Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 05

தமிழ் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டான். அவனின் அம்மா அவனையும் அவன் அப்பாவையும் விட்டு வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள்.

அப்பொழுது தமிழுக்கு ஐந்துவயது தமிழின் அப்பத்தா பேச்சி தான் அவருடைய மகன் கதிரேசனுக்கு உறவு முறை பெண்ணை மறுமணம் செய்துவைத்தார்.

ஆனால் அவளும் தமிழை சித்திக்கொடுமையை அனுபவிக்க வைத்தாள். இதை பார்த்த பேச்சி தமிழ் பசியால் வாடுவதை பொறுக்காமல் அவரே அவனை வளர்க்கும் பொறுப்பை கையிலெடுத்தார்.

ஆனால் காலம் அவரையும் நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கவில்லை. தமிழுக்கு பத்துவயதிலேயே அவரும் இறந்துபோனார்.

அதன் பின் தமிழ் அவனின் தந்தையிடம் போனபோது அவர் அவனை ஏற்றுக்கொண்டாளும் அவனின் சித்திக்காரி ஏற்கவில்லை.

கதிரேசனின் கட்டாயத்தில் தான் தமிழ் அங்கு இருந்தான். பத்துவயதில் அவனுக்கு என்ன புரிந்ததோ வீட்டில் தினமும் நடக்கும் சண்டையை பார்த்து ஒரு நாள் சித்தியை கத்தியால் குத்திவிட்டான். கதிரேசன் வந்து பார்த்துவிட்டு காரணம் கேட்டபோது ” அப்பா இந்த சித்தி நமக்கு வேணாம் மோசம் பா நீங்க இல்லாதப்ப ஒரு மாமா வீட்டுக்கு வருவாரு அவர் வந்ததும் என்னை வெளிய விளையாட அனுப்பிடுவா இன்னைக்கு நான் விளையாடிட்டு தண்ணி குடிக்கவந்தனா அப்போ சித்தியும் அந்த மாமாவும் சட்டையே போடாம படுத்திருந்தாங்க இது தப்பு தானே நீங்க தானே என் அப்பா அப்போ ஏன் நீங்க இல்லாதப்ப அந்த மாமா இங்க வந்தான். போனவாரம் நம்ம பக்கத்துவீட்டு அக்காவும் லதாவோட அப்பாவும் இப்டி இருந்தாங்கலாம் அது தப்புன்னு அந்த அக்காவோட புருசன் அவங்களை கத்தியால குத்திட்டாராம். அதனால தான் நானும் சித்தியை குத்திட்டேன். இது தப்பா அப்பா.” என்றான் தமிழ் விபரம் அறியாத வயதில் அவன் செய்த ஒரு கொலை அவனை மிகவும் பாதித்தது.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தார்கள் தமிழை.

முதல் மனைவி வேறு ஆணுடன் பணத்திற்காக ஓடிவிட்டாள். அந்த அவமானம் தாங்காமல் தமிழையும் தூக்கிக்கொண்டு வேறு ஊரிற்கு போவதற்கு தாயை அழைக்க வந்தார் கதிரேசன். ஆனால் பேச்சியோ சொந்த மண்ணை விட்டு போகவிரும்பாமல் ஒரு வழியாக கதிரை சமாதானப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்கவைத்தார்.

தமிழின் அம்மா செய்த துரோகத்தினால் வேறு பெண்ணை மறுமணம் செய்ய பிடிக்காமல் தமிழின் எதிர்காலத்திற்காக தான் மறுமணம் முடித்தார். ஆனால் அதுவே ஆட்டம் கண்டது தினமும் தமிழ் பசியால் வாடினான் உயிர் இருப்பதற்காக கதிரேசன் வரும் நேரம் இரவில் ஒரு வேலை உணவை கொடுத்து உறங்கவைத்துவிடுவாள் சித்தி வனஜா.

இதை ஒரு நாள் கதிரேசன் பார்த்துவிட்டார். அதன் பின் தான் பேச்சிடம் சொல்லி தமிழை அவருடன் அனுப்பிவைத்தார்.

தமிழ் பேச்சியுடன் போனதும் வனஜாவை அடித்துவிட்டு ” அந்த ஓடுகாளி போனதுமே நானும் செத்துப்போயிருப்பேன் தமிழ் அனாதையாகிடுவான்னு தான் அம்மா கட்டாயப்படுத்துனதாலதான் உன்னை கல்யாணம் பண்ணினேன். ஆனா நீயும் என் பையனை பட்டினி போட்டு நீ உன் வயிறு நிறைய கொட்டிக்கிட்டு தெனாவட்டா திமிருபிடிச்சி அலையிற கழுத. ஒழுங்கா குடும்ப பொண்ணா இருந்து என்னையும் என் பையனையும் அன்பா கவனிச்சிருந்தன்னா நீ பொண்ணு. அதவிட்டு நீ தமிழுக்கு சித்தின்னு காட்டிடல்ல சித்தின்னா கொடுமையா? பண்ணணும் ஏன்? அன்பு காட்டினா என்னடி கேடு உங்களுக்கு. தமிழை அம்மா பொறுப்புல விட்டுடேன். உன் கழுத்துல இந்த தாலி கட்டின பாவத்துக்கு உயிரோட இருக்கிறவரை இந்தவீட்டு சோத்தை கொட்டிக்கிட்டு பூ பொட்டு பட்டுன்னு சொகுசா வாழு அதை தவிர என்கிட்ட எதையும் எதிர்பார்க்காத.” என்று கத்தி அவளை கீழே தள்ளிவிட்டு அவ்விடம் விட்டு சென்றுவிட்டார் கதிரேசன்.

அதன் பின் கதிரேசன் வாழ்வில் ஒரு பிடிப்பில்லாமல் வாழ்ந்தார்.

பேச்சி இறந்த பின் மீண்டும் தமிழ் அவரிடம் வந்ததும் தான் அவர் வீட்டிற்கு தினமும் வர ஆரம்பித்தார்.

ஆனால் வனஜாவை அவர் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. அதனால் அவளும் வேறு இடத்தில் உடல் சுகத்தை தேடிக்கொண்டாள். அதை பார்க்ககூடாத வயதில் பார்த்து பண்ணகூடாத கொலையையும் பண்ணித்தான் தமிழ் சிறுவர் சீர்திருத்தப்பள்ளில் சேர்க்கப்பட்டான்.

தாய் இறந்து மகன் சிறை சென்றதும் இரண்டு மனைவியும் உடல் சுகம் பணம் என பாதை மாறி அவரிற்கு துரோகம் பண்ணியதால் அவரும் அவமானம் தாங்காமல் இனி யாருக்காக வாழவேண்டும் என்று தற்கொலை செய்துகொண்டார் கதிரேசன்.

கதிரின் இறுதி சடங்கிற்கு தமிழை அழைத்துவந்ததும் அவன் இறுதி சடங்கை முடித்து மீண்டும் சென்றுவிட்டான்.

அங்கு அவன் கற்றுக்கொண்டது பெண்களை நம்பாதே என்கின்ற பாடத்தையும் முரட்டுத்தனம் குடி என்பவற்றை பழகி பதினெட்டு வயதில் வெளியே வந்தான் தமிழ்.

அவனது அழகான தோற்றத்தை கொலைகாரன். ஓடுகாளி மகன் என ஊர்மக்கள் கொடுத்த பட்டத்திற்கு அந்த வலியை தாங்கமுடியாமல் சிகரெட்டால் சூடு வைத்துகெடுத்துக்கொண்டான்.

சிறையில் இருந்த காலத்தில் நல்வர்களை இந்த உலகம் ஏமாற்றும் மதிக்காது என பிழையான போதனையில் வளர்ந்ததனால் அவனால் வேறு மாதிரி சிந்திக்கமுடியவில்லை. அது உண்மை போன்றே இந்த உலகமும் காலத்தின் மாற்றத்தால் ஏமாற்றம் பொய் களவு சூது ரேப் என மாறியதை பார்த்து அவனது மனதும் கல்லாகிவிட்டது.

அவனை போன்று சிறையில் இருந்தவன் தான் ராமு இருவரும் அவனது ஊரான கொடிமங்கலத்திற்கே வந்துவிட்டார்கள்.

ஊருக்கு வந்ததும் அடிதடி வேலை பார்ப்பான். என்ன கூலிவேலை கிடைத்தாலும் செய்வான் இப்படி செய்துதான் அவனிற்கு ஒரு புல்லட்வாங்கினான். அவனது அப்பா இருந்தவீட்டை விற்றுவிட்டு அந்தபணத்தில் வேறு இடத்தில் ஒரு அறை கொண்ட சிறிய வீடுகட்டி அவனது வாழ்வை மாற்றிய கத்தியை செய்யும் தொழிலையே கையிலெடுத்தான் இருபத்தியெட்டு வயதே ஆனா ஆண்மகன் தமிழரசன்.

மூன்று மாதத்திற்கு முன்.

ஒரு நாள் ராணி உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு போகவில்லை அதனால் மலர் இரவு தாமதமாக வேலைமுடித்து தனியே வந்துகொண்டிருந்தாள். அப்பொழு கடும் காற்று மழை அன்று காலையில் இருந்தே வானம் மழைவரும் போன்றுதான் இருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துவரும்பொழுதான் மழை ஆரம்பித்தது. அதில் நன்றாக நனைந்துவிட்டாள் மலர்.

மெல்லிய உடலிடையை கொண்டதால் அவளால் குளிர்காற்றை தாங்க முடியவில்லை. சற்றுதூரம் வந்ததும் தமிழின் பட்டறை வந்தது அங்கு ஒதுங்கினாள் மலர். அவளின் பிழையான நேரமோ என்னவோ அன்று தமிழ் சிறைக்கு சென்ற நாள் அதை மறக்கவேண்டி அதிகமாக குடித்தான்.

அவனை தடுக்க சென்ற ராமுவையும் எட்டி உதைத்துவிட்டான். ராமுவும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தமிழ் அளவு மீறி குடித்துவிட்டு வீட்டிற்கு போவதற்கு வெளியே வந்தவன் மலரை பார்த்தபடி நின்றுவிட்டான்.

ஆனால் அவளோ தமிழை பார்க்கவில்லை பார்த்திருந்தால் அங்கு நிற்காமல் வீட்டிற்கே சென்றிருப்பாள்.

குளிர் அதிகமாக அவள் உள்ளே செல்ல திரும்பியவள் அவன் மீது பலமாக மோதி கீழே விழுந்துவிட்டாள்.

பெண்களை மதிக்காதவன் பிடிக்காது என்று தள்ளி இருந்தவன் அவனே அவ்வாறு நடப்பான் என்று நினைத்திருக்கவில்லை காலத்தின் முடிச்சை யாராலும் மாற்றமுடியாது.

மது போதை கண்ணை மறைக்க மலரின் கையை பிடித்து அவன் எழுப்பி அணைத்துக்கொண்டான்.

திடீரென்று மலரும் இதை எதிர்பார்கவில்லை நன்றாக பயந்துவிட்டாள்.

அவளால் முடிந்தளவு அவனை அடித்து போராடி பார்த்துவிட்டாள். பாறையை பூவால் அசைக்கமுடியுமா?. அவளின் ஈர உடையில் தெரிந்த அங்க வடிவங்கள் ஆறடி ஆண்மகனின் மனதை சஞ்சலப்படுத்தியது பதினெட்டு வருடமாக மனதில் எறிந்த தீயை அனைக்கும் வழி தெரியாமல் மதுவை நாடியவன் இன்று மாதுவை நாடினான்.

அவனின் வலிமையின் முன் அவளின் மென்மை எடுபடவில்லை. மலரில் தேனெடுக்க மொய்த்த வண்டாக உயிரிலும் பெரிதாக எண்ணிய கற்பை முறையின்றி சூரையாடினான் தமிழ்.

மது போதையில் மாதுவும் இணைந்து அவனின் மனத்தீயை அனைத்ததோ யார் அறிவார்.

மலரும் பலமிலந்து மயங்கிவிட்டாள்.

மழை சற்று குறைந்து தூரலாக இருந்த போது ராமு தமிழைத்தேடிவந்தான்.

மலரின் உடை அலங்கோலமாக கிடக்கவும் ஓடிச்சென்று மாலதியை அழைத்துவந்து மலரை தண்ணீர் தெளித்து எழுப்பி உடையை சரிசெய்து கைதாங்கலாக அழைத்துச்சென்றார்.

ராமுவும் தமிழை வீட்டிற்கு அழைத்துசென்றான்.

நடந்த சம்பவத்தில் மலருக்கு காய்ச்சல் நெருப்பாக கொதித்தது. மாலதியும் இதை மலரின் தாயிடமும் வேறு யாரிடமும் கூறாமல். அருகிலிருந்து மலரையும் சந்திராவையும் கவனித்துக்கொண்டார்.

மூன்று நாள் கழித்து மலருக்கு காய்ச்சல் விடவும் வாழவும் முடியாமல் அவளின் குடும்ப பொறுப்பை தட்டிக்கழித்து சாகவும் முடியாமல் தடுமாறினாள்.

மரகதம் பாட்டி ராணி மாலதியக்கா மூவரும் அவளுக்கு பக்கபலமாக இருந்து அவளை பார்த்துக்கொண்டார்கள்.

இதற்கு ஒரு முடிவெடுத்தவராக மரகதம் பாட்டி சந்திராவிடம் மலருக்கு திருமணம் பண்ணலாம் என்றார்.

சந்திராவும் சந்தோஷத்துடன் சம்மதித்தார். அவரின் உடலில் உயிர் உள்ளவரை மகளின் மணவாழ்வை கண்குளிர பார்க்கலாம் என்று மகிழ்ந்தார்.

மரகதம் பாட்டியும் மாலதியும் சேர்ந்து நாள் பார்த்து தமிழிடம் பேசுவதற்கு சென்றார்கள்.

” ஏன்? அந்த அப்பாவி பொண்ணை மிருகத்தனமா இப்டி சீர்கெட வச்சிட்டியே அவளே ஒரு ஆதரவில்லாம ஒத்த பொண்ணு உழைத்து நாலு பேர் சாப்பிட்டு இனி எல்லா செலவையும் பார்க்கிற கட்டாயத்துல இருக்கிறா அவளை போய் இப்டி பண்ணிட்டியே படுபாவி பயலே மலருக்கு கீழ இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்கிறாங்க அவங்க வாழ்க்கை இதனால பாதிக்கும். உன் சபலத்தை தீர்க ஆயிரம் வழி இருக்கு ஏழை பொண்ணோட வாழ்க்கையை உன் ஆசைக்கு பழியாக்கிட்டியே டா பாதகா.” என்று அவரது மனக்குமுறலை காட்டினார் மரகதம்.

இதை பார்த்த மாலதி இப்பொழுது காரியம் தான் முக்கியம் என நினைத்து மரகதம் பாட்டியை சமாதானப்படுத்திவிட்டு நேரடியாக விசயத்திற்கு வந்தார் மாலதி.

” இங்க பாரு தமிழ் எது சரி பிழைன்னு பேசுற காலம் கடந்துடுச்சி நீ தப்புபண்ணிட்ட அதனால நீதான் மலரை கல்யாணம் கட்டிக்கணும். இந்த மதுரை மண்ணுல பிறந்த தமிழச்சி கற்பு பறிபோனதும் உயிரோட இருக்கிறதே அவளோட குடும்பத்துக்காகதான். நீ அவளை கைவிட்டுடாம கல்யாணம் பண்ணிக்கப்பா.” என்றார் மாலதி கவலையை மறைத்து.

தமிழை சந்தித்து பேசிவிட்டு வந்து மேலும் மூன்று நாள் கழித்து ஆள் அனுப்பி மாலதியை வீட்டிற்கு வரச்சொன்னான். அன்று ஞாயிறு விடுமுறை மலர் வீட்டில்தான் இருந்தாள். அவளுக்கு தெரியாமல் தான் மரகதம் மாலதி இருவரும் தமிழின் வீட்டிற்கு வந்தார்கள்.

வந்ததும் குடிக்க தண்ணீர் கொடுத்து அதன் பின் சோட கொடுத்து பேச்சை ஆரம்பித்தான்.

” எனக்கு அவளை கட்டிக்க சம்மதம் ஆனா கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போகக்கூடாது நானே அவங்க குடும்பத்தையும் பார்த்துப்பேன். அவ இங்க வந்திடனும். இதுக்கு அவளுக்கு சம்மதம் சொன்னா அடுத்து ஆகவேண்டியத நீங்க பார்த்துட்டு என்னைக்கு நான் கோவிலுக்கு வரணும்னு சொல்லுங்க வந்து தாலிகட்டுறேன்.” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் தமிழரசன்.

ஒரு வழியாக மிகுந்த போராட்டத்தின் பின் மலரின் தங்களின் வாழ்க்கையை காரணம் காட்டித்தான் இறுதியில் அவளை சம்மதிக்க வைத்தார்கள். அவள் சம்மதித்ததே பெரிது என்று தமிழ் சொன்ன எதையும் மலரிடம் சொல்லவில்லை.

நாள் பார்த்து நேரம் குறித்து அருகிலிருந்த மாரியம்மன் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தது.

அதன் பின் தமிழின் வீட்டிற்கு அழைத்துவந்தார்கள் இருவரையும். அங்கு பூஜையறையே இல்லாததால் வேறு ஒன்றும் சடங்கு என்று அவர்களை தொல்லை பண்ணாமல் தமிழ் சொன்னதை மாலதி மலரிடம் தயக்கத்துடனே கூறினார்.

” நான் முன்ன இதை சொல்லியிருந்தா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்ட மலர் அதனால தான் சொல்லல இப்ப சொல்லுறேன் அடுத்து நீயே யோசித்து நல்ல முடிவெடு.” என்று தமிழ் சொன்னதை சொன்னார்.

அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே உள்ளே சென்று ” இங்க பாருங்க நான் ஒண்ணும் உங்களை ஆசைபட்டு நீங்கதான் வேணும்ன்னு கட்டிக்கல புரிஞ்சிதா நான் ஒருநாளும் என் கடமையில இருந்து தவற மாட்டேன். உங்க தயவுல என் குடும்பம் வாழணும்ன்னு எந்த அவசியமும் இல்ல என் அம்மா தங்கச்சிங்க அதுக்கு பிறகுதான் வேற எதுவும் என் வேலையை விட்டு என் குடும்பத்த விட்டு எல்லாம் இப்டி இங்க வந்து நான் சுயநலமா வாழுவேன்னு கனவுலயும் எதிர்பார்க்காதிங்க மிஸ்டர். ” என்று யாரையும் வாய் திறந்து பேசவிடாமல் அவளே பேசிவிட்டு அங்கிருந்து வெறுங்கையுடன் அவளின் வீட்டிற்கு வந்துசேர்ந்தாள் மலர்க்கொடி.

ஏன் மலர் திருமணமான அன்றே தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்று சந்திரா மாலதியிடம் கேட்கவும். அவரோ ஒரு பொய் சொல்லி சமாளித்தார்.

” மாப்பிள்ளை வீட்டை கொஞ்சம் பெருசா கட்டிமுடிச்சிட்டு உங்களையும் அந்த வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு சொன்னார். ஆனா மலர் அம்மா தங்கச்சிங்களை தனிய அங்க விட்டு அவளால இங்க இருக்க முடியாதுன்னு சொல்லி தமிழை தினமும் இங்க வந்து என்னை பார்த்துட்டு போங்க சீக்கிரம் வீடு கட்டினதும் நாங்க ஒண்ணா அங்க வாறோம்ன்னு சொல்லி வந்துட்டு சந்திராம்மா. நீங்க வேணும்ன்னா பாருங்க மாப்பிள்ளை நம்ம மலரை விட்டு இருக்கமாட்டாரு அதுக்காகவே வீட்டை சீக்கிரம் கட்டிமுடிச்சிட்டு மலரை வந்து அழைச்சிட்டு போவாறு. அதை நீங்க யோசிக்காம உங்க உடம்பை கவனிச்சிக்கோங்க.” என்று மனதை தேற்றிவிட்டு சென்றார் மாலதி.

அன்று வந்தவள் தான் இன்னும் தமிழின் வீட்டிற்கு போகவில்லை மீண்டும் வேலை குடும்பம் என்றே அவளின் வாழ்வை மாற்றிக்கொண்டாள் மலர்.

அவள் அவ்வாறு கூறிச்சென்றதும் தமிழும் அவளை நினைக்கவில்லை முன்பிருந்தது போன்றே அவனின் வாழ்வும் மாற்றம் ஏதும் இன்றி சென்றது.

மூன்று மாதத்திற்கு பின் இன்றும் தமிழ் மதுவின் பிடியில். மலரோ ராஜாஜி மருத்துவமனையில்.

இருவரின் வாழ்வும் என்று மலருமோ?. அதுவும் காலத்தின் கையில்.

Advertisement