Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் ஒன்று.

அழகிய காலை நேரம் விடிந்தும் விடியாத பொழுது.

சேவல் கூவி காகம் கரைந்து குயில் கூவி இனிய சத்தம் வைத்து ஆதவனின் வரவை தெரியப்படுத்திவிட்டு அதன் கடமையை முடித்த திருப்தியில் அதன் குஞ்சுகளுக்கு இரை தேடி செல்கின்றது.

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை கொடுமையானது அதிலும் அழகான பெண்ணாய் இருப்பது அனைத்திலும் மிகவும் கொடுமை..

பறவைகள் அதன் சத்தத்தை எழுப்பி விடியலை உணர்த்தும் முன்பே வளமை போன்று இன்றும் படுக்கையில் இருந்து எழுந்து அவளது அன்றாட கடமையை ஆரம்பித்துவிட்டாள்..

அவள் ஒரு புரியாத புதிர் சிரிப்பதும் இல்லை சோகத்தை வெளிப்படுத்தி அழுதும் அவளின் வீட்டினர் கூட யாரும் பார்த்ததில்லை..

பெண்களின் சராசரி உயரம் மெல்லிய உடல் வாகு அடர்ந்து நீண்ட கேசம் காந்த கண்ணழகி அவ்வூரிற்கு சற்றும் பொருந்தாத பால் வண்ண நிறம் இவை அனைத்தும் இருந்தும் அவளின் முகத்தில் பொழிவில்லை காரணம் அவளின் ஏழ்மை நிலை அவளின் பதினைந்தாவது வயதில் தந்தை மாரடைப்பினால் இறந்துபோனார்..

கணவர் இறந்த துக்கத்தை கூட நினைத்து வருந்தவும் நேரமின்றி அடுத்த நாளே அந்த தாய் மூன்று பெண்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் உடல் நலனை பாராமல் சித்தால் வேலை செய்து பெண்களின் வயிறு பசியில் வாடாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே அவரின் உடல் நிலை சீர்கெட்டு நான்கு வருடமாகின்றது உடல் பலவீனம் மற்றும் இருதயநோய் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு படுக்கையில் விழுந்துவிட்டார் சந்திரா…

அவர்களுக்காக அயராது உழைத்து பாடுபட்ட தாயை காப்பாற்றுவதற்கு அவளால் முடிந்த காரியமான அயலவரின் துணையுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்தாள் பெண். வைத்தியர்களும் இருதய நோய் சிகிச்சையை மேற்க்கொள்வதற்கு அவரின் உடல் நிலை தாங்காது என கூறி சத்திரசிகிச்சையை தாங்கும் அளவு உடலை தேற்றிய பின் அழைத்து வரும்படி கூறி சத்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டனர்…

சந்திரா சித்தால் வேலைக்கு சென்ற பின் தங்கைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவள் மாலதி அக்கா வீட்டிற்கு சென்றுவிடுவாள் அங்கு அவர் தைத்துவைத்திருக்கும் பிளவ்ஸ், சர்ட் போன்ற உடைகளுக்கு பட்டன் , ஊக் என்பதை தைத்துக்கொடுப்பாள் அதுபோன்று தையலிலும் ஈடுபாடு வரவும் அவரிடமே கேட்டு மெதுவாக கையால் தைத்துபழகி என அவளாகவே ஒரு ஆடையை வெட்டி தைக்கும் அளவிற்கு பழகிவிட்டாள். அதுவே தற்போதைய அவளின் குடும்ப வருமானத்திற்கு கைகொடுத்தது .

அவளும் தாயை தேற்றி நடக்கவைத்துவிடலாம் என நம்பி தோழி ராணியுடன் சேர்ந்து ஆடை தொழாற்சாலையில் வேலைக்குசென்று வருகின்றாள்..

ஆனால் அதற்கு அவளின் மாதவருமானம் அவள் நினைத்த அளவிற்கு போதவில்லை அதனால் மாலை பணி நேரம் முடிந்ததும் ஆறு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை அவளின் வீட்டிற்கு அருகிலிருக்கும் மாலதி அக்காவின் வீட்டில் அவர் வெட்டி வைத்திருக்கும் துணிகளை தைத்துக்கொடுப்பாள் அவரும் தினமும் அதற்கு பணம் கொடுத்து விடுவார்…

தாயிற்கு மருந்து பால்மா வீட்டுச்செலவு தங்கைகளின் படிப்பு ஏனைய செலவு என அனைத்தையும் ஈடுசெய்வதற்கு மிகவும் தினறுகின்றாள்..

முதல் தங்கை கார்த்திகா பன்னிரண்டு வயது ஊராட்சி பள்ளியில் ஏழாவது படிக்கின்றாள். இரண்டாவது தங்கை நீலா வயது எட்டு அதே பள்ளியில் மூன்றாவது படிக்கின்றாள்..

தாய் தங்கைகளுக்கு வேண்டிய உணவு உடை ஏனையவைகள் அனைத்தும் அவளால் முடிந்தளவு செய்து கொடுப்பாள் ஆனால் அவளுக்கென்று இதுவரை எதுவும் செய்துகொண்டதில்லை..

அவள் பதினெட்டு வயதில் அடியெடுத்து வைத்ததும் மாலதி அக்காதான் மூன்று சேலை வாங்கிக்கொடுத்தார். பக்கத்துவீட்டு மரகதம் பாட்டி அவரின் பெண்ணின் நினைவு நாளில் உடை எடுத்து கொடுப்பார். அதே போன்று இந்த வருடமும் இரண்டு சேலை எடுத்துக்கொடுத்தார் இவை ஐந்தும்தான் அவளின் தற்போதைய உடை அவளின் நண்பி ராணி தான் அவளின் பிறந்தநாளன்று அவள் தலைமுடியை கூட்டி கட்டிவைத்திருக்கும் சாயம் போனா ரிப்பனிற்கு விடுதலையளித்து ஹேயார் பின் கிளிப் பேண்ட் செருப்பு என அவளிடம் இல்லாத பொருட்களை பரிசளித்து அவளை அணிந்து வரும்படி செய்தாள் ராணி..

இவள்தான் மலர்க்கொடி அவள் அணிந்திருக்கும் சேலையிலிருந்து செருப்பு வரை அயலவர்கள் பரிசளித்தவைதான் அவளின் ஏழ்மை நிலையையும் பத்தொன்பது வயதிலேயே வாழ்கையோடு தினமும் போராடும் அவளிற்கு அவர்களால் முடிந்த உதவி செய்து அவளை அரவணைத்துவந்தனர்..

தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டு வேலை செய்து இரண்டு வேலை உணவும் தயார் பண்ணிவைத்துவிட்டு தாயை துடைத்து அவருக்கு பண்ணும் வேலைகளை பண்ணிமுடித்து தங்கைகளை எழுப்பி பாடசாலைக்கு தயார் பண்ணி உணவு கொடுத்து அனுப்பிவைத்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்து தோள்பையில் வைத்துவிட்டு அவளின் ஐந்து சேலையில் ஒன்றை உடுத்திக்கொண்டு தாயிடம் கூறிவிட்டு மரகதம் பாட்டியிடம் தாயை பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு ராணியுடன் மதுரையிலிருக்கும் பெண்கள் ஆடையகம் என்னும் ஆடை தொழிற்சாலைக்கு செல்வதற்கு கொடிமங்கலம் என்னும் அவளின் கிராமத்திலிருந்து பேருந்தில் பெண்கள் இருவரும் பேசியபடி செல்கின்றனர்….

” ஏன்டி மலர் என்கூடயாவது கொஞ்சம் மனசுவிட்டு பேசி சிரியேன்டி பாதகி இப்புடியே எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சி வச்சி மனச குப்பைதொட்டி மாதிரி வச்சுக்காதடி அதுவும் தாங்குறது வரைதான் தாங்கும் எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும் அது நம்ம மனசையும் உடலையும் பாதிக்காத மாதிரி பார்த்துகிட்டாதான் நீ வாழும் வரை ஆரோக்கியமாக வாழமுடியும்டி மலர் நீ மட்டும் தானே என் ப்ரெண்டு நீ நல்லா இருந்தாதானே நானும் நல்லாயிருக்கமுடியும். உங்க அம்மா அவங்களை பார்த்துக்காம இருந்ததனாலதான் இப்போ இப்புடி இருகிறாங்க அதே மாதிரி நீயும் உன்னை பத்தி அக்கறையெடுக்காம இருந்தா உன் எதிர்காலம் உன் தங்கைகளோட வாழ்க்கைனு உனக்கு பொறுப்பு இன்னும் அதிகமாத்தான் டி இருக்குது நீ தான் புரிஞ்சி கிடைச்சிருக்கிற ஒரே வாழ்க்கையை காசுகுடுத்து வாங்க தேவையில்லாத சிரிப்பு பேச்சு அழுகை கோபம் இப்புடி உன் உணர்வுகளை சரியான நேரத்துல சரியான உணர்வை வெளிப்படுத்தி ஒரு சராசரி பொண்ணா நடந்துக்கடி மலர்.” என்று அவளது நண்பியின் நலன் கருதி அவளால் முயன்றளவு போதனை பண்ணினால் ராணி ஆனால் அவையனைத்தும் கடலில் கலந்த மழைநீர் போன்று பயனற்றதாகிவிட்டது…

” அடி போடி கூறுகெட்டவளே நானும் இவ்வளவு கத்துறனே ஒரு ம் கொட்டுவோம் இல்லன்னா தலையாவது ஆட்டுவோம் ம்கூம் எந்த வித பிரதிபலிப்பும் இல்லாம நீ இப்புடி செவுடி மாதிரியே இரு உன்கிட்ட பேசி பயனில்ல நீ இப்புடி இருக்குறதை சந்திராம்மாகிட்ட சொல்லுறேன் பாரு அவங்க இனி உன்கிட்ட பேசிப்பாங்க அப்போ அவங்கிட்டயும் இப்புடியே ஊமையாவும் செவிடு மாதிரியும் இருக்கிறியா?.இல்ல வாயத்தொறந்து பேசி உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துறியான்னு நானும் பார்கிறேன்டி அப்புடி பண்ணலன்னா நான் கொடிமங்கல ராணி இல்லடி மலரு பார்த்துக்க நீ இப்புடியே கல்லு மாதிரி இருக்கிறத என்னால கண்ணெடுத்து பார்க்கமுடியலடி மனசெல்லாம் பதருதுடி உனக்கு எதுன்னா ஆகிடுமோன்னு பயமா இருக்குதுடி மலர்.” என்று ஒரு உற்ற தோழியாக அவளின் நலனின் மேல் அக்கறை கொண்டு பேசினாள் ராணி..

ராணி சொன்னது போன்று எவ்வித அசைவோ ரியாக்சனோ எதுவும் முகத்தில் காட்டாமல் ராணி கூறியது அனைத்தையும் கேட்டுவிட்டு சாவகாசமாக ராணியின் பக்கம் திரும்பி யாருடைய கவனத்தையும் கவராதவண்ணம் மெதுவான சத்தத்தில் ” இங்க பாருடி ராணி நமக்கு நெனவு தெரிஞ்ச நாளையில இருந்து என் வாழ்க்கையில நடந்த எதுவும் உனக்கு தெரியாதது ஒண்ணுமில்ல என் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ பழகினதாலதான்டி என்னால இவ்வளவையும் தாங்கி எதிர்கொள்ள முடியுது எனக்கும் ஆசைகள் இல்லாம இல்ல இருக்கு ஆனா அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தா என் குடும்பம் என்ன கதியாகும் டி ராணி நல்லா யோசித்துப்பாரு அம்மா படுக்கையில விழுந்து வருசம் இரண்டாகிடுச்சி அம்மா இருக்கிற தைரியத்துலதான் நான் தங்கச்சிகள வீட்டுல விட்டுட்டு நான் இவ்வளவு தொலைவு வேலைக்கு வாறேன்டி அப்புடி இருக்கும் போது நீ அம்மாகிட்ட ஏதாவது சொல்லி அவங்களுக்கு எதுன்னா அகிடுச்சின்னா நாங்க அனாதையாகிடுவோம்டி அதுக்குப்பிறகு அம்மாகிட்ட சொல்லுறதும் சொல்லாம விடுறதும் உன் விருப்பம்டி ராணி.” என்று அவளது மனதிலிருப்பதை மறைத்து நண்பியின் கேள்விக்கு பதிலளித்தாள் மலர்க்கொடி..

தோழிகளின் உரையாடலில் நேரம் போனதும் பயண களைப்பு தெரியாமல் இருவரும் வேலை பண்ணும் இடத்திற்கு செ‌ன்றன‌ர்.

அவர்களிருவரும் பேருந்திலிருந்து இறங்கி ஆடைத் தொழிற்சாலைக்குள் செல்லுமுன் அவர்களது தோள் பை மற்றும் அவர்களையும் பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்று சோதனை செய்துகொண்டு அதன்பின் உள்ளே சென்றனர்.

உள்ளே சென்றதும் வரவுபதிவேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு அவர்களுக்கான தையல் மெசினின் முன் அமர்ந்தனர்..

“என்ன அழகு எத்தனை அழகு கோடிநெஞ்சை கொத்திய அழகு என்றெந்தன் கை சேருமோ?. ” என்று பாடிய படியே துணி கட்டிங் டீம் மேனஞர் முகுந்தன் இன்றும் மலரின் முன் ஆஜரானான்..

“ஹாய் ப்ளவர் பேபி குட் மார்னிங் டா செல்லம் ஒரே சாரி கட்டினாலும் டெய்லி என் கண்ணுக்கு டிபரன்டா தெரிவடி பேபி நீ சோ க்யூட்.” என்றான். அவனோ தினமும் அவனது வரவை அவளிடம் பதிவு செய்கின்றான் ஆனால் அவளோ அவனை திரும்பியும் பாராமல் அவளது பிறப்பின் பயனே பணி செய்வதே என்று கண்ணும் கருத்துமாக ஒரு பேபி ப்ராக் தைத்துக்கொண்டிருக்கின்றாள் மலர்..

” என்ன முகுந் சார் இன்னைக்கும் பல்ப்பா அவளை போய் இப்புடி ஜொல்லுறிங்களே சார் அவ அதுக்கெல்லாம் சரிபட மாட்டா ஜடம் உங்க அழகுக்கும் பதவிக்கும் பொண்ணுங்க நான் நீன்னு போட்டிபோடுறாளுக அத விட்டு இவ பின்னாடி போறிங்களே சார் வேஸ்ட் பெலோ”

” டேய் வசந் இயற்கை காத்துக்கும் ஏசிக்கும் டிபரன்ட் இருக்குல்ல அது மாதிரிதான்டா இவளும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்குதுடா அதை ஆண்டு அனுபவிச்சிட்டு பழம் புளிச்சா கைவிட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்டா அதவிட்டு நான் அவளை காதலிச்சி கல்யாணம் பண்ணி குடும்பமா பண்ணப்போறேன். அடப்போடா என் கேரக்டரயே புரிஞ்சிக்கலயேடா வசந்.” என்றான் நெஞ்சில் வஞ்சகத்தோடு முகுந்தன்.

” நீங்க நினைக்கிற மாதிரி அந்த கல்லு லேசுல அசையாது சார் ரொம்ப கஷ்டம் தான் சார் உங்க பொழப்பு.” என்று ஏளனம் பேசினான் வசந் என்கின்ற கட்டிங் டீம் லீடர் வசந்தரூபன்.

” டேய் வசந் நல்லா கேட்டுக்கோ அவளை நான் என் வலையில சிக்க வைக்கல நான் ஆம்பள இல்லடா நீயே பாரு இனி என்ன நடக்கப்போகுதுன்னு.” என்று சவாலாக சொல்லிச்சென்றான் முகுந்தன்.

மதிய உணவு நேரம்.

அதே மதுரையில் மீனாட்சி இல்லத்தில் மதிய உணவு உண்பதற்காக நால்வர் உணவு மேசையின் முன் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களின் முன் வேலையாட்களினால் வைக்கப்பட்டிருந்த வகை வகையான உணவு பதார்த்தங்களே அவர்களின் வசதி வாய்ப்பை காண்பித்தது.

அதில் மூவர் அவனிடம் யார் பேசுவது அவனின் மூட் தற்போது எப்படி இருக்கின்றது என்கின்ற தவிப்போடும் பதட்டத்தோடும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி கண்களினால் ஜாடை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவனோ அவர்களின் பதட்ட நிலையை கடைகண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டு அதற்கும் அவனுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று உணவை ரசித்து ருசித்து உணவருந்திக்கொண்டிருக்கின்றான்..

ஒருவழியாக அவனிடம் பேசும் பொறுப்பை மீனாட்சியம்மாவே
கையிலெடுத்தார். ” டேய் கல்ல படுவா நீ கடைகண்ணால பார்த்து சிரிச்சதை நானும் பார்த்துட்டுதான்டா இருக்கிறேன் உன் அப்பனை பெத்த எனக்கே நீ உன்னோட கல்லத்தனத்தை மறைக்கிறியா?. நாங்க மூணுபேரும் உன்கிட்ட ஒரு விசயம் பேசணும்னு நினைத்து தவிக்கிறோம் அதை பார்த்து ரசிச்சி சிரிக்கிறியா?. நீ உன்னை என்ன பண்ணலாம்?. ” என்றார் செல்ல கோபத்துடன்.

கைகடிகாரத்தை பார்த்தபடி ” பாட்டிமா இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல நான் நம்ம கொடிமங்கலம் ரைஸ் மில்லுக்கு விசிட் போகணும் நான் ரெடியாகணும் பாட்டி எது பேசுறதா இருந்தாலும் நைட் வந்ததும் பேசலாம் இப்போ போயிட்டுவாறேன்.” என்று பொதுவாக மூவரிடமும் கூறிவிட்டு விட்டால் போதுமென்று அவனது ஆடிகாரில் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் மூவரும் கவலை தோய்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

மாலை ஐந்து முப்பது ஆடை தொழிற்சாலையில் வேலை முடிந்ததும் பஸ்ஸிற்காக காத்திருந்தனர் தோழியர்கள் இருவரும்..

அவர்களை அதிக நேரம் காக்கவைக்காமல் பஸ்ஸும் வந்தது.

இறங்கி சற்று உள்ளே நடந்துதான் அவர்களின் ஊருக்குள் செல்லவேண்டும் எதுவும் பேசினாலும் மலர் பதிலேதும் பேசமாட்டாள் என்று தெரிந்தபடியால் ராணி இயற்கை அழகை வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்.

சற்று வேகமாக வந்த கார் ஒன்று மலரின் மீது சேற்றை வாறி அடித்துவிட்டு சென்றது. ஒரு ஏழை பெண்ணின் அன்றைய பகுதிநேர வேலை அவனால் தடைபட்டதை பற்றி எவ்வித கவலையும் இன்றி ஆடிக்காரில் ஏசியில் உல்லாசமாக செல்கின்றான்.

” ஐயோ என்னடி மலர் இப்புடி பண்ணிட்டு போறானே படுபாவி இதோட எப்புடி நீ மாலதி அக்காவீட்டுக்கு வேலைக்கு போகமுடியும்.” என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன்.

” சரி விடுடி ராணி அவங்களுக்கு என்ன அவசரமோ யாராவது தெரிஞ்சே இப்புடி பண்ணுவாங்களா?. என்ன வீட்டுக்கு போய் பழைய தாவணிபாவடை இன்னும் வச்சிருக்கேன் குளிசிட்டு அதை கட்டிட்டு போவேன்டி என்ன அறைமணிநேரம் தாமதமாகும் ஐம்பது ரூபாய் இல்லாமல் போகும் கோவில் உண்டியல்ல போட்டதா நினைச்சிகிறேன் அவங்களை திட்டாதடி பாவம் விடுடி.” என்று அவளின் இன் நிலையிலும் மனித குணத்தை மீறாமல் இருக்கின்றாள் பாவை.

” என்ன விசித்திரமான பொண்ணோ போடி நீ உன்னை புரிஞ்சிக்கவே முடியல என்னால.” என்று சலித்துக்கொண்டாள் உற்றதோழி.

அவள் சொன்னது போன்றே குளித்து தாவணி அணிந்து தாயிடம் சென்று அவரை கவனித்துவிட்டு தங்கைகளை படிக்க சொல்லிவிட்டு அவளின் பணிக்கு சென்றாள்.

” வாம்மா மலர் என்ன கோலம் இது தாவணி கிழிஞ்சிருக்கே இருவாறேன்.” என்று வீட்டின் உள்ளே சென்றார்.

” இந்தா வாங்கிக்கம்மா.” என்று அவரின் மற்றுமொரு புது சேலையை கொடுத்தார்.

” இல்லக்கா எனக்கு வேணாம் நீங்க எனக்கு பண்ணுற உதவியே போதும்க்கா இன்னும் என்னை கடனாளியாக்காதிங்க வேண்டாம் இன்னைக்கு மட்டும் தானே இரவு நேரம் இது போதும்.” என்று விட்டு அவர் மூட்டு வலியால் தைக்க கஷ்டமான உடைகளை வெட்டிவைப்பார் அவற்றைத்தான் மலர் தைத்துக்கொடுப்பாள்.

அதே போன்றுதான் இன்றும் தைத்துக்கொடுத்துவிட்டு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்தாள்.

வந்ததும் தங்கைகளுக்கு உணவு கொடுத்து தாயிற்கு உணவு கொடுத்து அவளும் மீதமிருந்ததை உண்டுவிட்டு அவளது அன்றைய நாளிற்கான ஓய்விற்கு சென்றாள்.

பத்தொன்பது வயதில் அவளின் வாழ்வை நினைத்து பார்த்தபடியே சோர்வினால் கண்ணயர்ந்துவிட்டால்.

அவளிற்கான சோதனை காலம் இன்னும் அதிகமாகப்போவதை பேதை பெண் அறியாமல் அயர்ந்து உறங்குகின்றாள் மலர்க்கொடி.

Advertisement