Advertisement

தமிழும் குளித்துவிட்டு சாப்பிட வந்தான் மலரும் பார்த்து பார்த்து ராமு தமிழ் இருவருக்கும் பரிமாறினாள்..

சாப்பிட்டதும் ராமு எழுந்து சென்றுவிட்டான்.. தமிழ் யோசனையுடன் அங்கு இருந்தான்..

” என்ன தீவிர யோசனை. யோசிக்கிறதை பார்த்தா. ராணி கல்யாணம் ஜான் சார்கூட நடந்திரும் போலயே!. ” என்று  அவனது தலையை கலைத்துவிட்டு மலரும் அவர்களின் அறைக்குள் சென்று லேகாவின் அருகில் படுத்துக்கொண்டாள்..

சற்று நேரத்தில் தமிழும் அங்கு போய் படுத்து மலரின் கையை பிடித்து விரலை அலைந்தபடி ” ஏன்டி பஞ்சு சும்மா பார்த்தாலே காதல் தான்னு அர்த்தமா? ஜான் எதார்த்தமா கூட பார்த்திருக்கலாமே..” என்றான்.

” ஐயோ அசமஞ்சம் காதல் அப்டினா என்னனே தெரியாத உன்கிட்ட சொன்னேன் பாரு என்னை சொல்லணும்.. கல்யாணம் பண்ண முன்னாடியும் காதல் பண்ணல. கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணும் பிறந்துட்டா. இப்பவும் காதல் பார்வை பேச்சு எதுவும் இல்ல. கொஞ்ச நாள் குற்ற உணர்வுனு சொல்லி சுத்திட்டு திரிஞ்ச. இப்ப வேலை வேலைனு திரியுற நீ. அப்டி பட்ட உன்கிட்ட காதலை பத்தி சொன்னேன் பாரு.” என்று தலையில் அடித்துக்கொண்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள் மலர்.

தமிழும் அவளின் திட்டு செல்லக்கோபம் என அனைத்தையும் ரசித்தபடி அவனின் பஞ்சுமிட்டாயின் விருப்பத்தை நிறைவேற்ற காலையில் முதல் வேலையாக ஜானிற்கு அழைத்து இதை பற்றி பேசி முடிவெடுக்கவேண்டும். என நினைத்துக்கொண்டு. அவனது மகளை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு மலரின் அருகில் நெருங்கி படுத்து அவளை மற்ற கையால் அணைத்தபடியே கண்மூடினான்..

அடுத்த நாள் அதிகாலை வீட்டின்  கதவு தட்டும் சத்தம் கேட்டு முத்தரசன் தான் எழுந்துவந்தார்.. வந்து கதவை திறந்ததும். அங்கு அறிவும் ஜானும் நிற்பதை பார்த்து. ” என்னமா அறிவு இந்த நேரத்துல நீங்க இரண்டு பேரும் வந்திருக்கிறிங்க. இசை எங்க?. என்ன நடந்துசி?.” என்றார் பதட்டத்துடன்.

” ஐயோ பயப்பட எதுவும் இல்ல மாமா. உங்க குழந்தை ரொம்ப நல்லா இருக்கார். அத்தை பாட்டிமா. எல்லாரையும் கூப்பிடுங்க. முக்கியமான விசயம் பேசணும்.” என்றாள் அறிவு.

 அவரும் சென்று அவர்களை அறிவு வந்திருப்பதாக கூறி அழைத்துவந்தார்..

தாமரை மீனாட்சி இருவரும் வாசலுக்கு வந்து ” உள்ள வா அறிவு. ஏன் அங்கையே நிக்கிற? இசைக்கு குணப்படுத்த முடியாதா? திரும்பி அனுப்பிட்டாங்களா?..” என்றார் தாமரை தவிப்புடன்..

இனிமேலும் உள்ளே இருந்தால் வீட்டினர் பயந்துவிடுவார்கள் என உணர்ந்து. கார் கதவை திறந்து வாட்டசாட்டமாக கம்பீரமாக இறங்கி வந்தான் இசைவேந்தன்..

” ஹாய் மம்மி டாட் கிரேன்மா.. ஹவ் ஆர் யூ?. ” என்றான் இசை.

அவனை பார்த்து மூவரும் கண்கலங்கி திகைத்து நின்றார்கள்.

” ஐயோ என்ன நீங்க ரொம்ப மோசம் மகன் பெரிய ஆபத்துல இருந்து குணமாகி வந்திருக்கானே. ஆரத்தி எடுத்து வலது காலை வச்சி உள்ள வாப்பா மகனேனு ஆசையா கூப்புடுவிங்கனு எதிர் பார்த்தா! நீங்க அழுது வடியுறிங்களே!. இது வேலைக்காது. நான் எங்க அத்தை வீட்டுக்கே போறேன்..” என்று கோபித்தது போல் நடித்து  மீண்டும் காரில் ஏறினான்..

அறிவுதான் ” நடித்தது போதும் வாங்க..” என்று மீண்டும் வாசலுக்கு அழைத்துவந்தாள்..

தாமரை உள்ளே சென்று முகம் கழுவி.  ஆரத்தி கரைத்து எடுத்துவந்து முத்தரசன் சூடம் ஏற்றியவுடன் மகன் மருமகள் இருவரையும் சேர்ந்து நிற்க வைத்து மனசார இறைவனுக்கு நன்றி கூறி இனியாவது இவர்கள் குழந்தையுடன் மூவர் சந்தோசமாக வாழவேண்டும் என வேண்டிக்கொண்டு ஆரத்தி சுற்றி. அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு அதை வெளியே கொட்டிவிட்டு. வந்து முத்தரசனின் அருகில் அமர்ந்தார்..

ஜான் பெட்டிகளை உள்ளே எடுத்துவைத்துவிட்டு. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவனது பைக்கில் அவனின் ரூமிற்கு சென்றான்..

அங்கு நீண்ட அமைதி யாரும் எதுவும் பேசவில்லை.. ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள்.

சற்று நேரத்தின் பின் அறிவு ” பாட்டி நீங்க சொன்ன மாதிரி உங்க பேரனை முழுசா உங்ககிட்ட திருப்பி ஒப்படைச்சிட்டேன். அதுக்கு விலையா நான் கேட்ட விடுதலையை சீக்கிரம் வாங்கித்தாங்க..” என்று மீனாட்சியை பார்த்து கூறிவிட்டு எழுந்து அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்..

அறிவு இங்கு இருந்த நாட்களிலும் குழந்தையை சரியாக கவனிக்காததால். அவள் இல்லாத நாளிலும் அதிகம் குழந்தை அவளை தேடவில்லை. அதன் தாய் தாமரை என்றே நினைத்துக்கொண்டு அவரிடம் நன்கு ஒட்டிக்கொண்டது. தாமரையும் குழந்தையை பாட்டி என நினைத்து வளர்க்காமல். அம்மாவாக தான் தாலாட்டி சீராட்டி வளர்த்தார்..

அறிவு சொல்லிச்சென்றதை கேட்டதும். இன்னும் அறிவு மறக்கவில்லை இசையை மன்னிக்கவில்லை. அதனால் மீண்டும் இசைக்கு ஏதாவது நடந்துவிடுமோ என நினைத்து பயந்தார்கள்..

இசையும் எதுவும் பேசாமல் அவன் இங்கிருந்து போகும் முன் தாமரை அவனை தனியாக இருக்க அனுமதித்த அறைக்குள் சென்று மறைந்தான்..

இவர்கள் மூவரும் செய்வதறியாது இருந்த இடத்தில் சிலையாக இருந்தார்கள்..

அவர்கள் இருவரும் பயணக்களைப்பு தீர நன்கு குளித்துவிட்டு படுத்துவிட்டனர்..

காலை நேரம் ஒன்பது மணி அறிவுதான் முதல் எழுந்து வந்தாள்.

அவள் அறைக்குள் போகுமுன் எவ்வாறு இருந்தார்களோ. அதேபோல் இப்போதும் இருக்கிறார்கள். சமையல் அறையில் வேலையாள் சமையல் பண்ணுகிறாள். இவர்களை தவிற வேலையாட்கள் அனைவரும் அவர்களது வேலையை செய்கிறார்கள்.

அனைத்தையும்  ஒரு முறை கண்களால் சுற்றி பார்த்துவிட்டு பூஜை அறைக்குள்  சென்று விளக்கேற்றி. இறைவனை வணங்கி சற்று நேரம் கண்மூடி அமர்ந்துவிட்டு. எழுந்து இசை இருந்த அறைக்கதவை தட்டினாள் அறிவு..

தூக்கம் கலைந்து எழுந்த இசை கதவு தட்டும் சத்தம் கேட்கவும். எழுந்து வந்து கதவை திறந்தான். கண்ணிற்கு குளிர்ச்சியாக மங்கலகரமாக வந்து நின்றாள் அறிவு..

அவளை பார்த்தவன் அவன் நினைத்தது தான் என தெரிந்ததும். சிரித்தான். அதை பார்த்த அறிவு தலையை குனிந்தபடி சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.” என்றாள்.

” ஏன்டி மாமானை குளிக்கவைக்க மாட்டியா?” என்றான். ஏக்கம் ஆசை என கலந்த குரலில்..

அவனுக்கு  பதில் சொல்லாமல் நேரே தொலைபேசி அருகில் வந்து குழலி தமிழ். ஜானகி. என அனைவருக்கும் அழைத்து வீட்டிற்கு வரும் படி மட்டும் கூறிவிட்டு வைத்துவிட்டாள்..

அங்கிருந்து சமையலறைக்கு சென்று அனைவருக்கும் அவளே காஃபி கலந்து. குழந்தைக்கும் இசைக்கும் பாதம் பால் கலந்து தட்டில் வைத்து எடுத்துவந்து. மேசையில் வைத்துவிட்டு. தாமரையின் அறைக்கு சென்று அவர்களின் செல்ல மகனை தூக்கிக்கொண்டு வந்து தாமரையின் கையில் கொடுத்து.            “அத்தை உங்க பேரனை குளிப்பாட்டி ரெடிபண்ணி எடுத்துட்டுவாங்க சீக்கிரம்.” என்றாள்.

இசையும் ரெடியாகி வந்து அமர்ந்தான். அவனது பாலை எடுத்து கொடுத்தாள். அதை வாங்கி குடித்தான்.. தாமரை குழந்தையை ரெடியாக்கி அறிவு சொன்னது போன்று எடுத்துவந்தார்..

தாமரையின் கையில் குழந்தையை பார்த்ததும். இசை எழுந்துவிட்டான்..

இதை பார்த்த அறிவு ” என்ன சாக்கிங் உங்களுக்கு. உங்க ஜெராக்ஸ் காபி தான்..” என்றாள்.

பால் கப்பை மேசையில் வைத்துவிட்டு தாமரையிடம் குழந்தையை வாங்க கையை நீண்டினான். தாமரையும் குழந்தையை கொடுத்துவிட்டு இருந்தார்..

” எழுங்க முதல் போங்க போய் குளிச்சி சுத்தபத்தமா இருங்க ஐந்து மணி நேரமா ஒரே போஸ்ல இருங்கீங்க மூணு பேரும்..” என்று அதட்டல் போட்டாள் அறிவு..

அப்பொழுதுதான் அங்கிருந்த பெரியவர்களுக்கு ஏதோ ஒன்று புரிவது போலிருந்தது.. அவர்களும் அவர்களின் அறைக்குள்  சென்று மறைந்தார்கள்..

” தக்காளி இவ்வளவு நேரமும் குழந்தையை பற்றி ஒரு வார்த்தையும் ஏன்டி சொல்லவேயில்ல?.” என்றான் இசை ஏமாற்றத்தோடு.

” ஏன் நீங்க மட்டும் கொஞ்சம் கொஞ்சமா குணமாகினதை. பேச முடியும் என்றதை என்கிட்ட சொன்னிங்களா? இல்லையே. முழுசா குணமாகி எழுந்து நிக்கமுடிஞ்சதுக்கு அப்புறம் தானே திடீரென வந்து கட்டி பிடிச்சிங்க. அப்ப நான் எவ்வளவு சாக் ஆகி இருப்பேன். அதுக்குதான் இது. பதிலுக்கு பதில் சரியாப்போச்சி..” என்றாள் நாக்கை காட்டி..

மூவரும் குளித்து வந்ததும். மீனாட்சி       ” எப்ப அறிவு விடுதலை வேணும். நீ சொன்ன வாக்கை காப்பாத்திட்ட. நான் சொன்ன வாக்கை காப்பாத்த வேணாமா?..” என்றார்..

அறிவு எழுந்து தாமரை மீனாட்சி இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டு. ” ஐயோ செல்லங்களா நல்லா ஏமாத்திங்களா? நான்  என் அம்மா வீடு மற்றும் நான் வாழவந்த வீட்டை விட்டு என் புருசன் பிள்ளை பாட்டி அத்தை மாமா இப்டி அன்பான சொந்தங்களை விட்டு எங்க போகணும்? இல்ல ஏன் போகணும்.? ம்கூம். போகமாட்டேன். உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணணும். இன்னும் மூணு பிள்ளையாவது சந்தோசமா பெத்து உங்க மூணு பேர் கைலையும் குடுத்துட்டு நானும் என் புருசனும் ஜாலியா ஊர் சுத்தி பார்க்கணும். இப்டி இன்னும் எவ்வளவோ இருக்கு.. அதனால மூஞ்சை இப்டி உர்ன்னு வைச்சி போஸ் குடுங்காம ஓடுங்க மிஸிஸ் தாமரை போய் மருமகளுக்கு ஆசையா ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க..” என்று தாமரையை அனுப்பிவிட்டு மீனாட்சியிடம் வம்பு வளர்த்தாள் அறிவுமணி..

” வீடுன்னா இப்டி கலகலப்பா இருக்கணும். இந்த இரண்டு வருசமும் நம்ம வாழ்க்கையில் வரலனு நினைச்சுபோம்..” என்று கண் கலங்கினார் மீனாட்சி ..

அவரை ஆறுதலாக தோள்சாய்த்து சமாதானப்படுத்திவிட்டு. காலை உணவு நேரமும் தாண்டி போவதை அறியாமல். தாமரை இசையின் அருகில் வந்து வாஞ்சையாக தலையை தடவி நெற்றிமுத்தம் வைத்து அவனின் தோள் சாய்ந்தார்.

இசை குழந்தையை ஒரு கையால் மடியில் வைத்து பிடித்துக்கொண்டு மறு கையால் தாயை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்..

அமைதியான அழகான மோனநிலை. இதை முத்தரசன் அவரது கைபேசியில் புகைபடமாக எடுத்துக்கொண்டார்..

அந்த மோனநிலையை லேகாஸ்ரீ தான் தமிழின் கையில் இருந்து ஓடிவந்து மணி என்று கத்தி கலைத்தாள்..

யாரென்று இசை திரும்பி பார்த்தான் தமிழும் மலரும் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்..

தமிழை பார்த்ததும் இசை குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு எழுத்து சென்று கட்டி அணைத்தான்.

” வா மா மலர்.” என்று அவளையும் அழைத்து இருக்கவைத்துவிட்டு தமிழும் இசையும் பேச்சை ஆரம்பித்துவிட்டார்கள்..

சற்று நேரத்தில் குழலியும் குடும்பத்துடன் வந்ததும். இசை ” வாங்க மச்சான். வா குழலி..” என்று மருமகனை கையில் தூக்கிக்கொண்டு வந்தான்.

அனைவருக்கும் வீட்டின் மருமகளாக அறிவு காஃபி எடுத்துவந்து கொடுத்தாள்.

அதை குடித்தபடியே இசை எவ்வாறு எப்பொழுது குணமாகினான் என சொல்லிக்கொண்டிருந்தான்..

அதன்பின் குழந்தைகள் மூவரும் ஹாலில் விளையாடினார்கள். அறிவு பெட்டியை திறந்து அவர்களுக்கு வாங்கிவந்தவற்றை பிரித்து கொடுத்தாள்..

நேரம் ஒரு மணி அறிவு எழுந்து சென்று குழந்தைகளுக்கும் இசைக்கும் சிம்பிலாக உணவு தயாரித்தாள். மற்றவர்களுக்கு டோர் டெலிவரி ஆடர் கொடுத்தாள்..

சற்று நேரத்தில் உணவு வந்ததும். அனைவரும் உண்டுவிட்டு அவர்களுக்கு என ஒதுக்கி இருந்த அறைக்குள் சென்று மறைந்தார்கள்..

Advertisement