Advertisement

அத்தியாயம் 27

காலை விமலா பேசி விட்டு செல்லும் போது அவளை நிறுத்தி கவி அவளிடம், நீ நினைப்பது தவறு. காதலுக்கு பணம் ஏதும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும். யுவிக்கும் இப்பொழுது அன்பு தான் தேவைப்படுகிறது. என்ன தான் அவன் நல்லவாறு நடந்து கொண்டாலும்,

அவனுக்கு துன்பம் என்றால் யாராவது அருகே இருக்க வேண்டும். இல்லையெனில் அவன் தவறான பாதையை தேர்ந்தெடுத்து விடுவான்.

நீ கூறியது போல் செய்து விடாதே! என்று கூறி இருப்பாள்.

அவள் கிளம்பிய பின் யுவியை கவி பார்த்திருப்பாள். அவனிடம் உன்னுடைய காதலை சொல்ல தாமதமாக்கி விடாதே! சீக்கிரம் சொல்லி விடு அவள் செல்வதற்குள்.

அவள் எங்கே செல்ல போகிறாள்? கேட்க,நம் வீட்டிலே எத்தனை நாட்கள் இருப்பாள் வேலைக்காரியாக.

அவளை வேலைக்காரி என்று கூறாதே!

எப்படி அவளை கூறுவது? சொல்லுடா. நீ உன் காதலை கூறினால் மட்டும் போதும். அவளை யாரும் ஏதும் கூற முடியாது. உனக்கே தெரியும் அவளுக்கு உன் மீது காதல் இருப்பது. காதலிப்பவர் வீட்டில் வேலைக்காரியாக இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அவள் பாவம்டா….இதுவரை யாரும் அவளை அதிகமாக பேசியதில்லை. பேசாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை என்று கூறி இருப்பாள்.

ராஜாவும், கவியும் பை காண்பித்து விட்டு கிளம்பினர். யுவியும் விமலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, வருணும் நிலாவும் வந்தனர்.

வருணை பார்த்தவுடன், பைத்தியம் என்னடா, இப்படி டென்சன் ஆக்கி விட்டாயே என்று கையை ஓங்க, நிலா விமலாவை நிறுத்தி அவனது கையை பிடித்துக் கொண்டு, அவனை அடிக்காதே !என்று கூற

இரண்டு பேரும்…இரண்டு பேரும்…..என்று விமலா திக்கிக் கொண்டிருக்க, வருண் நிலா கன்னத்தில் முத்தமிட,மூவரும் கட்டிக் கொண்டு குதித்தனர். அவள் மகிழ்ச்சியாக சிரிப்பதை முதல் முறை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் யுவி.

அவளது காதலை புரிந்து கொள்ள, இத்தனை வருடங்களா? வருணை திட்டி விட்டு, இருவருக்கும் வாழ்த்துக்கள் விமலா கூற,

எனக்கு வேலையும் கிடைத்து விட்டது.கௌதம் அப்பா தான் உதவினார் என்று மகிழ்ச்சியாக வருண் கூற, நிலா அவனை கிள்ளினாள்.

விமலா வருத்தமானாள்.

நான் யுவி வீட்டில் தான் வேலை செய்கிறேன் கூற, இருவரும் அவனை பார்த்தனர். பின் அவளை தனியே அழைத்து வந்து. இது சரிவராது, உன் காதல் அவர்களுக்கு தெரிந்தால் என்னவாகும்?

அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்ச நாட்கள் தான். ஒரு மாதம் தான். பின் எனக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் நம்பிக்கையுடன் பேசி விட்டு,

அவர்களது வீட்டில் பத்து மணிக்கே வேலை முடிந்து விடும். இரவு ஏதாவது வேலை கிடைக்குமா? ஏற்பாடு செய்து தருகிறாயா?

முதலில் நீ தனியாக இருந்தாய்? வேலை பார்த்தாய்? யுவி வீட்டில் வேலை செய்ய போகிறாய்? அவர்களுக்கு இரவில் வேறு இடத்தில் வேலை பார்ப்பது தெரிந்தால், தவறாக பேசுவார்களே!

அதற்காக அம்மாவை விட சொல்கிறாயா? என்னால் முடியாது. நானே எவ்வளவு கஷ்டப்பட்டு அம்மாவை உயிரோடு இருக்க வைத்திருக்கிறேன் என்று கூறினாள்.

இப்பொழுது நீ என்ன கூறினாய்? என்று வருண் கேட்க,

என்னடி பேசுற? நீ அம்மாவை உயிரோடு இருக்க வைத்தாயா? நிலா கேட்டாள்.

அவள் வேகமாக அங்கிருந்து செல்ல முயல வருண் அவளது கையை இறுக்கமாக பற்றி என்ன கூறினாய்? தெளிவாக கூறு என்று சத்தமிட, அருகிலிருந்தவர்கள் அவர்களை பார்த்தனர்.

வருண் கத்தாதே! என்று நிலா அவனை அமைதியாக்கினாள். யுவியும் அங்கே வர, விமலா அழ ஆரம்பித்தாள். ஆரம்பத்திலே எனக்கு சந்தேகம் இருந்தது. சொல்கிறாயா? இல்லையா?

அவள் யுவியை பார்த்தாள். அவனும் இங்கேயே இருக்கட்டும். நீ கூறு….வருண் கூற, அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.

எனக்கும் தெரியும். நீ எதையும் மறைக்காமல் கூறு என்று யுவி சொல்ல, உனக்கு தெரியுமா? என்று வருணை பார்த்தாள். அவளை மூவரும் தனியே அழைத்து வந்தனர்.

என்னுடைய அம்மாவை சரி செய்ய புது முறைகள் உள்ளது. அதை கையாண்டாலே அனைத்தும் சரியாகி என் அம்மா கிடைத்து விடுவார்கள் என்றும் அதற்கு நிறைய செலவாகும் என்றும் கூறினார்கள். ஆனால் இது வெளியே தெரிந்தால் அதற்கான மருந்துகள் கிடைக்காது என்று கூறியதால் தான், நான் அதை பற்றி ஏதும் கூறவில்லை சொன்னவுடன் அவள் கன்னத்தில் அறை விழுந்தது. யுவி அடித்து விட்டான் விமலாவை.

நீ என்ன முட்டாளா? எதை பற்றியும் உறுதியாக தெரியாமல் அம்மாவை அவர்களிடம் விட்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

அம்மா முன் இருந்ததற்கு இப்பொழுது பரவாயில்லை வெகுளியாக அவள் கூறினாள்.

உன்னை என்ன செய்வது? இறந்தவர்களை கூட உயிரோட இருப்பவர் போல் காட்ட முடியும். உன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் பணத்திற்காக….வருண் கூற,

என்னுடைய அம்மாவிற்கு ஏதும் இல்லை என்று அழுது கொண்டே வருணை அடித்தாள். மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க,

யுவி வருணை தனியே அழைத்து வந்து மருத்துவமனை, சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பற்றி விசாரி என்று அவனையும் நிலாவையும் அனுப்பி விட்டு, விமலாவிடம் வந்து நாங்கள் தான் தவறாக புரிந்து கொண்டோம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் மருத்துவரிடம் பேசினேன் என்று சமாதானப்படுத்தி, நீ என்னுடைய வீட்டிற்கு தானே வரணும். நானே விட்டு விடுகிறேன் என்று அவளை அழைத்து சென்றான். அவளும் சமாதானமாகி வீட்டிற்கு சென்று வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவன் நேராக சென்று பாட்டியிடம் கூற, இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். ஏற்கனவே வருணும், நிலாவும்  மருத்துவமனை வந்து விமலாவின் அம்மாவை பார்த்தனர். நன்றாக இருப்பது போல் இருந்தார். யாரோ வரும் சத்தம் கேட்கவே, மறைந்து கொண்டனர் இருவரும்.

இந்த அம்மா பிழைக்க வாய்ப்பே இல்லை. இரண்டு நாட்களே அதிகம் என்று பேசிக் கொண்டிருந்தனர். இதை கேட்டு, நிலா கண்கலங்கி அழ, வருண் அவளது வாயை மூட, அவர்கள் சத்தம் இல்லாமல் இருக்கவே, வருணும் நிலாவும் வெளியே வந்தனர். ஆனால் போனவர்கள் திரும்பி வந்ததில் இவர்களை பார்த்து விட்டனர்.

வருண் நிலாவின் கையை பிடித்து ஓட ஆரம்பித்தான். சரியாக எதிரே யுவியும் பாட்டியும் வந்தனர்.அவர்களை பார்த்தவுடன், பிடிக்க வந்தவர்கள் மருத்துவரிடம் சொல்ல,

பாட்டியிடம் அவர்கள் பேசியதை கூறினார்கள்.பாட்டி வேரொறு மருத்துவமனைக்கு அம்மாவை மாற்றுவது பற்றி பேச,

மருத்துவமனையின் முதலாளி அங்கே வந்து பாட்டியை அழைத்து செல்ல, மூவரும் உடன் சென்றனர். பாட்டி அவர்களிடம் உண்மையை கூறி விடுங்கள் இல்லையென்றால் பத்திரிக்கையாளர்களிடம் நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூற, வருண் வீடியோ எடுத்தான் அவர்களுக்கு தெரியாமலே.

அவர்கள் இரண்டாவது மாரடைப்பிலே இறந்து போக வேண்டியது. அந்த பொண்ணு ரொம்ப அழுதாள். பணம் வேண்டுமென்றால் கூட வாங்கி கொள்ளுங்கள் என்றாள். அவள் பணம் தந்து தான் , அவளுக்கு தெரிந்து தான் அனைத்தும் செய்தோம்.

பொய் கூறாதீர்கள்! புதிய முறைகள் என்று அவளை ஏமாற்றி இருக்கிறீர்கள்? என்று விமலா பேசிய வீடியோவை போட்டுக் காண்பிக்க, அவர் அனைத்தையும் ஒத்துக் கொண்டார். தடை செய்யப்பட்ட மருந்தின் மூலம் தான் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருந்தார்.

அந்த வீடியோவை பத்திரமாக அவனே வைத்துக் கொண்டான்.  முதலில் சரியான சிகிச்சையை ஆரம்பிங்கள் என்று பாட்டி கூற, அவர்களோ அவர் இறப்பது நிச்சயம் தான் என்று கூறினார்கள். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.

முயற்சி செய்யுங்கள். பார்ப்போம் என்றனர்.வருண் ரோஜாவை அங்கே வரவழைத்து கூற, அவள் நிலாவின் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். பின் பாட்டி, ரோஜாவை பற்றி வருணிடம் கேட்டார். அவள் பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று….கூறினான்.

யுவியிடம் நீ சென்று விமலாவை அழைத்து வா என்று பாட்டி கூற, தயங்கினான் யுவி. நான் அவளுக்கு புரிய வைக்கிறேன் என்றவுடன் வீட்டிற்கு சென்று, வா என்னுடன் என்று கூப்பிட்டான்.

நானே வீட்டிற்கு சென்று விடுவேன் அவள் கூற, இந்த நேரத்தில் அவளை எங்கே அழைக்கிறாய்? அம்மா கேட்க, பாட்டியிடம் என்றான். அவர்கள் எங்கே சென்றார்கள்? நான் வந்து கூறுகிறேன் என்று கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை இழுத்து வண்டியில் உட்கார சொல்லி, மருத்துவமனை வந்தனர்.

அங்கே வந்தவுடன், என்ன நடக்கிறது? என்று கத்தினாள். அமைதியாக வா.

பாட்டி இங்கேயா இருக்கிறார்கள்? முதலில் கூறு என்று அவள் கத்திக் கொண்டிருக்க, வாயை மூடு என்று ஒரு சத்தம் அவன் கொடுக்க,

எதுவும் பேசாமல் பயந்து கொண்டே வந்தாள். விமலாவை பார்த்து ரோஜா அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.

 வருண் அமைதியாக அந்த வீடியோவை விமலாவிடம் காட்டினான். அவள் கோபமாக மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டு கத்தவே, பாட்டி அவளை தடுத்து, உன் மீதும் தான் தவறுள்ளது என்று கூற,

அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

இல்லை நீ தான் ஏமாந்து இருக்கிறாய்? ஏமாந்த உன் மீது தான் தவறு. கொஞ்சம் யோசித்து பார். பணம் என்றவுடன் உன்னை ஏமாற்றினார்கள். பணத்திற்கு ஆசை படாத ஆளில்லை. உன்னால் உன் அம்மாவும் எவ்வளவு போராடி இருப்பார்கள். அன்றே இறந்திருந்தால் நிம்மதியாக உயிர் சென்றிருக்கும். இத்தனை நாட்களாக காப்பாற்றுகிறேன் என்று அவர்களை போராட வைத்து காயப்படுத்தி இருக்கிறாய்.

நாம் மனிதர்கள் தான் கடவுள் அல்ல. உயிர் துளிர் விடுவதும், அழிவதும் கடவுள் செயல். அதை யாராலும் மாற்ற முடியாது. அதை மாற்ற முயன்று நீயும் காயப்பட்டு, அம்மாவையும் காயப்படுத்தி விட்டாய். ஏற்றுக் கொள்ள பழகிக் கொள் என்று அறிவுரை கூறினார் பாட்டி. அவள் பயங்கரமாக அழ ஆரம்பித்தாள்.அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ரோஜாவும் அழுதாள்.

நிலாவும் பாட்டியும் அவர்களை சமாளிக்க, மருத்துவர்கள் வெளியே வந்து, அவர் உயிர் பிரிந்தது என்றனர். ரோஜா ஓடி வந்து அவளது அம்மாவை பிடித்துக் கொண்டு அழ, விமலா அழுவதை நிறுத்தி விட்டு அப்படியே உட்கார்ந்தாள்.

அவரது உடலை, அவர்களது வீட்டிற்கு எடுத்து வந்தனர். பாட்டி அவரது வீட்டில் உள்ளவரிடம் கூற, வருண் அம்மா, அப்பா. நிலாவின் அம்மா, அப்பா. யுவியின் அம்மா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா அனைவரும் வந்தனர். நிலாவும், வருணும் விமலாவை பிடித்து உலுக்கி அழு..அழு.. என்று கத்தினார்கள். அவள் நிலையை பார்க்க முடியாமல் யுவி வெளியே சென்றான்.

யுவியின் பெரியப்பா தான் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தார். அவள் அழவே இல்லை. கௌதம் வந்தான். பின் அவளது அம்மாவின் உடல் அகற்றப்பட்டது. அனைத்து சடங்கையும் விமலா தான் செய்தாள் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல். அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ஒவ்வொருவராக கிளம்பினர். கடைசியில் பாட்டி, அவர்களை விட்டு செல்ல மனமில்லாமல் பார்த்துக் கொண்டே காரில் ஏற, யுவி அங்கேயே நின்று கொண்டிருந்தான். பாட்டி அவனை கூப்பிட, இருங்கள் வருகிறேன் என்று கூறி விட்டு உள்ளே வந்தான். விமலாவை பார்த்து கவனமாக இருங்கள். எதுவும் வேண்டுமென்றால் போன் போடுங்கள் என்று கூறி விட்டு வெளியே செல்ல மனமில்லாமல் நின்றான். அவன் விமலாவையே பார்ப்பதை ரோஜா கவனித்தாள்.

நிலாவிற்கு போன் செய்து இருவரையும் இன்று உங்கள் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறாயா? யுவி கேட்பதை பார்த்து விமலா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

எங்களுக்கு ஒன்றுமில்லை. நீ கிளம்பு என்று கூறவே, அவளை பார்த்து விட்டு கிளம்பினான் யுவி. மணி இரண்டை தாண்டியது. அழுது கொண்டே தூங்கிய ரோஜா எழுந்தாள். பக்கத்தில் விமலா இல்லை. வீட்டினுள் தேடினாள். அழுது கொண்டே வருணிற்கு போன் செய்தாள். அவன் குடும்பம் முழுவதும் அவளை தேட, அவள் எங்கேயும் இல்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கவே, யுவி நினைவு வந்து அவனுக்கு போன் செய்தான் வருண்.

அவன் விசயத்தை கூற பதட்டமாக பாட்டியிடம் வந்து கூற, அவனுடைய சித்தப்பா, பெரியப்பா அனைவரும் அவளை தேடி கிளம்பினார்கள். அவள் எங்குமே இல்லை. யுவிக்கு விட்ட இடத்தில் தான் எதையும் தேட வேண்டும் பாட்டி கூறியது பற்றி யோசித்து விட்டு, அதே மருத்துவமனைக்கு கிளம்பினான்.

அங்கு தான் வெளியே ஒரிடத்தில் அமர்ந்திருந்தாள் விமலா. அவன் வேகமாக வந்து அவளது கையை பிடிக்க, எந்த உணர்வுகளையும் காட்டாதவாறு இருந்தாள். அவன் அனைவரிடமும் கூற, பாட்டி விமலாவையும், ரோஜாவையும் அவர்களது வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார். அவள் வீட்டிற்கு வந்ததும், அனைவரும் அவளிடம் பேச அவள் அப்படியே தான் இருந்தாள். யுவியின் அம்மா அவனை விடாது அடித்துக் கொண்டிருக்க தடுக்க வந்தவர்களுக்கும் அடி விழுந்தது. ஒரு வழியாக அவளை அழ வைத்தார். அவரையே கட்டிப் பிடித்து அழுதாள் விமலா. அவரும் ஏதும் கூறவில்லை. பின் இருவரையும் ஒரு அறையில் தங்க வைத்தனர்.

விமலா பத்து நாட்களாக அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. பாட்டியும், யுவியின் அம்மாவும் தான் அவளை கவனித்துக் கொண்டனர். யுவி அறையின் வெளியே நின்று பேசுவான். அவள் பதிலேதும் கூறாமல் அவன் பேசுவதை கேட்பாள். வருணும் நிலாவும் வந்து பேசுவார்கள். அவர்களை உள்ளே வர விட்டாள் விமலா. ரோஜா வேறொரு தனி அறையில் தான் இருந்தாள். அவளை உள்ளே விடுவாள் விமலா. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, விமலா அவளாகவே வெளியே வந்தாள். அனைவரும் அவளையே பார்த்தனர்.

யுவியின் அம்மா, நானும் என் அக்கா இறந்த போது இப்படி தான் அறையுனுள்ளே அடைந்து கிடந்தேன் கூறி கொண்டே அவளருகே வந்து, உனக்கு இப்பொழுது நன்றாக உள்ளது தானே!

நான் என் அம்மா இறந்ததை ஏற்றுக் கொண்டேன் கண்ணீரோடு கூற ரோஜா அவளை அணைத்துக் கொண்டு,

அக்கா, நான் உன்னையும் தொலைத்து விடுவேனோ என்று பயந்து கொண்டிருந்தேன் என்று அவள் அழ, யுவியின் அம்மாவிற்கு அவரது அக்காவுடன் இருந்த நினைவு எழவே இருவரையும் கண்கலங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு விமலாவை பாக்கும் போது என் அக்காவை பார்ப்பது போல் உள்ளது என்று மனதினுள் நினைத்தவாறே,

அக்கா இவளை இங்கே அனுப்பி இருப்பாளோ என்று நினைத்துக் கொண்டிருக்க, விமலா ரோஜாவை அணைத்துக் கொள்ள, அவரை மீறியும் அழ ஆரம்பித்தார். உன்னை போல் தான் என்னுடைய அக்காவும் விமலாவை பார்த்து விட்டு, உன் அக்காவை நன்றாக பிடித்துக் கொள். உன்னை விட்டு எங்கும் செல்லாதவாறு என்று ரோஜாவிடம் கூறி விட்டு அழுது கொண்டே அவரது அறைக்கு சென்றார். இதை கவிதா

 வெளியே இருந்து பார்த்து விட்டு, வேகமாக யுவி அம்மாவிடம் சென்று கட்டிக் கொண்டாள்.

உங்கள் அக்கா இல்லை தான். நான் இருக்கிறேன் என்று அவள் கூற,இருவரும் அணைத்துக் கொண்டு அழுதனர். அதை பார்த்த அனைவர் கண்ணிலும் நீர் தொட்டு சென்றது.

போதும்மா. எல்லாரும் அழுவதை நிறுத்துங்கள். கவி இப்பொழுது தானே வந்திருக்கிறாள். அவள் ஓய்வெடுக்கட்டும்.

ராஜா எப்படி இருக்கிறான்? பெரியம்மா கேட்க, அவர் பூரணமாக குணமடைந்து விட்டார் கூறி விட்டு, அம்மாவை பற்றி செய்தி வந்தது. நீ கஷ்டப்படும் போது உன்னுடன் நான் இல்லாமல் போய் விட்டேன் என்று கவிதா விமலாவிடம் கூறினாள்.

அம்மா உயிரோட இருந்தும், இத்தனை நாட்களாக நாங்கள் இருவரும் தனியாக தான் இருந்தோம்.ஆனால் நான் அறையினுள் அடைந்து இருந்தாலும் ஆன்ட்டி, பாட்டி அனைவரும் என்னையும் ரோஜாவையும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

நான் ரோஜா சிரிப்பதை கேட்டு நிறைய வருடங்களானது. அம்மா மருத்துவமனையிலும், நான் இரவு முழுவதும் வேலை பார்த்து கல்லூரியில் தான் தூங்குவேன். என் நண்பர்கள் எனக்கு உறுதுணையாகவும் இருந்தனர். ஆனால் நான் தான் ரோஜாவுடன் நேரம் செலவழித்ததே இல்லை. நான் அறையினுள் இருந்த போது, அவள் கூறினால், நான் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடன் விளையாட நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நீ என்னுடன் சிறு வயதில் தான் விளையாண்டாய், பேசினாய்…..முழுவதும் அம்மாவிற்காகவும் எனக்காகவும் தான் வேலை செய்திருக்கிறாய். ஒரு நாளாவது என்னுடன் விளையாட வா அக்கா. இனி நீ நிறைய பணம் சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பு, சாப்பாட்டிற்கு மட்டும் தானே…கிடைத்ததை வைத்து உன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று கூறினாள்.

என்னை விட அவள் தான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்று விமலா அழுது கொண்டே, நீங்கள் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்ணிற்கு யாரும் இந்த அளவு செய்ய மாட்டார்கள். உங்களது எல்லா உதவிக்கும் நன்றி.

நானும் ,ரோஜாவும் இரண்டு நாட்களுக்கு வெளியே சென்று வருகிறோம் அவளது ஆசைப்படி. பின் இங்கே வந்து எப்பொழுதும் போல் என்னுடைய வேலையை செய்கிறேன் கூறினாள்.

என்னம்மா பேசுகிறாய்? நீ எங்களுடைய யுவிக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய்? உன்னை வேலைக்காரியாக பார்க்கிறோம் என்று நினைக்கிறாயா? என் மகள் உன்னை தன் அக்காவை போல் உணர்கிறாள். நீ சிறிய பெண்ணாக இருந்தாலும், என் மூத்த மகளுடைய குணம் அப்படியே உன்னிடம் உள்ளது. உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் என் மகளை பார்ப்பது போல் தோன்றுகிறது. அதனால் தான் கவிதா உன்னிடம் நெருக்கமாக பழகுகிறாள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு என்ன? இரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டும் அவ்வளவு தானே! அனைவரும் செல்வோம். உன்னையும், ரோஜாவையும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீங்களும் எங்கள் வீட்டு பிள்ளைகள் தான் என்று பாட்டி கூற, விமலா மண்டியிட்டு அழுதாள். பாட்டி அவளை எழ செய்து, எங்கே போகலாம் என்று சேர்ந்து முடிவெடுங்கள் என்று கூற, யுவி ஒன்று சொல்ல, கவிதா ஒன்று சொல்ல, குட்டி பையன் ஒன்று சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

பின் ரோஜா ஓரிடத்தை கூற, அனைவரும் செல்ல முடிவெடுத்தனர். கவி முதலில் நீ ஓய்வெடு. பின் உன்னுடைய பொருட்களை எடுத்து வை. அனைவரும் தயாராகுங்கள். நாம் நாளையே செல்லலாம் என்றார் பாட்டி. வருணும் நிலாவும் உடன் வந்தனர்.

அக்காவும் தங்கையும் சந்தோசமாக நேரத்தை கழித்துக் கொண்டிருக்க, யுவியின் கண்கள் விமலாவையே பார்த்துக் கொண்டிருந்தது.

நீ என்று தான் அவளிடம் கூற போகிறாய்? கவி கேட்க, அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

விமலாவும் ரோஜாவும் மகிழ்ச்சியாக இருப்பதை யுவியின் குடும்பம் பார்த்து மகிழ்ச்சியடைய, இப்பொழுது தான் எல்லாம் சரியானது போல் உள்ளது என்று யுவியின் பாட்டி கூறினார்.

ஆமாம்மா, இந்த வயதில் இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டார்கள். இனியாவது அவர்களுக்கு புதிய விடியல் பிறக்கட்டும் யுவி அம்மா கூற, கவிதா அவர்கள் இருவருக்கும் இடையே உட்கார்ந்து,

நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக பிறக்கும் என்றாள். யுவியின் அம்மா புரியாமல் பார்க்க, பாட்டி எனக்கு தெரியும் என்றார்.

பாட்டி, உங்களுக்கு என்ன தெரியும்?

நம் யுவிக்கு விமலாவை பிடிக்கும் தானே!

யுவி அம்மா அவளை என் மகனிற்கு பிடிக்குமா? அதிர்ச்சியடைய,

ஏன், உங்களுக்கு அவளை பிடிக்காதா?

பிடிக்கும் தான் என்று அவர் யோசிக்க, உங்கள் மகனுக்கு அவளை கொஞ்ச நாட்களாக தான் பிடிக்கும். ஆனால் விமலாவிற்கு மூன்று வருடங்களாக அவனை காதலிக்கிறாள். இதுவரை அவனிடம் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. அவனை பல முறை காப்பாற்றி இருக்கிறாள் .அனைத்தும் யுவிக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள். அவன் அங்கே இல்லையென்றால் தேடுவாள். பார்க்கிறீர்களா? என்று கவி யுவிக்கு போன் செய்து சாப்பிட ஏதாவது வாங்கி வா என்று கூற, அவனும் அங்கிருந்து சென்றான்.

ரோஜாவுடனும், குட்டி பசங்களுடனும் விளையாடிக் கொண்டிருந்த விமலா யுவியை தேடினாள். அவன் மட்டும் அங்கே இல்லாததை பார்த்து நண்பர்களிடம் வந்து, யுவியை பற்றி கேட்க மூவரும் தேடினர்.

பாருங்கள், நான் கூறினேனே! எப்படி தேடுகிறாள்? என்று…கவி கூற, பாட்டி அவளிடம் வந்து யாரை தேடுகிறாய்?

பாட்டி, யுவி…கூற, அவன் எங்களிடம் கூறி விட்டு தான் வெளியே சென்றிருக்கிறான். வந்து விடுவான் என்றவுடன் தான் அமைதியானாள். பாட்டி அவளை பார்த்து சிரித்துக் கொண்டே செல்ல, யுவியின் அம்மாவும் சிரித்தார்.

பின் அவர்கள் கடற்கரைக்கு செல்ல ரோஜாவிற்கு பயங்கர சந்தோசம், அக்கா வா விளையாடலாம் என்று விமலாவை அழைத்துக் கொண்டு செல்ல, அவர்களுடன் கவி, நிலா, வருண், குட்டி பசங்கள் சேர்ந்து கொள்ள, அனைவரும் விளையாடினார்கள்.

யுவி அவனது அம்மாவிடமும், பாட்டியுடனும் பேசிக் கொண்டிருந்தான். கவி அவனிடம் வந்து நீயும் வாடா என்று அவனை அழைக்க, நான் வரவில்லை என்றான்.

உனக்கு தான் பிடிக்குமே! அம்மா கேட்க, பிடிக்கும் தான். ஆனால் நான் வரவில்லை.

அதெல்லாம் முடியாது என்று கவி அவனை பிடித்து இழுக்க, வாடா என்று வருணும் வந்தான். யுவி தன்னுடைய சட்டை கழற்றி விட்டு அவனும் அவர்களுடன் வந்தான் .நன்றாக விளையாண்டு கொண்டிருக்க தடுமாறி விமலா வருண் மீது விழ வர, இடையே யுவி வந்ததால் இருவரும் சேர்ந்து தண்ணீரில் விழுந்தனர். இருவரும் எழுந்து நெருக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்ன ஆயிற்று? என்று கவி அருகே வர, விமலா பதட்டத்துடன் அங்கிருந்து வெளியே வந்தாள். அவள் நின்ற இடத்திற்கு பக்கத்தில் ஒரு குட்டிப் பொண்ணு அவளது அம்மா மடியில் படுத்துக் கொண்டு, அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.அதை பார்த்தவுடன் அவளது கண்கள் கலங்கியது. நானும் இதே போல் என்னுடைய அம்மாவுடன் விளையாடினேன் என் சிறு வயதில் என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நின்றாள்.

வருணும் நிலாவும் வந்தனர். அவர்களும் அதை பார்த்தனர். நிலா அவளது கண்ணீரை துடைத்து விட்டு அணைத்துக் கொள்ள வாருங்கள் செல்லலாம் என்று வருண் அழைக்க, அவர்கள் சென்றனர்.

யுவி விமலாவிடம், நான் உதவி செய்ய தான் வந்தேன் என்று பாவமாக கூறினான். எனக்கு தெரியும். நன்றி என்று கூறி விட்டு, ஓரப் புன்னகையுடன் சென்றாள் விமலா.

இவள் கோபப்படவில்லையா? என்று மனதினுள் சந்தோசமாக நெஞ்சை பிடித்து, அவனது காதலை உணர்ந்தான் யுவி புன்னகையுடன்.

இப்படியே இரண்டு நாட்களும் முடிய வீட்டிற்கு வந்தனர்.

விமலா கல்லூரிக்குள் நுழைந்து ஓரிடத்தில் அமர்ந்தாள். வருணும், நிலாவும் ஜோடியாக அவளருகே வர, என்ன ஆயிற்று விமலா? நிலா கேட்க, எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என்று அவள் கூறினாள்.

என்னடா இது ஆச்சர்யம்? விமலா நீயா கூறுவது? இத்தனை நாட்கள் தூங்காமல் வேலை செய்திருக்கிறாய்? அப்பொழுதெல்லாம் ஒரு முறை கூட நீ இவ்வாறு கூறியதில்லை வருண் கூறினான்.

என் மனது தான் சோர்வாக உள்ளது. என் காதலை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை இருந்தாலும் அவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டு அவனை எப்படி காதலிப்பது? அவர்களும் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு துரோகம் செய்வது போல் ஆகாதா?

நீ கூறுவதும் சரி தான். அவர்கள் வீட்டில் வேலை செய்து கொண்டு என்று வருண் பேச ஆரம்பிக்க, அவனது தலையிலே ஓர் அடியை போட்டு விட்டு நிலா, இங்கே பார் விமலா என்று அவளருகே வந்து அமர்ந்து, காதலுக்கு உன் நிலையெல்லாம் தெரியாது. உனக்கு அவனை பிடித்திருக்கிறது தானே! சரியான சூழ்நிலையில் நீ அவனிடம் காதலை கூறவில்லை. மீண்டும் ஒரு முறை கூறுவது ஒன்றும் தவறில்லை. நீயே அவனிடம் உன் காதலை தெரிவிப்பது நல்லது. பிறகு வேரொருவரை அவன் தேர்ந்தெடுத்து விட்டால் வருத்தப்பட்டு எதுவும் மாறாது. நன்றாக சிந்தித்து செயல்படு என்று கூறி விட்டு எனக்கு பசிக்கிறது என்று வருணிடம் யுவி வருவதை கண்ணை காட்டி அவனை இழுத்துச் சென்றாள்.

Advertisement