Advertisement

அத்தியாயம் 16

எங்கடி அவனை? ராஜா அம்மா கேட்க, ஏதோ வேலை இருக்கிறதாம்… மஞ்சு கூற, அப்பாவின் குரல் ஒலித்தது.

ஆமா துரைக்கு வேலையிலிருந்து தூக்கிய பிறகும் வேலை தருகிறார்களாம் என்று திட்ட,

மஞ்சு கோபமாக அப்பா… என்றாள்.

என்ன சத்தமெல்லாம் கொடுக்கிறாய்? அவர்  மேலும்  சத்தமிட,

நீ அவரையெல்லாம் கண்டு கொள்ளாதே! மற்றவர்கள் வரும் வரை வா உள்ளே செல்லலாம்.

இவள் பேசுவதை கேட்டவுடன் உள்ளிருந்த அம்மாவும், அப்பாவும் எட்டி பார்த்தனர்.

வாம்மா என்று அம்மா சிரித்துக் கொண்டே கூப்பிட்டு உட்கார வைத்து காபி போட சென்றார். இன்னும் இரண்டு தோழிகள் வருவார்கள்.

சரிம்மா என்று காபியை கொண்டு வந்து கொடுத்து விட்டு, கவிதாவை பற்றி விசாரிக்க,

எனக்கு அம்மா, அப்பா, எந்த சொந்த பந்தமும் கிடையாது. சிறு வயதிலிருந்தே நான் விடுதியில் தான் வசிக்கிறேன். அவளை பற்றி கூற அப்பாவிற்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

சொந்தம் கூட இல்லாமல் இருப்பார்களா? அம்மா கேட்க, கவி கண்ணிலிருந்து நீர் சொட்ட,

சும்மா இரும்மா. சின்ன பிள்ளையிடம் இப்படியா பேசுவாய்? அப்பா அம்மாவை திட்ட,

என்னை மன்னித்து விடுங்கள் அங்கிள். உங்களது மகன் எனக்கு உதவி செய்து தான் அவரது வேலையில் பிரச்சனை வந்தது..கூற, அவர் அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா. நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் அவன் இதனை பிரச்சனையாக எடுத்து சரி செய்ய மாட்டான். அதனால் தான் திட்டிக் கொண்டே இருப்பேன்.

எனக்கு மஞ்சு கூறும்போதே தெரியும் அங்கிள். காரணமில்லாமல் பெற்றோர்கள் திட்ட மாட்டார்கள்.

அடிப்பாவி, இப்படி கூறிவிட்டாயே!…மஞ்சு கவிதாவை முறைக்க வா உள்ளே செல்லலாம் என்று அழைத்து வந்து,

ஏன்டி என்னை போட்டு கொடுத்தாய்? மற்ற பெண்களும் வர, மஞ்சு கவிதாவை முறைத்துக் கொண்டே செயல் திட்டத்திற்கான  வேலையை ஆரம்பித்தனர்.

 கொஞ்ச நேரத்தில் மஞ்சுவின் மற்ற தோழியின் பெற்றோர்கள் அவர்களை தேடி வரவே, மஞ்சுவின் அம்மாவும்,அப்பாவும் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, கவியோ வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று இது போதும் நாளை மீதியை பார்ப்போம் என்று அனைவரும் கிளம்பினர். கவிதா அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க,                    மஞ்சு அம்மா பசிக்கிறது. சாப்பாடு ரெடியா?

வாருங்கள் சாப்பிடலாம். கவிதாவிற்கும் எடுத்து வைக்க, அனைத்தும் புதியதாக பார்த்துக் கொண்டு கண்கலங்க,

என்ன ஆயிற்றும்மா?

உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்தும் புதியதாக அழகாக உள்ளது.

சாப்பிட்டு விட்டு, கவிதா கிளம்புகிறேன் என்று கூற, தனியாக அவ்வளவு தூரம் எப்படி செல்வாய்? மஞ்சு கேட்க,

கொஞ்ச நேரம் இரு. அண்ணா அழைத்துச் செல்வான் அவள் கூறி விட்டு, அவனுக்கு போன் போட,

வேண்டாம் மஞ்சு என்று கவிதா கூற,

அவன் போனை எடுத்து, என்ன? என்றான்.

நீ அந்த வீட்டிற்கு தானே செல்வாய்? அவளை விடுதியில் இறக்கி விடேன்

இன்னும் அரை மணி நேரமாகும் அவன் கூற, சரி முடிந்தால் வேகமாக வந்து விடு…

சரி என்று போனை வைத்தான்.

அவளை அழைத்துச் சென்று ராஜாவின் அறையை காண்பிக்க, அதில் நிறைய போட்டோஸ் இருந்தது. குடும்பத்துடன், நண்பர்களுடன்,அவன் தனியே இருக்கும் போட்டோவையே அவள் நின்று பார்த்துக் கொண்டிருக்க,

என்னடி, என் அண்ணனை ரசித்துக் கொண்டிருக்கிறாயா?

இல்லை. உன்னுடைய அண்ணா இவ்வளவு அழகாக சிரிப்பாரா? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதை தான் நான் கேட்டேன் என்றாள் மஞ்சு.

கவிதா முறைக்க, நான் சும்மா தான் கேட்டேன். வா வெளியே செல்லலாம் என்று சோபாவில் கவிதா உட்கார, மற்றவர்கள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். கவிதா அவளுடைய பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படியே தூங்கி விட்டாள். ராஜாவும் வந்தான். அவன் வந்த போது அங்கே யாரும் இல்லை. கவிதா தூங்குவதை பார்த்து, அவனது அறையிலிருந்து ஒரு போர்வையை எடுத்து வந்து, அவளருகே வந்து கொஞ்ச நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். பின் அவளை மெதுவாக நகர்த்தி படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு சிரித்துக் கொண்டே அவனது அறைக்கு சென்றான். குளித்து விட்டு ஒரு பையை எடுத்து அவனுடைய ஆடை அனைத்தையும் எடுத்து உள்ளே போட்டு விட்டு,அதனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவனை பையுடன் பார்த்த அம்மா, எதற்கு இந்த பை…?அம்மா, அவனை கவனித்துக் கொள்ள தனியே ஒரு வீட்டில் இருக்க போகிறேன் அவனுக்கு சரியாகும் வரை என்று கூற,அம்மா கோபித்துக் கொண்டு ஓரமாக உட்கார, கவிதா எழுந்தாள்.

அவனும் அம்மாவின் அருகே உட்கார்ந்து ஒரே வாரம் தான். அவனுக்கு சரியானவுடன் வீட்டிற்கு வந்து விடுவேன்.

சாப்பாடு மூவருக்கு தயார் செய்து தாருங்கள்.

மூவரா? நீயும் அவனும் தானே? மஞ்சு கேட்க,

ஒரு செவிலியரும் இருப்பார் கூற, ஒரு பெண்ணுடன் தனியாகவா? அம்மா கேட்க,

தருதலைகள் இப்படி தான் இருப்பார்கள் என்று உன் பையன் உணர்த்துகிறான் பாரு அப்பா கத்த,

அவன் பல்லை கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தான்.

பதில் கூறுகிறானா பாரு? அப்பா கோபமாக பேச கவிதா அங்கிருப்பதை மறந்து, அப்பாவும் மகனும் வாய்ச்சண்டை நீள ஆரம்பித்தது.

நான் என்ன கூறுவது? கூறினால் கேட்பீர்களா?

கண்டிப்பாக அவசியமா அந்த பெண்?

ஆமாம் அவசியம் தான். அந்த கைதிக்கு திடீரென்று ஏதாவது செய்தால் நான் என்ன செய்வது?அதனால் தான் அதிகாரியிடம் கேட்டு தான் முடிவெடுத்தது.

நிஜமாகவே அவனுக்காகவா? உனக்காகவா?

எனக்கெதற்கு? நீங்கள் எதிலுமே என்னை நம்ப மாட்டீர்களா? எனக்கு அடிபட்ட போது நீங்கள் என்னை பார்க்கவே வரவில்லை. எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா?உண்மையிலே நான் உங்கள் மகன் தானா? இல்லையா? அவன் கோபமாக கத்த,

அப்பா, அவனை சப்பென்று அறைந்து விட்டார்.

நான் கேட்டதில் என்ன தவறு? நீங்கள் ஒரு நாளாவது அப்பா போல் நடந்து இருக்கிறீர்களா? அந்த அதிகாரி கூட என்னுடன் நன்றாக பழகுவார். ஏதாவது ஒன்றாவது என்னுடன் சேர்ந்து செய்திருக்கிறீர்களா? எங்காவது நாம் அனைவரும் சேர்ந்து சென்றிருக்கிறோமா? சேர்ந்து விளையாடி இருப்போமா? இருவரும் சேர்ந்து நாட்டு நடப்புகளை பற்றியாவது பேசி இருக்கிறோமா? எதுவுமே இல்லை என்று அவன் பேச பேச ..அவனது  அம்மாவும், மஞ்சுவும் அழுது கொண்டிருக்க, கவிதா என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள்.

அவன் வேகமாக பையை போட்டுக் கொண்டு கிளம்ப, கவிதா எழுந்திருப்பதை பார்த்து ஏதும் கூறாமல் செல்லவே, சாப்பிட்டு விட்டு செல் அம்மா கத்த, எனக்கு எதுவும் தேவையில்லை என்று கூறிக் கொண்டே சென்றவன் மறுபடியும் கவிதா அருகே வர, மஞ்சு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்தாள்.

அவன் வாங்கிக் கொண்டு, கவிதாவின் பையையும் எடுத்துக் கொண்டு, அவள் கையை பிடித்துக் கொண்டு செல்ல,அவள் அவர்களிடம் வாரேன் ஆன்ட்டி, அங்கிள் என்று கூறி விட்டு அவனை பார்த்துக் கொண்டே அவனுடன் செல்ல, அவள்… என்று அவனது அப்பா தயங்க, அவன் செல்லட்டும் மஞ்சு கூறினாள்.

என்ன? என்று பெற்றோர்கள் அவளை பார்க்க, அவளது விடுதிக்கு பக்கத்து வீட்டில் தான் அவனும் இருக்க போகிறான். அவனுக்கு அவளை பிடிக்கும். அவளுக்கு என்னவென்று தெரியவில்லை என்று கூறி, அப்பா திட்டுவாரோ என்று மஞ்சு பார்க்க அவரும் ஏதும் கூறாமல் உள்ளே சென்று விட்டார். அவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

                          “உனை அறியாமல்

                                வைத்தேனடா பாசத்தை!

                            நீ தெரியாது

                                 உன்னை கவனித்தேனடா!

                            உனக்காக மறைந்திருந்து

                                  உன்னை காத்தேனடா!

                           உனக்கு தகப்பனான

                                  நான்……….இன்று

                            நீ எனக்கு

                                  தகப்பனாகி விட்டாயோ!”

கவிதாவை அழைத்துக் கொண்டு வந்தவன் வீட்டின் முன்பு பாலா, சுந்தர், சூர்யா இருந்தனர். அவர்களை பார்த்தவுடன் கவிதாவை இறக்கி விட்டு, வேகமாக பாலாவிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டு,

பாருடா, அவர் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். தவறாக பேசுகிறார். எப்படி கோபப்படாமல் இருப்பது?

பாலா அவனை விலக்கி விட்டு, என்ன நடந்தது?

ராஜா கூறியதை கேட்டு, சூர்யா பயங்கரமாக சிரிக்க, அவன் சூர்யாவை முறைத்தான்.

ராஜா மீது கையை போட்டுக் கொண்டு, நீ இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறாய்? ஒரு பெண்ணுடன் தங்க போகிறாய் என்றால் கொஞ்சுவார்களா? என்ன? எல்லா பெற்றோர்க்கு கோபம் தான் வரும். அடி விழ தான் செய்யும் என்று மீண்டும் சூர்யா சிரிக்க,

டேய்,வாயை மூடிருடா,….ராஜா கத்த

சூர்யா சும்மா இல்லாமல்,நான் பெற்றோரிடம் இதை கூறாமல் விட்டிருப்பேன்.

போடா,..என்று ராஜா கத்த,

சரி, அவனை விடுடா. அப்பா தானே திட்டினார்கள். எல்லாமே சீக்கிரம் சரியாகி விடும் என்று பாலா கூற, சுந்தர் கண்ணாலே சைகை செய்தான்.

என்ன? என்று இருவரும் திரும்ப கவிதா போகாமல் கையில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, கோபத்தில் மஞ்சுவிடம் வாங்கியதை வண்டியிலேறும் முன் கவிதாவிடம் கொடுத்திருப்பான்.

அவளிடம் என்ன? ராஜா கேட்க,

அவள் சாப்பாட்டை நீட்டினாள். பின் அப்பா எப்பொழுதும் உங்கள் நல்லதிற்காக தான் கூறுவார். நீங்கள் பேசியது அவரையும் காயப்படுத்தி இருக்கும். நீங்களும் காயப்பட்டிருக்கிறீர்கள் தான். நீங்கள் உங்கள் நண்பரிடம் கூறி மனதை சமாதானப்படுத்தலாம். ஆனால் உங்கள் அப்பா, உங்கள் அம்மாவிடம் எதையும் கூறி வருத்தப்படுவது போல் தெரியவில்லை. அவருக்குள்ளே வைத்திருப்பது போல் தான் தெரிகிறது. அப்பா இருக்கும் போதே அவருடன் நல்ல படியாக நடந்து கொள்ளுங்கள். பின் வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை. அவர் நிலையில் இருந்தும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். என்னை விட உங்களது அப்பாவை உங்களுக்கு தெரியும். கவனமாக பேசுங்கள் கூறி விட்டு சென்றாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா இருவரும் உங்களது வீட்டிலிருந்து வருகிறீர்கள் போல, ஆமாம் என்று தலையசைத்து விட்டு உள்ளே சென்றான் ராஜா. சூர்யா அந்த செவிலியரையும், கைதியையும் அழைத்து வரச் சென்றான்.

சூர்யா அவர்களை அழைத்து வந்தான். பாலா, ராஜா, சுந்தர் அனைவரும் அவர்களுக்கு கட்டில் மற்றும் சில பொருட்களை எடுத்து வைத்தனர். வந்தவுடன் அந்த செவிலியரோ அவருடைய பொருட்களை அறையில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, ராஜா அவர்களிடம் வந்து,

உங்களுடைய பொருட்களை அறையை விட்டு வெளியே கொண்டு வராதீர்கள். அறையை விட்டு வெளியே அடிக்கடி வரக் கூடாது. அவனை பார்த்துக் கொள்ளும் உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள். என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று அவன் கூறிக் கொண்டே செல்ல,

செவிலியர், ஓ… தொந்தரவு செய்ய கூடாதா? என்று அவனருகே வர, அவன் பின்னே சென்றான். பாலா உள்ளே வந்து என்ன செய்கிறீர்கள்?

இவன், என்னிடம் கட்டளைகள் விதித்துக் கொண்டிருக்கிறான் என்று கூற, பாலா புரிந்து கொண்டு, இவன் காதலிக்கும் பெண் அந்த விடுதியில் தான் இருக்கிறாள். அதனால் தான் இவ்வாறு பேசி இருப்பான்.

செவிலியர் வெளியே வந்து, ஹே,… கெர்ல்ஸ். நான் இவருடன் இங்கே தான் தங்க போறேன் என்று கூற, அனைவரும் ராஜாவிடம் சார்,…எஞ்சாய்..என்று கத்த அவனுக்கு கோபம் எகிறியது.

செவிலியரை பிடித்து கத்த ஆரம்பித்தான். அவனது கோபத்தை பார்த்து அனைத்து பெண்களும் அறையினுள் செல்ல, கவிதாவிடமும் கூற, அவள் எட்டி பார்த்த போது ராஜாவின் வாயை பொத்தி நண்பர்கள் உள்ளே இழுத்து சென்றனர். இதை பார்த்து சிறு புன்னகையுடன் உள்ளே சென்றாள்.

போச்சு, அவளும் கேட்டிருப்பாள் என்று ராஜா புலம்ப,

அட, எதற்காக புலம்புகிறாய்?

என்ன புலம்புகிறேனா? நீ தான் காரணம் என்று கத்த,

எனக்கு ஏற்கனவே ஆள் உள்ளது செவிலியர் கூற, என்னை சமாதானப்படுத்த நினைக்காதீர்கள்?

உடனே அவள் போன் செய்தாள். கொஞ்ச நேரத்தில் ஒருவன் வந்தான். அவனை பார்த்து ஓடி வந்து கட்டிக் கொண்டாள். சாப்பிட்டு விட்டாயா? அவன் கேட்க

இல்லை என்றாள்.

வா என்று உள்ளே அழைத்து வந்து இருவரும் சாப்பிட, என்னடா நடக்கிறது? அந்த கைதி பார்த்தான்.

அவன் கிளம்பும் முன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, நன்றாக தூங்கு என்று கூறி விட்டு செல்ல, விடுதி பெண்கள் பார்த்து சத்தமிட….உள்ளே செல்லுங்கள் என்று வார்டன் அவர்களை துரத்தி விட்டார். கவி ஜன்னல் வழியே பார்த்து விட்டு உள்ளே சென்றாள். ராஜாவிற்கு அப்பாடா என்றது மனது.

சூர்யா யாரையாவது எனக்கு பிடித்து வைக்கலாம் என்று நினைத்தால் யாராவது தட்டி விட்டு செல்கிறீர்கள். போங்கடா அவன் கடுப்பாக கூற, நாங்களும் கிளம்புகிறோம் என்று நண்பர்களும் கிளம்பினர்.

உள்ளே சென்ற கவிதா பாலாவை முதன் முதலாக சந்தித்த வேளையை நினைத்து பார்த்தாள்.

ஸ்வேதா கத்தி குத்து வாங்கிய வீடியோவை பார்த்ததில் கவிதாவை பார்த்து, விசாரணை நடத்திய அன்று இரவு ஏழு மணியளவில் கவிதாவை சந்திக்க விடுதிக்கு சென்று, அவளை பற்றி விசாரிக்க வார்டன் அவளை அழைக்க.. அவளும் வந்தாள். அவளிடம் அவளுடைய பொருட்களை கொடுத்து விட்டு, வீடியோவை காண்பித்து, இவர்களில் யாரையாவது பார்த்தீர்களா?

யோசித்து விட்டு, ஆமாம் பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். ஏதும் செய்யாமல் சென்று விட்டான்.

அவர்களை பார்த்து சாட்சி கூறுவீர்களா?

அவள் தயங்க, வார்டன் வேண்டாம் சார். அவளுக்கென்று யாரும் இல்லை. அவளுக்கு ஏதும் ஆனால் என்ன செய்வது?..

உடனே பாலா கவிதாவின் கையை பிடித்து, உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தரவே அவனை அவளுக்கு பிடிக்க ஆரம்பித்தது.

சரி, நான் சாட்சியாக வருகிறேன் என்று அவள் கூற, அவனும் சந்தோசத்தில் கையை கொடுத்து உலுக்க, அவன் மகிழ்ச்சியடைவதை பார்த்து சந்தோசப்பட்டிருப்பாள். இதை நினைத்து பார்த்துக் கொண்டே, ஜன்னலருகே வர, வெளியே ராஜா ஒரு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்தான். உடனே ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, வார்டனிடம் இப்பொழுதே வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு வெளியே செல்ல, அவள் எங்கே செல்கிறால் என்று பார்த்து விட்டு புன்னகையுடன் அவரது அறைக்கு சென்றார்.

அவள் ராஜா அருகே சென்று அவனுக்கு போர்வையை போர்த்தி விட அவன் விழித்து,

நீ இன்னும் தூங்கவில்லையா?

தூக்கம் வரவில்லை.

என்ன! பாலா, உன் நினைவிலே வந்து வந்து செல்கிறானா?

அவள் ஏதும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டே, இவருக்கு நான் நினைப்பது எப்படி தெரிகிறது? மனதில் எண்ணியவாறு அகல அவன் எழுந்து அவளது கையை பிடித்து நிறுத்தி,

மிகவும் நன்றி. நானும் அப்பாவும் பேசினோம்.

அவள் ஆர்வத்துடன் அவனருகே வர, அவனும் அவளருகே வந்தான்.

என்ன நடந்தது? அமைதியாக தானே பேசினீர்கள்? அவன் அவளையே பார்த்தவாறு நின்றான்.

அவர் எனக்காக செய்த எல்லாவற்றையும் கூறி விட்டார். இனி நீ ஆசைப்பட்ட அப்பாவை பார்க்கலாம். இனி குடும்பத்திற்காக நேரத்தை செலவழிப்பேன் என்றார். நானும் அவரிடம் இனி கோபத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறேன்.

அவள் மகிழ்ச்சியுடன்,ஹே சூப்பர்…சூப்பர்..அவனுக்கு கை கொடுக்க, அவன் அவளை இறுக்கி அணைத்து விட, அவள் அதிர்ச்சியுடன் நின்றாள். பின் அவனை தள்ளி விட்டு, விடுதிக்கு ஓட என்னை மன்னித்து விடு. தெரியாமல் செய்து விட்டேன் ராஜா கத்த, அவள் திரும்பி கூட பாராது ஓடினாள்.

அய்யோ ராஜா! என்னடா செய்து விட்டாய்? என்று அவனை அவனே திட்டிக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். அவன் அணைத்ததனால் அவன் மீது உணர்வுகள் வர ஓடியவள் கதவை சாத்திக் கொண்டு அவனுடன் நடந்த அனைத்தையும் இரவு முழுவதும் ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளும் தூங்கவில்லை.

மறுநாள் காலையில் இருவரும் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்க, அறைத்தோழிகள் கவிதாவை எழுப்பி, நேரமாகி விட்டது. ஏன் இங்கே தூங்குகிறாய்? இரவு முழுவதும் இப்படியா தூங்கினாய்?வினவ, அவள் எதுவும் கூறாமல் எழுந்து, வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.

ராஜாவை போன் எழுப்பி விட்டது. பாலா போன் செய்து, இன்று அந்த ஆட்களுடன் ஆலோசனை கூட்டம் கயிற்றுக்கார தோப்பில் பத்து மணியளவில் நடக்கும். நினைவிருக்கிறது தானே? சரியாக வந்து விடு எனக் கூறி விட்டு போனை துண்டிக்க, கவிதா வேகமாக பேருந்தை நோக்கி ஓடினாள். பேசுவோமா? வேண்டாமா? யோசித்தவன் திடீரென்று ஓடிச் சென்று பேருந்தை பிடித்து, அவளருகே அமர்ந்தான்.

என்ன செய்கிறீர்கள்? மஞ்சுவை அழைக்க செல்லவில்லையா?

அவன் விழிக்கவே, பேருந்தை நிறுத்துங்கள் என்று கவிதா நிறுத்த, நீ என்னை மன்னித்து விடுவாய் தானே?

ம்ம்… என்று அவள் கூற, கீழே இறங்கினான். வேகமாக வண்டியை எடுத்து பேருந்தை தாண்டி, கவிதாவை பார்த்து விட்டு, விருட்டென்று கிளம்பினான். கவிதாவின் உதட்டில் புன்னகை பூக்க, அவனை பார்த்து தனக்குள் சிரித்தாள்.

அம்மா, பாரும்மா அவனை காணவில்லை. கல்லூரிக்கு நேரமாகிறது மஞ்சு புலம்ப, சரியாக ராஜா வந்தான். அவனை பார்த்து பயங்கரமாக சிரித்தாள். அவன் தலை முழுவதும் கலைந்திருக்க முகம் கூட கழுவாமல் வந்திருக்கிறான் என்று கேலி செய்து சிரிக்க, அவன் கண்ணாடியில் பார்த்து விட்டு,

அய்யோ! போச்சு… இப்படியா அவள் முன் இருந்திருக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே முகத்தை கழுவ,

என்ன! கவி முன் இப்படியா இருந்தாய்? என்று அவள் அவனை மேலும் கேலி செய்ய, அவன் அவளை அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு, வீட்டிற்கு வந்து அவன் ரெடியானான்.

செவிலியரிடம், இவனை பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்டேசனில் இருந்து ஒருவர் வருவார்.  பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நம்பி விட்டு செல்கிறேன்..அவனது நம்பரை கொடுத்தான்.

நான் பார்த்துக் கொள்கிறேன் செவிலியர் கூற, ராஜா கிளம்பினான்.

காலையில் பாலா ராஜாவிடம் பேசும் சமயத்தில் ரேணு காபியை எடுத்துக் கொண்டு வந்திருப்பாள். பாலா பேசிய அனைத்தையும் கேட்டிருப்பாள். பாலா குடும்பத்தினர் அனைவரிடமும் முக்கியமான ஆட்களை சந்திக்க செல்கிறேன். யாரும் போன் செய்யாதீர்கள்! காவலர்கள் இருவரை விட்டு செல்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களிடம் கூறுங்கள் கூறி விட்டு சென்றான் பாலா. சூர்யா, சுந்தர் இருவரும் கிளம்பவே நால்வரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

சுந்தர் ராஜாவிடம், தலையில் இன்னும் வலி இருக்கிறதா?

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று ராஜா மழுப்புவதை பார்த்து பாலா புரிந்து கொண்டான். அவனுக்கு இன்னும்  வலி இருக்கிறது என்று….

உள்ளே சென்றனர்..பேச்சு வார்த்தையை ஆரம்பித்தனர். மணி பன்னிரண்டு ஆனது. ஆனாலும் இவர்களது பேச்சிற்கு அவர்கள் ஒத்து வரவில்லை.

வீட்டில் ரேணு மதிய உணவு தயார் செய்து விட்டு, விளையாடிக் கொண்டிருந்த மதுவை பார்க்கச் சென்றால் ரேணு. அங்கே மது இல்லை. அவளை தேடிக் கொண்டே வீட்டின் வெளிப்புறம் தேட, அவள் இல்லை. உள்ளே இருக்கலாம் என்று நினைத்து மது….மது….கத்திக் கொண்டே வந்தாள்.

ஸ்வேதாவும், அத்தையும் அவளிடம் விசாரிக்க, மதுவை காணவில்லை கூற அனைவரும் தேட ஆரம்பித்தனர். பார்வதியம்மாவும் சேர்ந்து தேடினார். ஆனால் மது கிடைக்கவில்லை. காவலர்களை வெளியே அனுப்பி தேட விட, அவர்களும் இல்லை என்றும் கூற,அனைவரும் பயப்பட ஆரம்பித்தனர்.

 ஸ்வேதா தான் ரேணுவிற்கு நம்பிக்கை அளிக்க, ரேணுவால் அமைதியாக இருக்க முடியாமல் மற்றவர்களை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு நான் பாலாவை பார்க்க செல்கிறேன் என்று வெளியே வர, அவர் கண்டு பிடித்து விடுவார் அவர்களிடம் கூறி விட்டு ஓட, ஸ்வேதா விடாமல் கதவை தட்ட, காவலர்கள் கதவை திறந்தனர்.

அம்மா, அத்தை நான் ரேணுவை அழைத்து வருகிறேன் என்று கூற, உனக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. நீ இரும்மா. நான் அவளை கவனித்துக் கொள்கிறேன் அத்தை கூற,

அத்தை அவள் அண்ணாவை தேடி தானே சென்றிருக்கிறாள். எனக்கு அந்த இடம் தெரியும். அவள் தான் பாலா அண்ணா செல்லும் இடத்தை கவனித்து வைத்திருந்தாள். பக்கத்தில் தான் உள்ளது. மது வீட்டிற்கு வந்து விட்டால், எனக்கு போன் செய்து கூறுங்கள் கூறி விட்டு, கையில் தடியுடன் வேகமாக நடந்தாள்.

அவள் பாலாவை முழுமையாக நம்ப ஆரம்பித்து விட்டாள். அதனால் தான் அவன் மதுவை கண்டுபிடித்து  தருவான் என்று உறுதியாக நினைக்கிறாள். அவளுக்கு எப்படியாவது சரியானால் அதுவே போதும்.

நான் உங்களது மகனை பற்றி பேச வேண்டுமே?

ரேணுவை பாலா காதலிப்பது பற்றி என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை இல்லை பார்வதியம்மா கூற,

இருவரும் பார்த்து சிரித்து கொள்ள, பின் பாலா போனை எடுத்தால் கூறி விடலாம் என்று பார்வதியம்மா பாலாவிற்கு போன் போட, அவன் எடுக்கவில்லை.

Advertisement