Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 6

ஈஸ்வரும் ஊர்வசியும் பாவனி வீட்டில் இருந்து வருவதைப் ருக்மணி பார்த்து விட்டார். இவன் யார் வீட்டுக்கும் போக மாட்டானே என நினைத்தவருக்கு எதோ சரியாகப் படவில்லை. வீட்டிற்குச் சென்றவர், மகனையும் மருமகளையும் கடிந்து கொண்டார்.

மகளுக்குக் கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் அக்கறை இல்லை. பொண்ணு தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டாளே… பையன் வீட்ல பேசணும்னு எண்ணம் இருக்கா…” என்றதும்,

அவங்க வருவாங்கன்னு நினைச்சோம்.” என்றனர்.

ஆமாம் உங்களுக்கு எல்லாம் தானா நடக்கணும். முதல் அவங்க வீட்ல போய்ப் பேசிட்டு வாங்க.” என இருவரையும் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த வைஜயந்தியையும் அவர் கணவரையும் ஊர்வசி மகிழ்சியாகவே வரவேற்றார்.

இருவரும் குடிக்கக் கொண்டு வந்து கொடுத்த ஊர்வசி, “நானே வீட்டுக்கு வரணும்னு நினைச்சிருந்தேன்.” என்றவர், ஈஸ்வருக்குப் பாவனியை திருமணம் செய்வது பற்றிச் சதோஷமாகப் பகிர்ந்துகொள்ள… கேட்ட வைஜையந்தியும், அவர் கணவரும் அவ்வளவு மகிழ்ச்சியைக் காட்டவில்லை.

ஊர்வசிக்கும் அது புரிய… “ஈஸ்வர் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதே உன் மாமியாரால தான். அவங்க தான் ஈஸ்வருக்கும் அவந்திகாவுக்கும் கல்யாணம் பேச்சை ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகு தான் நான் இவனைக் கேட்டேன், ஆனா ஈஸ்வர் கல்யாணமே வேண்டாம்னு தான் சொன்னான். அப்புறம் நான் ரொம்பச் சொன்னதும், பாவனியை பண்ணிக்கிறேன்னு சொன்னான். நாங்களும் அவங்க வீட்ல பேசிட்டு வந்துட்டோம் என்றார்.

அவந்திகாவும் கல்யணம் பண்ற முடிவுக்கு வந்திருக்கா போல… நீங்களும் சட்டு புட்டுன்னு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தை முடிங்க. இவங்க சொல்லும் போதே பண்ணா தான் உண்டு.” என்றார்.

சதாசிவமும் வைஜயந்தியும் அவர்கள் வீட்டிற்கு வந்து சொன்னதும், ருகம்ணி சென்று ஊர்வசியிடம் ஒரு ஆட்டம் ஆடினார்.

அது எப்படி என் பேத்திக்கு பண்றேன்னு சொல்லிட்டு இப்போ மாத்துவீங்க.” என்று கேட்க…

நான் எங்க அப்படிச் சொன்னேன், நீங்களும் கேளுங்க நானும் கேட்கிறேன்னு தானே சொன்னேன். ஆனா அவன் பாவனியை பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டான். இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு இருந்தவன் ஒத்துகிட்டதே எனக்குப் பெரிசு. நான் அவன் யாரை சொல்லி இருந்தாலும் சரின்னு தான் சொல்லி இருப்பேன். எனக்கு அவன் கல்யாணம் பண்ணா போதும்.”

அவந்திகா நிச்சயமான கல்யாணத்தையே வேண்டாம்னு சொல்லலையா… இங்க அப்படி ஒன்னும் நடக்கலையே… நீங்க கேட்டீங்க, நானும் பையனை கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன். அவ்வளவு தானே…” என்றார் ஊர்வசி.

உன் நாத்தனார் பெண்ணை விட்டுட்டு நீ வெளியில சம்பந்தம் பண்ண நினைக்கிறது சரி இல்லை. நாளைக்கு உன் பையன் எப்படி மாறுவான்னே தெரியாது. அதுவும் அவங்க வீட்ல ஒரு மனநலம் சரி இல்லாத பையனும் இருக்கான். நாளைக்கு ஈஸ்வருக்குப் பிறக்கிற குழந்தை கூட அப்படி இருக்கலாம்.” என ஏதேதோ பேசி ருக்மணி பாட்டி ஊர்வசியின் மனதை கலைக்கப் பார்க்க…

ரொம்பப் பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க அத்தை. அந்தப் பையனுக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. விமலுக்கும் ஈஸ்வருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிக்கும். அதனால தான் பாவனியே இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா… ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா இருந்திட்டு போறாங்க.” என்றார் ஊர்வசி.

நான் சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்ட்டம்.” என்றபடி ருக்மணி சென்றுவிட்டார். ஈஸ்வர் அப்போது வீட்டில் இல்லை. இல்லையென்றால் ருக்மணி பேசியதற்குச் சண்டையில் போய் முடிந்திருக்கும்.

அலுவலகத்தில் இருந்து வந்த அவந்திகாவிடம், “நான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேன், ஈஸ்வருக்கும் அவந்திகாவுக்கும் கல்யாணம் பண்ணுவோம்னு யாரு கேட்டா… அப்படிச் செஞ்சிருந்தா இன்னைக்கு இப்படி ஆகி இருக்குமா? முதல்ல இவ வேற ஒருத்தனை விரும்புறேன்னு சொன்னா… இப்போ அவன் இவளை வேண்டாம்னு சொல்லிட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்றான்.”

என் பேச்சை யாரு கேட்டா எப்படியோ போங்க.” என ருக்மணி முனங்கிவிட்டு செல்ல… அவந்திகா அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் ஈஸ்வரிடம் சென்று காரணம் கேட்டாள்.

உனக்கு ஏன் காரணம் சொல்லணும்?” என்றான் ஈஸ்வர்.

என்னை வேண்டாம்னு சொல்லிட்டு பாவனியை கல்யாணம் பண்றீங்க அதுதான் கேட்டேன்.” என்றாள்.

உன்னை நான் எப்பவாவது லவ் பண்றேன்னு சொன்னேனா என்ன? இப்போ வேண்டாம்னு சொல்ல… எப்பவுமே உன் மேல எனக்கு அந்த எண்ணம் இல்லை… அதனால உனக்குக் காரணம் சொல்லனும்னு அவசியம் இல்லை.”

ஆனா எனக்குத் தெரியனும், என்னை விடப் பாவனி எப்படி ஒசத்தின்னு?”

உன் பிரச்சனை என்ன தெரியுமா? ஈகோ தான். இப்படித்தான் நீயா விரும்பி முடிவு பண்ண கல்யாணத்தையும் எதோ ஒரு காரணம் கண்டுபிடிச்சு வேண்டாம்னு சொன்ன… இப்பவும் உன்னையும் பாவனியும் ஒப்பிட்டு பார்த்து என்னை வந்து கேள்வி கேட்கிற.”

எனக்கும் கல்யாண வாழ்க்கையின் மேல பெரிய எதிர்பார்ப்பு இல்லை. பாவனிக்கும் இல்லை. அவளுக்கு நான் எப்படின்னு நல்லா தெரியும். எங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லைனாலும், எந்தச் சூழ்நிலையையும் சமாளிச்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில தான் கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுத்தேன்.” என்றவன்,

இதுல நீ எங்கையும் இல்லை. அதனால உன்னை விட்டு அவளைத் தேர்ந்தெடுத்தேன்னு நீயா நினைச்சுகிட்டா… அதுக்கு நான் பொறுப்பு இல்லை.” என்றான். அப்போது வேலை முடிந்து வந்த பாவனி அவந்திகாவும் கடையில் இருப்பதைப் பார்த்து, அவளுடன் பேசும் எண்ணத்தில் கடைக்குள் வந்தாள்.

பாவனி அவளைப் பார்த்து, “ஹாய் அவந்திகா…” என்று சொல்ல…பதிலுக்கு ஹாய் என்று மட்டும் சொல்லிவிட்டு, அவந்திகா சென்று விட்டாள்.

என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கா” எனப் பாவனி ஈஸ்வரிடம் கேட்க…

அவ திடிர்ன்னு இப்படித்தான் மூட் அவுட் ஆகிடுவா…” என்றவன்,

இப்போதான் வேலையில இருந்து வரியா…” என்றதும், ஆமாம் என்றாள்.

உங்களுக்கு இந்தக் கல்யாணம் ஓகே தானே…” பாவனி மீண்டும் ஈஸ்வரிடம் கேட்க…

நீ என்ன இதையே கல்யாணம் வரை கேட்பியா? நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா மாத்திக்க மாட்டேன்.,” என்றான். அப்போது கடைக்கு வாடிக்கையாளர் வர… பாவனியும் அவனிடம் விடைபெற்று சென்றாள்.

மறுநாள் வளர்மதியை பார்க்க சென்ற ஊர்வசி, “நம்ம பிள்ளைங்க சரின்னு சொல்லும் போதே கல்யாணத்தை வச்சிடுவோமா… எனக்கு இதைத் தள்ளீட்டே போறதுல இஷ்ட்டம் இல்லை.” என்றவர், “உங்களுக்கு எப்படிக் கல்யாணத்தைப் பெரிசா செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்களா?” என்றதற்கு,

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. விமலுக்கு இப்படின்னு தெரிஞ்சதுமே ரெண்டு பக்கமும் உறவுகள் எல்லாம் விட்டு போயிட்டாங்க. ரொம்ப நெருங்கின சொந்தம் மட்டும் தான்.” என்றார்.

எங்களுக்கு ஓரளவு இருக்காங்க. கல்யாணத்தைக் கோவில்ல வச்சிட்டு. வரவேற்பை எதாவது ஹோட்டல வச்சிடுவோம். இப்ப எல்லாம் அப்படித்தானே பண்றாங்க. மண்டபம் கிடைக்கிறதும் கஷ்ட்டம்.” என ஊர்வசி சொன்னதற்கு வளர்மதியும் சரி என்றார்.

கணவனை விட்டு பிரிந்து இருந்தாலும், மகளின் திருமணத்தைப் பற்றித் தெரியப்படுத்துவது தனது கடமை என்ற எண்ணத்தில், வளர்மதி அவரின் மாமியாரை அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு வைத்தார்.

அன்று மாலையே ராஜீவ வந்துவிட்டார். அப்போது பிள்ளைகள் இருவரும் வீட்டில் தான் இருந்தனர்.

யாரு பையன்? என்ன வேலை? என்றெல்லாம் அவர் விசாரிக்க….

நான்தான் உங்க அம்மாகிட்ட எல்லா விவரமும் சொன்னேனே…” என வளர்மதி சொன்னதற்கு,

என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற பையனை பத்தி நான் தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு சொல்றியா?” என்றவர், “பையன் எப்படி என்னன்னு எனக்கும் தெரியனும். நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தா யார் பொறுப்பு?” என்றதும்,

உங்களை விட எல்லாம் யாரும் மோசமா இருந்திட மாட்டாங்க. ஈஸ்வரை பத்தி எனக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சா போதும். அப்படியே எனக்கு எதாவது பிரச்சனை வந்தாலும், நான் உங்ககிட்ட வரமாட்டான். அதனால கவலைப்படாம போங்க.” என்றாள் பாவனி.

ஈஸ்வர் அங்கிள் சூப்பர்… எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றான் விமல்.

மகள் எடுத்தெறிந்து பேசிய கோபத்தில் இருந்தவர், “உன்னை யாரு டா கேட்டா லூசு பயலே..” என்றதும், விமலுக்குக் கோபம் வந்துவிட…

என்ன சொன்ன…” என்றவன் அங்கிருந்த பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து தந்தையை அடிக்கச் சென்றுவிட்டான்.

விமல்….” எனப் பாவனி கத்தியது சாலை வரை கேட்டது, ஈஸ்வர் கடைக்கு வெளியே நின்றிருந்தவன் சத்தம் கேட்டு அவர்கள் வீட்டை பார்த்தான். பாவனியின் குரல் கேட்டுக் கொண்டே இருக்க… இவ்வளவு சத்தமாக எல்லாம் ஒருநாளும் பாவனியின் குரல் கேட்டது இல்லை. அதனால் ஈஸ்வர் அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.

Advertisement