Advertisement

திருச்சி கமிஷ்னர் அலுவலகம் நீண்ட நாட்களுக்கு பிறகான காக்கி உடையில் கம்பிரமாய் உள்ளே நுழைந்தவனை கண்டதும் முகத்தில் சிறு புன்னகை அப்பி கொள்ளவா விஜி உக்காருஎன்று எதிர் இருக்கையை காட்டினார் தேவதாஸ்

இல்ல சார் பரவாயில்ல அவசரமா கிளம்பி வர சொன்னிங்க என்ன விஷயம் சார்என்றான் விறைப்பாய் நின்றவாறு

அவன் விறைப்பை கண்டு சன்னமாய் சிரித்துகொண்டவர்உக்காரு விஜி உன்கிட்ட பேச தான் கூப்ட்டேன் பேசி முடிக்கிற வரைக்கும் இப்டி நின்னுட்டு இருக்க முடியாது அதான் சொல்றேன் உக்காருஎன்று கட்டளையாய் கூறவும் மறுத்து பேச இயலாமல் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தவனின் முகம் கடுப்பை பூசி இருந்தது அப்பட்டமாய் தெரிய

அவன் புறம் தண்ணீர் கிளாஸை நகர்த்தியவர்ரொம்ப கோபமா இருக்க கொஞ்சம் தண்ணி குடி கோபம் குறையும்என்று கூறியவரை ஆழமான பார்வை பார்த்தவன் கிளாஸை எடுத்து தண்ணீரை மடமடவென குடித்து முடித்தான் 

தாகத்திற்காக இல்லையென்றாலும் விஷயத்தை ஜீரணித்து கொள்ள தண்ணீர் அவசியம் தேவைப்பட்டது அவனுக்கு, திருச்சி வந்திறங்கியதுமே கான்ஸ்டபிள் ராமர் கூறிய விஷயம் அத்தனை கோபத்தை விளைவிக்க வேகமாக கிளம்பி கமிஷ்னரை காண வந்தவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டால் சங்கடமாக போய் விடும் எத்தனையோ உதவிகளை செய்திருக்கும் மனிதர் தனக்காக பல இடங்களில் பரிந்து பேசி இருப்பவர் எவனோ ஒருவன் செய்த தவறுக்கு அவர் மேல் கோபத்தை காண்பிப்பது அத்தனை நன்றாயிராது அவர் என்ன செய்வார் மேலிடத்தில் இருந்து உந்துதல்என்று மனதை கட்டுப்படுத்தி கொண்டு பார்வையை டேபிளின் மேல் நிலைகுத்திய வண்ணம் அமர்ந்திருந்தவனை கண்டு தேவதாஸே தொண்டையை செருமி கொண்டு பேச தொடங்கினார் 

இங்க பாரு விஜி உனக்கு புரியாதது எதுவும் இல்ல? உனக்கு எல்லாமே தெரியும் அப்றம் ஏன் கோபப்படுற நீ கோபப்படுற அளவுக்கு இப்போ என்ன நடந்து போச்சு ஆத்திரப்படுறதை விட்டுட்டு அறிவோட யோசி மேன்என்று  தோழனாய் அவன் மீது கொண்ட அளவற்ற அக்கறையில் கூற

கோபப்பட என்ன இருக்கா?”, ஆவேசமாக எழுந்து கொண்டவன்என்ன சார் நீங்களே இப்டி பேசுறீங்க உங்களுக்கு நடந்தது என்னன்னு தெரியும்? தெரிஞ்சும் இப்டி பேசுறீங்க அவன் பண்ண தப்புக்கு பிடிச்சதும் தப்புச்சு போக முயற்சி பண்ணான்னு என்கவுண்டர் பண்ணிருக்கணும் அதை செய்யாம நீங்க சொன்ன ஒரு வார்த்ததைக்காக அவன கோர்டுல புரடியூஸ் பண்ணேன் நியாயமா அவனுக்கு தண்டனை கிடைக்கும்னு, ஆனா! என்ன ஆச்சு இப்போ கேஸே இல்லாம பண்ணிட்டான்

 தப்பு பண்ணது அந்த பொறுக்கி தண்டனை அந்த குடும்பத்துக்கா! என்ன சார் நியாயம்! அந்த குடும்பம் என்ன சார் பாவம் பண்ணுச்சு அவங்க வேதனைய யாராலையும் எதை கொண்டும் ஈடுபடுத்த முடியாது சார் நியாயம் கிடைச்சா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு தான் இவ்ளோ தூரம் அந்த குடும்பத்துக்கு உதவி பண்ணேன் இப்போ எல்லாம் வீணா போச்சு கடைசியில அவங்க வாயாலேயே எதுவுமே நடக்கலைன்னு சொல்ல வச்சுட்டானுங்களே சார்என்று தன் இயலாமையை எண்ணி டேபிள் மேல் குத்தியவன்

எப்டி சார்!, கோபப்பட என்ன இருக்குன்னு சாதரணமா கேக்குறிங்க தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தா தான் தெரியும் உங்கள சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சார்நாமா மக்களுக்கு சர்விஸ் பண்றோமா இல்ல பணமுதலைகளுக்கா?பெரிய இடத்து பையன்னா என்ன தப்பு வேணாலும் பண்ணலாமா? இன்னைக்கு அந்த குடும்பம் அசிங்கப்பட்டு அவமானபட்டு நிக்கிது அதுக்கெல்லாம் அந்த ராஸ்கல் தான் காரணம், அப்பவே அந்த பொண்ணோட அப்பா சொன்னாங்க கேஸ் வேணாம் நாங்க இப்டியே விலகிக்கிறோம் கோர்ட் கேஸ்ன்னு அலைய முடியாது அவ்ளோ வசதியில்லன்னு எவ்வளவோ எடுத்து சொன்னாங்க நான் தான் அந்த குடும்பத்தை கன்வைன்ஸ் பண்ணி கேஸ் பைல் பண்ண சொன்னேன் இப்போ அவங்க சொன்னது உண்மையாகிருச்சில்ல சார்என்று காரம் குறையாமல் பேசியவனை அமைதிப்படுத்த வேண்டி

விஜி இவ்ளோ கோபம் ஆகாது கன்ட்ரோல் பண்ணு மேன் எல்லாம் எனக்கு தெரியும் ஆனா நம்மலாள எதுவும் பண்ண முடியாதுஎன்று அவனை அடக்க முற்பட்டவரின் முயற்சி தோல்வியை தழுவியது

சார் நா நியாயமா பேசுறது உங்களுக்கு கோபமா தெரியிது அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம் தான் இருக்கணும் இங்க அப்டியில்லயே? அரசனுக்கு மட்டும் தான் சட்டம் சாதகமா இருக்கு ஆண்டிக்கு இல்லஎன்று ஆற்றாமையோடு கூறியவன் எல்லாம் முடிந்து விட்டது இனி விளக்கி என்ன ஆகப்போகிறது என்று எண்ணியவனின் மனம் சோர்ந்து போனது

ஓகே சார் எதுக்கு என்ன வர சொன்னிங்க காரணம் தெரிஞ்சா நா கிளம்புவேன்என்று உணர்ச்சிகள் அற்ற குரலில் கூறினாலும் அதில் இருந்த காட்டம் தேவதாசுக்கு நன்றாகவே தெரிந்தது 

ம் ஓகே விஜி இந்தா உன்னோட டிரான்ஸ்பர் ஆர்டர் ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கிருக்கேன் உன்ன டிஸ்மிஸ் பண்ணனும்னு பேசிட்டு இருந்தாங்க நான் தான் அதெல்லாம் வேணாம்னு மேலிடத்துல பேசி ஒருவழியா உன்ன டிஸ்மிஸ் பண்ண விடாம  டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்துருக்கேன் போற இடத்துலயாவது கோபத்தை கன்ட்ரோல் பண்ணு மேன் 

அவசரபட்டு எதையாவது பண்ணிட்டு இருக்காத சரியா? இதை உன்னோட மேலதிகாரியா சொல்லல ஒரு வெல்விசரா சொல்றேன், எங்கயும் கோபத்தை காட்டாத அறிவை யூஸ் பண்ணு ஆத்திரப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல யோசிச்சு எதையும் பண்ணு இந்த இடத்துக்கு வர்றதுக்கு நீ என்னெல்லாம் கஷ்டத்தை அனுபவிச்சன்றத கொஞ்சம் நினைச்சு பாருஎன்று அறிவுரை நிகழ்த்தியவருக்கு அமைதியாய் செவிமடுத்து நின்றிருந்தான் விஜயன்

அடிமட்டத்துல இருந்து வந்தவன் நீ, உன்னோட கோபம் நியாயமானது தான் ஆனா அத காட்ட வேண்டிய இடம் நேரம் தான் தப்பு! பெரிய இடத்து பையன் தப்பு பண்ணான்னா அதுக்கு அவனுக்கு மட்டும் தண்டனை கொடுக்க கூடாது அந்த மாதிரி வளர்த்துக்காங்களே அவன பெத்தவங்க, அவங்களுக்கு சேத்து தான் தண்டனை கொடுக்கணும் யோசிச்சு எதையும் செய்ய பாரு விஜி, அடுத்த தடவை இந்த மாதிரி நடக்காது அதுக்கு நா பொறுப்புன்னு சொல்லி தான் மறுபடியும் உன்ன வேலையில சேத்துருக்கேன் என்னோட பேச்சுக்கு உன்கிட்ட மதிப்பு இருக்கும்னு நினைக்கிறேன்என்று கண்டிப்புடன் பேசி முடித்தவர் விஷயம் இது தான் என்று முடித்துவிட்டுநீ போலாம்என்க

அதுவரை அமைதிகாத்தவன் திருவாய் மலர்ந்தான்என்மேல நம்பிக்கை வச்சு எனக்கு போஸ்டிங் வாங்கி கொடுத்துருக்கிங்க கண்டிப்பா உங்க நம்பிகைய காப்பாத்துவேன் சார் ஆனா தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும்!, உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்? எப்டி என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நா பாத்துகிறேன் சார் உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வராது ரொம்ப நன்றி சார் இதுவரைக்கும் எனக்கு வழிகாட்டுதலா இருந்துருக்கிங்கஎன்று விறைப்பாய் சல்யூட் அடித்து விட்டு திருப்பியவனை

ஒரு நிமிஷம் விஜிஎன்றவர்இடம் மாறி போனாலும் எப்பவும் உனக்கு வழிகாட்டுத்தலா இருப்பேன்என்று புன்னகை அரும்ப கூறியவர் “மிஸ் வைஷாலி வேலைய விட்டு நின்னுட்டாங்க உனக்கு தெரியுமா விஜி?” என்றவர் அவன் முகத்தை ஆராய அதிர்ச்சியின் ரேகைகைகள் அப்பட்டமாய் தெரிந்தது 

ரீசன் கேட்டதுக்கு வேலை பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க ஆனா.. எனக்கு அப்டி தோணல அவங்க இன்வால்வ்மென்ட்ட நானும் பாத்துருக்கேன் எதுக்கு இப்டி ஒரு முடிவெடுதாங்கன்னு தான் தெரியலை? நானும் ஏன் எதுக்குன்னு துருவி கேக்கல என்ன ஆச்சு மேன் மறுபடியும் உங்க டாம் அண்ட் ஜெர்ரி சண்டைய ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று புன்னகையுடன் கேட்க

புருவ மத்தியில் முடிச்சிகள் விழ யோசனையில் உழன்றவன் தேவதாஸின் கடைசி வரியில்அப்டியெல்லாம் எதுவும் இல்ல சார் அவளுக்கு மேரேஜ்ன்னு கேள்விப்பட்டேன் ஒருவேளை அதனால கூட இருக்கலாம் ஓகே சார் நா கிளம்புறேன்என்று புன்னைகையுடன் கூறிவிட்டு வெளியே வந்தவனுக்கு என்ன செய்வது என புரியவில்லை உள்ளம் கொதித்தது 

என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கா ஒரு வார்த்தைக்கு கூட என்கிட்ட சொல்லல அமுக்குனியாட்டம் ஒண்ணுமே நடக்காத மாதிரி இருந்தாளேஎன்று முணுமுணுத்தவன் வைஷாலிக்கு அழைப்பு விடுக்க அழைப்பு தோல்வியை ஏற்றது 

ப்ச் பிளாக் பண்ணி வச்சிருக்கா ச்சே! அந்த அளவுக்கு என்மேல கோபமா? இருக்கட்டும் பாத்துகிறேன்என்று கறுவியவன் விஷ்ணுவிற்கு அழைப்பு விடுக்க சென்னையில் இருப்பதாக கூறவும் பணியிடை மாற்றத்தை பற்றி கூறிவிட்டு துவாரகாவிற்கு அழைப்பு விடுத்தான் 

சொல்லு விஜி என்னாச்சு வேலை புட்டுகிச்சாஎன்று எடுத்த எடுப்பிலேயே கேலி பேச

ப்ச் நீ வேற ஏண்டா கடுப்பேத்துற நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்களை வேற ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்கஎன்றவன்சரி வைசு எங்க இருக்கா அவகிட்ட போன் கொடு கொஞ்சம் பேசணும்” 

அவ வீட்டுல இருக்காடா நா வெளிய கொஞ்சம் வேலையா வந்துருக்கேன் போனதும் உனக்கு கால் பண்ண சொல்றேன்என்றவன் ஒருசில விஷயங்களை பேசிவிட்டு வைத்துவிட

அடுத்த வேலை என்னவென்பதை சிந்தித்தவன்  பாதிக்கப்பட்ட பெண்ணின் இல்லத்திற்கு சென்றான் வாசல் வரை வந்தவனின் கால்கள் உள்ளே செல்ல தயங்கி நின்றது நியாயம் வாங்கி கொடுக்கிறேன் என்று சத்திய பிரமாணம் போல அன்று அத்தனை உறுதியாய் கூறிவிட்டு இன்று எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்களின் முன்னால் சென்று நிற்பது என்று வாசலில் நின்று கொண்டிருக்க 

உள்ளே இருந்து எட்டி பார்த்த சிறுமிஅப்பா அப்பா..” என்று கூக்குரல் இட்டு கொண்டே தன் தகப்பனை அழைத்து வந்தாள், வாசலில் நின்றிருந்தவனை கண்டதும் முகம் வாடி போனது பெண்ணின் தகப்பனுக்குவாங்க சார்என்று சுரத்தே இல்லாமல் உள்ளே அழைத்தவர் உள்ளே வந்தவனுக்கு நாற்காலியை எடுத்து போட்டு அமர சொல்ல அவரின் செயல்கள் அவனை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது 

என்ன மன்னிச்சிருங்க முரளிஎன்றவனை 

எதுக்கு சார் மன்னிப்பு கேக்குறிங்க நீங்க என்ன தப்பு பண்ணிங்கஎன்றவன்ராஜி சாருக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாம்மாஎன்று சமையல் அறையில் இருந்த மனைவியிடம் குரல் கொடுத்துவிட்டு திரும்ப

நா பெரிய தப்பு பண்ணிட்டேன் நீங்க சொன்னது தான் சரி நியாயம் உங்களுக்கு சாதகமா கிடைக்காது உங்க கஷ்டம் உங்களோட போகட்டும் மிஞ்சி இருக்குற மானமாவது இருக்கட்டும்னு சின்ன பிள்ளைக்கு எடுத்து சொல்ற மாதிரி அன்னைக்கு அவ்ளோ தூரம் சொன்னிங்க ஆனாநான் தான் என்னோட அவசர புத்தியை காட்டிட்டேன், உங்களுக்கு இருந்த மனவேதனை பத்தாதுன்னு இப்போ ரொம்ப பெரிய மனவேதனைய கொடுத்துட்டேன் முரளிஎன்று வருத்தத்துடன் கூறியவன் குற்றவுணர்ச்சியில் தலையை தாழ்த்தி கொண்டான்

ஏதோ ஒரு நம்பிக்கையின் ஒளி முரளியின் முகத்தில் துளிர்விட்டு கொண்டு தான் இருந்தது அதே துளிர்ப்புடன்இல்ல சார் வாழ்க்கை இப்போ தான் முன்ன விட தைரியமா வாழணும்னு கத்து கொடுத்துருக்கு நாங்க ஏழையா இருந்தாலும் கோழை இல்ல சார் இந்த வலிய எங்களால மறக்க முடியாது தான்! ஆனா.. இப்டியே முடங்கி போயிர மாட்டோம் என்னோட பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு அவளால இன்னும் சரியா புரிஞ்சுக்க முடியலை ஆனா அவளுக்கு தைரியமா வாழ கத்து கொடுப்பேன் வாழ்க்கையில எதிர்நிச்சல் போட வேண்டிய தருணங்கள் நிறைய இருக்கு சார் உயிர்போட வாழ வேண்டிய காலங்கள் இன்னும் பசுமையா  இருக்கு நடந்ததை எடுத்து சொல்லி புரியவைக்கிறேன்னு அவள முடமாக்க விரும்பலை  காலம் எல்லாத்தையும் மாத்தும் அந்த நம்பிக்கை எங்க ரெண்டு பேருக்கும் இருக்குஎன்னும் போதே கையில் மோர் டம்ளருடன் வந்துவிட்டார் ராஜி 

இந்தாங்க சார்என்று நீட்டியவரை நிமிர்ந்து பார்த்தான் விஜயன் அந்த தாயின் முகத்தில் குழந்தையின் எதிர்கால வாழ்வை பற்றிய வேதனை அப்பட்டமாய் தெரிய தான் தானே காரணம் என்று எண்ணியவன் மேலும் குற்றவுணர்ச்சியில் தவித்து போனான்

அவனின் உணர்வுகள் அவர்கள் இருவருக்கும் புரியாமல் இல்லைகுடிங்க சார்என்று ஊக்கியவன்வேற ஊருல வேலை கிடைச்சிருக்கு நாங்க நாளைக்கு கிளம்புறோம் எங்களுக்கு உதவ முன் வந்ததுக்கு ரொம்ப நன்றி சார் யாரும் இவ்ளோ தூரம் மெனக்கெட மாட்டாங்க நீங்க பண்ணிருக்கிங்க! உங்க மேல எந்த தப்பும் இல்ல சார் நியாயம் வாங்கி கொடுக்கணும்னு தானே கேஸ் பைல் பண்ணிங்க அது அவங்களுக்கு சாதகமா போச்சு நீங்க தப்பு பண்ணிட்டதா நினைக்க வேணாம் சார்என்று அவன் மனதின் குற்றவுணர்வினை தவிர்க்கும் விதமாய் கூற

அவர்களை ஆறுதல் படுத்துகிறேன் பேர்வழி என்று மேலும் காயப்படுத்தாமல் டம்ளரில் இருந்த மோரை குடித்து முடித்தவன் தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் பாரதியின் புத்தகத்தை எடுத்து வந்து அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமியிடம் நீட்டி

எப்பவும் தைரியமா இருக்கணும் தப்புன்னு நம்ம மனசுக்கு படாத எந்த காரியத்தை செய்யும் போதும் எதுக்கும் யாரையும் பார்த்து பயம் கொள்ள கூடாது, உனக்கு தைரியம் கொடுக்க நீ சோர்ந்து போகும் போது தோள் கொடுக்க இந்த புத்தகம் உனக்கு உதவியா இருக்கும் உன்னோட அப்பா அம்மாவும் உனக்கு துணையா இருப்பாங்கஎன்று கூறி புத்தகத்தை குழந்தையின் கையில் திணித்துவிட்டு கணத்த மனதுடன் விடைபெற்று கொண்டு கிளம்பினான் விஜயன் 

இரண்டு நாட்கள் ஆகும் என்றுவிட்டு சென்ற விஷ்ணு திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மதுரை வந்து சேர்ந்தான்ஏண்டா ரெண்டு நா ஆகும்ண்டு சொல்லிட்டு போனவன் இப்போ வார இது தான் ரெண்டு நா கணக்கா உனக்கு அந்த மனுஷனுக்கு பதில் சொல்லி மாள முடியலை எப்ப வருவான் எப்ப வருவான்னு கேட்டு நச்சரிச்சுட்டாருஎன்று வந்ததும் வராததுமாக மகனிடம் புராணம் பாடியவர்சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா மஞ்ச குத்துக்கு மாமா வீட்டுல இருந்து ஆளுங்க வந்துருவாங்கஎன்று கூறிவிட்டு நகர்ந்துவிட

அறைக்கு சென்றவன் குளித்து முடித்து தயராகி வெளிய வர இந்திராணியும் பெருமாள்சாமியும் இன்னும் சில உறவுகளும் கூடத்தில் அமர்ந்துருந்து பேசி கொண்டிருந்தனர் விஷ்ணுவை கண்டதும்வாங்க மாப்பிள்ளைஎன்று எழுந்த மாமனாரை கண்டு தலையசைத்து புன்னகை புரிந்தவன் துவாரகாவை தேடி வெளியே செல்ல வந்தவர்களுக்கு தமயந்தி காபி கொடுத்து கொண்டிருந்தாள் வைஷாலியும் சஞ்சளாவும் வைதேகியை காண  அவளது இல்லம் சென்றிருந்தனர் 

Advertisement