Advertisement

 காவலர் தேர்வெழுதி அதற்கான பயிற்சி பெற வேண்டி விஷ்ணுவும் சென்னைக்கு சென்றுவிட சந்திக்கும் வாய்ப்புகள் அவளுக்கு கிட்டவில்லை அவனை பற்றி ஒன்றிரண்டு தகவல் மட்டும் அறிந்து வைத்து கொண்டாள்

நாட்கள் உருண்டோட பயிற்சி முடிந்ததும் முதல் போஸ்டிங்கே மதுரை என்றானது கேட்கவா வேண்டும் சொந்த ஊரிலேயே அதுவும் பிடித்த வேலை 

முதல் வேலையாக குவாரியில் நடக்கும் கிரானைட் கடத்தலை பற்றி அரசல் புரசலாக வந்த விஷயத்தில் எந்த அளவு உண்மை தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்தான் விஷ்ணு, அரசு விதித்த நடைமுறைகள் கட்டுப்பாடுகள் தொழிலார்களை வேலை வாங்கும் விதம் என்று எதையும் பின்பற்றமால் தன் போக்கில் செயல்படும் குவாரியை இழுத்து மூட வேண்டும் என்று எண்ணியவன் 

மக்களின் எண்ணம் என்னவென்பதையும் கேட்டு அறிந்து கொண்டான் நேரடியாக செயல்பட முடியாது என்று தானே மப்டியில் சென்று குவாரியில் நடக்கும் நடவடிக்கையையும் செயல்பாடுகளையும் தொழிலாளர்களை வேலை வாங்கும் விதத்தையும் கிரானைட் கற்களை அரசு விதித்த அளவை விட அதிக அளவில் வெட்டி எடுப்பதையும்  தாது மணல் கொள்ளை என்று பல சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அனைத்தையும் 

தனது சட்டையில் மறைக்கப்பட்டிருந்த பட்டன் கேமிராவின் வழியாக நிகழ்வுகளை பதிந்து கொண்டவன் ஒரு சில தொழிலாளர்களின்  கருத்துக்களையும் கேட்டு குவாரிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குவாரிக்கு சீல் வைக்கபட்டது மக்களின் ஒத்துழைப்பு வலுவாக இருந்த காரணத்தினால் எங்கு சென்றும் குவாரியை மறுபடியும் செயல்படுத்துவதற்கான ஆணையை வாங்க முடியவில்லை

தன்னை பழி தீர்க்கவும் வைதேகி ஊர் திருவிழாவில் அவனை அறைந்து அவமதித்தை மனதில் வன்மமாய் வைத்து கொண்டு இருவரின் இடையே பிரிவை உண்டாக்க பல காரியங்களை செய்தது கதிரேசன் தான் என்று காரண காரியங்களை சுருக்கமாய் விளம்பி நிறுத்த

துவாரகாவிற்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஉன்ன லவ் பண்ண பொண்ணோட அண்ணேன்னதும் அவன அப்டியேவா விட்ட ஆத்திரம் தீர அடிச்சி நொறுக்கிருக்க வேணாம்என்று பொங்கி எழ முறைத்து பார்த்த விஷ்ணுவை சற்றும் கண்டு கொள்ளவில்லை 

டேய்..” என்றவனைஎன்ன டேய் அந்த பொண்ணு சொன்னான்னு எதுவும் பண்ணாம விட்டுட்டு வந்தியாக்கும்என்று கோபத்துடன் கேட்க

 

அவன் பண்ண வேலைக்கு தண்டனை கிடைச்சிருச்சு இனி நா போய் அவன என்ன பண்ண முடியும் சொல்லு அந்த நேரத்துல அவன பத்தி எனக்கு கவலை இல்ல மாப்பிள்ளை வீட்டுல பேசி அவங்களை கன்வைன்ஸ் பண்றதுன்னு தான் கவலையா இருந்துச்சு, காலையில வெளியே கிளம்பி போனேனே எதுக்குன்னு நினைச்ச மாப்பிள்ளை வீட்டுக்கு போய் அவங்கள வரவேணாம்னு சொல்ல தான் வேகமா போனேன் அதான் உன்ன கூட வர வேணும்னு சொன்னேன் ஒரு சர்ப்ரைஸ் இருக்கட்டுமேன்னு..” என்று துவாரகாவிடம் காரணத்தை கூற

அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டிருந்த விஜயன்ஏண்டா இவ்ளோ நடந்திருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை  சொல்ல தோணலலைஎன்று கடுமையாக முகத்தை வைத்து கொண்டு கேட்க 

டேய் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல எதுக்கு சொல்லிக்கிட்டுன்னு விட்டுட்டேன் நானே ஃபேஸ் பண்ணிறலாம்னு தான் நினைச்சேன் ஆனா என்னவிட ரொம்ப க்ளவரா வேலை பாத்துருக்கான்என்றான் விஷ்ணு 

இந்த சப்பை கட்டுற வேலையெல்லாம் வேணாம் இதோ இவகிட்ட சொல்லிருக்க இவன்கிட்ட சொல்லிருக்க என்கிட்ட சொல்ல தோணல அப்டி தானே! அவங்க அளவுக்கு கூட நா உனக்கு முக்கியம் இல்லாம போய்ட்டேன்ல!” என்றான் வருத்தம் இழைந்த குரலில்

ப்ச் டேய் விஜி அப்டியில்லடா நீ  எந்த அளவுக்கு எனக்கு முக்கியம்னு உனக்கு தெரியாதா இந்த ஒரு விஷயத்தை வச்சு பேசாத” 

ம்ஹும் நா எந்த அளவுக்கு முக்கியம்னு நீ செயல்ல நிரூபிச்சு காட்டிட்டஎன்று சுரத்தே இல்லாமல் கூற

டேய் பாத்துட்டு நிக்கிறியே பக்கி சொல்லேண்டாஎன்று துவாரகாவை பரிந்து பேச அழைத்தான் விஷ்ணு

யாரும் எதுவும் சொல்ல வேணாம்என்று முறுக்கி கொண்டு நின்றவனின் அலைபேசி சன்னமான ஒலியுடன் சிணுங்க திரையில் மின்னிய எண்ணை கண்டதும் அறையை விட்டு வெளியேறி உயிர்ப்பித்து பேச தொடங்கினான் விஜயன்

வைஷாலி துவாரகா இருவரும் கேவலமான பார்வையில் விஷ்ணுவை பார்த்து கொண்டிருக்கஎன்ன பாத்தா எனக்கே கேவலமா தான் இருக்குஎன்றதும் 

உண்மை என்னனு தெரியாம இப்டி பண்ணிட்டியே மாப்பு கல்யாணம் முடியவும் உனக்கு இருக்குடி மகனே, என்னமா.. பேசுன! ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு ம்ஹும்! நீ பேசுன பேச்சுக்கு என்னோட தங்கச்சி உன்கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிருக்கணும்,பெரிய மனசு பண்ணி எதுவும் சொல்லாம உன்ன ஏத்துகிட்டாஎன்று பெருந்தன்மையுடன் வைதேகியை பற்றி கூறியவனின் முகத்தில் தெரிந்த பாவனையில் பட்டென்று சிரித்துவிட்டான் விஷ்ணு 

பேசிவிட்டு வந்த விஜயன் வேகமாக துணிகளை அடுக்க மூவரும் பதறிபோயினர்தான் மறைத்த விஷயத்திற்காக கோபப்பட்டு கிளம்புகிறானோஎன்று எண்ணி வேகமாக அவன் அருகில் வந்த விஷ்ணுடேய் என்ன பண்ற? நா சொல்லாம விட்டது தப்பு தான் அதுக்குன்னு பெட்டிய தூக்கிட்டு கிளம்புவியா? வேணா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேக்குறேன்என்று பதட்டமாக கூறியவனுக்கு

பதில் சொல்லாமல் தன் பணியை செய்து கொண்டிருந்தவனை தன் புறம் திருப்பிய விஷ்ணுஇப்போ எங்க கிளம்பிட்ட அதையாவது சொல்லிட்டு போ! ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லாம மறைச்சது தப்பு தான் அதுக்குன்னு விட்டுட்டு போயிருவியா?” என்று கோபமாக கேட்க

ப்ச் டேய் நீ வேற ஏண்டா படுத்துற! நாளைக்கு காலையில நா திருச்சியில இருக்கணும் கமிஷ்னர் உடனே கிளம்பி வர சொல்லிருக்காரு அதுக்கு தான் கிளம்புறேன்! கோபமா கோபம்! போடா…, உன்மேல கோபப்பட்டு எனக்கு என்ன ஆகபோதுஎன்று அணைத்து கொள்ளவும் அவன் புரிதலை கண்டு சிலிர்த்து போனான் 

என்னடா திடீர்ன்னு திருச்சி போற என்ன விஷயம்?” என்று துவாரகா கேட்க

ரீசன் சொல்லல உடனே கிளம்பி வர சொல்லிருக்காரு அநேகமாக என்னோட ட்ரான்ஸ்பர் விஷயமா தான் இருக்கும் சரி நா கிளம்புறேன்என்றவன் விஷ்ணுவிடம்சாரிடா கல்யாணத்துக்கு வர முடியுமான்னு தெரியல முடிஞ்சா வர பாக்குறேன்என்று சங்கடத்துன் கூறிவிட்டுஅப்றம் சபரிகிட்ட நா எல்லாமே சொல்லிருக்கேன் அவனும் உங்களுக்கு முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுவான் கார்த்தி மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்என்று தீவிரமாக உரைக்க

அத நாங்க பாத்துகிறோம் முடிஞ்சா கல்யாணத்துக்கு வர பாரு, திருச்சி போனதும் எனக்கு  கால் பண்ணுஎன்றவன் அருகில் இருந்தவனிடம்டேய் துவாரகா நீ போய் இவன பஸ்டாண்ட்ல விட்டுட்டு வந்துரு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நேத்து நைட் சரியாவே தூங்கலஎன்று படுக்கையில் விழுந்தவன் விழுந்ததும் உறங்கி போனான்

பைக் சாவியை எடுத்து கொண்டு துவாரகா வெளியேற அறை வாசல் வரை சென்ற விஜயன் சட்டென நின்று பின்னால் திரும்பி பார்த்தான் தனித்து நின்று கொண்டிருந்தவளின் பார்வையில் ஏதோ ஒரு ஏக்கம் எதையோ சொல்ல வேண்டுமென்று உதடுகள் துடித்தது கண்கள் காரணமின்றி கலங்க, கலங்கிய விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தாள் வைஷாலி 

கலங்கிய விழிகளுக்குள் எதையோ தேட முற்பட்டவன் துவாரகாவின் அழைப்பு குரல் கேட்டு விறுவிறுவென திரும்பி பாரமால் சென்றுவிட சொல்லாமல் சென்றுவிட்டானே என்று எண்ணும் போதே அழுகை மேலோங்கியது அவளுக்கு ,ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு மனதின் உள்ளே எழ சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியேறினாள் வைஷாலி, பெரியவர்களிடம் இருக்க முடியாததற்கான காரணத்தை கூறி விடைபெற்று கொண்டு கிளம்பினான் விஜயன்

நிச்சயத்திற்கு வந்திருந்த ஒருசிலர் ராவைக்கு தங்கிவிட்டு செல்லலாம் என்று கிடைத்த இடத்தில் தலையை சாய்த்துவிட பஸ் ஏற்றி விட்டு வந்த துவாரகாவிற்கு அடித்து போட்டதை போல உறங்கி கொண்டிருந்தவனை கண்டதும் மனம் கனிந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன்உண்மை என்னனு தெரியாம எவ்ளோ கஷ்டப்பட்ட இப்போ தான்டா நிம்மதியா இருக்கு எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும்என்று மானசீகமாக பேசிக்கொண்டவன் பைக் சாவியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சத்தமில்லாமல் வந்து படுத்து கொண்டான் அன்று நடந்த நிகழ்வுகளில் வேலை செய்த களைப்பு அவன் விழிகளை கிறங்கடிக்க இமைகள் மூடியதும் நித்திரை தேவி அவனை அணைத்து கொண்டாள்.

விடிந்தும் விடியா பொழுதில் விஷ்ணுவின் அலைபேசி சிணுங்க தீவிரமாக மறுமுனையில் பேசியவனிடம் வருவதாக கூறிவிட்டு வைத்தவன் அவசரமாக கிளம்பி கொண்டிருக்க விளக்கின் வெளிச்சத்தில் உறக்கம் கலைந்த துவாரகாஎன்னடா இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டஎன்று வந்த கொட்டாவியை அடக்கியபடி கேட்டான்

Advertisement