Advertisement

இறுதி அத்தியாயம்.

அறிவை மருத்துவமனையில்  இருந்து வீட்டிற்கு அழைத்துவந்தார்கள்.. ஹாஸ்பிடலில் மீனாட்சி ஜானகியை பெத்த அம்மா. என்று சொல்லவும். சிசேரியன் பண்ணிய வலி எல்லாம் மறந்து படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள் அறிவு.

” இல்ல நீங்க என்னை பெத்தவங்களா? இருக்கமுடியாது. ஏன்னா? என்னை பெத்த அம்மா வா இருந்தா இப்டி என்னை கஷ்டபட விட மாட்டிங்க. உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா அதுல ஒரு காரணம் வீணா போன என் வாழ்க்கையை திருப்பித்தருமா? முடியாது இல்ல.. ஆனா உங்க வளர்ப்பை  நான் எதுவும் குறை சொல்லமாட்டேன். அப்டி நினைத்தாலே நான் சாகப்போற காலத்துல தவிச்ச வாய்க்கு தண்ணீ கூட கிடைக்காது…” என்று கூறி அழுதாள்.

” அப்டி சொல்லாத அறிவு அம்மா மனசு கிடந்து தவிக்கும். பிள்ளை செத்து பிறந்திடுச்சினு தெரிஞ்சதும். ஜானு எவ்வளவு துடிச்சா தெரியுமா?. மாப்பிள்ளை தான் அவரோட அன்பு காதலால அவளை பழைய மாதிரி மாத்த ரொம்ப போராடி. அவ குழந்தை மேல உள்ள ஆசையை பார்த்து அவளை சுத்தி குழந்தையா இருந்தா. மனைவி சந்தோசமா  இருப்பானு நினைத்து. ஜானு ஆசைபடி குழந்தைகளை வளர்க்க ஆசிரமம் ஆரம்பித்து கொடுத்தார்.. அப்புறம் தான் உன் அம்மா முகத்துல சிரிப்பே வந்துது அதை பார்த்து அவரும் மனநிறைவா உணர்ந்தார்.. அப்டினு உன் அம்மா சொல்லுவா.. இத்தனை வருசம் கழிச்சு நீதான் பெத்த மக.   உயிரோட அவ கூடயே இருந்திருக்கான்னு நினைத்து இந்த மூணு நாளும் அவ பட்ட சந்தோசத்துக்கு அளவே இல்ல அறிவுமா. அம்மாவை புரிஞ்சிக்கடா!.. இனியாவது ஜானுவோட நீயும் சந்தோசமா இருக்கணும். அதுதான் இந்த அம்மாச்சியோட ஆசை மா அறிவு..” என பேத்தியிடம் கொஞ்சினார் மீனாட்சி..

” அறிவு நான் சொல்லுறேன் தப்பா நினைக்காத மா. இசை இயற்கை யா ரொம்ப நல்லவன். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும் மா. இசை என்ன ஊதாரியா? பொம்பளை பொறுக்கியா?.. குடிகாரனா?.. இல்ல சூதாடியா?.. இது எதுவுமே இல்லயே அறிவு. உன்னை விரும்பி கல்யாணம் பண்ணக்கேட்டான்.. நீ மாட்டேன்னு சொன்னதும்.. அவனுக்கு  உன்னை வேற யாருக்கும் கட்டி வைக்க விருப்பமில்ல.. நானும். நீ நான் பெத்த பொண்ணு என தெரியாமலே உன்னை அவனுக்கு கட்டிவைக்கத்தான் ஆசைபட்டேன்.. ஆனா நீ வேணாம் சொன்னதும் அதை அத்தோட விட்டேன். அப்புறம் இசைதான் உன்னை கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லவும். அவன் அன்பால மாத்திடுவான்னு நானும் சரி சொன்னேன்.. ஆனா அவன் உன் விருப்பமில்லாம தொட்டது தப்புதான்.. அதுக்கு நீ வீட்டை விட்டு போனதும் தப்பு.. இங்கையே இருந்து நீ அவனை தண்டிச்சி இருக்கலாம். அப்டி பண்ணிருந்தா அவனும் உன்னை தேடி புறப்பட்டுருக்க தேவை இல்ல. அவனுக்கு இப்டி கஷ்டம் வந்திருக்கவும் தேவையில்ல.. இசைக்கு கோமா நிலை எப்ப குணமாகுறது. உங்களோட வாழ்க்கை எப்ப சந்தோசமா ஆரம்பிக்கிறது.. அவனோட இளமை காலம் நோய்லையே கழிஞ்சிடுமோனு பயமா இருக்கு அறிவு.. நாமலும் டாக்டர் சொன்னபடி எல்லாம் பண்ணுறோம்.. மாதம் இரண்டு முறை செக்கப் அழைச்சிட்டு போறோம்.. ஆனா எந்த பலனையும் காணோம்… உன் கையிலதான் இருக்கு அறிவு. இசை சீக்கிரம் குணமாகுறதும். இப்படியே இருக்கிறதும்..  நீ என்னை அம்மா வா ஏத்துக்காட்டியும் பரவாயில்லை.. நான் ஆசை பட்டபடி நீயும் இசையும் வாழ்ந்தா அந்த சந்தோசமே எனக்கு போதும்.. என் பொண்ணு உயிரோடு குடும்பம் குழந்தைனு வாழுறான்னு. நினைத்து என் மிச்ச காலமும் கழிஞ்சிடும் அறிவு. பாரு குழந்தை அழுகிறான். போ போய் என்னனு பாரு..” என்று பொண்ணை அனுப்பிவைத்துவிட்டு தாயின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டார் ஜானகி..

” அவ உன் பொண்ணு ஜானு உன்னை விட்டு எங்க போயிடப்போறா? இசையையும் உன்னையும் புரிஞ்சி ஏற்றுக்கொண்டு என் பேத்தி காலத்துக்கும் சந்தோசமா வாழுவா அதை நீயும் கண் குளிர பார்க்கத்தான் போற அழதா ஜானுமா. வா வந்து சாப்பிடு..” என்று மகளை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார் மீனாட்சி..

மேலும் இரண்டு நாள் இருந்து பேரனை பார்த்துவிட்டு அவரின் பொறுப்பு அவரை அழைக்க திருச்சி கிளம்ப ரெடியாகினார். போகும் போது பொண்ணை பார்த்து. ”  நீயும் நானும் பிரியனும். மீண்டும் இத்தனை வருசம் கழித்து அம்மா பொண்ணா சந்திக்கணும்.  நீ என் பக்கத்துல இருந்தும். எனக்கு நீ என் பொண்ணுனு தெரியாம இருக்கணும். இப்டி இது எல்லாம் காலத்தோட விதிப்படி நடக்குதோ. அதே மாதிரித்தான் இசை உன்னிடம் நடந்துகொண்டதும். கல்யாணம் பண்ணின உடனே அவன் உன் விருப்பம் இல்லாம தொடனும் அப்டினு நினைச்சிருக்கமாட்டான். இது உறுதி. இசை நான் வளர்த்த பையன். உன்னை எப்டி நான் நல்லா வளர்த்தேன்னு நம்புகிறாயோ. அதே மாதிரி இதுவும்  உண்மை அறிவு..”

” அவன் தப்பு பண்ணணும்னு விதி இருந்தா அதை யாரும் மாத்தமுடியாது. காலத்தோட சதி அவன் மனதை மாத்திடுச்சி அறிவு. இதுதான் உண்மை நம்பி நீ நல்லா வாழுறதும். இல்ல இப்டி அழிந்து போறதும் உன் இஷ்டம். ஆனா  போன வாழ்க்கை திரும்பி வராது. இசைக்கு இந்த தண்டனை ரொம்ப அதிகம். இசை குணமாகி நீங்க சந்தோசமான வாழ்க்கை வாழுறிங்கனு தெரிஞ்சாத்தான் நான் இனி இங்க வருவேன். இசையும் பேரனையும் பார்த்துக்கோ. உன் பிடிவாதத்தை குறைச்சிக்கோ. நீயும் ஆரோக்கியமா இரு. நான் போய்ட்டு வரேன்.. ” என்று அறிவு அவளின் பிள்ளை இருவரையும் கட்டியணைத்து நெற்றிமுத்தம் வைத்து வீட்டிலிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு இசையின் தலையை தடவி கண்ணீர் விட்டபடி விடைபெற்று சென்றார் ஜானகி..

அவர் சென்றதும் தாமரை மீனாட்சியிடம் சென்று ” எப்டி அத்தை வர இருந்த பெரிய புயலை தடுத்திங்க..” என்றார் ஆச்சரியமாக.

” அதுதான் நீயே சொல்லிட்டியே தாமரை. இந்த பிரச்சினையை நீங்கதான் முடிச்சுவைக்கணும் அப்டினு சொன்னியே. ஏற்கெனவே அறிவு விசயத்துல என் வயசையும் மீறி அனுபவத்தையும் தாண்டி அறிவுக்கு ஜானகி இப்ப சொன்ன அறிவுரையை நான் அப்பவே சொல்லி புரியவைக்காம அவளோட விருப்பத்துக்கு துணை போய். இப்ப என் பேரன் கஷ்டப்படுறான். அவனோட வாழ்க்கையே வீணா போயிடுச்சே.. அதனால நான் பண்ணின தவறை என் பொண்ணுகிட்ட பக்குவமா எடுத்துச்சொல்லி புரியவச்சேன்.. ஜானுவும் முத இசையை தனிய போகவிட்டதுக்கு கோபப்பட்டா. ஆனா போக போக கோபம் குறைந்து யோசிச்சு பார்த்து புரிஞ்சிகிட்டா..” என்று சொல்லிவிட்டு சென்றார் மீனாட்சி..

குழந்தை பிறந்து அடுத்த நாள் தமிழும் மலரும் கொடிமங்கலம் சென்றுவிட்டார்கள்..

மலருக்கு அவளது பெண்ணின் சேட்டை. துடினம் என அத்தோடு வீட்டுவேலை. என நேரம் றெக்கை கட்டி பறந்தது. தமிழோ நிற்க நேரமில்லாமல் ஓடினான். கொடிமங்கலத்தில் இசை அவனுக்கு கொடுத்த பொறுப்பு.. மதுரையில் அவர்களின் பிரிண்டிங் பிரஸ். அதுவும் தற்போது தமிழின் பொறுப்பானது.. இடையில் இசையை மாதத்திற்கு இரண்டு முறை செக்கப்பிற்கு மருத்துவமனை அழைத்து செல்லவேண்டும். தமிழுடன் ஜானும் செல்வான்..

தினமும் வேலை முடித்து நள்ளிரவில் தான் தமிழ் வீட்டிற்கு வருவான். வந்து மலரின் கையால் உணவு உண்டு.  மகளை தூக்கத்தில்  கொஞ்சமுடியாமல் ஏக்கத்தோடு பார்த்துவிட்டு. மலரை அணைத்தபடி உறங்கி எழுந்து மீண்டும் அடுத்தநாள் காலை எழுந்து கடமை அழைக்க சென்றுவிடுவான் தமிழரசு..

இருந்தது இருந்தபடியே அவர்களின் வாழ்வு கடந்து எவ்வித மாற்றமும் இல்லாம் சென்றது.

ஆறுமாதம் ஓடிவிட்டது.

அறிவு குழந்தையை கவனிப்பது மிகவும் குறைவு. எப்பொழுதும் ஏதோ ஒன்றை தீவிரமா யோசித்தபடியே இருப்பாள். பிள்ளை அழுதால் கூட யாரெனும் ஒருவர் அறிவை தட்டி அதை தெரியப்படுத்த வேண்டும்..

வீடே மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.. தாமரைதான் குழந்தையை கவனித்துக்கொள்வார்.

அவரும் இசையை பற்றிய கவலையில்  குழந்தையின் அசைவுகளை கவனிக்க தவறி விட்டார்.

போக போக ஊன்றி  கவனித்ததில் குழந்தையை பார்த்து அதிர்ந்து போனார்.

குழந்தை சிரித்தல். கழுத்து நிற்பது சற்று திருப்புவது. தாய் மற்றவர்களை பார்த்தல் உணர்தல், மல்லார்ந்து படுத்தல், கை கால்களை அசைத்தல். சத்தம் வரும் திசையை நோக்கி திரும்புதல். போன்ற எந்த செயற்பாடும். பூரணமாக குழந்தையிடம் இந்த ஆறு மாதத்தில் இல்லாததை கண்டார்..

அவரே குழந்தையை எடுத்துக்கொண்டு குழந்தை நல மருத்துவரிடம் சென்று காட்டி பரிசோதித்துபார்த்தார்.. டாக்டரோ ” குழந்தை மனவளர்ச்சி சரியான முறையில இல்ல பயந்த சுபாவம் அதிகமா இருக்கு. அதுவே மற்றைய வளர்ச்சியை தடுக்குது. போசாக்கு குறைவா இருக்கு..” என மேலும் சில அறிவுரைகளை வழங்கி சத்து டானிக் எழுதிகொடுத்து அதன் பாவனைமுறையும் சொல்லிக்கொடுத்து. அடுத்த மாத செக்கப்பிற்கு அழைத்துவரும்படி கூறி அனுப்பிவைத்தார்..

தாமரையும் தற்போது குழந்தை மீது அதிக கவனம் பாசம் அக்கறை செலுத்தினார்.. விளையாட்டு காட்டுவது. கை தட்டிசிரித்து குழந்தையை திசை திருப்புவது.. என அவரால் முடிந்தளவு பேரனின் நலனிற்கு போராடுகிறார்..

அந்த வருட இசைவேந்தனின் பிறந்த நாள் வந்தது.. வழக்கமாக தாமரை அவரின் இரு பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி பிறந்தநாள் கொண்டாடுவார். குழலி திருமணம் முடித்து சென்றதும். இசைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் தடை பட்டது.. ஐந்து வருடம் கழித்து இந்த வருடம் இசைக்கு பிறந்த நாள் செய்வதற்கு தாமரை முடிவெடுத்தார்..

மீனாட்சி வேண்டாம் என்றார்.. ஆனால் தாமரை அவனுக்குள் அதனால் ஏதாவது மாற்றம் வரலாம். என்று மாமியாரிடம் சொல்லி அவரை சமாளித்து அனுப்பிவிட்டு.. இரண்டு நாளைக்கு முன்பே குழலி மலர் தமிழ் என அனைவரையும் வரவழைத்தார் தாமரை..

அவர்களும் வந்ததும் பிறந்தநாள் அன்று குழந்தை பிள்ளைக்கு பண்ணுவது போன்று வீட்டை சோடித்து.. கேக் ஆடர் பண்ணி அவன் பிறந்த நேரத்தில் அறிவை முன்நிறுத்தி அவளின் அருகில் இசையை வீல்சேரில் இருக்கவைத்து குழந்தையை கையில் கொடுத்து குடும்ப சகிதமாக கேக் வெட்டி இசையின் பிறந்தநாளை கொண்டாடினார்கள்..

ஆறு மாதத்தின் பின்னும் இசையின் குழந்தை அதன் செயற்ப்பாட்டை சரியாக செய்யவில்லை..

மிகுந்த கஷ்டப்பட்டு பலகையால் இரண்டு பக்கமும் கால்வைத்து நிற்பதற்கு வசதியாக செய்து. அதில் குழந்தையை நிற்கவைத்து. காலை பலப்படுத்த முயற்சிக்கிறார்கள்..

இங்கு மலரின் லேகாவோ சேட்டைகள் அதிகமா செய்து மலரை ஒருவழி பண்ணுகிறாள். பத்தாவது மாதம் பிடித்து எழுந்து தத்தி தத்தி இரண்டு . மூன்று அடி எழுத்துவைப்பாள். கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எறிவாள்.. அதனால் மலர் மகளுடன் போராடி  மிகவும் சோர்ந்து போவாள்..

இவ்வாறே ஆறுமாதம் கழித்து ஒருவருடமாகியது இசைவேந்தனுக்கு இவ்வாறு நடந்து..

அந்த மாச செக்கப் அழைத்துசென்றபோது. ” தமிழ் இனிமேலும் இசைக்கு தானாகவே குணமாகும்னு நாம நினைக்கிறது தவறு. ஒரு வருசம் ஆகி விட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. நாம இயற்கை வைத்தியமுறையை தொடரலாம்னு நினைக்கிறேன்.. இளமைகாலம் வீணாப்போகுதே! ” என்று கவலையுடன். கேரளாவில் அவருக்கு தெரிந்த இயற்கை மருத்துவம் நடைபெறும் இடத்தின் முகவரி கொடுத்து அங்கு சென்று மருத்துவம் பார்க்குமாறு அனுப்பிவைத்தார் டாக்டர் ..

இசையின் காதலுக்கு கிடைத்த பரிசான குழந்தைக்கு அவனே பேர்வைக்கவேண்டும். என விரும்பி தாயின் பின்பாதி பெயரான மணியை தற்போதைய பெயராக வைத்து அழைத்தார்கள்..

குட்டி மணிக்கும் ஒருவயதாகியது.. கோவிலில் அர்ச்சனை கொடுத்து பூஜை கொடுத்து. குழந்தைகள் ஆசிரமத்திற்கு ஒரு மாத செலவிற்கு பணம் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு உடை என எடுத்துக்கொடுத்து மகிழ்ந்தார்கள்..

இடையில் தமிழ் மலரின் குழந்தை லேகாவிற்கும் வீட்டில் கேக் வெட்டி சிறிய அளவில் புகைபடம் எடுத்து முதலாவது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

ஒருவழியாக இசையை கேரளா அழைத்துக்கொண்டு தமிழ் ஜான் அறிவு முத்தரசன் என ஐவரும் புறப்பட்டார்கள்..

Advertisement