Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 6

மாலை நேரம் வேந்தன் வீட்டிற்கு வந்து பதில் சொல்லுறேன். என்று கூறி சென்றுவிட்டான். மணி ஏழு இன்னும் வரவில்லை அவனின் வரவை எதிர்பார்த்து வேந்தனின் அம்மா தாமரை. அப்பா முத்தரசன். அப்பத்தா மீனாட்சி இவர்கள் மூவரும் ஹாலில் இருக்கிறார்கள்.

அறிவு வேந்தனை வேண்டாம் என்றதும் அவர்கள் விட்டுவிட்டார்கள். அதன் பின் ஒருவருடம் கழித்து அவனை திருமணத்திற்கு கேட்பதற்க்குதான் அன்று யார் அவனிடம் பேசுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

வேந்தனின் தங்கை குழலி திருமணம் செய்திருக்கும் அவளின் கணவனின் சொந்தத்தில் ஒரு பெண் இருப்பதாகவும் அவளுக்கும் மாப்பிள்ளை தேடுவதாகவும். தனது அண்ணனை அந்த பெண்ணிற்கு முடித்துவைத்தால் ஒரே சொந்தமாகிவிடலாம் என்று இந்த திருமணத்திற்கு அண்ணனிடம் சம்மதம் கேட்கும்படி தொலைபேசியில் கூறினாள் குழலி.

அதை மனதில் வைத்து அவன் விரும்பிய அறிவு கிடைக்கவில்லை ஆகையால் அவர்கள் பார்த்திருக்கும் இந்த பெண் குடும்ப வசதி பண்பு என அவர்களைப்போல் எல்லாம் கொண்டவள். அதனால் அவளையே எப்படியாவது முடித்துவிடலாம் என்று மூவரும் பேசிவைத்து இத் திருமணம் பிசகாமல் நடைபெறவேண்டும் அதற்கு அவனின் தற்போதைய மனநிலை எவ்வாறு உள்ளது என்று அறிந்துகொண்டு பேசலாம் என காத்திருந்தார்கள்.

ஆனால் அவனோ இந்த திருமண விசயம் கேள்விப்பட்டதும் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் தீவிரமாக முடிவெடுத்து காரியம் சாதித்துக்கொண்டான் இசைவேந்தன்.

நேரம் ஏழு இருபது வேந்தனின் கார் அவனின் வீட்டினுள் வந்தது. கார்வந்த சத்தம் கேட்டதும். மூவரும் வெளியே வந்தார்கள்.

முதலில் வேந்தன் இறங்கினான் அவனின் பின் சுரேஸ் சாலினி இறுதியில் அறிவு இறங்கினாள்.

வேந்தனும் அறிவும் மாலையும் கழுத்துமாக வந்திறங்கி நிற்கவும் அவளின் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்ததும் இந்த கோலத்திற்கான அர்தத்தை கண்டறிவதற்கு ஏழாம் அறிவு தேவையில்லை.

காரின் மறுபக்கம் வந்து அறிவின் கையை பிடித்து அழைத்துவந்து ” இவங்க என் அம்மா நேம் தாமரை. இவரு என் அப்பா முத்தரசன். இவங்க அப்பத்தா மீனாட்சி இனிமேல் இவங்கதான் உன் சொந்தம் இதுதான் உன் வீடு நான்தான் உன் புருசன் இசைவேந்தன். இங்க நம்மலை தவிர வேலையாட்கள் தோட்டக்காரன் வாட்சிமேன் எல்லாரும் இருக்கிறாங்க. அதெல்லாம் நீ போக போக தெரிஞ்சிக்கலாம். சரியா?.” என்று அறிவு பேசாமல் இருக்கவும் அவளுக்கும் சேர்த்து வேந்தனே பேசினான்.

அறிவை விட்டு அவனது அம்மாவிடன் வந்தான். ” என்ன மா நீ மசமசன்னு நிக்கிற பையன் கல்யாணம் பண்ணி மருமகளோட ஜோடியா வந்திருக்கிறானே ஆராத்தி சுத்தி உள்ள கூப்புடுவோம்ன்னு நினைக்காம இப்டி சிலையா நின்னா சரியா?. எல்லாம் சொல்லிக்குடுக்கணும் சீக்கிரமா போ ம்மா பாரு வெளிய நின்னு என் பொண்டாட்டி முகமே வாடிப்போச்சி எவ்வளவு அழகான ரோஜா மாதிரி இருக்குது மணியோட முகம் அது வாடினா என்னால தாங்கிக்கமுடியாது..” என்று தாயை ஒரு வழியாக்கிவிட்டான் இசை.

இதை கேட்ட அறிவு முகத்தை திருப்பிக்கொண்டாள். ” சாலு நான் இப்ப என்னடி பண்ணுறது கல்யாணம் பண்ணுற எண்ணம் எனக்கு கொஞ்சமும் இல்ல ஆனா பாரு இந்த ராட்சசன என் வாழ்க்கையை நானே எதிர்பார்க்காத விதமா திருப்பிட்டான் இப்ப பல்லை காட்டி இளிக்கிறான் பார்க்கவே மனசெல்லாம் பத்துதுடி..” என்றாள் கோபத்துடன்.

” நீ கொஞ்சம் பொறுமையா இருடி அறிவு என்ன நடக்குதுன்னு பார்ப்போமே.” என்றாள் சாலினி.

” ஆமா இதுக்கு மேல பெருசா என்ன நடக்கணும் அதுதான் என் வாழ்க்கையே வீணா போச்சே..” என்றாள் தாலியை கையிலெடுத்து காட்டியபடி.

அதை பார்த்த இசை வேகமாக அறிவின் பக்கத்தில் வந்து ” ஏய் என்னடி பண்ணுற தாலியை கழட்ட போறியா? அதுமட்டும் நடக்கவே நடக்காது இந்த வேந்தன்கிட்ட என்ன புரிஞ்சுதா அப்புடி பண்ணணும்ன்னு நீ நினைச்சாலே உன்னை கொலைபண்ணிட்டு நானும் குத்திக்குவேன்.இதை எப்பவும் மனசுல வச்சிக்கோடி பெல்..” என்றான் கோபத்துடன்.

இவர்களின் பேச்சை நிறுத்தினார் மீனாட்சி. ” யார் இந்த பொண்ணு?. வேந்தன். உன்கிட்ட இப்புடி ஒரு செயலை நாங்க யாரும் எதிர்பார்க்கல இதுதான் நீ சொன்ன உன்னோட முடிவை காட்டின விதமா?. ” என்றார் கோபத்தில்.

அறிவு இசையை வேண்டாம் என்றதும் அவளது போட்டோவை கூட ஜானகி அனுப்பவில்லை அதனால் இவள்தான் அறிவு என அவர்களுக்கு தெரியவில்லை.

” அது பாட்டி இவ வேற யாருமில்ல நம்ம அறிவுதான் இவளே வேணாம்னு சொன்னதும் என்னால உடனே மறக்கமுடியல ஆனா பாருங்க ஒருவருசம் கழிச்சும் மறக்கமுடியல பாருங்களேன். அதுதான் எனக்கு பொண்டாட்டி என் பிள்ளைகளுக்கு அம்மா. இந்த வீட்டு மருமக இது எல்லாத்துக்கும் இவளுக்கு மட்டும்தான் அந்த தகுதி இருக்கு அதனால தட்டி தூக்கிட்டேன்.”என்றான் பெருமையுடன்.

” நீ எப்ப திருச்சி போன.” என்றார் முத்தரசன்.

” நான் எங்க டாடி திருச்சி போனேன் எல்லாம் நம்ம பிளான்தான் இவ நம்ம ஸ்கூல்லதானே தமிழ் வாத்தியா இருக்கிறா இங்க ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருக்கிறா நீங்க எனக்கு பொண்ணு பார்க்கிற விசயம் காத்துல என் காதுக்கு வந்துச்சி அப்புறம் நீங்க மூணு பேரும் சேர்ந்து பையன் முப்பது வயசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கிறானே இந்த சினிமாவில வருவது போல நெஞ்சுவலி ட்ராமா போட்டு பிளாக்மெயில் பண்ணி யாரையாவது என் தலையில கட்டிவச்சிட்டிங்கன்னா அதுதான் நானே முந்திக்கிட்டேன்.” என்றான் வேந்தன்.

” அடேய் முட்டாபயமகனே இது நம்ம அறிவுன்னு மொதல்லயே சொல்லிருக்கலாமே போம்மா போய் ஆராத்தி கரைச்சி எடுத்துட்டு வா தாமரை நம்ம வீட்டு மருமக வந்திருக்கா புள்ள கால்வலிக்க வெளிய நிக்கிது ஓடு சீக்கிரம்.” என்று மருமகளை விரட்டினார் மீனாட்சி.

” என்னடி சாலு இந்த பாட்டி இப்டி ஒரேடியா அந்தர்பெல்ட்டி அடிக்கிது பேரன் பக்கம் அப்போ நான் யாரத்தான் என்பக்கம் சேர்த்துக்கிறது இந்த ராட்சசனை சமாளிக்க..” என்றாள் அறிவு அவள் கவலை அவளுக்கு.

அறிவு இசையை வேண்டாம் என்றதும். அவன் சும்மா இருக்கவில்லை. அவளின் படிப்பு முடிந்ததும் அவனின் திட்டப்படியே ஜானகியம்மாவிடம் பேசினான்.” அத்தை நான் சொல்லுறதை கேளுங்க அவ என்னை வேணாம்னு சொல்லிட்டான்னு என்னால விட்டுட்டு போகமுடியாது அவ கோவிலுக்குள்ள இருக்கிற சாமி ரோட்டுல இருக்கிற எல்லைசாமி இல்ல யாரு வேணும்னாலும் பூஜை பண்ண எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு எனக்கு நடந்தா அது அவகூட மட்டுதான். அதனால அவளே வேலைக்கு போறேன்னு உங்ககிட்ட கேட்கிறாளே நம்ம ஸ்கூலுக்கே தமிழ் டீச்சரா அனுப்பிவைங்க ஆனா அது நம்ம ஸ்கூல்னு அவளுக்கு தெரியவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்களோடதுனு சொல்லி அனுப்பிவைங்க நான் இங்க அவங்க வந்ததும் தங்குறதுக்கு நல்ல லேடிஸ் ஹாஸ்டல் பார்த்துவைக்கிறேன். உங்களுக்கு உங்க பாசத்திற்குரிய வளர்ப்பு மகள் நீங்க பிறந்த வீட்டுலயே வாழணும் அது தானே உங்க ஆசை அது கட்டாயம் நடக்கும் நீங்க கவலைப்படாதிங்க.” என்று கூறி ஜானகிக்கு மனநிம்மதியை கொடுத்தான் இசை.

அவர்களின் திட்டப்படியே அனைத்தும் நடந்தது வேந்தன் ஹைய் ஸ்கூல் என்று பெயரிட்டிருந்தபடியால் இது அவனோடதாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை ஜானகி சொன்னதும் அறிவும் சாலினியும் மதுரை சென்றார்கள். அவன் பார்த்துவைத்த ஹாஸ்டலில் அவனிடம் வேலைசெய்யும் நம்பிக்கையான டீச்சர் மூலம் அவளை அங்கு தங்கவைத்தான். அடுத்தநாள் காலை அறிவும் சாலினியும் ஸ்கூல் வந்ததும் பிரின்சிபால் மூலம் வழமை போன்று இன்ரவ்யூ வைத்து திறமையை பார்த்துத்தான் அப்பாய்மெண்ட் கொடுத்தார்.

இது எதுவும் இல்லாமல் வேந்தனே சொல்லியிருந்தால் அவர்கள் வந்ததும் எந்த பார்மாலிட்டியும் இல்லாமல் உடனே அப்பாய்மெண்ட் ஆடரை கொடுத்திருப்பார். ஆனால் அவள் அங்கு வேலை செய்யவேண்டும். அதை தொடர்ந்து வரும்காலத்தில் அவள்தான் பிரின்சிபால் அதனால் இப்பொழுது அவனே முன்னின்றால் இருவரையும் இணைத்து தப்பாக பேசி அவளின் பெயரை கெடுத்துவிடுவார்கள் என நினைத்து அமைதியாக இருந்தான்.

அங்கு அவனை அவள் பார்க்ககூடாது என்று அவள் வகுப்பறைக்குள் சென்றதும் வந்து அவனின் வேலையை பார்ப்பான். அதாவது கணனி திரையில் அவள் பாட நடத்தும் அழகை பார்த்து ரசிப்பான் இசை.

தினமும் அவள் ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்து பஸ் நிலையத்தில் நின்று சாலினியுடன் பேசுவது சிரிப்பது பின் பஸ் வந்து அவள் சென்றதும் மீண்டும் மாலையில் இதேபோன்று பார்ப்பான். ஆறுமாதமாக இதுதான் அவனது தினசரி வேலையாக மாறிவிட்டது.

அப்படி பார்த்துவந்தவன் வீட்டில் அவனின் கல்யாணப்பேச்சு அடிபடவும் அவனே நாள் பார்த்து தாலி வாங்கி ஜானகியிடம் அறிவை திருமணம் முடிக்கபோவதாக கூறி அதற்கு அவனை மன்னிக்கும்படியும் கேட்டுக்கொண்டான்.

அவன் வசதிப்படியே அவன் பார்த்த முகூர்த்த நாள் சாலினியின் பிறந்தநாளாக அமைந்துவிட்டது. இதுதான் சரியான நாள் என்று அவனே மீனாட்சியம்மன் கோவிலில் சிறிதான திருமண அலங்காரம் செய்து மாலை நேரத்தை தெரிவு செய்து அவனின் திட்டப்படி ஆட்கள் வைத்து அவளை தூக்கி கோவிலுக்கு அழைத்துவந்தான்.

அங்குதான் சாலினியும் சுரேஸும் சென்றிருக்கிறார்கள் என அறிந்து கொண்டு அவர்கள் வெளியே வருவதற்கு முன் அறிவை அங்கு அழைத்துச்சென்றான்.

அதை பார்த்துதான் சாலின் தங்கம் என கத்திக்கொண்டு ஓடினாள். இசையே அவளை கையில் தூக்கிச்சென்றான். அறிவும் அவளின் எதிர்ப்பை காட்டினாள். பொதுமக்கள் விசயத்தை சொல்லவும் அங்கு போலீஸ் வந்தனர். அவர்களை அவனின் பி ஏ மூலம் கவனித்து அனுப்பிவைத்துவிட்டு சாலினியை அழைத்து அங்கிருந்த பாத்ரூமில் அவளை குளிக்கவைத்து பாதுகாப்பிற்கு ஆட்களை வைத்து என பல சிரமத்திற்கு பின் அவளை தயார் பண்ணி அவனே கையைபிடித்து அழைத்துவந்து முறைபடி மந்திரம் சொல்லி கெட்டிமேளம் முழங்க மீனாட்சி தாயின் ஆசியுடன் அவளை கைபிடித்தான் இசைவேந்தன்.

அதன் பின் மெட்டியணிந்து கோவிலில் நடக்கும் சடங்கள் முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துவந்தான். இவையனைத்தும் வீடியோ போட்டோ என எடுக்கப்பட்டது.

தாமரை ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச்சென்றார். அதன்பின் பூஜையறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்து என சடங்குகள் முடிந்ததும். சாலினியும் சுரேஸும் சென்றுவிட்டார்கள்.

அதன்பின் இரவு உணவை தாமரை கட்டாயப்படுத்தி உண்ணவைத்தார். அறிவை. பின் இன்று முதலிரவிற்கும் ஏற்ற நல்ல நாள் என பார்த்து தாமரையிடம் சொல்லி கையில் பாலை கொடுத்து அறிவை இசையின் அறைக்கு அனுப்பிவைத்தார்.

அறைக்குள் சென்றதும் பாலை சத்தம் வரும்படி மேசையில் வைத்தாள். அவள்வந்ததை பார்த்துவிட்டு மீண்டும் கணனியை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளின் வாழ்வை வீணாக்கிவிட்டான் என்று அவன் வைத்திருந்த லேப்டப்பை பிடுங்கி சுவரில் தூக்கி அடித்துவிட்டாள் அறிவு.

இதை வேந்தன் எதிர்பார்கவில்லை அவனின் முக்கியமான லேப்டப் அதை அவள் உடைத்ததும் அவனுக்குள் இருந்த கோபக்காரன் வெளியேவந்துவிட்டான். அவளின் கையைபிடித்து அருகில் இழுத்து உதட்டில் உதட்டைவைத்து லிப் கிஸ் அடித்துவிட்டான். அதில் அவளின் உதட்டில் ரெத்தம் வரவும்தான் விட்டான்.

” இங்க பாருடி உன் மனசு மாறட்டும்ன்னுதான் நினைச்சிட்டு காத்திருப்போம்ன்னு இருந்தேன். ஆனால் உனக்கு நேர்மையா இருக்கிறது பிடிக்காது போல எல்லாமே அதிரடி தான் என் டாலிக்கு பிடிக்கும்ன்னா அதுக்கும் இந்த மாமா ரெடிதான் என்றுவிட்டு அவளை இறுக்கி அணைத்து கட்டிலில் தள்ளி அவளின் விருப்பமில்லாமலே அவளை அடைந்தான்.

ஏசி அறையில் போடும் சத்தம் எதுவும் வெளியே கேட்டாது என்று தெரியாமல் அவள் போட்ட கத்தல் கூச்சல் எதுவும் அங்கு யாருக்கும் கேட்காமலே போனது.

அவனின் கோபம் அடங்கியதும் அவளை விட்டு விலகி எழுந்து அவளை இழுத்து கன்னத்தில் அடித்துவிட்டான்.

” நீ யாருக்கும் கிடைக்ககூடாதுனு தான் உன் விருப்பமில்லாம கட்டாயமா தாலி கட்டினேன் ஆனால் புனிதமான இந்த தாம்பத்தியத்தையும் இப்டி கட்டாயமா நடக்கவச்சிட்டியேடி படுபாவி.”

” உன்னை நம்பி சும்மா விட்டா தாலியை கழட்டிபோட்டுட்டு ஆசிரமம் நடத்துறதுதான் உன் இலட்சியம்னு போயிருப்படி அதுதான் இப்டி பண்ணிட்டேன்.”

” நீ என்னை மனசார விருப்பி எல்லாரோட ஆசைபடியும் நம்ம கல்யாணம் நடந்திருந்தா இந்த தாம்பத்தியமும் உன் விருப்பத்தோட நடந்திருந்தா எவ்வளவு அழகா இருந்திருக்கும் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடி பாவி.”

“உன்னை இங்கவச்சிருந்தேன் ராணி மாதிரி ஆனா நீ என்னையே அடிக்கவச்சிட்டல்ல நீ என்கிட்ட உன் விருப்பம் ஆசிரமம் நடத்தணும்னு சொல்லிருந்தா உனக்காக ஒண்ணை புதுசா கட்டியே தந்திருப்பேன்டி ஆனா நீ என்னை இப்டி அரக்கத்தனமா மாறவச்சிட்டியேடி..” என்றான் தலையில் கைவைத்து இசை

அவன் சொன்னதை காதில் வாங்கிளோ தெரியவில்லை. எழுந்து
” பலவீனமான பொண்ணை திமிர்பிடிச்ச நீ ஆண் ஆதிக்கத்துல என் உடம்மை தான் உன்னைல அடையமுடிஞ்சது ஆனா இந்த அறிவோட மனசை எந்த காலத்திலும் உன்னால நெருங்கவும் முடியாது இனிமே என்னை நீ நெருங்கினா எனக்கு நானே தண்டனை கொடுத்துப்பேன்டா அரக்கனே.” என்றுவிட்டு யாரும் எதிர் பார்க்காதபடி லாப்டப் கண்ணாடியை எடுத்து அவளது கையை வெட்டிக்கொண்டாள்.

” என்ன பார்க்கிற உன்னை என்னால் எதுவும் பண்ணமுடியாது ஏன்னா பணம் உடல் வலிமை எல்லாத்துலயும் நீ என்னைவிட உயர்ந்தவன் இப்ப நீ என்னை தொட்டல்ல அதுக்குதான் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிட்டேன் இது வெறும் சாம்பில் தான் எப்ப நீ என்னை தொட்டாலும் நான் ஜடம் மாதிரி இந்த படுக்கையில படுப்பேன் அதுக்கு நியாபகமா என்னையே தண்டிப்பேன்.” என்று கூறியபடியே இரத்தம் வடியவும் மயங்கி கிழே விழுந்துவிட்டாள் அறிவுமணி.

உடனே அவளை தூக்கிக்கொண்டு ராஜாஜி மருத்துவமனை சென்றான் இசைவேந்தன்.

Advertisement