Advertisement

எங்கம்மா எங்கயும் போகலை சார் இதோ முகத்தை தழுவிட்டு போகுதே இந்த காத்துல இருக்காங்க அதோ பரந்து விரிஞ்சு கிடக்கே அந்த ஆகாயத்துல இருக்காங்க மின்னி மின்னி மிளிருதே அந்த நட்சத்திரத்துல இருக்காங்க கரண்ட் இல்லாத பல வீடுகளுக்கு வெளிச்சம் கொடுக்குதே அந்த நிலவொளியில இருக்காங்க எங்கயும் போகலை என்கூடவே தான் இருக்காங்க நா அழுகுறேனா இல்லையான்னு பக்கத்துல இருந்து பாத்துட்டே தான் இருக்காங்க அவங்க உடம்புதான் அழிஞ்சதே தவிர ஆன்மா இல்ல என்ன சுத்தி சுத்தி வந்துட்டே தான் இருக்காங்க உள்ளுணர்வு சொல்லுது அம்மா எங்கயும் போகலன்னுஎன்று பிச்சியாய் வேதம் பேசியவளை புதிதாய் பார்த்தான் துவாரகேஷ் 

இது அவள் இல்லை அந்த துடுக்கான பேச்சு ஓயாத சிரிப்பு வம்பளந்து வாயாடும் குணம் அனைத்தும் மறைந்து பக்குவப்பட்ட குழந்தையாய் அவன் கண்களுக்கு புலப்பட்டாள் 

சஞ்சு உனக்கு அழுகையே வரலையா? இல்ல மொத்தத்தையும் மனசுக்குள்ள போட்டு அழுத்தி அடக்கி வச்சுறுக்கியா?”, கேட்க வேண்டாம் என்றெண்ணியவன் மனம் தாளாமல் கேட்டுவிட

தீர்க்கமாய் அவனை பார்த்தவள்அழுகை வருது ஆனா எப்டி அழுகுறதுன்னு தெரியலை கோபமா அழுகவா தூக்கமா அழுகவா இல்ல பயத்துல அழுகவான்னு எனக்கு சரியா தெரியலை சார், அழ சொல்லி கொடுத்துருக்காங்க தான் ஆனா எதுக்கு எப்டி அழுகனும்னு சொல்லி தரலையே துவா சார்,

நிறைய தடவை பயத்துல அழுதுருக்கேன் கோபத்துல அழுதுருக்கேன் பரிதாபத்துல அழுதுருக்கேன் ஆனா இந்த விஷயத்துக்கு ..ன்னு கத்தி அழுகவா இல்ல ஆர்பாட்டமில்லாம அழுகவான்னு தெரியலை கண்ணீர் வருது ஆனா வாய்விட்டு அழ பிடிக்கலை அழுதா மனசுல இருக்குற பாரம் குறையும்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு இது என்னைக்கும் குறையாத பாரம்

ரொம்ப பெரிய பாரத்தை அம்மா என்னோட மனசுல ஏத்தி வச்சிட்டு போயிட்டாங்கஎன்று சலனமின்றி கூறியவளின் விழிகள் விழி நீரை உகுத்தது கால்கள் நிலைகொள்ளாமல் உணர்விழக்க தொய்ந்து தரையில் சரிந்தாள் சஞ்சளா அவள் பேச பேச சொல்லாவென துயரம் அவன் நெஞ்சை ஆட்கொள்ள சரிந்தவளை வேகமாக தூக்கி நிமிர்த்தியவன் அவன் நெஞ்சோடு அணைத்து கொண்டான் அவன் விழிகளும் கலங்கியது

அவள் உடல் குலுங்கியதை உணர்ந்து தலையை ஆறுதலாய் கோதிவிட்டு ஓசையெழுப்பாமல் அழுபவளை அழுகட்டும் என்று சில கணங்கள் அமைதியாய் இருந்தவன்அழுகாதடா நீ அழுதா எனக்கும் அழுக வருது உன்ன என்னால இப்டி பாக்க முடியல சஞ்சும்மா நடந்த எதையும் நம்மால மாத்த முடியாது

உனக்கு எப்டி ஆறுதல் சொல்றதுன்னு கூட எனக்கு தெரியல உன்னோட மனச என்னால புரிஞ்சுக்க முடியிது ஆனா.. இயற்கைய மீறி நாம எதுவும் செய்ய முடியாது எல்லாத்தையும் ஏத்துகிட்டு தான் ஆகணும் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு உனக்கு நா இருக்கேன் அம்மா இல்லையேன்னு நினைக்காத நா இருக்கேன்டா உனக்குஎன்று அழுத்தமாக ஆறுதல் வார்த்தைகளை கூற

பேசும் போது நல்லா தான் பேசுறேன் ஆனா எதார்த்தம் இது தான்னு நினைக்கும் போது இது கனவா இருக்க கூடதான்னு மனசு தவிக்கிது என்னால முடியல எனக்கு அம்மா வேணும்  அவங்கள பாக்கணும்னு தோணுது டக்குன்னு முன்னாடி வந்து ஏய் சஞ்சுன்னு அதட்டி திட்டி கூப்ட மாட்டாங்களான்னு மனசு ஏங்குதுஎன்று தேம்பி அழுதவளுக்கு மனதின் துயரம் குறையுமா என்று தான் தெரியவில்லை

உனக்கு நா இருக்கேன் அம்மா இருக்காங்க வைதேகி விஷ்ணு இன்னும் நிறைய பேர் இருக்காங்கடா இது எதிர்பாராத இழப்பு இப்டி நடக்கும்னு எனக்கு தெரியாது ரெண்டு நாள் முன்னாடி அத்தை எனக்கு போன் பண்ணாங்க எதை நினைச்சு அப்டியெல்லாம் பேசுனாங்கன்னு எனக்கு அப்போ தெரியல?

ஆனா இப்போ புரியிது அவங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உன்ன பத்திரமா பாத்துக்க சொல்லி என்கிட்ட சொன்னாங்க சேக்க வேண்டிய இடத்துல சேத்துட்டு தான் அவங்க நிம்மதியா போயிருக்காங்க நீ சொன்னியே அத்தை பக்கத்துல தான் இருக்கங்கன்னு உன்கூடவே தான் இருப்பாங்க நல்ல வழித்துணையா ஆறுதலா நீ சோர்ந்து போற நேரத்துல தோள் தட்டி கொடுத்து உற்சாகப்படுத்துற ஒரு நண்பனா எப்பவும் அவங்க உயிர்போட தான் இருப்பாங்கஎன்று தேற்றியவன் அவள் விழிநீரை துடைத்து

அவன் கைவளைவிற்குள் அணைத்தபடிவா கீழ போலாம்என்று அழைத்து சென்று அறையில் அமர வைத்தவன் சமையல் அறைசென்று பால் காய்ச்சி இரண்டு தூக்க மாத்திரைகளை கலந்து கொண்டு வந்து கொடுக்க 

இல்ல சார் எனக்கு எதுவும் வேணாம்என்று மறுத்தவளை வற்புறுத்தி குடிக்க வைத்தான் கடினப்பட்டு குடித்து முடித்தவள் காலி டம்ளரை நீட்ட வாங்கி கொண்டவன்சரி நீ படுத்துக்கோ நானும் அம்மாவும் வெளிய தான் படுத்திருப்போம் ஏதாவது வேணும்னா ஒரு சத்தம் மட்டும் கொடு சரியாஎன்று நகர முற்பட்டவனின் கை பற்றி நிறுத்தியவள்

 “உங்க மடியில படுத்துக்கவாஎன்று சோர்வான குரலில் கேட்க

தொண்டையை அடைத்த துக்கத்தை அடக்கிசரிஎன்று தன் மடியில் படுக்க அனுமதி அளித்தவன் அவள் தலையை ஆதுரமாய் கோதிவிட, சற்று நேரத்தில் மாத்திரையின் விரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் சஞ்சளா, மூச்சு காற்று தொய்வில்லாமல் வருவதை கண்டு படுக்கையில் படுக்க வைத்து போர்வையால் போர்த்தி கதவை பாதி திறந்த நிலையில் வைத்து விட்டு விசாலட்சியின் அருகில் வந்து படுத்து கொண்டான் துவராகேஷ்

இரண்டு நாட்கள் ஏனோதானோவென்று இருந்தவளிடம் கேட்கிறாளோ இல்லையோ ஒருவர் பின் ஒருவராக பேச்சு கொடுத்து கொண்டே இருந்ததின் பலனாக சற்று தெளிந்திருந்தாள் சஞ்சளா அவளை கண்டாலே வெறுப்பை பூசி கொள்ளும் பரிமளம் மாமிகூட அவளது நிலைகண்டு ஆறுதலாய் நாலு வார்த்தைகள் பேசி கண்ணீர் வடித்தவர் நீண்ட நேரம் அவளுடன் இருந்துவிட்டே சென்றார்

துக்கத்தை அனுசரிக்கும் விதமாய் ஆதவன் மேக கூட்டங்களால் சூழப்பட்டிருக்க காலை தாமதமாக எழுந்து வந்தவளை பார்த்த விசாலாட்சிநீ போய் குளிச்சிட்டு வாடா ம்மா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்என்று கரிசனமாக கூறிவிட்டு செல்ல

மறுப்பேதும் கூறாமல் மாற்று உடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்தவள் சற்று நேரத்தில் குளியலை முடித்து உடை மாற்றி கொண்டு வெளியே வர துவாரகா விஷ்ணு இருவரும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்

பேருக்கு உணவை கொறித்து விட்டு மீண்டும் அறைக்குள் முடங்க எத்தனித்தவளை  “ஒரு நிமிஷம் சஞ்சும்மாஎன்று தடுத்து நிறுத்தியவன்உன்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி கிளம்பி ரெடியா இருடா நாம கிளம்பனும்என்றதும் 

எங்க போறோம் சார்?”

நம்ம வீட்டுக்கு இங்க நீ தனியா இருக்க வேணாம், முடியாது வரமாட்டேன்னு மட்டும் சொல்லாத அத்தையோட பேச்சை நா மதிக்கிறேன் நீயும் மதிக்கிறதா இருந்தா மறுப்பு சொல்லாம கிளம்புஎன்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு விஷ்ணுவிடம் பேச்சை தொடர்ந்தான்

மறுத்து பேச முடியாமல் கண்டிப்பு காட்டி பேசியவனை அமைதியாக பார்த்துவிட்டு அகன்றவள் அவளது உடைகளை எடுத்து வைத்துவிட்டு அமர மூலையின் ஓரத்தில் அமிர்தாவின் அழுக்கு புடவை கண்ணில் பட்டது  எழுந்து சென்று புடவையை எடுத்து வந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டு

மிருதுவாக தடவி பார்த்து புடவையில் முகம் புதைத்து வாசனை பிடித்தவள் சில நிமிடங்கள் கண்ணீரில் கரைந்தாள் உயிர்ப்போடு இருந்தது அமிர்தாவின் உடலை தழுவி இருந்த புடவையில் வியர்வையின் வாசம் 

அம்மா ம்மா…” என்று முணுமுணுத்தாள் பின் அழகாக மடித்து அவளது துணிகள் அடக்கிய பைக்குள் புதைத்து கொண்டாள் நடந்தவற்றை அமைதியாய் வாசலில் இருந்த வண்ணம் பார்த்து கொண்டிருந்த துவாரகேஷ்  

என்ன சஞ்சும்மா ரெடியாகிட்ட தானே கிளம்பலாமா?” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தவளிடம்உன்னோட ட்ரெஸ் மட்டும் எடுத்துட்டு வா  உன்னோட திங்ஸ் ஏதாவது இருந்தா அதையும் எடுத்துக்கோ இனி இங்க வர மாட்டோம் இனிமே அது தான் உன்னோட வீடுஎன்று அவனது இல்லத்தை குறிப்பிட்டு கூறியவன் சஞ்சளாவின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற

வார்த்தையாடல்கள் அற்ற ஊமையாய் அவன் பின்னே சென்று காரில் ஏறி கொண்டாள் சஞ்சளா, சாவித்ரியின் கண்கள் கலங்கியது துள்ளலுடன் வலம் வருபவள் இன்று கூண்டுக்குள் தானாக அடைபட்டு கொண்டு கிளி போல சுருங்கி போனாளே என்றெண்ணிய சாவித்ரி மட்டுமல்லாது வைதேகியும் அழுதுவிட்டாள் அணைத்து ஆறுதல் படுத்திய விஷ்ணு அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைக்குமாறு கூற  

கண்களை துடைத்து கொண்ட வைதேகிபோய்ட்டு வா சஞ்சு அப்பப்ப நானும் சித்தியும் வீட்டுக்கு வர்றோம் எதை நினைச்சும் கவலைப்படாதஎன்று இதமாக பேச

வெறுமையான புன்னகை புரிந்து அனைவரிடமும் விடைபெற்று கொண்டு கிளம்பினாள், வீடு சென்று சேரும் வரை சஞ்சளாவிடம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை தன் மடியில் தலை வைத்து கண்களை மூடி பழைய நினைவுகளை அசைபோட்டபடியே படுத்திருந்தவளின் தலையை பரிவாக கோதிவிட்டார் விசாலாட்சி  

அரைமணி நேரத்தில் இல்லம் வந்து விட டாக்சிக்கான பணத்தை கொடுத்துவிட்டு உடமைகளை எடுத்து கொண்டு கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தவன் அவனிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறந்து விசாலாட்சியின் அறையில் அவளது உடமைகளை வைத்துவிட்டுநீ அம்மாவோட ரூம்ல தங்கிக்கோ சஞ்சும்மாஎன்று கூறியதும் சரியென தலையாட்டி அமைதியாக அறைக்குள் சென்றுவிட 

சரிம்மா எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நா போய்ட்டு வரேன் அவள பாத்துக்கோங்கஎன்றுவிட்டு வெளியே சென்று விட்டான் துவாரகேஷ்

சமையல் அறை சென்று பால் காய்ச்சி எடுத்து வந்த விசாலாட்சி அவளை எழுப்பி பாலை கொடுத்துவிட்டு செல்ல மறுப்பு கூறாமல் வாங்கி குடித்துவிட்டு மறுபடியும் சுருண்டு படுத்து கொண்டவளின் எண்ணத்தில் ஆயிரம் வாதங்கள் எழுந்தன

ஒருவர் அவனியில் தரிக்கும் போது தோன்றும் மகிழ்ச்சி அவரது அந்தியத்தில் இருப்பதில்லை இரண்டும் இயற்கை தானே பிறப்புண்டென்றால் இறப்பும் இருக்கும் தானே அதை ஏன் மனம் ஏற்க மறுக்கிறது இயற்கைக்கு மாறான நியதிகளை விதித்து வேதனை சிதையில் ஏன் தள்ளுகிறது எதையும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் என்ற நிபந்தனகளை காலம் கட்டாயத்தின் பேரில் ஏன் திணிக்கிறது  

விதியின் சதிராட்டத்தில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது ஆனால் சுவாரஷ்யமான பல நிகழ்வுகளை அனுமதியில்லாமல் வாழ்க்கையில் அரங்கேற்றி விடுகிறது, நடந்ததை ஜீரணித்து கொள்ள காலம் மாற்றம் தேவை தான் அத்தகைய மாற்றத்தை நான் தானே கொண்டு வர வேண்டும் முடங்கி கிடந்தாள் நடந்தது இல்லையென்றாகி விடுமா இல்லை சென்றவர் உயிர்தெழுந்து தான் வந்துவிடுவாறா இல்லையேஎன்று தனக்கு தானே பதிலும் கேள்வியும் கேட்டு படுத்திருந்தவளின் விழியோரத்தில் நீர் வழிந்தது.

தொடரும்….

அதோ அதோ ஓர் பொன்மயில் 

    இதோ இதோ உன் ஜாடையில் 

யார் இந்த குயிலை அழ வைத்தது

மலர்மீது தானா சுமை வைப்பது

பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே

உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா

Advertisement