Advertisement

அத்தியாயம் 17.

ஜான்சனும் இசையின் நண்பன் தினேஷும் அறிவை தேடிச்சென்ற இசைவேந்தனை தேடி அவர்கள் இருவரும் சென்றார்கள்.

தமிழ் சொன்னதன் பின்  ஜான்சனும் தினேஷும் இசையை தேடி சென்னை சென்று அங்கும் தேடி அழைந்தார்கள்.

இசை தாடியுடன் அங்கு சுற்றித்திரிந்தான். இவர்களோ அவனின் குட் லுக் ஸ்மார்ட் போட்டோவை காட்டி மக்களிடம் கேட்டார்கள்.

ஆனால் அங்கு யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.

இவ்வாறு பொது இடங்களில் இரண்டு நாட்களாக தேடியவர்கள் அதன் பின் ஒரு முடிவாக. சென்னையில் உள்ள பிரபல தங்கும் விடுதிகளில் உள்ள சி சி டீவி கேமராக்களில் தேடி ஒருவழியாக இசையை பார்த்து அடையாளம் கண்டுகொண்டான் ஜான்சன்.

அதை பார்த்ததும் அவனுக்கு மிகுந்த மன வருத்தமாகிவிட்டது. கையில் இருந்த போட்டோவையும் கேமராவில் தெரிந்த அவனது உருவத்தையும் பார்த்தவனால் கவலையை தாங்க முடியவில்லை.  எப்படி இருந்தவன் அவனை இந்த கோலத்தில் வீட்டினர் பார்த்தால் என்னவாகும். ” இந்த அறிவு பொண்ணு ஸாரை என்ன பாடு படுத்துது. காதல் ஒருவனை பைத்தியகாரனாக்கும்றது சரிதான் போல. இந்த காதல் எல்லாம் நமக்கு வரக்கூடாது. நம்மால இப்டி ரோட் ரோட்டா திரியமுடியாது. ” என்று நினைத்து விட்டு அங்கிருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் விபரம் கேட்டான் ஜான்சன்.

கூடிய சீக்கிரம் அவனும் காதல் என்னும் வலையில் விழுவான் என தெரியாமல் காதலை வெறுக்கிறான் ஜான்.

”  சார் அவர் ரூம் வெக்கட்  பண்ணி பத்து நாளாகிடுச்சி.” என்றாள்.

அதை கேட்டு அங்கிருந்து சென்று தினேஷை அழைத்து பேருந்து நிலையத்திற்கு வரும் படி கூறிவிட்டு அவனும் அங்கு சென்றான்.

சென்று அங்கும் கேமராவை செக் பண்ணி அவன் பதிவு பண்ணியிருந்த சொகுசு பேருந்து பற்றி விசாரித்தார்கள். அங்கு உள்ள அதிகாரி மூலம் அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியது தெரியவந்தது.

அதை கேட்டதும் வேகமாக கோவை சென்றார்கள். கோவையை அந்த பேருந்து நெருங்கிய நேரம் தான் அங்கிருந்து புறப்பட்ட மணல் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

அந்த நேரம் அங்கிருந்தவர்கள் தான் ஆம்புலன்ஸ் அழைத்து விபத்துக்குள்ளானவர்களை ஏற்றி கங்கா மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

விபத்து நியூஸ் கேட்டதும் உறவினர்கள் வந்து பேசன்ட்ஸை பொறுப்பேற்றார்கள்.

ஆனால் இசை ஜன்னல் பக்கம் இருந்து சென்றதால் விபத்தில் பேருந்து சரிந்ததும் கண்ணாடி துகள்கள் நொருங்கி அவனது முகத்தில் குத்தி கிழித்திருந்தது. தலையில் அடிபட்டு பிளட் அதிகம் போய்விட்டது. அதனால் அவனை மருத்துவமனையில் சேர்க்கும் பொழுதே கான்சியஸ் போயிருந்தது.

 முகத்தில் தாடி வளர்த்திருந்தான்.  காயம் என அனைத்தும் இசையை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அவசரசிகிச்சை  பிரிவில் சேர்த்து அவனுக்காக சிகிச்சை நடைபெற்றது.

மூன்று நாள் கடந்தும் இசை கண்விழிக்காமல் இருக்கவும். தான் டாக்டர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அவர்களுக்கு இசையை என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. அதனால் அவ்வாறு செய்தார்கள்.

தமிழுக்கு இசையின் அழைப்பு கிடைக்கவில்லை என்ற கவலை மனதை வருத்தியது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால். மலர் அவனை தற்போது புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் வேறு சேர்ந்து அவனை மலரிடம் கோபம் கொள்ள வைத்தது.

அதனால் தான் சத்தம் போட்டு அவளை அடக்கினான்.

அவள் பயந்து கண்ணை உருட்டி விழித்ததை பார்த்து மனம் உருகிவிட்டது.

” நான் எப்படி உன்னை பாரம்னு சொன்னேன். அனாதையா இருந்த எனக்கு நீ தான் உறவு குடும்பம் எல்லாம் கொடுத்த. நான் பண்ணின தவறை நீ மன்னிச்சிட்டியா?. அது மன்னிக்க முடியாத தவறுதான். ஆனா நான் எப்டி அதை பண்ணினேன்னு இப்பவும் என்னால நம்ப முடியல. ” என்றான் குற்ற உணர்வுடன் அவளின் முகம் பார்க்காமல்.

” மொத என்னை நிமிர்ந்து  பாரு ” என்றாள் மலர் வசதியாக சாய்ந்து இருந்துகொண்டு.

அவள் சொல்லியும் அவன் நிமிராமல் பிழை செய்த சிறுவன் போன்று  கை கட்டி தலைகுனிந்து நின்றான் தமிழரசு.

” இங்க வா வந்து உட்கார்ந்து பேசலாம் நின்னா எனக்கும் கால் வீங்கும் அப்புறம் நான் தான் வலியில கஷ்டப்படனும். ” என்றாள்.

அவள் கூறிய பின்தான் அவள் படும் துன்பம் அவனுக்கு தெரியவந்தது.

மலர் அவளுக்கு கால் வலிக்கும் என சொன்னதும் அவளின் அருகில் அமர்ந்து காலை பிடித்து அவனின் மடியில் வைத்து பார்த்தான்.

அவள் கூறியது போன்று நின்று பேசியதால் கால் வீக்கம் ஆரம்பித்திருந்தது.

தமிழ் எழுந்து சென்று சுடுநீர் எடுத்துவந்து எப்படி பண்ணவேண்டும் என மாலதியிடம் கேட்டு தெரிந்து கொண்டு அறையினுள் வந்தான் தமிழ்.

மீண்டும் மலரின் காலை எடுத்து மடியில் வைத்து சுடு நீரில் துணியை நனைத்து காலில் ஒத்தடம் கொடுத்தான். அவன் செய்வதை மலர் பார்த்தபடியே இருந்தாள்.

” யோவ் இவ்வளவு பாசம் மனசுல வச்சிக்கிட்டு ஏன் தள்ளி தள்ளி போற. இந்த நேரத்துல எனக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கும் தெரியுமா? அதை நீ கேட்டு  தெரிஞ்சி செய்தா தான் நம்ம பிள்ளை ஆரோக்கியமா பிறக்கும். இல்லன்னா காது கேட்காம வளர்ச்சி குறைவா இப்டி குறைகளோடதான் பிறக்கும். நீயும் தள்ளிப்போற நானும் எவ்வளவு நாளைக்கு பொறுக்கமுடியும் சொல்லு.” என்றாள் மலர்.

அவள் சொன்ன குறைகள் என்ற வார்த்தை தமிழை ஆட்டிப்படைத்தது. அவனின் உயிர் அணுவில் உருவாகி அவளின் இரத்தம் சதை மூலம் வளரும் அவர்களின் வாரிசை கலச்சிட சொன்ன அவனால் குறையுள்ள பிள்ளை என்ற வார்த்தை மனதை ரணப்படுத்தியது.

உடனே மலரிடம் ” நான் தப்பு பண்ணினேன் தான் அதுக்காக மரியாதை இல்லாம யோவ் அப்டினு என்ன பேச்சுடி இதெல்லாம். நமக்குள்ள மட்டும் பேசு வெளிய யாரும் இருந்தா கொஞ்சம் மரியாதையா பேசு.” என்றான்.

” அது இனி நீ நடந்துக்கிற முறையில தான் இருக்கு.” என்றாள் மலர்.

” சரி உனக்கு என்ன ஆசை அதை நான் எப்டி பண்ணனும் சொல்லு பண்ணுறேன். நீ சந்தோசமா குழந்தை பெத்து வரணும்.” என்றான்.

மலரோ ” யாருதான் இந்த உலகத்துல தப்பே பண்ணாத மனுசன் யாராவது ஒரு ஆள் இருக்கிறானா? அதுக்காக நீ பண்ணினதை நான் நியாயப்படுத்துல. இருந்தாலும் நீ இருந்த சூழ்நிலை சரியில்ல அன்னைக்கு நானும் மழையில நனைந்து உடுப்பு எல்லாம் ஈரமா இருந்துச்சி குடிக்காம இருந்தாலே அதை பார்த்து எதாவது தோணும். நீ நல்லா தண்ணீ அடிச்சிட்டு இருந்த ஏதோ காலம் நமக்கு இதைதான் விதிச்சிருக்கு போல உனக்கு நான் எனக்கு நீ னு.  இப்டி நடக்காட்டி நான் யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பனான்னே தெரியல அம்மா தங்கச்சிகளோட இருந்துருப்பேன்.”

” காலம் ஒரு மனிதனோட எல்லா சூழ்நிலையையும் வச்சித்தான் அவங்க எதிர்கால வாழ்க்கை அமைக்கும்னு அம்மா சொல்லுவாங்க. அதனால இப்டி திடீர் திருப்பம் ஏதாவது நடந்தா தான் என் வாழ்க்கை நல்ல படியா அமையும் னு இருந்திருக்கு. அது தான் அன்னைக்கு அப்டி நடந்திருக்கு. இப்ப நீயும் கொஞ்சமே கொஞ்சம் திருந்தி குடிக்கிறதை குறைச்சு நல்லவனா நடக்க முதல் அடி எடுத்து வச்சிருக்க. அதுவே நீ வருங்காலத்துல திருந்தி வாழுறதுக்கு நல்ல ஆரம்பம்.”

” உன் சின்ன பருவம் நீ பண்ணின தவறுகள் கொலை எல்லாத்தையுமே நீயும் மறந்திடு நானும் மறந்திடுறேன். நீ நான் நம்ம குழந்தை கார்த்திகா நீலா ராமு மரகதம் பாட்டி மாலதி அக்கா இவங்க ரெண்டு பேருக்கும் நாம்ம உதவி தேவைப்படும் போது கண்டிப்பா கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும். நாம நமக்காவும் நம்ம குழந்தை நம்மலை நம்பி சார்ந்து இருக்கிற நல்ல மனிதர்கள் எல்லாருக்காகவும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி வாழணும். இது தான் என் ஆசை.  அதை நிறைவேற்றி நம்ம குழந்தை ஆரோக்கியமாக பிறக்குறது உன் கையில.  யோசிச்சு முடிவெடு. பண்ணின தவறையே பிடிச்சி காலம் முழுக்க வாழ்க்கையை வீணாக்கப்போறியா? நல்லா யோசிச்சு இனி நடந்துக்கோ. இப்ப நான் தூங்கப்போறேன். அதிக  நாளைக்கு பிறகு நிம்மதியா தூங்கப்போறேன்.” என்றுவிட்டு திரும்பி வசதியாக படுத்துக்கொண்டாள் மலர்கொடி.

ஆனால் தமிழோ அவனின் மனையாளின் பேச்சை கேட்டு குழம்பிபோனான். அவனால் முழுவதும் அவளோடு சந்தோசமாக வாழ முடியும் என தோணவில்லை.

அதை பற்றி யோசிக்கும் பொழுது அவனின் கைபேசி அழைத்தது.

ஜான்தான் அழைத்து இசையின் நிலையை சொல்லி தமிழை பணமும் எடுத்துக்கொண்டு கோவை வரச்சொல்லி அழைத்தான்.

தமிழும் கேட்டதும் கோபத்துடன் மலரை பார்த்தான்.  அவள் நன்றாக ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி தொல்லை செய்யாமல் ராமுவை அழைத்து சொல்லிவிட்டு. நீலாவை மலரின் அறையில் துணைக்கு படுக்குமாறு கூறிவிட்டு.  காலையில் மலருக்கு அழைத்து பேசிக்கொள்ளலாம் என நினைத்து கோவைக்கு கிளம்பி விட்டான் தமிழ்.

காலை எட்டு மணியளவில் இசையின் வீட்டில் அனைவரும் கூடினார்கள்.

முத்தரசன் ” நீங்க எப்டி மா அறிவை பார்த்தீங்க. எந்த ஊர் கோவிலுக்கு போனிங்க?.” என்று தாயிடம் கேள்வி கேட்டார்.

தாமரை அனைத்தும் தெரிந்தும் எதையும் தெரிந்தது போன்று காட்டிக்கொள்ளாமல்  நின்றிருந்தார்.

குழலி அனைவருக்கும் காபி கொடுத்தாள்.

தாமரை.  மீனாட்சி அறிவு இருவரையும் பார்க்கவில்லை.

” நீ எங்க போயிருந்த அறிவு ஏன் எங்க யாருக்கும் போறேன்னு சொல்லல இது உன் வீடு இல்லையா? நாங்க உன் சொந்தம் இல்லயா? நீ போனதால இசையும் போயிட்டான். நாங்கதான் தவிச்சு போயிட்டோம். ” என்று மன வருத்ததுடன் பேசினார்.

அறிவு பதிலேதும் கூறாமல் இருந்தாள்.

அப்பொழுது வீட்டு தொலைபேசி அழைத்தது.

தாமரைதான் எடுத்து பேசினார்.

தமிழ் கூறியதை கேட்டதும். இசை என கத்திக்கொண்டே மயங்கிசரிந்தார் தாமரை.

அவர் கத்தவும் அனைவரும் அங்கு வந்து தாமரையை தூக்கி தண்ணீர் தெளித்தார்கள் அவரும் மயக்கம் தெளிந்து ” ஐயோ அத்த இசைக்கு ஆக்சிடன்ட் ஆகிட்டாம் எல்லாம் உங்களாலதான். என் பிள்ளைக்கு ஏதாவது ஆகினா நான் யாரையும் சும்மா விட மாட்டேன். ” என கத்தினார்.

மீனாட்சி செய்வது அறியாமல் நின்றார்.

முத்தரசன் தான் மீண்டும் தமிழுடன் பேசிவிட்டு இடிந்து போய் அமர்ந்துவிட்டார்.

தமிழ் மருத்துவமனை சென்று இசையை அவ்வாறு பார்த்துவிட்டு அவனை பார்த்த டாக்டரின் சட்டையை பிடித்து ” இவரு யார்னு தெரியுமா? இவர் நினைச்சா புது ஹாஸ்பிடலையே கட்டமுடியும். அப்புடி பட்டவரை நீ இந்த நிலையில வைப்பியா?.” என கேட்டு அடித்தான்.

வாட்பாய் ஏனைய டாக்டர்கள் என அனைவரும் வந்துவிட்டார்கள். ஜான் தான் தமிழை பிடித்து தடுத்து நிறுத்தி. பணத்தை வீசிவிட்டு இசையை அழைத்துக்கொண்டு அவனின் வீட்டிற்கு சென்றார்கள்.

அறிவு இசைக்கு தண்டனை அளித்தாளா? இல்லை இசையை பார்த்து அவள் தண்டிக்கப்படுவாளா? என காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

Advertisement