Advertisement

ஆமா பைத்தியம் தான் இப்போ அரை பைத்தியமா இருக்கேன் முழு பைத்தியம் ஆகாமா இருக்கணும்னு தான் வேலைய ரிசைன் பண்ணேன், உனக்கு இதெல்லாம் புரியாது துவா ஆனா போன்ல கேட்டுட்டு இருக்காங்கள அவங்களுக்கு புரியும் தெரியும் நா எதுக்காக வேலைய விட்டேன்னு, இனி எனக்கு கால் பண்ண வேணாம்னு சொல்லிரு, அவங்ககிட்ட எனக்கு பேச  பிடிக்கலை போதும் நா பட்டது இனி எதையும் என்னால தாங்கிக்க முடியாது

நானும் மனுஷி தான் அவன மாதிரி எதையும் வெளிக்காட்டாம சாதரணமா பேசி சிரிச்சிட்டு இருக்க முடியாது அவனுக்கும் அவனோட வேலைக்கும் என்னைக்கும் நா தொந்தரவாவோ தொல்லையாவோ இருக்க மாட்டேன்என்று நிதானமாக கூறியவளின் நினைவில் அவன் பேசிய வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாய் தைத்தது, வலியுடன் வார்த்தைகளை தொடர்ந்தாள்போதும்டா என்னால முடியல ப்ளீஸ் கொஞ்ச தனியா விடுஎன்னும் போதே விழியோரம் உதிர்த்த கண்ணீர் துளி கன்னத்தில் உறவாட

சரி சரி அழுகாத கண்ண துடைச்சுக்கோ பொது இடம் அழுதா என்ன ஏதுன்னு கேட்பாங்கஎன்று அவளுக்கு தனிமை கொடுத்து விலகி வந்தவன்லைன்ல இருக்கியாடா?” என்று தேய்ந்த குரலில் கேட்க

ம் இருக்கேன்அவனிடத்திருந்து சுரத்தே இல்லாமல் வார்த்தைகள் வந்தன அவள் விசும்பல் ஒலி அவன் செவிகளுக்கு எட்டிட தன்  கையறு நிலையை எண்ணி நொந்து கொண்டான் 

ஏண்டா இப்டி பண்ற பாவம்டா ரொம்ப ஃபீல் பண்றா? தயவு செஞ்சு உன்னோட மனச மாத்திக்கோ விஜி விட்டுட்டு போனவளுக்காக இருக்குறவள கஷ்டப்படுத்தாதடா அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும் அப்புறம் உன்னோட விருப்பம்என்று மனதாங்கலுடன் கூற

மறுமுனையில் சில கணங்கள் கனத்த மௌனம் நிலவியது அவனுக்கும் மனம் கனக்க தான் செய்தது உள்ளுணர்வுகள் அவனை தட்டி எழுப்பி அவளை சமாதானம் செய்ய சொல்லி இம்சிக்க உணர்வுகளை அடக்கி வேலியிட்டு கொண்டவன்சரி அவகிட்ட நேர்ல வந்து பேசிக்கிறேன் அழ வேணாம்னு சொல்லுஎன்றவனின் மனம் வலியை நிரப்பி கொண்டது  

வேலை பற்றிய சில விஷயங்களை பேசிவிட்டு விஜயன் அழைப்பை துண்டித்துவிட தலையை அழுந்த கோதியபடி சஞ்சாளாவின் அருகில் அமர்ந்தான் துவாரகேஷ்

என்ன காதலோ அவங்களா சண்டை போட்டுக்கிட்டு இப்போ அவங்களா வேதனைய அனுபவிச்சிட்டு இருக்காங்க இதெல்லாம் தேவையா?”என்று ஏகத்துக்கும் சலித்துக்கொள்ள

அதெல்லாம் லவ் பண்றவங்களுக்கு தான் தெரியும் ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறவங்களுக்கு தெரியாது புரியாது அது என்ன மாதிரியான வலின்னு! நீங்க சிங்கிள் தான அதான் இப்டி பேசிறீங்க நேசிச்சு பாருங்க அவங்களுக்காக என்ன வேணாலும் பண்ண தோணும்  அவங்க நம்மள விட்டு விலகி போனாலும் அவங்க மேல இருக்குற காதல் அணுவளவும் குறையாதுஎன்று காட்டமாக ஆரம்பித்தவள் ரசனையுடன் நேசத்தின் துளிகளை உள்வாங்கியபடி பேச திகைத்து போனவன்

நா சிங்கிள்ன்னு யார் சொன்னது எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு சரவெடி ஆனா.. எனக்கு இந்த மாதிரியான அவஸ்தை எல்லாம் இல்லை என்னோட ஆள் ரொம்ப சாப்ட் நேச்சர் தெரியுமா யூ நோ இப்போ கூட அவ இங்க தான் இருக்க செம்ம க்யூட்என்று கண்களில் குறும்பு மின்ன கூறியவனுக்கு அவள் விழிகளின் அலைபாய்தலை காண தெவிட்டவில்லை 

அதிர்ச்சியும் கவலையும் கலந்த முகத்துடன் அவசரமாக முன்னே பின்னே திரும்பி திரும்பி பார்த்தவள்ஏய் இங்க இருக்கான்னா இந்த இடத்துல இல்ல என்னோட மனசுலஎன்று   கண்மூடி திறந்தவன் மந்தகாசமாய் சிரித்து

என் நெஞ்சில் துஞ்சிய தேவைதை தூதுவளை கொடியாய் என் நாடியின் வழியே நரம்புகளில் படர்ந்து உயிர் மொத்தமும் ஆக்ரமித்து கொண்டாள் அவள் வசமாக!!” 

என்று இமைகளை மூடி பரவசமாக கூறியவன்எப்டி என்னோட கவிதை நல்லா இருக்குதுலா சரவெடி!, என்று புன்னகை மாறாமல் ஆர்வமாய் கேட்டுசூப்பர்டா துவாரகேஷ் காதல் பண்ணா கவிதை வரும்னு கேள்விப்பட்டுருக்கேன் பட் இப்போ தான் அதை அனுபவிக்கிறேன்என்று தன்னை தானே தோள்தட்டி மெச்சி கொண்டவன் எதிரில் வீற்றிருந்தவளின் கேவலமான பார்வையை கண்டு

என்ன அப்டி பாக்குற?” என்று புருவம் உயர்த்தி கேட்க

இல்ல கவிதைன்னா மேக்சிமம் அல்லிகொடி பவளகொடி இப்டி தான் கேள்வி பட்டுருக்கேன் இது என்ன தூதுவளை கொடி நல்லாவே இல்லஎன்று உள்ளதில் மூண்ட ஆத்திரத்தை அடக்கி கொண்டு கேட்க

ஏன் தூதுவளைக்கு என்ன குறைச்சல் உடம்புக்கு ரொம்ப நல்லதும்மா அது, அந்த கொடி மாதிரியே என்னோட காதலும் உடம்புக்கும் மனசுக்கும் நல்லதுன்னு சொன்னேன் என்ன சொன்னாலும் குத்தம் தான் கண்டுபிடிப்பிங்களே தவிர அத பாராட்ட மாட்டீங்க சரி விடு என்னோட கவிதைய நினைச்சு உனக்கு பொறாமை அதுக்கு நா என்ன பண்ண முடியும்என்று அலட்டி கொள்ள

ஆமா நீங்க வைரமுத்துகிட்ட  இருந்து கவிதை எழுத கத்துகிட்டு வந்துருக்கிங்க பாருங்க உங்கள பாத்தும் உங்க கவிதைய நினைச்சும் பொறாமை பட மொச புடிக்கிற…” என்று ஆரம்பித்தவள் அவனின் திடுக்கிடும் பார்வையை கண்டுஅதோட மூஞ்சிய பாத்தா தெரியாதுஎன்று சமாளிக்க

ரொம்ப நல்லாவே சமாளிக்கிற நேரம் வரும் போது நா யாருன்னு காட்டுறேன் அதுவரைக்கும் என்ன என்ன மாதிரியெல்லாம் பேசனுமோ பேசிக்கோஎன்று சளைக்காமல் பதில் அளித்தான்

பொழைச்சு போன்னு விடுறீங்க ம் ரொம்ப பெரிய…. மனசு தான் உங்களுக்கு”  என்று அலுத்து கொண்டவள்வெட்டியா மொக்கை போடுறத விட்டுட்டு போய் தண்ணி வாங்கிட்டு வாங்க பேசி பேசியே தொண்டை வறண்டு போச்சுஎன்று தொண்டையை தடவியபடி கூற

எல்லா என்னோட நேரம் சில்வண்டு பேச்சையெல்லாம் பொறுத்து போக வேண்டியதா இருக்குஎன்று தன்னையே நொந்து கொண்டவன்தண்ணி மட்டும் போதுமா இல்ல வேற ஏதாவது வாங்கிட்டு வரவா?” என்று வேகமாக கேட்க

இப்போதைக்கு அதுமட்டும் போதும் வேற எதுவும் வேணாம் வேணும்னா…! அப்புறமா சொல்றேன்என்று அலட்சியாமாய் பதில் கூறியவள் நடைமேடையில் நின்றிறுந்த ஒருசில பயணிகளின் மீது பார்வையை செலுத்த அவளின் துடுக்கான பேச்சும் சட்டென கோபம் கொள்ளும் விதமும் அவனுக்குள் அடக்க முடியாத சிரிப்பையும் சிலிர்ப்பையும் அள்ளி வீசியது

உன்ன போய் கேட்டேன் பாருஎன்றவாறே நகர்ந்து சென்று விட

ஒரு பொண்ணு என்ன மாதிரி பழகுறா பேசுறா அதுக்கு என்ன அர்த்தம்னு கூடவா இவருக்கு தெரியாது இதைவிட வெளிப்படையா எப்டி சொல்றது வாய் திறந்து நா உங்கள நேசிக்கிறேன்னு ஒவ்வொரு இடத்துலயும் சொல்லிக்கிட்டு நிரூபிச்சுகிட்டா இருக்க முடியும் அவங்களா புரிஞ்சுக்க வேணாம் எல்லாம் என்னோட அத்தைய சொல்லனும் என்ன பிள்ளை வளர்த்திருக்காங்களோ சரியான மாங்கா மடையன்என்று புலம்பியவளுக்கு மடார் மடார் என்று தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது அவனின் அறியாமையை எண்ணி

தண்ணீர் பாட்டிலுடன் வந்தவன்இந்தாஎன்று வெடுக்கென முகத்திற்கு முன்னால் நீட்ட

தண்ணின்னா தண்ணி மட்டும் தான் வாங்கிட்டு வருவிங்களா தொண்டை வறண்டு போச்சுன்னு சொன்னேனே ஒரு சோடா வாங்கிட்டு வந்துருக்க கூடாதுஎன்று அதிகாரம் பேசியவள்என்ன தான் போலீஸ்ல உங்களுக்கு ட்ரைனிங் கொடுத்தாங்களோ ம்ஹும் பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்என்று சலித்து கொண்டே பாட்டிலை திறந்து குடித்தது முடிக்க கண்கள் இடுங்க முறைத்து பார்த்த வண்ணம் இடுப்பில் கைவைத்து நின்றிருந்தான் 

என்ன முறைப்பு! இல்ல என்ன முறைப்புன்னு கேக்குறேன் அப்பால தள்ளி போங்க முன்னாடி சிலை மாதிரி நின்னுகிட்டுஎன்று மனதில் மண்டிய எரிச்சலை வெளிபடியாகவே காட்ட

எனக்கு வேணும்டி வாங்கிட்டு வந்து கொடுத்ததுக்கு எனக்கு இது தேவை தான்என்றெண்ணியவன் அவள் கோபத்திற்கான காரணம் என்னவென்று தெரிந்தும் பதிலேதும் பேசாது அமைதியாய் இருந்தான் அவள் மனதில் உள்ளதை அறியாத அறிவிலி அல்லவே அவன் 

அவளை விட்டு சற்று விலகி நின்றுவைசு உனக்கு தண்ணி வேணுமா?” என்று கேட்க

வேண்டாம்என்று தலையாட்டியவள் இலக்கற்று தரையில் கவனத்தை பதித்து மனதில் வலியை தந்தவனை எண்ணி நினைவில் உழன்றாள், சிதையில் இட்ட தேகமாய் கொதித்தது வலித்தது மனம் ஒரு வாரத்திற்கு மேலேயே ஆயிற்று அவனை கண்குளிரபார்த்து! பேசி இரு வாரங்களுக்கும் மேலேயே ஆனது பேச கூடாது என்று அவள் வீம்பாய் இருந்தாலும் அவன் மீது காதல் கொண்ட மனம் பேசு என்று பிராண்டியது 

ஏன் பேச வேண்டும் அவளுடைய காதலை உதாசீன படுத்தியவன் அவனிடம் பேச வேண்டுமா?’ என்று அவன் மீது கோபத்தை வளர்த்து கொண்ட மற்றோரு மனமோ அவளுடைய தன்மானத்தை சீண்டி பார்த்தது

இரண்டு மணி நேரத்தை சில நேரம் அமைதியிலும் சில நேர பேச்சிலும் கடத்தியவர்கள் சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் வந்து நின்றதும் மூவரும் ஏறி இருக்கையை அறிந்து கொண்டு   அமர 

சஞ்சளாவிற்கு மட்டும் வேறு இருக்கையில் இடம் ஒதுக்கி இருந்தது அவனது இருக்கையில் அமர்ந்தவன் என்ன நினைத்தானோ சட்டென எழுந்து அவள் இருக்கும் இடம் சென்றுநீ வைஷாலி கூட உக்காந்துகோ நா உன்னோட சீட்டுல உக்காந்துகிறேன்என்று சொல்ல

ஒன்னு வேணாம் நா இங்கயே உக்காந்துக்கிறேன் உங்க ஆள் கூட நீங்க ஜாலியா கடலை போடுங்கஎன்று முறுக்கி கொள்ள 

 இதழ் மறைவில் உறைந்த புன்னகையை பெரும்பாடுப்பட்டு அதக்கி கொண்டவன்சொன்னா கேக்குறதே இல்ல எப்டி தான் அத்தை இவள சாமளிக்கிறாங்களோ பாவம் தான் அவங்கஎன்று முணுமுணுத்தவன் தன் பார்வையில் அவள் படுமாறு அமர்ந்து கொண்டு கருத்தில் அவளை பதிய வைத்து கொண்டிருந்தான், அவனுக்குள் புதிதாய் ஒரு உணர்வு தனிமையில் மட்டுமல்லாது கூட்டத்திலும் பித்தனாய் சிரித்தான் சிந்தித்தான் சிந்தை இழந்தான் மெருகூட்டும் காதலின் அளவுகளை புன்னகை கொண்டு அளந்தான் பூபாளத்திற்கு ஓர் புன்னகையாய் அவளிடம் ராகம் பாடினான் சின்ன சின்ன சீண்டல்களிலும் சினத்திலும் குளிர்காய்ந்தான் வெம்மையில்லா வெகுளியான பேச்சில் கனிந்து உருகினான் ஆடவன்

தொடரும்

நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய்

தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொல்ல நீ வாராய்

புரை ஏறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்

அது ஏனடி!!”

Advertisement