Advertisement

தமிழ் ஜான் இருவரும் தொழிலை பற்றி அதிகம் இசையுடன் பேசுவார்கள்..

தாமரை மலரை அங்கே இருக்கவைத்துக்கொண்டார். இன்னும்  இரண்டு நாளில் அறிவிற்கு டேட் என்பதால் நாளை இரவு மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். அதனால் இருந்து குழந்தை பிறந்ததும் போகச்சொன்னார்..

தமிழும் அங்கு நடக்கவேண்டிய வேலைகளை கைபேசியில் ராமுவிடம் தெரிவித்தான்..

வாணி ராணியை மலருக்கு துணையாக விட்டுவிட்டு வளைகாப்பு முடிந்ததும் சென்றுவிட்டார்..

அன்று இரவு. தமிழ் மலருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.. ” ஏங்க நான் ஒன்னு சொல்லணும். ” என்றாள் மலர்..

” என்னடி பஞ்சு சொல்லேன்..” என்றான் தமிழ்..

” உண்மையாவே நீங்க நல்லாகிட்டிங்களா? நம்ம வாழ்க்கையை பற்றி புரிஞ்சிக்கிட்டிங்களா?..” என்றாள்..

” ஆமாம் டி கொடி. அன்னைக்கு கத்தி குத்துபட்டு கிடந்தப்ப யாரும் ரொம்ப நேரம் உதவிக்கு வரலயா? ரொம்பவே பயந்துட்டேன். மனசெல்லாம் நீ தான்.. அப்போதுதான். உன்னை எவ்வளவு தேடுதுன்னே தெரிஞ்சிக்கிட்டேன். நீ என் வாழ்வில் வந்த தேவதை. உன்னையும் நம்ம பாப்பாவையும் நான் சாகும்வரை கண்கலங்காம சந்தோசமா பார்த்துக்கணும். வாழணும்னு அப்பதான் ஆசைபட்டேன்.. “

” அந்த ஆசை கடவுளுக்கு கேட்டுச்சோ என்னவோ யாரோ ஒரு மகராசன். எனக்கு உதவி பண்ணி மருத்துவமனையில சேர்த்திருக்கான். எனக்கு அது யாருன்னே தெரியலடி.. ஒரு நன்றி சொல்லுவோம்னு ராமுகிட்ட கேட்டேன் அவனும் சரியா யாருனு பார்க்கலன்னு சொன்னான்..  அது சரி உனக்கு என் மேல கோபம் இல்லையா?..” என்றான் தமிழ்.

” ஏன் கோபம் இல்லாம மழைக்கு ஒதுங்க வந்த புள்ளைய இப்டியா? பண்ணுவிங்க?. சரி பண்ணிட்டிங்க கல்யாணமும் முடிஞ்சிது. நான் கோபிச்சிடு அன்னைகே அம்மா வீட்டு வந்துட்டேன். தேடி வரணும்னு வந்தீங்களா? இல்லையே.. சரி அப்பதான் வரல.. அந்த தறுதலை பய முகுந்தனால ஜெயிலுக்கு போனேன். அங்கையும் வந்து காப்பத்தல.. அப்பவே என் தங்கப்பொண்ணு தான் அம்மா கஷ்டப்படுறாளேனு மயங்கி விழ வச்சி மருத்துமவனை கொண்டுபோய்.. அங்க கடவுள் மாதிரி இசை அண்ணாவை வரவழைத்து அங்கையும் அந்த கேடுகெட்ட முகுந்தனால வர இருந்த பெரிய பிரச்சினையை சரி பண்ணி அனுப்பிவச்சார்.. இது எதுலயும் நீங்க எனக்கு உதவியா இருக்கலங்கிற கோபம் இப்பவும் இருக்குதுதான்.. ஆனால் அதையே பிடிச்சி தொங்கிட்டு இருந்தா வாழுற வாழ்க்கை நரகமாகிடும்.. எனக்கு இருக்கிறதே ஒரே வாழ்க்கை அதை நான் இனியாவது சந்தோசமா வாழணும்னு ஆசைபடுறேன்..” என்றாள் அவளின் கஷ்டங்களை சொல்லும்பொழுது கண்ணீர் வந்துவிட்டது.. அதை துடைத்து இனி எப்பொழுதும் ஆறுதலாக நானிருப்பேன். என்று கூறியபடி இருக்கி அணைத்துக்கொண்டான் தமிழ்..

அணைத்திருந்தவனை விளக்கி அவனின் வெற்று மார்பில் இருந்த தீசுட்ட காயத்தை பார்த்து வருடினாள் மலர்..

” என்னடி அதையே பார்க்கிற.. அது நான் ஜெயிலுக்கு போன நாளை நினைத்து வரும் வலிக்கு குடிச்சிட்டு சிகரெட்டால சூடு போட்டுப்பேன்.. அன்னைக்கூட நல்லா குடிச்சிட்டு சூடு போட்டதுக்கு பிறகுதான் நீ மழைக்கு ஒதுங்கிருக்க.. சூடு போடும் முன்ன நீ வந்திருந்தா நான் எழுந்து வீட்டுக்கு போயிருப்பேன்.. சூடு வலியையும் தாங்குறதுக்காகதான் அதிகமா குடிச்சேன். புத்தி தவறிடுச்சு.. ஸாரி டி பஞ்சு. இனி உன் விருப்பம் இல்லாம தொடமாட்டேன்..” என்றான் தமிழ்.

” இல்லன்னா மட்டும் ஐயாவை தொடவிடுவாங்களாக்கும்.. நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன். இசை அண்ணா இப்டி இருக்கும் போது அவங்க ரெண்டு பேருக்கும் இடையில எதுவும் இன்னும் சரியாகல. அவங்க வாழ்க்கை சரியானதும் நம்ம சந்தோசமா வாழலாம்.. நம்மை இந்தளவுக்கு கௌரவமா வாழவச்சது  இசை அண்ணா அதனால தான் சொல்லுறேன் புரிஞ்சிக்கோங்க..” என்றாள் மலர்..

” அடிப்போடி இவளே. நானும் இதைதான் நினைச்சேன். நீ சொல்லிட்ட.. சரி ஆனா வடை பாயாச விருந்து வேணாம்.. அதுவரை தாங்குறதுக்கு சிம்பிலா அடிக்கடி கேக் ஜூஸ் எல்லாம் கிடைக்கும்தானே.. ” என்றான் தமிழ்.

” அடிதான் டா கிடைக்கும் ஜூஸ் கேக்குதோ பச்ச தண்ணீ கூட கிடையாது. ஆளை பாரு மூச்சை பாரு..” என்றாள்..

” பாரேன்டி யாரு வேணாம் சொன்னது. நீ பார்க்கலன்னு தான் மனசு ஏங்குது. என்னடி இப்டி சொல்லிட்ட. ஒரு கட்டிபிடி வைத்தியம். உம்மா இதுகூடவா இல்ல. பிச்சி பிச்சி. பஞ்சுமிட்டாய் மாதிரி கன்னத்தை வச்சிக்கிட்டு உம்மா குடுக்ககூடாதுன்னா என்னால தாங்கமுடியாதுடி பஞ்சு.. இப்பவே நேரம் ஆகிடுச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்பா முழிச்சிடுவா. அதுவரை நீ தூங்கு பாவம் வேலை செய்து அசதியா இருப்ப..” மனையாளை மன நிறைவோடு கட்டியணைத்து தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்தான் தமிழ்.. மலரும் நன்றாக சாய்ந்து உறங்கினாள்..

அடுத்த நாள் விடியல் அழகாக விடிந்தது.. மீனாட்சி இல்லத்தில் ஆளுக்கொரு வேலையாக இருந்தார்கள்..

மலர் எழுந்து குளித்து அனைவரும் காஃபி போட்டு கொடுத்தாள்..

அறிவு இசையுடன் கார்டனில் பூக்கள் கதிரவன் பறவைகள் என  காலை காட்சிகளை காட்டி அவனுக்கு எடுத்துகூறியபடி இருந்தாள்..

காலை நேரம் ஏழு மணி. சாலினி அறிவின் வீட்டிற்கு வந்தாள்..

தோட்டத்தில் வைத்தே அறிவு சாலினியை பார்த்துவிட்டாள். ” சாலு நான் இங்க இருக்கிறேன் இங்க வாடி..” என்று அழைத்தாள் அறிவு.

சாலினியோ அறிவை பார்த்துவிட்டு தோட்டத்திற்கு செல்லாமல் வீட்டினுள் சென்றாள். அங்கு மீனாட்சி தான் லேகாவை மடியில் வைத்துக்கொண்டு க்ருஷிற்கு விளையாட்டு காட்டியபடி இருந்தார்..

” வாம்மா சாலினி ஏன் அங்கையே நின்னுட்ட உள்ள வா” என்று அழைத்தார்.. அவளும் உள்ளே வந்து அவரின் அருகில் இருந்து இசைக்கு எவ்வாறு இப்படி ஆனது என கேட்டாள்..

அறிவு வீட்டை விட்டு போன சில நாட்களில் சுரேஸின் தந்தை உடல்நலம் சரியில்லாமல் போகவும்.. மகனின் திருமணத்தை பார்க்கவிருப்பினார். அதை சுரேஸ் சாலினியிடம் சொல்லவும் அவளும் சூழ்நிலை புரிந்து சம்மதித்தாள். ஆனால் அறிவு அவளிடம் கூட சொல்லாமல் சென்றது அவளை மிகவும் பாதித்தது..

ஜானகி அறிவை பார்க்க வந்த நேரம்தான் சாலினியின் திருமணமும் சிம்பிலாக நடந்தது. அதில் கலந்துகொண்டு அவர் செய்யவேண்டியதை செய்து ஆசிர்வதித்தார்..

அவர்களின் திருமணம் முடிந்து பத்துநாளில் சுரேஸின் தந்தை இறந்ததும். தாயும் நோய்வாய்பட்டார்.. அவரை இயற்கை மருத்துவத்திற்கு அழைத்துசென்று அவரை குணப்படுத்தி மீண்டும் இங்கு அழைத்துவந்ததும். விசயம் கேள்வி பட்டு சாலினி அறிவின் வீட்டிற்கு வந்தாள்..

தமிழை அழைத்து இசையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அறிவு சாலினியை பார்க்க உள்ளே சென்றாள்.

சென்றவள் சாலினியின் கையை பிடித்து அவளின் அறைக்கு அழைத்துச்சென்றாள்.

” ஏன்டி என் கூட பேசமாட்டியா?.  நீயும் என்னை புரிஞ்சிக்கல என்னடி. உன்கிட்ட சொல்லாம போனது தப்புதான். என் மனக்கஷ்டம் அப்டி போக வச்சிட்டு. சொல்லிருந்தா என்னை போகவிட்டுருப்பியாடி? நீ.
நீயும் அம்மாவாகப்போற. நாளைக்கு நான் ஹாஸ்பிட்டல் போகணும் இதை பெத்துக்க. அப்போ நான் செத்துப்போயிட்டேன்னா என்ன பண்ணுவ..” என்றாள் அறிவு.

அதை கேட்டதும் சாலினி அறிவின் வாயில் அடிபோட்டுவிட்டு கட்டிப்பிடித்தாள். இருவரின் வயிறும் மோதிக்கொண்டது..

” லாசாடி நீ அப்டி சொல்லாத. அடி பிச்சிடுவேன். நீ குழந்தை பெத்து நல்லபடியா வருவ. பயப்படாத. சொல்லாம போயிட்டியேன்னு கோபம். என் கல்யாணத்துக்கு இல்லையேன்ற கோபம். இந்த நிமிசம் அதெல்லாம் காணமபோயிடுச்சி..  குழந்தை பிறந்ததும். இசை ஸாரை புரிஞ்சிக்கிட்டு அவரையும் குணப்படுத்தி நல்லா சந்தோசமா வாழுடி. நமக்கு இருக்கிறது ஒரு வாழ்வை. அதை கெட்டியா பிடிச்சிக்கணும்.. உன்னை எவ்வளவு விரும்பினாரு இசை ஸார். அதனாலதானே இப்டி பண்ணிட்டார். மன்னிச்சி நீயும் உண்மையா விருப்பி அவர் உன்கிட்ட எதிர்பார்த்த காதலை அவருக்கு உணர்த்தி குணப்படுத்து. உன் உண்மையான காதலே அவரை குணமாக்கிடும். இதுக்கு பிறகு நீ யாரையாவது கல்யாணம் பண்ணிப்பியா? என்ன. இல்லத்தானே. அப்போ உன் வாழ்க்கையை நீதான் சரிப்படுத்தனும். காதல் ஒருவனை நல்லவவனாவும் மாத்தும். கெட்டவனாவும் மாத்தும்.. இனி உன் வாழ்க்கை உன் கையில. படிச்சிவளா? புத்திசாலியா நடந்துக்கோ. உனக்கு விருப்பமில்லாம அவரு தொட்டதுக்கு இந்த தண்டனையே அதிகம் அவருக்கு.. குழந்தை பிறந்ததும் சொல்லுடி என் மருமகனை பார்க்க அத்தை நான் வரணும் ” என்று மேலும் அறிவுரைகள் அறிவிற்கு  கூறி சென்றாள் சாலினி..

 இசையை பார்த்து காதலை வெறுத்த ஜானின் பார்வை ராணியின் பக்கம் சென்றது. இதை மலரும் கவனித்து தமிழின் காதில் போட்டுவைத்தாள்..

அடுத்த நாள் மருத்துவமனையில் அறிவை சேர்த்ததும். ஜானகிக்கு அழைத்து வரும்படி கூறினார் மீனாட்சி.

பிரசவம் சற்று சிக்கலாகவும். சிசேரியன் பண்ணித்தான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.

இசையை உரித்து ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தையை இன்கியூபேட்டரில் வைத்தார்கள்..

மீனாட்சி அழைத்ததும். ஜானகி உடனே அவரின் காரில் புறப்பட்டுவிட்டார்..

நீண்ட பயணம் முடிந்ததும். மதுரை வந்து மருத்துவமனை வந்துவிட்டார்..

அங்கு இசையை அவ்வாறு பார்த்ததும் திகைத்துப்போய் தாயிடம் ஏன் சொல்லவில்லை என கேட்டு சண்டையிட்டார்..

மீனாட்சி ” ஜானு இப்ப உனக்கு நீ பெத்த பொண்ணு யாருன்னு தெரியனுமா? வேணாமா?” என்றார். இதை நேரம் பார்த்து சொன்னால் தான். ஜானகியிடம் அடுத்து இருந்து வரும் கேள்விகளை தவிர்க்கலாம் என நினைத்துதான் மீனாட்சி ஜானகியை குழந்தை பிறக்கும் போது வரச்சொன்னால் போது என சொன்னார்..

” என்னம்மா சொல்லுற என் பொண்ணு இங்க எப்டி..” என்றார்.

” உள்ள போய் பாரு நீ பெத்து ஆனா உன் சொந்த பொண்ணுன்னு தெரியாம நீ வளர்த்த உன் பொண்ணு குழந்தை பெத்து சோர்ந்து போய் படுத்திருக்கிறா. பாரு.” என்றார்.

அதை கேட்டதும் ஜானகி பதட்டமாகி விட்டார்.” என்னமா அறிவா என் பொண்ணு.” என்றார் கண்ணில் நீர் வடிய..

” ஆமான்டா ஜானு நீ சொன்ன அத்தனை அடையாளமும் அறிவுகிட்ட இருக்கே. அதனாலதான் அறிவு மேல தனிப்பாசம் னு சொல்லுவ. அதுதான். அதுசரி அறிவோட அடையாளத்தை நீ எப்டி பார்க்காம போன?.” என்றார் அவரின் நீண்ட நாள் சந்தேகம் அது.

” அதுவாம்மா அறிவு வேற ஆசிரமத்துல தான் சின்னதுல இருந்தே வளர்ந்தா. அவளுக்கு பத்து வயசு இருக்கும் போது அந்த ஆசிரமம் விபத்து நடந்துசாம். அப்போ அதுல தப்பினதுதான் அறிவு சாலினியும். இங்க என்கிட்ட வந்தாங்க. அவங்க நேம் தெரியல.  நான் தான் அறிவுமணி . சாலினினு பேர் வச்சேன். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் தானே. அதனால நான் குளிக்கவைக்கிறது இல்ல அதுக்கு அளுங்க இருந்தாங்க. அதனால அறிவோட உடம்பை நான் பார்க்கமுடியல அதனால தெரியல..  சரி இசைக்கு எப்ப எப்டி மா இப்டி நடந்துச்சி. ஏன் சொல்லல?..” என்றார் மீண்டும் ஜானகி.

” அதுவா அதை அப்புறமா பேசலாம். மொத உன் பொண்ணையும் பேரனையும் பாருமா ஜானு..” என்றார் மீனாட்சி..

 ஜானகியும் உள்ளே  சென்று அறிவை பார்த்தார். கண்ணில் நீர் வழிந்தோடியது. அது அறிவின் கையில் பட்டு அவள் கண் திறந்தாள்..

” நான் உன் அம்மாடா அறிவு..” என்றார் வாஞ்சையாக..

அவரின் மேல் இருந்த கோபம் எல்லாம் காணமல் போனது அறிவிற்கு இன்நிலையில்..

” ஜானுமா..” என்றாள்.

” இப்ப உன்னை வளர்த்த ஜானுமா இல்ல அறிவு. உன்னை பத்துமாதம் சுமந்து உன்னை மாதிரியே அவளும் உன்னை பெத்த அம்மாடா அறிவு..” என்றார்.. மீனாட்சி..

” என்னை பெத்த அம்மாவா? இவங்களா?.. இல்ல..” என்று கத்தினாள் அறிவுமணி..

தாயும் பிள்ளையும் இணைந்தும். இடையில் எது அவர்களை தடுக்கிறது?…

Advertisement