கமிஷனர் அலுவலகம் மாலை ஆறு மணிக்கும் பரபரப்பாகவே இருந்தது வெளியே நின்ற காவலரிடம் “சார பாக்கணும்” என்றதும் “இப்போ அவர பாக்க முடியாது முக்கியமான மீட்டிங்ல இருக்காரு சார்” என்றான் காவலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள்

 

மீட்டிங் எப்ப முடியும்!” என்று துவாரகா கேட்க

 

இப்போ தான் ஆரம்பிச்சது முடிய எப்டியும் ஒரு அரைமணி நேரம் ஆகும் வெய்ட் பண்ண முடிஞ்சா வெய்ட் பண்ணுங்க இல்லன்னா ரெண்டு நாள் கழிச்சு வந்து பாருங்க” என்று கூற

 

ரெண்டு நாளா..! ஏன்? நாளைக்கு அவர பாக்க முடியாதா?” என்று அவசரமாக துவராக கேட்க

 

நாளைக்கு சார் பர்சனல் விஷயமா வெளியூர் போறாரு” 

 

அப்டின்னா நாங்க வெய்ட் பண்ணியே பாத்துட்டு போறோம்” என்றவன் விஷ்ணுவை பார்த்தான் அவனோ யோசனை செய்த வண்ணம் தரையை வெறித்து கொண்டிருந்தான் “என்னடா என்ன யோசிக்கிற!” 

 

இல்ல அந்த போன் கால் யாருன்னு யோசிச்சுட்டு இருக்கேன் இந்த கேஸ்ஸ நீ எடுத்து நடத்துறது யாருக்கும் தெரியாதுன்னு சொன்னல அது தப்பு, அவனுக்கு தெரிஞ்சுருக்கு எதையும் நீ கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சுருக்கான் இப்போ நா இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனதும் சுதாரிச்சிட்டான், ஆனா அவனுக்கு எப்டி தெரிஞ்சது அதான் எனக்கு தெரியல நாம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும் அந்த பங்களா வீட்டுக்கு போறது” என்று தீவிர பாவனையுடன் யோசனை செய்து கொண்டே “நம்மள யாரோ ஃபாலோ பண்றாங்களோன்னு தோணுது” என்று சுற்றிலும் பார்வையை சுழல விட்டான் விஷ்ணு

 

போன்ல பேசுனவன் என்ன சொன்னான் அவன் பேசுனத வச்சு ஏதாவது கண்டுபிடிக்க முடிஞ்சதா?” 

 

இல்லடா கன்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணி அந்த கால ட்ரேஸ் பண்ண சொன்னேன் ஆனா அது யூஸ் ஆகல, அந்த நெட்ஒர்கோட டவர் நாலு இடத்துல காட்டுதுன்னு சொன்னதும் அந்த இடத்துக்கு லோக்கல் இன்ஸ்பெக்டர அனுப்பி யாராவது சந்தேகபடுற மாதிரி இருக்காங்களான்னு பாத்துட்டு வர சொன்னேன் யாரும் இல்லன்னு சொல்லிட்டாங்க, ஆனா… என்ன அவனுக்கு தெரியும்ன்ற மாதிரி பேசுனான்” என்று இருவரும் பேசி கொண்டிருக்க

 

சார் மீட்டிங் முடிஞ்சுருச்சு நீங்க போய் சார பாக்கலாம்” என்று கான்ஸ்டபில் கூற

 

என்ன பண்ண போற விஷ்ணு இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம் எதுவும் சொல்லாம இங்க கூட்டிட்டு வந்துட்ட” 

 

அத உள்ள வந்து தெரிஞ்சுக்கோ” என்று விட்டு முன்னே செல்ல 

 

இவன் எந்நேரம் என்ன பண்றான்னே புரிய மாட்டிங்கிது இதுக்கு தான் ரொம்ப மூளை இருக்கிறவங்க கூட சகவாசம் வச்சுக்க கூடாதுன்னு சொல்றது” என்று புலம்பி கொண்டே அவன் பின்னோடு சென்றான் துவாரகேஷ்

 

உள்ளே வந்தவர்களை புன்னகையுடன் வரவேற்றார் கமிஷ்னர் கைலாசம் “வாங்க விஷ்ணு அண்ட் துவாரகேஷ்” என்றவர் இருவரையும் அமர சொல்லி “என்ன திடீர் விஜயம் அதுவும் வேலையில ஜாயின் பண்ண மறு நாளே வெய்ட் பண்ணி பாக்குற அளவுக்கு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேலையில ஜாயின் பண்ணிருக்கலாமே விஷ்ணு” என்று புன் சிரிப்போடு கேட்க

 

சாரி சார் நா ஒன்னும் பிக்னிக் வரல சாவகாசமா வந்து ஜாயின் பண்றதுக்கு என்ன காரணத்துக்காக வந்தேனோ அத சீக்கிரம் முடிக்கணும்னு நினைக்கிறேன்” என்று குரல் மொழியும் உடல் மொழியும் விறைப்பாய் காட்டி கூற

 

கடமை தவறாத ஆளாச்சே நீ சரி என்ன விஷயம்?” என்று கேட்க

 

சார் இந்த பைலை கொஞ்சம் படிச்சுப்பாருங்க” என்று விஷ்ணு நீட்டவும் அதை வாங்கி பார்த்தவர் “ஏற்கனவே இந்த கேஸ் என்னோட பார்வைக்கு வந்துருச்சு விஷ்ணு கருணாகரன் தான் இந்த கேஸ்சுக்கு தேவையான உதவி வேணும்னு கேட்டாரு நானும் சரின்னு சொன்னேன் ஆனா எதிர்பாரத விதமா இறந்து போயிட்டாரு அவர் விசாரணைய முடிக்கிறதுக்கு முன்னாடியே இறந்து போனதுனால இந்த கேஸ்ஸ குளோஸ் பண்ண வேண்டியதா போச்சு அதுமட்டுமில்ல இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்குன்னு பப்ளிக் யாருக்கும் தெரியாது யாரும் கம்ளைண்ட் கொடுக்கல எனக்கென்னமோ முடிஞ்ச கேஸ் முடிஞ்சாதவே இருக்கட்டுமே! எதுக்கு மறுபடியும் தோண்டி எடுத்துக்கிட்டு”என்று அலட்சியாமாய் பேச

 

சாரி சார் உங்கிட்ட இருந்து இப்டி ஒரு பதில் வரும்னு நாங்க நினைச்சுப்பாக்கலா இத லிகளா எடுத்து நடத்த எங்களுக்கு விருப்பம் இல்ல ஏன்னா குற்றவாளி ரொம்பவே உஷார் ஆக வாய்ப்பு இருக்கு பர்ஸ்னலா விசாரிக்க உங்க அனுமதி வேணும் சார்! மிஸ்டர் கருணாகரன் விசாரணைய முடிக்காமலே இறந்து போயிருக்கலாம் ஆனா குற்றவாளிக்கு எதிரான எவிடன்ஸ் பக்கவா ரெடி பண்ணி வச்சுட்டு தான் போயிருக்காறு, நாங்க இந்த கேஸ்ஸ எடுத்து நடத்துறதுக்கு முக்கியமான காரணம் இப்போ ஒருத்தர் அவங்க பொண்ண கண்டுபிடிச்சு தர சொல்லி கம்ளைன் பண்ணிருக்காரு இந்த கேஸ்சுக்கும் அந்த பொண்ணு காணாம போனதுக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு” என்றவன் பேச்சை நிறுத்தி எதிரில் அமர்ந்திருந்தவரின் முக மாற்றத்தை அங்குலம் அங்குலமாய் கவனித்தில் பதியவிட்டு மீண்டும் தொடர்ந்தான்

 

நீங்க கேட்கலாம் எதுக்கு என்கிட்ட வந்து சொல்றிங்க எவிடன்ஸ் இருந்தா ஆக்சன் எடுக்க வேண்டியது தானேன்னு!, இந்த கேஸ்ல பெரிய ஆளுங்க சம்பந்தப்பட்டுருப்பாங்கலோன்னு சந்தேகமா இருக்கு அது யார் என்னனு மட்டும் கண்டுபிடிக்கணும் சார்! நாளை பின்ன ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா யார கேட்டு இப்டி பண்ணிங்கன்னு நீங்க கேட்டுற கூடாதில்லையா அதான், எதுக்கும் சமாளிக்க தயாரா இருந்துக்கோங்க சார்” என்று மறைமுகமா அவருக்கு தன் நடவடிக்கையை தெரிவித்தவன் வந்த வேலை முடிந்து என்ற ரீதியில் எழுந்து சல்யூட் அடிக்க 

 

பதிலுக்கு கலவரம் கலந்த முகபாவனையுடன் தலையசைத்தவர் “யாரா இருந்தாலும் தயவுதாட்சண்யம் பாக்கதிங்க தைரியமா இந்த கேஸ் எடுத்து நடத்துங்க உங்களுக்கு என்னோட சப்போர்ட் எப்பவும் இருக்கும் நேரடியா இல்லைன்னாலும் மறைமுகமா உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய பன்றேன் விஷ்ணு” என்றவர் ஆர்வத்துடன் “அந்த எவிடன்ஸ் எங்க இருக்கு அத என்கிட்ட கொடுங்க அவனுக்கு அதிகபட்ச தண்டனையா தூக்கு தண்டனை கொடுக்கிற மாதிரி பண்ணிறலாம்” என்று கூற 

 

மெல்லிய புன்னகை சிந்தியவன் “இல்ல சார் இன்னும் அவன் யாருன்னு கண்டுபிடிக்கலா கூடிய சீக்கிரம் அவன கண்டுபிடிச்சி உங்க கண் முன்னாடி நிறுத்துறேன் அதுவரைக்கும் அந்த எவிடன்ஸ் என்கிட்டயே இருக்கட்டும்” என்று விட்டு இருவரும் வெளியே வர

 

உள்ளே நடந்தவற்றை அதிர்ச்சியுடன் எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன் “டேய் என்னடா? நீ.. பாட்டுக்க எவிடன்ஸ் இருக்குன்னு சொல்லிட்டு வந்துட்ட ஏ அப்டி சொன்ன அவர்கிட்ட அப்டி சொல்லவேண்டிய அவசியம் என்ன? உண்மைய சொல்லிருக்காலமே விஷ்ணு” என்று புரியாமல் துவாரகா கேட்க

 

எப்டி எங்கப்பன் குதருக்குள்ள இல்லன்னு எல்லாத்தையும் சொல்ல சொல்றியா? உண்மைய சொன்னா என்ன வேணா நடக்கலாம் இந்த கேஸ்சே ஒன்னுமில்லாம போலாம் துவாரகா! நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல அவரு பதட்டமா வெளிய வருவாரு கார்ல ஏறி போவாரு” என்றதும் சிறிது நேரம் கழித்து முகத்தில் ரத்த பசை அற்று வெளிறி போய் வியர்வை வழிய வெளியே வந்தவர் காவலாளியிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏற நான்கு சக்கர வாகனம் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து புழுதியை கிளப்பி கொண்டு சென்றது

 

சொல்லல! இப்போ அவர் எங்க போவாருன்னும் தெரியும்” என்று விஷ்ணு கூறவும் 

 

அப்டின்னா அவர ஃபாலோ பண்ணலாமே அத விட்டுட்டு இப்டி பேசிட்டு இருக்க!”

 

 “அது வேஸ்ட் அவர பின் தொடர்ந்து போய் எந்த விஷயத்தையும் தெரிஞ்சுக்க முடியாது குற்றவாளிக்கு சப்போர்ட் பண்றது யாருன்னு தெரிஞ்சிக்க தான் இங்க வந்தேன், நா நினைச்சது சரியா போச்சு கமிஷ்னரும் இந்த கேஸ்ல சம்பந்த பட்டுருக்காறு கருணாகரன் சார் இருந்த இடத்துக்கு வந்துட்டு போனது வேற யாருமில்ல மிஸ்டர் கைலாசம் தான்” என்று கூற

 

திடுக்கிட்டு போனவன் “அதெப்படி சொல்ற அவரு தான் வந்தாருன்னு” 

 

இது அவரோட பேட்ஜ் தானே” என்று நட்சத்திர முத்திரையை எடுத்து காட்டியவன் “அவரை முழுசா கவனிச்சிருந்தா உனக்கே தெரிஞ்சிருக்கும் அவரோட லெஃப்ட் சைட்ல ஒரு ஸ்டார காணோம் அத தேடி தான் அந்த பங்களாவுக்கு போறாரு மனுஷன், இவர விட்டு பிடிக்கலாம் இதைவிட வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு நம்மள ஃபாலோ பண்ற அந்த பாடி சோடா யாருன்னு தெரியணும் அதனால…!” என்று துவாராகாவை பார்த்தான் விஷ்ணு

 

என்னடா ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்க போல என்னவச்சு எதுவும் பிளான் பண்ணாத அப்றம் உனக்கு தான் லாஸ்” என்று கைகளை விரித்து கூற

 

அது தான் எனக்கு தெரியுமே!” என்றவன் “இது வேற விஷயம் நாளைக்கு காலையில பாத்து தெரிஞ்சுக்கோ இப்போ வீட்டுக்கு போலாமா ரொம்ப டைம் ஆச்சு காலையில இருந்து அலைஞ்சு திரிஞ்சதுல மறந்து போன பசி இப்போ ஞாபகம் வந்துருச்சு என்ன வீட்டுல விட்டுட்டு நீ வீட்டுக்கு போ” என்றதும் “சரிடா” என்றவன் வண்டியை கிளப்ப வாகனம் வேகமெடுத்தது

 

தலையிலும் கையிலும் கட்டுகள் போட்டு வலியில் முகத்தை சுருக்கி அமர்ந்ததிருந்த கணவரையும் காயத்தையும் பார்த்து பார்த்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார் சாவித்ரி ஒருபக்கம் காயத்தின் வலி மறுபக்கம் சாவித்ரியின் அழுகை என்று கோபத்தை அதிகப்படுத்த பொறுத்து பார்த்த ஜெகநாதன் “எனக்கு ஒன்னுமில்ல சின்ன காயம் தான் சவி நீ ஏ இவ்ளோ பதட்டபடுற! அதான் டாக்டரே ஒன்னுமில்ல சின்ன காயம் தான்னு சொல்லி அனுப்பிட்டாறே பின்ன எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ற? போ எனக்கு பசிக்கிது சாப்பாடு எடுத்து வை” என்றவர் “வைத்தி கூட்டிட்டு போம்மா” என்று சங்கடத்துடன் கூற

 

வாங்க சித்தி போலாம் லேசான காயம் தான் சரியாகிரும்” என்று சமாதானம் செய்து கொண்டிருக்க 

 

வீட்டிற்கு வந்த இருவரும் எதையோ பேசி சிரித்து கொண்டே உள்ளே நுழைவதை கண்ட சாவித்ரிக்கு முசுமுசுவென கோபம் தலைக்கேறியது “இங்க என்ன நடந்துருக்கு அது எதுவும் தெரியாம சிரிச்சுட்டு வர்றிங்க!” என்று பொங்கியவர்