Advertisement

அத்தியாயம் 04.

வேந்தன் என்றாள் அரசன் என்றும் பொருள் தொழில் சாம்ராஜ்யத்தில் அரசனாக கொடிகட்டி பறக்கவேண்டும் என்ற விருப்பத்தில் அவரின் தொழில்களுக்கு வேந்தன் ரைஸ்மில். வேந்தன் தென்னை மற்றும் பனை உற்பத்தி நிலையம். பிரின்டிங் பிரஸ். பிரைவேர்ட் ஸ்கூல். ஜூஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங் பேக்டரி. என்று வேந்தன் என்கிற பெயரில் ஐந்துவகை தொழிலை ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பித்தார் வேந்தனின் தாத்தா. அவரின் பின் வேந்தனின் தந்தை முத்தரசன் எடுத்து நடத்தினார். அவரின் வாரிசான வேந்தன் தற்போது தொழில் சாம்ராஜ்யத்தின் அரசனாகி விட்டான்.

அவரின் மனைவி மீனாட்சி அவரின் காலத்திற்கு பின் எந்த குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்று அவர்கள் தற்போது இருக்கும் பங்களாவை மனைவின் பெயரில் வாங்கி அதற்கு மீனாட்சி இல்லம் என்றே பெயரிட்டார் வேந்தனின் தாத்தா.

அதே போன்று மீனாட்சியம்மாவிற்கு வீடுகள் கட்டி அதை வாடகைக்கு கொடுத்து வாடகை பணம் கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்.

கொடிமங்கலத்தில் விவசாய நிலம் அதில் விளையும் நெல்மணிகளை அவர்களின் ரைஸ்மில்லிலே அதை அவித்து குத்தி அரிசியாக்கி பெக் பண்ணி வெளியிடங்களுக்கும் மொத்த விற்பனையாளர்களிடமும் விற்கப்படுகிறது. தென்னந்தோப்பு பனைமர உற்பத்தி, கயிறு பேக்டரி என்பனவற்றை நம்பிக்கையான ஆட்கள் வைத்து பராமரிக்கின்றார்கள். வாரத்தில் இரண்டு நாள் அங்கு சென்று கணக்குகள் மற்றும் ஏனையவற்றை வேந்தன் பார்த்துவருவான்.

வாரத்தில் ஏழு நாட்கள் இரண்டு நாள் ஒவ்வொரு வாரமும் வேறு வேறு நாட்களில் தான் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் அவர்களின் வேலையை கவனிப்பதற்காக கொடிமங்கலம் போவான். அதனால் முதலாளி எந்ந நாளும் வரக்கூடிய நிலை உண்டு என்பதை அறிந்தவர்கள் வேலையில் மிக கவனமாக இருப்பார்கள். பிழையோ களவோ சோம்பேறி தனமோ எதுவுமே அவனிடம் எடுபடாது.

அதேபோன்று வாரத்தில் நான்கு நாட்கள் மதுரையிலிருக்கும் பிரின்டிங் பிரஸ் மற்றும் ஸ்கூலுக்கும் விசிட்டிங் போவான்.

வாரத்தின் இறுதி நாள் ஞாயிறு அன்று அவனிற்கான நாள்.

அதிர்ஷ்டவசமாக இனிமையான குரல் வளம் கொண்டவன்.

இனிய குரல்வளத்தினால் பாடல் கச்சேரி நடத்துவான் அது அவனுக்கான மிகவும் பிடித்த ஒன்று அதில் வரும் பணத்தை ஆதரவற்றோர்களுக்கு கொடுப்பான்.

தொழில் மூலம் அவனை அறிந்தவர்களை விட அவனின் பாடல்கள் மூலம் அவனை தெரிந்துகொண்டவர்களே அதிகமானோர்.

ஆண்களில் சற்று அதிக உயரமுடையவன். உடற்பயிற்சியினால் கட்டுக்கோப்பான உடலமைப்புடையவன். இவயனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் தான் இசைவேந்தன்.

இப்டி பல சிறப்புகளை கொண்ட ஆறடி மனிதனை ஒரு பெண் சற்றும் மதிக்காமல் சரியான காரணமும் சொல்லாமல் திருமணத்திற்கு நிராகரித்துவிட்டாள்.

அந்த நிராகரிப்பு தான் அவனை ஒரு கொடுரனாக்கியது இவ்வாறு முறையற்ற செயலையும் செய்யவைத்தது.

ஜானகியம்மா முத்தரசனின் தங்கை தான் அவரை நன்றாக சீர் செய்து திருச்சியில் கட்டிக்கொடுத்தார். அவளின் தந்தை.

அவரும் பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன என்று நினைத்து மனம் சோர்ந்துபோகாமல் ஆசிரமம் நடத்தினார்.

அவரின் கணவர் இறந்தபின் அண்ணன் மகனின் துணையுடன் தான் அதை தொடர்ந்து நடத்துகிறார் ஜானகி.

வேந்தன் தான் அங்கு சென்று அவர்களின் பிசினஸ் கணக்கு மற்றும் ஏனையவை ஆசிரம வரவு செலவு வரும் சிக்கல்கள் என அனைத்தையும் பார்த்து அவரின் வேலையை பாதியாக குறைப்பான்.

அவ்வாறு திருச்சிக்கு சென்றுவரும்போதுதான் அங்கு அறிவை பார்த்தான். ஏதோ பார்த்தவுடன் அவள் அவன் மனதை பாதித்துவிட்டாள்.

அவனிற்குள் இனம்புரியாத மாற்றம் ஏற்படவும் அதை அவன் நண்பன் தினேஷிடம் பகிர்ந்துகொண்டான். அவன் வேந்தனை நன்றாக குழப்பிவிட்டு யோசித்துபார்க்கும்படி கூறிவிட்டு சென்றான்.

ஒரு அழகிய பூங்காற்று முப்பது வயதேயான மூங்கிலை வருடிச்சென்றது. அதனால் அவனை கட்டுக்குள் வைக்க அவனே ரொம்பவும் போராடினான்.

இறுதியில் ஒரு முடிவெடுத்தவனாக ஒருவருடத்திற்கு முன் திருச்சிசென்றிருந்த போது மனதை மறைக்காமல் அறிவிடமே மனதிலிருப்பதை கூறிவிட்டான்.

ஆனால் அவளோ எதைபற்றியும் சிந்திக்காமல் அந்த நிமிடமே விருப்பமில்லை என்று கூறிவிட்டாள்.

அவள் ஆசிரமத்தில் வளர்ந்தவள் ஒரு ஆண் எந்த முன் அறிவிப்பும் இன்றி விரும்புவதாக கூறினாள் எந்த பெண்தான் ஏற்றுக்கொள்வாள் என்று அவனது மனதை தேற்றிக்கொண்டு ஒருமாதம் சென்றதும் முறைப்படி அவனின் வீட்டில் அறிவை பிடித்திருப்பதாகவும் அவளையே கல்யாணம் பண்ண விருப்புவதாகவும் கூறினான்.

மீனாட்சி மற்றும் முத்தரசன் வேந்தனின் தாய் தாமரை இவர்கள் மூவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அன்றிரவே ஜானகியிடம் பேசினார் மீனாட்சி. இந்த சம்மந்தத்தில் ஜானகி மிகுந்த சந்தோசமாக இருந்தார்.

அவரின் அண்ணன் மகனிற்கே அவர் மிகுந்த பாசத்துடன் வளர்த்த மகளை திருமணம் முடித்து அவரது காலம் வரை அவரின் கண்ணெதிரில் வைத்து பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷத்தில் பூரிப்படைந்தார்.

ஜானகியின் மனதில் சிறிதாக ஒரு உருத்தல் வந்துபோனது. மனதை குழப்பாமல் நேரடியாக அவரது அண்ணன் முத்தரசனுக்கு கைபேசியில் அழைத்தார்.

ஆனால் அந்த பக்கம் முத்தரசன் மாலை நேர நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபடியால் கைபேசியை எடுக்கவில்லை.

மீண்டும் அறைமணிநேரம் சென்றதும் ஜானகியே அழைத்தார். இம்முறை அழைப்பு எடுக்கப்பட்டது.

” ஹலோ அண்ணா நான் ஜானகி பேசுறேன்.” என்றார்.

” ஹலோ தெரியும் ஜானுமா சொல்லு அண்ணந்தான் பேசுறேன்.”

” அதுவந்து தப்பா எடுத்துக்கவேணாம் நான் உங்ககிட்டையும் அண்ணிகிட்டயும் ஒன்னு கேட்கணும்.” என்றார் தயக்கத்துடன்.

” என்னம்மா தாராளமாக கேளு இதுல தப்பா எடுக்க என்ன இருக்கு.”

” அம்மா அறிவை இசைக்கு கேட்டது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இதுல உங்க இரண்டு பேருக்கும் முழு சம்மதமா?.”என்றார்.

” என்னம்மா இப்டி கேட்டுட்ட இந்த வேந்தன் பய என்னடா முப்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்க பிடிகொடுக்கிறான் இல்லையேன்னு நாங்க மூணு பேரும் கவலைபட்டோம். அவன்கிட்ட கேட்டா இப்ப என்ன அவசரம் பொறுத்திருங்க நானே சொல்லுவேன் அப்ப பொண்ணு பாருங்கன்னு சொல்லிட்டான். ஆனா இப்ப தான் ஏதோ அவனே மனசுவச்சி அறிவை பிடிச்சிருக்கு பொண்ணு கேளுங்கன்னு எங்களுக்கு பொண்ணு தேடுற வேலையையும் குறைத்து அவனே கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கு வந்திருக்கிறான். இதை ஒரே பிடியா பிடிச்சி சட்டுன்னு அறிவை அவனுக்கு கட்டிவைச்சிடனும். அதுக்காகத்தான் அம்மா உன்கிட்ட சம்மதம் கேட்டு பிறகு உன்னைவச்சே அறிவுகிட்ட பேசி அது முடிவையும் தெரிஞ்சதுக்கப்புறம் அடுத்து வர முகூர்த்தத்துலயே கல்யாணம்தான்.” என்றார் முத்தரசன்.

” அதெல்லாம் சரிண்ணா ஆனா அறிவு ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு என்னால முடிஞ்சதை செய்வேன் அவளும் பீ ஏ முடிக்கப்போறா நம்ம குடும்பத்து வசதி எல்லாம் அவளுக்கு புதுசு இசை விரும்பிட்டான் ஆனா அதுக்கு பிறகு வாறது எல்லாம் நாமலும் யோசிக்கணுமே.” என்றார் ஜானகி தயக்கத்துடன்.

” இங்க பாரு ஜானுமா எங்க மூணு பேருக்கும் அறிவை பிடிச்சிருக்கு அவ நீ வளர்த்த பொண்ணு குணத்துலயும் தங்கமாத்தான் இருப்பா நம்மகிட்ட இல்லாதா காசா? நகையா?. எங்க மருமக நல்ல மனசையும் குணத்தையும் சீதனமா எடுத்துட்டு வந்தா எங்களுக்கு அதுவே போதும். நம்ம குழலியை கட்டிக்கொடுத்ததுக்கு பிறகு இந்த வீடே வெறிச்சோடிப்போய் இருக்கு அதை அறிவு வந்து சரி பண்ணட்டுமே இதைவிட எங்களுக்கு எப்டி எங்க சம்மதத்தை சொல்லுறதுன்னு தெரியல ஜானு இனி நீ தான் அறிவோட சம்மதத்தை கேட்டு சொல்லணும் அதுக்காக நாலு பேர் காத்திருக்கிறோம்னு மறந்துடாம சீக்கிரமா எங்க மருமகளை இங்க முறைப்படி அனுப்பிவை.” என்று கூறி ஜானகியின் மனக்குழப்பத்தை தீர்த்துவைத்தார் முத்தரசன்.

இந்த மனிதர்கள் போடும் கணக்கு சரியாக நடந்துவிட்டால் இவர்கள் இறைவனை மறந்துவிடுவார்களே.
அதனால் அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது.

ஜானகி முத்தரசனிடம் பேசியதன் பின் இரண்டு நாள் கழித்து அறிவை அவரின் ரூமிற்கு அழைத்து பேசினார்.

அவர் அழைத்ததாக ஒரு பெண் சொல்லவும் செய்த வேலையை விட்டு உடனே வந்து அவரின் அறை கதவை தட்டினாள்.

” உள்ள வாம்மா அறிவு.” என்றார்.

” நீங்க வரச்சொன்னதா சொன்னாங்கம்மா.” என்றாள்.

” ஆமாம் அறிவு இந்த அம்மா உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். நீ சரியா பதில் சொல்லணும். ” என்றார்.

” தாராளமாக கேளுங்கம்மா.”

எந்த அதிகப்படியான பேச்சும் இல்லாமல் நேரடியாக விசயத்திற்கு வந்தார். ” நான் உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஆசைப்படுறேன். நீ என்னம்மா சொல்லுற.” என்றார்.

” நான் மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சிக்கலாமா? ம்மா.”

” எஸ் என் அண்ணன் மகன் இசை தான் நான் உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை. இசையை உனக்கு தெரிஞ்சிருக்கணுமே அடிக்கடி இங்க வந்து போவானேம்மா. இசையை உனக்கு பிடிச்சிருக்கா?. பேசிமுடிச்சிடலாமா?.” என்றார் ஆவலுடன்.

” அதுவந்தும்மா உங்கக்கிட்ட அவரை தெரியாதுன்னு பொய் சொல்ல விரும்பல இதே கேள்வியை உங்க அண்ணன் மகனும் என்கிட்ட கேட்டாரும்மா நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். இப்போ உங்ககிட்ட கேட்டிருக்காங்கலா?.” என்று அவரின் ஆசையில் தீ வைத்தாள்.

” இது இப்ப நடந்துச்சி யாருமே என்கிட்ட சொல்லலயே அறிவு.” என்றார் கவலையுடன்.

அறிவு அன்று நடந்ததை சொன்னாள்.
” அவர் வந்திருந்தாரு அப்போ நீங்க உச்சிபிள்ளையார் கோவிலுக்கு போயிருந்திங்க அப்பதான் கேட்டாரு நான் பிடிக்கலன்னு சொல்லிட்டேன். நிக்காம உடனே போயிட்டாரு.” என்றாள்.

” எங்க அண்ணன் குடும்பம் ரொம்ப வசதியானது மதுரையிலயே பேர் போன குடும்பம் அறிவு. இசை உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே உன் விருப்பம் தெரிஞ்சிக்க ஆசை பட்டாங்கம்மா. இசைக்கு ஆறு வயசுல நான் கல்யாணம் பண்ணி வந்துட்டேன். அப்புறம் அவனும் வளர்ந்து பள்ளிபடிப்பை முடிச்சி காலேஜ் சென்னையில படிச்சான். அப்புறம் எம் காம் அமெரிக்காவுல படிச்சிட்டு வந்து அவங்க அப்பா தொழிலை கையில எடுத்து புது புது உத்திகளை கையாண்டு இந்த தலைமுறைக்கு ஏத்த மாதிரி விரிவுபடுத்தி நடத்துறான். அவனுக்கு எங்க அப்பா வேந்தன்னு பேர் வச்சாரு நான் தான் முன்னாடி இசையை சேர்த்து இசைவேந்தன்னு வச்சேன். எனக்கு ஒரு பொண்ணு பிறந்திருந்தா அவனுக்குதான் கட்டிவச்சிருப்பேன். அதுக்கு எனக்கு கொடுத்துவைக்கலயே. அதனால உங்க எல்லாரையும் நான் பெத்த பிள்ளையாத்தான் பார்த்துக்கிறேன். இசை பாட்டுபடிச்சா இன்னைக்கெல்லாம் கேட்கலாம். அவன் மன சந்தோஷத்துக்கு பாட்டுபடிக்க ஆரம்பிச்சவன். அவன் பாட்டு பிடிச்சிப்போய் கச்சேரி கிடைச்சிது அதை வியாபாரமாக்க பிடிக்காம அவனே ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு அவன் விரும்புற இடத்துல கச்சேரிக்கு சொல்லுவான். அதுல கிடைக்கிற பணத்துல ஒரு பைசா எடுத்துக்காம ஒவ்வொரு முறையும் ஒரு ஊருக்கு அவனோட பி ஏ மூலமா ஆசிரமத்துக்கு பணத்தை கொடுத்தனுப்பிடுவான். என்ன கொஞ்சம் பிடிவாதம் கோபம் அதிகமா வரும் அதுவும் தொழில்ல ஒரு பிழையை கண்டுபிடிச்சான்னா அதுக்கு அவன் கொடுக்கிற தண்டனை ரொம்ப பெரிசா இருக்கும். அதுவும் நாளைக்கு பொண்ணாட்டி வந்து சரிபண்ணிடுவான்னு நாங்க யாரும் பெரிதா நினைக்கல மனிதன்னா ஒரு நல்லது இருந்தா ஒரு பிழையும் இருக்கிறதுதானே. தங்கமான குணம் இதுக்குமேல இசையை பற்றி சொல்ல எதுவுமில்ல அவனை கல்யாணம் பண்ணி அவனோட வாழ ஆரம்பிச்சா உனக்கே அவனை பற்றி அதிகமா தெரியும். இதுக்குமேல நீ தான் சரியான முடிவெடுக்கணும் அறிவு.” என்று அவரது மருமகனை பற்றி வளர்ப்பு மகளிடன் அனைத்தையும் கூறி யோசித்து முடிவு சொல்லும் படி கூறி அனுப்பிவைத்தார் ஜானகி.

அன்று இரவே ஜானகியம்மா சொன்னதை யோசித்தாள் அறிவு ஆனால் அவளால் அவள் எடுத்த முடிவை மாற்றுவதற்கு விரும்பவில்லை.

அடுத்த நாளே அவரை சந்தித்து பேசினாள்.

” அம்மா நான் பெரிய இடத்துல கல்யாணம் கட்டி என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் பார்க்க விரும்பல உங்களை மாதிரி நானும் என்னைமாதிரி ஆதரவில்லாதவங்களை நானும் என்னால முடிந்தளவு அவங்களு உணவு கல்வி நல்ல உடை இப்டி அடிப்படை வசதியை செய்து குடுக்கணும்னு நினைக்கிறேன் மா அதுக்கு என்னை மாதிரி ஆசிரமத்துல உறவுகளோட அருமை தெரியாம வளர்ந்த ஒருத்தரால தான் என்னோட இந்த விருப்பத்துக்கு உதவி பண்ணமுடியும்னு நினைக்கிறேன். நீங்க பார்த்த மாப்பிள்ளை எல்லா வகையிலும் உயர்ந்தவர் தான். அவங்க வசதிக்கு நிறைய பொண்ணுங்க கிடைப்பாங்க ஆனால் ஆதரவில்லாத ஒரு ஆணுக்கு இந்த காலத்துல பொண்ணு குடுக்கிறது கஷ்டம் தானே அதனாலதான் இப்டி ஒரு கன்டிஷன் போட்டு நான் நினைக்கிற மாதிரி யாராவது கிடைச்சா உங்ககிட்ட சொல்லுறேன். நீங்க மேல பண்ணவேண்டியதை பண்ணுங்க. எனக்கு எப்பவும் நீங்க தெய்வம் தான் ம்மா உங்க பேச்சை மீறினதுக்கு மன்னிச்சிடுங்கம்மா . பணக்காரவங்க எல்லாம் தப்புன்னு நான் சொல்லமாட்டேன். நீங்க நினைக்கலாம் உங்க மருமகனும் ஆதரவு இல்லாதவங்களுக்கு உதவி செய்றாருதான். ஆனாலும் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லம்மா என்னை தப்பா எடுத்துக்காதிங்க இதுதான் என் முடிவு.” என்று சொல்லிவிட்டு சென்றாள் அறிவுமணி.

அவள் சொன்னதை சுருக்கமாக முத்தரசனிடம் சொன்னார் ஜானகி.

அவர்களும் அவளின் விருப்பத்தை மதித்து மேலும் அறிவை தொல்லைபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

ஆனால் ஆசை கொண்ட மனம் கேட்குமா?.

அவனே அவனது வாழ்க்கைக்கான முடிவை எடுத்துக்கொண்டான்.

ஒரு ஆண் நல்லவனாயிருந்து முரடனாவது ஒரு பெண்ணாள். அதே முரடனும் நல்லவனாகி வாழ்வதும் ஒரு பெண்ணாள் தான்.

Advertisement