத்து சும்மா இருங்க.” என்று கூறிவிட்டு மீண்டும் திரும்பி நின்று இப்போது நன்றாக சாமியை வேண்டிக்கிட்டு தூக்கிப் போட அது சரியாகக் கிணற்றில் விழச் சிறு பிள்ளை போல் கையை தட்டி குதிக்க அவளைக் காதலுடன் பார்த்தான் விபீஷணன்.

“அப்படி என்ன லட்டுக் குட்டி வேண்டிக்கிட்ட?”

அவனது கையினுள் தன் கையை நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு,”உங்க கூட வாழ்க்கை முழுசா சந்தோஷமா நிறைய வருஷம் வாழனும் அத்து. அது மட்டும் தான் என்னோட ஆசை. வேற எதுவுமில்லை.” என்று அவள் கூற, அவனிற்குமே அந்த ஆசை நிறையவே இருக்கின்றது.

நான்கு நாட்கள் எப்படிச் சென்றதே என்று தெரியாமல் அவர்களுக்குச் சென்றது. அந்த நான்கு நாட்களும் வெளியே சுற்றி நேரம் மிகவும் குறைவு தான். மற்ற நேரங்களில் அறையிலே இருந்து விபீஷணன் நந்தனாவை கொஞ்சி சீண்டி என்று அவளுடன் தான் பொழுதைக் கழித்தான்.

அதே போல் அவளது பயத்தைப் போக்கி, அவளை மெதுவாக மிருதுவாகக் கையாண்டு இல்லற வாழ்க்கையில் அழகாக அடியெடுத்து வைத்தனர் விபீஷணன் நந்தனாவும்.

அவர்கள் தேனிலவு முடிந்து விபீஷணனின் வீட்டிற்கும் வந்து விட்டனர். அதன் பின்னர் பொழுது அவர்கள் எப்போதும் செலவழிப்பது போல் செலவழித்தனர். விபீஷணன் மருத்துவமனைக்கும் நந்தனா வார நாட்களில் கல்லூரிக்கும், வார இறுதியில் தனியாகப் பயிற்சி தரும் வீட்டிற்கும் சென்றாள்.

அவரவர் வேலையை அவர்கள் செய்தாலும் கிடைக்கும் நேரத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரத்தைச் செலவு செய்தனர். மதியம் மட்டும் தான் இருவரும் தனியாகச் சாப்பிடுவார்கள். காலையிலும் இரவிலும் இருவரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் கடந்து கொண்டே இருந்தது. விபீஷணன் மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகி மூன்று மாதங்களாகி விட்டது. இன்று நான்கே நாளில் அவர்களுக்குத் திருமணமாகி நூறு நாள் முடியப் போகிறது. அன்று இருவரும் மற்றவர்களுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர். ஆனால் விதி இருவருக்கும் அதிர்ச்சியை மட்டுமல்ல விபீஷணனின் ஜீவனையும் எடுத்துக் கொண்டு சென்று விடும் என்று அவர்கள் மட்டுமல்ல அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

——–‐——————–

போன யூடில தான் கல்யாணம் முடிஞ்சது, அதனால இந்த யூடில என்னால நந்தனா இறப்பைக் காட்ட முடியலை. அதனால அடுத்த யூடியோட ப்ளாஷ்பேக் முடியுது மக்களே. நான் இந்தக் கதை ஆரம்பிக்கும் போது நிறையப் பேர் படித்தீர்கள். ஆனால் இப்போது வ்யூஸ் ரொம்பவே கம்மியாகிடுச்சு. உங்களுக்குக் கதைப் பிடிக்கலைனு புரியுது. கொஞ்சம் அட்ஜெஸ்ட் செஞ்சுக்கோங்க. கதை சீக்கிரம் முடிந்து விடும்.

Advertisement