Advertisement

அத்தியாயம் 18.

அதோ இதோ என்று ஒரு மாதம் முடிந்து மலருக்கு வளைகாப்பு பண்ணும் நாளும் அழகாக விடிந்தது. தமிழும் மலரும் பேசியபடியே சிறப்பாகவும் அத்தோடு ஆடம்பரம் இல்லாமலும் தமிழ் புதிதாக கட்டிய வீட்டில் அருகில் தெரிந்தவர்களுக்கு மட்டும் சொல்லி செய்கிறார்கள் .

ஆட்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள். வஞ்சகம் பிடித்த கூட்டம் ” இங்க பாருங்கடி கொலைகாரனுக்கும். பிச்சைகாரிக்கும் வந்த வாழ்வை பாரேன். அன்றாடம்  சாப்பாட்டுக்கே சிங்கி அடிச்ச மலர் இப்ப பட்டும் நகையுமா ஜொலிக்கிறா! குடிகாரன் , முரடன் பட்டு வேட்டி கட்டுறதும். பந்தாவா கோட் சூட்,போடுறதும்.  புதுசா பணத்தை கண்டா அப்டிதான் பண்ணச்சொல்லும். ” தமிழிடம் வம்பு பண்ணி அடிவாங்கி புண் பட்ட ஆண்களின் மனைவியர் இதை விட இன்னும் அவதூறாக பேசிவிட்டு சென்றார்கள்.

மலர் அதை கேட்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுவும் கடந்து போகும். என்று நினைத்துவிட்டாள்.”  யாரோ ஏதோ பேசுகிறார்கள் அதை எல்லாம் காதில் எடுத்தால் அவர்களின் வாழ்வுதான் துன்பப்படும். இவர்களுக்கு பதில் இவர்கள் ஆச்சரியப்படும் வகையில் கண்முன் வாழ்ந்து காட்டி அது அவர்களுக்கு  தண்டனையாக அமையனும். ” என்று மனதில் நினைத்தபடி கணவனையே பார்த்திருந்தாள்.

இதற்கு தமிழ்  ஏதேனும் பண்ணிவிடுவானோ என நினைத்து ராமுவின் மூலம் அவனை அழைத்து எச்சரித்தாள் மனையாள்.

அவனும் தலையை ஆட்டி அங்கிருந்து வந்துவிட்டான். அந்த பங்ஷன் முடிந்ததும். தமிழின் சிறப்பான கவனிப்பு அவர்களுக்கு காத்திருக்கிறது. என நினைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் மலரை பார்த்தபடி ராமுவின் காதில் என்ன பண்ணவேண்டும் என சொன்னான்.

நல்ல நேரம் நெருங்கியது தமிழின் அழைப்பை நிராகரிக்க முடியாமல் தாமரையும். குழலியும் கொடிமங்கலம் வந்தார்கள்.

தாமரை வந்ததும் தமிழ் வரவேற்று மலரின் அருகில் அழைத்து வந்தான்.

நல்ல நேரம் வந்ததும் தாமரை வளையல் போட்டு சந்தனம் பூசி பொட்டுவைத்து பூ தூவி முழு மனதுடன் ஆசிர்வதித்தார் தாமரை.  அவரை தொடர்ந்து தாயை பின்பற்றி குழலியும் சடங்கை பண்ணினாள். அதன் பின் வாணி என சுமங்கலி பெண்கள் வளையல் பூட்டி ஆசி வழங்கினார்கள்.

அதன் பின் தட்ட முடியாமல் தமிழ் தந்த உணவை சிறிது உண்டுவிட்டு அவர்கள் எடுத்துவந்த பரிசை மலரின் கையில் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

தமிழும் இதற்கு மேல் அவர்களை வற்புத்தவில்லை. அவர்களின் வீட்டு நிலையில் இந்தளவு வந்து நின்றதே பெரிது என நினைத்து வழி அனுப்பிவைத்தான்.

முறைபடி அனைத்தும் நடந்ததும் மாலதி அக்கா வீட்டிற்கு மலரை அனுப்பிவைத்துவிட்டு. பணம் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டு இரவு உணவை இட்லியுடன் முடித்துவிட்டு இரண்டு பெக் குடித்துவிட்டு பின் படுத்துக்கொண்டான்.

” என்ன அண்ணே குடிக்க ஒரு காரணம் வேணும் போல அண்ணி பிரிஞ்சி போன சோகமா? ”  என்றான் ராமு நக்கலாக.

” டேய் என்ன லந்தா? ஏதோ தோணுச்சி சின்னதா ரெண்டு பெக் போட்டேன். நாளைக்கு இசை ஸாரை செக்கப் அழைச்சிட்டு போகணும் சீக்கிரம் எழுந்து கொடிக்கிட்ட சொல்லிட்டு புறப்படனும். ஆலாரம் வச்சி என்னை எழுப்பி விடு.” என்று மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான் தமிழ்.

ராமுவும் அவன் சொன்னபடியே அடுத்தநாள் காலை ஐந்து மணிக்கே எழுப்பிவிட்டான்.

தமிழும் எழுந்து குளித்து வரவும் ராமு காஃபி கலந்து கொடுத்தான். அதை ஒரு சிப் குடித்துவிட்டு முகத்தை சுளித்தான்.

” ஓஹோ அப்டி போகுதா கதை. இந்த ராமு கையாலதான் இத்தனை வருசம் நீ காஃபி குடிச்ச அண்ணே. இப்ப அண்ணி கையால குடிக்கும் போது இருந்த ரசனை. இப்ப இல்ல முகம் சுளிக்கிற. இது எல்லாம் சரியில்ல அண்ணே. அப்ப எதுவும் சொல்லாம குடிச்சிட்டு.  இப்ப இப்டி பண்ணுற. நானும் ஒத்துக்கிறேன். அண்ணி காஃபி யை யாராலும் அடிச்சிக்க முடியாது தான். இருந்தாலும் போண்ணே நான் உன் பேச்சு கா.” என்று சிறு பிள்ளை  போன்று எழுந்து சென்றான் ராமு.

தமிழ் ரெடியாகி ராமுவை அழைத்து இன்று அவன் பார்க்கவேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு அவனது புல்லட்டில் மாலதி வீட்டிற்கு சென்றான்.

அங்கு சென்று மலரிடம் சொல்லிவிட்டு ” இன்னும் மூணு நாள் தான் இருக்கு கவனமா இருடி நான் இன்னைக்கே வந்திடுவேன். நீங்க ஏதாவதுன்னா உடனே எனக்கு கூப்பிடுங்க கா பார்த்துக்கங்க. ” என்று விட்டு கசந்து போன நாக்கை மலரின் காஃபியால் ருசியாக்கிவிட்டு அந்த தித்திப்புடனே மலரின் பிரசவம் வரை தேவைப்படும் என இசையின் வீட்டில் கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சென்றான் தமிழ்.

ஜான் தமிழுக்கு அழைத்து இசையின் நிலையை சுருக்கமாக சொல்லி அவனையும் வருமாறு அழைத்தார்கள். அவனும் கோவை சென்று இசை இருக்கும் மருத்துவமனை சென்றான்.

இசையை அவசர பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து முகத்தில் இருந்த காயங்களுக்கு மருந்திட்டு கட்டுப்போட்டு முதலுதவி பண்ணி அவனை பரிசோதித்தார்கள்.

தலையில் பலமாக அடிபட்டதால் ஆப்ரேசன் பண்ணவேண்டும் என டாக்டர்கள் பேசிக்கொண்டார்கள். அதற்கு அவனின் பெற்றோர் கையெழுத்து போடவேண்டும். பணம் கட்டவேண்டும். அதனால் அவன் கண்விழித்து யார் என்ன என்று கூறியதும் அடுத்த நடவடிக்கை எடுக்கலாம் என நினைத்தார்கள்.

 ஆனால் நாட்கள் தான் சென்றது இசை கண்விழிக்கவில்லை. அவனை மீண்டும் பரிசோதித்த டாக்டர் கோமா நிலை என கூறி கைவிரித்தார்.

பணமும் கட்டாமல். யார் என விபரமும் தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை அளிக்க நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. பேப்பரில் விளம்பரம் கொடுக்கவும் அவனின் முகம் தெளிவு இல்லாமல் காயம் கட்டு என கொடுரமாக இருந்தது. அதனால் மார்சுவரியில் கொண்டுபோய் போட்டுவிட்டு அங்கிருக்கும் காவலாளியிடம் விபரத்தை கூறிவிட்டு அவனிடம் ஏதாவது அசைவு தெரிந்தால் உடனே தெரிவிக்கும் புடி கூறினார்கள்.

உயிரற்ற பிணங்களின் மத்தியில் உயிர் இருந்தும் இயக்கம் இல்லாமல் பிணமாக தனிமைபடுத்தி அடையாளப்படுத்தி வைத்திருந்தார்கள்.

ஜானும் விபரம் அறிந்ததும் தமிழை பணம் எடுத்து மருத்துவமனைக்கு வரும் படி கூறிவிட்டு. ஜானும் தினேஷும் வந்து சேர்ந்தார்கள்.

ரிசப்ஷன் பெண்ணிடம் இசைவேந்தன் என பெயர் கூறி கேட்டார்கள். ஆனால் பதிவு பண்ணாததால் அவளும் அப்படி யாரும் இல்லை என கூறினாள்.

பின் விபத்து பற்றி கூறியதும். அவள் நிர்வாகத்திற்கு அழைத்து விபரம் கேட்டு. வாட்பாயை அழைத்து இசையை பார்த்த டாக்டரிடம் அழைத்து செல்லச்சொன்னார்கள்.

இசையை தேடி வந்தவர் ஏழை என்றால் நேராக மார்ச்சுவரிக்கே அழைத்து சென்று இருப்பார்கள். ஏனெனில் ஏழை மக்களால் மருத்துவமனை நிர்வாகத்தை நெருங்கவே முடியாது. ஆனால் வந்தவர்கள் படித்து பணம் படைத்தவர்கள் போன்று ஆங்கில புலமையுடன் கூடியவர்களாக இருக்கவும். அந்த வாட்பாய் டாக்டர்க்கு கைபேசியில் அழைத்து விபரம் கூறினான்.

உடனடியாக அவர்களை காக்கவைக்கும் படி கூறிவிட்டு இசையை ரூமிற்கு சிப்ட் பண்ணச்சொன்னார் டாக்டர்.

அதை கேட்டு அந்த வாட்பாயும் மார்ச்சுவரி சென்றான். இதை பார்த்த மற்ற வாட்பாய் நல் உள்ளம் படைத்தவன். ஜானிடம் நடந்தவற்றை கூரி மார்ச்சுவரிக்கு போகும்படி கூறினான்.

அதை கேட்ட இருவரும் ஆடி போய்விட்டார்கள்.

அப்பொழுதுதான்  சரியாக தமிழும் பணத்துடன் வந்தான்.

தமிழிடம் எதுவும் கூறாமல் அவனையும் அழைத்துக்கொண்டு மூவரும் வாட்பாய் சொன்ன வழியில் மார்ச்சுவரியை அடைந்தார்கள்.

உள்ளே சென்றால் அப்பொழுதுதான் வாட்பாயும் காவலாளியும் சேர்ந்து இசையின் பிட்டான பாடியை தூக்கமுடியாமல் சிரமப்பட்டு தூக்குவதை பார்த்ததும். இவர்கள்  மூவரும் ஓடிச்சென்று அவர்களை அடித்து தள்ளிவிட்டு இசையை தூக்கி வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள்.

வாட்பாய் டாக்டரிடம்  நடந்ததை கூறாவும் அவரும் அங்கு வந்தார்.

அவரை பார்த்து தான் தமிழ் சட்டையை பிடித்து அடித்து தள்ளிவிட்டு. பணத்தை வீசி எறிந்துவிட்டு இசையை நன்றாக பார்த்தான்.

கட்டுகள் அகற்றப்பட்டு காயங்கள் சிலது ஆறி தழும்பாகவும். சில காயம் புரையோடி சீல் வைத்தும். கசங்கிய  மருத்துவமனை  உடையில் அலங்கோலமாக இருந்தான். அவன் மேல் துர்நாற்றாம் வீசியது.

இதை எல்லாம் பார்த்த தமிழ் தன்னை கீழே குனிந்து நன்றாக பார்த்துக்கொண்டான்.

அவன் மலருக்கு பண்ணிய கொடுமைக்கு இந்த தண்டனையை தாராளமாக ஏற்றுக்கொண்டிருப்பான்.

ஆனால் ஒரு கொலை பண்ணி சிறை சென்று வந்து.  குடித்து சீரழிந்து. பின் கூலி வேலை செய்தவனை. திடீரென்று அவளே திருமணம் பண்ணி பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்து. பின் இசை யாரென்று தெரியாத அவனை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைத்து. அவனையும் குடும்பம் பிள்ளை என பொறுப்பாக மாற்றிய ஒரு உன்னதமான மனிதனின் இன் நிலையை தாங்கமுடியாமல் மீண்டும் கோபத்துடன். அங்கிருந்தவர்களை வெறிபிடித்தவன் போன்று தாக்கினான் தமிழ்.

அவர்களால் ஒன்றும் பண்ணமுடியாது. போலீஸ் கேஸ் என போனால் அவர்கள் இசையை வைத்திருந்த விசயம் வெளியே தெரியவரும். தெரிந்தால் மருத்துவமனைக்குதான் கெட்டபெயர். அதனால் அமைதி காத்தார்கள்.

ஜான் தான் தமிழை தடுத்து நிறுத்தி அங்கே இசைக்கு  மீண்டும் சிகிச்சை அளிக்கும் படி கூறி அவனை சுத்தம் செய்து காயங்களுக்கு மருந்திட்டு மீண்டும் கட்டுப்போட்டு. இசையின் மருத்துவ ரிப்போர்ட் வாங்கிக்கொண்டு. அதற்கும் சேர்த்து பணத்தை டாக்டரின் முகத்தில் வீசிவிட்டு தினேஷ் சென்று இசைக்கு  புது உடை வாங்கி வந்து உடுத்தி அவனது தோற்றத்தை சற்று திருத்தி காரில் அழைத்து சென்றார்கள்.

கோவை வந்து இசையை பார்த்ததும். தமிழ் மலருக்கு அழைக்க மறந்துவிட்டான்.

மலர் ராமு மூலம் விசயமறிந்து. கோபம் கொண்டாள்.

மூவரும் இசையை அழைத்துக்கொண்டு  மதுரை வந்து. இசையின் குடும்ப மருத்துவர் நடந்தும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்துதான் திடீரென்று இசையை இன் நிலையில் வீட்டிற்கு அழைத்து சென்றால். யாராலும் இதை தாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. என்பதால் முன் அறிவிப்பாக தமிழ் இசையின் வீட்டிற்கு அழைத்து விபத்து என கூறினான்.

அதன்பின் முத்தரசன் எந்த மருத்துவமனை என விசாரித்து அங்கு சென்றார்.

சென்றவர் இசையை பார்த்து பயந்துவிட்டார்.

தமிழிடம் கேட்டு விசாரித்து விபரங்கள் சேகரித்து அந்த மருத்துவமனை மீது கோர்ட்டில் கேஸ் பதிவு செய்வதாக கூறினார்.

தமிழ்தான் இது வீட்டிற்கு தெரியவேண்டாம் தாங்க மாட்டார்கள் என சொல்லி தடுத்து நிறுத்தி இசைக்கு  நன்றாக சிகிச்சை அளிக்கலாம். இப்பொழுது அதுதான் முக்கியம். என எடுத்துசொல்லி அவரை சமாதானப்படுத்தினான் தமிழ்.

நீண்ட நேரம் போராடி தமிழை பரிசோதனை பண்ணி டாக்டர் வெளியே வந்தார்.

தலையில் அடிபட்ட காயத்தை நன்கு ஆராய்ந்து ஆப்ரேசன் செய்தார்கள்.

அதன் பின் 24 மணி நேரம் காத்திருந்தார்கள்.

கோவையில் தான் விபத்து என்று கூறியதால் வீட்டினர் யாரும் வரவேண்டாம் என்றும் கூறினார் முத்தரசன். இல்லையென்றால் வீட்டு பெண்கள் வந்தால் இசையை பார்த்து வேறு ஏதாவது அவர்களுக்கு நேர்ந்தால் அதுவும் சிக்கலாகி விடும் என்பதால் தற்போது அவ்வாறு கூறி சமாளித்தார் முத்தரசன்.

டாக்டர் கொடுத்த கெடு முடிந்தும் இசை கண்விழிக்கவில்லை.

” விபத்து நடந்தப்பவே ஆப்ரேசன் பண்ணியிருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காது அரசு.  நீ கவலை படாத உயிருக்கு ஆபத்து இல்ல. எங்களால முடிஞ்சளவு எல்லா வகையிலையும் முயற்சி பண்ணிட்டோம். தலை காயம் ஆறும் வரை இசை இங்க இருக்கட்டும். கோமா பயப்படும் படி இல்ல இப்ப. இசைக்கு எதானால இப்டி நடந்ததோ அதையே மீண்டும் இசை விரும்பியபடி அவனோட மனைவியின் தூய்மையான அன்பு காதல் கிடைச்சா அதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரபிச்சா கூடிய சீக்கிரம் குணமாக வாய்ப்பிருக்கு பார்த்துக்கோங்க. ” என்று கூறிவிட்டு சென்றார் டாக்டர்.

தமிழ் அன்றே ஊருக்கு சென்று மலரிடம் இசை பற்றி சிலவற்றை கூறி அதனால் சொல்லமுடியவில்லை என கூறி அவளின் கோபத்தை குறைத்து சமாதானப்படுத்திவிட்டு. அடுத்த நாள் மீண்டும் மதுரை சென்று இசையை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

வீட்டில் இருந்து அறிவை தேடி கம்பீரமான ஆண்மகனாக சென்றவன். மீண்டும் இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததும். தாமரை ஓடிவந்து கட்டிபிடித்து கதறி அழுதார். மீனாட்சி  குற்ற உணர்வில் பேரனை இன் நிலையில் பார்க்கமுடியாமல் மயங்கிவிட்டார்.

குழலியும் அண்ணனை அவ்வாறு பார்க்கமுடியாமல் தவித்தாள்.

அறிவு அதிர்ந்து சிலையென சமைந்துவிட்டாள்.

அவளின் கண்முன் ஆறடி ஆண்மகனாக அவளை தேடி வந்தது. திருமணம் முடித்தது. என அவர்கள் இருவருக்கும்  இடையில் நடந்தது என அனைத்தையும் நினைத்து பார்த்து கண்ணீர் விட்டாள் அறிவு.

குழலி தான் மீனாட்சிக்கு மயக்கம் தெளியவைத்தாள். தமிழ் வீல்சேரை தள்ளிக்கொண்டு வந்து ஹாலில் வைத்தான்.

சுருக்கமாக சொல்லவேண்டிய விபரத்தை மட்டும் சொல்லி டாக்டர் சொன்னவற்றையும் சொன்னார் முத்தரசன்.

தாமரை தமிழ் கையைபிடித்து நன்றி சொன்னார். ” நாங்களே அவன் அழைக்கவேண்டாம்னு சொன்னதும். அழைத்து தொல்லை பண்ணினா கோபப்படுவான். மருமகளை கஷ்டபட வச்சதுக்கு தேடி அலையட்டும். கஷ்டப்படாம ஒன்னு கிடைச்சா அதுக்கு மதிப்பில்லனு.  தேடி அறிவை சமாதானப்படுத்தி இரண்டு பேரும் இந்த வீட்டுக்கு வரட்டும்னு நினைச்சேன். ஆனா நீ அடிக்கொருமுறை இசையை பற்றி தகவல் சொன்ன. இதோ இப்பவும் அவனை தொடர்பு கொள்ள முடியலன்னதும் ஜான் தினேஷை அனுப்பி தேடி கோவையில் கண்டுபிடிச்சி சிகிச்சை கொடுத்து இந்த அளவாவது எங்க பிள்ளையை உயிரோ எங்க கிட்ட ஒப்படைச்சிருக்க தம்பி. இல்லன்னா இசை எங்களுக்கு கிடைச்சிருப்பானோ என்னவோ.” என்று தமிழின் கையை பிடித்து கண்ணீர்விட்டார் தாமரை.

தமிழும் குழலியும் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

மீனாட்சி அதிர்ச்சியில் லோ பிரசரும் சேர்ந்து மயங்கிவிட்டார்.

எழுந்து வந்து அறிவின் அருகில் நின்று
” இந்த நிலைமையிலயும் உனக்கு பிடிக்காத உன் புருசனை வெளிய அனுப்பனுமா? தங்கம். நீ ஆமா சொன்ன நான் இப்பவே அனுப்பிடுறேன்.” என்றார் விரக்தியாக?.

அவரின் தோளில் சாய்ந்து ” வேணாம் பாட்டி. வேணாம். என்னை வார்த்தையால கொள்ளாதீங்க. அவரை என்னால இப்டி பார்க்கமுடியல.” என்று கதறினாள் அறிவுமணி.

” அப்போ நீ எனக்கு உதவி பண்ணணும். நான் உனக்கு பண்ணின உதவியால பாதிக்கப்பட்ட என் பேரனை நீதான்  பழைய இசைவேந்தனா கம்பீரமா  திருப்பி தரனும். அது உன்னால உன்னோட உண்மையான காதலால மட்டும் தான் முடியும். எனக்காக நீ காதலிக்கிற மாதிரி நடிச்சாலே போதும்.  பண்ணுவியா?. இதை நான் மடிப்பிச்சையா கேக்கிறேன். மா அறிவு.  இசை குணமானதும் அப்பவும் உன் மனசு மாறி அவனை மன்னிக்கமுடியலன்னா நானே உங்க ரெண்டு பேரையும் சட்டபடியும் முறைபடியும் பிரிச்சி உனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்து தர்றேன். இது சத்தியம்.” என்றார் மீனாட்சி.

அதன் பின் இசையை கீழ் ரூமில் தங்கவைத்தார்கள். அங்கே அறிவும் தங்கினாள். இசைக்கு உதவியாக ஜான் இசை வீட்டில் பக்கத்து அறையிலேயே தங்கினான்.

அதன்பின் தமிழுக்கு  வேலைபளு மாதத்தில் இரண்டு முறை இசையை செக்கப் அழைத்து செல்வது. என இந்த ஒரு மாதமும் ஓடிவிட்டது.

இதோ இன்றும் செக்கப் அழைத்து சென்று எந்த முன்னேற்றமும் இல்லை என டாக்டர் கூறியதும். மீண்டும் வீட்டிற்கு கவலையுடன் அழைத்து வந்தான்.

அறிவே வீட்டில் இசையை கவனித்துக்கொண்டாள். உடை மாற்றி குளிக்கவைப்பது என முத்தரசன் செய்தார்.

அறிவும் ஆறு மாதமாக இருப்பதால் சோர்ந்து போய்விடுவாள். தாமரையும் இசையை கவனிப்பார்.

தாமரை அறிவுடன் பேசுவதில்லை. மீனாட்சியுடன் முன்புபோல் பேசுவதில்லை கேட்டால் பதில் சொல்வார்.

இதில் முதலில் யார் மேல் தவறு என்று யாரும் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. காலப்போக்கில்  நடந்தவற்றை கடந்து செல்கிறார்கள்.

மேலும் இரண்டு நாள் சென்றதும். மலர் பேறுக்காக மருத்துவமனை செல்லவேண்டும். அதற்காக தயாராகினாள்.

காலையில்  தமிழிடம் சொல்லித்தான் அனுப்பினாள். இன்னும் காணவில்லை.

அன்றே அவளுக்கு  வலி வந்துவிட்டது. மாலதி தமிழுக்கு அழைத்து பார்த்துவிட்டு முதல் வலிக்கு கசாயம் கொடுத்தார். மீண்டும் வலி வரவும். வாணி ராணி மரகதம் பாட்டி நீலா என அனைவரும் இரண்டு காரில் மலரை அழைத்துக்கொண்டு அவளின் ஆசைப்படியே அவள் பிறந்த ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறினாள்.

போற வழி எங்கும் தமிழை தேடியபடியும் கைபேசியில் அழைத்தபடியும் சென்றார்கள்.

அவன் அழைப்பை ஏற்றக்கவில்லை.

மருத்துவமனையிலும் சேர்த்துவிட்டார்கள். தமிழ் வரவில்லை.

மலர் பயந்துவிட்டாள் வலியில் துடித்தாள். தமிழை பார்க்க விரும்பினாள்.

விசயம் கேட்டதும். ராமுவும் அங்கு வந்துவிட்டான். ஆனால்  தமிழ் மட்டும் வரவில்லை.

 தமிழரசு ஏன் அழைப்பை ஏற்று வரவில்லை. என்ன நடந்தது?. அடுத்த அத்தியாயத்தில். சந்திப்போம்.

Advertisement