Advertisement

ரத்தினத்திற்கும் விசாலட்சியின் கணவர் கோபாலுக்கும் நில தகராறு முற்றி கை கலப்பாக மாறியதில் விஷயம் போலீஸ் கோர்ட் வரை சென்றுவிட வழக்கு தனக்கு சாதகமாக வரும் என்ற ரத்தினத்தின் சிறு நம்பிக்கையை முற்றிலும் பொய்யாகி நீதிமன்றத்தில் நிலம் விசாலாட்சிக்கும் அவர் கணவருக்கும் தான் உரிமைப்பட்டது என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து கோபாலுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து போனது

அடமானத்தில் இருந்த பத்திரத்தை ஒன்றுக்கு இரண்டாக பணம் கொடுத்து வாங்கியவர்  நிலம் பாத்தியப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தன் மனைவிக்கு மட்டும் தான் சொந்தம் என்ற போலியாக பத்திரம் தயாரித்து குறுக்கு வழியில் வழக்கை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டார் துவாரகேசின் தந்தை கோபால் 

மொத்த விவசாய நிலத்தையும் விற்று வந்த பணத்தில் குடும்பத்துடன் சென்னை வந்து சேர்ந்தவர் முதலில் சிறு தொழிலை தொடங்கி பின் நாளடைவில் தொழிலை பெருக்கியவர் கூடா நட்புகளின் சகவாசத்தினால் குடி பழக்கத்திற்கு அடிமையாக உடல் பலவீனம் அடைந்து இறந்தும் போனார் தொடங்கிய தொழிலை வந்த விலைக்கு விற்று மகனை படிக்க வைத்த விசாலாட்சி, கடைசியாக அண்ணன் ரத்தினத்தை நீதிமன்ற வாளாகத்தில் வைத்து பார்த்தது தான் அதன் பின் அண்ணன் குடும்பம் சென்ற திசை அறியாமல் வாழ்வை கழித்தவர் தற்செயலாக அமிர்தாவை பார்த்த போது தான் ரத்தினவேல் இறந்த செய்தி அறிந்தார் அப்போது சஞ்சளாவிற்கு அகவை ஐந்து இருக்கும் இடம் அறிந்தும் நெருக்கி உறவாட முற்படவில்லை விசாலட்சி, காலம் கனியும் என்று காத்திருந்தவருக்கு செல்வ புதல்வனின் மூலம் கனிந்தது தந்தை செய்த விரிசலை மகன் ஈடு செய்தான் 

போன் பேசிவிட்டு வந்தவன்என்னம்மா அழுத மாதிரி தெரியிது பழைய தூசி எதுவும் கண்ணுல பட்டுருச்சாஎன்று ஏதும் அறியாதவன் போல அருகில் இருந்தவளை பார்த்து முறுவலித்தவாறு கேட்க

நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்சிமிட்டி சிரித்ததில் கீரியை போல தலை குனிந்து கொண்டு உணவில் கவனத்தை செலுத்தினாள்

ஆமாண்டா தூசி தான் விழுந்துருச்சு ரொம்ப நாள் தட்டமா இருந்தது இப்போ துடைச்சு எடுத்தேனா அதான் கண் கலங்குன மாதிரி தெரியிதுஎன்று மகனின் பேச்சை புரிந்து கொண்டு அதற்கு தக்க விளக்கம் அளித்தவர்யார்டா போன்ல?” 

விஷ்ணு ம்மா சீக்கிரம் கிளம்பி வர சொன்னான் சென்னைக்கு வந்துட்டானாம் முக்கியமான வேலை சீக்கிரம் போகணும்என்று அவசரகதியில் உணவை விழுங்கி விட்டு எழுந்து கொள்ள

அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து உணவை அரைகுறையாக உண்டு முடித்துவிட்டு எழுந்தவள் விசாலட்சியிடம் விடைபெற்று கொண்டு கிளம்பினாள்

குளித்து முடித்து காக்கி உடையை அணிந்து கொண்டு அறையில் இருந்து வெளிப்பட்ட விஷ்ணு சமையல் அறையில் தோசை கல்லுடன் போராடி கொண்டிருந்தவளை பின்னோடு அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தவன்

என்ன தேவிம்மா பண்னிட்டு இருக்க செல்ல குட்டி தோசை சுட சொன்னா இப்டி போஸ்டர் ஒட்டுற பசை மாதிரி செஞ்சு வச்சிருக்கஎன்று கிண்டல் பேச

பேச மாட்டீங்க உங்களுக்காக பக்கத்து வீட்டு மாமிக்கிட்ட மாவு வாங்கிட்டு வந்து பசி தாங்க மாட்டீங்கன்னு தோசை ஊத்துன்னேன்ல என்ன சொல்லணும்என்று இரும்பு கல்லின் மேல் இருந்த கோபத்தை அவனிடம் திருப்பியவள் முகத்தை திருப்பி கொள்ள

பாருடா தேவிக்கு கோவத்தை தோசை வரலன்னா இட்லி ஊத்த வேண்டியது தானே?”

இட்லி உங்களுக்கு பிடிக்காதுல அதான் தோசைக்கு ஊத்துனேன் சரியா வருவேணாங்குது உங்கள மாதிரியேஎன்று அவன் புறம் திரும்பி இயல்பாய் கூற

விஷ்ணு முறைப்பை காட்டினான்சரி சரி அப்படி பாக்காதிங்க விணு என்னைக்கும் இந்த மாதிரி மக்கர் பண்ணதே இல்ல அதான் அப்டி சொன்னேன்என்று முகம் சுருங்க சொல்லவும்

கல்லு சரியா வரலைன்னா வெங்காயத்தை கட் பண்ணி தேச்சா முடிஞ்சதுஎன்றவன் அனுபவசாலியை போலவிலகு நா தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்என்று அவளிடம் இருந்த கரண்டியை தன் கைக்கு மாற்றி சமையல் களத்தில் இறங்கினான்

வேணா மாமா ட்ரெஸ்ல மாவு பட்டுரும் நீங்க போங்க நா பாத்துகிறேன்என்றவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்இப்போ இங்க இருந்து போறியா இல்ல பனிஸ்மெண்ட் கொடுக்க வா?” என்று புருவம் உயர்த்தி குறும்புடன் அவன் கேட்ட விதத்தில் அவள் உடல் சிலிர்த்து ரோமங்கள் அனைத்தும் கெக்கலிட்டு சிரித்தன

ன்னா இதையே சொல்லி என்ன அடக்கிருங்கஎன்று சுணங்கியவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு செல்ல

சன்னமாய் புன்னகை சிந்தியவன் காக்கி சட்டைய கழட்டி வைத்துவிட்டு கல்லில் வெங்காயம் தேய்த்து குழி கரண்டியை வைத்து மாவை ஊற்றி சன்னமாய் தேய்த்து விட்டவன் தோசை மாவை சுற்றி எண்ணெய் விட்டு சில நிமிடங்கள் கழித்து மறுபக்கம் திருப்பி போட துவாரகாவும் சஞ்சளாவும் உள்ளே நுழைந்தனர் 

வாங்க துவாண்ணா உக்காருங்கஎன்று புன்னகை முகமாய் அழைத்தவள்அவரு உள்ள தான் இருக்காருஎன்றுவிட்டுமாமா துவா அண்ணா வந்துருக்காங்கஎன்று குரல் கொடுத்தாள் வைதேகி

தோளில் இருந்த துண்டை வைத்து சொட்டு சொட்டாக முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்து கொண்டே வந்தவன்வாடா தோசை சாப்டுஎன்று கூற

சமையல் அறையில் இருந்து கையில் தட்டுடன் வருபவனை கண்டு கண்கள் விரிய உலகின் எட்டாவது அதிசமாய் விஷ்ணுவை பார்த்த துவாரகேஷ்மச்சா என்னடா இப்டி இறங்கிட்ட?” 

குடும்பஸ்தன் ஆனா இதெல்லாம் ஜகஜமப்பா விடு விடு கண்டுகாதஎன்றவன்ரெண்டுபேரும் உக்காருங்க உங்களுக்கும் தோசை ஊத்தி கொண்டு வரேன்என்று கூற

இல்லடா நாங்க வீட்டுலேயே சாப்டாச்சு தண்ணி மட்டும் கொடு போதும்என்றதும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவன்ஒரு அஞ்சு நிமிஷம்என்று கூறிவிட்டு

இரண்டு தோசையை தட்டில் வைத்து கொண்டு வந்து விஷ்ணு அமர

என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற நாங்க கிளம்பும் போது கூட எதுவும் சொல்லலயேஎன்று கேட்டான் துவாரகேஷ்

இல்லடா திடீர்னு கிளம்ப வேண்டியதா போச்சு ஜோதி கால் பண்ணி சிக்கிரம் வர சொன்னான் அத பத்தி போற வழியில சொல்றேன்என்று வேலையை பற்றிய விஷயத்தை ஒதுக்கிவிட்டுநா கிளம்புறேன்னு சொன்னதும் நானும் வருவேன்னு சொல்லி இவ அழ ஆரம்பிச்சிட்டா அம்மாவும் கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க, நேத்து நைட்டு பத்து மணிக்கு கிளம்புனோம்  அவசரத்துல ட்ரெயின் கிடைக்கல அதான் பஸ் பிடிச்சு சென்னை வந்து சேந்தோம், வந்ததும் உனக்கு கால் தான் கால் பண்ணேன்என்று  கைகழுவி எழுந்து கொண்டவன் வைதேகியிடம் கூறிவிட்டு துவாரகாவை அழைத்து கொண்டு விடைபெற்று கிளம்பினான்

சற்று நேரம் வைதேகியுடன் பேசிவிட்டு வீட்டிற்கு சென்ற சஞ்சளா சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தவளின் முகத்தில் கலவரம் பதற்றம் தவிப்பு பயம் குழம்பம் என ஐந்தும் கலந்த கலவைகள் சூழ்ந்து கொள்ளவைத்திக்கா!” என்று அழைத்து கொண்டே வேகமாக நுழைத்தவளை கண்டு 

என்ன சஞ்சு என்னாச்சு“? என்று பதறி கொண்டு கேட்க

அக்கா! அக்கா! அம்மா..! அம்மா..! என்று எச்சிலை கூட்டி விழுங்கி விட்டுஅம்மா இன்னும் எந்திரிக்கவே இல்லக்கா கதவ தட்டி பாத்தேன் எந்த பதிலும் இல்ல ஜன்னல் வழியா கூப்பிட்டு பாத்துட்டேன் எந்த ரியாக்ஷனும் இல்ல ரொம்ப பயமா இருக்குக்கா சீக்கிரம் வாங்களேஎன்று அழுகையுடன் கூற

அவசரமாக அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றவள் கதவை தட்டி பார்த்தாள் ஜன்னல் வழியாக அழைத்தும் பார்த்தாள் ஆனால் அமிர்தத்திடம் எந்த வித அசைவும் பதிலும் இல்லை

துவாரகா விஷ்ணு இருவருக்கும் வைதேகி அழைப்பு விடுக்க இருவரின் அலைபேசியும் ஒன்று போல சுவிட்ச் ஆப் என்று வந்தது என்ன செய்வதென்று யோசித்தவள் விரைந்து சென்று அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்

எந்த அசைவும் இன்றி படுத்திருந்த அமிர்தாவின் அருகில் சென்ற வைதேகி “ஆன்ட்டி ஆன்ட்டி எந்திரிங்கஎன்று கன்னத்தில் தட்டி எழுப்ப பதில் எதுவும் இல்லை கட்டிலில் சாந்தமாக உடல் வெளுத்து ரத்தபசை ஏதுமின்றி எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் படுத்திருந்தவரின் கைகளை தொட்டு பார்க்க உடல் சில்லிட்டு போய் இருந்தது சிறு பிள்ளை போல உறங்கி கொண்டுருந்த அமிர்தா மீண்டு வர முடியாத மீண்டும் வர முடியாதா இறுதி யாத்திரைக்கு சென்றிருந்தார் 

அவசரமாக மருத்துவருக்கு அழைப்பு விடுத்துவிட்டு கைகால்களை பரபரவென சூடு பறக்க தேய்த்து விட்டாள் வைதேகி நடக்கும் அனைத்தையும் யாரோ ஒருத்தியை போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சஞ்சளா அறையின் மூலையில் துவண்டு போய் அமர்ந்தாள்எதிர்பார்க்கவில்லை ஏமாற்றத்தை அள்ளி தெளித்துவிட்டு ஏதுமறியா என்னை கைபிடித்து நடக்க கற்று கொடுத்து, தனித்து நடைபயிலும் வேளையில் என்னை தவிக்க விட்டு சென்றுவிட்டாயே..” என்று அவள் தாயின் பூத உடலுடன் மானசீகமாக பேசி கொண்டிருந்தாள் 

சிறிது நேரத்திலேயே மருத்துவரும் வந்துவிட அமிர்தாவின் பூத உடலை பரிசோதித்தவர் முகம் ஏமாற்றத்தை பிரதிபலித்ததுஅவங்க இறந்து கிட்ட தட்ட நாலு மணி நேரம் ஆகுதுஎன்று கூறிவிட்டு சென்று விட

திக்பிரம்மை பிடித்தவள் போல அமிர்தாவின் உயிரற்ற உடலில் விழிகளை நிலைகுத்திய வண்ணம் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அழுகை வரவில்லை ஆனால் அவளையும் அறியாமல் கண்ணீர் மட்டும் கன்னங்களில் வழிந்தோடியது துக்கம் தொண்டையை அடைக்கும் போது வார்த்தைகளும் வாதங்களும் எழுவதில்லையே 

தொடரும்….

சூரியன் உடைஞ்ச பகல் இல்ல அம்மா

ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா

என்ன சுத்தி என்னனமோ நடக்கு தம்மா

கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா

தூக்கத்தில்ல உன்னை நானும் தொலைச்சேன் அம்மா

தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

Advertisement