Advertisement

அத்தியாயம் 25

கௌதம் எதற்கு கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரித்து கூறுகிறாயா? விமலா வருணிடம் கேட்டாள்.

எதற்காக அவனை பற்றி கேட்கிறாய்? இது தேவையா? ஏற்கனவே யுவனிற்கு உதவ சென்று தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாய்? நிலா கேட்க,

இல்லை, அவனது படிப்பு என்று விமலா இழுக்க, அவன் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். அது உனக்கு தேவையில்லை நிலா கூறி விட்டு வருணை பார்த்தாள்.

இவ்வளவு நடந்த பின்னும் அவன் பின்னே சுற்ற போகிறாயா? வருண் கேட்டான்.

அவன் கௌதமிடம் கூறியதை கூறி விட்டு, எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் இருக்கும் நிலையில் இதெல்லாம் எனக்கு தேவை தானா? அதுவும் காதல்…..அவனோ என்னை பிடிக்கவில்லை என்று கூறி விட்டான். இதற்கு மேல் நான் அவனை தொந்தரவு செய்ய மாட்டேன். அவனுக்கு நான் அவன் பின்னே சுற்றியது கூட தெரியவில்லை என்று நிலா மீது சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

இதை பார்த்த வருண் அவளருகே வந்து, வா கேக் சாப்பிடலாம் என்றான்.

கேக் என்றவுடன், என்னுடையது எங்கேடா? விமலா கேட்க, அவன் அவளிடம் கையை நீட்டி சிரித்துக் கொண்டே, வா போகலாம் என்று அழைக்க நிலா அவன் கையை பிடித்து,

எனக்குடா….கேட்க,

உனக்கா? கேக்கா? உனக்கு ஒன்று பத்தாதே! கிண்டல் செய்ய, இருவரும் அடித்து அடித்து சண்டையிட, விமலா அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். மறைவில் நின்ற யுவிக்கு பொறாமை வர ஆரம்பித்தது. அவன் அங்கிருந்து வேரொரு இடத்தில் உட்கார்ந்து, அந்த அறையில் இருவரும் நெருக்கமாக இருந்ததை நினைத்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமலே அவனது உதட்டில் புன்னகை பூக்க, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தலையில் அடித்துக் கொண்டான்.

                          “உன்னுடன்

                            இருந்த தனிமை

                            என்னை

                            ஏதோ செய்கிறதே!

                             உன்னை

                             பார்த்தாலே

                             என்னுணர்வுகள்

                             தாறுமாறாக திரிகின்றதே!

                              நீ

                              எப்போதும்

                              என்னருகே

                              இருக்க தோன்றுகிறதே!

                               உன்னை விட்டு

                               மீளாதவனாக

                               இருக்க

                               விழைகிறேன் உனதாகவே!”

யுவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அங்கே பிரியங்கா, அவளுடைய கணவனுடன் வந்திருந்தாள். யுவி அவளை பார்த்து, எப்படி இருக்கிறாய்? என்று விசாரித்தான்.

யுவி நீயா? பேசுகிறாய்? என்று பிரியங்கா கேட்க, சிரித்துக் கொண்டே, அவன் உள்ளே சென்றான்.

டேய் நில்லுடா, சிரிக்கிறாயா?

கவி அவர்களுக்கு காபி எடுத்து வர, யுவிக்கு என்னாயிற்று? ஒரு மாதிரி தெரிகிறானே!

அவன் வந்து விட்டானா?

ம்ம்… அவன் யாரையும் காதலிக்கிறானா? என்ன?

அக்கா, என்ன சொல்றீங்க?

அவன் என்னை விசாரித்து, பேசி விட்டு செல்கிறான் சிரித்துக் கொண்டு.

என்னை என்றும் கண்டு கொள்ளாதவன், நடவடிக்கை மாறி விட்டது என்று மகிழ்ந்தாள் பிரியங்கா.

 அப்படியா?

பாட்டி வந்தவுடன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு, மாப்பிள்ளை பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்க, கவி பிரியங்காவை இழுத்துக் கொண்டு, யுவி அறைக்கு செல்ல, அவன் முகத்தை கூட கழுவாமல் கட்டிலில் படுத்துக் கொண்டு விமலாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் சிறு புன்னகையுடன். அவனுள் காதல் முளைத்து விட்டது அவள் மீது. அதை உணர்ந்தவாறு படுத்திருக்க, இருவரும் உள்ளே வந்தனர். அவர்கள் வந்தது கூட தெரியாமல் அவன் இருக்க,இருவரும் கத்தினர்.

அய்யோ! பேய் வந்து விட்டது என்று கத்தினான்.

நாங்கள் வந்தது கூட தெரியாமல் நீ யாரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாய்?

அவன் மீண்டும் சிரிக்க, கண்டிப்பாக அக்கா நீ கூறியது உண்மை தான் கவி கூறினாள்.

என்ன கூறினாள்?

அது ஒன்றுமில்லை. வெளியே விமலா வந்திருக்கிறாள் என்று கவி கூற, அவன் வேகமாக தலையை சரி செய்து விட்டு வெளியே அவன் செல்ல, இருவரும் சிரித்தனர்.

கவி, யாரந்த விமலா? பிரியங்கா கேட்டாள்.

ஏய் கவி,….என்று அவள் பக்கம் திரும்ப, யுவி கவியை விரட்டினான். அவள் ராஜா மீது மோதினாள்.

ராஜா அவனிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று அவள் சிரித்துக் கொண்டே அவனை பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்க, கவி சந்தோசமாக இருப்பதை பார்த்து ராஜாவும் மகிழ்ந்தான்.

டேய், போடா என்று கண்ணை காட்டி ராஜா அவனை அனுப்பி விட்டு, கவி பக்கம் திரும்பினான். அவளோ விமலாவை எப்படியோ இவனுக்கு பிடித்து விட்டது என்று மகிழ்ச்சியோடு ராஜாவை அணைக்க, அவன் அவளை தனியாக அழைத்துச் சென்றான்.

அவள் நிதானமாகி, என்ன?

நீ எல்லாருடனும் நேரத்தை கழிக்கிறாய்? என்னுடன் நேரத்தை செலவழிக்க மாட்டாயா?

நான் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டிருக்கிறேன் நமக்காக.

அவள் சிரிக்க, அவன் அவளை நெருங்கி வர, அவள் ஏதும் கூறாமல் நின்றாள். அவளது இதழ்களில் மென்மையான முத்தத்தை கொடுக்க, அவளும் அவனுக்கு முத்தம் கொடுத்தாள்.

பாட்டி என்று கத்தும் சத்தம் கேட்டது. யுவி தான் இவர்களை பார்த்து கத்தி விட்டான். அவனருகே வந்து கவி அவனது வாயை மூட, அதற்குள் சத்தம் கேட்டு பாட்டி வந்தார்.

வேண்டாம் சொல்லாதே என்று சைகை செய்ய, அவன் கூறி விட்டான்.கவி அவனை முறைத்துக் கொண்டே நின்றாள்.

நீங்கள் ஆறு மாதங்கள் காத்திருந்தால் போதும். நம் ஊரு கோவில் விழா முடிந்தவுடன் திருமண தேதியை குறித்து விடுவோம் என்று கூற,

என்ன! ஆறு மாதங்கள் பார்க்காமல் இருக்க வேண்டுமா? இருவரும் கேட்க, அனைவரும் சிரித்தனர்.

ராஜாவிற்கு பாலாவிடமிருந்து போன் வந்தது. எனக்கு கல்யாணம் வீட்டில் முடிவு செய்துள்ளார்கள் கூற, அவன் சிரித்துக் கொண்டே கவியை பார்த்தான்.

என்னடா சிரிக்கிறாய்?அம்மா கேட்க,

பாலாவிற்கு கல்யாணம் முடிவு செய்துள்ளார்களாம். இன்னும் இரண்டே மாதத்தில் நாங்கள் சந்திப்போம். கவியை பார்த்துக் கொண்டே கூற,

அவர்கள் கல்யாணம் முடிந்த மறு மாதத்தில் உங்களுடைய கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் பாட்டி கூற, அனைவரும் அவரை பார்க்க,நான் சும்மா தான் ஆறு மாதங்கள் என்று கூறினேன் சிரித்தார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, கவி பாட்டியை கட்டிக் கொண்டாள்.

இரவு உணவு ஹோட்டலில் என்று பாட்டி கூற, அனைவரும் தயாரானார்கள். அங்கே சென்றவுடன் கையை கழுவ யுவி செல்ல, அங்கே வேலை செய்யும் இருவர் பாவம் விமலா….வேலை போக போகிறது என்று பேசிக் கொண்டிருக்க, அதை கேட்ட யுவி அங்கேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளுடைய குடும்பத்திற்காக எவ்வளவு உழைக்கிறாள். என் தங்கையும் இருக்கிறாள் பார். சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்க மாட்டாள்.

அவளுக்கு என்று யாராவது இருந்திருந்தால் அவளும் மற்ற பெண்கள் போல் இருந்திருக்கலாம். எவனாவது இரண்டு நாள் விடுப்பிற்காக வேலையிலிருந்து எடுப்பார்களா? என்று முதலாளியை திட்டிக் கொண்டிருந்தனர்.

வாயை மூடுடா, அந்த ஆளுக்கு தெரிந்தால், நம் வேலையும் போய் விடும் என்று பேசிக் கொண்டே சென்றனர்.

ஹோட்டல் முதலாளி அறைக்கு வெளியே நின்று யுவி பார்க்க, விமலாவை திட்டிக் கொண்டிருந்தார். அவள் கண்கலங்கியவாறு நிற்க, பின் அவள் வெளியே வருவதை பார்த்து ஒளிந்து கொண்டான்.

அவள் வெளியே வந்து கண்ணீரை துடைத்து விட்டு உள்ளே சென்றாள். அது பேமிலி ரெஸ்டாரண்ட்.

கொஞ்ச நேரத்தில் யுவியின் குடும்பம் சாப்பிடவிருக்கும் அறைக்குள் விமலா வந்தாள்.

கவி வேகமாக விமலா? நீயா? அவளும் அதிர்ச்சியோட அனைவரையும் பார்க்க, அனைவரும் அவளை பார்க்க, கவி எழுந்து வர, நோ….நோ…என்று கேமிராவை கண் சைகையில் காட்டினாள் விமலா. கவி அப்படியே உட்கார்ந்தாள். அவள் அனைவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைக்க யுவி அவளுடைய கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தான் அழுதிருப்பாளே!

பிரியங்கா கவியிடம் இந்த பொண்ணு தானே! கேட்க, அவள் சிரித்துக் கொண்டே யுவியை பார்த்தாள். அவன் முகமே சரியில்லாமல் இருந்தது. அவள் அவனுக்கு எடுத்து வைக்க வந்தாள். அவன் அவளது கையில் அவனது கைக்குட்டையை கொடுத்தான். இதை பிரியங்கா கவனித்து விட்டு, அவன் எதற்கு கைக்குட்டையை கொடுக்கிறான். அதில் எதுவும் எழுதி இருப்பானோ!

இல்லை. அவனது முகத்தை பாருங்களேன். ஏதோ சரி இல்லாதது போல் தெரிகிறது கவி கூற, சற்று பொறு. என்னவென்று பார்ப்போம் என்று கூறினாள் பிரியங்கா.

விமலா அனைவருக்கும் எடுத்து வைத்து விட்டு, எதுவும் வேண்டுமென்றால் இந்த மணியை அழுத்துங்கள். வந்து விடுவேன் என்று கூறி விட்டு இரண்டாவது அறைக்குள் நுழைந்தால் சரியான அதிர்ச்சி. கௌதமும் அவனது பெற்றோர்களும் இங்கே இருந்தனர். அவன் இவளை பார்த்தவுடன், குற்றவுணர்ச்சி தாங்காமல் எழுந்தான்.

சார், சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று அவனது வழியை மறைத்து, எங்களது ஹோட்டலில் அனைத்தும் நன்றாக இருக்கும் பேசிக் கொண்டே கண் சைகையிலே அவனை உட்கார சொன்னாள்.

அவனும் உட்கார்ந்தான். அனைவருக்கும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள் விமலா.

அவன், வேறொரு கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதலில் கையெழுத்திட்டு விட்டானா? அப்பா கேட்டார்.

அவன் போடவில்லை அம்மா கூற, போடமாட்டேன் என்றான்.

கோபத்தில் அவர் சாப்பாட்டு மேசையில் ஒரு தட்டு தட்ட, பக்கத்தில் விமலா குழம்பை எடுத்துக் கொண்டிருந்திருப்பாள். அவர் தட்டியதில் கொதிக்கும் குழம்பு அவள் மீது கொட்டி விட்டது. அவனுடைய அம்மாவும் அவனும் பதறி விட்டனர்.

அவள் பல்லை கடித்துக் கொண்டு கத்தாமல் அதை தாங்கிக் கொண்டிருக்க, அவளது கண்ணிலிருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அவன் அவனது அப்பாவை திட்டிக் கொண்டே, அவளது கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். அவனது அப்பாவும் அவனை திட்ட, அவளை அழைத்து செல்வதை நிறுத்தி விட்டு அவனது அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த யுவி விமலாவை பார்த்தான். அவள் அழுவதை பார்த்து எழுந்தவன் அவளது கையை பார்த்தவுடன் அவனது குடும்பம் அங்கிருப்பதை கூட பொருட்படுத்தாமல் வேகமாக ஓடி வந்தான்.

அனைவரும் எங்கே செல்கிறாய்? என்று கத்த, கவி, பிரியங்கா என அனைவரும் வெளியே வந்தனர். சட்டென விமலாவை இழுத்துக் கொண்டு கை கழுவும் இடத்திற்கு அழைத்து சென்று தண்ணீரில் அவளது கையை வைத்தான். அவளால் தாங்க முடியவில்லை இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு வலியை கண்ணீராக வெளியேற்றினாள். கவி மருந்து ஒன்றை எடுத்து வந்து காயத்தை சுத்தப்படுத்தி அதில் தடவ யுவி விமலாவை முறைத்துக் கொண்டு நின்றான்.

கௌதமை பார்த்தான். கோபமாக அவனருகே சென்று நீ இருக்கும் இடத்திலெல்லாம் அவளுக்கு ஆபத்தாக முடிகிறது என்று அவனை அடிக்க, அவனும் யுவியை அடிக்க, விமலா கவியின் கையை உதறி விட்டு, இருவருக்கும் இடையே வந்து நின்றாள். இருவரும் எதற்காக சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமில்லை என்று எப்பொழுதும் போல் விமலா கூற, இருவரும் அவள் பக்கம் திரும்பி அவர்கள் இருவரும் முன்னே வர, அவள் பின் சென்றாள்.

உனக்கு ஒன்றுமில்லையா? இருவரும் சேர்ந்தது போல் கேட்க, இரு குடும்பத்தாரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

உனக்கு அறிவேயில்லை. உன்னால் இதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? நீ மனிசியா? இல்லையா? உனக்கு வலிக்கவே வலிக்காதா? கௌதம் கத்தினான்.

உன்னால் இந்த வலியையும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியுமா? நீ எவ்வளவு தான் தாங்கிக் கொள்வாய்? யுவியும் கோபப்பட்டான்.

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் அழுதாய்? கவியை பார்த்ததும் சிரித்தாய்? இப்போதென்றால் இவ்வளவு பெரிய வலியை தாங்கிக் கொண்டிருக்கிறாய்? ஏன் உன்னால் வலியை வெளியே காட்டிக் கொள்ள முடியாதா? எத்தனை விசயத்தை தான் உன்னுள் புதைத்து வாழ்வாய்? அவளை பிடித்து யுவி உலுக்கினான்.

வருண் அங்கே வந்து, ஏன்டா உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா? அவளது வலியை அவள் மறைத்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

யுவி ஏற்கனவே அவளுடைய பிரச்சனை உனக்கு தெரியும் தானே! தெரிந்தும் அவளை மேலும் காயப்படுத்தாதே! அவள் வலியை மறைக்காமல் இருந்தால் என்ன நடக்குமென்று நீ இன்றே பார் என்று அவளிடம் வந்து அவளது கையை பார்த்து விட்டு மருந்தை போட்டு விட்டு வேலையை கவனி என்றான். அவள் செல்லும் நேரத்தில் அவளது முதலாளி அங்கே வந்து அவளை அழைத்தார். அவள் வெளியே வரும் போது அழுது கொண்டே வந்தாள்.

வருணிற்கு புரிந்தது அவளது வேலை போனது. சந்தோசமாக வீட்டிற்கு சென்று நிம்மதியாக உறங்குகள். ஆனால் நீங்கள் போட்ட சண்டையினால் அவளது வேலை போனது.

கௌதம் அம்மா, அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வருண், கௌதம் அருகே வந்து வாயில் இரத்தம் வரும் வரை அடித்தான். அவளருகே நீ மீண்டும் வந்தால் மவனே என் கையால் தான் சாவு…நடந்தது தெரிந்த அன்றே உன்னை கொன்றிருப்பேன். அவள் தடுத்ததால் நீ பிழைத்துக் கொண்டாய்.

அவளுக்கு யாருமில்லை என்று யாராவது அவளிடம் வாலாட்டினாள் செத்திடுவீங்கள். அது யாராக இருந்தாலும் சரி என்று யுவியை பார்த்து விட்டு அவளுக்கு தோழன் நானிருக்கிறேன் என்று கூறினான்.

                         “எங்களது உலகமே

                                   நட்பிலே முளைத்தது.

                            கானல் நீரல்ல நட்பு

                                     மறைந்து மறைந்து தெரிய

                             ஆகாயம் போல் பரந்தது

                                      யாராலும் அழிக்க முடியாதது

                             காதலினும் மேலானது

                                      நட்பின் உவமைக்கு

                              ஏதும் ஈடாகாது

                                    கடலின் ஆழம் போல்

                             நட்பின் ஆழம்

                                    அறிய முடியா சொர்க்கமாகும்”

கௌதம் அப்பா கையை தட்டி கொண்டே, பிள்ளை என்றால் இவனை போல் வேண்டும் என்று வருணின் தோளில் கை போட்டார்.

சார், எனக்கு நெருக்கமானவர்களை தவிர யாரும் என் மீது கை வைப்பது எனக்கு பிடிக்காது.

சரி தம்பி என்று கையை எடுத்தார். முதலாளி அவனையும் கூப்பிட, வெளியே வந்து அடையாள அட்டையை தூக்கி எறிந்து விட்டு சென்றான் வருண்.

விமலா தலை கவிழ்ந்தவாறு, அவளது பையை எடுத்துக் கொண்டு வெளியே வர கவிதா அவளது கையை பிடித்தாள். அதை எடுத்து விட்டு வெளியே சென்றாள். அவள் பின்னாலேயே வருணும் சென்றான். அனைவரும் சாப்பிட உள்ளே சென்றனர். பாட்டி யுவியை பார்க்க, அவன் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தான். நம் யுவி அந்த பெண்ணிடம் உரிமையுடன் பேசியது போல் தெரிந்ததே என்று யோசித்தார்.

இங்கே என்ன நடந்தது? அந்த பையன் கௌதம் தானே? அந்த பொண்ணு யார்? இதுவரை என்னுடைய அனுபவத்தில் எத்தனை பெண்களை பார்த்திருப்பேன். ஆனால் இந்த பெண் வித்தியாசமாக இருக்கிறாள் பாட்டி கூறினார்.

கவி நீயும் நன்றாக பேசினாயே! உனக்கு தெரியுமா அந்த பெண்ணை?

கவிதா கண்கலங்கி கொண்டே தலையசைக்க, ராஜா அவளது கண்ணீரை துடைத்து விட்டு, வீட்டில் வைத்து பேசிக் கொள்ளலாமே! பாட்டி. பொது இடத்தில் வேண்டாமே! கூற, அவரும் சரி என்றார்.

யுவி எழுந்து சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன் என்று கிளம்பினான்.

எங்கே செல்கிறாய்? அம்மா கேட்டார்.

வருண், விமலாவை பார்க்க என்றவுடன் கவி, நானும் வருகிறேன் என்றாள். ராஜாவும் எழுந்தான்.

மச்சான் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் வந்து விடுவோம் என்று பைக்கை எடுக்க, கவியும் ஏறினாள்.

இருவரும் சென்று கொண்டிருக்க, ஓரிடத்தில் வருண் மீது சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் விமலா.

கவியை பார்த்தவுடன் விமலா, அவளை அணைத்துக் கொண்டு அழுது கொண்டே, நான் இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மாவை எப்படி காப்பாற்றுவது? எனக்கு வேலை போய் விட்டது. என்னிடம் குறைந்த அளவு தான் பணம் உள்ளது.

அவளை பார்த்து விட்டு யுவி, வருணிடம் சென்று அவளது அம்மாவிற்கு என்ன பிரச்சனை?

அம்மாவிற்கு மாரடைப்பு உள்ளது. சாதாரணமாக மூன்று முறை மாரடைப்பு வந்தாலே இறந்து விடுவார்கள். அவளது அம்மாவிற்கு ஐந்து முறை வந்துள்ளது. உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். ஆனாலும் உயிரோடு இருப்பது சந்தேகமாக உள்ளது. விமலாவும் எதையோ மறைப்பது போல் உள்ளது. அதை குணப்படுத்த தான் இப்படி கஷ்டப்படுகிறாள். அதை அவளிடம் கூறி அம்மாவின் பரிசோதனைக்கான அனைத்தையும் கேட்டேன். தர மாட்டேன் என்கிறாள். அதை கேட்டாலே பயப்படுகிறாள்.

என்ன கூறுகிறாய்?

உன்னால் முடிந்தால் அவளிடமிருந்து வாங்கி, என்னவென்று கண்டுபிடி.

நான் பேசினால் தருவாளா?

கண்டிப்பாக தருவாள். நீ பேசும் விதத்தில் தான் உள்ளது.

எப்படி பேசுவது? ஏன் உனக்கு தெரியாதா?

அவள் உன்னை மூன்று வருடங்களாக காதலிக்கிறாள். இதுவரை உன்னிடம் கூறியதே இல்லை.

உன்னை கல்லூரி முதல் நாளே பார்த்தோம். நாங்கள் பள்ளியிலிருந்தே நண்பர்கள். சேர்ந்தே தான் இருப்போம். எனக்கும் அவளை பிடிக்கும். அவள் உன் மீதுள்ள காதலில் உறுதியாக இருந்தாள். அதனால் நான் அவளை விட்டு விட்டேன்.

நீ முதலில் வந்த போது அமைதியாக தான் இருந்தாய். உனக்கு கௌதம் எப்பொழுது பழக்கமானானோ அன்று தான் மாற ஆரம்பித்தாய். அவள் அவளுடைய வேலையில் கண்ணாக இருந்தாலும், உன்னையும் பின் தொடர்ந்து கவனித்தாள். நீ உன்னை மறந்து இருந்த வேலையில் உன்னிடம் எத்தனை பெண்கள் தவறாக நடந்து கொள்ள பார்த்தார்கள் தெரியுமா? என்னை தான் உதவிக்கு அழைத்து வருவாள். நான் தான் உன்னை உன் காரில் வைத்து வீட்டருகே விட்டு செல்வேன்.

நீயும், அவளும் மாறான பழக்கமுடையவர்கள். உனக்கு எல்லாரும் இருந்தாலும் இல்லை என்று தன்னம்பிக்கை இழந்து இருப்பாய். அவள் தனியாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடுவாள். நீ அவளை விட்டால் அவளை போல் உன்னை பார்த்துக் கொள்ள யாராலும் முடியாது. சிந்தித்து செயல்படு. இன்று போல் அவளிடம் பேசாதே! அவள் கவியின் தோளிலே சாய்ந்து தூங்கி விட்டாள். அவளை எழுப்பி, நீ இவர்களுடன் செல். ரொம்ப நேரமாகி விட்டது. ரோஜா தனியாக இருப்பாள் என்று வருண் கிளம்பினான்.

விமலாவை யுவிக்கு அருகே உட்கார வைத்து அவள் பின்னே கவி உட்கார்ந்தாள். அவளை வீட்டில் இறக்கி விட்டு, கவியும் யுவியும் வீட்டிற்குள் வந்தனர். பாட்டியும், ராஜாவும் இருந்தனர்.

கவி ஏதும் பேசாமல் உள்ளே செல்ல, கவி என்னுடைய அறைக்கு வா பாட்டி அவளை அழைக்க, யுவியை பார்த்து விட்டு சென்றாள்.

பாட்டியிடம் நடந்த அனைத்தையும் சொன்னாள் கவி. ராஜாவை பார்த்து விட்டு யுவி உள்ளே சென்றான். அவனால் தூங்கவே முடியவில்லை. இன்று நடந்தது, வருண் கூறியது அனைத்தும் வந்து வந்து சென்றது. அவனால் முடியாமல் வெளியே வந்து நடு ஹாலில் அமர்ந்திருந்தான் யோசித்தபடி பாட்டி அவனருகே வந்தார். அவரது மடியில் தலை வைத்து படுத்தான். அவன் இவ்வளவு தூரம் வருத்தப்படுவதை பார்த்து, அவர் கவலைப்பட்டாலும், தன் பெயரன் திருந்தி விட்டான் என்று ஆனந்தமாகவும் இருந்தது.கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டான்.

Advertisement