Advertisement

முட்டாள் மாதிரி பேசாத டைம் என்னனு பாத்தல்ல உன்ன தனியா என்னால அனுப்ப முடியாதுஎன்று கோபமாக மொழிந்தவன் அமிர்தத்திற்கு அழைப்பு விடுத்து சஞ்சளா நாளை காலை வருவதாக கூறிவிட்டு அவளிடம் அலைபேசியை நீட்ட 

தயக்கத்துடன் வாங்கி பேசியவள்அம்மா ஆட்டோ பிடிச்சி நா வந்துருவேன் நா ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல வழி தெரியாம தொலைஞ்சு போறதுக்கு ப்ளீஸ் ம்மாஎன்று அலைபேசியின் வழியே கெஞ்சினாள் 

அவள் உள்மனம் ஓயமால் ஓலமிட்டு கொண்டிருந்தது என்னவோ விபரீதம் அரங்கேற போகிறது என்று அந்த பயத்தின் விளைவே அவளை இல்லம் செல்லுமாறு உந்த

சஞ்சு! சொன்னா கேளு, நீ தம்பி வீட்டுக்கு போ தனியா வர வேணாம் சொன்னா கேளுடா நீ பெரிய பொண்ணு தான் உனக்கு வழி தெரியாம இல்ல காலம் அந்த மாதிரி இருக்கு நீ வீடு வந்து சேருற வரைக்கும் எனக்கு திக்கு திக்குன்னு இருக்கும் புரிஞ்சுகோடா..” என்று தணிவாக கூற

சரி காலையில வரேன் வைங்க போனஎன்று சோர்வுடன் கூறியவள் அழைப்பை துண்டித்துவிட்டு அவனிடம் கொடுக்க

அவன் முகத்தை விசித்திரமாய் பார்த்தவன்இப்போ எதுக்கு முகத்தை இப்டி வச்சுருக்க ஒரு நைட் தானே பிரிஞ்சு இருக்க போற என்னமோ வாழ்நாள் முழுக்க பிரிஞ்சு இருக்க போற மாதிரி பண்றஎன்றதும் தீசுட்டார் போல பதறியவள் 

தயவு செய்து அந்த மாதிரி பேசாதிங்க சார் உங்களுக்கு புரியலை என்னமோ ஒன்னு நடக்க போகுதுன்னு என்னோட மனசு சொல்லுது அது என்னனு தான் தெரியலை அதை வார்த்தையா சொல்ல முடியலை” என்று பரிதவிக்கும் குரலில் கூறியவளை காண அவனுக்கும் கவலையாக தான் இருந்தது 

அவள் பதட்டத்தை தணிக்கும் விதமாய்அவங்களுக்கு எதுவும் ஆகாது சஞ்சும்மா பேசுக்கு சொன்னா நடந்துருமா என்ன? மனசை போட்டு குழப்பிக்காம வா போலாம்என்று பரிவாக கூறியவனுக்கு வயிற்றில் அமிலம் சுரக்க தொடங்கியது சுற்றிலும் ஏதாவது உணவகம் இருக்கிறதா என்று ஆராய்ந்தான் துவாரகேஷ்

அவன் நிற்பதை கண்டுசார் போலாம் என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்கஎன்று அவளிடமிருந்து எரிச்சலுடன் வார்த்தைகள் வர

போலாம்சஞ்சும்மா ஆனா சாப்டுட்டு போலாம் ரொம்ப பசிக்கிதுஎன்று முகம் சுருக்கி வயிற்றை தடவியபடி கூறினான்  துவாரகேஷ்

எனக்கு வேணாம் பசியில்ல நீங்க போய் சாப்டுட்டு வாங்க நா இங்க வெய்ட் பன்றேன்என்றதும் 

சாப்டவே வேணாம் கிளம்புவோம் ஒரு நைட் சாப்பிடலான எதுவும் ஆகாதுஎன்று கோபமாக சுமைகளை தூக்கி கொண்டு நடக்க முற்பட்டவனை கைப்பற்றி  தடுத்து நிறுத்தியவள் 

எனக்காக யாரும் சாப்பிடாம இருக்க வேணாம் போய் சாப்பிடுங்க நிஜமாவே எனக்கு பசியில்ல சொன்னா கேளுங்க சார்” 

அதெப்படி பசியில்லாம போகும் காலையில இருந்து நீ எதுவும் சாப்பிடலன்னு எனக்கு தெரியும் பொய் சொல்லாத சஞ்சு சாப்பிடாம இருந்தா யாராவது அவார்ட் கொடுக்குறேன்னு சொல்லிருக்கங்களா? அப்படினா சொல்லு நானும் கூட சேந்து பட்டினி கிடக்குறேன்என்று கோபத்தை வெளிக்காட்டாமல் பேசியவன்இங்க பாரு எதுக்காவும் வயிர காயபோடுறது எனக்கு பிடிக்காது அதனால ஏதாவது யூஸ் இருக்கா சொல்லு? எதுவும் இல்ல அல்சர் வந்து டாக்டர்க்கு ஃபீஸ் வேணா கொடுக்கலாம் அவருக்கு வேணா யூஸ் இருக்கு, நீ சாப்ட்டா நானும் சாப்டுவேன் இல்லன்னா வேணாம்என்று தோளை குலுக்கிவிட்டு நடக்க 

பிடிவதமாக கூறிவிட்டு செல்பவனை என்ன செய்வது என தெரியாமல் விழிகள் பிதுங்க நின்றவளுக்கு அவனின் பசி என்றது நினைவில் வர அவள் மனம் உருகியது வேகமாக ஓடி சென்று அவனை எட்டி பிடித்து நிறுத்தியவள்ட்ரெயின்ல ட்ராவல் பண்றது எனக்கு ஒத்துக்காது அதனால தான் சாப்பிடல சரி வாங்க போலாம்என்று மனமில்லாமல் கூற

எனக்காக யாரும் சாப்பிட வேணாம் பசியிருந்தா சாப்பிடலாம்என்று துவாரகேஷ் வீம்பு பேச

நா நல்ல மூட்ல தான் சொல்றேன் வாங்க எனக்கும் பசிக்கிற மாதிரி தான் தெரியிதுஎன்று அவனை போலவே வயிற்றை தடவி காட்டி  கூற அவளின் செய்கையும் முகப்பாவனையையும் கண்டு சிரிப்பை வாய்க்குள் அதக்கியவன் உயர்தரமான உணவகத்திற்கு அழைத்து சென்றான்

வெகு நேரம் கழித்து உண்பதால் எளிதில் ஜீரணமாக கூடிய உணவை ஆர்டர் செய்து பேசிகொண்டே இருவரும் இரவு உணவை முடித்து கொண்டு வீடு வந்து சேர மணி அவன் கூறியது போலவே பன்னிரெண்டு ஆனது

அவனிடம் இருந்த மற்றோரு சாவியை கொண்டு கதவை திறந்துஉள்ள வாஎன்று விட்டு விளக்கை எறியவிட்டவன் அவள் புறம் திருப்பி

எப்பவும் என்கிட்ட ஒரு சாவி இருக்கும் லேட்டா வரும் போது அம்மாவ டிஸ்டப் பண்ண வேணாம்னு இந்த ஏற்பாடு சரி நீ என்னோட ரூம்ல போய் படுத்துக்கோ குளிக்கணும்னா குளி நா இங்க படுத்துக்கிறேன் ரொம்ப டயர்டா இருக்குஎன்று அவள் பதிலை எதிர்பாராது அடுபடிக்குள் நுழைந்து வெந்நீர் காய்ச்சி குடித்துவிட்டு வர

அவள் நின்ற இடம் விட்டு அசையவில்லை தயக்கம் மேலோங்க நின்றிருந்தவளை புருவம் சுருங்க பார்த்தவன்என்ன போய் தூங்கல?”

இல்ல நா இங்கயே படுத்துக்கிறேன் நீங்க ரூம்ல படுத்துக்கோங்க சார்என்று சங்கடத்துடன் கூற

பச் என்ன ரொம்ப பேச வைக்காத தாயே எனக்கு தூக்கமா வருது போய் படுத்துக்கோ என்னோட ரூம்ல வெடிகுண்டு எதுவும் இல்ல தைரியமா போய் தூங்கு எப்டியும் தங்க போற ரூம் தான!” என்று அலட்சியமாய் கூறியவன் அவசரபுத்தியை எண்ணி மனதில் கடிந்து கொள்ள

என்னஎன்று அதிர்ந்தாள் சஞ்சளா 

இல்ல இதுல படுத்து உனக்கு பழக்கம் இருக்காது அத தான் அப்டி சொல்லிட்டேன் கேள்வி கேக்கமா போய் தூங்கும்மாஎன்று சோபாவில் படுத்து கண்களை மூடிகொண்டான் பேச்சை வளர்த்தால் உண்மையை உளறி கொட்டிவிடுவேனோ என்ற பயத்தில் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு புரண்டு படுத்து கொள்ள

தயக்கத்துடன் அறைக்குள் நுழைத்தவள் பார்வையால் அலசலானாள்ம் நம்மள விட ரூம்ம நல்லா தான் வாச்சிருக்காறுஎன்று மெச்சி கொண்டவள் சுடிதாரை எடுத்து கொண்டு குளியலறை சென்று பயண களைப்பு தீர குளியலை முடித்து கொண்டு வந்தவள் தரையில் விரிப்பை விரித்து படுத்துகொண்டாள் ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது புதிய இடம் என்பதாலோ என்னவோ புரண்டு புரண்டு படுத்தவள் நித்ரா தேவியை விடாப்பிடியாக இரவல் வாங்கி கொண்டு வெகு நேரம் கழித்தே உறங்க தொடங்கினாள்

நாளைய உதயம் அவளுடைய உலகம் அஸ்தமிக்க போகிறது என்பதை பேதையின் மனம் சற்றும் அறியவில்லை 

சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து கொண்ட துவாரகேஷ் அன்றாட வேலைகளை முடித்து கொண்டு விசாலட்சியின் அறையிலேயே குளித்து முடித்து அவசரமாக கிளம்பி வெளியே வந்தவன்ம்மா அவ கிளம்பிட்டாளா எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுதுஎன்று சாக்ஸை மாட்டியவாறே கேட்க

உணவு பாத்திரங்களை மேஜை மேல் எடுத்து வைத்து கொண்டிருந்த விசாலாட்சிதெரியலடா எனக்கு வேலை இருக்கு நீயே போய் பாருஎன்றபோதே அறையில் இருந்து வெளிப்பட்டவள் 

நா ரெடி சார் கிளம்பலமாஎன்று குரலில் அவசரத்தை காட்டி வந்து நிற்க

சாப்ட்டு போங்க ரெண்டு பேரும் சமையல் ஆச்சுஎன்ற விசாலாட்சிசஞ்சளா நீ வா வந்து உக்காரு அப்ப தான் அவனும் வருவான்என்றவர்  தட்டை எடுத்து வைத்து பரிமாறினார்

சாக்ஸை மாட்டி கொண்டு வந்து அமர்ந்தவன்நீங்களும் உக்காருங்க ம்மா மூணு பேரும் சேந்தே சாப்டலாம்என்று அழைக்க

நா அப்றமா சாப்ட்டுகிறேன்என்றவரைஅதெல்லாம் முடியாது உக்காருங்கஎன்று பிடிவதமாக இழுத்து அமர வைத்தவன் தாய்க்கும் தனக்குமாக சேர்ந்து பரிமாற அவன் அலைபேசி சிணுங்கியது 

எடுத்து பார்த்தவன்நீங்க சாப்டுங்க நா போன் பேசிட்டு வந்துடுறேன்என்று வேகமாக எழுந்து சென்றுவிட

அமைதியாக உணவை விழுங்கி கொண்டிருந்தவளை கண்ட விசாலாட்சிஇன்னைக்கு தான் வீட்டுக்கு வர தோணிச்சா?” என்று பல கால உணர்வுகளை குரலில் தேக்கி ஏக்கத்தை நிரப்பி கேட்டார்

திடீர் பேச்சில் வாயில் இருந்த உணவு தொண்டையை அடைத்து கொள்ள விசுக்கென நிமிர்ந்து பார்த்தவள் கடினபட்டு உணவை விழுங்கிவிட்டுஅத்தைஎன்று ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுடன் அழைத்தவளுக்கு விழிகள் கலங்கியது

இந்த வார்தைய உரிமையோட கேக்க இந்த பாவிய இத்தனை வருஷம் காக்க வச்சிட்டீங்கள, உங்கம்மாவுக்கு தான் ரோஷம் அதிகம் உங்கப்பா இறந்தத கூட சொல்லல உனக்கு எல்லா தெரியும் தானே உங்கம்மா சொல்லிருப்பாள எல்லா தெரிஞ்சும் இந்த அத்தைய நீயும் ஒதுக்கி வச்சிட்டளஎன்று அழுதவரின் கைகளை பற்றி கொண்டாள் சஞ்சளா

அய்யோ அத்தை! அப்டி இல்ல நானும் சரி அம்மாவும் சரி உங்கள ஒதுக்கி வைக்கல! அம்மா தான் நேத்து நைட்டு சார் கூட போன்னு சொல்லி அனுப்பி வச்சாங்க எப்டி உங்ககிட்ட பேசுறதுன்னு சங்கடப்படுறாங்க அவ்ளோ தான்” 

ம் ரெண்டு நாள் முன்னாடி கூட உன்னோட அம்மாவ மார்கெட்ல வச்சு பாத்தேன் சரி போய் பேசலாம்னு பக்கத்துல போனா ஒதுங்கி போறா அந்த அளவுக்கு வேண்டாதவளா போய்ட்டேன்“,

வருத்தத்துடன் அழுது கொண்டே கூற  

அத்தை ப்ளீஸ் அழுகாதிங்க நான் தான் சொன்னேன்ல உங்க கிட்ட எப்டி பேசுறதுன்னு சங்கடப்பட்டுகிட்டு பேசாம போயிருக்காங்க, நீங்க தப்பா நினைக்காதீங்க முதல கண்ணை துடைங்க சார் நம்மள தான் பாக்குறாருஎன்றாள் அவன் என்னவென்று கேட்பானே என்ற அச்சத்தில்

கண்களை துடைத்து கொண்டவர்அவனுக்கு எல்லா தெரியும்என்று கூற

என்ன? தெரியுமா..? நான் தான் அவரோட மாமா பொண்ணுன்னு தெரியுமா?” என்று கேட்டவளின் விழிகள் வியப்பில் விரிய

ம் தெரியும்டா உன்னோட அம்மா தப்பானவங்க இல்லன்னு நா எடுத்து சொல்ற வரைக்கும் அமிர்தாவை பத்தி தப்பா தான் நினைச்சிட்டு இருந்தான், எல்லா அவனோட அப்பா செஞ்ச வேலை  இல்லாதது பொல்லாது எல்லா சொல்லி நல்லா உரு ஏத்தி வச்சிருந்தாறு ரெண்டு நாள் முன்னாடி தான் எல்லாத்தையும் விளக்கமா சொன்னேன் நீ தான் அவனோட முறை பொண்ணுன்னு கூட சொல்லிட்டேனேஎன்றதும்

அலைபேசியில் உரையாடி கொண்டிருந்தவனை முறைத்து பார்த்தவள்என்கிட்ட அவரு தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலஎன்று குறையாய் கூற

அத நீ தான் அவன்கிட்ட கேக்கனும்என்றவர்நாளைக்கு அம்மாவ கூட்டிட்டு இங்க வர்றியா அவகிட்ட நா பேசணும் உன்னோட மாமா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்என்று மனம் வருந்தி விசாலாட்சி சொல்ல

கண்டிப்பா அம்மாவ கூட்டிட்டு வரேன் ஆனா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல! இறந்த காலம் இறந்து போனதாவே இருக்கட்டும்என்றவள் விசாலட்சிக்கு சாதம் பிசைந்து ஒரு கவளம் ஊட்டிவிட கண் கலங்க வாங்கி கொண்டவர் அவளுக்கும் ஊட்டிவிட்டார், தூரத்திலிருந்து இருவரின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தவனின் அதரத்தில் சிறு புன்னகை அரும்பியது வேண்டுமென்றே இருவருக்கும் தனிமை கொடுத்து எழுந்து சென்றிருந்தான் துவராகேஷ் தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஒரு நிம்மதி அவன் முகத்தில் படர்ந்தது

Advertisement