Advertisement

அத்தியாயம் 26

மறுநாள் காலையில் யுவி அவனது அறையிலிருந்து எழுந்து, நான் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனது அறையை பார்த்தான்.

பாட்டி என்று கத்தினான். அவனது அறையின் அருகே அனைவரும் வந்தனர். அவனது அறை முழுவதும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. வேகமாக வெளியே வந்து,

டேய் குட்டி சாத்தான், எங்கடா இருக்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே வந்தவன் சட்டென நின்றான்.

நீ இங்கே என்ன செய்கிறாய்? அதிர்ச்சியோடு யுவி கேட்க, நான் தான் வர சொன்னேன் என்று பாட்டி கூறினார்.

எதற்கு ?

அதை நான் எதற்கு உனக்கு சொல்ல வேண்டும் என்று சிரிக்க, அனைவரும் அவனை பார்த்து சிரிக்க அங்கே வந்திருந்த விமலாவும் சிரிக்க அவன் புரியாமல் பார்த்தான். கவி கண்ணாடியை எடுத்து வந்து காட்ட யுவி முகம் முழுவதும் கிறுக்கப்பட்டிருந்தது.

முகத்தை மறைத்தவாறு குட்டி சாத்தான் என்று கத்தினான். ஒரு குட்டி பையன் வெளியே வர, இரு நான் வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன். பாட்டியின் அறைக்குள் ஓடினான்.

தயாராகி விட்டு சமையலறைக்குள் வந்து, கவி எனக்கு ஒரு காபி என்றான்.

என்னடா முகத்தை நன்றாக கழுவினாயா?

ம்ம்… அவனை என்ன செய்ய போகிறேன் பாரு என்று கூறிக் கொண்டே

கவியின் சத்தம் பின்னால் கேட்டது போல் இருந்ததை கவனித்தான். பின்னே கவி இருந்தாள். நீ இங்கே என்றால் முன்னால் இருப்பது என்று பார்த்தான். விமலா தான் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

நீ என்ன செய்கிறாய்?

பார்த்தால் உனக்கு தெரியவில்லையா? கவி கேட்டாள்.

தெரிகிறது. இங்கே என்ன செய்கிறாள்? என்று கேட்டேன். அவள் இனி இங்கே தான் வேலை செய்ய போகிறாள்.

யுவி கவியிடம், அவளை போக சொல்.அம்மாவை பற்றி தெரியும் தானே! மெதுவாக கூறினான்.

என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? பாட்டி கேட்க,

பாட்டி, நான் எப்படி என்னுடைய அறைக்கு சென்றேன்? யுவி கேட்க,

நான் தான் உன்னை தூக்கி சென்றேன் ராஜா கூற, குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை கவி யுவி மேல் துப்ப, கவி….என்று கத்திக் கொண்டு முகத்தை துடைத்தான்.

என்ன நாள்டா இது? காலையில் இருந்து எதுவுமே சரியில்லை என்று  யுவி புலம்பிக் கொண்டே செல்ல, அவன் தன்னையும் சேர்த்துக் கூறுகிறான் என்று தவறாக எண்ணிக் கொண்டு விமலா வருத்தமடைந்தாள்.

பின் சாப்பாடு அனைத்தையும் தயார் செய்து, டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். யுவி வேகமாக ஓடி வந்து அவனது அறைக்குள் செல்ல பின்னே அந்த குட்டி பையன்

டேய் யுவி, வெளியே வந்து விடு என்று அவனது அறை கதவை தட்ட, விமலா அவனருகே வந்து, என்ன ஆயிற்று? கேட்டாள்.

அவன் என்னுடைய காரை உடைத்து விட்டான் மீண்டும் கத்த, யுவி கண்டு கொள்ளாமல் இருக்கவே அவனது அறையில் விமலாவிற்கு கொடுத்த கைக்குட்டையை பார்த்தான். அவள் தான் என்னுடைய அறையை சுத்தம் செய்தாலோ என்று யோசித்துக் கொண்டு, என்ன சத்தத்தை காணோம் என்று வெளியே எட்டி பார்த்தாள். குட்டி பையன் கையில் யுவி உடைத்த கார் இருந்தது. விமலா சரி செய்து கொடுத்திருப்பாள்.

யுவி வெளியே வந்து, காரை உடைத்தேனே! எப்படி சரியானது?

ஏன்டா, சிறு பிள்ளை போல் செய்து என் மானத்தை வாங்குகிறாய்? அம்மா கூற, அனைவரும் சிரித்தனர். விமலா அவனை பார்க்க, அவன் அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

இந்த குழம்பை சாப்பிட்டு பாரேன் பாட்டி யுவி அம்மாவிடம் கூற, அனைவரும் இருவரையும் பார்த்தனர்.

நன்றாக இல்லையா பாட்டி? என்று விமலா கேட்க, பாட்டி சிரித்துக் கொண்டே யுவி அம்மாவை பார்த்தார். அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

நீ இதை எப்படி செய்தாய்? யுவி அம்மா கேட்க, நான் அடுத்த முறை நன்றாக செய்கிறேன் அவள் கூற, எழுந்து அவளை கட்டிக் கொண்டார். யுவிக்கெல்லாம் என்னடா நடக்கிறது என்று அதிர்ச்சியோடு இருந்தான்.

என்னுடைய அக்கா மாதிரியே நீ சமைத்திருக்கிறாய்? எனக்கு அவள் நினைவு வந்து விட்டது. விமலா என்ன கூறுவதென்று தெரியாமல் நிற்க கவியும் அதனை எடுத்து ருசித்து விட்டு,     என்னுடைய அம்மா இவ்வாறு தான் சமைப்பார்களா?

ஆமாம்மா. அவள் தான் சமைத்து ஊட்டி விடுவாள் என்று கூற பாட்டி கண்கலங்கினார். ராஜாவின் அம்மா எப்படியோ பேச்சை மாற்றினார்.

நாங்கள் இன்று கிளம்புகிறோம் என்று ராஜாவின் அப்பா கூற கவியின் முகம் வாடியது. அனைவரும் சென்ற பின், ராஜா கவியின் அருகே வர இருவரும் அணைத்தபடி இருக்க, கவி கண்ணீர் நிற்காமல் ஓடியது.

எதற்காக அழுகிறாய்? இரண்டு மாதங்கள் தான் வேகமாக சென்று விடும் என்றான் ராஜா.

ஆனால் நீங்கள் என்னிடம் ஏதும் கூற வேண்டுமா?

“லவ் யூ” என்றான். வேறெதாவது?

இல்லையே என்றான் சாதாரணமாக. உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் கூறி விட்டு அழுது கொண்டே ஓடினாள். ராஜாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

வேலையை முடித்து விமலா வெளியே வரும் போது கவியை பார்த்தாள். அவள் சோகமாக இருந்தாள். அவளருகே சென்று இவளும் உட்கார்ந்தாள்.

என்ன ஆயிற்று? அண்ணா கிளம்புவது கஷ்டமாக உள்ளதா?

இல்லை. அவர் அனைவரிடமும் ஏதோ மறைப்பது போல் உள்ளது? கவி கூற, நீங்கள் நேரடியாக கேட்டு விடுங்களேன்.

நீ எப்பொழுது அவனிடம் காதலை கூற போகிறாய்? விமலா கண்கலங்கிய நிலையில் என்னால் எப்பொழுதும் கூற முடியாது.

ஏன் கூறமுடியாது?

அவனுக்கு தான் என்னுடைய காதல் தெரியுமே? அவன் தான் என்னை ஏற்றுக் கொள்ளவில்லையே?

அவனுக்கு தெரியும் தான். உன் காதல் என்னால் தான் தெரியும். நீ அவன் கேட்டதற்கு பதில் தானே கூறினாய்? நீ அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்யலாமே?

அவன் கௌதமிடம் கூறியதை நீங்களும் தானே கேட்டீர்கள். அவனுக்கு என் மேல் காதல் வராது.

அவன் கௌதமிற்காக அவ்வாறு பேசி இருக்கலாமே!

இதற்கு மேல் என்னை நானே காயப்படுத்திக் கொள்ள முடியாது. போதும். அதுமட்டுமல்ல அவன் வேறு உலகத்தில் உள்ளான். நான் வேறு உலகத்தில் இருக்கிறேன். எனக்கென்று கடமைகள் உள்ளது. நான் எதற்காக அவனை காதலித்தேன்? எப்படி காதல் வந்தது? என்று தெரியவில்லை.

என்னால் அவனை பாதுகாக்க முடியுமே தவிர சேர்ந்து வாழ்வது முடியாத காரியம். என்னால் மற்ற பெண்கள் போல் வாழ முடியாது. என்னை நம்பி இரு உயிர் உள்ளது. எனக்கும் ஆசை தான். அது ஆசையாகவே போகட்டும். கொஞ்ச நாட்கள் தான் இங்கே இருப்பேன். பின் எனக்கான நிரந்தர வேலை கிடைத்து விடும். பின் அவனை பார்க்க கூட முடியுமா? என்று தெரியவில்லை.

பாட்டி சொன்னவுடன் ஒத்துக் கொண்டதன் காரணமும் அது தான். கொஞ்ச நாட்கள் அவன் அருகே இருந்து பார்த்து விட்டு செல்கிறேன். இரவு வேலை செய்வதற்கு கூட வருணுடன் சேர்ந்து செல்ல போகிறேன். இந்த மாதிரி இருக்கும் நான் எப்படி இந்த வீட்டு மருமகளாக முடியும்? முதலில் ஆன்ட்டி ஒத்துக் கொள்வார்களா? சும்மாவே என்னை அவர்களுக்கு பிடிக்காது. சாப்பாடு விசயத்தில் நல்ல பெயர் வாங்கினாள். அனைத்திலும் நான் சரியாக இருப்பேனா? இன்னும் ஒரே மாதம் தான். கண்டிப்பாக எனக்கு வேலை கிடைத்து விடும். நான் சென்று விடுவேன்.

ஏன் இவ்வாறு பேசுகிறாய்? அனைவரும் உன்னை ஏற்றுக் கொண்டால், உனக்கு ஓ.கே தானே?

நடக்க வாய்ப்பில்லாத விசயத்தை பற்றி பேசி பயனில்லை. நீங்கள் அண்ணாவிடம் நேராகவே பேசுங்கள் என்று கூறி விட்டு கல்லூரிக்கு சென்றாள். அவள் மிகவும் அமைதியாக இருப்பதை கண்டு நிலா கேட்க, எனக்கு மனது சரியில்லை. வருண் எங்கே?

அவனுக்கு வேலை போனதால், அவனுடைய வீட்டில் அவனை வேலை கிடைத்தவுடன் தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று கூறி வெளியே அனுப்பி விட்டார்கள். போன் செய்தாயா? விமலா கேட்க, அவன் எடுக்கவில்லை. இவள் போன் செய்தும் பயனில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கவே அவனது அம்மாவிற்கு போன் செய்து கேட்க, சண்டை போட்டு சென்றான். இன்னும் அங்கே வரவில்லையா என்று பதறினார்.

அம்மா நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நிலா கூறி விட்டு, எனக்கும் பயமாக உள்ளது. சண்டை போட்டாலும் இவ்வளவு நேரம் நம்மை பார்க்காமல் வர மாட்டானே? நிலா புலம்ப, யுவி வந்தான். அவனருகே ஓடி சென்று அவனது போனை கேட்டாள் விமலா.

என்னுடையது உனக்கு எதற்கு?

தயவு செய்து கொடு என்று வாங்கி போன் செய்தாள். நிலா அவசரமாக, அவன் எடுத்து விட்டானா? விமலா இல்லை என்றவுடன் அவள் அழுதாள்.

அழாதே, வந்து விடுவான் என்று விமலா நிலாவை தேற்ற, எதற்காக அழுகிறாள்? யுவி கேட்டான்.

கௌதம் வந்து கொண்டிருந்தான். அவனிடமும் வாங்கி போன் செய்தாள். வருண் எடுத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. விமலா பேசுகிறேன், எங்கடா இருக்க? அவன் அழுவது போல் சத்தம் கேட்க, எதற்கு அழுகிறாய்? சொல்லுடா…

நிலா போனை வாங்கி, டேய் தடிமாடு எங்கே தான் இருக்கிறாய்? சொல்லி தொலையேன்டா அழுது கொண்டே கேட்க, அவன் போனை வைத்தான்.

போனை திரும்ப வைத்து விட்டான். அவன் பேசவேயில்லை நிலா கூற,

கௌதமும் யுவியும் என்னவென்று கேட்க, அவர்கள் கூறினார்கள்.

என்னுடைய போனை கொடு என்று வாங்கி கௌதம் இடத்தை கண்டறிந்தான்.

வாருங்கள் இடம் தெரிந்து விட்டது என்று யுவியுடன் விமலாவும், கௌதமுடன் நிலாவும் சென்றனர்.

அவர்கள் சென்ற இடத்தில் யாருமே இல்லை. கௌதம் தான் வருணை முதலில் பார்த்தான். இங்கே இருக்கிறான் என்று கௌதம் கூப்பிட,

நிலா வேகமாக வந்து, என்னடா செய்திருக்கிறாய்? இப்படி வாடை வரும் வரையா குடிப்பாய்? அவள் அவனை அடித்துக் கொண்டே அழுதாள்.

போதும் நிலா, அவனை விடு…. விமலா அவளை தூக்க யுவி நினைத்து பார்த்தான். என் மீதும் இவ்வளவு வாடை வந்திருக்கும் தானே என்று மனதினுள் நினைத்துக் கொண்டே விமலாவை பார்த்தான். அவளும் அவனை பார்க்க, கௌதம் இருவரையும் கவனித்தான்.

இவனை இப்படியே வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அங்கிள் ரொம்பவே கோபப்படுவார். என்னுடைய வீடு அவனுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருப்பதாலும் பிரச்சனை. விமலாவிடமும் விட முடியாது என்று நிலா இரு பசங்களையும் பார்த்தாள்.

நான் என்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கௌதம் கூற, உனக்கு பிரச்சனை இல்லையா? விமலா கேட்டாள்.

ஒன்றும் பிரச்சனையில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் கௌதம் கூற, வா போகலாம் என்று விமலா, நிலாவை அழைக்க, அவள் யுவி விமலாவை கல்லூரியில் விட்டு விடு.        .

நீயும் வாடி,…..என்று அழைக்க, அவள் வருணை பார்த்தவாறு நிற்க, விமலா புரிந்து தயங்கிக் கொண்டே கௌதமிடம், இவளையும் பார்த்துக் கொள்ள முடியுமா? விமலா கேட்டாள்.

அவன், இதனால் என்ன? நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் கௌதமை பார்த்தவாறு இருக்க, அவனோ நீ பயப்பட தேவையில்லை. நான் அவளை எதுவும் செய்ய மாட்டேன். வீட்டில் அம்மா இருப்பார்கள் என்று கூறி விட்டு, நீயும் என்னை மன்னித்து விடு என்று அவன் கேட்க, அவள் சிறு புன்னகை புரிந்தாள்.

நீ சிரித்து நான் பார்த்ததே இல்லை. அழகாக உள்ளது கௌதம் கூற, அவள் மேலும் சிரிக்க அவனும் சிரித்தான்.

இரண்டு பேரும் முடித்து விட்டீர்களா? யுவி முறைக்க, கௌதம் புரிந்து கொண்டு நாளை சந்திப்போம் என்று வெறுப்பேற்ற, நிலா கௌதமை முறைத்துக் கொண்டிருந்தாள்.

யுவி பைக்கை கோபத்தில் வேகமாக ஓட்ட, அவள் மெதுவாக போ என்றாள். வகுப்பு ஆரம்பித்து விடும் என்று வேகமாக அவன் ஓட்ட, அவனது தோளில் கை வைத்துக் கொண்டாள்.

கௌதமும் நிலாவும் வருணை வீட்டினுள் அழைத்து வர, அவனது அப்பா வந்தார். நடந்ததை விசாரித்து விட்டு, அவர்களை கவனித்து கொள். நான் வந்து விடுகிறேன் மனைவியிடம் அழைத்து வந்தார்.

வருணை குளிக்க வைத்தான் கௌதம். பின் அவன் கொஞ்ச தெளிவு பிறக்க நான் செல்கிறேன் என்றான். ஒரு நிமிடம் என்று அவனை நிறுத்தி நிலாவை அழைத்தான். அவள் உள்ளே வந்து,

உனக்கு என்னடா ஆயிற்று? போனை எடுக்கவில்லை. இப்படி குடித்திருக்கிறாய்? எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நானும் விமலாவும் பயந்து விட்டோம் என்றவுடன் வருண் அவளை தேட, நிலாவிற்கு மனது கனமானது.

அவள் யுவியுடன் கல்லூரிக்கு சென்று விட்டாள். நீ இங்கேயே இரு. அங்கிள் வந்தவுடன் கூறி விட்டு செல்வோம் என்று பேசி விட்டு தனியே  வந்து அழுதாள்.

நீ அவனை காதலிக்கிறாய் தானே? கௌதம் கேட்க, சீக்கிரம் சொல்லி விடு என்று அவளது கண்ணை துடைத்து விட்டான்.

அவளை என்ன செய்கிறாய்? வருண் வெளியே வர, அவன் ஏதும் பண்ணவில்லை நிலா கூற, அவன் உன்னை தொட்டு தானே பேசினான் வருண் கேட்டான்.

கண்ணீரை தான் துடைத்து விட்டான் நிலா கூறினாள்.

ஓ….அவனுக்காக தான் என்னை அழைத்து வந்தாயா? பட்டென்று வருண் கேட்க, அவள் வேகமாக அழுது கொண்டே ஓடினாள்.

நில்லும்மா…..என்று கௌதம் அம்மா கூப்பிட, அவள் அழுது கொண்டே சென்றாள். அவனது அம்மா கசாயத்தை எடுத்து வந்து, அந்த பொண்ணு உனக்காக செய்தது என்று வருணிடம் கொடுத்தார்.

அவள் கல்லூரிக்கு கூட செல்லாமல் உன்னை பார்த்துக் கொள்ள வந்தாள். உன்னை தனியே விடக்கூடாது என்று நினைத்தாள். குடித்து விழுந்து கிடந்ததை பார்த்து எப்படி அழுதாள் தெரியுமா? கௌதம் கூறினான்.

இப்பொழுது தான் முதல் முறை குடித்திருக்கிறாயாம். உனக்கு குடிப்பவர்களை கண்டாலே பிடிக்காதாம். என்னருகே இரண்டு நிமிடங்கள் தான் இருந்தாள். உன்னை பற்றி மட்டும் தான் பேசினாள்.

தம்பி, எதற்காக ஓடுகிறாள்?அம்மா கேட்க,

உனக்கு இன்னுமா புரியவில்லை. அவள் உன்னை காதலிக்கிறாள் என்று கௌதம் கூற,அப்பொழுது தான் அவளுடன் பழகிய நாட்களை பற்றி யோசித்து சிரித்துக் கொண்டே நான் உன்னுடைய அப்பாவை பார்க்க கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் கூறி விட்டு நிலாவை தேடி ஓடினான். அவள் ஓரிடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் முன்னே வந்து எழுந்திரு என்றான். அவள் பேசாமல் திரும்பிக் கொள்ள அவளை தூக்கி அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் கொட்ட கொட்ட விழிக்க, ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

எனக்கு ஐஸ்கிரீமா?

அவளது கையை பிடித்துக் கொண்டு ஓடினான். அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து விட்டு அவளிடமிருந்து அதே ஸ்பூனில் அவனும் சாப்பிட்டு விட்டு வாழ்க்கை முழுவதும் இதே போல் ஒன்றாக இருப்போம் என்று அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் கண்ணில் நீர் தாரை தாரையாய் கொட்ட, நீ விளையாடவில்லையே?

அவன் அவளருகே வந்து, “ஐ லவ் யூ” என்றான்.

“ஐ லவ் யூ சோ மச்”….என்று அவனை கட்டிக் கொண்டாள்.

                          “யுத்தமொன்று

                           தான்

                           காதலானது

                           மெய் காதலானது

                           என்னை

                           தூண்டி விட்டது

                           என்னை

                           உருக வைத்தது

                           உன் காதலை

                           அறியாமல்

                           நேரத்தை

                           விரயமாக்கினேன்.

                            இனி

                            நம் வாழ்வு

                            செழுமையாகுமே!”

கல்லூரி முடிந்து  யுவி வெளியே வர, கவி நின்று கொண்டிருந்தாள்.

கவி, நீ இங்கே என்ன செய்கிறாய்? யுவி கேட்க, அவள் விமலாவை தேடினாள்.

விமலா வந்ததும், அவளை அவனருகே அழைத்து வந்து நான் நினைத்தது உண்மை தான். அவர் என்னிடம் ஒன்றை மறைத்து விட்டார்.

நான் மஞ்சுவிடம் அவர் எதையோ மறைக்கிறார் உனக்கு தெரியுமா? என்று கேட்டேன்.

அவன் எதை மறைக்கிறான்?

அது தான் தெரியவில்லை என்று பேசிக் கொண்டே செல்லும் போது, ஓரிடத்தில் ராஜா தலையை பிடித்துக் கொண்டு தலை கவிழ்ந்த படி உட்கார்ந்திருந்தான். அதை பார்த்த இருவரும் வேகமாக அவனருகே செல்ல,அவன் நிமிர்ந்து அவர்களை பார்த்து சாதாரணமாக இருக்க முயற்சி செய்ய,அவனால் முடியாமல் மயங்கினான். இருவரும் பதறி போய் அவனை பிடித்து எழுப்ப, அவன் எழாமல் இருக்கவே கவி அழ ஆரம்பித்தாள். மஞ்சு தண்ணீரை எடுத்து வந்து அவனது முகத்தில் தெளிக்க, ராஜா எழுந்தான்.

இருவரும் அவனை திட்ட, அவனுக்கு தலையில் அடிபட்டதிலிருந்து அடிக்கடி வலி இருப்பதை இருவரிடமும் கூற, மஞ்சுவோ அவனை திட்ட கவி அழுது கொண்டே என்னால் உணர முடிந்தது. நீங்கள் என்னிடம் ஏதோ மறைப்பது தெரிந்தது.

நீ எதற்காக அழுகிறாய்? எனக்கு ஒன்றுமில்லை ராஜா கூற, கவி அவனை முறைத்து விட்டு, நாம் இன்றே ஊருக்கு கிளம்புகிறோம் என்று கூறினாள்.

நீயும் வருகிறாயா? வேண்டாம். நீ உன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழி. நான் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். மஞ்சு, அம்மா, அப்பா இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்றவுடன்,

கவி கோபமாக அழுது கொண்டே, நான் வரக்கூடாது என்கிறீர்கள்? அப்படி தானே!

இல்லம்மா. நீயே இப்பொழுது தான் உன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருக்கிறாய்? அதனால் தான் கூறினேன்.

காரணம் கூறாதீர்கள்! நீங்கள் என்னை வெளி ஆளாக நினைக்கிறீர்கள்? அதனால் தான் வர வேண்டாம் என்கிறீர்கள்.

அவன் அவளை பிடித்துக் கொண்டு,  நான் உன்னை அவ்வாறு நினைப்பேனா? நீ வர வேண்டும் என்றால் தாராளமாக வா…. ராஜா அவளை அணைத்துக் கொண்டாள்.

இப்பொழுதே கிளம்புவோம் என்று கவி கூற, அவன் சரிம்மா என்றான்.

மஞ்சு அம்மா,அப்பாவிற்கு விசயத்தை சொல்ல, அவர்கள் பதறிப் போனார்கள்.

இப்பொழுது நன்றாக தான் இருக்கிறான். உடனே கிளம்புவோம் என்று அம்மா கூற, எல்லாவற்றையும் எடுத்து வையுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் மஞ்சு கூறி விட்டு போனை வைத்து விட்டு மூவரும் கிளம்பினார்கள்.

வீட்டில் அனைவருக்கும் தெரிந்து ராஜா வீட்டிற்கு வந்தவுடன் பாட்டி அவனை ஓய்வெடுக்க சொல்ல, அவன் உள்ளே சென்றான். அவர் கவியை பார்க்க அவள் வருத்தமாக, நானும் இவர்களுடன் சென்று வருகிறேன். அவருக்கு முழுவதும் சரியானவுடன் தான் வருவேன் என்றாள்.

அனைவரும் யோசிக்க, பாட்டி மட்டும் நீ அவரை நன்றாக பார்த்துக் கொள் என்றார்.

அவள் பாட்டியிடம், தேங்க்ஸ் பாட்டி என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.

ராஜாவிற்கு ஒன்றும் ஆகாது. பயப்படாதே! அவனுடைய அம்மாவும் அழ, பாட்டி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

நான் அவருடன் ஊருக்கு செல்ல போகிறேன் என்று அவளது பையை காண்பித்தாள்.

கவி விமலாவிற்கு நன்றி கூறினாள். நீ கூறியதால் தான் அவரை பார்க்க சென்றேன். அதனால் தான் அவருடைய உடல்நிலை பற்றி தெரிய வந்தது.

நான் ஏதும் செய்யவில்லை. உங்களுடைய காதலை நீங்கள் உணர்ந்ததால் தான்..அவர் உங்களிடம் மறைப்பது கூட தெரிய வந்தது. இருவரும் அணைத்துக் கொண்டிருக்க, என்ன பேசுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மச்சானுக்கு வலி ஏற்பட்டு உள்ளது மட்டும் தான் புரிகிறது.

காதலினால் அருகே இருந்து புரிந்து கொள்ளவும் முடியும். தூரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனை என்றால் உணரவும் முடியும் விமலா கூற, அவளை பார்த்தவாறே யுவி நின்றான்.

நான் அவருக்கு சரியான பின் தான் வருவேன். அதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவன் அருகே வந்து, யுவி உனக்கு அம்மாவை பற்றி தெரியும் பார்த்துக் கொள் கூறி விட்டு, இருவரும் நான் கூறியதை  மறந்து விடாதீர்கள் என்று கூறி விட்டு கிளம்பினாள்.

Advertisement