துவாரகாவிடம் திரும்பி “டேய் அடுத்தவங்கள பத்தி அவன் தான் யோசிக்க மாட்டான் நீயும் அவன் கூட சேந்து அவன மாதிரியே ஆகிட்டியா” என்று கோபமாக கேட்கவும் இருவரும்ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து கொள்ள
“சவி அவங்களே இப்போ தான் வந்துருக்காங்க வந்ததும் வராததுமா அவங்ககிட்ட ஏ எரிஞ்சு விழுகிற ரெண்டு பேரும் உள்ள வாங்கப்பா” என்ற போது தான் கவனித்தனர் ஜெகநாதன் கையில் காயத்துடன் இருப்பதை
பதறிக்கொண்டு அருகில் வந்த விஷ்ணு “என்னாச்சு மாமா எப்டி அடி பட்டுச்சு” என்று கேட்க
“லேசான காயம் தான் விஷ்ணு இப்போ தான் அவ முடிச்சுருக்கா நீயும் ஆரம்பிச்சுறாத! என்னோட தப்பு தான் ஒன்வேன்னு தெரிஞ்சும் சீக்கிரம் வீட்டுக்கு வரலாம்னு அந்த வழியில வந்தப்போ எதிரில வந்த வண்டியில மோதி கீழ விழுந்துட்டேன் வேற ஒன்னுமில்ல போங்க ரெண்டு பேரும் ஃப்ரெஸ் அப் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று கூற
“இல்ல அங்கிள் அம்மா காத்துட்டு இருப்பாங்க நா கிளம்புறேன்”என்றவனை “டேய் டைம் ஆச்சு ஒழுங்கா சாப்ட்டு போ” என்று மிரட்டும் தோரணையில் கூறியவர் “மத்தவங்கள கஷ்டப்படுத்துறதுல அவ்ளோ சந்தோஷம்” என்று விஷ்ணுவை பார்த்து கொண்டே உள்குத்தலுடன் மொழிந்துவிட்டு சாவித்ரி சமையல் அறைக்குள் சென்றுவிட
“உனக்கு அவ தான் சரி மறுத்து பேசாம வந்து சாப்பிடு” என்று ஜெகநாதன் கூறவும்சரியென தலையசைத்தவன் விஷ்ணுவுடன் அறைக்குள் சென்றான்
பதட்டமும் பயமுமாக உள்ளே நுழைந்த அமிர்தா “அக்கா அக்கா” என்று குரல் கொடுத்து கொண்டே வர கூடத்தில் அமர்ந்திருந்த ஜெகநாதன் “என்னம்மா என்னாச்சு!”
“மாமா நீங்க வாந்துட்டீங்களா?” என்றவர் காயத்தைபார்த்துவிட்டு” உங்களுக்கு எப்டி அடிப்பட்டுச்சு?” என்று வந்த விஷயத்தை மறந்து காயத்தை பற்றி கேட்க
“எனக்கு அடிபட்டது இருக்கட்டும் நீ எதுக்கு வந்த அதுவும் இவ்ளோ அவசரமா என்னாச்சும்மா!”
“அத ஏ மாமா கேக்குறிங்க எனக்குன்னு வந்து பிறந்திருக்கே அவள கடைக்கு போய்ட்டு வர சொல்லி அனுப்பி வச்சேன் இன்னும் காணோம் போய் அரைமணி நேரமாகுது” என்றவர் “கடையில போய் விசாரிச்சும் பாத்துட்டேன் அவ வந்துட்டு போய்ட்டானு சொல்றாங்க இந்த ராத்திரியில எங்க போய் அவள தேடுறதுன்னு தெரியல பயமா இருக்கு மாமா” என்று கலக்கத்துடன் கூற
“சரி சரி பதறாத அமைதியா இரு” என்றவர் “விஷ்ணு இங்க வா” என்று அழைக்க
“என்ன மாமா!”
“கடைக்கு போனா சஞ்சளா இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஒரு எட்டு என்னுன்னு போய் பாத்துட்டு வாப்பா” என்றதும்
துவாரகேஷ் வேகமாக முன்னே வந்து “நீ இருடா நா போறேன் காலையில இருந்து நீ எதுவும் சாப்பிடல பசிக்கிதுன்னு வேற சொன்னல நீ உக்காந்து சாப்பிடு நா போய் அவள கூட்டிட்டு வறேன்” என்றதும் சரி என்றிட
துவாரகா சஞ்சளாவை அழைத்துவர சென்றதும் பெரியவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்அடுக்களையில் வைதேகி இருப்பதை கண்டு உள்ளே சென்ற விஷ்ணு “நா ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று ஹாட்பாக்ஸை கையில் எடுக்க
“நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க உதவி பன்றேன் பேர் வழின்னு உபத்ரம் பண்ணாதீங்க” என்று சிடுசிடுத்தாள்
“எதுக்கு இப்போ கோபப்டுற தேவிம்மா உனக்கு நல்லது பண்ண தானே வந்தேன்”
“ம்ஹும் நீங்க பண்ண நல்லதையே இன்னும் என்னால ஜீரணிக்க முடியல இதுல இன்னொரு நல்லது வேறயா?, போங்க சாமி நல்லா வாயில வந்துரும் பேசமா போய் உக்காருங்க” என்றுஉணவுகளை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொண்டே கோபமாக கூற
சுருக்கென்ற அவளின் குத்தல் பேச்சு மனதை ஆழமாய் பதம் பார்க்கவே அவளிடம் வாயட வேண்டுமென்ற எண்ணம் தொலைந்து போனது அவனுக்கு, “கத்தியின்றி ரத்தமின்றி மனதை காயப்படுத்திவிட்டாளே ராட்சசி தேள் போல வார்த்தைகளை கொட்டுகிறாளே” என்று எண்ணியவன் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொள்ள, அங்கொரு காதும் இங்கொரு காதுமாய் ஜெகநாதன் உள்ளே நடந்த சம்பஷனைகளை சன்ன சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்
“எங்க போயிருக்கும் இந்த மூட்டைகோஸ் அதுவும் இந்த நேரத்துல” என்று புலம்பியபடியே சஞ்சளா சென்ற கடைக்கு சென்று விசாரித்து விட்டு சுற்றும் முற்றும் பார்வையிட்டு கொண்டே வந்தவன் இருளில் மறைவான இடத்தில் இருந்து வந்த மெலிதான சத்ததில் சட்டென நின்றான் துவாரகேஷ் “கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா என்ன ஆகிருக்கு தெரியுமா? நல்ல வேளை நா வந்து காப்பாத்துனேன் இல்லனா உங்கம்மாவுக்கு யார் பதில் சொல்றது? என்று கோபமாக யாரையோ அதட்டி கொண்டிருக்க
மெதுவாய் அடிகளை எடுத்து வைத்து சத்தம் வந்த திசையில் எட்டி பார்த்தவனுக்கு சிரிப்பதா கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை அவனுக்கு முதுகை காட்டி யாருடனோ அமர்ந்து கதை அளந்து கொண்டிருந்தாள் சஞ்சளா “இத காணம்னு அங்க பயந்துட்டு இருக்காங்க இவ என்னடான்னா நாய் கூட உக்காந்து பேசிட்டு இருக்கா..கால கொடுமைடா சாமி” என்று நொந்து கொண்டவன்
“ஏய்” என்ற குரல் கொடுக்க திடுக்கிட்டு திரும்பியவள் அவனை கண்டதும் காணாதது போல தலையை திருப்பி கொண்டு நாய் குட்டியிடம் பேச்சை தொடர்ந்தாள்
“கொஞ்சமாவது மதிக்கிறாளா பாரு திமிரு பிடிச்சவளா இருபாப்போல” என்று முணுமுணுத்துக்கொண்டே அருகில் சென்றவன் “உன்ன தான் ஏ புள்ள உன்ன தான் வா வீட்டுக்குபோலாம் உன்ன காணம்னு உங்க அம்மா தேடிட்டு இருக்காங்க” என்று அழைக்க
“இந்த புள்ள கிள்ளன்னிங்க வாயில வசம்பு வச்சு தேச்சுறுவேன்” என்று எகிறி கொண்டு வந்தவள் “என்னோட வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும் நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க” என்று கூறிவிட்டு எழுந்து முன்னே செல்ல
சட்டென அவள் கை பற்றியவன் “நில்லு! இதுக்கு முன்னாடி நா உன்ன பாத்தது கூட இல்ல இன்னைக்கு காலையில தான் முதல் தடவை பாத்தேன் என் மேல உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம்” என்று கேட்க
“கைய விடுங்க சார் பாக்குறவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க” என்று அவன் பிடியிலிருந்து கையை விடுவிக்க போராடினாள் சஞ்சளா
“கைய விடுறேன் ஆனா நா கேக்குறதுக்கு பதில் சொல்லு உன்னோட பேர் சஞ்சளா தானே! பின்ன எதுக்கு அந்த பேரை சொன்ன!”
“என்ன சார் நீங்க முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட எப்டி பேசணும்னு தெரியாது? நீங்க பேர் கேட்டதும் ஈ… ன்னு இழிச்சு கிட்டு என்னோட பேர் சஞ்சளா இத்தியாதி இத்தியாதி ன்னு எல்லா விவரங்களை சொல்லுவாங்களா” என்று தலையை வெடுக்கென்று திருப்பி கொள்ள
சிரித்து கொண்டே “சாரி நா அப்டி கேட்டுருக்க கூடாது தான் ஆனா என்னன்னு தெரியல உன்ன பாத்ததும் உன்னோட பேர தெரிஞ்சுகனும்ன்னு தோணுச்சு அதான் கேட்டுட்டேன்” என்று கையை விடுக்க
அவன் பற்றிய இடம் கன்றிபோய் எரிய தொடங்கியதுவலியில் முகம் சுருக்கியவள்கன்றிய இடத்தை தேய்த்து கொண்டே “இப்டியா சார் பிடிப்பிங்க ரொம்ப வலிக்கிது ஏதோ அக்யூஸ்ட பிடிக்கிற மாதிரி பிடிச்சிருக்கிங்க”
“நா வேணா மருந்து போட்டுவிடவா சரியாகிரும்” என்றவனுக்கு முறைப்பை பரிசளிக்க
“சரி சரி அப்டி பாக்காத” என்றவன் “ஆமா காலையில என்ன ஏதோ கெட்ட வார்த்தையில திட்டிட்டு போனியே அப்டின்னா என்ன” என்று கேட்க
“அதுவா..அது.. அது வந்து சொன்ன பிறகு அடிக்க கூடாது!”
“அப்டி என்னவாக இருக்கும்!” என்று எண்ணியவன் “சொல்லு அடிக்க மாட்டேன்” என்று ஊக்க
சொன்ன பிறகு எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தில் சஞ்சளா ஒவ்வொரு அடியாக பின்னெடுத்து வைக்க, தற்செயலாக திரும்பி சாலையை பார்த்தவன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு “சஞ்சும்மா” என்று கத்தினான்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது சம்பவம், கார் ஒன்று மின்னல் வேகத்தில் சீறிக்கொண்டு வருவதை கண்டவன் அவள் கை பற்றி வேகமாக இழுத்து தன்னோடு அணைத்து கொள்ள நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்
அவள் அடிப்படாத வண்ணம் தன் கைவளைவிற்குள் அணைத்து கொண்டவன் கீழே விழுந்ததில் முதுகில் அடிபட்டு வலியில் முகம் சுளித்து பின் சமாளித்து கொண்டு அவள் முகம் காண கண்களை இறுக மூடியபடி அவன் சட்டையை விட்டுவிலகிடாதவாறு பற்றி கொண்டு வேகமான மூச்சுகளை வெளியிட்டு பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள் சஞ்சளா, சாலை என்பதையும் மறந்து சற்று நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் எங்கோ கேட்ட காரின் ஹாரன் சத்ததில்சுயநினைவு பெற்று சுதாரித்து கொண்டு “ஏய் எந்திரி நீ எந்திருச்சா தான் நா எந்திரிக்க முடியும்” என்று கூற
அவன் பேசியது கிணற்றில் இருந்து கேட்பது போல அவள் செவிகளுக்கு எட்டியது “ம்ம்..” என்று முணங்கி கொண்டே கண் திறவாவதை கண்டு “ஏய் சஞ்சு எந்திரி” என்று உலுக்க
அடித்து பிடித்து அவன் மேலே கையை ஊன்றி அவசரமாக எழுந்தவளுக்கு கால்கள் தடுமாற சட்டையில் படிந்த தூசை தட்டி விட்டு கொண்டே எழுந்தவனின் கையை கீழே விழாது இருக்க இறுக பற்றி கொண்டாள், கைகள் நடுங்குவதை மட்டும் சட்டென நிறுத்த முடியவில்லை முயன்று கைநடுகத்தை சரிசெய்தவள் “தங்கஸ்” என்று கூற
“பரவாயில்ல இங்க நடந்தது பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணாம் ரொம்ப பயந்து போயிருவாங்க வா போகலாம் உங்க அம்மா நம்மாளுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க உன்ன காணோம்னு தேடிட்டு வந்த என்னையும் வேற யாராவது தேடி வந்துற போறாங்க” என்று கூறியவனின் மனதில் குழப்பம் சூழ்ந்து கொண்டது “யாராக இருக்கும் வேண்டுமென்றே இடிக்க வந்ததை போல தான் இருந்தது” என்று யோசனை செய்தவாறே சஞ்சளாவை அழைத்து சென்றான்.
தொடரும்…
காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
என் இமைகள் இரண்டை விடுமுறைக்கனுப்பிஇரவினில் துாக்கம் கெடுத்தவனே