Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 09.

காலை ஏழுமணி இசைவேந்தன் அவனது ஆபிஸிற்கு எம் டி யாக இல்லாமல் வேலையாளாக வேலைக்கு செல்வதற்கு ரெடியாகிறான். அப்பொழுது அவனது கைபேசி அழைத்தது அதை காதில் வைத்தவன்.” ஹலோ ஹு ஆர் யூ?.” என்றான்.

” சார் நான் கொடிமங்கத்துல இருந்து ராணி பேசுறேன். யார்னு நெனப்பு இருக்குதா?. ” என்றாள்.

” எஸ் மா சொல்லுங்க.”

” சார் மலரோட அம்மா இறந்துட்டாங்க இன்னைக்கு காலையிலதான் தெரியும்.” என்றாள்.

“ஓ சேட் நான் இதோ அங்க வாறேன் நீங்க மலரை பார்த்துக்கோங்க.” என்றான் இசை.

தமிழ் வந்து சென்றதும் மீண்டும் மலர் அதே இடத்தில் இருந்தாள். அப்பொழுதுதான் ராணி வந்து தமிழை பற்றி பேசியபோது அவளை திட்டி அனுப்பிவிட்டு. எழுந்து தாயிடம் சென்று அவரை துடைத்துவிட்டு அவருக்கு இரவு உணவு கொடுத்தாள். அதை சிறிது உண்டவர் மலரின் தலையை தடவியபடியே அருகே அழைத்தார். அவளும் தாயின் பக்கம் நகர்ந்துசென்று ” என்னம்மா இன்னைக்கு கொஞ்சம் நீங்க அதிகமா சிரமப்பட்டுட்டிங்க சாப்பிட்டு தூங்குங்க.”என்றாள் வந்த கண்ணீரை தாயிற்கு தெரியாமல் மறைத்தபடி.

சந்திரா கையை நீட்டி ” எனக்கு சத்தியம் பண்ணு மலர் எனக்கு பிறகு உன் தங்கைகளை பார்க்கிறேன்னு உன் வாழ்க்கையை கெடுத்துக்காம நீ மாப்பிள்ளையோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வேன்னு சத்தியம் பண்ணு. எனக்கு என் பொண்ணு மலரை பற்றி தெரியும் தங்ககளை கைவிடமாட்டான்னு அதை பற்றி எனக்கு கவலை இல்ல நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக வாழ்ந்தா என் ஆத்மா சாந்தியடையும் நானே உனக்கு மகளா வந்து பிறப்பேன் மலர் குட்டி அம்மாக்கு சத்தியம் பண்ணுடா.” என்றார் இவ்வளவு பேசுவதற்குள் வேகமாக மூச்சுவிட்டார் சந்திரா.

தாயின் நெஞ்சை நீவி விட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து பின் அவரின் கையை நன்கு இறுக்கமாக பற்றி ” சரிமா நீ சொன்னபடியே சத்தியமா பண்ணுறேன். இப்ப எதையும் மனசுல போட்டு குழப்பாம அமைதியா உறங்குங்க.” என்றாள் தாயின் தலையை தடவியபடியே.

மலரின் வீட்டு சூழ்நிலை சரியில்லை என்பதை புரிந்தவர் அவரின் வீட்டிற்கு சென்று அங்கு வேலைகளை முடித்து இரவு உணவும் உண்டபின் இரவு மலரின் துணைக்காக ராணியையும் அழைத்துக்கொண்டு வந்தார் மாலதி. அப்பொழுது தாயும் மகளும் பேசுவதை பார்த்து ” ராணி சந்திரா மலருக்கு நல்லது பண்ணுறாங்க ரெண்டு பேரும் பேசி முடிக்கட்டும் நாம உள்ள போவோம். இல்லன்னா நம்மை பார்த்ததும் சத்தியத்துல இருந்து மலர் தப்பிக்க நம்ம பக்கம் பேச திரும்பிடுவா அப்புறம் அவ வாழ்க்கை தமிழோட செழிப்பாக அமையாது. அவங்க பேசி முடிக்கிற வரை நாம இங்க இருப்போம்.” என்று கூறி வந்த சுவடு தெரியாமல் திண்ணையில் இருந்தார்கள் இருவரும்.

சற்று நேரத்தின் பின் பேச்சு சத்தம் கேட்காமல் போகவும் ராணியை அழைத்துக்கொண்டு மலரின் வீட்டிற்குள் சென்றார் மாலதி.

மலரோ தாயின் தலையை தடவியபடியே கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து கண்மூடினாள். மாலதி தான் மலரை எழுப்பி பாயில் படுக்கவைத்து பின் அவரும் அவளின் அருகில் ஹாலில் படுத்துக்கொண்டார்.

ராணி உள் அறையில் கார்த்திகா நீலாவின் அருகில் படுத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் விடியல் நேரம் ஐந்துமணி ராணிதான் எழுந்து வெளியேவந்து காலைகடனை முடித்துவிட்டு வாசல் தெளித்து கோலம்போட்டு பின் அனைவருக்கும் தேநீர் வைத்து எழுப்பிக்கொடுத்தாள். அப்பொழுது நேரம் ஆறுமணி.

மலர் எழுந்ததும் முகம் கழுவி தேநீர் குடித்தாள். சற்று நேரத்தில் மசக்கையால் குடித்த அனைத்தும் வெளியே வந்தது அதில் சோர்ந்துபோனாள்.

மாலதிதான் சந்திராவிற்கு முகம் துடைத்து தேநீர் குடிக்க குடுக்கலாம் என நினைத்து அவரின் அருகில் சென்றார். சென்றவர் உடல் துடைப்பதற்கு சுடு நீரில் நனைத்த துணியை அவர் மேல் வைத்துவிட்டு அவரை எழுப்பினார்.

எவ்வாறு கண்விழிக்கமுடியும் அவரின் உயிர் பறவை அவரை விட்டு பறந்து வெகுநேரமாகிவிட்டது. உடல் ஐஸ் போன்று ஜில்லென்று இருந்தது. அதில் பதட்டமடைந்த மாலதி மரகதம் பாட்டியை அழைத்துவந்தார். அவரும் பார்த்துவிட்டு ” மாலதி சந்திரா நம்மை விட்டு போய் ரொம்ப நேரம் ஆகிடுச்சி.” என்றார்.

இதை கேட்ட ராணி ” ஐயோ சந்திராம்மா ” என்று கத்தினாள். இது மலரின் காதிலும் படுத்திருந்த மலரின் தங்கைகளின் காதிலும் விழுந்தது.

சோர்விலும் ராணி கத்தியது கேட்டதும் மலர் தாயின் அருகில் ஓடிவந்தாள்.

பெண்கள் மூவரும் தாயை கட்டிக்கொண்டு கதறி அழுகின்றார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பித்தார்கள்.

ராணி தமிழுக்கு கைபேசியில் அழைத்து விசயம் சொன்னதும். அப்பொழுதுதான் பட்டறையில் வேலைக்கு அனைத்தையும் ரெடி பண்ணியவன். உடனே ராமுவை எடுத்து வைக்கச்சொல்லிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

அதன் பின் தான் ராணி இசைக்கும் அழைத்து சொன்னாள். அவனும் வீட்டில் ஒருவருடனும் பேச்சுவார்த்தை இல்லாததால். பேப்பரில் எழுதி டைனிங் மேசையில் வைத்துவிட்டு கொடிமங்கலத்திற்கு வந்துவிட்டான்.

அதன்பின் ஊர் பெண்கள் கூடி ஒப்பாரி பாடல் பாடினார்கள்.

தமிழும் ஆண்களுடன் சேர்ந்து பந்தல் போடுவது வேறு வேலைகள் என அனைத்தையும் செய்தான். அவனிடம் கொஞ்சம் பணமும் இருந்தது அதைதான் செலவுகளுக்கு பயன்படுத்தினான்.

இசையும் வந்ததும் ராணி மூலம் தமிழ் யாரென்று கேட்டு தெரிந்துகொண்டு அவனின் அருகில் சென்று ” நான் இசைவேந்தன் உங்க மனைவிக்கு அண்ணன் மாதிரி இப்டி ஒரு சந்தர்ப்பத்துல ரெண்டு பேரும் அறிமுகமாவோம்னு நினைக்கல.” என்று கூறினான்.

தமிழும் பெரிதாக பேசிக்கொள்ளாமல் அவனின் தோளில் தட்டிவிட்டு சென்றான். ‘ என்னடா இது நான் வந்து பேசுறேன் இவன் பாட்டுக்கு ஒண்ணும் சொல்லாம போறானே என்னவோ.’ என்று மனதில் நினைத்துக்கொண்டான். பின் மாலதியிடம் சென்று அவரின் கையில் ஒரு தொகை பணம் கொடுத்து செலவிற்கு வைத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று சந்திராவின் பாதம் வணங்கி அதன் பின் வெளியே வந்து ஆண்களின் பகுதியில் இருந்தான்.

அவனிடம் வேலை செய்யும் ஆண்கள் சிலர் அவனை அங்கு பார்த்துவிட்டு அருகில் வந்து விசாரித்து குடிப்பதற்கு சோடா வாங்கிவந்து கொடுத்தார்கள் இசையும் மறுக்காமல் அதை வாங்கிக்குடித்தான்.

மரகதம் பாட்டிதான் இரண்டு வருடம் படுக்கையில் இருந்த உடல் வேறு யாரும் வருவதற்கு இல்லை தகனம் பண்ண செய்யவேண்டியதை செய்யச்சொன்னார்.

அதன்பின் இறுதி சடங்குகள் முடித்து சந்திராவின் உடலை சகல மரியாதையும் செய்து எடுத்துச்சென்றார்கள்.

மலர் அழுது அழுது சோர்ந்து மயங்கிவிட்டாள். கார்த்திகா அறையில் இருந்தாள். நீலா அழுதபடி மரகதம் பாட்டியுடன் இருந்தாள்.

முத்தான மூன்று பெண்களையும் இந்த பூமியில் விட்டுவிட்டு அவர்களுக்கு பாரமாக இருந்தது போதும் அவரால் மகளின் வாழ்வு வீணாகின்றது என நினைத்து உடலிலும் பூமியிலும் இருந்து விடுதலை வாங்கிக்கொண்டார்.

ராணியும் அவளின் அம்மா வாணியும் தான் மலரின் வீட்டை கழுவி சுத்தம் செய்து பிள்ளைகளை குளிக்கவைத்தார்.

மாலதி மலரை எழுப்பி ஆறுதல் சொல்லி குளிக்கவைத்து காபி கொடுத்தார்.

தமிழே கொல்லிவைத்தான். அதன்பின் ஆண்கள் வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கும் காபி கொடுத்தனர்.

சற்று நேரத்தில் தமிழிடம் சொல்லிவிட்டு இசை சென்றுவிட்டான்.

இரவு உணவு ராணி வீட்டிலிருந்து வந்தது.

கட்டாயப்படுத்தி வயித்திலிருக்கும் பிள்ளையை காட்டி மலரை உண்ணவைத்தார்கள். அதன் பின் அங்கிருந்தவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. சிறியவர்கள் கரம் விளையாடினார்கள். பெரியவர்கள் சீட்டாடினார்கள். தமிழும் ராமுவும் ஒரு மரத்தின் கீழ் இருந்தார்கள்.

தமிழ் கொல்லிவைத்ததால் அவனை வீட்டினுள் ஹாலில் படுக்கவைத்தார் மரகதம்.

சில நாட்கள் சென்றது தமிழும் தினமும் பட்டறையில் வேலை செய்துவிட்டு இரவில் மலரின் வீட்டிற்கு வந்துவிடுவான்.

இப்படியே ஒருமாதம் சென்றது. அன்று சந்திராவின் ஒரு மாத நினைவு நாள். அன்று சடங்குகள் முடித்ததும் தமிழின் சக்திக்கு தகுந்தது போன்று அக்கம்பக்கத்தினருக்கு சாப்பாடு போட்டான். இசையும் வந்து கலந்துகொண்டான்.

அன்றிரவு இசை தமிழின் அருகில் அமர்ந்து ” தமிழ் நீங்க நம்ம ரைஸ்மில்லை பார்த்துக்கிறிங்கலா?.” என்றான். திடீரென்று எவ்வித விளக்கமும் இல்லாமல். அதை கேட்ட தமிழ் ” சார் உங்களை எனக்கு இதுவரை தெரியாது அன்னைக்கு ஒரு நாள் வந்து பேசினிங்க அப்புறம் இன்னைக்கு திடீர்னு வந்து இப்டி கேக்குறீங்களே என்ன விசயம்னு விபரமா சொல்லுங்க.” என்றான்.

தமிழ் கேட்டதும் இசை அவனை பற்றியும் அவனது காதல் மற்றும் அவனின் அறிவுடனான திருமணம் என அனைத்தையும் தமிழிடம் சொன்னான்.

” இப்ப என்னை எங்க வீட்டுல உறவு வேணாம்னு தள்ளி வச்சிருக்காங்க தமிழ். நீங்க இந்த ஊர். பொறுப்பா ரைஸ்மில் கயிறு பேக்டரி ரெண்டையும் பார்த்துக்கிட்டா எனக்கு ரொம்ப பெரிய உதவியா இருக்கும் நான் கொஞ்ச நாளைக்கு இங்க வரமுடியாது அதனால நீங்க பார்த்துகிட்டா நான் அங்க என் வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது நிறைய இருக்கு இப்டியே மணியை பிரிஞ்சு ஒரே வீட்டுல இருந்தேன்னா நான் மனசளவில நொந்துடுவேன். வேற எதுலயும் என்னால கவனம் எடுத்துக்கமுடியாது. இது நீங்க எனக்கு பண்ணுற உதவியா இருக்கும். உங்களுக்கும் பொருளாதார பிரச்சினைகள் குறைந்திடும் இப்ப உங்களுக்கும் பொறுப்பு அதிகம் ஒரு நண்பனா உதவி கேட்கிறேன் முடியாதுனு சொல்லாம சம்மதம் சொல்லுங்க. இது என்னோட காட் அதுல இருக்கிற நம்பருக்கு கூப்பிடுங்க.” என்று கூறிவிட்டு இசையும் தமிழின் அருகில் கயிற்றுகட்டிலில் படுத்தான்.

தாய் இறந்ததால் கார்த்திகாவிற்கு சாதாரணமாக தண்ணீர் உற்றி செய்யவேண்டிய சடங்குகளை செய்துவிட்டார்கள்

தமிழும் நன்கு யோசித்துவிட்டு பத்து நாள் கழித்து இசைக்கு அழைத்து அவனின் சம்மதத்தை சொன்னான்.

இசை தற்போது இருக்கும் துன்பமான மனநிலையில் அவனால் எதுவும் செய்யவும் மனமில்லை அதனால் ஜானிடம் சொல்லி தமிழுக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைக்குமாறு அவன் தயாரித்து கையெழுத்து இட்ட பத்திரத்தை கொடுத்தனுப்பினான்.

ஜானும் அதை தமிழிடம் கொடுத்துவிட்டு தற்போது இசை இருக்கும் நிலையை கவலையுடன் கூறிவிட்டு சென்றான்.

தமிழ் அதை கேட்டதும் அடுத்தநாளே மதுரை சென்று இசையை சந்தித்து பேசினான். இசை காட்டியதை பார்த்ததும் அவனும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கவலையுடன் ஊருக்கு வந்தான்.

தமிழ் இசையிடம் வேலைக்கு சேர்ந்த பின் பணக்கஷ்டம் கொஞ்சமும் இல்லை இசையிடம் பேசி மதுரை பேங்கில் வீட்டு லோட் போட்டான் பணம் கைக்கு கிடைத்ததும் அவனின் வீட்டை பெரிதாக கட்டுவதற்கு வேலைகள் நடக்கிறது .

மலரின் தங்களையும் தமிழ்தான் பார்க்கிறான். மாதம் மாதம் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் ராமுவின் மூலம் வந்துவிடும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் மாலதி மூலம் செய்வான் தமிழ். இதுவரை மலரிடம் பேசியதில்லை அவளுக்கு தற்போது நான்கு மாதம் நடக்கிறது.

மலரும் மனதை தேற்றி மீண்டும் வீட்டுவேலைகளை செய்கிறாள். பள்ளி சென்று வந்ததும் கார்த்திகா அவளுக்கு உதவுவாள். மலர் ராணி மூலம் இசையிடம் பேசி வேலை கேட்டாள். ஆனால் அவனோ ஸ்ரிக்டாக சொல்லிவிட்டான். ” இங்க பாரு மலர் நீ வேலைக்கு போகவேணாம் தமிழ் எல்லாத்தையும் பார்த்துக்கிறான். நீ அவனை மன்னித்து சந்தோசமாக வாழ்ந்தா அண்ணே சந்தோசப்படுவேன்மா உன் பிள்ளைக்கு நான் தான் தாய்மாமாவா இருந்து காது குத்துவேன். இதுதான் எனக்கு சந்தோசம்.” என்றுவிட்டு வைத்தான்.

தமிழ் பொறுப்பாக வேலை செய்து ஜான் மூலம் கணக்குகளை ஒப்படைப்பான். இப்பொழுது குடிப்பதை குறைத்துவிட்டான்.

அவனது மாற்றம் மலரின் கண்ணில் பட்டாலும் அவள் அதை பெரிதாக எடுப்பதில்லை.

அவனால் அதிக நாட்கள் அங்கும் இங்கும் இருக்கமுடியவில்லை. அதனால். வீடு ஒரளவிற்கு முடிந்துவிட்டது.

மேலும் இரண்டு மாதம் சென்றதும் மாலதி மூலம் பேசி மலரையும் தங்கைகளையும் அவனின் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருக்கிறான்.

மலருக்கு தற்போது ஆறாவது மாதம் நடக்கிறது வயிறு சற்று பெரிதாக வெளியே தெரிகிறது இந்த காலத்தில் வரும் கஷ்டம் செய்யவேண்டியவை என அனைத்தையும் மாலதிதான் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து சொல்லிக்கொடுத்தார். கணவன் பிள்ளைகள் என சொந்தம் யாரும் இல்லாத மாலதி மலரையும் அவளின் தங்கைளுக்கும் பெரும் உதவியா இருக்கிறார்.

தமிழ் வந்ததும் மலர் வெளியே வரவில்லை கார்த்திகா தான் அவனுக்கு காபி கொடுத்தாள்.

அதை குடித்தவன் முதன் முதலாக பெயர் சொல்லி மலரை அழைத்தான். ” கொடி கொஞ்சம் வெளிய வா நான் பேசணும்.” என்றான்.

தமிழ் அழைத்தும் மலர் வரவில்லை. அவள் வரும் வரை அங்கிருந்து போகும் முடிவு அவனிடமும் இல்லை.

இங்கு ஒரு பறவை குடும்பத்துடன் இணைவதற்கு போராடுகிறது. அங்கோ ஒரு பறவை குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்டது.

Advertisement