Advertisement

விஷ்ணு வைதேகியின் குடும்பத்தார் கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபாட்டை முடித்துகொண்டு வீடு வந்து சேர மணி பன்னிரெண்டை கடந்திருந்தது கோவிலில் பிரசாதமாய் பரிமாறிய பொங்கலே வயிற்றை நிறைந்திருக்க மேலும் வயிற்றுக்கு பளு கொடுக்காமல் மதிய உணவை தவிர்த்தவன்  சற்று நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு வைதேகியை கிளப்பி கொண்டு கனகராஜ் இல்லம் விரைந்தான்

மதுரை நகரின் சந்து பொந்துகளில் நுழைந்து ஆள் அரவம் அற்ற தெருவின் உள்ளே நுழைந்து கண்களை அலைபாய விட்டபடி வீட்டின் முகவரியை தேடியவன் சிவப்பு நிற பூக்கள் பூத்து குலுங்கும் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி தலையில் மாட்டி இருந்த இரும்பு சட்டியை மனைவியிடம் நீட்டினான் 

ஏதும் பேசாது வாங்கி கொண்டவள்இது யார் வீடு மாமாஎன்று சுற்றிலும் பார்வையை பதித்தவாறு கேட்க

தெரிஞ்சவரோட வீடு தான் தேவிம்மாஎன்றவன் வைதேகியை அழைத்து கொண்டு பூட்டி இருந்த கேட்டை திறந்து உள்ளே செல்ல 

உச்சி வெயில் நேரத்தில் புதிதாக இருவர் நுழைவதை கண்டு மர நிழலில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓட்டமும் நடையுமாக இருவரின் அருகில் வந்துஎன்ன வேணும் சார் யார் நீங்க?” என்று சந்தேகமாய் கேட்டான் தோட்டகாரனாய் பணிபுரிபவன்

சார பாக்கணும் அவருக்கு தெரிஞ்சவங்க தான் சார் இருக்காரா?” என்று கேட்க

அய்யா உள்ள தான் இருக்கங்காங்கஎன்று தோட்டகாரன் கூற

அவர பாக்க விஷ்ணு வந்துருக்கேன்னு சொல்லுங்கஎன்னும் போதே வெளியே கேட்ட சலசலப்பு குரலில்மணி யாரதுஎன்று உள்ளிருந்து குரல் வர

அய்யா உங்கள பாக்கத்தான் வந்திருக்காங்கஎன்றான் பவ்யமான குரலில்

தலைமயிர்கள் முழுதும் நரைக்காமல் ஆங்காங்கே கருமை எட்டி பார்த்தது அந்த முதுமை நிறைந்த இளைஞனுக்கு அறுபதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்ட வயது இருக்கும் அவருடைய தோற்றத்தை காணும் போது சாத்தியமில்லை என்பது போல இருந்தது உடல்வாகு அதே கம்பிரம் அதிகாரம் நிமிர்வான நடை என்று முதுமையிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார் முன்னாள் காவல் ஆணையர் கனகராஜ்

வந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டவர்அட விஷ்ணு வா வாஎன்று முகம் மலர அழைத்து கொண்டே அருகில் வந்தவர்நேரா உள்ள வர வேண்டியது தானே தெரியாத ஆள் மாதிரி பர்மிஷன் கேட்டுகிட்டு இருக்கஎன்று சலுகையாக கண்டிப்பு காட்ட

தெளிவுபடுத்திக்க தான் சார் கேட்டேன் நீங்க இருக்கிங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேணாமா?”,மேலதிகாரி என்ற மரியாதையில் பணிவுடன் பதில் அளித்தான் விஷ்ணு

இருவரின் சம்பாஷணைகளை புன்னகை முகமாய் கேட்டு கொண்டிருந்தவளிடம் பார்வையை செலுத்தியவர்வாம்மா வைதேகி தானே பேருஎன்று கேட்டவர் ஆமாம் என்று தலையாடியவளிடம்எப்டி இருக்கம்மா வீட்டுல எல்லாரும் எப்டி இருக்காங்க கல்யாணத்துக்கு தான் வர முடியல சாரிம்மாஎன்று சங்கடத்துடன் கூற

பரவாயில்ல அங்கிள் நீங்க எங்க இருந்தாலும் உங்க ப்ளஸ்சிங் மட்டும் போதும் நேர்ல வர வேண்டிய அவசியமில்லைஎன்று பெருந்தன்மையுடன் கூறிஎல்லாரும் நல்லா இருக்காங்க அங்கிள் நீங்க எப்டி இருக்கீங்க தனியா தா இருக்கீங்களா ஆன்ட்டி இல்லஎன்று பின்னால் பார்வையை அலைபாயவிட்டு கேட்க

உள்ள இருக்கா வெளிய நின்னுகிட்டே பேசனுமா உள்ள வாங்கஎன்று அழைத்து சென்றவர்அம்பிகாஎன்று குரல் கொடுக்க 

வியர்வை படிந்த முகத்தை சேலைதலைப்பால் துடைத்து கொண்டே அடுப்படியில் இருந்து வெளியே வந்தவர்என்னங்க” 

இவங்க தான்மா என்னோட மனைவி! பேரு அம்பிகாஎன்றவர்நா சென்னேனே வர்றாங்கன்னுஎன்று வந்தவர்களை மனைவியிடம் அறிமுகப்படுத்த

நீங்க தானா அது காலையில இருந்து என்ன பாடாப்படுத்தி எடுத்துட்டாரு அவங்க வரும் போது எல்லா தயாரா இருக்கணும் லேட் பண்ணிறாத பையன் கொஞ்சம் லேட் ஆனாலும் கிளம்பிருவான் அப்டி இப்டின்னுஎன்று கணவனின் அட்டகாசங்களை சொல்லி சிரிக்க

என்ன சார் இது? என்று சங்கடமாய் நெளிந்தான் விஷ்ணு

அட சும்மா இருப்பா உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் அதுவுமில்லாம புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு விருந்து வைக்க வேணாமா? இங்க இருக்குறதா இருந்தா ரெண்டு நாள் கழிச்சு கூட வர சொல்லிருப்பேன் இன்னைக்கு நைட்டே கிளம்பனும் பொண்ணு கிளம்பி வர சொல்லி ஒரே பிடிவாதம், டெலிவரி டைம் சோ அவ அம்மா பக்கத்துல இருக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறாஎன்று தன் நிலையை விளக்க

இதுல என்ன அங்கிள் இருக்கு இந்த மாதிரி நேரத்துல அம்மா பக்கத்துல இருக்கணும்னு எல்லாரும் ஆசைபடுறது தானேஎன்றாள் வைதேகி 

சரி நீங்க மூணு பேரும் பேசிட்டு மிஞ்ச வேலைய முடிச்சுட்டு கூப்பிடுறேன்என்று நகர முற்பட்டவரை தடுத்து நிறுத்தியவள்

மூணு பேர் இல்ல ஆன்ட்டி  ரெண்டு பேர் தான் பேசுவாங்க நா கேட்டுட்டு சும்மா தான் உங்கத்துட்டு இருக்கணும்  இவரு பேசினா வேலைய பத்தி மட்டும் தான் பேசுவாரு எனக்கு அத கேக்குற பொறுமையெல்லாம் இல்ல நானும் உங்க கூடவே வரேன்என்று அம்பிகாவுடன் எழுந்து சென்றுவிட

வைதேகியை தொடர்ந்து சென்ற பார்வையை தொண்டையை செருமி தன் புறம் திருப்பியவர்அப்புறம் விஷ்ணு வேலை எல்லாம் எப்டி போகுது

ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது சார் ரொம்ப கிரிட்டிக்கலான கேஸ் அத பத்தின டீடெயில்ஸ் கேட்க தான் உங்கள கான்டெக்ட் பண்ணேன், ஒரே ஒரு க்ளு தவிர வேற எந்த எவ்விடன்சும் எங்களுக்கு கிடைக்கலஎன்று தீவிரமாக பேசியவன்நீங்க லாஸ்ட் த்ரி இயர்ஸ் சென்னையில தான ஒர்க் பண்ணிங்க சார்என்று கேட்க

ஆமா விஷ்ணு என்ன டீடெயில்ஸ் வேணும் சொல்லு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நா சொல்றேன்என்றார் கனகராஜ்

கிட்னாப்பிங் கேஸ் சார் ஆனா அந்த கேஸ் பத்தி எந்த கம்ப்லைன்டும் வரல, மிஸ்டர் கருணாகரன் தான் அந்த கேஸ்ஸ பர்ஸ்னல ஹேண்டில் பண்ணாரு பட்.. இப்போ அவரு உயிரோட இல்ல சார், காணாம போனவங்க மொத்தம் பதினைஞ்சு பேர் அவங்க என்ன ஆனாங்கன்னு இப்போ வரைக்கும் எதுவும் தெரியலை வேற ஒரு கேஸ் விஷயமா ஒருத்தன அரஸ்ட் பண்ணி விசாரிக்கும் போது கொஞ்சம் டிடைல்ஸ் கிடைச்சது ஆனா அந்த விஷயம் உபயோகபடுற மாதிரியும் இல்லஎன்று உதட்டை பிதுக்கியவன்உண்மைய சொல்றதுக்கு முன்னாடியே அந்த பையன்னா சூட் பண்ணிட்டாங்க அவன் சொன்னதுல ஒரே ஒரு சின்ன இன்பர்மேஷன் மட்டும் கிடைச்சது கிட்னாப் பண்ணவங்க எல்லாருக்குமே  நெகட்டிவ் பிளட் குரூப் சார்என்று தீவிரமாக கூறி நிறுத்த

அவன் கூற கூற திகைப்புடன் கேட்டு கொண்டிருந்தவர் தலையை உலுக்கி கொண்டுஎன்ன விஷ்ணு சொல்ற ரொம்ப பயங்கரமா இருக்கு இந்த கேஸ்ச இப்போ யார் ஹேண்டில் பண்றது இதுல நா என்ன உதவி பண்ணனும்என்று ஆர்வமாக கேட்க

நானும் துவாரகாவும் தான் விசாரிக்கிறோம் ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்க தான் சார் வந்துருக்கேன் இதெல்லாம் யார் பண்றாங்கன்னு இன்னும் தெரியல மறைமுகமா என்ன கவனிச்சிட்டு இருக்காங்க என்னோட ஆக்டிவிட்டீஸ் எல்லாமே அவனுக்கு அப்பப்ப அப்டேட் ஆகிட்டே இருக்கு சார் மிஸ்டர் கருணாகரன் விசாரிச்சாதுல அவருக்கு கிடைச்ச க்ளு தான் இந்த போட்டோஎன்று தன் அலைபேசியில் இருந்த படத்தை காட்டினான்

படத்தை உற்று பார்த்தவர் யோசனை செய்த விதமாய்இத எங்கயோபாத்துருக்கேன் ஆனாஎங்கன்னு தான் டக்குன்னு ஞாபகம் வர மாட்டிங்கிது!” என்று தீவிரமாக சிந்தனை செய்து சம்பவத்தை நினைவில் கொண்டுவர முயற்சி செய்தார் 

எங்க.. எங்க.. எங்க..” என்று அசைபோட்டபடியே யோசனை செய்தவர் சட்டென நிமிர்வுடன் அமர்ந்துஹான் இந்த போட்டோ மிஸ்டர் சாந்தமூர்த்தி வீட்டுல பாத்துருக்கேன் விஷ்ணு ஒரு கேஸ் விஷயமா அவர என்கொயரி பண்ண போனப்ப பாத்தது பட் நீ சொல்ற மாதிரியான கேஸ் எதுவும் என்னோட சர்விஸ்ல வரலயே நீ சொல்றத பாத்தா கிரிமினல் பக்காவா பிளான் பண்ணி பண்றான்னு தெரியிதுஎன்றார் பல விசாரணைகளை நடத்திய அனுபவத்தில் 

அதான் சொன்னேனே சார் மிஸ்டர் கருணாகரன் பர்ஸ்னல இன்வெஸ்டிகேட் பண்ணிருக்காருன்னுஎன்றவன்சார் அவரோட அட்ரஸ் கிடைக்குமா இப்போ அவரு எங்க இருக்காருஎன்று ஆர்வத்துடன் கேட்க

அவசரப்படாத விஷ்ணு இவரு யாருன்னு தெரியாம தப்பா கணக்கு போடாத சொசைட்டில பெரிய மனுசன் சமூகத்துல ஏழைகளுக்கு நிறைய சேவை பண்ணிட்டு இருக்காரு நீ நினைச்ச உடனே போய் விசாரிக்க முடியாது ரொம்ப பெரிய இடம்! பெரிய இடம்னா அந்த அளவுக்கு மரியாதை அவருக்கு இருக்கு பாத்து ஹேண்டில் பண்ணு! எனக்கென்னமோ நீ நினைக்கிற மாதிரி அவருக்கும் இந்த கேஸுக்கும் சம்பந்தம் இருக்காது விஷ்ணுஎன்று அவன் எண்ணத்தை அறிந்தவராய் கூறியவர்

அவரோட அப்பா தியாகி பட்டம் வாங்குனவரு எதுக்கும் நல்லா விசாரிச்சு ஆக்சன் எடு அவசரப்படாத கவனம் தேவை மத்த கேஸ் மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய கூடாது பொறுமையா ஹேண்டில் பண்ணுஎன்று எச்சரித்தவர்

அவரு இப்போ சென்னையில தான் இருக்காரு இது தான் அவரோட அட்ரஸ்என்று துண்டு சீட்டில் விலாசம் எழுதி கொடுக்க 

துண்டு சீட்டை பார்த்த வண்ணம்தங்க் யூ சார் இனி நா பாத்துகிறேன் எதுவும் தெரியாம குழம்பி போய் இருந்தேன் இப்போ ஒரு பிடிப்பு கிடைச்சிருக்குஎன்றவனின் முகத்தில் உத்வேகம் கலந்த பிரகாசம் தென்பட்டது 

இருவரின் பேச்சை கலைக்கும் விதமாய்சாப்பாடு ரெடி சாப்ட வாங்கஎன்று அம்பிகா குரல் கொடுக்கவும் இருவரும் எழுந்து சென்றனர்

மதிய உணவை கேலியும் கிண்டலுமாக சுவாரஷ்யமான விஷயங்களை பற்றி பேசி சிரித்தபடியே உண்டு முடித்தவர்கள் சற்று நேரம் இருந்துவிட்டு விடைபெற்று கொண்டு கிளம்பும் தருவாயில்ஒருநிமிஷம் ப்பாஎன்ற அம்பிகா பூஜை அறை சென்று தாம்பூலம் எடுத்து வந்து கொடுக்க இருவரிடமும் ஆசி பெற்று கொண்டு விஷ்ணுவும் வைதேகியும் கிளம்பினர்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கும் போது மணி பதினொன்று என்று காட்டியது வைஷாலி திருச்சியிலேயே  இறங்கி கொள்ள

சரவெடி இப்போ நேரா என்னோட வீட்டுக்கு போகலாம் நாளைக்கு காலையில உன்ன வீட்டுல ட்ராப் பன்றேன் இப்போ என்கூட என்னோட வீட்டுக்கு வாஎன்று சொல்ல

இல்ல சார் நா வீட்டுக்கு போறேன் அம்மாகிட்ட சொல்லிட்டேன் வந்துருவேன்னு வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க நா ஆட்டோ பிடிச்சு போய்கிறேன் நீங்க போங்கஎன்று அவசரமாக மறுத்து கூறினாள் சஞ்சளா

Advertisement