Advertisement

மாலை நேரம் நான்கு மணி..

தேநீர் அருந்தியபடி பேச்சு தொடர்ந்தது. தமிழ் ஜானை வரவழைத்தான். அவன் வந்ததும். இசைதான் அனைவரின் முன்பும் ” நீ ராணியை லவ் பண்ணுறியா?.” என்று போட்டு உடைத்தான்..

அதற்கு ஜானும் பிகு பண்ணாமல் ” எஸ் சார். நீங்க குணமாகினதும் சொல்லலாம்னு இருந்தேன். ” என்றான்.

” ஏன்டா நல்லவனே நான் இன்னும் பத்து வருசம் குணமாகாம இருந்தா நீ கல்யாணம்  பண்ணமாட்டியா? என்ன.. அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?.” என்றான் இசை.

” இல்ல சார் அவங்க கிராமத்து மனிதர்கள் நீங்களும் அம்மாவும் தான் பேசி கல்யாணம் பண்ணிவைக்கணும்..” என்றான்..

” நீ ராணியை உத்து பார்த்ததை கொடிதான் கண்டுபிடிச்சி என்கிட்ட சொன்னா. இரவு ஃபுல்லா எனக்கு பாட்டுதான். நேத்து ராணியை பொண்ணு பார்க்க வந்தாங்களாம். இன்னைக்கே இதை உன்கிட்ட கேட்டு சொல்லச்சொன்னாள்..” என்றான் தமிழ் மனையாளை பார்த்துக்கொண்டு..

அதன்பின் அன்று இரவு அங்கு தங்கிவிட்டு மலர் குடும்பம்  அடுத்த நாள் காலையில் சென்றுவிட்டது..

மலர் சென்று சற்று நேரத்தில் ஜானகி வந்தார். அவரையும் வரவேற்று இசையை காட்டி குணமாகியது பற்றி சொல்லி முழு மனதுடன் அன்பு பாசம் என கலந்து அறிவு ஜானகியை அம்மா என்று அழைத்தாள்.

அவரும் அதை கேட்டு மனம் நிறைந்து இருவரையும் ஆசிர்வதித்துவிட்டு. தாய் வீட்டில் சீராடிவிட்டு மகளின் மகிழ்வான வாழ்க்கையை பார்த்து சந்தோசத்துடன் இரண்டு நாள் இருந்துவிட்டு இசை அறிவு இருவரையும் திருச்சி வரும் படி அழைத்துவிட்டு சென்றார் ஜானகி..

அதன் பின் அவர்களின் வாழ்வு தெளிந்த நீரோடை போன்று சென்றது. அறிவு சொன்னது போன்று ஒரு மாதம் இசையை வீட்டில் பிடித்துவைத்து ஆரோக்கியமான சத்தான உணவு என கொடுத்து அவனை நன்கு உடல் ரீதியாக பலம் சேர்த்து.  முதல் செக்கப் அழைத்து சென்ற மருத்துவமனைக்கு அழைத்துசென்று முழு உடல் பரிசோதனை செய்து. இரண்டு நாளில் எதுவிதமான நோய் கோளாறு இல்லை. முழு ஆரோக்கியமாக இருக்கிறான் என டாக்டர் ரிப்போர்ட் கொடுத்ததும். தான் இசையை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாள் அறிவு..

அதன் பின் திறந்து விட்ட பறவை போன்று இயற்கை காற்றை நன்றாக சுவாசித்து றெக்கை கட்டி பறந்தான் இசைவேந்தன்..

முன்பிருந்த கம்பிரத்துடன் முகத்தில் நீங்காத கீற்று புன்னகையும் சேர்ந்து கொண்டு அவனை வசீகரமாக காட்டியது..

தமிழ் ஜான் இருவரையும் அழைத்து அனைத்து தொழில் விசயத்தையும் பற்றி பேசினான்..

தொழிலை மீண்டும் கையில் எடுத்து அவன் இல்லாத காலத்தில் நடந்த அனைத்து சூழ்ச்சியையும் அறிந்து கொண்டு அவர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தான்..

இடையில்  கொடிமங்கலம் சென்று ஜான் திருமண விசயமாக ராணியின் பெற்றோரிடம் பேசினான். ராணியின் தந்தையோ ஜான் கிருஸ்தவ மதம் அவர்கள் இந்து மதம். என மறுத்தார்..

மேலும் ஒருமாதம் கழித்து மலர்தான் ஜானுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவன் ராணியை கல்யாணம் பண்ணுவதற்காக இந்து மதத்திற்கு மாறுவதாக கூறினான் என்று கூறி ஒருமனதாக சம்மதம் வாங்கினாள்..

லேகாஸ்ரீயின் இரண்டாவது பிறந்த நாள் வந்தது. இசை குடும்பத்துடன் சென்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்..

மேலும் இரண்டு மாதம் கழித்து வேலை பளுவில் இருந்து வெளிவந்தான். தற்போது தொழில் அனைத்தும் அவனது கன்ரோலில் வந்துவிட்டது..

அந்த மாதில் வந்த மூகூர்த்த நாளில் இசை தமிழ் இருவரும் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து ராணி ஜான் திருமணத்தை கொடிமங்களத்தில் சிறப்பாக செய்தார்கள்..

இடையில் சாலினி வந்து அறிவு இசையை பார்த்து சென்றாள்..

அடுத்து ஒரு முகூர்த்த நாள் பார்த்து மீனாட்சி அம்மன் கோவிலில் இசையின் மடியில் லேகா வை வைத்து மொட்டை அடித்து காது குத்தினார்கள்..

அதன் பின் இசையின் மகனுக்கு இரண்டாவது பிறந்த நாள் அன்று அனைவரும் ஒன்று கூடி  கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி முகில்வேந்தன் என பெயரிட்டார்கள்..

இந்த மகிழ்ச்சி அனைத்தையும் கண்குளிர பார்த்துவிட்டு. அவர் சொன்ன கோவில் யாத்திரைக்கு சென்றுவிட்டார் மீனாட்சி..

குழலி வீட்டிற்கு விருந்திற்கு சென்று வந்தார்கள்..

விடுமுறை நாளில் தமிழ் மலர். இசை அறிவு. ஜான் ராணி. மாதவன் குழலி. என நான்கு ஜோடியும் இரண்டு காரில் திருச்சி சென்றார்கள்.. அங்கிருக்கும் கோவில் ஏனைய இடங்கள் என அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு.  தினேஷ் வீட்டிற்கு சென்றுவிட்டு. ஜானகியும் இசை அறிவை அந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை ஆசீர்வதிக்குமாறு கூறி. அவர்தான் அறிவு இருப்பதாக கூறினார். என அனைத்தையும் இசையிடம் விபரமாக கூறினார்..

அதன் பின் மூன்றாவது நாள் அன்று ஊட்டியில் அறிவின் தோழி கொடுத்த பணம் உடை ஜானகிக்கான கடிதம் என அனைத்தையும் தாயிடம் மறந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி மதுரை வந்தனர்..

இசையின் மகன் முகிலன் தாமரையுடன் இருப்பதை பார்த்த இசை.  அறிவிடம் எம் ஏ படிக்கச்சொன்னான் அவளும் சந்தோசமாக படிக்க சம்மதித்தாள்.. அவர்களின் பள்ளியில் மீண்டும் தமிழ் ஆசிரியராக சேர்ந்துகொண்டாள்..

இடையில் மலர் வீட்டில் நீலா வயசுக்கு வந்ததும். அதையும் சிறப்பாக செய்தார்கள்..

இவ்வாறு அனைத்து சிக்கலும் கடந்து வந்து இரண்டு ஜோடியும் அவர்களின் வாழ்வை சந்தோசமாக ஆரம்பித்தார்கள்..

தமிழ் மலர் தம்பதியின் காதலின் பலனாக மலர் இரண்டாவது குழந்தையை சுமந்தாள்..

இசை அறிவு தம்பதியினர் அறிவின் படிப்பு முடியும் வரை அடுத்த குழந்தை வேண்டாம் என தள்ளி வைத்து ரொமான்ஸுடன் அவர்களின் இரவு வண்ணமயமாக,சென்றது..

இசை மகனை அவனின் பொறுப்பில் எடுத்துக்கொண்டான்.. முகிலை ஆக்டிவ்வாக மாத்தி அவனை போன்று தைரிய சாலியாக மாற்றுவதற்க்கு போராடினான்..

ஆறுமாதம் கழித்து கோவில் யாத்திரை முடித்து மீனாட்சி பாட்டி வீட்டிற்கு வந்தார்..

இம்முறை தமிழ் மலரை கர்ப காலத்தில் நன்றாக பார்த்துக்கொண்டான்..

இசை மீண்டும் வந்துவிட்டான் என தெரிந்ததும் இரண்டு வருடம் கழித்து ஜெயிலில் இருந்து வந்த முகுந்தன். இனியும் இவர்களுடன் மோதி வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் என நினைத்து ஒதுங்கிக்கொண்டான்..

மீண்டும் யாரின் கண்ணும் பட்டுவிடாமல் இருக்க மீனாட்சி அனைவரையும் அவரின் குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று கெடா வெட்டி பொங்கல் வைத்து அவரின் நேர்த்திக்கடனை முடித்துவிட்டு வந்தார்கள்..

 இவ்வாறே அனைவரது வாழ்வும் சென்றது..

ஐந்து வருடத்தின் பின்..

கொடிமங்கலத்தில் ராமு கார்த்திகா திருமண நிகழ்வு..

கார்த்திகா படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்ததும் அங்கே பள்ளில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தாள்..

அவளின் திருமணப்பேச்சு அடிபடவும். தெளிவாக ராமுவை தான் பிடிச்சிருக்கு அவர் என்னை சந்தோசமாக பார்த்துக்கொள்வார். என தமிழ் மலரிடம் பேசினாள். பின் மாலதி மரகதம் பாட்டி வாணி என பெரியவர்கள் கழந்து பேசி இசையிடமும் தமிழ் கலந்து பேசி. பின் ராமுவிடம் சம்மதம் கேட்டு அவன் சம்மதம் சொன்னதும். இதோ தமிழ் முன்னின்று கார்த்திகா ராமுவின் திருமணம் நடைபெறுகிறது..

அனைவரும் கலந்துகொண்டார்கள்..

இந்த ஐந்து வருடத்தில் அறிவு படிப்பை முடித்துக்கொண்டு பள்ளின் நிர்வாகபொறுப்பை ஏற்றுக்கொண்டாள்..

ஜானகி தொழில் ஆசிரம பொறுப்பு இரண்டையும் தினேஷ் வினிதாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு. மாதம் ஒருமுறை இசையுடன் சென்று பார்வை இடுவதாக கூறிவிட்டு மதுரைக்கே தாய் மகள் சொந்தம் என வாழ வந்துவிட்டார்.. அதில் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்சி.. முகிலன் செக்கண்ட் ஸ்டான்டர் படிக்கின்றான்.. அவனுக்கும் ஏழு வயதாகிவிட்டது அடுத்த குழந்தை எங்கே என வீட்டு பெரியவர்கள் கேள்வி எழுப்பவும்.. கார்த்திகாவின் திருமணம் முடிந்ததும் இசை அறிவு தம்பதி ஹனிமூன் செல்வதாக திட்டம்..

மலருக்கு இரண்டாவது ஆண் குழந்தை நான்கு வயதாகின்றது.  அகிலன் என பெயரிட்டார்கள்.. தற்போது மூன்றாவது குழந்தைக்கு ஆறுமாதமாக இருக்கின்றாள்..

தமிழ் மிகுந்த சந்தோசத்துடன் அவனது குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறான்..

மாசமாக இருப்பதால் மலரை வேலைகள் செய்யவிடாது. நீலா லேகாவை அவளுக்கு காவலாக வைத்துவிட்டு தமிழ் இசை இருவரும் திருமண வேலையில் பிஸியாக இருந்தார்கள்..

அனைவரின் ஆசியுடன் ராமு கார்த்திகா திருமணம் இனிதாக நடந்தது..

அவர்களின் திருமணம் பேச்சு நடக்கும் பொழுதே தமிழ் மலரின் பழைய வீட்டை புதுபித்து அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து இதோ ராமு கார்த்திகா தம்பதியினரை அங்கு குடி வைத்தான்..

ராணி ஜான் தம்பதியினருக்கு முதல் ஆண் குழந்தை மூன்று வயது. தற்போது இரண்டாவது குழந்தைக்கு நான்கு மாதமாக இருக்கின்றாள்..

கார்த்திகாவின் திருமணம் முடிந்ததும் நீலாவை கார்த்திகா படித்த பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்தார்கள்..

இதோ இன்று காலையில் அறிவு இசை தம்பதி அவர்களின் ஹனி மூனிற்கு சுவிட்சர்லாந்து சென்றார்கள்..

அங்கு சென்று புரிதலுடன் கூடிய காதல் கலந்த அழகான தாம்பத்தியம் அவர்களிடையே நடந்தேறியது..

அங்கு முக்கியமான இடங்களுக்கு சுற்றித்திரிந்துவிட்டு அனைவருக்கும் ஷாப்பிங் செய்துகொண்டு பத்து நாளில் ஊர் திரும்பினார்கள்..

தமிழோ மலரிடம் ” இனி நாம ஹனி மூன் போகமுடியாது. பெமிலி டூர் தான் போகலாம். இவனும் பிறந்து வளரட்டும். நம்ம சக்திக்கு தகுந்த மாதிரி உள் நாட்டுலயே ஊட்டி கொடைக்கானல் குற்றாலம் . இப்டி இடங்களுக்கு டூர் போய் சுற்றி பார்ப்போம்..” என்றான் மலரின் வாடிய முகத்தை பார்த்து.

” ஆமா இவருகிட்ட கேட்டாங்களாக்கும் டூர் கூட்டிட்டு போகசொல்லி போய்யா போ வேற வேலை இருந்தா பாரு..”  என்று நொடிந்தாள் மலர்க்கொடி..

லேகா தாயின் சோர்ந்த முகத்தை பார்த்து சேட்டைகளை குறைத்துக்கொண்டு தம்பியையும் கவனித்தாள்..

 அகிலன் இயல்பிலேயே அமைதியான குழந்தை அதனால் அக்கா சொல் கேட்டு சமத்தாக இருந்தான்..

இதோ இரண்டு மாத்தில் மயக்கத்தின் மூலம் அறிவு கருவுற்று இருக்கிறாள் என தெரிந்தது..

இசை அவன் முதல் குழந்தைக்கு செய்யமுடியாத அனைத்தையும்  ஆசை தீர படிப்படியா செய்தான். மசக்கையில் கஷ்டப்படும் பொழுது தாயாக காதல் மனைவியை மடிதாங்கினான்.. மாதம் தோரும் அவனே செக்கப் அழைத்து சென்று குழந்தையின் வளர்ச்சியை தெரிந்து கொள்வான்..

முதல் குழந்தைக்கு எப்படி வளைகாப்பு நடந்தது என தாமரை கூறியிருந்தார்..

அதனால் இந்தமுறை ஒன்பதாவது மாதம் ஊர் கூட்டி சொந்தம் நண்பர்கள் தொழிலாளர்கள். என அனைவரையும் கூட்டி சீரும் சிறப்புமாக மனைவியின் வளைகாப்பை நடத்தினான் இசைவேந்தன்..

மலர் மூன்றுவது  பெண் குழந்தையை,பெற்றெடுத்து அத்தோடு கருத்தடை ஆப்ரேசனும் செய்துகொண்டாள்..

அதே போன்று அறிவும் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றாள். அதை முதலில் இசைதான் கையில் வாங்கி மகிழ்ந்தான்..

முகிலனிடம் அவன் பார்க்காத அனைத்தையும் இந்த குழந்தையிடம் பார்த்து பூரித்து போனான்..

படிப்படியாக குழந்தையின் அசைவு வளர்ச்சி என அனைத்தையும் பார்த்து உணர்ந்து ரசித்தான் இசைவேந்தன். அவரின் காதலுக்கு சாட்சியாக மகிழ்ச்சியான தருணத்தில் பிறந்ததால் இந்த குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது..

முகிலன் இன்னும் சற்று பயந்த சுபாவம் கொண்டவன்..  வரும் காலத்தில்  இசை அதை மாற்றிவிடுவான்..

இசை தமிழ் இருவரும் தொழில் எந்தளவு கவனம் அக்கறையுடன் இருக்கிறார்களோ. அதற்கு சற்றும் குறையாமல் அவர்களின் குடும்பம் மனைவி குழந்தைகள் சொந்தம் நட்பு வட்டாரம் என அனைத்திலும் ஒரே முக்கியத்துவதுத்துடன் சமமாக இருக்கிறார்கள்…

தமிழ் மலரின் மூன்றாவது பெண் குழந்தைக்கு மலர்மதி என பெயரிட்டு மொட்டையடித்து இசையின் மடியில் வைத்து காது குத்தினார்கள்..

அதே போன்று இசை அறிவு தம்பதியரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு கலையரசி என பெயரிட்டு தமிழின் மடியில் வைத்து மொட்டை அடித்து காதுகுத்தினார்கள்..

தமிழ் இசை இருவரும் மாமன் முறையை சிறப்பாக செய்தார்கள்..

அன்றிரவு இசையின் வீட்டில்தான் அனைவரும் தங்கினார்கள்..

இசை அறிவின் அறையில் ” ஏன்டி தக்காளி இப்ப நீ ஹாப்பியா?” எனக்கேட்டான் இசைவேந்தன்..

அறிவு இடுப்பில் கைவைத்து முறைத்தபடி ” இரண்டு குழந்தை பெத்தப்பிறகு இது என்ன கேள்வி அறைக்கிழவரே..” என்றாள்..

” ஏய் என்னடி சொல்லுற நான் கிழவனா?..” என்றான் செல்லக்கோபமாக..

” இல்லையா பின்ன இந்தா முடி நரைச்சிருக்கே..” என்று ஒரு முடியை பிடுங்கி காட்டினாள்..

முகிலன் தாமரையுடன் தூங்கவும் கலை இவர்களுடன் இருந்தாள்..

செல்ல சீண்டல்கள் சின்ன சின்ன ஊடல் அதன்பின் காதலுடன் கூடிய கூடல் என அவர்களின் வாழ்வு வண்ணமயமாகியது…

இங்கு தமிழ் மலரின் அறையில்.

” ஏன்டி பஞ்சு நான் ஒருநாளும் என் வாழ்க்கை இப்டி பூந்தோட்டமா அமையும்னு நினைச்சிக்கூட பார்த்ததில்ல.. மூணு குழந்தைங்க அழகான அன்பான மனைவி. நல் உள்ளம் கொண்ட சொந்தங்கள். ஏதோ கனவுல மிதக்கிற மாதிரி இருக்குடி பஞ்சு..” என்றான் மலரை இழுத்து மடியில் வைத்துக்கொண்டு கட்டியணைத்தபடி அவர்களின் நிகழ்கால வாழ்வு எதிர் கால வாழ்வு பிள்ளைகளின் படிப்பு என. ஒவ்வொன்றாக பேசினார்கள்.. ரொமான்ஸ் ஊடல் கூடல் என அழகிய பூந்தோட்டமாக இருந்தது அவர்களின் வாழ்வும் வீடும்..

தமிழ் மலர் இருவரும் எங்கோ திசை மாறி போக இருந்த வாழ்வை காலம்  அவர்கள் இருவரையும் முறையற்று இணைத்துவைத்தது.. ஆனால் அவர்களோ அதையே பற்றுகோலாக கொண்டு பற்றிப்பிடித்து முத்தான மூன்று குழந்தைகளை பெற்று அழகான வாழ்வை மகிழ்வாக வாழ்கிறார்கள் தமிரசு மலர்க்கொடி தம்பதியர்..

இசை அறிவு இருவரும் கட்டாயத்தில் இணைந்து. அதனால் பல போராட்டங்களை சந்தித்து.. பிரிந்து. காலத்தின் விதிப்படி ஒர் இடத்தில் மீண்டும் சந்தித்து. குழம்பிய வாழ்வை நேர் செய்து. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் அழகிய இரண்டு குழந்தைகளை பெற்று. நீங்காத காதலுடன் குடும்பத்தில் சொந்தம் சூழ மகிழ்வாக வாழ்கிறார்கள் இசைவேந்தன் அறிவுமணி தம்பதியர்…

காலத்தின் கணக்கை யாராலும் மாற்றமுடியாது.. விதியை மதியால் வெல்லலாம் என பழமொழியை உண்மையாக்கி.. வந்த துன்பங்களை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடி இரண்டு ஜோடியும் உயர்வாக வாழ்கிறார்கள்…

அவர்களின் வாழ்வு இவ்வாறே மகிழ்வோடு தொடரட்டும். இவர்களிடமிருந்து நாம் விடைபெறுவோம்…

********** சுபம்***********

Advertisement