Advertisement

அத்தியாயம் 22

மதியவேளையில் ரகு அம்மா வெளியே வந்தார். அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், வெளியே செல்வோமா?

நாம் வெளியே சென்று எவ்வளவு நாட்களாகிறது? நான் தயாராகி விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்று ரகு கூறியதை போனில் கூற,

ரியா, ரகு, மரகதம் அனைவரும் வெளியே சென்று வந்த கொஞ்ச நேரத்தில் மித்துவை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக நாடகமாடி விட்டு, அவன் வருத்தமாக இருந்த சமயத்தில் அவனிடம் கையெழுத்து கேட்டார். அவன் அதை பார்த்தால் இப்பொழுது ரகு இருக்கும் வீட்டின் பத்திரம். ராமச்சந்திரன் பெயரில் மாற்றுவதாக எழுதி இருந்தது.

ரகு கையில் இருந்த போனில் ஒரு நம்பரை தட்டியவுடன் நண்பர்களுக்கு சத்தம் கேட்கவே பின் பக்கமாக ரகு வீட்டினுள் நுழைந்தனர்.

ரகு அவனது அம்மாவிடமும் ராமச்சந்திரனை பற்றி மனதில் உள்ள எல்லாவற்றையும் கேட்டு விட்டான்.

தெரிந்தும், நீ என்னிடம் நடிக்கிறாயா? ஆமாம், நான் சொத்திற்காக தான் உன் அப்பாவை மணந்து கொண்டேன். அவர் பிறக்கும் மகனிற்கு தான் சொத்தை தருவேன் என்று கூறியதால் தான் உன்னை பெற்றெடுத்தேன். உன் மீது பாசமுள்ளது போல் நடித்தால் தான் உன் பெயருக்கு சொத்து மாறும் என்று நடித்தேன். அப்பொழுதும் தராமல் மகன் பொறுப்பை ஏற்று நடத்தினால் தான் தருவேன் என்றார். அப்பொழுதும் பொறுமையாக இருந்தேன். உன் பெயருக்கு மாற்றிய பின் உனக்கு பிறக்கும் குழந்தைக்கு தான் கிடைக்கும் என்றார். மாற்றி தந்தே ஆக வேண்டும் என்றேன். அவர் மறுத்து விட்டார். வேறு வழியில்லாமல் அவரை கொல்ல வேண்டியதாயிற்று என்று மரகதம் பேச ரகு கண்ணில் நீர் தேங்கி நின்றது.

பின் உன் மனைவி அந்த குழந்தைகள் விசயத்தில் தலையிட்டாள். நீயும் அவளை காதலிப்பதாக திருமணம் செய்து வைத்தேன். மறுபடியும் எங்களது விசயத்தில் தலையிட்டதால், அந்த திலீப்பை எப்படி கஷ்டப்பட்டு கொலை செய்ய வைத்தோம். அவனை கொல்ல பார்த்தால் அவனும் தப்பி விட்டான். உன் மித்து சாகவில்லை போல, கவலைப்படாதே! அவள் இறந்து விடுவாள். பார்க்கிறாயா? என்று கை தட்ட

ராமச்சந்திரன் தான் மித்து கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வந்தான்.

ரகு பதறி மித்துவை பார்த்து, நீ பாலாவுடன் தானே இருந்தாய்? எப்படி இங்கே வந்தாய்?

அவளது கைகளும் வாயும் கட்டப்பட்டு இருக்க,அவள் பேச முடியாமல் தவித்தாள்.

பாலாவின் நண்பர்கள் செய்வதறியாது திகைக்க,ம்ம்…விலகு என்றொறு சத்தம், பாலாவும் வந்து விட்டான்.

மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறான். ராமச்சந்திரன் கழுத்தில் யாரோ கத்தியை வைத்து மித்துவை ரகுவிடம் தள்ளினான். திலீப் தான் வந்திருந்தான்.

மரகதம் அவனை பார்த்து, அவர் உன் அப்பா அவரை ஏதும் செய்து விடாதே!

நான் அந்த அவனுடைய மகனில்லை என்பது எனக்கு தெரியும். என்னுடைய அப்பாவை நீங்கள் கொன்று விட்டீர்கள். என்னுடைய அம்மா….ராஜம்மாவை பார்த்தான். அவருக்கே திலீப் அவனுடைய பையன் என்பது இவன் கூறி தான் தெரிகிறது. அனைவரும் அதிர்ச்சியுடன் இருந்தான்.

நீ புத்திசாலி தான் கண்டுபிடித்து விட்டாயே!…ராஜம்மாவின் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது என்று அவருடைய கணவரே சொல்லி இருப்பார். அது உண்மையில்லை பணம் கொடுத்து அவளுடைய கணவரிடமிருந்து குழந்தையை நான் தான் வாங்கினேன். அவன் அதிகமாக பணம் கேட்கவே அவனையும் கொன்று விட்டேன்.

திலீப் நம் குழந்தை இல்லையா? ராமச்சந்திரன் கேட்க, அவரை பார்த்தும் சிரித்து விட்டு, உன்னை கூட பயன்படுத்தி தான் கொண்டேன். எல்லா சொத்திற்கான உண்மையான பத்திரம் என் பெயரில் பத்திரமாக உள்ளது என்றவுடன், அவர் திலீப்பை தள்ளி விட்டு மரகதம் கழுத்தை நெறிக்க, அவர் அமைதியாக இருந்தார். பாலாவும் நண்பர்களும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்த பதட்டத்தில் மரகதம் தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட, அதில் ராமச்சந்திரன் இறந்து விட்டார். அனைவரும் மறைந்து இருப்பார்கள். அவரது குண்டு சூர்யாவின் தோள்பட்டையை உரசி சென்றது. மீண்டும் குண்டு அவனை துளைக்க வர, ராஜா அவனை காப்பாற்ற சென்று அவனது  மார்பில் பட்டது. பின் ரகுவும், திலீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்து சைகை செய்து மரகதத்தை பிடித்தனர்.

சுந்தர், மற்ற காவலர்களை அழைத்து மரகதத்தை இழுத்து செல்ல,அவரோ உங்களிடம் சாட்சி இல்லை.என்னை உங்களால் ஏதும் செய்ய முடியாது என்று கத்த, முடியும் என்று ஒருவன் வந்து அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்ததை காண்பித்தான். சூர்யாவையும் ,ராஜாவையும் பாலா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அவர்களது குடும்பம் அங்கே வந்தது. மஞ்சு இருவரையும் பார்த்துக் கொண்டு தலையில் அடித்து அழுதாள். சூர்யா கண்ணீருடன் அவளை பார்த்தவாறு சென்றான். ராஜாவின் நிலை மோசமாக இருந்தது. அவர்களது வீட்டில் இருந்த ரேணுவும், அத்தை, மாமா, ரகு, மித்து அனைவரும் வந்து ராஜாவின் அம்மா, அப்பாவிற்கு ஆறுதல் அளிக்க, மஞ்சுவிற்கு என்ன தான் சூர்யா மீது காதல் இருந்தாலும் இன்று ராஜாவை நினைத்து அழுதாள். எல்லா வருத்தமான நேரத்திலும் அண்ணனும் தங்கையும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்ததை நினைத்து அழுதாள். இரண்டு நாட்களுக்கு பிறகு  தான் பேச ஆரம்பித்தான் ராஜா. பாலாவிற்கும், சூர்யாவிற்கும் உடல் நிலை சரியானது.

சூர்யாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றாலே மஞ்சு தான் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொள்வாள். ஆனால் இம்முறை அவனை பார்க்கவே வரவில்லை என்று அவன் மனம் தவியாய் தவித்து போயிற்று.

அப்பொழுது தான் அவனுக்கும் அவள் மீதுள்ள காதல் புரிந்தது. இரு குடும்பமும் சேர்ந்திருந்த நேரம் பார்த்து மஞ்சுவிடம் சூர்யா தன் காதலை கூறினான். அவள் ஏதும் பேசாதிருக்க, நான் இனி எந்த பெண்ணுடனும் பேச கூட மாட்டேன். என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது என்பதை இப்பொழுது தான் உணர்ந்தேன் என்று கூறினார்.

மஞ்சு அம்மா அப்பொழுது தான் ஒரு விசயத்தை சொன்னார். பெங்களூர் மாப்பிள்ளை எல்லாம் சும்மா தான். இது ராஜாவின் திட்டம் தான் உங்களை சேர்க்க என்று கூறியவுடன் மஞ்சு சந்தோசத்தில் சூர்யாவை  அடித்து விட்டு, நீ என்னை விட்டு செல்ல கூடாது. போக மாட்டேன்டி செல்லம்…கொஞ்சிக் கொண்டே ராஜா முன் கை கோர்த்து நின்றனர்.

இனி வேறொரு பெண்ணுடன் உன்னை பார்த்தால், உன்னை விட மாட்டேன்டா என்று ராஜா மிரட்டினான்.

ஓ.கே அண்ணா சார். அவளை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

எந்த தயக்கமும் இல்லாமல் ரேணுவும் பாலாவிடம் பேச, மதுவிடம் பாலா நாம் இனி சேர்ந்தே இருப்போம் என்றான்.

மித்து, ரியா, ரகுவும் அவர்களது வீட்டில் ஆனந்தமாக இருக்க, மரகதத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராசாத்தியை சமரை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, பாலா திரட்டிய ஆதாரத்தைக் கொண்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜம்மாவும், திலீப்பும் ரகுவுடனே இருந்தனர்.

ஒரு மாதத்திற்கு பின் ராஜா குணமானான் இருந்தும் அவனுக்கு அடிபட்ட இடத்தில் வலித்துக் கொண்டு தான் இருந்தது. அவனுடைய வேலையில் முழுவதுமாக கவனம் இருந்தாலும், அவ்வப்போது கவிதா எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? எனவும் யோசிப்பான். அவளுடைய குரலை இப்பொழுதும் அவளுக்கு தெரியாமலே அவளது தோழி மூலம் கேட்பான். வார்டனுக்கும் ராஜா மீது உள்ள கோபமும் குறைந்தது. அவர்களும் சாதாரணமாக பேச ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் ராஜாவின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தனர்.ராஜா வீட்டினுள் நுழைந்தான்.

அவனை பார்த்து அம்மா, ராஜா உன்னுடைய ஆடையை எடுத்து வைத்து விட்டேன். உனக்கு வேறெதுவும் தேவைப்பட்டால், எடுத்து வை.

அம்மா என்று தயங்கிக் கொண்டே அருகே வந்தவன் என்னால் இப்பொழுது வர முடியாது. முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அதை முடித்து விட்டு வருகிறேன். நீங்கள் முன்னே செல்லுங்கள். நாளை மதியம் வந்து விடுவேன்.

சீக்கிரம் வந்து விடு என்று கூற,

அண்ணா, சீக்கிரம் வா. அங்கே நிறைய பேர் இருப்பார்கள். ஜாலியாக இருக்கும்.

வருகிறேன் என்றான். அன்று இரவு அனைவரும் கிளம்ப, ராஜா கவிதாவின் மேக் அப் பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

ராஜாவின் குடும்பம் நள்ளிரவில் அரண்மனை போன்றொறு வீட்டிற்கு வந்தனர். அங்கே விளக்குகள் கண்ணை கவரும் வண்ணம்   அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றனர் அனைவரும். விழாக்கோலமாக இருந்தது. கல்யாணப் பொண்ணு எங்கே? மஞ்சு கேட்டாள்.

இதோ இருக்கிறேன் என்று பிரியங்கா கூற, மஞ்சு அவளை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

மச்சான் எங்கே? அவரை காணவில்லை.

அண்ணாவிற்கு வேலை உள்ளதாம்..நேரத்திற்கு வந்து விடுவான்.

வா போகலாம் என்று இருவரும் கிளம்ப, அம்மாவும் அப்பாவும் அந்த வீட்டு மூத்தவரான பாட்டியை பார்க்க சென்றனர். கவிதாவும் அதே பாட்டியிடம் பேசி விட்டு அவள் செல்ல, அவர்கள் உள்ளே வந்தனர்.

கவிதா வெளியே வர, ஒருவன் அவள் முன் வந்து, எனக்கு காபி வேண்டும்.

விளையாடாதே யுவி… எனக்கு நிறைய வேலை உள்ளது. நீ ராமு அண்ணாவிடம் வாங்கி குடித்து விட்டு தூங்கு..

எனக்கு நீ தான் செய்து தர வேண்டும்.

சிறு பிள்ளை போல் விளையாடாதே! எனக்கும் உன் வயது தானே! உன்னை போலவா நான் நடந்து கொள்கிறேன் அவள் செல்ல, அவன் அவளது கையை பிடித்தான்.

ஏய்… யுவன் எப்படி இருக்கிறாய்? என்று மஞ்சு கேட்டுக் கொண்டே அதிர்ச்சியுடன் கவிதாவை பார்த்தாள். அவன் அவளது கையை பிடித்திருப்பதையும் பார்த்தாள். கவி என்றாள் கண்கலங்கிக் கொண்டே,

கவிதா பதட்டமாக அங்கிருந்து விலக ஒருவர் மீது இடித்து விட்டு, சாரி….சாரி….என்று நிமிர்ந்து பார்த்தால் ராஜாவின் அப்பா, அவரை பார்த்தவுடன் அவளது கண்கள் கலங்க, அங்கிள்…என்றாள்.

என்னம்மா கூறாமல் வந்து விட்டாய்? இங்கே தான் இருக்கிறாயா?

தலையசைத்து விட்டு, சாரி அங்கிள் என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடினான்.

உங்களுக்கு கவியை தெரியுமா? யுவி கேட்டான்.

அப்பா பேசுவதற்குள், அவள் என்னுடைய தோழி தான்…

அவள் எனக்கும் தோழி தான் பிரியங்கா கூறி விட்டு, அது சரி எதற்காக உங்களை பார்த்து ஓடுகிறாள்?

அவளுக்கும், எனக்கும் சின்ன பிரச்சனை என்றாள் மஞ்சு.

அவள் இங்கே என்ன செய்கிறாள்? மஞ்சு கேட்டாள்.

இங்கு என்னுடைய தோழியாக, விருந்தாளியாக தான் வந்தாள். ஆனால் இந்த வீட்டில் உள்ள எல்லாரையும் கவனித்து கொள்வது தான் அவளது வேலை. அவளுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது. அதை மறக்க வந்ததாக அவளது விடுதி வார்டன் கூறினார். நானும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளிடம் எதையும் கேட்கவில்லை.

ஓ…அப்படியா? என்று எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டாள் மஞ்சு.

இவனை சமாளிப்பது தான் முதல் வேலை என்று யுவியை கை காட்ட, அவன் பல்லை காட்டிக் கொண்டே சென்றான். மஞ்சு அவனை பார்த்து முறைத்தாள்.

இவனை எதற்காக?

உனக்கு தான் இவனை பற்றி தெரியுமே? கிளப், ஆட்டம், பாட்டம், குடி என்று சுற்றினான். ஒரு முறை இவனால் பெரிய பிரச்சனையாகி குடும்ப மானமே போய் விட்டது. அப்பொழுது தான் கவிதா இவனுடன் பேசினாள். என்ன பேசினாளோ தெரியவில்லை. அவள் சொன்ன அனைத்தையும் செய்தான். அதனால் அவனை பார்த்துக் கொள்ள சொல்லி பாட்டியும், அவனது அம்மாவும் கேட்டுக் கொண்டனர். தண்ணீர் வேண்டுமானாலும் அவனுக்கு அவள் தான் எடுத்து கொடுக்க வேண்டும் பிடிவாதத்தில் சாப்பிட கூட மாட்டான் அவன்.

இது சரிதானா?

இல்லை தான். ஆனால் என்ன செய்வது?

கவிதா அவளது அறைக்கு சென்று அழுது கொண்டிருந்தாள். நான் இவர்களை எவ்வாறு சமாளிப்பது? அவரும் வந்திருப்பாரா? இல்லையா? மனதினுள் ஆயிரம் ஓட்டங்கள். பின் மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள். மஞ்சு அவளிடம் பேச, வேண்டாம் யாரிடமும் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை.

அப்படியென்றால் அந்த பரிசு எதற்கு எங்களுக்கு?

வேண்டுமென்றால் வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுங்கள். உங்களுக்கு தான் தூக்கி எறிந்து பேச நன்றாக வருமே! குத்தி காட்டி விட்டு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் கூறினாள்.

மஞ்சுவிற்கு மனது கனமாகி போனது. அன்று சரியாக தூங்காமல் அவளிடம் எப்படி பேசுவது? அண்ணாவையும், இவளையும் எப்படி சேர்த்து வைப்பது யோசித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் மதிய வேளையில் அனைவருக்கும் சாப்பாடு கவிதா தான் பரிமாறி கொண்டிருந்தாள். மஞ்சு குடும்பம் போல் இரண்டு,மூன்று குடும்பங்கள் வந்திருந்தனர்.

கவிதாவை பார்த்து, இந்த பொண்ணு யாரு? மற்றவர்கள் கேட்க,

அவளும் எங்கள் வீட்டு பெண் தான் பாட்டி கூற, யாருடைய பெண் என்று விசாரிக்க, பாட்டி என்ன கூறுவதென்று தெரியாமல் இருக்க, என்னை பார்த்துக் கொள்ள தான் அவள் இருக்கிறாள் யுவி கூறினாள்.

ஓ….வேலைக்கார பொண்ணா?

அவள் வேலைக்காரியெல்லாம் இல்லை. அவள் எனக்கானவள் என்று சட்டென அவன் கூற, அவள் ஏதோ யோசனையில் இருந்தாள்.

மஞ்சுவிற்கும் அவளது குடும்பத்திற்கும் பதறிப் போனது மனது.

அட, அதெல்லாம் ஒன்றுமில்லை. இவள் என்னுயிர் தோழி என்று பிரியங்கா அவளது கழுத்தை கட்ட, கவி யோசனையிலிருந்து மீண்டு வந்து, என்ன ஆயிற்று? கேட்டாள்.

என்னம்மா, என்று பாட்டி அவளது தலையை கோத, பாட்டி.. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு வரவா? எனக்கு ரொம்ப அசதியாக உள்ளது.

சாப்பிட்டு விட்டு போம்மா என்றார். அவள் அங்கே சாப்பிட்டு விட்டு, அறைக்கு சென்றாள்.

படுத்தால் ராஜா நினைவு எழவே, அவளால் தூங்க முடியவில்லை. எப்படியோ தூங்கி விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் அறை கதவு தட்டப்பட்டது. பாட்டி உள்ளே வந்து, நன்றாக இருக்கிறாயா?

ரொம்ப நேரமாகி விட்டதா பாட்டி?

இல்லைம்மா…

பாட்டி, வாருங்கள் அக்காவின் நிச்சய அழைப்பிற்கான வேலையை ஆரம்பிப்போம்.

உனக்கு இரண்டே வேலை தான். எல்லா இடத்திலும் அலங்காரத்தை சரியாக முடித்து இருக்கிறார்களா? என்றும், மேடையில் எடுத்து வைக்கும் பொருட்கள் வந்து விட்டது. இருபத்து ஒன்று பொருட்களையும் தட்டில் எடுத்து வைக்க வேண்டும் இதில் உள்ளது போல், என்று பட்டியலை கொடுத்தார். அதை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் எழுந்து வேலையை கவனித்தாள்.ராஜா ஏற்கவே அங்கு வந்து விட்டான்.ஆனால் குடும்பத்தினர் யாரும் கவிதாவை பற்றி கூறவே இல்லை. மஞ்சு தான் அவள் இங்கே இருப்பதை போனில் யாரிடமோ கூறிக் கொண்டிருந்தாள்.

தட்டிற்கான அனைத்தையும் எடுத்துக் கொண்டிருக்க, சில பூக்கள் மட்டும் வாடி இருப்பதை பார்த்து, அதை மாற்ற வேகமாக வந்தாள். யார் மீதோ மோத, அது ராஜா என்று எதிர்பார்க்காத கவி அவனை பார்த்து உறைந்து நின்றாள். அவன் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு சென்றதால் கவிதாவை கவனிக்கவில்லை. அவளை மீறியும் கண்ணீர் வர நின்று கொண்டிருந்தாள்.

ஏய் கவி…… யுவி அவளருகே வந்து, அவளது கண்ணீரை பார்த்து பூக்கள் சிதறி கிடப்பதை பார்த்து,

பூக்களுக்காகவா அழுகிறாய்? என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டு, நான் வேறு பூக்களுக்கு தயார் செய்கிறேன். அனைவரும் தயாராகி விட்டார்கள். இதோ, நானும் தயாராகி விட்டேன். உன்னை பாட்டி அழைத்தார்கள் அவன் பேசிக் கொண்டே சென்றான்.

ராஜா சுத்தமான வெள்ளை நிற சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் அனைவரையும் கவரும் வண்ணம் வந்திருப்பான். அவனை பார்த்ததை பற்றியே யோசித்துக் கொண்டு பாட்டியிடம் வந்தாள்.

கவிம்மா, இதை வாங்கி கொள். இது உனக்காக பிரியங்கா எடுத்தது என்று பாட்டி கொடுக்க, அவள் வாங்கிக் கொண்டு அவளது அறைக்கு சென்றாள். யுவி ஒரு பெண்ணை காட்டி, உன்னை இந்த பெண் அழகுபடுத்துவாள் பாட்டி தான் அனுப்பினார்கள். என்னை திட்டாதே!

நீ வெளியே செல். நான் தயாராகி விட்டு வருகிறேன் என்று அந்த பெண் உதவியுடன் வேகமாக தயாரானாள்.

தயாராகி வெளியே வந்தாள். வெள்ளி நிறத்தில் மின்னும் லெஹங்கா, நெற்றிசூட்டி, அழகான சிறிய முகம், காதுமாட்டி, காலில் கொலுசு அனைத்தும் போட்டு வெளியே வர மெழுகு சிலை போல் அவள் நிற்க, யுவி அவளை ஆ…வென்று பார்த்தான். அவள் மேடை அருகே சென்று, அனைத்து தட்டையும் எடுத்து வைத்து விட்டு பார்த்தால் பூவே இல்லை.

யுவியின் காதை பிடித்து திருகி, பூ எங்கே டா? என்று கேட்க, வருகிறேன் என்று வேகமாக எடுத்து வந்து பார்த்தால் கவி கண்ணீருடன் ஒளிந்து கொண்டிருந்தாள்.

கவி யுவியிடம் மேடை அருகே நின்று தான் பேசி இருப்பாள். பக்கத்தில் தான் ராஜா போனை பார்த்தவாறு உட்கார்ந்திருப்பான். யுவி சென்றவுடன் தான் அவனை கவனித்திருப்பாள் கவி.

இப்பொழுது யுவி பூவை மேடையில் வைக்க சொல்ல, அவள் தயங்கி கொண்டே  நீயே வைத்து விடு என்று கூற, நீ என்னிடமே வேலை செய்ய கூறுகிறாயா?

அவள் யோசித்து விட்டு, நாம் ஏன் பயப்பட வேண்டும்? என்று அவனை தாண்டிச் சென்றாள். அப்பொழுதும் ராஜா அவளை கவனிக்கவில்லை.பின் நிச்சய விழாவை ஆரம்பிக்க, விழா முடிந்து அனைவரும் கிளம்பும் சமயத்தில், அனைவரும் உட்காருங்கள் பிரியங்கா கூறி விட்டு,

சில பெண்களை அழைத்து விட்டு, ஏய், கவி சீக்கிரம் வா என்று கூப்பிட, அங்கிருந்து சென்ற கால் ஒன்று நின்றது.

அவள் மறைந்து இருக்கவே, பிரியங்கா அவளருகே சென்று, பயப்படாதே! உன்னுடைய பயத்தை அகற்றுவதற்கான சரியான வாய்ப்பு என்று அவளை மேடையில் ஏற்ற, அவளை பார்த்து ராஜா அப்படியே நின்றான்.அவள் அணிந்திருந்த ஆடையில் தேவதை போல் ராஜா கண்ணில் கவி பட, அவளும் ராஜாவை பார்த்தாள்.

பாட்டிற்கு ஏற்றவாறு அனைவரும் நடனம் ஆட, கவி பதட்டத்துடன் நின்றாள். இதை கவனித்த ராஜா முன் செல்ல காலெடுத்து வைக்க, அதற்குள் யுவி மேலே ஏறி, அவள் முன் சென்று கையை பிடிக்க அனைவரும் ஆர்வமாக பார்த்தனர். இருவரும் ஒருவரை ஒருவை பார்த்து சிரித்துக் கொண்டே ஆட, மஞ்சு திரும்பி ராஜாவை பார்த்தாள்.

அவன் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பார்க்க முடியாமல் வெளியே சென்றான்.

                       “என் உயிரினுள்

                         தீயை

                         வைத்தாய்

                         என் மனதினுள்

                         வலியை

                         கொடுத்தாய்

                         என் கண்ணின்

                         விழியை

                         பறித்தாய்

                         என் கனவின்

                         நிழலாய்

                         இருந்தாய்.

                          என்னை

                          விட்டு

                          சென்றாய்

                          வெகு நாளாய்

                          பார்க்காமல்

                          பார்த்தேனே!

                          நீயோ

                          வேரொருவனுடன்

                            நானோ

                            உன் நினைவில்

                            மறந்து விட்டாயோ

                            என்னை

                            என்னுயிரின்

                            மீள் கனவே

                            நீ தானடி!”

யுவியின் நண்பர்களும் சேர்ந்து ஆட, அனைவரும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டம் பாட்டம் முடிந்தவுடன் யுவி கவியை அழைத்து வந்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கவிக்கு அங்கு நிற்க கூட விருப்பமில்லால் நான் விருந்தாளிகளை கவனிக்க வேண்டும் என்று அங்கிருந்து அகல, அவனுடைய நண்பர்கள் அவனிடம், அந்த பெண்ணை உனக்கு பிடித்திருக்கிறது தானே!

அவளுக்கு உன்னை பிடிக்காமலா, உன்னுடன் சேர்ந்து ஆடுவாள்.

அவளுக்கும் என்னை பிடிக்குமா? அப்படியென்றால் நான் அவளிடம் காதலை கூறப் போகிறேன் என்று யுவி கூற,

அட, அதெல்லாம் பழைய காலத்து காதல். நீ அவளுக்கு முத்தம் கொடுத்து காதலை தெரியப்படுத்து என்று ஒருவன் கூற,

யுவி கவிதாவை தேடிக் கொண்டு கடைசியில் கண்டுபிடித்து, அவளது கையை பிடித்து இழுத்து தனியாக அழைத்துச் சென்றான்.

அவன் அழைத்து சென்ற இடத்தில் அவனது அம்மாவும், பாட்டியும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதை கவனிக்காத யுவி அவளது இதழ்களில் முத்தமிட அவள் அவனை பளாரென அறைந்து விட்டு அழுது கொண்டே,

என்னடா செய்ற? உனக்கு அறிவே இல்லையா? என்று திட்டிக் கொண்டே அவளது இதழை அழுத்தி துடைத்தாள்.

உனக்கும் என்னை பிடிக்கும் தானே! நீ எனக்கு தம்பி தான் என்று அழுது கொண்டே கூறினாள்.

அவளை சமாதானப்படுத்த அவன் அவளருகே வர, அவனை பிடித்து தள்ளினாள். அவன் தலை அங்கிருந்த மேசையில் அடித்து காயம்பட்டது. அவள் அங்கிருந்து செல்ல யுவியின் அம்மா வந்து அவனுக்கு அடி பட்டிருப்பதை பார்த்து, கவியை பிடித்து கன்னத்தில் அறைந்தார்.

அம்மா, அவள் ஏதும் செய்யவில்லை யுவி கூற, கவியை பார்த்து, நீ என் மகனை பார்த்துக் கொள்கிறேன் என்று அவளை மயக்கி வைத்திருக்கிறாயா? சத்தமிட,

வேண்டாம். எதுவும் பேசாதீர்கள் கவி கூறினாள்.

என்னை பேசக் கூடாது என்கிறாயா? கத்தினார்.

அனைவரும் சத்தம் கேட்டு அங்கே வந்தனர்.

கத்தாதீர்கள், அனைவரும் வருகிறார்கள் மெதுவாக அவள் கூற,

உனக்கு அசிங்கமாக உள்ளதோ!

எனக்கில்லை. உங்களுக்கு தான் என்று கூற, அவர் கோபத்தில் மீண்டும் அவளை அறைந்தார்.

உனக்கு அசிங்கமாகவே இல்லையா வேலைக்கு வந்த இடத்தில் என் மகனுடன் சேர்ந்து நீயும் … என்று கூற,

நான் ஏதும் செய்யவில்லை.

அப்படியா? தனியாக இருவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று அவளது உதட்டை பார்க்க, அவளுக்கு ஒரு மாதிரி ஆனது.

நான் உன் மீது பாசம் வைத்ததற்கு நன்றாக செய்து விட்டாய்? உனக்கு இது போதுமா? என்று யுவியை பார்த்து கூறி விட்டு அழுது கொண்டே அவள் செல்ல,அவன் அவளது கையை பிடித்தான். அவள் உதறி விட்டு சென்றாள். அவன் அவனது அம்மாவை முறைத்த படி நின்றான்.

Advertisement