Advertisement

               மீள் கனவே

            அத்தியாயம் 1

இரவு நேர ஜில்லென்ற காற்று இதமாய் பரவி அனைவரையும் பரவசமூட்டூம் சமயத்தில் “தடதட”வென தண்டவாளத்தில் சென்னை  எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து கிளம்ப ஆரம்பித்தது.

பிளாட்பாரத்தில் ஒரு பெண்ணின் குரல் “ப்ளீஸ் கெல்ப் மீ“ என கேட்டது .

ஒரு கம்பார்ட்மென்டில் இருந்த ஒரு ஆடவன் தலையை நீட்டி எட்டி பார்க்க, அந்த பெண் தன் கையில் வைத்திருந்த லக்கேஜ் உடன் ரயிலில் ஏற முயன்று கொண்டிருந்தாள். அந்த ஆடவன்,அவள் ரயிலில் ஏற உதவி  செய்தான்.

ரயிலில் ஏறியவுடன் “கிஸ் கிஸ்…” என  மூச்சிறைத்தது. அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,அந்த ஆடவனிடம் “தேங்க்யூ” என்றாள்.

பின் அவள் தன் பெயரை சொல்ல வாயெடுத்த போது, அந்த ஆடவன் விருட்டென்று சென்று  விட்டான் .

என்ன மனிதன் இவன்? நான் இவனிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறேன். நான் கூறிய நன்றியை மதிக்காமல் சென்ற இவனுக்கு மரியாதையை கற்று கொடுக்கணும் என மனதில் நினைத்தவாறே அவனை தொடர்ந்து சென்றாள் .பின் அவனை நோக்கிய போது அமைதியானாள். ஏனென்றால் அவன் மடியில் ஒரு அழகான குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை பார்த்தவுடன் அவளது கோபம்   காணாமல் போயிற்று .

சார்….. சார்…….என கூப்பிட்டாள்  அவள்.

என்ன? என்பது போல் பார்த்தான் அவன்.

இது யாருடைய குழந்தை?

 சற்று சிந்தித்தவாறே, என்னுடையது தான் என்றான்.

என்ன! உங்களுடையதா? அப்படியென்றால் உங்களுடைய மனைவி? என    இழுத்தாள்.

கோபத்துடன் முறைத்த அவன், என்னை பற்றி தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப் போகிறது கேட்டான் கடுகடுப்பான குரலில் .

அவன் கோபத்தை எதிர்பார்க்காத அந்த பெண் அரண்டு விட்டாள். அவர்களுக்கு எதிராகவே அமைதியுடன் உட்கார்ந்தாள்.தன் தவறான கோபத்தை புரிந்து கொண்டவன், அவளிடம் தானாகவே பேசினான்.

என் பெயர் ரகு. இது என்னுடைய குழந்தை  ரியா. என்னுடைய   மனைவி மித்ரா. அவள்… அவள்…… என பேச முடியாமல், துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் கோர்க்க, எங்களை விட்டு சென்று விட்டாள் இறைவனிடம் என ஒரு வழியாக சொல்லி முடித்தான். ஆனால் அவன் கண்களில் பெருகிய கண்ணீர் நிற்க மறுத்தது.

 “ஐ ஆம் சாரி “சார் என்றாள்.

இல்லை மிஸ்..யோசித்தான்.

 ஸ்வேதா என்றாள்.

ம்..ஸ்வேதா. அவள் எப்போதும் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றான் கண்ணீரை துடைத்த படியே,

அவன் கண்ணீரை உணர்ந்ததோ என்னவோ, அவனுடைய குழந்தை அழ ஆரம்பித்தது. இதனை பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த ஸ்வேதாவின் கண்ணிலும் நீர் தொட்டுச் சென்றது .

குழந்தையை சமாதானப்படுத்த முயன்று தோற்றும் போனான் ரகு.குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. நீங்கள் தவறாக எண்ணவில்லை எனில் நான் உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த முயற்சிக்கவா? எனக் கேட்டாள்.

தலையசைத்தான் ரகு.

ஸ்வேதாவின் கையில் ரியா போனவுடன், ரியாவை தன் மார்பில்  சாய்த்து உலவினாள் இங்கும் அங்குமாய். ரகுவிற்கு ஒரே ஆச்சர்யம்  குழந்தை  அழுகையை  நிறுத்தியதைக் கண்டு. தாய்,தந்தையின் ஸ்பரிசமே ஒரு குழந்தை அழுகைக்கான மருந்தாகும். ஆனால் இவளிடம் சென்றவுடன் நம் ரியா எப்படி அழுகையை நிறுத்தினாள். ஸ்வேதா மீது சந்தேகம் எழுந்தது. யோசித்துக் கொண்டே  இருந்தான்.

ரியா தூங்கியவுடன் ஸ்வேதாவின் கையில் இருந்த தன் குழந்தையை படக்கென உருவினான். குழந்தை அசந்து தூங்கியதால் விழிக்கவில்லை. பின் அவன் கண்களால் அவளை அளவெடுப்பது போல் பார்த்தான்.

என்ன இவர் , திடீரென்று  இப்படி நடந்து கொள்கிறாரே  என்று மனதினுள் வருந்தினாள் ஸ்வேதா.

அவன் தன் குழந்தையை வாங்கிய விதம் அவனையே யோசிக்க செய்தது.

நானா இப்படி செய்தேன்? ஆனால் அவள்.. என யோசித்தான்.

தன் குழந்தையை மடியில் போட்டு அவளது தலையை வருடியவாறே குழந்தை தூங்குவதை பார்த்துக் கொண்டிருந்தான் .ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனுடைய மனைவி மித்ராவின் நினைவலைகள் எழ, அவன் அவனுக்குள்ளாகவே கவிதையை ஒட விட்டான்.

  “ உன்னை மறவேன்

    உன் நினைவிலிருந்து அகலேன்

    உன்னை விட்டு பிரியேன்

    உடல் பிரிந்தாலும்

    உயிர்  பிரியாது என்றிருப்பேன்

    காலந்தோறும்

    நம் காதல்

    வாழுமே என் இருதயத்தில்..“

அதிகாலை நான்கு மணியளவே ஸ்வேதா எழுந்து ரயிலில் வாஸ்பேசன்    அருகே சென்று தயாராகி, மேக்கப் போட்டுக் கொண்டு ரகு உட்கார்ந்திருந்த   இடத்திற்கு எதிரே போய் அமர்ந்து கொண்டு அதிகாலை தென்றல்   காற்றை சுவாசித்துக் கொண்டு வானத்தையும், சூரியன் உதயமாகும்   திசையையும் ரசித்துக் கொண்டே வரும் போது மணி ஆறை தாண்டியது.

எதிரே இருந்த ரகு ஏதோ யோசனையிலேயே இருந்தான். அவன்  அவளுக்கு உதவி செய்த பொழுதே ஸ்வேதாவிற்கு ரகுவை பிடித்து   போயிற்று. கையில் குழந்தையுடனும், மனதில் மனைவியுடனும்   இருப்பான் என கொஞ்சமும் எதிர்பார்க்காதது தான்.

ஸ்வேதா மாடெர்ன் கெர்ல், அழகான தேவதை போன்ற தோற்றம்   உடலொட்டிய சுடிதார், கண்களில் கூலிங் கிளாஸ், தலையில் தொப்பி, எலுமிச்சை நிறத்தில் இருப்பாள்.

ரகுவின் உடல் திடகாத்திரமானதாகவும், அவனுடைய அடர்ந்த  கேசத்தின் முன் பகுதியில் சுருண்டும், முகத்திற்கு ஏற்றாற்போல் அளவான மீசை, அனைவரின் கவனத்தையும் வசீகரிக்கும் கண்கள் , பார்க்க மாநிறமாக அழகாக இருப்பான்.

ரியா உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் ரகுவின் கையில் இருந்த ஒரு   பையை திறந்து, அதிலுள்ள ஒரு போட்டோவை எடுத்து முத்தமிட்டாள் .

இதனை கவனித்த ஸ்வேதா, ரியாவை பார்த்து,”ரியா குட்டி,யார் இது?”  என்று கேட்டாள்.

ரகு ஸ்வேதாவை முறைத்தான்.அவள் அவனை கண்டு கொள்ளவே   இல்லை .

இந்த போட்டோவை பாருங்கள் என குழந்தை ஸ்வேதா அருகில்  மெதுவாக நடந்து வந்து, இது என்னுடைய அம்மா என அவளிடம்   காட்டி விட்டு போட்டோவை கட்டிக் கொண்டது.

உனக்கு உன்னோட அம்மாவை பிடிக்குமா? கேட்டாள் ஸ்வேதா.

எனக்கு ரொம்ப ரொம்ப..என கையை விரித்துக் கொண்டே போன அந்தக்   குழந்தையை தன்னுடன் அணைத்துக் கொண்டாள். அவளை மீறியும்  கண்ணீர் சொட்டியது ஸ்வேதாவுக்கு.

அவன் அசராமல் அவளையே பார்த்துக் கொண்டு,இவள் நடத்தை வித்தியாசமாக தெரிகிறதே என புருவத்தை ஏற்றிய படி அவளைப்  பார்த்தான்.

அதனை உணர்ந்த அவள் ரியாவை விடுவித்து, எனக்கும் என் அம்மா  நினைவு வந்துவிட்டது என கூறிக் கொண்டே கண்களை துடைத்தாள்.

உங்களுடைய அம்மா எங்கே? ரியா கேட்டாள்.

சாமிக்கிட்ட.

என்னுடைய அம்மாவும் தான் ரியா கூறினாள்.

ரகுவின் கண்கள் ரியாவை பார்த்து சிந்தித்த படியே கலங்கியது.

உங்களுடைய பெயர் என்ன? உங்களை நான் எப்படி கூப்பிடுவது? நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா? என கேள்விளை ரியா தொடுக்க,

ரியா குட்டி, மெதுவாக..மெதுவாக..என கையசைத்துக் கொண்டே கூறிய   ஸ்வேதாவை பார்த்து குழந்தை சிரித்தது. அவளும் சிரித்தாள். பிறகு   இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். நடப்பதை பார்த்து தடுக்காமல்  ரகு, ரியா சிரிப்பதையே ரசித்துக் கொண்டிருந்தான்.

என் குழந்தை இவ்வளவு அழகாக சிரித்து வெகு நாட்கள் ஆயிற்று என  மனதினுள் எண்ணினான்.

ஸ்வேதாவை பார்த்து ஒரு நிமிடம் ரியாவை பார்த்துக் கொள் என கூறி விட்டு வாஸ்பேசன் சென்றான். ஸ்வேதா அவன் சென்ற திசையையே   பார்த்தாள்.

அவன்  தயாராகி வெளியே வந்தவுடன் அதிர்ச்சி அடைந்தான்.ரியா ரயிலுக்கு வெளியே நின்று  கொண்டிருந்தாள்.

ரயில் நின்று கொண்டிருந்த போது, ஸ்வேதா ரியாவுடன் கீழே  இறங்கினாள். அப்போது ஒருவன் தன் கையில் கத்தியோடு அவர்களை நோக்கி ஒடி வருவதை பார்த்து, ரயிலின் ஜன்னல் வழியாக வெளியே  குதித்து அவனை தடுக்க, கத்தி தடுமாறி கீழே விழுந்தது. அவனை    பிடிப்பதற்க்குள் ரகுவிடமிருந்து நழுவி ஓடி விட்டான் கொலை செய்ய வந்தவன்.

கோபத்தில் ரகுவின் முகம் சிவக்க, ஸ்வேதாவை நோக்கி பார்த்துக் கொள் என்று தான் சொன்னேனே தவிர அவளை வெளியே கூட்டிட்டு வரச் சொல்லலை என கத்தினான்.

அங்கிருந்த அனைவரும் இருவரையும் கவனிக்க, இதனை எதிர்பாராத  ஸ்வேதா அப்படியே அதிர்ந்து நின்றாள்.

அப்பா, ஸ்வேதாவை திட்டாதீர்கள். அவள் என்னுடைய தோழி.

என்ன ரியாம்மா, நமக்கு யாருமே வேண்டாம்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா   செல்லம் என கொஞ்சினான்.

அவன் செயல்கள் ஸ்வேதாவின் மனதை புண்ணாக்கியது. ரயிலில்  ஏறினர் அனைவரும். கொஞ்ச நேரம் ஏதும் பேசாமல் அமைதி நிலவியது.

நாம் கிளம்புவோமா ரியா? என கேட்டுக் கொண்டே ரியா அருகே  வந்தான் ரகு.

போங்கப்பா, என்னிடம் பேசாதீர்கள்.

என்னிடம் பேச மாட்டாயா ரியாம்மா?

இல்லைப்பா, நீங்கள் ஏன் ஸ்வேதாவிடம் கோபப்பட்டீர்கள்? நான் தான் அவளிடம் மிட்டாய் கேட்டேன். அதனால் தான் அவள் என்னை வெளியே  கூட்டிட்டு போனாள். ஆனால் நீங்கள் ஸ்வேதா மேல் கோபப்பட்டு விட்டீர்கள்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் ரியாவிடம்,

ரியாகுட்டி அப்பா சொன்னதுக்கு அர்த்தம் இருக்கு. ஸ்வேதா இப்பொழுது  அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. அப்புறம் நீ தான் வருத்தப்படுவம்மா  அதனால் தான் என ரியாவை சமாதானப்படுத்தினான்.

இனி என்ன வேணும்னாலும் அப்பாவிடம்  கேளு.

அப்படின்னா இனி மேல் ஸ்வேதா கூட பேசவே முடியாதா? என ரியா   அழும் குரலில் கேட்டாள்.

நடப்பதை கவனித்த ஸ்வேதா, இல்லடா ரியாக்குட்டி உங்களிடம்  பேசாமல் என்னால் இருக்கவே முடியாதுடா. கண்டிப்பாக உன்னை  சந்திக்க வருவேன் என்றாள்.

ரியா வேகமாக ஓடிப் போய் அவளை கட்டிக் கொண்டாள்.

ரகுவிற்கு கோபம் சீறலாய் வர, ரியாவிற்காக தன்னைத் தானே  கட்டுபடுத்திக் கொண்டான். தொடர்ந்து பத்து நிமிடங்களாவது  ஸ்வேதாவை முறைத்துக் கொண்டே இருந்திருப்பான் என்று தோன்றியது  ஸ்வேதாவிற்கு.

காலை ஏழு மணியளவில் ரயில் சென்னை ரயில்வே ஸ்டேசன் வந்தது.   இருவரும் இறங்கினர்.கூடவே ஸ்வேதாவும் இறங்கினாள். ஸ்வேதா, ரகுவிடம் பேச ஆரம்பிக்க, உன்னிடம் பேச எதுவும் இல்லை என  அவளை பேச விடாமல் வெடுக்கென கூறி விட்டு ரியாவை கூட்டிட்டு   போனான்.அவன் பேசியதை ரியா கவனிக்கவில்லை. கூட்டத்தில் “கச கச” சத்தத்துடன் மக்கள், வானத்தில் பறவைகள் பறப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரகு ஸ்வேதாவின் பேச்சை நிராகரித்து விட்டான்.

அவன் நடக்க ஆரம்பித்ததும் வேடிக்கை பார்த்த ரியா பின்னால் திரும்பி  ஸ்வேதாவை பார்த்து “பை பை“ என கூறி கையசைத்தாள். ஸ்வேதாவும்   கையசைக்க இருவரும் சென்றனர்.அவர்கள் இருவரும் கண்ணிலிருந்து  மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்  ஸ்வேதா. அவளின்  எண்ணத்தில்,

                       “பச்சிளம் சிட்டே

                        உனைக் காண

                        எங்கிருந்தாலும்

                        ஓடோடி வருவேன்

                        உனக்காகவே

                        என்றென்றும் நானே”

ரகுவும், ரியாவும் ரயில்வே ஸ்டேசனில் இருந்து வெளியே வந்தனர்.  ரகு  சென்னையில் உள்ள அவனுடைய வீட்டிற்கு செல்ல ஆட்டோவை பிடித்தான்.

அவன் ஆட்டோவில் ஏற முற்பட்ட நேரம் ஒரு பெண்ணை, போலீஸ்காரர்கள் சிலர் துரத்தினார்கள். அதனை பார்த்த அனைவரும்  அங்கங்கு ஒளிந்து கொண்டனர்.

ஏன் அந்த பெண்ணை துரத்துகிறார்கள்?

அந்த பெண்ணை அவர்கள் துரத்தவில்லை. அவளுக்கு பயிற்சி நடக்கிறது.

என்ன பயிற்சியா?

ஆம். அவர்கள் காக்கி யூனிபார்ம் போட்டு இருக்கிறார்களே?

அவர்கள் போலீஸ்காரர்கள் இல்லை.

பின்னே?

அவர்கள் ரௌடிகள். அந்த பெண், குழந்தை கடத்தல், கொலை, கொள்ளைகளில் ஈடுபடுபவள். ரொம்ப மோசமானவள் தம்பி.

அவளுக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லையா?

அவளை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை .

அவளை பற்றி விடுங்கள் தம்பி. நீங்கள் எங்கே போகணும்?

பிள்ளையார் கோவில் தெரு,அண்ணா நகர். அண்ணே! அங்கே ஆர் டி மாளிகை முன்னாடி நிறுத்திடுங்க.

அண்ணே! அந்த பெண்ணின் பெயர் என இழுத்தான்.

ஆட்டோக்காரர், வேண்டாம் தம்பி. அவளது பெயரை கேட்டாலே அபசகுணம் என்பார்கள்.

அண்ணே! ப்ளீஸ் பெயரை மட்டும் சொல்லுங்க.

என்ன தம்பி, சொன்னா கேட்கவே மாட்டிக்கிறீங்க! சரி சொல்றேன். ராசாத்தி.

பெயரை கூறிய மறு நொடியே ஆட்டோ நின்றது. ஆட்டோவின் ஒரு சக்கரத்தில் காற்று இறங்கி விட்டது.

தம்பி,நான் தான் சொன்னேன்ல

கவலைப்படாதீங்க அண்ணா! மெக்கானிக் ஷாப் அருகே வந்து தான்  ஆட்டோ நின்னுருக்கு. இதற்கான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இல்லை தம்பி, நானே பார்த்துக் கொள்கிறேன்.

ஆட்டோ டயரை சரி செய்த கொஞ்ச நேர பயணத்திற்கு பின் ஆர் டி மாளீகை வந்தது.

தம்பி இது உங்க மாளீகையா?

ஆம் என தலையசைத்தான் ரகு.

அற்புதமாக இருக்கு தம்பி .

“தேங்க்ஸ் அண்ணே”.ஆட்டோவுக்கு எவ்வளவு?

நானூறு ரூபாய் தம்பி .

கொடுத்து விட்டு மாளிகையை நோக்கித் திரும்பினான் ரகு.

ரியா ஆட்டோக்காரரை பார்த்து “பை பை” தாத்தா என்றாள்.

ஆட்டோக்காரர் சிரித்துக் கொண்டே “பை டா” பாப்பா என்றார்.

 

Advertisement