Advertisement

பொழுது புலர்ந்தும் புலரா  வேளையிலே உறக்கம் கலைந்து எழுந்தவள் அவன் அறையில் விளக்கேறிவதை கண்டு அறைக்கு செல்ல நாற்காலியில் அமர்ந்தவாறே டேபிள் மேல் தலைவைத்து உறங்கி கொண்டிருந்தான் விஷ்ணு

ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் மனம் கனிவு கொண்டது டேபிள் மேல் இருந்த பொருட்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவன் உறக்கம் கலைந்துவிடாத படி தலைக்கு தலையணையை எடுத்து வைத்து விட்டு திரும்பி செல்ல முற்பட்டவள் “தேவிம்மா” என்ற அழைப்பில் திடுக்கிட்டு திரும்ப 

“ஒரு காஃபி கிடைக்குமா ரொம்ப டையர்டா இருக்குடா” என்று நெட்டி முறித்தபடி கேட்டவனை முறைத்து பார்த்தவள்

“நீங்க தூங்கலையா? தூங்குற மாதிரி நடிச்சிட்டா இருந்திங்க ” என்று சட்டென கோபம் கொண்டவளின் கோபத்தை தணிக்க

“நைட்டேல்லாம் ஹெவி ஒர்க் இப்போதான் கண் அசந்தேன்டா நீ தலைய தூக்கினதும் தூக்கம் கலைஞ்சுருச்சு ப்ளீஸ்.. தேவிம்மா மாமாக்கு காஃபி கொண்டு வர்றியா” என்று முகம் சுருக்கி கேட்கவும்

தேவிம்மா என்றதில் அவனை முறைத்து பாரத்தபடியே “கொண்டு வறேன் ஆனா இந்த தேவிம்மா வேணாம் எனக்கு பிடிக்கலை” என்றுவிட்டு சென்றவள் சிறிது நேரத்தில் பில்டர் காஃபியை கொண்டு வந்து அவன் முன் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட 

“நீ பண்ண காரியத்துக்கு இதுவே கொஞ்சம் அதிகம் தான்” என்று எண்ணி கொண்டவனின் அலைபேசி சிணுங்கியது துவரகேஷ்சின் எண்ணை கண்டு அழைப்பை ஏற்று காதில் வைக்க 

“டேய் விஷ்ணு கிளம்பி ரெடியா இரு! நானே வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றிட சரியென்றவன் அழைப்பை துண்டித்து காபியை அடிவரை உறிஞ்சி காலி செய்து விட்டு காலைநேர நடைப்பயிற்சிக்கு சென்றான் 

அதிகாலை குளிர்காற்று இதத்தை பரப்ப ஆழ்ந்து சுவாசித்தவன் நுரையீரலில் சற்று நேரம் காற்றை பிடித்து வைத்து அதன் பின் வெளியிட்டபடியே அருகில் இருந்த பூங்காவில் உடைநனைய ஓடி, முடிந்த மட்டு நடந்து களைப்புற்றவன் நேரம் பார்க்க மணி ஆறு என காட்டியது “இன்னைக்கு இது போதும்” என எண்ணி கொண்டே வீடு வந்து சேர்ந்தான்

வரும் பொழுதே தன் அதிகாரத்தை செல்போனில் செலுத்தியபடி நுழைந்தான் துவாரகா “புல்ஸிட் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை ஆணியே புடுங்க வேணாம்னு சொன்னா கேக்குறதே இல்ல ஏதாவது பண்ணி நம்ம தாலியை அறுக்குறாங்க சரி நா வறேன் நீங்க போனை வைங்க “என்று கோபத்தில் பேசி கொண்டே வந்து அமர 

“என்ன ண்ணா காலையிலேயே செம்ம டென்ஷன் போல” என்று புன்சிரிப்புடன் கேட்ட வைதேகியிடம் 

“ஆமாம்மா” என்றவன் “சரி விஷ்ணு எங்க கிளம்பிட்டானா!” என்று கேட்க

  

“தெரியலை ண்ணா கிளம்பிட்டாறா இல்லையான்னு நா போய் பாத்துட்டு வறேன்” என்றுவிட்டு அவன் அறைக்கு வந்தவள் “துவா அண்ணா வந்துருக்காரு ஹால்ல வெய்ட் பண்றாரு” என்றுவிட்டு சென்றுவிட

அறையில் இருந்தவாறே எட்டி பார்த்தவன் “டேய் ஒரு அஞ்சு நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்று கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் தஞ்சம் புகுந்து கொள்ள அவன் வரும் வரை உருப்படியான காரியம் செய்ய வேண்டி அன்றைய ஆங்கில நாளிதழை எடுத்து புரட்டி கொண்டிருந்தான் துவாரகேஷ்

அழைப்பு மணி ஓசை தொடர்ந்து கேட்டும் செவி கேளாதவன் போல் அமர்ந்திருந்தவனை கண்ட சாவித்ரிக்கு எரிச்சல் மண்டி கொண்டு வந்தது சமையல் அறையில் இருந்து கொண்டே “டேய் காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேக்கல போய் கதவை திற” என்று சத்தமிட்டவர் “அப்டியே அவன மாதிரியே தான் வந்து வச்சுருக்கான்” என்று புலம்பி கொண்டே தாளிப்பில் இறங்கினார்

கதவை திறந்துவிட்டு திரும்பியவன் கால்கள் பெண் குரல் கேட்டதும் தன்னிச்சையாக நின்றன “வைத்திக்கா இந்த மேக்ஸ்ஸ எவன் கண்டுபிடிச்சானோ அவன முதல கொல்லனும் ஒரு எழவும் புரிய மாட்டிங்கிது ஈஸியான சம் எல்லாத்தையும் நோகாமா  எழுதிபோட்டுட்டு கஷ்டமான சம்ம எங்களுக்கு கொடுத்துருக்காங்க” என்று புத்தகமும் நோட்டும் கை நழுவி விழுந்து விடாதவாறு புத்தகத்தில் கவனத்தை செலுத்தி சமன் செய்த படி பிடித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்க்க 

“யார் இந்த வாயடி?” என்ற ரீதியில் மெலிதாய் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தவனை கண்டதும் இதயம் படப்படவென அடித்து கொண்டது மூச்சு முட்டுவது போல உணர்ந்தவள் மனதை ஓரளவு சமன்படுத்தி கொண்டு திருத்திருவென விழிக்க 

அவள் விழிப்பதை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் அவுட்டு சிரிப்பு சிரித்தவன் கடினப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டு “உள்ள வாங்க” என்று விட்டு “உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க

“ஏ தெரிஞ்சி சார் என்ன பண்ண போறீங்க?” என்று மிடுக்காக கேட்க

“இல்ல சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு.. தான் கேக்குறேன் கூப்பிடுறதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் இல்லையா அதான்” என்றதும் அவனை ஏற இறங்க பார்த்தவள் “கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?” என்று மிதப்பான பார்வையில் பார்க்க

அவள் பார்வையை தயங்கி ஏற்று கொண்டவாறு “சொன்னா நல்லா இருக்கும்!” 

“சரி குறிச்சு வச்சுக்கோங்க என் பேரு குருவம்மா போதுமா? இப்போ வழி விடுறீங்களா? உள்ள போகணும் பனை மரம் மாதிரி வழியில நின்னுகிட்டு தொங்கா” என்று சிடுசிடுத்தவள் அவனை இடித்து கொள்ளாத வண்ணம் உள்ளே சென்று “வைத்திக்கா வைத்திக்கா” என்று பெயரை ஏலம்போட 

கிளம்பி வெளியே வந்த விஷ்ணு “வாம்மா வாயடி என்ன இவ்ளோ காலையில வந்துருக்க காலேஜ் இல்ல!” 

“காலேஜ் இன்னைக்கு லீவ் ண்ணா செமஸ்டர் எக்ஸாம் நடக்குது” என்றவள் “அக்கா எங்கண்ணா” 

“அவ ரூம்ல இருப்பா ஒழுங்கா எக்ஸாமுக்கு படி அவக்கூட சேந்து அரட்டை அடிச்சுட்டு இருக்காத” என்றவன் “டேய் துவாரக கிளம்பலமா” என்றபடி அருகில் வர

அவள் கூறிய பெயர் குழப்பத்தை விளைவிக்க விட்டத்தை பார்த்து சிந்தனை செய்த வண்ணம்  நின்றுகொண்டிருந்தவனிடம் “துவாரகா… உன்கிட்ட தான் கிளம்பலாமான்னு கேட்டேன் காது கேக்காத மாதிரி அப்டி என்ன யோசனை பண்ணிட்டு இருக்க வா போலாம்” என்று அழைத்தவனை இழுத்துபிடித்து நிறுத்தியவன்

“விஷ்ணு எனக்கொரு டவுட்டு அழகான பொண்ணுக்கு யாராவது குருவம்மான்னு பேர் வைப்பாங்களா?” என்று அதி முக்கியமான கேள்வியாக தீவிரமான பாவனையுடன் கேட்க

“என்னடா திடீர்னு உனக்கு இப்டி ஒரு டவுட்டு?” 

“சும்மா தான் கேட்டேன்!” 

“வைக்கலாம்… யாருக்கு தெரியும்?” என்று சந்தேக பார்வையில் இழுத்து கூறிய விஷ்ணு “அந்த கேஸ் பைலை படிச்சேன் நம்ப முடியல துவாரகா ரொம்ப சிக்கலான கேஸ் தான் ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல” என்று சோர்ந்த குரலில் கூற

“எவ்ளோ சிக்கலான கேஸ்ஸா இருந்தாலும் நீ முடிச்சுறுவ விஷ்ணு உன்னால முடியாததா என்ன?”என்று சிரிப்பை வரவழைத்தவளின் நினைவை தற்சமயம் ஒதுக்கிவிட்டு சாவியை புகுத்தி இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து “நேத்து போன இடத்துக்கு தான போகணும்?” என்று கேட்க

“இல்ல அதுக்கு முன்னாடி ஸ்டேஷன் போகணும்” என்றவனை புரியாமல் திரும்பி பார்த்தவன் பாதுகாப்பு சட்டியை தலையில் மாட்டி கொண்டு பைக்கை காவல்நிலையத்திற்கு விரைந்து செலுத்தினான்

“என்ன சஞ்சளா எதுக்கு சத்தம் போட்டுக்கிட்டே வர! இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையா?” என்று வைதேகி கேட்க

“இல்லக்கா! செமஸ்டர் எக்ஸாம் நடக்குது அதனால லீவ் இன்னைக்கு, நாளைக்கு வரும் போது இந்த சம் போட்டுட்டு வரணுமாம் படிக்க லீவ் விட்டா இவங்க கிளாஸ் வச்சு கொல்றாங்க, எனக்கு இந்த ப்ராப்ளம் மட்டும் சொல்லி கொடுங்க க்கா புரியவே மாட்டிங்கிது நானும் எல்லா வழியிலயும் ஃபார்முலா போட்டு பாத்துட்டேன் ஆனா ஆன்சர் மட்டும் வரவே மாட்டிங்கிது!” என்று சஞ்சளா கூறிமுடிப்பதற்குள் அவள் கூறிய கணக்கின் விடையை கொண்டுவந்து நீட்டினாள் வைதேகி

“எப்டிக்கா ரெண்டு நிமிஷத்துக்குள்ள போட்டு முடிச்சுட்டீங்க” என்று அதிசயிக்க

“பிடிக்காதத பிடிச்சு பண்ணா பிடிக்காததும் பிடிச்சு போகும்” என்று குழப்பியவள் “எனக்கு மேக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும் பிடிச்சு அனுபவிச்சு ரசிச்சு படிச்சது” என்று சிலிர்த்து கொள்ள

“என்னமோக்கா நானும் பிடிச்சு தான் இந்த சப்ஜெக்ட் எடுத்தேன் ஒருசில நேரம் புரியிது கொஞ்சம் புரிய மாட்டிங்கிது” என்று சலித்து கொள்ள

“சரி அத விடு நேத்து விட்டுல என்ன பிரச்சனை? ஒரே சத்தமா இருந்துச்சு பக்கத்து வீட்டு மாமிய என்ன பண்ண! சித்தி என்கிட்ட வந்து புலம்பிட்டு போனாங்க என்னன்னு நா கேக்கல சொல்லு” என்று சுவரஷ்யமாய் கேட்க

“அதுவா… “என்று இழுத்தவள் “ஒன்னுமில்ல அக்கா சின்ன பசங்க கூட சேந்து கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன் நான் பால் அடிக்கும்போது பாத்து அந்த மாமி இடையில வந்துட்டாங்க அடிச்ச வேகத்துல பந்து மாமி மண்டைய பதம் பாக்க பாவமா நா மாமிய பாக்க கோபமா மாமி என்ன பாக்க சுத்தி இருந்த வானரமெல்லாம் ஒட்டமெடுக்க கடைசியில நா மாட்டிக்கிட்டேன்” என்று கதையாய் அளந்தவள் பாவமாய்  உதட்டை பிதுக்கி வைதேகியை பார்த்தாள்

“அடி பாவி.. தலையில பட்டது வேற எங்கயாவது பட்டிருந்தா என்ன ஆகுறது!”

“என்ன ஆகும் மாமி ஹப்பிட்டல்ல பெட் ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாங்க மாமா ரெண்டு நாள் நிம்மதியா இருந்துருப்பார்” என்று கிண்டல் பேசியவள்”அது எப்பவும் நடக்குறது தானே.. அதான் வந்து அர்ச்சனைக்கு ரிஜிஸ்டர் பண்ணிட்டு போனாங்க அம்மாவும் அவங்க மனசு சந்தோஷபடுற மாதிரி குளூர குளூர அர்ச்சனை பண்ணாங்க” என்று புன்னகைத்தபடியே அசால்டாய கூறி முடிக்க

“இன்னும் சின்ன பிள்ளைன்னு நினைப்பு காலேஜ் படிக்கிற கொஞ்சம் கூட பொறுப்புன்றதே இல்ல சஞ்சு, கொஞ்சமாவது மெச்சூரிட்டியா நடத்துக்கோ” என்று அறிவுரை கூறியவள்” சரி எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன்” என்று காலை உணவை முடித்து கொண்டு அவசரமாக கிளம்பி சென்றுவிட

சாவித்திரியை தேடிய சஞ்சளா பழைய பொருட்களை வைத்திருந்த அறையில் இருந்து சத்தம் வரவே உள்ளே சென்றாள், தீவிரமாக எதையோ தேடி துழாவி கொண்டிருப்பதை கண்டு “என்ன ஆன்ட்டி தேடுறீங்க நா வேணா ஹெல்ப் பண்ணவா?” 

“போட்டோ ஒன்ன தேடிட்டு இருக்கேன்மா இங்க தான்.. வச்சேன் எங்க.. போச்சுன்னே தெரியல!”

“என்ன போட்டோ ஆன்ட்டி நானும் தேடுறேன் “என்று செல்ப் பழைய மர பீரோ என அலசி ஆராய்ந்தவள் டேபிளின் அடியில் வெள்ளை துணி கொண்டு சுற்றி வைக்கபட்டிருந்ததை எடுத்து “இதுவா ஆன்ட்டி” என்று நீட்ட

பிரித்து பார்த்தவர் “இது தான் எங்க இருந்துச்சு” என்று வாஞ்சையுடன் வருடி கொண்டே கேட்க

“இது யாரு ஆன்ட்டி?” 

“விஷ்ணுவும் வைத்தியும் சின்ன வயசுல எடுத்த போட்டோ எங்க குடும்பத்துலயே வைத்தி தான் பெண் குழந்தை எனக்கு குழந்தை இல்லை அண்ணாவுக்கு ரெண்டுமே பையங்க தான், அக்காவுக்கு தான் பெண் குழந்தையா, எங்க வீட்டுக்கு மஹாலட்சுமியா வந்து பிறந்தா அதுவும் அஞ்சு வருஷம் கழிச்சு” என்று நெகிழ்ச்சியுடன் சாவித்ரி கூறி கொண்டிருக்க 

Advertisement