Advertisement

சென்னைஎன்ற விஷ்ணுவின் ஒற்றை வரியில் தூக்கி வாரி போட வேகமாக எழுந்தவன்டேய் கல்யாணத்துக்கு ஒருவாரம் கூட இல்ல இப்போ என்ன அவசரம்னு சென்னைக்கு கிளம்புற நீ எங்கயும் போக வேணாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நா போயிட்டு வறேன்என்றான் குரலில் கண்டிப்பை காட்டி

ப்ச் நீ இங்கயே இருந்து எல்லா வேலையையும் பாரு துவாரகா நா போய்ட்டு ரெண்டு நாள்ல திருப்பி வந்துடுவேன் ஒரு முக்கியமான வேலை இருக்கு!, விஜியும் இல்ல நீயும் என்கூட வந்துட்டனா.. இங்க இருக்குறவங்களுக்கு தான் ரொம்ப அலைச்சல்! புவி இருக்கான் தான் இருந்தாலும்.. அவனாலயும் ரொம்ப நாள் லீவ் போட முடியாது ப்ளீஸ் எனக்காக இத பண்ணுடாஎன்று முகம் சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்க

உனக்காக எல்லாம் பண்ண முடியாது போடா என்ன விட்டுட்டு போறல!, வேணா என்னோட தங்கச்சிக்காக பண்றேன்என்று அலட்டி  கொண்டு பேசியவனை கண்டு புன்னகை அரும்ப 

எனக்காக பண்ணா என்ன அவளுக்காக பண்ணா என்ன? நாங்க ரெண்டுபேரும் தான் சிங்கிள்லா இருந்து மிங்கில் ஆக போறோமே அதுவும் இன்னும் ஒருவாரத்துலஎன்று கண்சிமிட்டி வசனம் பேசியவனை முறைத்து பார்த்தவன்

காலங்காத்தால கடுபேத்தாத போயிருடாஎன்றான் குரலில் கோபத்தை தேக்கி

இப்போ என்னாச்சுன்னு மூஞ்சிய தூக்கி வச்சுருக்க சென்னை போறேன் பாத்து போய்ட்டுவாடான்னு கூட சொல்ல வேணாம் அட்லீஸ்ட் இப்டி மூஞ்சிய முருங்கை மரத்துல ஏத்தமா இருக்கலாம்ல?” 

நீ ஏதோ பிளான் பண்ற என்னன்னு என்கிட்ட சொல்ல மாட்டிங்கிற என்னமோ பண்ணு ஆனா பாத்து ஜாக்கிரதையா இருடா ஆள் யாருன்னு இன்னும் நமக்கு தெரியாது கார்த்திக்கா இருக்கலாம்னு ஒரு அனுமானம் தான்என்று தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கூற

டேய் என்னமோ நா பார்ட்ர் வாருக்கு போற மாதிரி ஓவரா பில்டப் கொடுத்து பேசுற நா அந்த அளவுக்கு ஓர்த் இல்ல ராசா புதுசா வந்த கமிஷ்னர் என்ன பாக்கணும்னு சொல்லிருக்காரு கான்ஸ்டபிள் ஜோதி தான் கால் பண்ணி சொன்னான், மூணு மணி இருக்கும் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பலைஎன்று காலில் சாக்ஸை மாற்றி கொண்டே கூற

நீ சொல்ற பொய்யை வேற யாரு வேணா நம்பலாம் நா நம்ப மாட்டேன் இந்த டக்கால்டி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம் நீ யாருன்னு எனக்கு தெரியும் நா யாருன்னு உனக்கு தெரியும்? நானும் பாத்துட்டு தான் இருக்கேன் இங்க வந்ததுல இருந்து ஏதோ யோசனை பண்ணிட்டு இருந்த கல்யாணத்த பத்தி யோசனை பண்றயோன்னு கேக்காம விட்டுட்டேன் உன்ன பாக்கணும்னு சொன்னவரு என்ன அவரு முகத்துல முழிக்க கூடாதுன்னு சொல்லிட்டாறாக்கும்என்று ஏகத்துக்கும் நொடித்து கொள்ள

என்ன என்னடா பண்ண சொல்றகேஸ் விஷயமா பேசனும்னு வர சொல்லிருக்காராம் நா ஒருத்தன் போனா பத்தாதா உன்கிட்ட எதையும் நா மறைக்கல கேஸ் சம்பந்தமா எந்த முடிவெடுத்தாலும் உன்ன கேட்டுட்டு தான் எடுப்பேன் போதுமா?” 

ம்ம்ம்..” என்று யோசனையுடன் தலையாட்டியவன்எப்டியோ கைலாசத்தை வேற இடத்துக்கு பேக் பண்ணி அனுப்பியாச்சு சரியான ஆள் தாண்டா நீ மேலிடத்துல பேசி எப்டியோ அவருக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்துட்ட மனுஷன் இப்போ எந்த ஊருல என்ன பண்ணிட்டு இருக்காரோஎன்று கைலாசத்தை எண்ணி துவாரகேஷ் அனுதாபம் கொள்ள 

அவன் அனுமானம் சரி என்பது போலவே விருதுநகர் கமிஷ்னர் அலுவலகத்தில் தன் பணி இடமாற்றத்தை எண்ணி கைலாசம் நொந்து போய் அமர்ந்திருந்தார்  

பின்ன நமக்கு இடைஞ்சல் கொடுத்தா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா என்ன?” என்றவன்சரிடா என்ன ரயில்வே ஸ்டேஷன்ல டிராப் பண்ணிருஎன்று இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை எடுத்து கொண்டு இருவரும் அறையில் இருந்து வெளியேவர

வாசல் தெளித்துவிட்டு உள்ளே வந்தவர் மகனின் கோலத்தை கண்டுஎன்னடா எங்கன கெளம்பிட்ட ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டுஎன்று அன்னம் பதட்டத்துடன் கேட்க

ம்மா ஒரு முக்கியமான வேலை ரெண்டு நாள் தான் போயிட்டு வந்துருவேன் எதுக்கு பதறுறிங்க கமிஷ்னர் வர சொல்லிருக்காரு போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்துடுறேன்என்ற போதே பரமசிவனும் வந்துவிட்டார்

நெனச்சேன் இந்தவாட்டி கோக்குமாக்கா ஏதாவது சோழி பண்ணுவான்னு அதே மாதிரி பண்ணிட்டான் நேத்து தா நிச்சயம் முடிச்சிருக்கோம் ஒரு வாரம் கூட இல்ல கல்யாணத்துக்கு எம்புட்டு வேலை கெடக்கு அதெல்லா விட்டுட்டு துறை ஊருக்கு போறாரா?” என்று வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்க

கொஞ்சம் நிறுத்துறியலா அவென்ந்தா போயிட்டு ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு சொல்லுதான்ல பொறவு என்னத்துக்கு குதிக்கீக கல்யாண சோழி புரா அவன் தான் செய்யனும்ன்னா இம்புட்டு பேர் எதுக்கு இருக்கோம் தண்டதுக்காஎன்று காரமாக பேசி கணவரின் வாயை அடக்கியவர் மகனிடம் திரும்பி 

நீ போய்ட்டு வாய்யா ரெண்டு நா தானே நாங்க பாத்துகிடுதோம் அப்டியே மாமா வீட்டுல ஒரு எட்டு சொல்லிட்டு போயிட்டு வாஎன்றதும் சரியென்று தலையாட்டி விடைபெற்றவன் துவராகவை இருக்க சொல்லிவிட்டு வைதேகியின் இல்லம் சென்றான் விஷ்ணு 

வாசலில் கோலம் வரைந்து கொண்டிருந்த இந்திராணியிடம் விஷயத்தை கூறியவன்வைதேகி எங்க அத்தை காணோம்?” என்று கேட்க

அவ தூங்கிட்டு இருக்கா விஷ்ணு நேத்து நைட்டு சரியா தூங்கலை சாப்டவும் இல்ல ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு வந்துட்டாஎன்று கவலையுடன் கூற

அவள பாக்கலாமா அத்தைஎன்று அனுமதி கேட்டவனை பார்த்து சிரித்தவர்போடா போய் பாரு அவள பாக்க எங்கிட்ட என்னத்துக்கு கேக்க நீ போய் பாருஎன்றதும் உள்ளே சென்றவன் தாழ்வார்த்தில் போடப்பட்டிருந்த மரகட்டிலில் அப்போது தான் உறக்கம் கலைந்து அமர்ந்திருந்த பெருமாள்சாமியிடம் சென்னை செல்வதை பற்றி கூறி சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு வைதேகியின் அறைக்குள் சென்றான் 

ஒருக்களித்து படுத்திருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தவன் நேற்று கோபத்தை கொண்டாடிய முகத்தை பார்க்க அமைதியை பிரதிபலித்தது, மென்மையாய் அவள் கரம் பற்றி தன் கைகளுக்குள் பிணைத்து கொண்டவன் வருத்தம் இயைந்த குரலில் தன்னவளுடன் பேச தொடங்கினான்சாரிடா ரொம்ப ஹார்ஸா பேசிட்டேன்ல அந்த நேரத்துல உன்னோட மனசு என்ன பாடுப்பட்டுருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியிது! உண்மை என்னனு தெரியாம உன்கிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் உன்ன காயப்படுத்திட்டேன்னு நினைச்சு ரொம்ப பீல் பண்ணேன் தெரியுமா?

 நீ வேற மாதிரி முடிவெடுப்பேன்னு சொன்னதும் என்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியலை அதான் சட்டுன்னு கைநீட்டிட்டேன் ரொம்ப வலிச்சதா தேவிம்மா..” என்றவனின் குரல் உருகியது அறைந்த கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு மென்மையாய் வருடியவன் 

என்ன தான் கோபமா இருந்தாலும் உன்ன அடிச்சிருக்க கூடாது தப்பு பண்ணிட்டேன் ஆனா அதுக்காக என்ன மன்னிச்சு ஏத்துக்க சொல்ல மாட்டேன் உன்னோட கோபம் எப்போ குறையிதோ அப்ப ஏத்துக்கோ, எல்லாமே நல்லதுக்கு தான் தேவிம்மா கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்குன்னு தான் நா நினைச்சிட்டு இருக்கேன் கவி வந்து உண்மைய சொன்னதும் எப்டி இருந்துச்சு தெரியுமா? போன உயிர் திரும்ப வந்தா எப்டி இருக்கும் அந்த மாதிரி பீல் பண்ணேன் அதை வார்தையா சொல்ல முடியாது, நீ சொன்னியே இந்த வைதேகிக்கும் விஷ்ணுவுக்கும் தான் கல்யாணம் நடக்கும் நா உனக்கானவன்னு அப்ப என்னால உறுதியா சொல்ல முடியலை 

ஆனா இப்போ சொல்றேன்! நீ எனக்கானவ  உனக்கு கேக்குதோ இல்லையோ என்னோட மனசுக்கு கேட்கும் நா பேசுறது, என்னடா என்னோட மனசுன்னு சொல்றேன்னு நினைக்கிறியா அது உன்கிட்ட தானே இருக்கு அததான் சொன்னேன்என்று குமிண் நகை புரிந்தவன் நெற்றியில் விழுந்து காற்றில் தவழ்ந்து வருடி கொண்டிருந்த ஒற்றை முடியை ஒதுக்கிவிட்டு இதழ் பதித்து 

இது ஒன்னு மட்டும் உன்னோட பர்மிஷன் இல்லாம கொடுக்குறேன் நா சென்னைக்கு போறேன் போறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன் ஆனா நா பேசுன பேச்சுக்கு எதுவும் சொல்லாம இந்த அளவுக்கு அமைதியா இருக்கிறதே பெரிய விஷயம் தான், முழிச்சுட்டு இருந்தா கண்டிப்பா என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசிறுக்க மாட்ட என்மேல கோபத்துல இருக்க அந்த கோபம் தணியிற வரைக்கும் மாமா வெய்ட் பண்றேன்டா தேவிம்மாஎன்றவன் கைகடிகாரத்தை பார்க்க கிளம்ப வேண்டிய நேரத்தை உணர்த்தியது கரங்களை மென்மையாக பிரித்து சன்ன சிரிப்புடன் எழுந்து சென்றுவிட

அவன் காலடி சத்தம் தேய்ந்து அடங்கும் வரை உறங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்தவள் மெதுவாக இமைகளை திறக்க இமைகளின் ஓரத்தில் நீர் துளி அரும்பி துளிர்த்து நின்றது.

தொடரும்..

உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்

என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்

என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்

உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்

என்னக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதினாலே

இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே

Advertisement