Advertisement

அத்தியாயம் 23

வெளியே சென்ற ராஜாவிடம் பிரியங்கா பேசிக் கொண்டிருந்தாள். அங்கே வந்த அவளது சொந்தக்கார பொண்ணு..

பிரியங்கா…. சித்தி கவிதாவை அடித்து விட்டார். அவள் அழுது கொண்டே அவளது அறைக்கு சென்று விட்டாள் என்று கூற, பிரியங்காவும் வேகமாக உள்ளே சென்றாள். ராஜாவிற்கு போன் வர, நான் அப்புறம் பேசுகிறேன் என்று உள்ளே சென்றான்.

பிரியங்கா நேராக யுவியிடம் சென்று கேட்க, அவன் அனைத்தையும் கூறி விட்டு, என் மீது தான் தவறு என்று கூறினான். பின் தான் ராஜா வந்தான்.

பிரியங்காவோ அவனை பளாரென்று அறைந்து விட்டு,என்ன செய்து விட்டாய்?

அவள் யாரென்று உனக்கு தெரியுமா?

யாராக இருந்தால் என்ன? யுவன் கேட்டான்.

நான் எப்படி கூறுவது? பிரியங்கா யோசித்து விட்டு, டேய் உன்னை அவளால் காதலிக்கவே முடியாதுடா என்று கூறி விட்டு அவனது அம்மாவிடம் சென்று,

ஏன் சித்தி, ஒரு நாளாவது அவனிடம் ஆசையாக பேசி இருப்பீர்களா? ஒரு நாளாவது சாப்பாடு ஊட்டி விட்டுருப்பீர்களா? அவன் கெட்டு போனதற்கு நீங்களும் நம் குடும்பமும் தான் காரணம் .பாட்டி அவனிடம் கடுமையாகவே நடந்து கொள்வீர்கள், கேட்டால் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பீர்கள்.

அவனை யார் கவிதாவிடம் ஒப்படைத்தது. அவனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எதற்காக அவளிடம் கொடுத்தீர்கள்? அவள் அவனிடம் கொஞ்ச நேரம் தான் பேசினாள். வேரொன்றும் இல்லை அவளது நிலையை தான் கூறினாள். அவன் அதற்கு என்ன கூறினான் தெரியுமா?

என்னை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் நானும் உன்னை போல் தான் தனியாக இருக்கிறேன். என் தனிமையை போக்க தான் கிளப்பிற்கு சென்றேன். அது தவறு என்று யாரும் என்னிடம் கூறவே இல்லை. ஒழுக்கமிலாதவன் என்று தான் கூறினார்கள்.

அவள் அவனிடம், இனி யாருடனும் அவ்வாறு நடந்து கொள்ளாதே! எது சரி, எது தவறு? என்று தெரியவில்லை என்றால் என்னிடம் கேள். நாம் நண்பர்களாகி விடுவோம் என்று பேசினாள். அதற்கு பின் தான் அவனை பார்த்துக் கொள்ள சொல்லி கவியிடம் கேட்டீர்கள்.

அவனது நிலையை புரிந்து கொண்டு, அவளும் ஒத்துக் கொண்டாள். பின் இருவரும் நன்றாக பழகினார்கள். அவள் தனக்காக அனைத்தையும் செய்வதினால் யுவிக்கு அவள் மீது காதல் வந்து விட்டது. ஆனால் அவளது விருப்பமில்லாமல் முத்தம் கொடுத்தது தவறு என்று கூற,

முத்தம் கொடுத்தானா? என்று உணர்சிவசப்பட்டு ராஜா யுவியை அடித்தான். பின் அவன் செய்ததை உணர்ந்தான். அனைவரும் ராஜாவை பார்க்க, ஏற்கனவே எங்களுக்கு அவளை நன்றாக தெரியும். அவள் என்னை காதலித்தாள். நானும் அவளை காதலிக்கிறேன். இனி அவளை உன் அருகே விட மாட்டேன் யுவியை பார்க்க, இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்க,

இருவரும் நிறுத்துங்கள் என்று பிரியங்கா கத்தி விட்டு, யுவியை பார்த்து, உன்னை அவள் காதலிக்க முடியாது. அதற்கு காரணம் ராஜா இல்லை என்று ஒரு போட்டோவை எடுத்து  பாட்டி அருகே வந்து,

நீங்கள் அன்று கூறினீர்களே! அவள் நம் வீட்டு பொண்ணு என்று அது உண்மை தான் என்று பேசி கொண்டே யுவியின் அம்மா அருகே வந்து, உங்களது உயிர் அக்கா விபத்தில் இறந்தார்களே! அவர்களது பொண்ணு தான் கவிதா என்று கூற,

என்னம்மா சொல்கிறாய்? என் பொண்ணு வசந்தியின் மகளா?

அன்று நடந்த விபத்தில் அவளுக்கு எல்லாம் மறந்து விட்டது. நம் வீட்டிற்கு வந்த இரண்டே நாட்களில் அவளது சிறுவயது போட்டோ வைத்து கண்டுபிடித்து, என்னிடம் கூறினாள். அவளிடமும் அவளது சிறு வயது போட்டோ உள்ளது. சந்தேகமாக இருந்தால் அவளுடைய அறையில் இருக்கும் பையை பாருங்கள்.

கவிதா அறையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ராஜாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர்.

என்ன செய்கிறாய்? ராஜா கேட்க, அது உங்களுக்கு தேவையில்லை.

எனக்கு தேவை தான்.

அவள் அழுது கொண்டே, அவனை பார்த்து முறைத்தாள்.

எனக்கு, நீ பாதுகாப்பாக இருக்க வேண்டும்.நீ பாதுகாப்பாக இருந்ததால் தான் உன்னை விட்டு வைத்தேன் ராஜா கூற,

நான் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியுமா?

தெரியாது. ஆனால் நீ பேசுவதை வைத்து நன்றாக இருக்கிறாய் என்று தான் உன்னை நான் தேடவில்லை.

பேசுவதை வைத்தா?

ஆமாம்,நீ விடுதிக்கு ஒவ்வொறு முறை போன் செய்யும் போது நாங்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம் என்று மஞ்சு கூற,

எதற்கு உங்களுக்கு தேவையில்லாத வேலை?

எதை தேவையில்லாதது என்று கூறுகிறாய்? நீ என் மகனை காதலித்தாய் தானே! அப்பா கேட்க,

தயவு செய்து, என்னை விடுங்கள் என்று பையை எடுக்க, அவளுடைய டெடி பொம்மை கீழே விழுந்தது. ராஜா கவிதாவின் பிறந்த நாளன்று கொடுத்தது. அதை பார்த்து மஞ்சு, முதலில் உன் காதலை கூறு.

நான் யாரையும் காதலிக்கவில்லை.

அப்படியா? இது என்ன என்று அவளது டெடி பொம்மையை எடுக்க, அதன் பின் ராஜாவின் போட்டோவும் இருந்தது.

அது ….என்று ராஜாவை பார்த்து, எனக்கு வேண்டாம் என்று பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சரி. உனக்கு பொம்மை வேண்டாம். இது என்ன? அவனது போட்டோவை காண்பித்து கேட்டாள்.

அவள் கண்ணீருடன், தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று மஞ்சு கையிலிருந்த போட்டோவை எடுத்துக் கொண்டு ஓட, ராஜாவிற்கு தான் தெரியுமே?

பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்வாள் என்று. அவன் பின்னை சென்றான்.

கவிதாம்மா….நில்லு, உன் பாட்டியை விட்டு செல்ல போகிறாயா? பாட்டி அவளை தடுக்க, அவள் கண்கலங்கியபடி,  என் அம்மா இருந்த வீட்டில் ஒரு மாதம் சந்தோசமாக இருந்து விட்டேன். அதுவே போதும். நான் கிளம்புகிறேன் என்று அவள் செல்ல, யுவனுடைய அம்மா அவளது கையை பிடித்து நிறுத்தினார்.

நீ எங்கும் செல்லக்கூடாது என்று கூறினார்.

நான் இங்கே இருந்தால் யுவியிடம் முன்பு போல் பேச முடியாது. அது எனக்கும் வருத்தமாக இருக்கும். அவனுக்கும் வருத்தமாக இருக்கும். எனக்கு தான் யாருமில்லாமல் கஷ்டப்பட்டேன். அவனையும் அப்படி விட்டு விடாதீர்கள் கூற,

இல்லை, நீ செல்லாதே! இனி உன்னிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டேன். நீ என்னை தம்பியாக நினைத்து நன்றாக பார்த்துக் கொண்டாய். நான் அதனை தவறாக எண்ணிக் கொண்டேன். இனி உன்னை தொந்தரவுசெய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடு. நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டேன்.

அவள் அவனை பார்த்து சிறியதாக புன்னகையை காட்டி விட்டு, வீட்டிலிருந்து வெளியே வந்தாள். பாட்டியும், யுவனுடைய அம்மாவும் அழுது கொண்டிருக்க, ராஜா அவள் பின்னாலேயே வந்து,

நில்லு கவி,…அவளது பின்னாலே வர, அவள் திரும்பி பார்த்தாள். ராஜாவை கார் ஒன்று இடிப்பது போல் வர, பையை கீழே போட்டு அவனை நோக்கி ஓடி வந்து அவனை கீழே தள்ளி விட்டு, அவளும் அவன் மீதே விழுந்தாள். ராஜா அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்க, அவனை இடிக்க வந்த காரிலிருந்து சூர்யா தலையை வெளியே நீட்டி, ஒரு பூங்கொத்தை எடுத்து,

டேய் மச்சான் இந்தாடா….என்று தூக்கி எறிய, ராஜா அதை பிடித்து அவளை பார்த்தான். அவன் கையை விட்டு வெளியே வர முயற்சி செய்தாள். அவன் சிரித்துக் கொண்டே அவளை இறுக்கமாக பிடித்து பூங்கொத்தை நீட்டி, நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற, அவள் காரிலிருந்த சூர்யாவை பார்த்து விட்டு, அவர்கள் விபத்து ஏற்படுவது போல் நடித்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு,

ஏன் இப்படி செய்கிறீர்கள்? அவனது மார்பில் குத்த, அவனுக்கு இன்னும் வலி இருக்கிறது போல, ஆ…என்று அவன் கத்தினான்.

அடியேய் என்ன செய்கிறாய்? அவனை கொன்று விடாதே! மஞ்சு கூற,

அவனது சட்டையை விலக்கி பார்த்தாள். அதில் காயம் தெரியவே, என்ன ஆயிற்று?

அவன் சிரித்துக் கொண்டிருக்க, மஞ்சு நடந்ததை கூற, அமைதியாக அவன் மீது சாய்ந்தாள். அவள் அவனை ஏற்றுக் கொண்டாள்.

இனி என்னிடம் கோபமாக நடந்து கொள்ள கூடாது. அவன் தலையசைத்துக் கொண்டே அவளையே பார்த்தான். இருவரும் கொஞ்சம் எழுகிறீர்களா? அனைவரும் பார்க்கிறார்கள் மஞ்சு கூறினாள். பின் மஞ்சு சூர்யா கையை கோர்த்து நின்றாள்.

நீ கூறிவிட்டாயா? மகிழ்ச்சியுடன் கவிதா கேட்க,

சூர்யா கவிதாவை பார்த்து, என்னை பற்றி என் செல்லத்திடம் என்ன கூறிவிட்டாய்?

அதுவந்து…அவள் இழுத்தாள். அதை விடுங்கள் என்று ராஜா அவளை வீட்டிற்குள் அழைக்க, அவள் வர மாட்டேன் என்றாள்.

அவர்களை நீ விட்டு செல்ல கூடாது. உனக்கென்று எவ்வளவு உறவுகளை உன் அம்மா உனக்காக விட்டு சென்றுள்ளார்கள். உன் அம்மா வாழ்ந்த வீட்டை விட்டு செல்ல போகிறாயா? அவர்களை குற்றவுணர்ச்சியில் தள்ளி விட்டு நீ சென்றால் உன்னை போல் அவர்களும் வருத்தப்படுவார்கள் அல்லவா? என்று ராஜா கவிதாவிற்கு புரிய வைக்க, பிரியங்கா அவளுடைய பையை எடுத்துக் கொண்டு, என்னுடைய கல்யாணத்தில் நீ கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தரதரவென்று அவளை உள்ளே இழுத்து சென்றாள். பின் அனைவரும் உள்ளே வந்தனர்.

அனைவரும் அவளை பிடித்துக் கொண்டு, செல்லாதே! என்று அழ, நான் செல்லவில்லை என்று கூற, அனைவரும் அவளை கட்டிக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

அன்றிரவு முழுவதும் ராஜாவும், கவிதாவும் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் அதே இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க, ராஜா முதலில் விழித்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவள் விழித்தவுடன் அவளது உச்சி வகிட்டில் முத்தமிட்டான். அவள் வெட்கம் தாளாது வேகமாக எழுந்து உள்ளே சென்றாள். பின் திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு அனைத்தும் முடிந்தவுடன் எல்லாரும் தயாராகி வந்தார்கள்.

யுவியின் அறைக்கு சென்று அவனது அம்மா அவனை கூப்பிட, அவன் அங்கே இல்லை. அனைவரிடமும் கூறி, தேட ஆரம்பித்தனர்.

கவிதாவிற்கு போன் வந்தது. அவள் ராஜாவை தேடினாள். அவன் அங்கே இல்லாததால் அவனுக்கு போனில் செய்தி ஒன்றை அனுப்பி விட்டு, தயாரான அதே ஆடையிலே சென்றாள். யாரிடமும் ஏதும் கூறவில்லை.

கவிதா சென்ற இடத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளருகே சென்று, நீ தான் எனக்கு  போன் செய்தாயா?

ஆமாம்.அவன் இங்கு தான் இருக்கிறான் என்று கூற, இருவரும் கிளப் ஒன்றினுள் நுழைந்தனர். அங்கே யுவி மது போதையில் பெண்களுடன் நினைவிழந்து ஆடிக் கொண்டிருந்தான். அதை பார்த்து கவி கோபமாக உள்ளே நுழைந்தாள். அந்த பெண்ணும் அவளுடன் சென்றாள்.

கவி அவனை பிடித்து இழுத்து ஓங்கி அறைந்தாள். அந்த பெண்ணோ, அவனை அடிக்காதீர்கள்!

அவன் பழைய நிலைக்கு சென்று விட கூடாது என்று தான் உங்களை அழைத்து வந்தேன். அவள் கூறுவதை கேளாது மீண்டும் அவனை அடிக்க கவி கையை ஓங்க, அந்த பெண் கையை பிடித்து முதலில் அவனை வெளியே அழைத்துச் சென்று நினைவை கொண்டு வருவோம்.அனைவரும் ஆடுவதை நிறுத்தி விட்டு அவர்களை பார்க்க, அவனுடைய நண்பர்கள் வந்து கவியிடம், அவனை எதற்கு அடித்தீர்கள்? அவன் இங்கே தான் மகிழ்ச்சியாக இருப்பான் என்று கூறினான்.

மகிழ்ச்சியா? இப்படி ஆட்டம் போட்டால் மகிழ்ச்சியாகுமா? நீங்கள் அவனுடைய நண்பர்கள் என்று கூறாதீர்கள்? நண்பர்கள் கஷ்டப்படும் நேரத்தில் உதவிக்கு ஆறுதலாக தோள் கொடுக்க வேண்டும். அவனை எங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்?

அவன் எதற்காக இங்கே வருகிறான் என்று உங்களுக்கு தெரியுமா? அவனது தனிமையை போக்க வருகிறான். அவனுக்கு தேவை அன்பு மட்டும் தான். நீங்கள் உண்மையிலே நண்பர்களாக இருந்தால் முதலில் அவன் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவனுடைய தனிமையை உங்களால் கூட சரி செய்ய முடியும் என்றால் நல்ல முறையில் உதவி செய்யுங்கள். முடியாது என்றால் விட்டு விடுங்கள்.

அனைவரும் அமைதியாக ஒருவன் மட்டும் கவியை ஒருவாறு பார்த்து விட்டு, அந்த பெண் பக்கம் திரும்பி இவளை அழைத்து வந்தது நீ தானே? அவளருகே வர, அவள் பின்னாலே சென்றாள். சுவற்றில் இடித்து அவள் அப்படியே நின்றாள்.

உனக்கு அவனை பிடித்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வாய் தானே! என்னுடன் வா என்று தரதரவென்று அவளை இழுத்து செல்ல, என்னை விடு விடு அழுதாள் அவள். யுவியை கீழே விட்டு, அவளது கையை கவி பிடித்து இழுக்க அவன் கோபமாக கவியை பிடித்து தள்ளினான். கவி கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அப்பொழுது ஒரு கை வந்து அவளை தூக்கி விட்டது. ராஜாவை பார்த்தவுடன், அவன் என்று கையை காட்டினாள்.

ராஜா அவனை பார்த்து, அவளை விடு….

நீ யாருடா?

நானா? உன் மச்சான்டா,….அவனை அடித்தான். அவன் பயத்தில் அந்த பெண்ணை பிடித்து அடிக்க, அவளது வாயிலிருந்து இரத்தம் வர, கவியை பார்த்தான் ராஜா. அவள் புரிந்து கொண்டு அவனருகே சென்று அவளது கையை பிடிக்க, அவன் மீண்டும் கவியை அடிக்க கையை ஓங்க, ராஜா அவனை அடிக்க,அவன் அவளை விட்டான்.

கவி அவளை அழைத்துக் கொண்டு வேகமாக யுவியின் அருகே வர, அவனுக்கோ இன்னும் போதை தெளியவில்லை.ராஜா அவனை அடித்து வெளியே விரட்ட, அவன் முறைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். அவனுக்கு போதை தெளியாததை பார்த்து, கவி அங்கிருந்த குளிர்பானத்தை ஒவ்வொன்றாக எடுத்து அவன் மீது ஊற்ற, கொஞ்ச நேரத்தில் தெளிந்தது போதை யுவிக்கு. அவன் கண்ணை திறந்து பார்த்த போது வெளியே ஓரிடத்தில் வைத்து கவி அந்த பெண்ணை திட்டிக் கொண்டிருந்தாள். ராஜா அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

உனக்கு பழக்கமில்லாத இடத்திற்கு ஏன் வருகிறாய்? இவனை காதலிக்கிறாயா? அவனது தலையில் ஒரு அடியை போட்டு விட்டு, பொறுப்பில்லாத இவனையெல்லாம் காதலிக்கிறாயா?

அவன் யுவியின் நண்பன் தானே? இவனிடம் நீ கூறி இருக்கலாமே!அவன் இது போல் உன்னிடம் எத்தனை முறை நடந்து இருக்கிறான்? பதிலை எதிர்பார்க்காமல் கவி ராஜாவிடம் திரும்பி, அவனையெல்லாம் சும்மா விடக் கூடாது ராஜா. வாருங்கள் அவனது கையை பிடிக்க, அவன் அவளை நிறுத்தி விட்டு,

இது…இது..தான் எனக்கு உன்னிடம் ரொம்ப பிடித்தது. மற்றவர்களுக்காக அதிகமாகவே யோசிப்பாய். அவளது கன்னத்தில் முத்தமிட்டான். அவள் வெட்கத்துடன் அவனை பார்த்தாள்.

டேய் மச்சான், அவளை என்னடா பண்ற? யுவி வேகமாக எழுந்து வர, கவியும் அவனது கன்னத்தில் முத்தமிட்டு ராஜாவின் கையை பிடித்துக் கொண்டு யுவி பக்கம் திரும்ப, வேகமாக வந்தவன் அப்பொழுது தான் நின்றான்.

அந்த பெண்ணை பார்த்து ஏய் கரடி குட்டி, இங்கே என்ன செய்கிறாய்?

என்ன செய்கிறாளா? பைத்தியமாடா நீ? அந்த பெண்ணை உன்னுடைய நண்பன் காயப்படுத்துவது கூட, தெரியாமல் இருந்திருக்கிறாய்? எல்லாம் உன்னால் தான்.

காயப்படுத்தினானா? யார்?

கௌதம்…என்றாள்.

நடந்ததை கவி கூற,இவளை யார் அங்கே வர சொன்னது?

யாரும் கூறவில்லை. உனக்காக தான் வந்தேன்.

எனக்காக நீ எதற்கு வந்தாய்?

அவள் கண்கலங்கி நிற்க, ம்ம்ம்….நன்றாக கேள். அதை தான் நானும் கேட்டேன். இப்படி பொறுப்பில்லாதவனுக்காக எதற்கு வந்தாய்? கவி கேட்க, யுவி அவளை முறைத்தான்.

என்னை எதற்கு முறைக்கிறாய்? இவனெல்லாம் உனக்கு சரிபட்டு வர மாட்டான்மா. உனக்கு வேண்டுமானால் ஒரு நல்ல பையனை பார்ப்போம். அவள் அழுது கொண்டிருந்தாள்.

என்ன கூறுகிறாய்?

ஒரு பொண்ணு உன்னை காதலிப்பது கூட தெரியாமல் இருந்திருக்கிறாய்?

காதலா? என் மீதா? யுவி அவளை பார்த்தான்.

அவள் அழுது கொண்டே அங்கிருந்து செல்ல முயன்றவளை பிடித்து நிறுத்தி, உண்மையிலே நீ என்ன காதலிக்கிறாயா? எப்பொழுதிலிருந்து?

நாம் சரியாக பேசியது கூட இல்லை. எல்லாரையும் பட்ட பெயர் வைத்தது போல் தானே! உன்னையும் கூப்பிடுவோம்.

எனக்கு எப்பொழுது வந்தது என்று எனக்கு தெரியாது.

நீ அந்த வருணை தானே காதலிக்கிறாய்? என்று தானே நினைத்தேன்.

அவள் அவனது கையை எடுத்து விட்டு எதுவும் பேசாமல் செல்ல, ஒரு நிமிடம் இரு என்று மருந்து வாங்கி கவி அவளது உதட்டில் போட்டு விட, அவள் கவியை கட்டிக் கொண்டு நன்றி கூறினாள்.

நாங்கள் தான் உனக்கு நன்றி கூற வேண்டும் என்று சொல்ல, நான் வருகிறேன் என்று கவியிடம் கூறி விட்டு கிளம்பினாள். ராஜா அதே மருந்தை வாங்கி கவி தலைக்கு போட்டு விட்டான்.

அவளிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். வா வீட்டில் அனைவரும் தேடுவார்கள் என்று யுவியை அழைக்க, நான் ஏற்கனவே வீட்டில் கூறி விட்டு தான் வந்தேன் ராஜா கூறினான்.

அவர்கள் வீட்டிற்கு வந்தனர். பாட்டி, அம்மா அனைவரும் யுவியை திட்ட, அவனை விடுங்கள் நேரமாகிறது. மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரமாயிற்று. சீக்கிரம் தயாராகி வா பிரியங்காவின் அம்மா கூற, அவனும் தயாராகி வர, கவியும் ராஜாவும் வேரொறு உடையை மாற்றிக் கொண்டு வந்தனர்.

 ராஜா நீலநிற கோர்ட்டு சட்டையுடனும், கவி நீல நிறப்பட்டிலும் அழகாக எல்லா ஆபரணங்களுடன் வந்து நின்றாள். அவர்கள் இருவரையும் பார்த்து ஊரார் ஜோடி பொருத்தம் பிரமாதம் என்றனர்.

கல்யாண பொண்ணு என்னை விட்டுட்டு அவர்களை கூறுகிறீர்கள் என்று செல்லமாக பிரியங்கா கோபித்துக் கொள்ள, அனைவரும் சிரித்தனர்.

திருமணம் முடிந்து மதியவேளையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருக்க, கவியும் மஞ்சுவும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த பொண்ணு விமலா போன் செய்யவே போனை எடுத்து, ஹலோ என்றாள் கவி.

மூச்சிறைக்க அவள் ஓடிக் கொண்டே, அக்கா எனக்கு உதவி செய்யுங்கள் அழுது கொண்டே பேசினாள்

என்ன ஆயிற்று? எங்கே இருக்கிறாய்? கவி கேட்க,

அக்கா, கௌதம்….அவள் கூறிக் கொண்டே கத்தினாள். அவன் தான் அவளை விரட்டிக் கொண்டிருந்தான். அவளது முடியை பிடித்து இழுத்து அவளை ஓங்கி அறைந்ததில் அவள் மயங்கி விட்டாள். அந்த போனை எடுத்து அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அனைவர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தி இருப்பாள். அவளும் அவமானப்பட வேண்டும். அவளை என்ன செய்கிறேன் பார் கவியிடம் போனில் கூற, அவளை ஏதும் செய்து விடாதே! சத்தமிட்டாள்.

என்னடி ஆயிற்று? மஞ்சு கேட்க, இரு வருகிறேன் என்று கவிதா தள்ளி சென்றாள்.

அவளது மானத்தை அவள் இழக்க போகிறாள்.

நீ எங்கே இருக்கிறாய்? அவளை விட்டு விடு.

அவளை விடுவதா? என்று பேசிக் கொண்டே அவள் மயங்கியது கூட வசதியாகி விட்டது என்று கூற, அவனிடம் பேசிக் கொண்டே யுவியையும், ராஜாவையும் தேடினாள். அவன் போனை துண்டிக்கவே பதட்டமானாள் கவி.

அவள் செல்லும் போது யுவியை பார்க்கவே, அவனை தனியாக அழைத்து சென்று, அந்த கௌதமிற்கு ரகசிய இடம் ஏதும் உள்ளதா?

எதற்கு கேட்கிறாய்? சொல்லித் தொலை. நல்ல நண்பன் வைத்திருக்கிறாய் என்று அவனை அடிக்க, அவ்விடத்திற்கு ராஜா வந்தான்.

எதற்கு அவனை அடிக்கிறாய்? என்று கேட்க, வேகமாக ராஜாவிடம் வந்து, அந்த பெண்ணை அவன் ஏதோ செய்ய போகிறான். சொல்லித் தொலையேன்டா கத்தினாள்.

நீ யாரை கூறுகிறாய்? தெளிவாக கூறு ராஜா கேட்க,

இவனை காதலித்த அந்த பொண்ணை தான். அந்த கௌதம் அவளை கடத்தி விட்டான். அவளை பழி வாங்க, அவளது மானத்தை வைத்து ஈடுகட்ட போகிறானாம் என்று கூறி கவி அழுதாள்.

என்ன சொல்கிறாய்? அவனா இவ்வாறு பேசினான்? என்று கேட்க, அவள் அழுத சத்தம் கேட்டது என்று கவி கூற,

யுவி அவனது போனை எடுத்து, கௌதமிற்கு போன் செய்து, எங்கே இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

ஹே, மச்சான் நீ எங்கே இருக்கிறாய்? நம்ம பசங்களை வர சொல்லி இருக்கிறேன். நீயும் வருகிறாயா? மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூற, அப்பொழுது தான் விமலா கண் விழித்து, அவளை அவன் கட்டி வைத்திருப்பதை பார்த்து விட்டு,

என்னை விட்டு விடு,….நான் என் அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழ, யுவிக்கு அவள் பேசுவது கேட்டது.

மச்சான் ஒரு நிமிடம் இருடா,…என்று கௌதம் அவளிடம் சென்று சும்மா சொல்லக் கூடாது. நீயும் அழகாக தான் இருக்கிறாய்? இன்று ஒரு நாள் மட்டும் எங்களுடன் இரு போதும்.

அவள் அழுது கொண்டே, நான் அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் யுவன் தவறான வழியில் செல்ல கூடாது என்று நினைத்து தான் அவனது குடும்பத்தாரை உதவிக்கு அழைத்தேன். என்னை மன்னித்து விடு. தயவு செய்து என்னை ஏதும் செய்து விடாதே! என்னுடைய அம்மாவிற்கு தெரிந்தால் உயிரையே விட்டு விடுவார். ஏற்கனவே அவருக்கு உடல் நிலை சரியில்லை.

உங்களை போல் நாங்கள் இல்லை. நான் மாலையில் வேலைக்கு செல்ல வேண்டும். அப்பொழுது தான் என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும்.தயவு செய்து விட்டு விடு.

நீ அழும் போது கூட அழகாக இருக்கிறாய்? அவளருகே அவன் வந்தான்.

வேண்டாம்.வராதே என்று கத்தினாள்.

நான் உன்னருகே வரக் கூடாது என்றால் இந்த மதுவை அருந்து, அவளிடம் கொடுக்க அவள் அதை தட்டி விட்டாள். அவன் கோபத்தில் அவளை அறைந்தான். அவள் அழுது கொண்டே இருந்தாள்.

பின் அவன் யுவியிடம், உன் பின்னே ஒரு பொண்ணு சுற்றினாளே! அவள் என்னிடம் தான் உள்ளாள்.

இதை கேட்ட விமலா, யுவி எனக்கு உதவி செய். இனி பின்னே வந்து தொந்தரவு செய்ய மாட்டேன். தயவு செய்து இந்த ஒரு முறை மட்டும் உதவு என்றாள்.

யுவி கௌதமிடம் போனை அவளுக்கும் கேட்கும் படி செய். கவியும், ராஜாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீ என் பின்னே சுற்றியது கூட எனக்கு தெரியாது. எல்லாரும் அப்படி தான் கூறுகிறீர்கள். நீ என்னை காதலிப்பதால் என்னால் உன்னை காதலிக்க முடியாது. என்னால் உனக்கு உதவ முடியாது என்று அவளிடம் கூறி விட்டு, நீ எங்கே இருக்கிறாய் கௌதம்? நானும் வருகிறேன் நம் பசங்களுடன் என்று கூற, அவன் இடத்தை சொன்னான். அவள் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்.

யுவி கூறியதை கேட்டு கவி மீண்டும் பளாரென்று அவனது கன்னத்தில் அறைய, ராஜாவும் அவனை அடிக்க வர யுவி அவனை தடுத்து,

மச்சான், எனக்கு உங்களுடைய உதவி தேவை. நான் அவளை காப்பாற்றவே அவ்வாறு பேசினேன். எனக்கு என் நண்பர்களை பற்றி நன்றாக தெரியும். நான் அங்கே செல்லும் வரை அவளை ஏதும் செய்ய மாட்டார்கள்.

கவியும் வர வேண்டும் என்று திட்டத்தை பற்றி கூறினான்.மூவரும் அவ்விடம் விட்டு கிளம்ப, எங்கே செல்கிறீர்கள்? என்று மஞ்சு வர, எங்களை யாராவது கேட்டால் ஏதாவது கூறி கொஞ்ச நேரம் சமாளித்துக் கொள் என்று கூறி விட்டு கிளம்பினார்கள்.

 

Advertisement