Advertisement

ஐந்தாறு புடவைகளை கட்டிலில் பரப்பி வைத்து முகவாயில் கைவைத்து குழப்பத்துடன் நின்றிருந்தாள் வைதேகி அறைக்குள் நுழைந்த விஷ்ணு யோசனையுடன் முதுகு காட்டி நிற்பவளை கண்டு பூனைப்போல பின்னால் வந்து அணைத்து கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க மீசை முடியின் குறுகுறுப்பில் நெகிழ்ந்து நெளிந்தவள் 

கோவிலுக்கு போகணும்னு அத்தை சொன்னாங்கஎன்று கண்டிப்பாய் பேசி விலக்கி நிறுத்த எண்ணியவளின் எண்ணமெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாய் போனது நீரில் அமிழ்ந்த நெருப்பாய் அவளுள் கரைந்து போனவன் சில நொடிகள் கழித்து விலக்கி நிறுத்தி சில கணங்கள் அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தவன்கிளம்பாம என்ன பண்ற தேவிம்மா சீக்கிரம் கிளம்பு கோவிலுக்கு போகணும்என்றவனின் குரல் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தவள் அதுவரை தான் இருந்த நிலையை எண்ணி பார்க்க வெட்கம் மேலோங்கியதுடன் முறைப்பும் துளிர்த்தது அவளிடத்தில், குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தவனை பார்த்து 

நானா கிளம்பமாட்டேன்னே நீங்க தான் என்ன கிளம்ப விடலைஎன்று உதட்டை சுளித்து கொண்டு கூறியவளின் பார்வை பரப்பி வைத்த புடவைகளின் மீது திரும்ப அவள் பார்வையை தொடர்ந்து அவன் விழிகளும் சென்றது

என்னாச்சு தேவிம்மா

இதுல எந்த புடவை கட்டுறதுன்னு தெரியல மாமா பட்டு புடவை கட்டிட்டு வரணும்னு அத்தை சொல்லிருக்காங்க இது எல்லாமே பட்டு புடவை தான் ஆனா…” என்று நிறுத்தி மீண்டும் பார்வை புடவைகளின் மீது பாய்ந்து மீள

 “இதுல இருக்கிற எந்த புடவையிலயும் மடிப்பே வைக்க வராது எனக்கு, அதான் குழப்பமா இருக்கு எத கட்டுறதுன்னுஎன்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் பாவங்களையும் புன்சிரிப்போடு தெவிட்டமால் ரசித்தவன்ஊப்ஸ் இவ்ளோ தானா நா எதுக்குடா இருக்கேன் குட்டிமா இந்த மாதிரி வேலை எல்லாம் மாமாவுக்கு அத்துப்படி புடவைய எடு நா கட்டிவிடுறேன் மடிப்பு நா நல்லா வைப்பேன் ரெண்டு பேர் சேந்து கட்டுன சீக்கிரம் கட்டி முடிச்சிறலாம்என்று அசட்டையாய் விழிகளில் குறும்பு மின்ன கூறினான்

என்னமோ வீடு கட்டுற கொத்தனார் மாதிரி பேசுறீங்க நீங்க ஒன்னும் பண்ண வேணாம் நானே கட்டிக்கிறேன் லேட் ஆனாலும் பரவாயில்லஎன்றவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்

புருஷன் சொன்னா பொண்டாட்டி கேக்கணும் ரைட், அப்டி கேக்கலன்னா வேற மாதிரி பனிஸ்மெண்ட் கிடைக்கும் எப்டி வசதிஎன்று புருவம் உயர்த்தி ஈரம் காயாத  இதழை ஒற்றை விரல் கொண்டு வருட

வேகமாக கையை தட்டிவிட்டுபரவாயில்ல இந்த பனிஸ்மெண்ட்ட நா அக்சப்ட் பண்ணிக்கிறேன் ஆனா இப்போ இந்த வேலை வேணாம் நீங்க இங்க இருந்து கிளம்புங்க நா புடவை மாத்தனும் போங்க மாமாஎன்றவள் பிடிவாதமாய் அசையாமல் நிற்பவனின் கைகளை பிரித்து அவனிடமிருந்து விடுபட்டவள் வலுக்கட்டாயமாக வெளியே தள்ள

நா சூப்பரா கட்டிவிடுவேன்டா குட்டிமாஎன்றவனிடம் போலியாய் முறைப்பை காட்டியவள்

 “நீங்க எப்டி கட்டிவிடுவீங்கன்னு எனக்கு தெரியும் அது என்கிட்ட நடக்காதுஎன்று கட்டை விரலை ஆட்டியபடி கூறினாள்

என்கிட்ட தனியா சிக்குவள்ல அப்போ கவனிச்சுக்கிறேன் உனக்கு பனிஸ்மெண்ட் கண்டிப்பா கொடுப்பேன்” 

சிக்கும் போது பாத்துக்கலாம் இப்போ கிளம்புங்கஎன்றவள் கதவை சாத்திவிட

சற்று நேரம் கதவையே வெறித்து பார்த்தவனின் வதனத்தில் புன்னகை அரும்பியது என்னவோ உண்மை தான்! திருமணத்திற்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகான காதலில் ஓர் உயிர்ப்பு நிலை பெற்றிருந்தது அவளின் ஒவ்வொரு அணுகுமுறையும் அக்கறையும் அவளிடத்தில் அதீத காதலை உண்டாக்க எஞ்சியிருக்கும் எண்ணிக்கையில்லா வாழ்வில் இருவரையும் மேன்மைபடுத்தி மெருகூட்டுவதற்காக வாழ்வின் புரட்டப்படாத அத்தியாயங்கள் பசுமையாய் காத்து கொண்டிருந்தது

ஏமாற்றத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தவன் சாவித்ரி ஜெகனாதனிடம் சென்று வம்பளக்க தொடங்கினான்

மதுரை பெரியார் ரயில் நிலையம் மூவரும் ரயில்வண்டியினை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுது பார்த்து ரயில் வர இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் என்று ஒலிபெருக்கியில் மூன்று மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டது ரயில்வே நிர்வாகம்இது என்னடா சோதனையா போச்சு ரெண்டு மணி நேரமா?” என்று அங்கலாய்த்தவன் பெண்கள் இருவரிடமும் 

ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரவா?” என்று கேட்க 

எனக்கு காஃபி மட்டும் வாங்கிட்டு வா துவா வேற எதுவும் வேணாம்என்று கூறியவளின் முகம் பழையபடி சோகத்தை அப்பி கொள்ள

உனக்கு சஞ்சும்மா!”

எனக்கு பால் மட்டும் போதும் சார்என்றதும்

இரு கோப்பைகள் நிரம்ப காஃபியும் பாலும் வாங்கி வந்து கொடுத்தவன் அவனுக்கொரு தேநீரை வாங்கி கொண்டு இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்தான் துவாரகேஷ்

ஒரு மிடறு பருகியவளின் முகம் அஷ்டகோணலாக மாறியதுசார் பால்ல தண்ணி ஊத்துனாங்களா இல்ல தண்ணியில பால ஊத்துனாங்களா இப்டி இருக்கு” 

இங்க இப்டி தான் இருக்கும் போற இடத்துலயெல்லாம் பெருமாள் கோவில் பொங்கலும் புளியோதரையும் வேணும்னா எப்டிஎன்று சிரிக்காமல் கேலி பேச 

எனக்கு வேணாம்என்று ஓரமாக ஊற்றிவிட்டு கப்பை குப்பை தொட்டியில் போட்டவள்சென்னை ரீச் ஆக எவ்ளோ நேரமாகும்என்று கேட்க

நாலா புறமும் பார்வையை பதித்தபடிஎப்டியும் பதினொன்னு ஆகும் சொல்ல முடியாது எங்கயாவது சிக்னல் போட்டா இன்னும் லேட் ஆகும் ஆக மொத்தம் வீடு போய் சேர நைட் பன்னெண்டு மணிக்கு மேலேயே ஆகலாம்என்றபடியே தேநீரை அருந்தினான்

அவ்ளோ நேரமாகுமா..!” என்று வாயை பிளந்தவள்வைசு க்கா நீங்க சென்னை தான வர்றிங்க?” என்று கேட்க

இல்ல சஞ்சும்மா நா திருச்சியில் இறங்கிருவேன் அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு சொன்னேன்ல ஹப்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு டாக்டர் சொன்னதா அப்பா சொன்னாரு பக்கத்துல இருந்து பாத்துக்கணும்டா இன்னொரு முறை வருவேன் அப்போ நீ சொன்ன இடத்துக்கு போலாம் சரியா ஓகேஎன்று புன்னகையுடன் தலையை ஆட்டி தன்னிலை விளக்கம் அளித்தாள் 

சிறு ஏமாற்றத்துடன்சரிஎன்றவள்அம்மாக்கு சரியானதும் சென்னைக்கு வாங்க ஆனா கண்டிப்பா நா சொன்ன இடத்துக்கு போகணும் நீங்க நா வைதேகி அக்கா மூணு பேரும்!, உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா காரணம் தான் தெரியல சோ ச்சுவிட்என்று வைஷாலியின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள்

அடுத்த முறை வரும் போது எங்க வீட்டுல தான் தங்கனும் அப்டியே ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரணும் சரியா”  என்று விழிகளை விரித்து லயம்போல கூற அவள் பாவங்களை தப்பாமல் தாளம் பிடித்து கொண்டவன் அவளறியாமல் ரசனையாய் ரசிக்க தொடங்கினான் 

சரி கண்டிப்பா அவங்கள கூட்டிட்டு வரேன் உங்க வீட்டுல தான் தங்குவேன் போதுமா?” என்று அழுத்தமாய் கூறி சிரித்தாள் வைஷாலி

அம்மாவுக்கு என்னாச்சு வைசு ரொம்ப முடியலையா?” என்று கவலையுடன் துவாரக கேட்க

ஆமாண்டா ரொம்ப முடியல ப்ளட் ஏத்தனும்னு சொல்லிருக்காங்க நேரத்துக்கு சாப்பிட மாட்டிங்கிறாங்க அப்பா என்கிட்ட சொல்லி வருத்தபடுறாரு, யாராவது ஒருத்தர் மேரேஜ் அட்டன் பண்ணனும் இல்லையா!, அதான் கல்யாணம் முடிஞ்சதும் என்ன கிளம்பி வர சொன்னாரு போனதும் அம்மாகிட்ட பேசணும் ரொம்ப பயந்து போய் இருக்காங்கஎன்றவளின் முகத்தில் இயல்பையும் மீறிய அச்சம் கவலை இரண்டும் பாய்ந்தோடியது 

எல்லாம் சரியாயிரும் நீ கவலைப்படதா போனதும் எனக்கு கால் பண்ணு ஏதாவது ஹெல்ப்ன்னா உடனே லீவ் கேட்டு வந்துடுறேன் ஓகே ஃபீல் பண்ணாதஎன்று ஆறுதல் கூற 

வைஷாலியின் அலைபேசி ஒலியெழுப்பியது திரையில் மின்னிய பெயரை கண்டு முகம் கடுப்பை பூசி கொள்ள அணையும் வரை வெறித்து பார்த்தவள் அலைபேசியை கைப்பைக்குள் போட்டுவிட்டாள்யாருன்னு எடுத்து பேச வேண்டியது தானே ஏதாவது முக்கியமான காலா இருக்க போகுது வைசு” 

ப்ச் முக்கியமான கால் இல்ல ஏதோ ராங் கால்என்று அலட்சியமாய் பதில் கூறியவள்  அமைதியைய் தத்தெடுத்து கொண்டாள் 

மீண்டும் மீண்டும் இடைவிடாத அழைப்பில் எரிச்சலுற்றவன்பச் எடுத்து யாருன்னு கேளுடிஎன்று கைப்பையை வேகமாக பிடுங்கி அதிலிருந்த அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்குபிஜ்ஜிலிஎன்ற பெயரை கண்டு குழப்பம் மேலோங்க திரையில் காட்டிய எண்ணை கண்டு யார் என யூக்கித்து கொண்டவன்ஏய் விஜி தான் கால் பண்றான் பேசு எதுக்கு பண்றான்னு தெரியலஎன்று நீட்ட

யார்கிட்டயும் என்னால பேச முடியாது கட் பண்ணு இல்ல அட்டன் பண்ணி இனிமே எனக்கு  கால் பண்ண வேணாம்னு சொல்லிருஎன்று  கோபமாக கூறிவிட்டு எழுந்து சஞ்சளாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்

இதுக சண்டைக்கு ஒரு அளவே இல்லை பேர பாரு பிஜ்ஜிலி நிக் நேம் சூஸ் பண்ணிருக்கு பாரு பாக்கி எல்லா கால கொடுமைடா சாமி!, தூது போறதே எனக்கு வேலையா போச்சுஎன்று புலம்பி கொண்டே கடுப்புடன் அழைப்பை ஏற்று பேச தொடங்கினான்

மறுமுனையில்ஹாலோஎன்றதும்சொல்லுடா விளங்காதவனே உங்க ரெண்டு பேருக்கும் என்ன பாத்தா எப்டி தெரியிது ஹான்! உங்க போரு பெரிய அக்கப்போறா இருக்கு சண்டை போட்டா ரெண்டு நாள்ல சமாதானம் ஆக தெரியாதுஎன்று மறுபக்கம் உள்ளவனை பேசவிடாமல் மூச்சு வாங்க பேசினான் துவாரகேஷ்

டேய் முதல என்ன பேச விடுடா நானா பேச மாட்டிங்கிறேன் என்ன பாத்ததும் முகத்தை திருப்பிக்கிட்டு போறா அவ பக்கத்துல இருக்காளா? இல்லையா? நீ போன எடுத்திருக்கஎன்று கேட்டவனின் மனம் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று உந்தியது இத்தனை நாட்கள் அவளிடம் பேசாமல் இருந்ததில் அவனுக்குள் தவிப்புகள் தகித்து  கூடியதே தவிர அடங்கி தணிந்த பாடில்லை

இருக்கா உன்கிட்ட பேச முடியாதுன்னு சொல்லிட்டா அதான் நா எடுத்து பேசுறேன் சொல்லு என்ன விஷயம் இவ்ளோ காலையில கால் பண்ணிருக்க” 

நினைச்சேன் அவ பக்கத்துல தான் இருப்பான்னு ஒரு வாரமா கால் பண்ணிட்டு இருக்கேன் என்ன மனுஷனா கூட மதிக்க மாட்டிக்கிறாஎன்னோட மனசில இருந்தத சொன்னதுக்கு என்ன, பாடாப்படுத்துறாடா ஒன்னு பேசியே சாகடிக்கிறா இல்ல இந்த மாதிரி பேசாம சாகடிக்கிறா முடியலடாஎன்று பரிதாபமாக  கூறியவன் 

இப்போ எனக்கு ஒன்னு மட்டும் தெரிஞ்சாகனும் யார கேட்டு அவ வேலைய விட்டா அதுக்கான ரீசன் மட்டும் கேட்டு சொல்லுஎன்று பிடிவாதம் நிறைந்த குரலில் கேட்க

என்னடா சொல்ற வேலைய ரிசைன் பண்ணிட்டாளா? ஒரு வார்த்தைகூட சொல்லலஎன்று துவாரகா அதிர்ச்சியடைய

பச் கேட்டு சொல்லுடா நானும் ஒரு வாரமா அவகிட்ட பேச ட்ரை பண்ணிட்டு இருக்கேன் போன் எடுத்து பேசவே  மாட்டிங்கிறாஎன்று சிடுசிடுக்க

சரி சரி கேட்டு சொல்றேன் லைன்லயே இருஎன்றவன் 

வைஷாலியின் அருகில் சென்றுஏய் பக்கி உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க இப்போ எதுக்கு வேலைய ரிசைன் பண்ண எங்க யார்கிட்டயும் இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல உனக்கு என்ன பைத்தியமாஎன்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் துவாரகா

Advertisement