Advertisement

விஷ்ணுவும் துவாரகாவும் கான்ஸ்டபிள் அருள்ஜோதியை அழைத்து கொண்டு சாந்த மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது இல்லம் வந்தவர்கள், வீட்டின் முன் ஜீப்பை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கி அகலமான கேட்டை தாண்டி அரை கிலோமீட்டர் உள்ளே நடந்து செல்ல, அவர்கள் எதிர்பார்த்து வந்த நிலைமைக்கு மாறாக அந்த இல்லத்திற்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர், விஷ்ணு துவாரகா இருவரும் என்னவாக இருக்கும் என்ற பாவனையில் அருள்ஜோதியை பார்க்க

அவர்களின் பார்வையை புரிந்து கொண்டவன் போலஎன்னன்னு தெரியலயே சார் நீங்க இங்கயே வெய்ட் பண்ணுங்க நா என்னன்னு உள்ள போய் பாத்துட்டு வரேன்என்று உள்ளே விரைய

என்னவாக இருக்கும் என்று ஒருவர் முகத்தை ஒருவர் தீவிரமாக பார்த்தவாறு நின்று கொண்டிருந்தவர்கள் வருவோர் போவோரின் முகத்தை பார்த்தவர்களுக்கு அவர்களின் முகத்தில் தெரிந்த சோகம் நிலைமை விபரீதம் என்று உணத்தியது, உள்ளே சென்ற அருள் சற்று நேரத்தில் தலையை தொங்க போட்டபடி வெளியே வர அவன் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றத்தின் ரேகைகளை கண்ட விஷ்ணுஎன்ன ஜோதி உள்ள போய் சார பாக்கலாம் தானே?” என்று கேட்க

தயக்கத்துடன் வார்தைகளை தொடங்கினான்சார்அது வந்துசாந்தமூர்த்தி சார்  இறந்துட்டாருஎன்றதும்

வாட்! என்ன ஜோதி சொல்றிங்க! எப்படி நடந்துச்சு? நேத்து தானே அவர்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குனிங்க அப்டி இருக்குறப்போ இது எப்படி?”,அதிர்ச்சியும் கோபமும் கலந்து வார்த்தைகள் ஒலித்தது அவனிடத்தில்

என்ன சார் நீங்க! இதெல்லாம் முன்னாடியே சொல்லிட்டா  வரும்? அவருக்கு அட்டாக் வந்தது நைட் பத்து மணிக்கு நா அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குனது ஈவ்னிங் நாலு மணிக்கு தான் சார் வாங்குனேன் அதுவும் அவரே எனக்கு கால் பண்ணி உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொன்னாரு ஆனாதிடீர்னு அவருக்கு இப்டி ஆகும்னு நா நினைச்சு பாக்கல சார், அது மட்டுமில்ல அவரோட பையன் இறந்து ரெண்டு நாள் தான்  ஆகுதுஎன்றதும் மற்ற இருவருக்கும் குழப்பம் மேலோங்கியது 

என்ன ஜோதி சொல்றிங்க?” 

ஆமா சார் ஒரே பையன் அவரு இறந்த துக்கம் தாங்க முடியாம தான் இவருக்கு இப்டி ஆகிருச்சுன்னு உள்ள எல்லாரும் பேசிக்கிறாங்கஎன்று சொல்ல

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையுடன் விஷ்ணு துவாரகேஷை பார்த்தான்சரி வாடா இப்போ இங்க நின்னு எதுவும் பேச வேணாம் இன்னொரு நாள் வந்து பாத்துக்கலாம் பெரிய மனுஷங்க எல்லாரும் வர்றதும் போறதுமா இருக்காங்கஎன்று துவாரகேஷ் கூறவும்

சரியென்று மனமின்றி ஜீப்பில் ஏற சென்றவனைசார் சார்என்ற அவசர குரல் தடுத்து நிறுத்தியது, யார் என்று மூவரும் திரும்பி பார்க்க வயதான மனிதர் மூச்சிரைக்க வேகமாக நடந்து அவர்கள் அருகில் வந்துஅய்யா உங்கள உள்ள வர சொன்னாங்க சீக்கிரம் வாங்கஎன்று கூறிவிட்டு செல்ல

யாராகா இருக்கும் என்ற யோசனையுடன் வயதான மனிதரை மூவரும் பின்தொடர்ந்து உள்ளே சென்றனர், வந்தவர்களை மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றவர்இங்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க அய்யா இப்போ வந்துருவாருஎன்று கூறிவிட்டு செல்ல

என்ன விஷ்ணு யாரா இருக்கும்என்ற துவாரகேஷின் கேள்வியில் கடுப்பானவன்

எனக்கு என்னடா தெரியும் நானும் உன் கூட தானே இருக்கேன் அதான் வெய்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போயிருக்காருல வெய்ட் பண்ணுவோம்என்று விட்டு அறையை ஆராய தொடங்கினான், புத்தகங்கள் குவிந்திருப்பதை கண்டுஸ்டடி ரூம் போலஎன்று எண்ணி கொண்டவனின் புருவம் தனாக உயர்ந்தது மேலைநாட்டு ஆங்கில புத்தகங்களில் இருந்து புராண கால புத்தகங்கள் வரை அடுக்குகளில் இடம் பெற்றிருந்தன அதுமட்டுமல்லாது வழக்குகள் சம்பந்தப்பட்ட ஒரு சில புத்தகங்களும் ஒரு புறம் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது 

சில நொடி காத்திருப்பின் பின் கதவின் கைப்பிடி திருகும் சத்தம் கேட்டு மூவரும் ஆவலோடு அறைவாசலை நோக்க வெளியே பேசியவனின் அதிகார குரல் மட்டும் கேட்டது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது அவர்களின் ஆவலை அடக்கும் விதமாக கதவை திறந்து உள்ளே வந்த இளைஞனை கண்டதும் மூவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் அய்யா என்றதும் வயதான மனிதர் சாந்த மூர்த்தியின் வயதை ஒத்தவராக இருக்கும் என்றெண்ணியவர்களின் எண்ணம் பொய்த்து போனது 

அவர்களின் முக பாவனையை கண்டு கொண்டானோ என்னவோ அதரத்தில் சிறு புன்னகையை பரவவிட்டபடியே தனித்து இருந்த சோபாவில் அமர்ந்தவன்அய்யான்னு சொன்னதும் ரொம்ப வயசானவருன்னு நினைச்சிட்டிங்களோ ரொம்ப ஆச்சர்யமா பாக்குறிங்க?’ என்று புருவம் உயர்த்தி புன்னகை உதிர்த்தவன்சாரி ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேன்னு நினைக்கிறேன்“, தாமதத்திற்கு மன்னிப்பையும் வேண்டினான்

இல்ல சார் ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ் தான் ஆகிருக்குஎன்ற துவராகவிற்கு 

பைவ் மினிட்ஸ் சார்.. டைம்மோட வேல்யூ தெரியாம ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்ன்னு அசால்டா சொல்றிங்க அந்த அஞ்சு நிமிஷத்துல எவ்ளோ வேலை பாத்துருக்கலாம் தெரியுமா? என்று விழிகள் விரிய சற்று கோபமாக பேச

மூக்கு உடைந்தவன் போல துவாரகேஷ் விஷ்ணுவை பார்த்தான்தேவையா மூடிட்டு இருக்க வேண்டியது தானே?”என்ற விஷ்ணுவின் மனகுரல் அவன் செவிகளுக்கு எட்டியதோ என்னவோ சோகமாக முகத்தை திருப்பி கொள்ள

சரி என்ன சாப்பிடுறீங்க?” என்றவனின் குரலில் நடப்புணர்ந்தவர்கள்

இல்ல எதுவும் வேணாம் என்ன விஷயம்னு சொன்னிங்கன்னா நாங்க கிளம்புவோம் முக்கியமான வேலை இருக்குஎன்று விஷ்ணு அவசரமாக கூற

மூவரின் முகத்தையும் ஆராய்ந்தவன்நா அங்கிளோட தம்பி பையன் கிரிம்னல் லாயர் ருத்ரன் கேள்விப்பட்டுருப்பிங்க தானே அது நான் தான்என்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ள

நீ தானா அது..” என்றெண்ணிய துவாரகேஷின் இதழில் இகழ்ச்சியான புன்னகை இழையோடியது 

ஓகே நேரடியா விஷயத்துக்கே வரேன்என்று எழுந்து கொண்டவன்உங்கள பாக்கணும்னு சொன்னதுக்கு முக்கியமான காரணம் இருக்கு மிஸ்டர் விஷ்ணு, நீங்க எதுக்காக வந்திங்களோ அந்த வேலைய முடிக்காம போனா எப்படி?” என்று புருவம் உயர்த்தி நிறுத்தியவன் அருகில் இருந்த மரடிராயரில் இருந்து கருப்பு நிற பென்டிரைவையும் இரண்டு சிவப்பு நிற கோப்புகளையும் எடுத்து விஷ்ணுவிடம் நீட்டி

 “இதை அங்கிள் கடைசியா என்கிட்ட கொடுத்தது எல்லாத்தையும் உங்ககிட்ட ஒப்படைக்க சொன்னாரு, இதுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது பட் உங்க இன்வெஸ்டிகேசனுக்கு முடிவு கிடைக்கும்னு என்கிட்ட சொன்னாருஎன்றதும்

யோசனையுடன் கோப்புகளை வாங்கியவன் மற்ற இருவரிடமும் பார்வையை செலுத்திவிட்டு ருத்ரனையும் கோப்பையும் மாறி மாறி பார்த்தபடி கோப்புகளை பிரித்து பார்க்க ஏதேதோ சில குறியீடுகள் சூத்திரங்கள் ஆங்காங்கே சிவப்பு நிற மையினால் வட்டம் இட்டு குறிப்பெடுக்கபட்டிருந்தது,  

விஷ்ணுவின் முகத்தில் தெரிந்த குழப்பம் உணர்ந்துஎன்ன விஷ்ணு அப்டி பாக்குறிங்க நீங்க பாக்குறத பாத்தா அதுல இருக்குற எதுவும் உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன், ஒன்னும் பிரச்சனையில்ல நீங்க  வீட்டுக்கு போய் ரிலாக்ஸா படிச்சு பாருங்க புரியும்என்றவன்

இந்த ரெண்டு பைலும் ரொம்ப முக்கியமானதுன்னு அங்கிள் சொன்னாரு நீங்க அவரை மன்னிக்கணும்னு கேட்டுகிட்டாரு எதுக்குன்னு எனக்கு தெரியல நா எதுவும் கேட்டுக்கல நேத்து நைட்டு ஒரு மாதிரி மனவருத்ததோட தான் என்கிட்ட பேசுனாரு காலையில பேசிக்கலாம்னு இருந்தேன் ப்ச் ஆனா இப்டி ஆகிருச்சுஎன்று வருத்தத்துடன் கூறியவனின் விழிகள் கலங்கியது கண்களை துடைத்து கொண்டு

சரிங்க விஷ்ணு எனக்கும் நிறைய வேலை இருக்கு நீங்க எதுக்கு வந்திங்களோ அது உங்களுக்கு கிடைச்சுருச்சுன்னு நினைக்கிறேன் இப்போ நீங்க கிளம்பலாம்என்றதும் அவனை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்த மூவரும் எழுந்து கொண்டனர்

நன்றி ருத்ரன்என்று விஷ்ணு கைகுலுக்க அவனை தொடர்ந்துரொம்ப நன்றி சார்என்றான் துவாரகேஷ் உதட்டில் போலியான புன்னகையை வரவழைத்து கொண்டு 

அவன் சிரிப்பை அறிந்தவன் போலநா பேசுனது உங்கள ஹேர்ட் பண்ணிருந்தா சாரி பஞ்சுவாலிட்டி எனக்கு ரொம்ப முக்கியம் ஆனா நானே அதை மெயின்டைன் பண்ணலை அதனால தான் அப்டி பேசிட்டேன் சாரிஎன்று மனம் வருந்தி மன்னிப்பு வேண்ட 

பரவாயில்ல சார் நா அதை மறந்துட்டேன்என்ற துவராகேஷ் கைகுலுக்க நட்பு பாராட்டிய விதமாய் சிறு முறுவளை பதிலளித்து மூவரும் விடை பெற்று கிளம்பினர்

அமர்ந்த இடத்தைவிட்டு அசையாது அடங்கி கொண்டாள் சஞ்சளா, நடப்பது அனைத்தும் கனவு என்று அவள் எண்ணம் உரைக்க பசையிட்டு ஒட்டியது போல மூலையில் தொய்ந்தவள் மனதை இறுக்கி உடலை குறுக்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள் 

அமிர்தா இறந்த விஷயத்தை தனது குடும்பத்திற்கும் விசாலட்சிக்கும் கூறிவிட்டு அருகில் இருந்தோரை வைத்து அனைத்தையும் செய்து முடித்திருந்தாள் வைதேகி

நடு கூடத்தில் வெள்ளை ஆடை போர்த்தி மாலை போடப்பட்டிருந்தவரின் உடலை சஞ்சளா வெறித்து கொண்டிருக்க வேகமாக உள்ளே வந்த விசாலாட்சி அமிர்தாவின் உடலை கண்டு ஓவென்று அழ தொடங்கினார்இன்னைக்கு காலையில தானே சொன்னேன் அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு வான்னு கொஞ்சமும் நினைச்சு பாக்கலையே இப்டி ஆகும்னு மகள சேக்க வேண்டிய இடத்துல சேத்துட்டோம்னு நிம்மதியா போய் சேந்துட்டியா?” என்று அமிர்தாவின் முகத்தை பார்த்து அழுதவர் சஞ்சளாவை  தேட ஓரமாய் மூலையில் ஜீவனற்று அமர்ந்திருந்தாள் 

எழுந்து அருகில் சென்ற விசலாட்சிடேய் அம்மா இங்க பாருடா அத்தைய பாருடா டேய் அம்மாஎன்று அவள் முகவாயை பற்றி தன் புறம் திருப்ப முயன்று தோற்று போனார் விசாலாட்சி பார்வை திரும்பவில்லை பதிலும் இல்லை அவளிடத்தில் அவரின் நிலை கண்டு அருகில் சென்ற வைதேகி 

விடுங்கம்மா நானும் எத்தனையோ தடவை அவகிட்ட பேச்சு கொடுத்து பாத்துட்டேன் எந்த பதிலும் இல்ல சிலை மாதிரி இருக்கா அவளுக்கு இது பெரிய இழப்பு கொஞ்ச நேரம் அவள தனியா விடுங்க அண்ணா வந்ததும் பேசிக்கலாம்என்று அழுது கொண்டே ஆறுதல் கூற

எப்டிம்மா தாங்குவா வீட்டுக்கு போகணும் அம்மாவ பாக்கணும்னு அவ்ளோ ஆசையா சொன்னாளே இனி அவ வரமாட்டான்னு எப்டி இவளுக்கு புரிய வைக்க போறேன் கங்காரு மாதிரி பொத்தி பொத்தி வளத்துருக்காளே பதகத்திஎன்று துயரம் தாங்காமல் அரற்றியவரை பார்க்க பார்க்க வைதேகிக்கு அழுகையை அடக்க முடியவில்லை 

இரண்டு நாட்கள் அல்ல இரண்டு நிமிடங்கள் கூட இருக்க முடியாது என்றாளே எத்தனை ஆவலோடு கிளம்பினாள்என்று எண்ணும் போதே வலி உயிரை வதைத்தது வைதேகிக்கு

விசாலாட்சியை தனித்து அழைத்து சென்று அமரவைத்தவள் அவரின் உடல் நிலை அறிந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க வாங்கி குடித்தவர்அவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டியாம்மாஎன்று கேட்க

இல்ல ம்மா ரெண்டுபேரோட போனும் சுவிட்ச் ஆப்ன்னு வருது அவங்கள கான்டாக்ட் பண்ணவே முடியல அப்பா அம்மாக்கு, விஜி அண்ணாக்கு தகவல் சொல்லிட்டேன் அவங்க வந்துகிட்டே இருக்காங்க நீங்க இங்கயே இருங்க ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க வறேன்என்றவள்நா அவங்களுக்கு மறுபடியும் போன் பண்ணி பாக்குறேன்என்று கூறிவிட்டு செல்ல வேதனையுடன் சஞ்சளாவை பார்த்தார் விசாலாட்சி

Advertisement