Advertisement

டேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்கஎன்ற விஷ்ணுவின் குரல் கேட்டு வேலையை பாதியிலேயே விட்டு எழுந்த துவாரகா 

குழிதோண்ட சொன்னங்கடா அதான் தோண்டிட்டு இருக்கேன் நீ எப்போ வந்த ரெண்டு நாள்ல வந்துருவேன்னு சொல்லிட்டு போய்ட்டு இன்னைக்கு வந்துருக்க பேசாம கல்யாணத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்துருக்க வேண்டியது தானே வந்ததும் தாலி கட்டிருக்கலாம்லஎன்று கிண்டலாய் பேசினாலும் அதில் தெரிந்த கோபத்தை சிரிப்போடு ஏற்ற விஷ்ணு

வந்துருக்கலாம்தான்!” என்று இழுத்தவன்போன வேலை முடிஞ்சிருச்சு இனி அங்க எதுக்கு வெட்டிய இருக்கணும்னு வந்துட்டேன்என்று அலட்டி கொள்ள

கொழுப்பு ஜாஸ்தியாயிருச்சுன்னு நினைக்கிறேன் என்னோட தங்கச்சிகிட்ட சொல்லி குறைக்க சொல்றேன்என்று மிரட்டுவது போல பாவனை செய்தவன் தன் வேலையை தொடங்க 

சரி யாருக்கு குழி வெட்டுறஎன்றதும்டேய்என்று பதறியவன்நல்ல நாள் அதுவுமா என்னடா பேசுற? எருமை ஏதோ கம்பு நட்டு வைக்கணுமாம் இப்போ தான் அப்பா வந்து சொல்லிட்டு போனாரு அதுக்கு தான் தோண்டிட்டு இருக்கேன்என்றவன் வேலையை முடித்து கையில் ஒட்டிய மண்ணை தட்டிவிட்டு கொண்டே எழுந்து வாளியில் இருந்த நீரை கொண்டு கையை கழுவிட்டு திரும்ப 

பந்தக்கால் நடவேண்டி பெரியவர்கள் அனைவரும் அவ்விடம் வந்தனர் மூங்கில் கம்பிற்கு சந்தன குங்குமம் வைத்து ஓரத்தில் மாவிலை கட்டி புவியரசன் கொண்டு வந்து கொடுக்கவும் தம்பதியர் நால்வரும் சேர்த்து தோண்டிய குழிக்குள் கம்பை நட்டு மண்ணை போட்டு மூடிவிட்டு பால் ஊற்றி திருமணம் எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று பூஜை செய்து மனமார வேண்டி கொண்டனர் 

அதோ இதோ என்று மிஞ்சி இருந்த இரண்டு நாட்களும் சடுதியில் நகர்ந்து அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த விஷ்ணு வைதேகியின் திருமண வைபோகம் இனிதாய் அரங்கேறியது பாவையின் கழுத்தில் பொன் தாலியை பூட்டியவன் நெற்றியிலும் வகுடிலும் திலகமிட்டு அவள் முகத்தை காண விழிகளில் நீர் திரண்டு உருண்டோட தயராய் இருந்ததுதேவிம்மா என்னடாஎன்று தன் கைகுட்டையால் அவள் கண்ணீரை துடைக்க முற்பட்டவனை வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியவள் வைஷாலியிடம் இருந்து கைக்குட்டை வாங்கி துடைத்து கொள்ள 

விஷ்ணுவின் முகம் வாடி போனதுஇன்னும் கோபமா தான் இருக்கா?” என்று ஏக்க மூச்சை வெளியிட்டவன் அடுத்தடுத்து நடக்கவேண்டிய சம்பிரதாயங்களில் கவனத்தை செலுத்தினான் திருமணத்தை காண வேண்டி துவாரகாவிற்கு முகம் பார்த்து பேசும் அழைப்பை விடுத்திருந்தான் விஜயன் 

அலைபேசி வழியே புன்னைகை முகமாய்வாழ்த்துக்கள் விஷ்ணுஎன்றவன்குடும்பஸ்த்தன் ஆகிட்ட இனி நிறைய பொறுப்புகள் இருக்கு உனக்கு நிறைய சண்டைகள் சாமாதானங்கள் சமாளிப்புகள் எல்லாம் பாக்க வேண்டியது வரும் உன்னோட போலீஸ் பவர அங்க காட்ட முடியாதுஎன்று கேலி பேச 

ப்ச் போடா ஆல்ரெடி சமாதனம் பண்ண தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஆனா பலன் தான் இல்லஎன்று பாவமாக விஷ்ணு கூற

நீ பேசுன பேச்சுக்கு இந்த அளவுக்கு கூட கோபம் வரலைன்னா எப்டிடா சமாதனம் பண்ணு நீ எவ்ளோவுக்கெவ்ளோ இறங்கி போரயோ அதுக்குண்டான பலன் கிடைக்கும் முயற்சி திருவினை ஆக்கும் மச்சான்என்றவனின் விழிகள் விஷ்ணுவின் பின்னால்  அலைபாய

அவன் பார்வையின் பொருள் உணர்ந்து கொண்டவன்டேய் நீ தேடுற ஆளு வைதேகி பக்கத்துல இருக்காஎன்று அலைபேசியை சற்று திருப்ப அடர் நீலமும் இளஞ்சிவப்பு நிறமும் கலந்து தங்கநிற ஜரிகைகளால் குறுக்கும் நெடுக்கும் கட்டங்கள் வேயப்பட்ட பட்டு புடவையில் அதீத ஒப்பனையில்லாது அளவான ஒப்பனையில் மனம் விட்டு சஞ்சளாவிடம் பேசி சிரித்து கொண்டிருந்தவளின் பக்கவாட்டு தோற்றத்தை கண்டவனுக்கு இமைக்கவும் தோன்றவில்லை தான் இருந்தவரையில் அவள் சிரிப்பை காணாதவன் காண கிடைக்காத ஒன்றை போல மெய்மறந்து பார்த்து கொண்டிருக்க 

ஏதோ ஒரு உள்ளுணர்வின் உந்துதலால் திரும்பி பார்த்தவள் விஷ்ணுவின் அலைபேசியில் தெரிந்தவனை கண்டு கோபம் மூண்டது சட்டென முகத்தை திருப்பி கொண்டு நகர்ந்துவிட்டவளின் செயலை இதழ்விரியா சிரிப்புடன் ரசித்தவன்சரிடா விஷ்ணு சென்னை வந்ததும் சொல்லு வறேன்என்றவன் வைதேகியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட 

கைலாசத்தை இடமாற்றம் செய்த பின் சென்னை ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்ட சடகோபனை அழைத்து வந்தான் துவாரகேஷ்  “வாழ்த்துக்கள் விஷ்ணுஎன்று பூங்கொத்தை நீட்ட

ரொம்ப தங்க்ஸ் சார் இவ்ளோ தூரம் வந்ததுக்கு நீங்க வருவீங்கன்னு எதிர்பாக்கலைஎன்றவன் அருகில் இருந்தவளை அறிமுகம் செய்து வைக்க சில நிமிடங்கள் பேசிவிட்டு வேலை உள்ளதாக கூறி சடகோபன் விடைபெற்று சென்றுவிட வந்த உறவுகளும் ஒவ்வொருவராய் கலைய தொடங்கினர் 

திருமணத்தை முடித்து கொண்டு உறவுகளின் மனம் கோணாமல் விருந்து உபசரிப்புகளை பார்த்து பார்த்து செய்து திருப்தியுடன் அனுப்பி வைத்துவிட்டு மண்டபத்திலுருந்து  இல்லம் வந்து சேர மணி பன்னிரெண்டை கடந்திருந்தது, வைதேகி விஷ்ணு இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பின் பால்பழம் கொடுக்கும் சடங்குகளை செய்து முடித்து அதன் பின் வைதேகியின் இல்லம் சென்றுவிட்டு வர மணி மூன்று என்று காட்டியது 

பரமசிவம் மூத்தமகனை அழைத்து கொண்டு டவுன் வரை சென்றுவிட அன்றைய களைப்பின் மிகுதியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் துவாராக, பழக்கப்பட்ட இடம் என்பதால் எந்தவித தயக்கமோ கூச்சமோ எழவில்லை வைதேகிக்கு கூடத்தில் அமர்ந்து யோசனையில் உழன்று கொண்டிருந்தவனை கண்டும் காணாது போலவே கலகலப்பாக இல்லையென்றாலும் ஏதாவது ஓரிரு வார்த்தை பேசி சிரித்தபடி வலம் வந்தவளுக்கு மாலை நேரம் நெருங்க நெருங்க ஒருவித பதட்டம் தொற்றி கொண்டது 

இருள் மயங்கும் வேளையில் பெரியவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து திருமணத்திற்கு வந்த உறவுகள் வராத உறவுகள் பற்றி கதை அளந்து கொண்டிருக்க அவர்களுடன் வைதேகியும் அமர்ந்து கொண்டாள், அறையில் அமர்ந்து அன்றைய நிகழ்வை பற்றியும் சடகோபனின் வருகையை பற்றி துவாரகேஷ் சிலாகித்து பேசிக்கொண்டிருக்க விஷ்ணு தலையாட்டினானே தவிர அவன் பேசும் வார்த்தைகள் விஷ்ணுவின் செவிகளை எட்டவில்லை சிந்தையெல்லாம் நிறைந்தவளை எவ்வாறு சாமதனம் செய்வது என்பதை பற்றி சிந்தித்து  கொண்டிருந்தான்  

தமயந்திக்கு உதவியாக சஞ்சளாவும் வைஷாலியும் உதவுகிறேன் என்ற பெயரில் தொல்லை செய்யநீங்க எதுவும் பண்ண வேணாம் நானே பாத்துகிறேன்என்றவள் இருவரையும் சமையல் அறையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு வேலைகளை கவனிக்க தொடங்கியவள் சற்று நேரத்தில் சமையலை முடித்து விட்டு அனைவரையும் அழைக்க அன்றைய களைப்பில் நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்து கொண்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்

பரமசிவம் எப்போதும் போல கூடத்தில் பாய்விரித்தவர் இளையமகன் மட்டும் தனித்து அமர்ந்திருப்பதை கண்டுஅன்னம்என்று குரல் கொடுக்கவும் ஓடி வந்தவர்என்னங்க ஏதாவது வேணுமா?”

எனக்கு எதுவும் வேணா அவன் மட்டும் தனியா இருக்கான் உள்ள போக சொல்ல வேண்டியதானஎன்று அதற்கும் கோபத்தை காட்ட 

எதுக்கு இப்டி எல்லாத்துக்கும் கோப்படுறீக உங்க புள்ள தான நீங்க போய் சொன்னா என்னவாம் எல்லாத்துக்கும் தூது சொல்ல அனுப்புறதுஎன்று முகவாயை தோளில் இடித்து கொண்டு சென்றவர் விஷ்ணுவை அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட

யோசனையுடன் அறைக்குள் சென்றான் விஷ்ணு மலர்களை கொண்டு மிதமான அளவில் அலங்கரிக்கப்பட்ட அறையை பார்வையால் அளந்தவன் இன்னும் பிற பொருட்களை கண்டு பெருமூச்சை வெளியிட்டு அறையில் இருக்க மனமில்லாமல் மாடிக்கு சென்றுவிட்டான்

கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிற்றை தடவி தடவி மெய்யா பொய்யா என்று பார்த்து கொண்டிருந்தவளுக்கு வரையறுக்க முடியாத உணர்வு குவியல்கள் பிரவாகம் எடுக்க விழிகள் பனித்ததுஇந்த உறவை பிணைத்து கொள்ள எத்தனை சங்கடங்கள் வேதனைகள் வலிகள்என்று எண்ணியவளின் இதழில் நிறைவான புன்னகை துளிர்விட 

என்ன வைத்தி ரெடியா?” என்று உள்ளே வந்த தமயந்தி நெருக்கமாய் கட்டியிருந்த  மல்லிகையை தலையில் வைத்தவள் பூஜை அறை அழைத்து சென்று இறைவனை வணங்கிவிட்டு அறைக்குள் செல்லுமாறு பணித்துவிட்டு சென்றாள்

தயக்கத்துடன் அறைக்குள் சென்றவள் அறையில் அவனை காணாது மேலே இருப்பார் என்று யூக்கிது கொண்டு மாடிக்கு செல்ல மழை தூரல்  ஒவ்வொன்றாய்  தூறி கொண்டிருந்தது மண்வாசணையை நிரப்பி வந்த குளிர்காற்று தேகத்தை தழுவி மனதை இதமாக்க வாழ்வில் நடந்த  சுவாரஷ்யமான தருணங்களை அசைபோட்டபடி ரசித்து சிரித்து கொண்டிருந்தவன் கொலுசின் அரவம் உணர்ந்து திரும்பி பாரமாலே வருவது யார் என்று அறிந்து கொண்டு முதுகு காட்டி நின்றான்

வந்தவள் அழைக்கவா வேண்டாமா என்று தயங்கி நின்றுவிணுஎன்று அழைக்க

திரும்பி பார்த்தவன்என்ன தேவிம்மா” 

தூங்காமா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க மழை வர மாதிரி இருக்குஎன்று அருகில் வந்தவள்நீங்க ரூம்ல இல்ல அதான் மாடியில இருப்பிங்கன்னு தேடி வந்தேன்என்று கூற

தூக்கம் வரலஎன்றவன்சாரி தேவிம்மா கோபத்துல அவசரப்பட்டு அடிச்சிட்டேன் ரொம்ப வலிச்சதா?” என்று பரிவாக கேட்க

இல்லை என்று தலையாட்டியவளின் விழிகள் சட்டென கலங்கியதுநீங்க அடிச்சது கூட வலிக்களை மாமா என்ன பிடிச்சிருந்தும் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துனிங்களே அதை தான் என்னால தாங்கிக்க முடியலை! எப்டி உங்களால அவ்ளோ கடுமையா பேச முடிஞ்சதுன்னு எனக்கு இப்போவும் ஆச்சர்யமா இருக்குஎன்று குரல் கமற பேசியவள்

நீங்க பேசுனதை கூட கொஞ்ச நாள்ல நா மறந்துருவேன் ஆனா உண்மை என்னனு என்கிட்ட சொல்லாம மறைச்சிங்களே அதை என்னைக்கும் என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது மாமா, கஷ்டத்தை மட்டும் நீங்க அனுபவிச்சிட்டு சந்தோஷத்தை எனக்கு கொடுத்துருக்கிங்க கஷ்டத்துலயும் பங்கெடுத்துகிறது தானே இந்த உறவுக்குண்டான அர்த்தம் ஆனாஅதை நீங்க எனக்கு கொடுக்கவே இல்லயே மாமா

இவ்ளோ பெரிய உண்மைய மறைச்ச நீங்க இனி வாழ போற வாழ்க்கையில இன்னும் என்னென்ன மறைப்பிங்க!, நா கஷ்டப்படுவேன்னு மட்டும் சாக்கு சொல்லாதீங்க மாமா நீங்க வேதனைய அனுபவிச்ச நேரத்துல உங்களுக்கு துணையா ஆறுதலா இருக்க விடாம பண்ணிட்டீங்களே? ஒருவேளை கல்யாணம் முடிஞ்ச பிறகு விஷயம் தெரிஞ்சிருந்தா என்ன விட்டுட்டு போயிருப்பிங்களா?” என்று ஆதங்காத்துடன் பேசி கொண்டே வந்தவளின் குரல் கடைசி வரிகளில் உடைந்து போக தேம்பி அழ தொடங்கினாள் முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை அவளால்

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் நிரம்பி வழிந்த வலியை கண்டு அவன் முகம் சொல்லாவென வேதனையை அப்பி கொள்ளதேவிம்மா..” என்று அணைத்து கொண்டவன்இல்லடா உன்கிட்ட மறைக்கணும்னு நா நினைக்கல உண்மை தெரிஞ்சா நீ உடைஞ்சு போயிருவன்னு தான் சொல்லாம விட்டேன் உனக்கு கல்யாணம் பண்ணி வச்ச பிறகு எல்லார்கிட்டயும் உண்மைய சொல்லலாம்னு இருந்தேன்டா

நீங்க எல்லாரும் என்மேல வச்ச பாசம் தான் தேவிம்மா என்ன சொல்ல விடாமா தடுத்தது உங்ககிட்ட சொல்லாம மறைச்சது தானே உனக்கு தெரியும் நா வேதனைப்பட்டது உனக்கு தெரியாதே? ஒவ்வொரு நாளும் உன்ன பாக்கும் போதெல்லாம் செத்து பிழைச்சேன் தெரியுமா? நீ கஷ்டப்படுறத என்னால பாக்க முடியாதுடா அந்த அளவுக்கு உன்ன நேசிக்கிறேன்என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது 

அழுகையின் ஊடேஇனி என்ன தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டீங்க தானே மாமாஎன்று குரலில் தவிப்பை தேக்கி கொண்டு கேட்க

இனி நமக்குள்ள பிரிவே இல்லடா இனி யார் நினைச்சாலும் நம்மள பிரிக்க முடியாதுஎன்றவன் இத்தனை நாள் தான் பட்ட துயரம் வேதனை தாபம் தவிப்பு என அனைத்திற்கும் வடிகலாய் எண்ணிக்கையில்லா முத்தங்களை நிரப்பி அவளிடம் தஞ்சம் புகுந்து கொண்டான் ஆடவன்

தூரலாய் தூவிய வானம் பெரும் சத்தத்தோடு பூமகளை தொட்டு காதல் மொழி பேச கவிழ்ந்து கொண்ட விழிகளிலிருந்து சுரந்த உப்பு நீரும் மழைநீரும் சேர்ந்து அதுவரை அவளிடத்தில் இருந்த கோபம் மன வருத்தம் அனைத்தையும் கரைத்து காணமல் போக செய்தது 

அவன் ஸ்பரிசத்தில் புலன்கள் அனைத்தும் மரத்து போக இமைகள் மூடி நெஞ்சில் சாய்ந்தபடி அணைத்திருந்தவளை மழையின் தீவிரம் உணர்ந்து மனமில்லாமல் விலக்கி நிறுத்தியவன் பெண்ணவளை கரங்களில் ஏந்தி கொண்டான் 

அவன் செயலில் திடுக்கிட்டு மோனநிலை கலைத்தவள்மாமா என்ன பண்றிங்க?”என்று திகைப்பு நாணமும் இழைந்த குரலில் கேட்க

மழை பெய்யிது தேவிம்மா கீழ இறங்கும் போது வழுக்கி விழுதுட்டன்னா அதான் மாமா தூக்கிகிட்டு போறேன்என்றவன் காதில் ஏதோ ரகசியம் பேச அவன் கண்களில் தெரிந்த கள்ள சிரிப்பும் ரகசியமாய் காதில் கிசுகிசுத்த வார்த்தைகளும் அவளுள் ஏதேதோ செய்ய கன்ன கதுப்புகளில் சிவப்பேறுவதை தடுக்கவியலாது அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள் பெண்ணவள்

தொடரும்

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலா

பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே

Advertisement