Advertisement

அத்தியாயம் 24

கௌதம் கூறிய இடத்திற்கு வந்தார்கள். ராஜாவும் கவியும் காரிலே மறைந்து இருந்தனர். யுவி மட்டும் உள்ளே சென்றான். அவனுடைய நண்பர்கள் எல்லாரிடமும் எப்பொழுதும் போல் பேசி விட்டு சுற்றி சுற்றி பார்த்தான்.

அந்த பொண்ணு எங்கடா?

அவர்கள் அவளை காட்ட, முகம் முழுவதும் அவனிடம் அடி வாங்கி சிவந்து அவனது கை தடத்துடன் இருந்தது. வாயிலிருந்து இரத்தம் ஒழுக யுவிக்கு மனம் பதறிப் போனது. அதை காட்டிக் கொள்ளாமல் என்னடா இப்படி அடித்திருக்கிறாய்? போலீஸ் வழக்காகி விடாமல்.

அதெல்லாம் ஏதும் ஆகாது. இவளை பற்றி விசாரித்து பின் தான் அவளை இழுத்து வந்தேன். அவளுக்கு ஒரு நோயாளி அம்மா, தங்கை மட்டும் தான். வேறு அவளுடைய நண்பர்கள் அந்த வருணும், நிலாவும் தான்.

அது சரி. நீ என்னடா அக்கா திருமணம் முடிந்த கையோடு வந்திருக்கிறாய் போல கௌதம் கேட்க, அவள் மயக்கத்தில் தான் இருந்திருப்பாள். இப்பொழுது விழிக்கவே, ஆறு பேரை பார்த்து பயந்தவாறு அவள் இருக்க அதில் யுவியை பார்த்து மனம் உடைந்து போனாள்.

ஆமாம்டா, இப்பொழுது தான் திருமணம் நல்ல படியாக முடிந்தது.  அதனால் தான் நீ கூப்பிட்டவுடன் வந்து விட்டேன்.

இங்கே பாருங்கள்டா, அவள் விழித்து விட்டாள் என்று கூற, அனைவரும் அவளருகே வந்தனர்.

அவள் பயந்து கொண்டே அவர்களை பார்க்க, ஒருவன் மட்டும் அவளருகே வந்து அவளை முகர, அவள் கண்களை மூடிக் கொள்ள கண்ணிலிருந்து நீர் சொட்டியது.

நீ வாசனை திரவியங்களை போட்டுக் கொள்ள மாட்டாயா?இருந்தும் உன் மேல் அருமையான வாசனை வருகிறது அவன் கூற,

அப்படியா? என்று அனைவரும் அவளருகே செல்ல, நான் சீக்கிரம் செல்ல வேண்டும். என்னை தேட ஆரம்பித்து விடுவர். கவி இருக்கிறாளே! பத்திரகாளி ஆகி விடுவாள் என்று யுவி அவர்களை திசை திருப்பினான்.

ஆமாம்டா மச்சான், அவள் உனக்கு அக்கா முறையாமே! உன் காதல் ஆரம்பிக்கும் முன் முடிந்து விட்டது.

நீ நினைத்தால் இப்பொழுது கூட கை கூடும் ஒருவன் கூற, ராஜா கோபமாக கேட்டுக் கொண்டிருக்க, கவி தான் அவனது கையை பிடித்துக் கொண்டு அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

என்னடா பேசுற? அதெல்லாம் முடிந்து விட்டது. எனக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் அவள் என் மச்சானுடன் இருக்கும் போது தான் அவளது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது யுவி கூறினான்.

நீ எப்படா இவ்வளவு நல்லவனாக மாறினாய்?

அதை விடுங்கடா,….

அவன் கவியை காதலித்தது இவளுக்கும் தெரிந்திருக்கும் போல, சோகமுடன் அவனை பார்த்தாள்.

அவளது கட்டை அவிழ்த்து விடுங்கடா என்று ஒருவன் கூறினான்.

நான் இவளை முதலில் கவனிக்கிறேன் என்று பேசிக் கொண்டே கௌதம் அவளருகே வந்து கட்டை அவிழ்க்க அவள் மிகவும் சோர்வோடு காணப்பட்டாள். அவளை தரதரவென்று ஒர் அறைக்குள் இழுத்து செல்ல, அவளால் கத்த கூட முடியவில்லை. அவனை அடித்துக் கொண்டே ஏக்கத்தோடு யுவியை பார்த்தாள்.

டேய் நில்லு, எனக்கு நேரமாகிறது. நான் முதலில் முடித்து விட்டு செல்கிறேன் என்று யுவி கூற,

சீக்கிரம் வந்து விடுடா. ரொம்ப நேரம் அவளுடன் இருந்து என்னை நானே கட்டுபடுத்தி வைத்திருக்கிறேன் கௌதம் கூறி விட்டு, அவளை யுவி மீது தள்ள அவன் அவளை பிடித்து உள்ளே இழுத்து சென்றான். அவள் அவனது கையை எடுக்க முயற்சித்தவாறு அவனுடன் அழுது கொண்டே சென்றாள்.

இருவரும் அறைக்குள் நுழைந்தனர். அவளை தள்ளி விட்டு அவளருகே யுவி வந்தான்.

தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் இனி உங்களது வழிக்கே வர மாட்டேன் ப்ளீஸ் என்று கெஞ்சினாள். வெளியே இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

உனக்கு தான் என்னை பிடிக்குமே? அப்புறம் எதற்கு பயப்படுகிறாய்? அவளருகே அவன் வர, அவள் பின்னே சென்றாள்.

வேண்டாம். இவ்வாறு செய்யாதே! என்று அழ ஆரம்பித்தாள். அவள் பயந்து தவித்து போய் நிற்க அவளருகே நெருக்கமாக வந்து, அவளது இதழ்களை வருடினான். அவள் இதழ்கள் நடுங்கவே அதனை பிடித்து இருந்த இரத்தத்தை துடைத்து விட்டு அவளது கன்னத்தோடு அவனது கன்னத்தை உரசியவாறு வைத்து விட்டு அவளது காதருகே சென்று, பயப்படாதே, உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உனக்கு உதவ தான் வந்திருக்கிறேன். நான் சொல்வது போல் செய் என்று அவளை கத்த சொன்னான்.

இவன் உதவ வந்திருக்கிறானா? இல்லை என்னை ஏமாற்றுகிறானா? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவன் அவளது கண்ணையே பார்க்க, அவள் அவனை தள்ளினாள். அங்கிருந்த பொருள் மீது அவனது கால் இடித்து, ஆ…..வென்று கத்தினான். அவளோ ஒரு பதட்டத்தில் என்ன ஆயிற்று? அவனருகே வர, தரையில் கால் வழுக்கி அவன் மீது விழுந்து அவள் கத்தினாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவளிடம் கொஞ்சம் எழுகிறாயா?

அவள் அவனை பார்த்து, என்ன?

அவன் சட்டென அவளை திருப்பி அவள் மீது அவன் இருக்க, அவள் அப்பொழுது தான் உணர்ந்தாள்.

நீ என்ன செய்கிறாய்?அவள் கேட்க,

நான் என்ன செய்தேன். நீ தான் நான் பேசியதை கவனிக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்? அவள் அவனை தள்ளி விட்டு எழுந்தாள்.

நீ கீழே படு என்று அவன் மண்டியிட்டு, அவனிடமிருந்த மருந்தை எடுத்து அவளருகே வந்து, அவளது கண்ணில் ஊற்றி விட்டு கண்ணை மூடிக் கொண்டு, நான் சொல்லும் போது மூச்சு விடாமல் கொஞ்ச நேரம் சமாளித்துக் கொள் என்று கூற, கவியோ

டேய்,சீக்கிரம் வெளியே வா. அவர்கள் கண்டுபிடித்து  விடுவார்கள்.

வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கிறாயா? நீங்கள் தயாராக இருங்கள் அவன் கூற, நான் ஏதும் பேசவில்லையே விமலா கூற,

அட, உன்னிடம் நான் பேசவில்லை அவன் கூறினான்.

நீ யாருடன் பேசுகிறாய்?

இரண்டு பேரும் சும்மா இருங்கள் என்று அவன் கூற, ராஜா சிரித்தான்.

சும்மா இருங்கள் ராஜா என்றாள்.

கவி, நீ வாயை திறந்த உன்னை கொன்னுடுவேன் என்று யுவி கூற,

ராஜாவோ கவியை பார்த்துக் கொண்டிருக்க, இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கவி கேட்டாள்.

நான் என்னவளை ரசித்துக் கொண்டிருக்கிறேன் அவன் கூற,சும்மா இருங்கள் ராஜா கவி வெட்கப்பட்டாள்.

வெட்கப்படும் போது கூட அழகாக இருக்கிறாய் ராஜா கூற, அவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

இரண்டு பேரும் என்ன செய்கிறீர்கள்? கடுப்பை கிளப்பாதீர்கள்? மச்சான் உங்களுடைய ரொமான்ஸை அப்புறம் வைத்து கொள்ளுங்கள்.

என்னால கேட்க முடியல.

சரி, சீக்கிரம் நீ வா ராஜா கூற,

அவர்களும் வந்திருக்கிறார்களா? விமலா கேட்டாள்.

அவர்கள் தான் உனக்கு உதவ என்னை அழைத்தார்கள் என்று அவன் மாற்றி கூறினான். அவள் வருத்தமடைந்தாள். அவர்கள் உதவிக்கு அழைத்து தான் இவன் வந்திருக்கிறான் என்று அவளும் நினைத்துக் கொண்டாள்.

ஏன்டா, இப்படி பேசுகிறாய்? விருப்பத்துடன் தானே உதவ வந்தாய்? கவி கேட்க,

இதை பற்றி பேசும் நேரம் இது அல்ல என்று பேசிக் கொண்டே, அவனுடைய சிறிய கத்தியை எடுத்து விமலாவின் ஆடையை அங்கங்கு கிழித்து விட்டு, நன்றாக கவனி. அவர்களை நீ இறந்தது போல் ஏமாற்ற போகிறோம். கண்ணிலிருந்து கண்ணீர் தடத்துடன் உன்னை தூக்கி காரில் போட்ட பின் தான் நீ விழிக்க வேண்டும். அதுவும் கவியின் சத்தம் கேட்டு.

அவனது சட்டையை கழற்றி விட்டு, தயாராக இருங்கள் என்று கதவை திறந்தான். அவனது நண்பர்களிடம் அவள் மயங்கி விட்டாள். பயமாக உள்ளது என்று பதற, அனைவரும் அவளருகே வந்து,

இதயதுடிப்பு, மூச்சு எல்லாவற்றையும் பார்த்தனர். அவள் மூச்சை பிடித்திருந்ததால், அவளுக்கு மூச்சு இல்லை. இதயம் துடிக்கிறது என்று அவர்கள் பேசினார்கள்.

வாங்கடா, இவளை மருத்துவமனையில் சேர்த்து விடுவோம் என்று யுவி கூற, உனக்கென்ன பைத்தியமா? அவளுக்கு காயம் அதிகமாக உள்ளது. அதுவும் இல்லாமல் உங்களுக்குள் எல்லாம் முடிந்தது. இது வெளியே தெரிந்தால் என்ன ஆகும் இவளை இப்படியே விட்டு செல்லலாம் என்று கௌதம் கூறினான்.

இது உன்னுடைய இடம் என்று அனைவருக்கும் தெரியும். அவளை இங்கே விட்டு செல்வது உனக்கு தான் ஆபத்து.

அவளை போகும் இடத்தில் எங்காவது விட்டு சென்று விடுவோம் என்று ஒருவன் கூற, ம்ம்…எல்லாம் என்னால் தானே! நானே பார்த்துக் கொள்கிறேன் என்று யுவி கூற, அனைவரும் அவளை தூக்கி கொண்டு யுவியின் காரில் போட, அவள் ஆடை கிழிந்து இருப்பதை கூர்மையாக கவனித்தான் கௌதம். கௌதமிற்கு சந்தேகம் எழுந்தது.

அவனுடைய நண்பர்கள் மூவர் உள்ளே ஏற, நீ இரு நான் செல்கிறேன் என்று கௌதம் முன் வர, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் யுவி கூற அவன் கேட்காமல் இருக்க, நான் தான் கூறுகிறேனே! என்று யுவி கொஞ்சம் சத்தமிட, அவனுடைய சந்தேகம் ஊர்ஜிதமானது.

அவளுக்கு ஏதும் இல்லை தானே!கௌதம் கேட்டுக் கொண்டே அவளருகே வந்தான். யுவி அவளை மறைத்து நின்றான்.

வழியை விடு…கௌதம் சத்தமிட, முடியாது என்று யுவி நிற்க, இதற்கு மேல் உள்ளே இருந்தால் சரி வராது என்று காரின் பின்னே இருந்து ராஜாவும், கவியும் வெளியே வந்தனர்.

யுவி நீ எங்களை ஏமாற்றிவிட்டாயே! கௌதம் கத்தினான்.

ராஜா அவனருகே வந்து, உனக்கு என்ன தான் பிரச்சனை? அன்று பிரச்சனையில் சண்டை நமக்கு தான். ஆனால் அதை காரணமாக வைத்து தான் இந்த பெண்ணை காயப்படுத்துகிறாயா? என்னால் நம்ப முடியவில்லை.

அவளை என்னிடம் விட்டு நீங்கள் செல்லுங்கள் என்று கௌதம் கூற,

அவளுக்கும் உனக்கும் என்ன? ராஜா கேட்டான்.

அவளுக்கு யுவியை பிடித்தது தான் என் பிரச்சனை.

என்ன பேசுகிறாய்? யுவி கேட்க, உன்னை என்னுடைய பெற்றோர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை மாதிரி இருக்க கூறி தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். நான் ரௌடி மாதிரி இருக்கிறேனாம். நீ படிப்பில் முன் இல்லை என்றாலும் எல்லாரிடமும் நன்றாக நடந்து கொள்கிறாயாம்.

வீட்டில் உன் புராணம் என்றால் கல்லூரியில் இவள். எப்பொழுதும் உன் பின்னே தான் சுற்றுவாள்.

முதலில் பார்த்தவுடனே எனக்கு அவளை பிடித்தது. ஆனால் அவளும் உன் பின்னாலே சுற்றுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் உன்னுடைய நல்ல குணத்தை மாற்றவே கிளப் பெண்கள் என்று உன்னை சுற்ற வைத்தேன். அதில் இவள் இடையே வந்தாள் கவியை கை காட்டினான். அவளை ஏதாவது செய்யலாம் என்று நினைத்த நேரத்தில் நீயாகவே மறுபடியும் என்னுடைய வழிக்கு வந்தாய். அதில் இவள் வந்து குறுக்கிட்டாள். அதனால் தான் இவளை கடத்தி அவள் உன்னை வெறுக்கும் படி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அவள் என்னை வெறுப்பது இருக்கட்டும். அவள் உன்னை தானே முதலில் வெறுப்பாள். அதை யோசித்தாயா?

அவளுக்கு என்னை பிடிக்கும் என்றால் எனக்கும் பிடித்து விடுமா? என்ன? அவளுக்கும் எனக்கும் ஒன்றுமில்லை. இதுவரை நீ இவ்வாறு நடந்து கொண்டதில்லை. இவளுக்காகவா? இப்படி செய்தாய்?

நீ வேண்டுமானால் அவளை காதலித்துக் கொள். எனக்கு அவள் மீது காதல் வராது என்று யுவி கூறவே, விமலா அழுது கொண்டே காரிலிருந்து இறங்கினாள். கண்ணீரை துடைத்து விட்டு விமலா வெளியே வந்து கௌதம் கன்னத்தில் பளாரென்று ஒன்று கொடுத்து விட்டு,

நான் யுவியை காதலிக்கிறேன் தான். என்னுடைய நிலையை கொஞ்சமாவது யோசித்தாயா?

உனக்கு என் மீது உண்மையான காதல் இருந்தால், நீ என்னை பாதுகாத்து இருப்பாய். உனக்கு அவனை வெற்றி அடைய நான் தான் கிடைத்தேனா?

அதுவும் உன்னுடைய நண்பர்களை வைத்து, என்னை என்ன செய்ய பார்த்தாய்?

காதலிக்கும் பெண்ணிடம் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா? உனக்கு என் மேல் காதல் இல்லை. யுவி மீது உனக்கு பொறாமை.

உனக்கு உண்மையிலே காதல் யார் மீதாவது வந்தால் தான் புரியும். காதல் எதையும் எதிர்பாராமல் காதலிப்பவர்களை பாதுகாக்க மட்டும் தான் தோன்றும். அவர்களது சந்தோசம் தான் நமக்கு முக்கியமாக தெரியும்.

என்னுடைய வாழ்க்கையை பற்றி உனக்கு தெரியுமா? நான் ஒரு நாள் கூட எனக்காக எதுவும் செய்யததில்லை அவனை காதலித்ததை தவிர.

என் படிப்பு, என் தங்கையின் படிப்பு, என் அம்மாவிற்கான மருத்துவ செலவிற்காக இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்து தான் என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நீ இவ்வாறு செய்ததால் என் வாழ்க்கை என்னாவது?

உங்கள் அனைவருக்கும் பணம் என்பது சாதாரண விசயம் தான். ஒரு நாள் உழைத்து பாருங்கள். அப்பொழுது தான் அந்த பணத்தின் அருமை உங்களுக்கு புரியும் கூறிக் கொண்டே மயங்கி கீழே விழுந்தாள்.

கௌதம் அவளை பார்த்து வருத்தமடைந்தான். கவி, யுவி, ராஜா அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவளுடைய காயத்திற்கு மருந்துகள் போட்டு, அவள் சோர்வாக இருப்பதால் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அவள் பேசியதை பற்றியே யுவி யோசித்துக் கொண்டே, அவளை பார்த்தவாறு நின்றான். இதுவரை யாரும் தன் மீது இவ்வளவு அக்கறையுடன் நடந்து கொண்டதில்லை. எனக்காக இந்த பொண்ணு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் இருந்தும் நான் பேசியதை வைத்து என் மீது கோபப்படாமல் இருக்கிறாளே! நினைத்துக் கொண்டு, தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கவி அவளுடைய போனை எடுத்து, அவளுடைய தங்கைக்கு போன் செய்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் வந்து, விமலாவை பார்த்து அழ ஆரம்பித்தாள்.

கவி, அவளை தனியே அழைத்துச் சென்று, உன் அக்காவிற்கு ஒன்றுமில்லை. அவள் சோர்வாக இருப்பதால் தான் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கிறது என்று சமாதனப்படுத்தினாள். இருவரும் அவளிடம் வர, அவளும் விழித்தாள்.

அக்கா என்று அவள் கண்கலங்க சிறு புன்னகையுடன் விமலா, எனக்கு ஒன்றுமில்லை. நீ வீட்டு பாடங்களை முடித்து விட்டாயா? என்று இருவரும் பேசி விட்டு அவளது கையில் இருந்த ஊசியை எடுத்து விட்டு எழுந்தாள்.

அக்கா, என்ன செய்கிறாய்?

வேலைக்கு நேரமாகிறது. நான் கிளம்புகிறேன் என்று கூற, கவிதா அவளை பிடித்து விடாமல் இருக்க, செவிலியர் அங்கே வந்து திட்டினார்.

ராஜாவும்,யுவியும் உள்ளே வந்தனர். என்ன நடக்கிறது? ராஜா கேட்க,

சார், என்னிடம் கொடுக்க பணமெல்லாம் இல்லை. நான் வேலைக்கு வேறு செல்ல வேண்டும் என்று விமலா கூற,

ராஜாவும், யுவியும் அவள் மீது கோபப்பட, நீ எந்த நிலையில் இருந்து தப்பி வந்திருக்கிறாய்? யுவி கத்தினான்.

உன்னுடைய உடல் நிலை சரியானால் தான், இரண்டு நாட்களுக்கு பின்னாவது வேலை செய்ய முடியும் ராஜா கூறினான்.

இரண்டு நாட்களுக்கு பின்னா? இல்லை. நான் இப்பொழுதே சென்றாக வேண்டும். அப்புறம் என் வேலையை இழந்து விடுவேன் என்று கூற,

யுவியை பார்த்து, விமலாவின் தங்கை அவனையே பார்த்துக் கொண்டிருக்க, பின் அவர்கள் பேசுவதை கவனித்து விட்டு, என்ன நிலையில் இருந்தாள்? என்று தங்கை கேட்க, அனைவரும் விழித்தனர்.

விமலா அவளை சமாதானப்படுத்த முயல, சொல்கிறாயா? இல்லையா? அவள் கத்தினாள்.

புரிந்து கொள்ளும்மா. ஒன்றுமில்லை விமலா கூற, நீ சொல்கிறாயா? அம்மாவிடம் நீ இங்கே இருப்பதை கூறவா? அவள் கிளம்பினாள்.

போகாதே! என்று நடந்ததை கூறினாள் விமலா.

இவனால் தான் பிரச்சனையா? வேகமாக யுவி அருகே அவள் வர, ரோஜா நில்லு…விமலா சத்தமிட்டாள்.

இப்பொழுது கூட, இவன் சரி என்று கூறுகிறாயா?

உதவி செய்ததே இவன் தான். நீ இங்கே வா. எதற்கு உனக்கு இவ்வளவு டென்சன்? என்று அவளது கையை விரித்து கூப்பிட, குழந்தை போல் ரோஜா ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

எனக்கு இருப்பதே நீ மட்டும் தான். அம்மாவும் நம்முடன் இல்லை. உனக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாதுக்கா அவள் அழ, அவளது கண்ணிலும் நீர் வழிந்தது.

அனைவரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, ரோஜாவோ அக்கா முதலில் உன் உடல் நிலை தான் முக்கியம். இங்கேயே இரு என்று கூற,

எப்படி இருப்பது? விமலா கேட்க, ரோஜா அவளது வாயில் இவள் கை வைத்து, நீ எதுவும் பேசாதே! இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.

நீ என்ன செய்ய போகிறாய்?

விமலா போனை எடுத்து  வெளியே வந்து வருணிற்கு போன் செய்தாள். அவனும் நிலாவும் ஐந்தே நிமிடத்தில் வந்தனர்.

ஏய், என்னடி ஆயிற்று? நிலா கேட்க,

ஒன்றுமில்லை என்று விமலா கூறி விட்டு, வருணை பார்த்து, எனக்காக இரண்டு நாட்களுக்கு நம்ம பசங்கள் யாரையாவது வேலை செய்ய சொல்கிறாயா? அதற்கான பணத்தை தருகிறேன்.

ஒரு நாள் நான் பார்த்துக் கொள்கிறேன்.  பணம் முக்கியமில்லை. ஆனால் அனைவருக்கும் அன்று வேலை அதிகமாக இருக்கும். இரவு பன்னிரண்டு மணி கூட ஆகும்.

அவள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கவே ரோஜா வருணிடம், நான் அக்காவிற்கு பதில் வரலாமா?

வருணும், விமலாவும் ஒன்றாக முடியாது என்று கூறினர்.

ஏன் என் அக்காவிற்கு பதில் நான் வரக்கூடாது?

அது சரிவராது வருண் கூற.

நீ இன்னும் பள்ளியை கூட முடிக்கவில்லை. உன்னுடைய படிப்பை மட்டும் பார் என்று விமலா அதட்டினாள்.

நீ படித்து முடித்து விட்டாயா? உன் வயது பொண்ணுங்கலாம் எப்படி இருக்கிறார்கள்? கோபமாக பேச,

இங்கே பார் ரோஜா, எல்லாரை மாதிரியும் நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எது சரி என்று தெரியும் என்று விமலா கூற,

அக்காவும், தங்கையும் நிறுத்துகிறீர்களா? நிலா சத்தமிட்டு விட்டு வருணையும் விமலாவையும் பார்க்க, வருண் விமலா கையை பற்றியவாறு பேசிக் கொண்டிருந்திருப்பான். அவன் அவளது கையை விடாமல் இருப்பதை கூற, அவன் சட்டென்று கையை எடுத்தான். இதை பார்த்து யுவி இருவரையும் முறைத்தவாறு நிற்க இப்பொழுது தான் வருண், யுவியை பார்த்தான்.

இவன் எதற்கு இங்கே இருக்கிறான்? என்று கோபமாக யுவியை பார்த்து விட்டு விமலாவை பார்க்க, அவன் தான் உதவி செய்தான் என்று கூறினாள். ரோஜா அவனிடம் முழுவதையும் கூற வாயெடுக்க, விமலா அவளது கையை பிடித்து வேண்டாம் என்று தலையசைத்தாள். இதை ராஜாவும் கவியும் கவனித்தனர்.

ராஜா அவர்களருகே வந்து, இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவமனையின் செலவிற்கான பணத்தை கட்டியதற்கான ரசீதை கொடுத்தான்.

நீங்கள் எதற்கு கட்டினீர்கள்?

யாராக இருந்தாலும் அவர் இப்படி தான் செய்திருப்பார் என்று கவி கூற,

விமலா அதற்கு, நான் மருத்துவமனையிலிருந்து  வந்தவுடன் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்.

கவி, அதெல்லாம் இருக்கட்டும் என்று கூற,ராஜா கவி கையை பிடித்து உன்னுடைய விருப்பம்மா என்றான்.

நீங்கள் கிளம்புங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வருண் கூறினான்.

ஆமாம், நேரமாகி விட்டது. அனைவரும் நம்மை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் ராஜா கூற, கவியும், யுவியும் விமலாவை பார்த்து விட்டு கிளம்ப, ஒரு நிமிடம் நில்லுங்கள் என்று அழைத்து எனக்கு உதவியதற்கு நன்றி என்று கூறினாள். பின் அனைவரும் கிளம்பினார்கள். யுவி விமலாவை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு சென்றான். இரண்டு நாட்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து விமலாவை பார்த்து விட்டு சென்றனர்.

அவள் மருத்துவமனை விட்டு வெளியே வந்தாள். கல்லூரிக்கு சென்றாள். யுவியும் நண்பர்களும் தனித்தனியே இருந்தனர்.

என்னடி, இவர்கள் தனியே இருக்கிறார்கள். எங்கடி கௌதம்?

அவன் இரண்டு நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை நிலா கூறினாள்.

என்ன! அவன் வரவில்லையா? என்னால் தான் என்று கவலையுடன் உட்கார்ந்தாள்.

உன்னாலா? என்ன கூறுகிறாய்? கேட்க, விமலா நடந்ததை கூற, அதை கையில் கேக்குடன் வந்த வருண் கேட்டு விட்டு, இவ்வளவு நடந்து இருக்கிறது. எதுவும் கூறாமல் இருந்து விட்டாய்? அவனை என்று அவன் நகர, கௌதம் நண்பர்களை பார்த்து, சண்டை போட ஆரம்பித்தான்.

நில்லுடா, வேண்டாம்டா…விமலா கத்தினாள்.

அவர்களை சும்மா விடாதே டா என்று நிலாவும் வருணிடம் கூற, சும்மா இரு நிலா என்று அவளிடம் கோபப்பட்டு விட்டு வருணை அழைக்க

அவன் கேட்கவே இல்லை. அவனை இழுத்து அறைந்து விட்டு அழுது கொண்டே சென்றாள். யுவி அப்பொழுது தான் விமலாவை பார்த்தான்.

அவள் பின்னே வருணும், நிலாவும் செல்ல யுவியும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.

வருணை பார்த்து கோபமாக, என்ன செய்கிறாய்? புரிந்து தான் செய்கிறாயா? போடா….போ நல்லா சண்டை போடு காரணத்தையும் கூறி என்னுடைய மானத்தையும் வாங்கி விடு. போ என்று அவனை தள்ளினாள். நானே இப்பொழுது தான் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். அங்கு தான் எதுவும் நடக்காமல் யுவியும், அவனுடைய குடும்பத்தாரும் காப்பாற்றி விட்டார்களே! தயவு செய்து அதை பற்றி நியாபகப்படுத்தாதீர்கள்…..என்று அழுதாள்.

சரி அழாதே. அதை பற்றி நாங்கள் நினைவு படுத்த மாட்டோம்.  என்று விமலாவிடம் நிலா கூறி விட்டு வருணிடமும் பேசி சமாதானப்படுத்தினாள்.

 

 

 

 

 

 

 

Advertisement