Advertisement

அத்தியாயம் 20.

ஜானகி மீனாட்சி தாமரை அவர்கள் இருவரும் நினைத்தபடியே அறிவை பார்க்க பேருந்தில் ஏறிவிட்டார். பஸ்ஸும் புறப்படும் நிலையில் இருக்கவும்.  அவரின் கைபேசி அழைப்புவிடுத்தது. அதை எடுத்து பார்த்தவர். அவரின் ஆசிரம எண்ணை பார்த்ததும் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றார்.

அந்த பக்கம் ஜானகியின் பி.ஏ வனிதா அழைத்திருந்தாள். அவளும் அங்கு வளர்ந்து படித்தவள் தான். ஜானகிக்கு தனியாக அனைத்தையும் கவனிக்க முடியவில்லை. அதனால் வனிதாவை வெளி வேலைக்கு விடாமல் அவரிடமே வேலைக்கு அமர்த்திவிட்டார்.

அவரின் அலுவலகவேலை ஆசிரம வேலை என அனைத்தும் அவளிற்கு அத்துபடி. அவளும் வளர்த்தவருக்கு நம்பிக்கையாக இருந்தாள். மாதம் சம்பளம் கொடுத்தார் ஜானகி. அதில் பாதியை அவள் ஆசிரமத்திற்கே கொடுத்தாள். ” நான் தங்குறது இங்க சாப்பிடுறது இங்க அப்டியிருக்கும் போது எனக்கு இவ்வளவு பணம் ஏன் மா.” என்று மாதம் மாதம் கொடுத்துவிடுவாள்.

ஜானகி அவர் வளர்த்த பெண்களுக்கு முடிந்தளவு திருமணமும் பண்ணி வைத்திருக்கிறார். படித்து வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் மாத சம்பளத்தில் ஒரு பங்கு கொடுப்பார்கள். அதை பத்திரப்படுத்தி அவர்களின் திருமணத்திற்கு எடுப்பார். பணம் பற்றாக்குறை வந்தால் அவரின் சொந்த பணம் போட்டு முடித்துவைப்பார்.

திருமணம் பண்ணி சென்ற பின் அவர்கள் விரும்பி தொடர்ந்து பணம் கொடுத்தால் அதை மட்டும் அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு தேவைபடும் வசதிகளை செய்துகொடுப்பார். ‘

அதே போன்று வனிதா கொடுக்கும் பணம் அவளின் திருமணத்திற்கு என சேர்த்துவைத்திருந்தார்.

” சொல்லுமா வனிதா என்ன?..” என்றார் ஜானகி.

” ஜானுமா நம்ம கயல் மயங்கி விழுந்துட்டா எங்களுக்கு பயமா இருக்கு. தண்ணீர் தெளிச்சும் எழுந்துக்கல. என்ன பண்ணுறதுனு தெரியல நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க..” என்றாள் அழுதபடி.

அவரும் ஆம்புலன்ஸ் அழைத்து ஆசிரமத்திற்கு போகும் படி கூறிவிட்டு ஆட்டோ பிடித்து நேரடியா மருத்துவமனை சென்றார். அவர்  செல்லவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.

அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர் செக்பண்ணி இ சி ஜி என எடுத்து பார்த்ததில். கயலுக்கு இதயத்தில் கோளாறு என தெரியவந்தது. பன்னிரண்டு வயது பெண். படிப்பில் படு கெட்டி. சுறுசுறுப்பாக சிரித்தமுகத்துத்துடன் தான் வளம்வருவாள் கயல்.. அவளுக்கு இன் நிலை என டாக்டர் சொன்னதும். ஜானகியால் தாங்க முடியவில்லை.

அவளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும். இல்லை என்றாள் அவர் ஆசிரமம் நடத்தி பிள்ளைகளை வளர்ப்பது இனிமேல் கடினம் என்று நினைத்தார்.

டாக்டர் சொன்ன பணத்தொகை ஜானகியால் உடனடியாக ஏற்பாடு பண்ண கஷ்டம் என நினைத்து. முத்தரசனுக்கு அழைப்பு விடுத்தார்.

அழைத்து விபரம் கூறியது. முத்தரசன் பணத்தை ஏற்பாடு பண்ணி அனுப்புவாதாக கூறினார்.

அவர் சொன்னபடியே அனுப்பியும் வைத்தார். அதன்பின் கயலுக்கு ஆப்ரேசன். முடித்து குணமடைந்ததும் ஆசிரமம் அழைத்து சென்றார்கள்.

வனிதா எவ்வளவுதான் உதவியாக இருந்தாலும் அவரால் சமாளிக்க கஷ்டமாக இருந்தது.

அதனால் வனிதாவிடம் திருமணம் பண்ணும்படி கேட்டார். அவளுக்கும் வயது இருபத்தி நான்கு ஆகின்றது. அவளும் சரி என்றதும். மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்தது. இதை தாமரையிடமும் கூறியிருந்தார் ஜானகி.

தாமரைக்கு தினேஷின் நினைவு வரவும் அவனுக்கு அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறினார். அவன் வந்ததும் நேரடியாக  வனிதாவை பற்றி கூறி திருமணம் முடிக்க சம்மதமா? என கேட்டார்.

அவனும் சம்மதிக்க. பின் அவனின் அம்மாவும் சம்மதிக்க திருச்சியில் எழிமையாக ஒரு கோவிலில் அவர்களின் திருமணம் நடந்தது ஒருவாரத்திற்கு முன். ஆனால் அவனுக்கு ஆருயிர் நண்பன் இசைவேந்தன் கலந்து கொள்ளவில்லை என்ற மனவருத்தம் மட்டுமே தினேஷிற்கு.

ஜானகி கேட்டுக்கொண்ட படி தினேஷ் முன்பு பார்த்த வேலையை விட்டுவிட்டு ஜானகியின் கம்பெனியில் ஜெனரல் மேனஜராக பொறுப்பேற்றான். வனிதா அவனுக்கு கம்பெனியின் வேலையிலும். சரி ஜானகிக்கு ஆசிரமத்தில் அவரின் பி ஏ வாகவும் வேலை செய்கிறாள். அவர்கள்  இருவர் தினேஷின் அம்மா மூவரும் அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள்.

கம்பெனி பற்றிய வேலை கவலை சற்று குறைந்தபின் முழுக்கவனமும் ஆசிரமத்தின் மேல் தான். அவர் வளர்பது அனைத்து பெண் குழந்தைகள். நாளை அவர்கள் வேறு  குடும்பத்தில் திருமணம் முடித்து சென்று வரும்காலத்தில் நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டும். அதனால் பெண்களை நல்ல ஒழுகத்துடனும். ஆரோக்கியத்துடனும். அன்பு பாசம் மரியாதை பண்பு. என அனைத்து குணங்களையும். சொல்லி வளர்க்கவேண்டும். என பொறுப்புடன் செயல்படுகிறார்.

தினேஷின் அம்மா கனகாவிற்கும் வனிதாவிற்கும் நன்கு ஒத்துப்போனது. அவரும் தினமும் ஆசிரமம் வந்து ஜானகிக்கு உதவியாக இருப்பார். அதனால் ஜானகி மிகுந்த மன ஆறுதலை உணர்கிறார்.

திடீரென்று ஒரு நாள் தூக்கத்தில் கெட்ட கனவு காணவும் பயத்துடன் கனகாவிடம் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அது உருத்தலாக இருக்கவும் அந்த டாக்டர் அம்மா கொடுத்த முகவரிக்கு அவரை பார்க்கச்சென்றார்.

அவரும் ஜானகி சொன்னதை கேட்டுவிட்டு சோலி போட்டு பார்த்தார்.

” நீ உன் பிறந்த வீட்டுக்கு போக முடியாமல் பல தடைகள் உனக்கு ஏற்படுகிறது. உன் தாய் வீட்டில். தற்போது நிலைமை மிகவும் கடினமாக இருக்குதுனு சொல்லுது. ஒரு ஜீவன் உயிர் இருந்தும். உடல் அசைவற்று இருக்கிறது. மன நிம்மதி அடியோடு துடைத்தெடுக்கபட்டது போன்று யாரும் மகிழ்வாக இல்லை. இதற்கு காரணம். உன் முன்னோர்கள் பண்ணிய பிழையும். நீ பெத்த பெண்ணின் கண்ணீரும் தான் காரணம். அதை துடைத்து மீண்டும் மகிழ்ச்சியை அள்ளி வழங்க ஒரு உயிர் ஜனிக்கப்போகின்றது. அதுவே தந்தையை காப்பாற்றும். அதன் பின் கவலை இல்லை..” என்றார் டாக்டர்.

” யாருக்கு என்ன கஷ்டம்மா சொல்லுங்களேன். எனக்கு யாரும் எதுவும் சொல்லவேயில்ல. நீங்களாவது சொல்லுங்க. மனசுகிடந்து அடிச்சிக்கிது. ” என்றார் ஜானகி.

” நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அதுக்கு மேல என்னால எதுவும் சொல்லமுடியாது. நீயே நினைத்தாலும் காலத்தின் கணக்கை மாற்றமுடியாது. கூடிய சீக்கிரம் உனக்கு அழைப்பு இருக்கிறது. உன் கேள்விகளுக்கு பதில் காண்பதற்கு.. அனைத்தும் சுபீட்சமாகும்..” என்று கூறி உபசரித்து அனுப்பிவைத்தார் டாக்டர்.

மதுரை செல்ல நினைத்தாலே ஜானகிக்கு ஏதாவது  தடை வந்துவிடும்.
இவ்வாறே மாதங்கள் ஓடியது.

மீனாட்சி இல்லத்தில். மீனாட்சி வளைகாப்பு வேண்டாம் என்றார். தாமரை வேண்டும் என்றார். மாமியார் மருமகளுக்குள் ஆரம்பித்த முதல் கருத்துவேறுபாடு. அதனால் இருவரும் முகத்தை தூக்கிவைத்து சுத்தினார்கள்.

முத்தரசன் தான் அதை பார்க்கமுடியாமல். இருவரையும் ஐயரை பார்த்து பண்ணலாமா? வேண்டாமா? என கேட்க்கும் படி கூறினார்.

அவர்கள் இருவரும் வழமையாக பார்க்கும் ஐயரை பார்த்து விசயத்தை சொல்லிக்கேட்டார்கள்.

இவ்வாறு துன்பம் நடக்கும் வீட்டில் அது விலகி நல்லது நடக்கவேண்டும். என பிரார்த்தனை பண்ணி ஓமம் வளர்த்து வீட்டில் பூஜை பண்ணும்படியும் அதை முடித்தபின். நாள் தருவதாகவும். அவர்கள் விரும்பும் படி வளைகாப்பை முடிக்கும் படியும் கூறினார்.

அதன்பின். வீட்டை சுத்தப்படுத்தி ஓமகுண்டம் வளர்த்து பூஜை நடத்தியபின்.  மீண்டும் ஐயரை சந்தித்து நல்ல நாள் குறித்துக்கொண்டு வந்தார்கள் தாமரையும் மீனாட்சியும்.

வளைகாப்பு நாளில் இருந்து மூன்றாவது நாள் அறிவிற்கு பேறுநாள்.

குழலி மலர் இருவருக்கும் அழைத்து வரச்சொன்னார்கள்.

தமிழ் இரண்டு நாளுக்கு முன்பே மலரை அழைத்துவந்துவிட்டான். தமிழ் நன்றாக குணமாகிவிட்டான்.

குணமாகியதும் முதல் வேலையாக மாரியை முத்தரசனின் பலத்தின் மூலம் தூக்கி உள்ளே வைத்துவிட்டான். இம்முறை அந்த அரசியல் வாதி மாரியை வெளியே எடுக்கவில்லை. அவனின் காரியம் முடிந்துவிட்டதே.

மாரி ஜெயிலில் முகுந்தனை சந்தித்தான். இருவரும் முன்பே இசையிடம் வேலை பார்க்கும் போது சந்தித்து இருக்கிறார்கள். மாரியின் மூலம் மலர் குழந்தை  பெற்று கஷ்டம் இல்லாமல் தமிழுடன் வாழ்வதை தெரிந்துகொண்டான்.

அதை எவ்வாறு கெடுப்பது. தண்டனை முடிவடைய இன்னும் இரண்டு வருடம் உள்ளது. அதன் பின்பாவது. மலரை சரியான திட்டத்தின் படி அடையவேண்டும். அவளுக்கு அவனை யார் என்று காட்டவேண்டும். என்று நினைத்து மனதிற்குள் வஞ்சம் வளர்த்தான்.

மலர் லேகாவை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டாள். லேகா தந்தையிடம் சமத்தாக ஒட்டிக்கொள்வாள். தாயிடம் தான் சேட்டை. பால் குடிக்கும் நேரம் தவிற மற்றைய நேரங்கள் நீலா சித்தியுடன் தான் லேகாவின் வாசம். நீலாவிற்கும் லேகாவை பார்த்தால் தாய் சந்திராவை பார்ப்பது போன்று இருப்பதால் சந்திராமா என்றே ஆசையாக அழைப்பாள் நீலா. லேகாவும் சித்தியுடன்  பொக்கை வாய் திறந்து சிரிப்பதும். அழுவதும் அவளின் மழலை மொழியில் ” ங்கா ஊ ஊ ” என்று பேசுவதும். என ராணி மாலதி வாணி ராமு நீலா மரகதம் பாட்டி. என அனைவரையும் அவளின் சிரிப்பிலும் தாயை உரித்து பிறந்த அழகிலும் கவர்ந்து இருந்தாள்…

தமிழ் தந்தை ஆனதை உன்னதமாக உணர்ந்தான். அந்த சண்டை கத்திக்குத்திற்கு பின். எவ்வாறான வாழ்வை இழக்க இருந்தோம். என நினைத்து வருந்தி. அவனின் பஞ்சுமிட்டாயுடன் நன்றாக பேசி சிறு சிறு கொஞ்சல்ஸுடனும் வாழ்க்கையை வண்ணமயமாக்கினான்.

மலருக்கு மிகுந்த மகிழ்ச்சி..

நாளை அறிவிற்கு வளைகாப்பு என இருக்கும் பொழுது. ஜானகியிடம் சொல்வது பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. ஜானகியும் டாக்டர் சொன்னதை பற்றி அங்கு யாருக்கு என்ன பிரச்சினை என்று அழைத்து கேட்டார். இவர்கள் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

அப்படியிருக்கும் பொழுது இப்போது அழைத்தால் இவ்வளவு நடந்தும் ஏன் சொல்லவில்லை என கேள்வி கேட்பாள். பின் நடந்து அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து சொல்லவேண்டிவரும். என்றார் மீனாட்சி.

தாமரை மகளின் வளைகாப்பு தாய்க்கு கட்டாயம் சொல்லவேண்டும். நம்ம வீட்டு பிள்ளைக்கு வீட்டு விசயம் தெரியாமல் இருப்பது தவறு இசையின் இந்த நிலை நீடித்து ஜானகியே கண்டுபிடித்தால் அதுதான் பிரச்சினை வேறுமாதிரி அமையும். என்றார் தாமரை.

முத்தரசன் தமிழ் இருவரும்  தாமரை சொன்னதைத்தான் ஆமோதித்தார்கள்.

பின் மீனாட்சி ஒத்த முடிவாக குழந்தை பிறந்ததும் சொல்லலாம். என்று முடித்துக்கொண்டார்.

அவர் மகள். இனி வரும் பிரச்சினையை அவரே சமாளிக்க வேண்டும் என கூறிவிட்டார் தாமரை. அதற்கும் அவர் பார்த்துக்கொள்வதாக கூறினார் மீனாட்சி.

வளைகாப்பு நாளும்  விடிந்தது. காலையில் இருந்து மீனாட்சி அறிவிடம் கெஞ்சியபடி இருந்தார். ” இங்க பாரும்மா அறிவு. பாட்டி உன் கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேனா? என்ன. இசை இப்டி இருக்கும் போது உனக்கு வளைகாப்பு நாங்க என்ன ஆசையாவா பண்ணுறோம். இந்த வீட்டு வாரிசு எந்த குறையும் இல்லாம நல்லபடியா பிறக்கணும்னு தானே பண்ணுறோம். வேணாம் சொல்லாம சமத்தா இந்த சேலையை கட்டி நகையை போட்டு கொஞ்ச நேரம் மனையில வந்து உட்காரு போதும். வளையல் சத்தம் குழந்தைக்கு கேட்கணும்டா அறிவு. பாட்டி நம்ம எல்லாரோட நல்லதுக்கும் சொல்லுறேன் கேளுடா! தங்கம்..” என்று கெஞ்சிக் கொஞ்சி அறிவை தலையாட்டா வைத்தார்.

அதன் பின் மலர் ராணி குழலி மூவரும் அறிவை தயார்படுத்தி நல்ல நேரத்திற்கு அழைத்துவந்தார்கள்.

முதல் தாமரை வளையல் போட்டு சந்தனம் பூசி பூ தூவி ஆசிர்வத்தார். அவரின் பின் மலர் குழலி ராணி வாணி மாலதி இறுதியில் மீனாட்சி பின் முத்தரசன். என அனைவரும் ஆசிவழங்கினார்கள்.

தமிழ் தான் இந்த அழகிய காட்சியை கேமராவில் படமாகவும் கைபேசியில் வீடியோவாகவும். எடுத்தான்.

இசைவேந்தனை வீல் சேரில் இருக்கவைத்து இது அனைத்தையும் பார்க்கவைத்தார்கள்.

மலரும் அவளின் பெண்ணை இசையிடம் காட்டி பேச்சுக்கொடுத்தாள்.
” இசை அண்ணா நீங்க என்கிட்ட சொன்னதை மறக்கல நான். உன் மகளுக்கு நான் தான் என் மடியில வச்சி காதுகுத்துவேன்னு சொன்னிங்க. அதை கட்டாயம் நான் நிறைவேற்றுவேன். நீங்க குணமாகினதும் உங்க மடியில வச்சுதான் பாப்பாக்கு காது குத்தனும். நீங்க சீக்கிரம் குணமாகி வாங்க..” என்றாள் மலர்கொடி..

Advertisement