Advertisement

“ஏய் சஞ்சு எங்கடி இருக்க எவ்ளோ நேரம் கத்திக்கிட்டு இருக்கேன் காது கேக்கல” என்றவாறே உள்ளே வந்தார் சஞ்சளாவின் தாய் அமிர்தா 

அறையில் இருந்து எட்டி பார்த்தவளை கண்டு “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க படிக்க போறேன்னு சொல்லிட்டு தானே வந்த! கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா நாளைக்கு கல்யாணமாகி போற விட்டுல இப்டி எந்த வேலையும் செய்யாம டிமிக்கி கொடுத்தா கொமட்டுலயே நாலு இடி இடிப்பாங்க உன்னோட மாமியார், வா வந்து வேலைய பாரு நா ஒருத்தியே மல்லு கட்ட வேண்டியதா இருக்கு” என்று வசைபாடலை தொடங்க

“எனக்கு வர போற மாமியார் ரொம்ப தங்கமானவங்களா தான் இருப்பாங்க உன்னோட மாமியார் மாதிரி இருக்க மாட்டாங்க” என்று முறுக்கி கொண்டு சென்ற மகளை

“வாய் ரொம்ப நீழுதுடி உனக்கு” என்று அதட்டியவர் “என்னக்கா மாமா வேலைக்கு போய்ட்டாறா!” என்று சாவித்ரியிடம் கேட்க

“ம் போயிட்டாரு அமிர்தா நேத்து உன்கிட்ட சட்டை துணி தைக்க கொடுத்துருந்தேனே தச்சுட்டயா?  தைக்கலன்னா அப்டியே வச்சுறு அந்த சேலை வைத்திக்கு வேணுமாம் அவளோட அளவு சட்டை கொண்டு வறேன்” என்று எடுத்து வந்து கொடுத்தவர் “இது தான் அமிர்தா இதே மாதிரியே தச்சுறு” 

“நல்ல வேளை இன்னும் நா தைக்கல நேத்து இவங்க அப்பாவுக்கு திதி கொடுக்க ஊருக்கு போய்ட்டோம் இன்னைக்கு காலையில தான் வந்தோம், சரிக்கா சயிந்தரம் அவள வர சொல்லுங்க என்ன மாதிரின்னு அவகிட்ட கேட்டுகிறேன்” என்று திரும்பியவர் சட்டென நினைவு வந்தவராக

“அக்கா விஷ்ணு பையன் வந்துருக்கானாமே!,வீட்டுல இருக்கானா இல்ல வெளிய எங்கயும் போயிருக்கானா?”

“இங்க தான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துருக்கான் நைட்டு எப்ப வருவான்னு தெரியாது அமிர்தா அவன் வந்ததும் சொல்றேன்” என்றதும்

“சரிக்கா நா கிளம்புறேன் போட்டது போட்டபடி இருக்கு” என்று அமிர்தா சென்றுவிட போட்டோவை துடைத்து அதை பத்திரப்படுத்தும் வேலையில் இறங்கினார் சாவித்ரி

“டேய் இப்போ எதுக்கு ஸ்டேஷன் வந்துருக்கோம்?” 

“கொஞ்சம் வெய்ட் பண்ணு” என்ற விஷ்ணு ட்ராயரிலிருந்து ஒரு படத்தை எடுத்து துவாவிடம் நீட்ட புரியாமல் வாங்கி பார்த்தவன் முழித்து கொண்டே இருந்தான்

“இன்னும் புரியலையா? இது தான் நமக்கு கிடைச்சுருக்குற முதல் க்ளூ இந்த பைல்லையும் இதே மாதிரி தான் இருக்கு பாரு, நேத்து பைல் எடுக்கும் போது தற்செயலா பாத்தேன் இந்த போட்டோ ரெண்டும் ஒரே மாதிரி பொருந்தி போகுது” என்று தீவிர முக பாவனையுடன் கூற

ஒன்றாய் வைத்து பார்த்தவன் திகைத்து போனான் “டேய் எப்டிடா இவ்ளோ சீக்கிரத்திலு கண்டுபிடிச்ச இத்தனை நாள் இங்க தான் இருந்தேன் ஆனா என்னால கண்டுபிடிக்க முடியல” என்றவன் “ஆனா… இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல மீன் படம் அதுல கே ன்னு இங்கிலீஸ்ல எழுதியிருக்கு அப்டின்னா என்ன?” என்று சந்தேகம் கொண்டு கேட்க

“அது தான் எனக்கும் தெரியல” என்று தோளை குலுக்கியவன் “ஒருவேளை அவங்க யூஸ் பண்ண பிராண்ட் லோகோவா இருக்கலாம் இல்ல குற்றவாளியோட பேரா கூட இருக்கலாம்” என்றவன் எண்ணத்தில் பொறி தட்ட “நேத்து ஒரு பங்களாவுக்கு போனோமே! அங்க போனா.. ஏதாவது முக்கியமான எவிடன்ஸ் கிடைக்கலாம்! ஏன்னா கடைசியா கருணாகரன் சார் அந்த இடத்துல தான் மிஸ் ஆகிருக்காரு சோ அங்க ஏதாவது ஒரு எவிடன்ஸ் கண்டிப்பா இருக்கும் வா போலாம்” என்று விஷ்ணு கூறவும் துரிதமாக இருவரும் அவ்விடத்திற்கு விரைந்தனர்

சென்னையின் ஜன நெரிசல் இல்லாத இடத்தில் அமைந்திருந்தது அந்த பாழடைந்த பங்களா சுற்றி வேலி மரங்கள் நிறைந்து புதற் படர்ந்து பார்ப்பதற்கு சற்று மிரச்சியாக இருந்தது காய்ந்து உதிர்ந்த சருக்களில் காலை பதித்ததும் சலப்பு சத்தம் மட்டும் பிரதானமாய் கேட்க அத்தனை நிசப்தமாய் இருந்தது அந்த இடம்! சுற்று முற்றும் பார்வையை பதித்தபடியே கவனமாக இருவரும் கேட்டை திறக்க விஷ்ணுவின் அலைபேசி சன்னமான ஒலியில் சிணுங்கியது யார் என்று எரிச்சலுற்று போனை எடுத்தவன் அதில் மின்னிய எண்ணை கண்டு யோசனையாய் காதில் வைக்க

“சார் நீங்க விஷ்ணு தானே!” என்று மறுமுனையில் பதட்டம் நிறைந்த குரல் கேட்க 

“ஆமா நீங்க யாரு? இது வைதேகி போனாச்சே உங்க கிட்ட எப்டி வந்துச்சு?” 

“சார் அந்த பொண்ணு யார் என்னனு எனக்கு தெரியாது அந்த பொண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சு இப்போ தான் ஆம்புலன்ஸ்ல வந்து தூக்கிட்டு போனாங்க அந்த பொண்ணோட செல் போன் மட்டும் இங்க கீழ விழுந்து இருந்துச்சு அதுல உங்க நேம் பாத்து உங்களுக்கு கால் பண்ணேன்” என்று படபடப்புடன் கூற

“என்ன சொல்றிங்க?, எந்த ஹாஸ்பிடல்! எப்போ நடந்துச்சு! இப்போ எப்டி இருக்கா! உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையே?” என்று சில கணம் மூளை செயலற்று போய் சுதாரித்து கொண்டவன் பரிதவிப்பில் கேள்விகளை அடுக்க  

மருத்துவமனையின் பெயரை கூறிவிட்டு “பிழைக்கிறது.. ரொம்ப கஷ்டம் தான் சார்! ஹாஸ்பிடல் போனா தான் தெரியும் சீக்கிரம் போங்க சார்” என்று அழைப்பை துண்டித்து விட

“டேய் சீக்கிரம் வண்டி எடு” என்று பதட்டத்துடன் கூறியவனிடம் “டேய் என்னாச்சு! யார் போன்ல? என்ன சொன்னாங்க?” 

“வைத்திக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சாம் பலமான அடியாம் பிழைக்கிறது கஷ்டம்ன்னு சொல்றாங்க” 

 “வாட் என்ன சொல்ற எப்டிடா!” என்று அதிர்ச்சியின் உச்சத்தில் துவாரகேஷ் கேட்க

“பேசுரத்துக்கு நேரமில்ல சீக்கிரம் அந்த ஹாஸ்பிடல் போ” என்று பின்னால் ஏறிக்கொண்டு அவசரப்படுத்த பைக்கை மின்னல் வேகத்தில் ஒட்டி சென்றான், ஓட்டிய வேகத்தில் இருபது நிமிடங்களில் மருத்துவமனை அடைந்து விட்டனர்

இதயம் படப்படக்க முகத்தில் பயமும் தவிப்பும் நிறைந்து வியர்வை வழிய வரவேற்பில் சென்று விசாரித்தவன் அவர்கள் கூறிய பதிலில் குழம்பி போனான் விஷ்ணு, பைக்கை நிறுத்திவிட்டு வந்த துவாரகேஷ் “என்னடா என்னாச்சு ஏ இப்டி நிக்கிற” என்று விஷ்ணுவின் கோலம் கண்டு கேட்க

“சாரி சார் அந்த மாதிரி நேம்ல யாரும் அட்மிட் ஆகல ரெண்டு ஆக்சிடன்ட் கேஸ் அதுல நீங்க சொல்ற நேம்ல யாரும் இல்ல சார், ஒருத்தர் ரொம்ப சீரியஸா இருந்தாருன்னு இப்போ தான் ஜிஹெச்க்கு அனுப்பி வச்சோம் இன்னொருதருக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு” என்று கூறிய பெண்மணியை திகைப்புடன் பார்த்த துவாரகேஷ்

“என்ன விஷ்ணு இது எதுக்கு இந்த மாதிரி சொல்லணும் ஒருவேளை வேற ஹாஸ்பிடலா இருக்குமா?” 

“இல்ல!” என்று குழப்பத்துடன் வெளியே வந்த விஷ்ணு “யாரா இருக்கும் ஏ இப்டி சொன்னாங்க? ஆனா.. வைத்தி நம்பர்ல இருந்து தானே கால் வந்துச்சு” என்று சிந்தனையில் மூழ்கி தனக்கு தானே பேசி கொள்ள

“டேய் அவகிட்ட கேட்டா உண்மை தெரிய போகுது” என்று துவாராக கூறவும்

பள்ளிக்கு கிளம்பி சென்றனர் அங்கு அவள் கூறிய பதிலில் இருவரும் மேலும் குழம்பி போக யார்? என்ன? என்ற விவரம் மட்டும் பிடிபடவில்லை “நா கால் பண்ணவே இல்ல இப்போதான் கிளாஸ் முடிஞ்சு ரூம்க்கு வறேன்” என்று அலட்சியமாய் கூறிய பதிலில் கடுப்புற்ற விஷ்ணு

“போன் எடுத்துட்டு போனயா? அதாவது கையில வச்சிறுந்தியா?” என்று விசாரிக்கும் தோணியில் கேட்க

“இல்ல கிளாஸ் ரூம்ல போன் நாட் ஆலோவ்டு அதனால பேக்லயே வச்சுட்டு போய்ட்டேன் ஏ என்னாச்சு? திடீர்னு வந்து உனக்கு ஒன்னிமில்லையேன்னு கேக்குறிங்க எனக்கு ஏதாவது ஆகணுமா என்ன?” என்று ஏளனமாக கேட்க

“இவவேற நேரம் காலம் தெரியாம லூசு மாதிரி பேசுவா தவிச்சு போய் என்னமோ ஏதோன்னு வந்தா கேள்விய பாரு” என்று மூணுமுணுத்தவன் “உன்னோட போன் எடுத்துட்டு வா” என்று அதிகரமாய் பணிக்க யோசைனையோடு அவனை பார்த்தவள் அலைபேசியை எடுத்து வந்து வேகமாக நீட்டினாள்

அவள் எண்ணிலிருந்து அவன் எண்ணிற்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்று காட்டவும் குழப்பத்துடன் போனை அவளிடம் கொடுத்தவன் “எதுக்கும் ஜாக்கிரதையா இரு சரியா?” என்று எச்சரிக்க சரியென தலையாட்டினாள் வைதேகி

“வாய திறந்து பதில் சொன்னா தான் என்னவாம்” என்று எண்ணியவன் திரும்பி செல்ல எத்தனிக்க

“என்ன வைதேகி மேடம் இங்க நிக்கிறீங்க ஏதாவது பிரச்சனையா?” என்ற குரலில் விஷ்ணு நின்றுவிட 

அருகில் காக்கி உடையில் இருந்தவனை கண்டு “சார் நீங்க விஷ்ணு தானே!” என்று கண்டுகொள்ளும் விதமாய் கேட்க

யார் என்று புரியாமல் பார்த்தவன் “ஆமா என்ன உங்களுக்கு எப்டி தெரியும்?” 

“என்ன சார் உங்கள தெரியாம இருக்குமா மதுரையில இல்லிகளா நடத்துன கிரானைட் குவாரிக்கு எதிரா எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி சீல் வைக்க உதவுனதே நீங்க தானே நியூஸ்ல கூட வந்துச்சே எவ்ளோ பெரிய வேலை பாத்துருக்கிங்க உங்கள மறக்க முடியுமா!” 

“ஓஓ…” என்றவன் “நைஸ் மீட்டிங் சார்” என்று கைகுலுக்க

“என்னோட பேர் விமல் சயின்ஸ் டீச்சர்” என்று அறிமுகம் செய்து கொண்டவன்”சரிங்க மேடம் எனக்கு கிளாஸ் இருக்கு நீங்க பேசுங்க” என்று மற்ற இருவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து நகன்றுவிட

“விணு எனக்கு அடுத்து கிளாஸ் இருக்கு நா போகணும்!” 

“இடத்த காலி பண்ணுங்கன்னு மறைமுகமா சொல்ற நாங்க கிளம்புறோம் வீட்டுக்கு பத்திரமா போய் சேரு” என்று கூறிவிட்டு இருவரும் சென்றுவிட

“ரொம்ப தான் அக்கறை குப்புற பாயுது” என்று நொடித்து கொண்டவள் அடுத்த வகுப்பிற்கான பாடத்தை நடத்த சென்றாள்

“ரொம்ப குழப்பமா இருக்கு டா எதுக்கு அந்த மாதிரி கால் வரணும்” என்று மண்டையை குடைந்து விஷ்ணு யோசனை செய்ய 

“ரொம்ப யோசிக்காத ஏதாவது ராங் கால இருக்கும்” என்றான் துவாராகேஷ்

“அதெப்படிடா என்னோட நேம் கரெக்டா சொன்னானே அதுவுமில்லாம வைத்தி போன்ல இருந்து தான் கால் வந்துச்சு” 

“அந்த நம்பர்லயே வேற நெட்ஒர்க்ல இருந்து கூட கால் வந்துருக்கும்டா வேற யாருக்கோ கால் பண்றதுக்கு பதிலா உனக்கு வந்துருக்கும்” 

“அதெப்படி டா என்னோட நேம் வைத்தி நேம் கரெக்ட்டா சொன்னாரே” என்று மேலும் மேலும் குழப்பத்துடன் கேட்க 

“ப்ச் அத விடு முதல அந்த பங்களாவுக்கு போகலாம்” என்று  துவாரகேஷ் கூறவும் குழப்பம் இருந்தாலும் அப்போதைக்கு அந்த ராங் கால் விஷயத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆதாரத்தை தேடி சென்றனர்

“சார் நீங்க சொன்ன மாதிரி நா பண்ணிட்டேன் தயவு செஞ்சு என்னோட குழந்தைய எதுவும் பண்ணிராதிங்க ப்ளீஸ் அவன விட்டுருங்க” என்று விமல் போனில் யாருடனோ கெஞ்சி கொண்டிருக்க 

“பரவாயில்லையே நாங்க சொன்னபடி நடந்துகிட்ட, அதுவுமில்லாமா அவன தெரிஞ்ச மாதிரி வேற கட்டிகிட்ட இனி உன்மேல அவனுக்கு சந்தேகம் வராது” என்றவன் “உன்னோட குழந்தை பத்திரமா வீடு போய் சேந்துரும்  இன்னொரு விஷயம் இந்த மாதிரி பண்ண சொல்லி சொன்னது நான் தான்னு வெளிய யார்கிட்டயும் சொல்ல கூடாது அப்டி சொன்ன உன்னோட பையன் உயிருக்கு கேரண்டி இல்ல” என்று மறுமுனையில் மிரட்டிவிட்டு போனை துண்டித்தவன்

“நீ தேடி போறதுக்கு பலன் எதுவும் இல்லாம ஏமாற்றதோட திரும்பி வர போற விஷ்ணு நீ தேடுற ஆதாரம் எதுவும் சிக்காது ஒரு தடவை உன்கிட்ட தோத்துட்டேன் இனிமேலும் தோத்து போறதுக்கு நா என்ன முட்டாளா?” என்று தனக்கு தானே பேசி கொண்டு குரூரமாக சிரித்தான் அந்த மறைமுக குற்றவாளி 

பங்களாவின் உள்ளே நுழைந்தவர்கள் ஒவ்வொரு இடமாய் அலசி ஆராய்ந்து ஆதாரத்தை தேட இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது “என்னடா எதுவுமே கிடைக்கல வந்து பிரயோஜனமே இல்லயே” என்று சலித்து கொண்டவன் “நா அப்பவே நினைச்சேன் இங்க எதுவும் இருக்காதுன்னு சரி வா போகலாம்” என்று ஏமாற்றத்துடன் கூற

“இல்ல துவாரகா இங்க எவிடன்ஸ் இருந்துருக்கு ஆனா கொஞ்சம்.. மிஸ் பண்ணிட்டோம்! அந்த ராங் கால் ஏன் பண்ணாங்கன்னு இப்போ தெரிஞ்சு போச்சு, நாம இந்த கேஸ் எடுத்து நடத்துறது அவனுக்கு தெரிஞ்சுருக்கு சோ நம்மள டைவட் பண்ணிட்டு இங்க எவிடன்ஸ் எதுவும் இல்லமா பண்ணிட்டான்” என்று பல விசாரணைகளில் விசாரித்து பல அனுபவங்களை பெற்ற எண்ணத்தில் இதுவாக தான் இருக்கும் விஷ்ணு கூற

“ஆஆஆ..” வென்று எங்கிருந்தோ வந்த அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட இருவரும் சத்தம் வந்த திசையில் விரைந்தனர்

தொடரும்…

உன்னை காணும் வரையில், எந்தன் வாழ்க்கை வெள்ளை காகிதம்..

கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்…

Advertisement