Advertisement

அத்தியாயம் 19.

தமிழ் முத்தரசன் வரும் படி அழைத்ததால் இசையை பார்க்க மதுரை சென்றான். காலையில் புறப்படும் பொழுதே மலர் இன்று மருத்துவமனையில் சேரவேண்டும். சீக்கிரம் வரும்படி கூறினாள்.

தமிழும் சரியென்று கூறிவிட்டு சென்றவன். வேலையில் மாட்டிக்கொண்டான். அவர்களின் பிரிண்டிங் பீரஸ்ஸில் சில பிரச்சினைகள் அதை இசையின் இடத்தில் இருந்து தமிழை சரி பண்ணி தருமாறு முத்தரசன் கேட்டார். அதனால் அந்த வேலை முடித்து மீண்டும் இசையின் வீட்டிற்கு வந்து தாமரையிடம் மலரை இன்று மருத்துவமனை அழைத்து செல்லவேண்டும் என கூறி புறப்பட்டான்.

நன்கு இருட்டிவிட்டது. அவனின் கைபேசி பேண்ட் பாக்கெட்டில் இருந்து தானாகவே சைலன்ட் மோட் டச்சாகி விட்டது. அதனால் சீக்கிரம் வீடு செல்லவேண்டும் என்று நினைத்து பைக்கில் வேகமாக வந்துகொண்டிருந்தான். கைபேசியை பார்க்கவில்லை தமிழ்.

அப்பொழுது எதிரில் பைக்கில் இருவர் வந்துகொண்டிருந்தார்கள். பைக்கில் வந்தவர்களின் பின் இருந்தவன் கத்தியால் தமிழை குத்தவந்தான். அதை கழுத்திற்கு வராமல் சுதாகரித்தான் தமிழ். ஆனால்  அந்த குத்து அவனின் கையை பதம்பார்த்தது.

தமிழும் அவனது புல்லட்டை நிறுத்திவிட்டு அவர்களிடம் சண்டைபோட்டான். திடீரென்று இன்னும் மூன்று பேர் ஆட்கள் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் தமிழை பின் கையில் கெட்டியாக பிடித்துவிட்டார்கள்.

அவனின் குத்துபட்ட கையில் வலி அதிகரிக்க இரத்தமும் அதிகமாக போனது.

மற்றவர்களும்  அவனை பிடித்துக்கொள்ள மாரி ” உனக்கு ஏன்டா வீணாப்போன வேலை. எவன் சொத்தையோ நான் அடிக்கிறேன். சொத்துக்கு உரிமைகாரன் கேட்டாலும் பரவாயில்லை. ஆனா நீயும் என்னை மாதிரி கூலிக்காரன் தானே. நீ என்னையே போலீஸ்ல பிடிச்சிக்கொடுப்பியா? இப்ப வந்துட்டம்ல வெளியே. இனி நீ இருக்ககூடாது. சாவுடா!..” என கூறிக்கொண்டே கத்தியால் தமிழின் வயிற்றில்  இரண்டு முறை குத்தினான்.

தமிழ் வலியால் துடித்தபடியே கீழே விழுந்தான்.

” டேய் இவன் இங்கயே கிடந்து சாவட்டும். இவனை யாரும் காப்பாத்த வந்தா அவனுகளையும் சாவடிச்சிடுங்க என்ன சரியா?. இரண்டு  பேர் இவனுக்கு காவலா நில்லுங்க. மத்தவங்க வாங்க டா.” என கூறிவிட்டு சென்றான் மாரி.

மாரியின் தேவை ஒரு அரசியல்வாதிக்கு ஏற்பட்டதால். அவனை ஜாமின் எடுத்தான். அதன் பின் ஒரு கொலையை அரசியல்வாதி சொன்னபடியே செய்துவிட்டான் மாரி.

அன்றில் இருந்து  அவனுக்கு பாடிகார்ட் வலதுகை என எல்லாம் மாரிதான்.

அதனால் தான் துணிந்து தமிழை தாக்கியிருக்கிறான் மாரி.

மாரியுடன் சென்றவர்களில் ஒருவன் தமிழுடன் இருந்த இருவருக்கு பிரியாணி, சாராயம் என வாங்கிக்கொடுத்துவிட்டு சென்றான்.

பசியெடுக்கவும் அவர்களும் சாப்பிட்டு குடித்து மட்டையாகிவிட்டார்கள்.

தமிழ் அடிபட்டு கிடக்கும் அதே வழியாகதான் மலரை காரில் ஏற்றிச்சென்றார்கள். ஆனால் காலத்தின் விதியோ என்னவோ தமிழை யாரும்பார்க்கவில்லை.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளே தான் தமிழ் இருந்தான். இவர்களோ ரோட்டில் தான் தமிழை தேடியபடியே சென்றார்கள். அதனால் தமிழ் கண்ணில் படவில்லை.

மலரை மருத்துவமனையில் அனுமதித்து  முப்பது நிமடங்களில் சந்திராவை உரித்து அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்சியான தருத்தை தமிழுடன் பகிர்ந்து கொள்ளமுடியாமல் அவனையே எதிர்பார்த்திருந்தாள் மலர்க்கொடி.

குழந்தையை துடைத்து மீண்டும் தாயிடம் கொடுத்தார்கள். அதன் பின் மலரை நார்மல் வார்ட் மாத்தியபின் தமிழைதான் கேட்டபடியே இருந்தாள் மலர்.

ராமு மருத்துவமனை முன்பே நின்றிருந்தான். தமிழ் வந்தால் அழைத்துசெல்வதற்கு. ஆனால் இரண்டு மணிநேரம் கழித்து ஒரு காரில் தமிழை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து பதறி கத்தியபடியே அங்கு சென்றான். வாட்பாய் ஸ்ட்ரெச்சரை எடுத்துவரவும் அதில் தமிழை தூக்கி வைத்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள்.

மலர் இந்நிலையில் இருக்கும் போது இதை அவளிடம் உடனே சொல்லவேண்டாம் என நினைத்து. முத்தரசனுக்கு அழைத்து விசயத்தை சொன்னான். அதை கேட்டதும் குழந்தையை நினைத்து மகிழ்வதா? தமிழின் நிலையை நினைத்து வருந்துவதா? என தெரியாமல். தாமரையும் முத்தரசனும் மருத்துவமனை வந்தார்கள்.

மலரை தவிற மாலதி ராணி வாணி  மரகதம் பாட்டியை மலருக்கு துணையாக விட்டுவிட்டு அவர்கள் அனைவரும் ஐ சி யூ விற்கு முன் தமிழை பார்க்க வந்துவிட்டார்கள்.

மீனாட்சி பாட்டி சொன்னதற்க்காக அறிவு இசையை கவனித்துக்கொண்டாள். ஆனால் வேண்டா வெறுப்பாக இல்லை மனநேயத்துடன் ஒரு தாய் போன்று கவனித்துக்கொண்டாள்.

இசை இருக்கும் அறை அவர்களின் வீட்டில் கீழ் போர்சன் அறை.  ஒரு கோமா பேசன்ட் இருப்பதற்கு ஏற்ற வகையில் காற்றோட்டமாக. சகல வசதிகளுடனும் இருந்தது.

டாக்டரின் அறிவுரை படியே நடந்துகொண்டார்கள். பால் நீர் ஜூஸ் என திரவ ஆகாரம் அனைத்தும் டியூப் மூலம் அறிவுதான் கொடுப்பாள். சிறுநீர் டியூப் பொருத்தியாருக்கிறார்கள். மலப்பிரச்சினைக்கு  டைபர்  வைத்து. அதை சுத்தம் பண்ணுவது என அதற்கு ஆள்வைத்து பார்த்துக்கொள்கிறார்கள்.

அறிவிற்கு ஏழாவது மாதம் ஆரம்பித்தது. மாதம் மாதம் தாமரைதான் அவளை செக்கப் அழைத்துசெல்வார். இம்மாதமும் அழைத்து சென்றபோது டாக்டர் ஏழாவது மாத ஸ்கேனிங் பண்ணி பார்த்துவிட்டு.. குழந்தை போசாக்கு குறைவாக இருப்பதாகவும் அதை இனியும் தொடரவேண்டாம். ஆரோக்கியமான உணவு. ஓய்வு சிறு சிறு வேலைகளுடன் கூடிய எக்ஷசைஸ். எல்லாவற்றையும்  பாலோவ் பண்ணும்படி கூறி அனுப்பிவைத்தார்.

அதை கேட்டு தாமரை கவலையுற்றார். இசைக்கு நடந்தது நடந்துவிட்டது இனிமேலும் அறிவை கவனிக்காமல் விட்டால் பாரிய இழப்பு நேரிடும் என நினைத்து. தாமரை தான் அறிவையும் பார்த்துக்கொண்டார்.

வீட்டிற்கு வந்ததும் அறிவை அழைத்து      ” இங்க பாருமா அறிவு. நீ வேணாம்னு சொன்னாலும் இனி ஒன்னும் பண்ண முடியாத கட்டம். நீ குழந்தையை கலைக்ககூடாதுனு தான் கடவுள் நாலு மாதம் வரை உனக்கு தெரியமா வச்சிருந்திருக்கார் போல.. இன்னும் இரண்டு மாசத்துல உனக்கு டேட். அதனால உனக்கு விருப்பமில்லாம நடந்த இந்த கல்யாணத்துக்கு தண்டனையா என் மகனே முடங்கிட்டான். இந்த வீடே மயானமா இருக்கு. நீ இதுக்கு மேல எங்களுக்கு கஷ்டம் தரவேண்டாம் அறிவு. இந்த குழந்தையும் எதாவது குறையோட பிறந்தா எங்களுக்கு தாங்க முடியாது. தயவு செய்து இனியாவது குழந்தை மேல அக்கறையா அன்பா நடந்துக்க அறிவு. தாய் மனசுல சந்தோசம் கவலை குழந்தை பற்றிய விருப்பு வெறுப்பு எல்லாமே குழந்தையை பாதிக்கும். அதனால சொல்லுறேன். இனி கவனமாக இரு. அவனோட பிள்ளையாவது அவனை மீட்டுத்தரட்டும்.” என்று அன்பாகவும் கவலையாகவும் பேசினார் தாமரை.

அவர் சொன்னதை கேட்டு தலையாட்டிவிட்டு சென்றாள் அறிவு.

இசையை மாலை நேரம் வீல் சேரில் வைத்து வெளியே அழைத்து சென்று கார்டனில் சுற்றுவார்கள். அவன் படித்த பாட்டை ரெக்கார்ட் பண்ணி அவனுக்கே போட்டு காட்டினார்கள்.

இசை வேந்தனை மீட்க அவர்களால் இயன்ற அனைத்தையும் அவனின் சொந்தங்கள் பண்ணினார்கள்.

மீனாட்சி தாமரை முத்தரசன் ஜான் என அனைவரும் பழைய கதைகளை பேசுவார்கள். அது அவனுக்கு கேட்குமோ கேட்காதோ அது யார் அறிவார். அவர்களது முயற்சி தொடர்ந்தது.

அவசரசிகிச்சை பிரிவில் இருந்து டாக்டர் வெளியே வரவும் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.

முத்தரசன் தான் என்னவென்று விபரம் கேட்டார். ” அதிகமாக பிளட் லாஸ் ஆகி இருக்கு அவரோட பிளட் குரூப் இப்ப ஸ்டாக் இல்ல மிஸ்டர். பிளட் பேங்ல சொல்லியிருக்கோம் வந்ததும் தான் ஆப்ரேசன் பண்ணணும். பட் உயிருக்கு ஆபத்தில்ல பயப்படவேண்டாம்.” என கூறிச்சென்றார் டாக்டர்.

முத்தரசன் யாருக்கோ கைபேசியில் அழைத்து வரச்சொன்னார். சற்று நேரத்தில் அவரும் வந்ததும் அவர் தமிழின் பிளட் குரூப் அதனால் அவர் பிளட் குடுத்ததும் தமிழின் ஆப்ரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

அதன்பின் அனைவரும் இங்கு இருந்தால் மலர் பயந்துவிடுவாள்.என கூறி தாமரையும் முத்தரசனும் மலரை பார்க்கச்சென்றார்கள். ” அடடே. பேத்தியா?  தங்கசிலையாட்டாம் இருக்காளே. நீ நல்லா ஓய்வெடுமா மலர்.” என்று கூறி குழந்தையை தூக்கி வைத்து விளையாட்டு காட்டினார் முத்தரசன்.

தாமரை மலருக்கு ஜூஸ் குடிக்ககொடுத்தார். அவளும் குடித்ததும். ” மலர் நான் சொல்லுறதை பதட்டபடாம கேட்கணும். பதட்டம் உனக்கும் குழந்தைக்கும் அது நல்லது இல்ல மா. இப்ப நம்ம இரண்டு குடும்பத்துக்கும் ரொம்ப கஷ்டகாலம் போல. சந்தோசத்தை அனுபவிக்கிறது போல கஷ்டத்தையும் அனுபவிக்கணும். அதுதான் நியாயம். யாரோ வேண்டாதவங்க தமிழை கத்தியால குத்திட்டாங்க மலர். ஆனா உயிருக்கு ஆபத்து இல்ல டாக்டர் பயப்படவேண்டாம்னு சொல்லிட்டார். தமிழுக்கு ஆப்ரேசனும் வெற்றியா பண்ணிமுடிச்சாச்சு. கண்முழிச்சதும் தான் எதுவா இருந்தாலும் சொல்லலாம்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். நீ கவலை படாத.எல்லாம் சரியாகிடும்..” என்று ஆறுதல் படுத்தினார் தாமரை.

அவளுக்கா கஷ்டத்தை பற்றி கூறவேண்டும்.  அவளும் கஷ்டமும் உடன் பிறப்புக்கள் போன்று. கண்ணில் நீர் திறையிட்டது. அழுதால் சளிபிடிக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாது அது பசியால் அழும். என தெரிந்தபடியால். வந்த அழுகையை உள் இழுத்துக்கொண்டு.     ” நான் அவரை பார்க்கணும் மா..” என்றாள் மலர்.

தாமரையும் டாக்டரிடம் அனுமதிவாங்கி மலரை தமிழிடம் அழைத்துச்சென்றார் தாமரை.

உள்ளே சென்றவள் தமிழின் காதருகில் குனிந்து. ” யோவ் பொண்ணு பாப்பா பொறந்திருக்கு. அதை பார்த்து தூக்கி கொஞ்சாம நீ இங்கவந்து படுத்திருக்கியா?. உன்னை யாரு குத்தினது என்ன நடந்ததுனு எதுவும் எனக்கு தேவையில்ல.  சீக்கிரம் எழுந்து வா. ” என்று தமிழின் காதில் கூறிவிட்டு தலையை தடவி நெற்றிமுத்தமிட்டு. எழுந்து வெளியே வந்து முத்தரசனிடம் குழந்தையை வாங்கி தமிழின் அருகில் கொண்டுசென்றாள். புது சூழலில் வயர்கள் பொருத்தப்பட்டு இருந்த தந்தையை பார்த்து என்ன உணர்ந்தாளோ குட்டி சந்திரா. அழுதாள். அந்த சத்தம் மலரின் பேச்சு தொடுகை என அனைத்தும் தமிழை கண்விழிக்கவைத்தது.

நன்றாக இருந்த கையால் மலரை அழைத்து சிரித்தபடியே குழந்தையை தடவினான் தமிழ். அவளும் அவனின் அருகில் குழந்தையை காட்டவும் நெற்றியில் முத்தமிட்டான். அதை பார்த்து அழுகை மாயமாக மறைந்து செப்பு வாயால் அழகாக சிரித்து தந்தையை கவர்ந்தாள் பெண்.

அதன்பின் தமிழின் காயங்கள் சற்று ஆறியதும் இரண்டு நாள் கடந்து வீட்டிற்கு அனுப்பினார்கள்.

ராமு தமிழுக்கு அனைத்திலும் உதவியாக இருந்தான். மாலதியும் ராணியும் அங்கு இருந்தார்கள். அனைவரின் உதவியுடனும் மலர் குழந்தையையும் தமிழையும் கவனித்தாள்.

இவ்வாறே ஒருமாதம் கடந்தது. ஐயர் அழைத்து தொடக்கு கழித்து பூஜை செய்து வீட்டில் சிம்பிலாக ‘சந்திரலேகாஸ்ரீ’ என்று தமிழும் மலரும் இணைந்து பெயர்வைத்தார்கள்.

தமிழுக்கு காயங்கள் ஆறிவிட்டது யாரின் துணையும் இன்றி ஸ்டிக்வைத்து எழுந்து நின்று சில அடிகள் நடந்தான்.

அடுத்து ஒருமாதம் கடந்தது அறிவிற்கு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்தது. தாமரை முதல் குழந்தை வீட்டில் வைத்து வளையல் போட்டு வளைகாப்பை முடிக்கலாம் என்றார்.

அதற்கு மீனாட்சி பேரனின் இந்நிலையில் அதெல்லாம் வேண்டாம் என்றார்.

தாமரையின் முகம் வாடிவிட்டது.

அதனால் மாமியார் மருமகளுக்கிடையில் இத்தனை வருத்தில் முதல் முதலாக கருத்துவேறுபாடு ஆரம்பித்தது.

இதற்கு என்ன முடிவு என தெரியாமல் இருந்தார்கள் இருவரும். என்ன முடிவோ?

Advertisement