Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 14

அறிவுமணி வீட்டைவிட்டு சென்று மூன்று மாதம் முடிந்துவிட்டது. அவள் வீட்டை விட்டு வந்ததும். தினமும் பள்ளி செல்வதும். அது முடிந்ததும் வீட்டிற்குள் வந்து அடைந்துகொள்வது.  என அவளது நாட்கள் உருண்டோடியது. ஸாப்பிங் கூட அவள் போகமாட்டாள். ஏனென்றால் இசை அவளை தேடி புறப்பட்ட விசயம் மீனாட்சி மூலம் அவளுக்கு தெரியவந்தது. யாராவது அவளை அடையாளம்  கண்டு இசைக்கு தெரிவித்துவிட்டாள் அவளால் தற்போது  இருக்கும் நிலையில் உடனே வேறு ஊருக்கு  செல்லமுடியாது. என பயந்தே அவளது தோழி மூலம் அவளுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டாள். இவ்வாறே மூன்று மாதம் ஓடிவிட்டது.

கொஞ்ச நாட்களாக முன்பை விட அதிகமாக பசியை உணர்ந்தாள். உணவு உண்டும் சிறிது நேரத்தில் பசி எடுத்துவிடும். இது அவளுக்கு புதிதாக ஏதோ அறிகுறி போன்று தெரியவும். அன்று பள்ளி முடித்து அருகிலிருந்த சிறிய கிளிக் சென்றாள்.

அவளது உடல் பரிசோதனை முடித்தப்பின். அவள் நான்கு மாதம் கருவுற்று இருப்பதாகவும் குழந்தை கொஞ்சம் வீக்காக இருப்பதாகவும். அவளை பார்த்த பெண் டாக்டர் கூறினார்.

” ஏன்மா உன்னோட வந்தவங்களை வரச்சொல்லுமா. ” என்றார் டாக்டர்.

சற்று நேரம் ஒன்றும் புரியாதவளாக இருந்தவள் டாக்டர் அவளை தோள்தட்டி அழைத்தார். அதன் பின் தான் அவள் தன்னிலையில் இருந்து மீண்டு திரு திருவென விழித்தாள் அறிவு.

” என்னம்மா ஏதாவது பிரச்சினையா?. ” என்றார் மீண்டும் டாக்டர்.

” பிரச்சினை  இல்ல மேடம் நானும் இந்த குழந்தையோட அப்பாவும் பிரிஞ்சிட்டோம். நான் இப்ப தனியதான் இருக்கிறேன். டீச்சர் வேலை பண்ணுறேன். தனியதான் வந்தேன். ஏன் மேடம் ஏதாவது சொல்லணும்னாலும் நீங்க என்கிட்டதான் சொல்லணும். ஏன்னா அதை கேட்க எனக்கு யாருமில்லை நான் ஆசரமத்துலதான் வளர்ந்தேன்.” என்றாள் அறிவு.

அவள் கூறியதில் அவளது கணவனை எந்தளவு வெறுக்கிறாள் என டாக்டர் புரிந்துகொண்டார். ” கழுத்துல தாலி இருக்கு குழந்தை உண்டாகியிருக்கு. பொட்டு. மெட்டி. பூ . என ஒரு சுமங்களிக்கு தேவையான அனைத்தும் இருக்கு, ஆனா கணவனை கணவன் னு சொல்லாம குழந்தையோட அப்பானு சொல்லுது. இந்த பொண்ணு. படிச்ச பொண்ணுங்களும் பாமர பெண் மாதிரிதான் இருக்கிறாங்க.” என மனதில் நினைத்தபடி அறிவை ஆராய்ந்தார் டாக்டர்.

இம்முறை அறிவுதான் தொண்டையை செருமி டாக்டரை நிகழ் காலத்திற்கு கொண்டுவந்தாள்.

” பிரச்சினை எதுவும் இல்லமா.  நாங்க வழமையா பேசன்ட் கூட யாரு வந்திருக்காங்கன்னு கேட்போம். அப்டித்தான் இப்ப உன்கிட்டையும் கேட்டேன். நோ பிராப்ளம். நீ நல்லா ரெஸ்ட் எடு உன் கெல்த் பார்த்துக்கோ. நல்ல சத்தான பழம் காய் கீரை எல்லாம் சேர்த்துக்கோ. படிச்ச பொண்ணு உனக்கு அதிகமா சொல்லணும்னு இல்ல, இந்த மாத்திரை ரெகுலரா எடுத்துக்கோ. மாதம் மாதம் செக்கப் வந்துடு. பீ கேர் ஃபுல். போய்ட்டு வா” என அவளின் தோளை தட்டி அனுப்பிவைத்தார்.

நேராக அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தாள் அறிவு.

அறிவு இசையின் வீட்டில் இருந்து வெளியேறும் முன் மீனாட்சி அவளிடம் ஒரு சத்தியம் வாங்கியிருந்தார்.                ” நீ இங்க இருந்து போகணும்னா நான் சொல்லுற இடத்துக்குதான் போகணும். நானும் அதை யார் கிட்டயும் சொல்லமாட்டேன். அதே மாதிரி நீ மனசு மாறினதும் இங்க வந்திடனும். அப்புறம் உனக்கு ஏதாவது பிரச்சினை உதவி தேவைன்னா நீ உடனே எனக்கு  அழைக்கணும். இதுக்கு சம்மதம்னா நீ ஊட்டிக்கு போகலாம் அங்க என் தோழி காமாட்சி இருக்கிறா நான் சொல்லுறேன். அவளும் அவ குடும்பமும் பார்த்துக்கொள்வாங்க. ” என கூறியே அறிவை ஊட்டிக்கு அனுப்பிவைத்தார்.

அவர் கூறியது போன்றே அந்த குடும்பம் அவளை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டது. அங்கு சென்றதும் தான் காமாட்சி அம்மாவின் பேரனை தான்.  அவளுடன் ஆசிரமத்தில் வளர்ந்த தோழி காதலித்து திருமணம் செய்திருக்கிறாள். என தெரிந்துகொண்டாள். அது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

புது இடம் புது மனிதர்கள் எவ்வாறு இங்கு பொருந்திபோவது என தயங்கியவள். தோழியை பார்த்ததும் அசுவாசம் அடைந்தாள். அதன் பின் லீவ் நாட்களில் தோழியின் இரண்டு வயது மகளுடன் அவளது நாட்கள் சென்றது. இயல்பிலேயே குழந்தைகள் மேல் அதிக பிரியம் கொண்டவள். அதேபோன்று அந்த குழந்தையையும் அதன் குறும்புத்தனத்தால் அவளது
கவலைகளை மறக்கவைத்தது.

வீட்டிற்கு வந்த அறிவு குழந்தை உருவாகி இருக்கும் நிலையை அறவே வெறுத்தாள். வேண்டாத திருமணம் அதன் பின்னான ஒருமாத பிடிப்பற்ற வாழ்க்கை அதற்கு இந்த சாத்தான் ஒரு கேடு. அவனையும் அவனுடனான வாழ்வையும் வெறுப்பவள். எவ்வாறு குழந்தையை மட்டும் ஏற்றுக்கொள்வாள்.

நான்கு மாதம் ஆகிவிட்டதாள் களைக்கமுடியாது என அவளுக்கு தெரியும். அதனால் பெற்றெடுத்து அவள் நடத்தும் ஆசிரமத்தில் அவள் போன்று பத்தோடு ஒன்றாக வளரட்டும். என நினைத்தாள்.

அதன் பின் வயிற்றில் கை வைத்து          ” நீ என்ன போல யாருமில்லாத அனாதையா? என்ன. உனக்கு அப்பா பாட்டி தாத்தா அத்தை இப்டி பல சொந்தங்கள் இருக்கு. த கிரேட் பிஸினஸ் மேன் இசைவேந்தனோட ஒரே வாரிசு நீ எப்டி அனாதை ஆகமுடியும். நான் ஒரு கூறுகெட்டவ. உன்னை பெத்து உன் பாட்டி கையில குடுத்துட்டு நான் என் வாழ்க்கையை தேடிக்கொள்வேன். நீ என்றும் என் வெறுப்பிற்கு ஆளான சாத்தான். ” என வயிற்றில் இருக்கும் பிள்ளையின் மேல்  வெறுப்பை கொட்டினாள் அறிவு.

அவளுக்கு தெரியவில்லை வரும் காலத்தில் அவளுக்கு பிடித்த பிள்ளையின் நிலையை எண்ணி மனம் வருந்தப்போகிறாள். என தற்போது தெரியாமல் பிள்ளையை வெறுக்கிறாள்.

தாயின் மனநிலை பிள்ளைக்கு அப்படியே பிரதிபலிக்கும் என அந்த படித்த பட்டதாரிக்கு தெரியாமல் போனது விதியின் செயலோ!

வீட்டுக்கதவு தட்டும் சத்ததில் இருந்து தன்நிலை களைந்தாள். எழுந்து சென்று கதவை திறந்தவள் அங்கு மீனாட்சியை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ந்தபடி நின்றாள் அறிவு.

மீனாட்சிக்கு தாமரை பேசிச்சென்றதில் இருந்து மனதிற்கு  மிகுந்த வருத்தமாக உணர்ந்தார். அறிவு ஜானகி மகள்னு தெரியமாலே அவளோட மனதை மதித்து அவளுக்கு நல்லது பண்ணுவதாக நினைத்து ஏனைய உறவுகளை துன்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவர் செய்த பிழையை அவரே சீர் பண்ண நினைத்து தாமரை முத்தரசன் இருவரையும் அழைத்து  ” அரசு நம்ம விடு இப்ப இருக்கிற நிலையில என்னால மூச்சுவிடக்கூட முடியல அவ்வளவு கவலையா இருக்கு அதனால நான் கோவில் யாத்திரை போகலாம்னு நினைக்கிறேன். அதுக்கு உங்க ரெண்டு பேரோட அனுமதி வேணும்.” என்றார் மகன் மருமகளை பார்த்து.

முத்தரசனோ ” நீங்க மன ஆறுதலுக்கு கோவிலுக்கு போறது நல்லதுதான் மா. ஆனா நான் பிசினஸ் விசயமா வெளிய போயிடுவேன் நீங்களும் வீட்டுல இல்லன்னா தாமரை பாவம் மா தனிச்சிடுவா வேந்தன் அறிவு நீங்க நான் யாரும் இல்லன்னா அவளும் எப்டி இருப்பா யோசிங்க.” என்றார் அவரின் அழகான அமைதியான வீடு தற்போது இருக்கும் நிலையை நினைத்து வருந்தியபடி தாயிடம் பேசினார்.

” அதுக்கு நான் ஒரு வழி வச்சிருக்கேன் அரசு.  என் மருமகளை நான் அப்டி தனிய விட்டுடுவேனா என்ன? குழலியோட மாமியார்கிட்ட பேசிட்டேன். சம்மந்தி நல்ல மாதிரித்தானே நம்ம வீட்டு நிலையை புரிஞ்சி தாராளமாக குழலியை அனுப்புறதா சொல்லிட்டாங்க. நம்ம வீட்டு பொண்ணும் தொட்டதுக்கும் அம்மா வீட்டுக்கு வந்து கண்ணை கசக்கிட்டு நிக்கிறவ இல்லையே மாமியார் மாமனாரை அவளோட குடும்பமா நடத்துறாள். அதாவது என் மருமகள் எப்டியோ அதே மாதிரி என் பேத்தியும் இருக்கிறா.  அதனால சம்மந்திக்கு நம்ம குழலியை அதிகமாக பிடிக்கும். அந்த வகையில அவளை நல்லா பார்த்துக்கிறாங்க. நான் கேட்ட உடனே எனக்கு இப்டி தங்கமான மருமகளை தந்ததுக்கு நான் உங்களுக்கு கடமைபட்டுயிருக்குறேன். குழலியை நாளைக்கே உங்க வீட்டு மாப்பிள்ளை கொண்டுவந்து விடுவான் சம்மந்தி நீங்க கவலை படாம உங்க கோவில் யாத்திரையை ஆரம்பிங்க  நானும் கடவுளை வேண்டிக்கிறேன்னு நம்ம சம்மந்தி சொன்னார் அரசு. அதனால தாமரை தனியா இருக்க தேவையில்ல குழலி,  குட்டி க்ருஷ் ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு தாராளமாக போதுமே பத்தாளுக்கு சமம். அதனால இப்ப நான் போகலாமா?.”  என கேட்டார் அனைத்தையும் அவரே முடிவெடுத்து முடித்தும் விட்டு போவதற்கு அனுமதி வேண்டி நிற்கிறார் மீனாட்சி.

அவர் இவ்வளவு  சொன்ன பின் தாமரை முத்தரசன் இருவரும் வேறு ஒன்றும் பேசாமல் சம்மதித்தனர். அடுத்த நாள் காலையில் குழலி வந்த பின் மனம் கேட்காமல் தாமரையை மட்டும் தனியாக அழைத்து அறிவை பார்க்க செல்வதாகவும்.  அவளை சமாதானப்படுத்தி அழைத்துவந்து மீண்டும் இந்த வீட்டை பழைய நிலைக்கு மாற்றுவதாகவும். அவளிடம் பொய் கூற விருப்பமில்லை எனவும் கூறிவிட்டு.  அவரின் நம்பிக்கையான ஓட்டுநரை அழைத்து மீனாட்சியம்மன் கோவில் சென்று இசையும் அறிவும் சேர்ந்து  சந்தோசமாக வாழவேண்டும். அவரின் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது அனைத்தும்  நடந்தபின் அவர் கோவில் யாத்திரை வருவதாகவும். தற்போது பொய் கூறிவிட்டு ஊட்டி செல்வதற்கும் அதனால் எவ்வித பாதகமும் இடம்பெற வேண்டாம் எனவும் மீனாட்சி தாயை மனம் உருகி வேண்டிக்கொண்டு.  சாமி பெயரில் அர்ச்சனை பண்ணிவிட்டு. அறிவிற்கு அழைத்து கூறாமல் ஊட்டிக்கு புறப்பட்டார் மீனாட்சி.

மீனாட்சி அவ்வாறு கூறியதும் தாமரை
” சரி அத்த நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் போயிட்டுவாங்க” என அனுப்பிவைத்தார்.

இதோ வந்தும் சேர்ந்து விட்டார். அறிவின் தற்போதைய மன நிலையில் அவரை கண்டதும் கட்டிக்கொண்டு அழுது கரைந்தாள். அவரது வயது முதிர்ச்சியின் சோர்வையும் மீறி அவளை மடி தாங்கிக்கொண்டார் மீனாட்சி.

 சிறிது நேரம் அழவிட்டவர் அவளுக்கு  தண்ணீர் கொடுத்து அசுவாசப்படுத்தினார். அதன் பின் தான் அறிவு சற்று தெளிந்து அவள் கருவுற்று இருப்பதாகவும் டாக்டர் சொன்னவற்றையும் கூறினாள்.

” இது தெரிஞ்சு நான் வீட்டுக்கு வந்ததும் முதல் உங்களுக்கு தான் பாட்டி சொல்ல அழைச்சேன். ஆனா உங்களுக்கு கால் போகல அதுதான் என்ன பண்ணுறதுனே தெரியாம இப்டி இருக்கிறேன். இந்த குழந்தை எனக்கு பிடிக்கல பாட்டி.” என அவரது தோள் சாய்ந்து அழுதாள்.

அறிவின் தலையை நிமிர்த்தி அவரை பார்க்க வைத்து கண்ணை துடைத்துவிட்டு ” நீ கவலை படாதம்மா எல்லாம் சரியாகிடும் நீ இசையை புரிஞ்சிப்ப அவனோட அன்பை தெரிஞ்சிப்ப அப்ப அவனோட வாழ உன் மனசு ஏங்கி தயாரா இருக்கும். அப்ப உங்க ரெண்டு பேரையும் இந்த குழந்தை தான் சேர்த்துவைக்கும். நான் வந்துட்டேன் தானே இனி நீ எப்பவும் சந்தோசமாக இருக்கணும். ” என அறிவின் அந்த ஆறுவிரல் கையை தடவியபடியே கூறானார் மீனாட்சி.

ஜானகிக்கு குழந்தை இனி பிறக்க வாய்ப்பில்லை என தெரிந்ததும். மிகுந்த மனவருத்தம் அடைந்தார். ஆனால் இதோ இருபத்து மூன்று நீண்ட வருடத்தின் பின் பேத்தியாக வளர்ந்து  வந்து அவரின் கண்ணெதிரே இருக்கும் அறிவை தற்போது  பேத்தி என உரிமை கொண்டாட முடியாத நிலையை நினைத்து மனம் நொந்தார் மீனாட்சி.

அறிவு அவளது பிள்ளைக்கு கூறியது போன்ற நிலையை அவளே அனுபவித்து இருக்கிறாள். பெத்த தாய் நடத்திய ஆசிரமத்திலேயே பத்தோடு ஒன்றாக அவரின் கண்ணெதிரே பதின்மூன்று வருடங்களாக வேற்று ஆள் பிள்ளை போல்தான் அறிவும் வளர்ந்திருக்கிறாள். தாயிற்கும் மகளை தெரியவில்லை மகளுக்கும் தாயை தெரியவில்லை. இது எல்லாம் என்றோ அவரின் பரம்பரை செய்த பாவத்தின் விளைவாக நினைத்தார் மீனாட்சி.

கூடிய சீக்கிரம்  அறிவின் மனக்காயத்தை ஆற்றி அறிவும் இசையையும் இணைந்தபின். தாயையும் மகளையும் இணைத்துவைக்கவேண்டும். அதுவரை இருவரும் காத்திருக்கட்டும் என நினைத்தார் மீனாட்சி.

அறிவோ ஜானகியையும் தற்போது வெறுத்தாள். அவருக்கும் தெரிந்தே தான் இசை அவளை கட்டாயத்திருமணம் பண்ணிக்கொண்டான். அவரும் இதற்கு துணையாக இருந்திருக்கிறார். அவர் வளர்த்தவர். அவளை பெற்ற தாயாக இருந்திருந்தால் இவ்வாறு தப்பிற்கு துணை போயிருக்கமாட்டார். என நினைத்து ஜானகியையும் வெறுத்தாள் அறிவு.

எவ்வாறு இது அனைத்தையும் கடந்து தாய் மகள் இருவரும் இணைவார்களோ?.

கொடிமங்களத்தில். இரவு முழுவதும் தமிழ் தூக்கம் இன்றி அந்த அறையில்  இருக்கும் அட்டாச் பாத்ரூமில் அதிக நேரத்தை கழித்தான். மலர் கொடுத்த பாலில் பேதி மாத்திரை கலந்திருந்தாள். அவள் சமைத்த உணவை பற்றி எதுவும்  கூறாமல் கல்லென இருந்து சாப்பிட்டு விட்டு சென்றதற்கு கொழுப்பு குறையட்டும் அதற்கு  இது தான் தண்டனை என  நினைத்து சிறுபிள்ளை தனமாக இவ்வாறு செய்தாள்.

தமிழும் பாலில் தெரிந்த வித்தியாசத்தை  நீலா மற்றும் ராமிற்கு தெரியாமல் இருப்பதற்காக அவனும் சகித்துக்கொண்டு குடித்துவிட்டான்.

அதன் பிரதிபலிப்பு இரவு அவனின் தூக்கம் கெட்டதே. தற்போது அவன் தன்னை சற்று திருத்திக்கொண்டான். மது அருந்துவதை குறைத்துக்கொண்டான். அதனால் இன் நிலையில் அவனுக்கு தூக்கம் அருகிலும் வரவில்லை. அடுத்த நாள் காலையில் நேரத்துடன் எழுந்து  குளித்துவிட்டு  மலர் மேசையில் வைத்த காபியை பயத்துடனே குடித்துவிட்டு அவளிடம் எதுவும் கூறாமல் மில்லிற்கு சென்றுவிட்டான்.

அவன் பயந்த படி இல்லாமல் காபி சுவையாக இருந்தது. அதை பசியால் ஒரு சொட்டும் விடாமல் குடித்துவிட்டு சென்றான்.

அவன் சென்ற சற்று நேரத்தில் ஜானும் அங்கு இசை சொன்னபடி உரிமை பத்திரம் தயாரித்து முத்தரசனின் கையெழுத்தும் வாங்கி அதை கோர்ட்டில் பதிவு செய்து கொண்டு இன்று எடுத்துவந்துவிட்டான்.

இங்கு தமிழும் கையெழுத்து போட்டதும் அந்த பத்திரம் மற்றும் மாரியின் சதிக்கான ஆதாரம் என அனைத்தையும் தாயார் படுத்தி எடுத்துக்கொண்டு கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் இடத்திற்கு தமிழ் ராமு ஜான் மூவரும் சென்றதும்  அங்கு போலீஸும் வந்தது. சரியான ஆதாரம் இருந்ததால் எவ்வித கேள்வியும் இன்றி மாரி மற்றும் அவனின் ஆட்களையும் கைது பண்ணி அழைத்துச்சென்றார்கள் போலீசார்.

அதன் பின் தமிழ்  அங்கு வேலை செய்யும் மற்றவர்களை அழைத்து அந்த பொருட்களை உரிய இடத்தில் வைக்கும் படியும் அதன் பின் எண்ணிக்கை கணக்கை நிர்வாகியிடம் கொடுக்குமாறும் கூறி அவர்களுடன் ராமுவையும் அனுப்பிவைத்தான்.

அதன் பின் ஜானும் அங்கிருந்து சென்றதும் தமிழ் வீட்டிற்கு சென்றான். அவன் கண்கள் சிவந்திருப்பதையும் முகம் சோர்ந்திருப்பதையும் பார்த்த மலர் சாப்பிடுவதற்கு தோசை சுட்டுக்கொடுத்தாள். இரவு முழுவதும் வயிற்றோடத்தினால் களைத்து இருந்தவன் பசியில் உடனே அவள் சுட்டு தர எத்தனை சாப்பிட்டான் என அவனுக்கோ சுட்டவளுக்கோ தெராயாத நிலை.

அவன் பசியில் உண்பதை பார்த்த மலர் அவளையே நொந்துகொண்டாள்.

இனி இவ்வாறு முட்டாள் தனம் பண்ணக்கூடாது என நினைத்தாள். அவளே மீண்டும் அவனை துன்பப்படவைக்கப்போவது தெரியாமல்.

அவனை பார்த்தவாறு நின்று                     ” கார்த்திகாவை ஹாஸ்டல் விடணும் ஒரு அஞ்சாயிரம் பணம் வேணும். நான் இதுவரை என் குடும்ப தேவைக்கு யார்கிட்டையும் கேட்டதே இல்ல. இப்ப நான் வேலையில இல்ல அதனால நான் பொறுப்புனு சொன்னா மட்டும் போதாது வீட்டுதேவையையும் பார்த்துக்கணும் நீதான் . இனி என்னால தொட்டது எல்லாத்துக்கும் வந்து பணம் தாங்கனு கேட்கமுடியாது.” என்றாள் மலர்.

அதற்கு தமிழ் எவ்வித பதிலும் சொல்லாமல் அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்.

மலருக்கும் கோபப்படத்தெரியும் என்று காட்டுவதற்கு அவளும் முதன் முறையாக அவனது அறைக்குள் சென்றாள். அங்கு தமிழ் கண்மூடி படுத்திருந்தான்.

மலர் அருகில் சென்று கோபத்தில் சத்தமிட்டாள். ” நான் பணம் கேட்கிறேன் அதுக்கு எந்த பதிலும் சொல்லாம போன என்ன அர்த்தம். தரமுடியுமா முடியாதா? நீ என்னை இப்டி சீர் கெட வைக்காம இருந்திருந்தா நான் என் அம்மாவையும் இழந்திருக்கமாட்டேன். இப்டி என் குடும்பத்தேவைக்கும் பணம் கேட்டு உன் முன்னாடி நிற்க மாட்டேன். எல்லாம் உன்னாலதான். நான் இப்டி ஆகிட்டேன் படுபாவி. எழும்புடா பாதகா.” என்று திட்டி அவனது மார்பில் கைகளால் குத்தினாள் மலர்.

ஆனால் அது தமிழுக்கு அவளின் மலர் போன்ற மென்மையான கையால் குத்தியது அந்த திடகாத்திரமான ஆறடி மனிதனுக்கு ஒத்தடம் கொடுத்தது போன்று இருந்தது. ஆனால் அவள் கூறிய வார்த்தை மனதை குத்திக்கிழித்தது.

” எனக்கு தலை வலிக்குது கொடி கொஞ்சம் தனிய விடு நானே பணம் தருவேன். இல்லனு எப்ப சொன்னேன்.” என்றான் வருந்திய குரலில் தமிழ்.

இளகிய மனம்கொண்ட மலருக்கு அவன் கூறிய தொனி கஷ்டமாகிப்போனது. ” ஸாரி இரு இதோ வாறேன்.” என்று சென்றுவிட்டு தலைவலி தையிலம் மற்றும் சுடுநீர் எடுத்துவந்தாள்.

எடுத்துவந்து இதமான சுடு நீரில் துணியை நனைத்து அவனின் நெற்றியை துடைத்துவிட்டு தையிலம் பூசிவிட்டு தலையை கோதியபடி அவனின் அருகில் மற்றொரு கையால் வயிற்றை பிடித்துக்கொண்டு சாய்ந்து இருந்தாள் மலர்கொடி.

தமிழோ அவன் பண்ணிய மாபெரும் தவறிற்கு அவள் பேசும்பொழு மனது காயப்பட்டாலும் இது தேவை என நினைத்தான். ஆனால் அவனுக்கு ஒரு கஷ்டம் என வந்ததும் அவள் நடந்துகொள்வது அவனின் மனதை குளிர்வித்தது.

தமிழ் ஒரு படி மேலே சென்று அவளை சற்று பெட்டின் நடுப்பகுதியில் இருக்கவைத்து அவளது மடியில் தலை சாய்த்தான்.

மலரை நிமிர்ந்து பார்த்து மனதில்            ” இவள் முள்ளா? மலரா? இல்லை முள்ளும் மலரும் இணைந்த ரோஜா வா? ” என நினைத்தான்.

சென்னையில் இருந்து கோவை சென்ற பேருந்து இடையில் விபத்திற்குள்ளாகியது. அதில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் ஸ்பாட்டிலேயே உயிர் இழந்தார்கள். என செய்தி வாசிக்கப்படது அதை தாமரையோ அறிவோ யாரும் பெரிதுபடுத்தவில்லை.

வழமையான நீயூஸ் என கடந்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் உறவு அதில் சிக்கி தன்னை மறந்த நிலையில் இருக்கிறது என தெரியும் போது இவர்களின் நிலை என்னவோ காலத்தின் கையில்.

Advertisement