Advertisement

என்னடா ரொம்ப பீல் பண்றியா?” என்று விஷ்ணுவின் முகவாயை பிடித்து தன் புறம் திருப்பிய துவாரகாஇதை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் சரி அதை அப்றமா பாத்துக்கோ இப்போ நேரா விஷயத்துக்கு வா அந்த பொண்ணு என்ன சொல்லிச்சு அத சொல்லு?” என்று கேட்கவும் 

முகவாயில் இருந்த கையை தட்டிவிட்டவன்கொள்ளிகண்ணாஎன்று முணுமுணுத்து கொண்டே மேலே சொல்ல தொடங்கினான்

நலம் விசாரித்தவளுக்கு பதில் அளிக்க ஏனோ சரளமாக வார்த்தையாடல்கள் வரவில்லை அவனுக்கு, எங்கே சகஜமாக பேசினால் மீண்டும் பழைய புராணத்தை தொடங்கிவிடுவாளோ என்று எண்ணிம் நல்லா இருக்கேன்என்று ரத்தின சுருக்கமாய் சுருக்கி கொண்டவன் 

என்ன விஷயம் இந்த நேரத்துல பாக்கணும்னு வந்துருக்க என்னோட நம்பர் உனக்கு எப்டி தெரியும் கவிஎன்று இயல்பாய் கேட்க

நிராசையான புன்னகை நிறைந்து மறைந்தது அவளிடத்தில்முக்கியமான விஷயம் விச்சு அதான் நேர்ல பாத்து சொல்லலாம்னு வந்தேன் அப்டியே உன்ன பாத்த மாதிரியும் இருக்கும் உன்கிட்ட பேசுன நிம்மதியும் கிடைக்கும்! இத்தனை வருஷம் ஆகியும் உன்னையும் உன்னோட நம்பரையும் என்னால டெலிட் பண்ண முடியலை அந்த அளவுக்கு உன்னோட நினைப்பு இன்னும் என்கிட்ட இருக்குஎன்று வசனம் பேசி அவன் முகத்தில் ஆராயும் பார்வையை செலுத்தினாள்

ப்ச் இருக்குற வலி போதாதுன்னு இவ வேற நேரம் காலம் தெரியாம டயலாக் பேசிட்டு இருக்காஎன்று வைதேகியிடம் பேசிவிட்டு வந்த வேதனை ஒரு புறம் இருக்க கவிதாவின் பேச்சு அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது வெளியே காட்ட முடியாமல் மனதோடு குமுறியவன் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான் 

சில நொடிகள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை இரவின் அமைதியும் இருவரின் அமைதியும் சேர்ந்து கனத்த மௌனத்தை அளிக்க அவன் முகத்தை பார்த்தவளுக்கு இது தேவையில்லாத போச்சு என்று உணர்த்துவது போல இருந்தது பெருமூச்சு விடுத்து மௌனத்தை களைத்தவள்சரி வந்த விஷயத்தை சொல்லிடுறேன் எனக்கே இன்னைக்கு தான் தெரியும் அப்பாவும் அண்ணனும் தற்செயலா பேசிட்டு இருக்கும் போது கேக்க வேண்டியதா போச்சு! நா நினைச்ச லைஃப் தான் எனக்கு அமையல! அட்லீஸ்ட் நீ நினைச்ச விரும்புன லைஃப் உனக்கு அமையட்டுமேஎன்று விரக்தியான புன்னகை சிந்தி  

உனக்கு தலையில அடிபட்டு ரொம்ப டேஞ்சர் லெவல்ல இருக்குன்னு ஒரு ரிபோர்ட் கொடுத்தாங்களே அது உண்மையில்ல விச்சு பொய்! உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல பொய்யா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி கொடுக்க வச்சது என்னோட அண்ணா தான்” என்று தீவிரமான பாவனையுடன் உரைத்தவள் உண்மையான மருத்துவ அறிக்கையை நீட்ட

குழப்பத்துடன் அவள் முகத்தை பார்த்தவன் தயங்கியபடி வாங்கி அவசரமாக பிரித்து பார்க்க அனைத்தும் நார்மல் என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு மருத்துவரின் கையெழுத்தும் அடங்கி இருந்தது அனைத்தும் பொய் உண்மையில்லை என்று ஒரு புறம் மனம் சந்தோஷம் அடைந்தாலும் அதை கொண்டாட முடியவில்லை விஷ்ணுவிற்கு இத்தனை நிகழ்விற்கும் காரணமானவனின் மீது கோபம் எழ

இவ்ளோ வேலை பாத்துருக்கானா உன்னோட அண்ணே அவன சும்மா விட மாட்டேன் அவன் பண்ண கரியத்துனால என்னெல்லாம் நடந்துருச்சு தெரியுமா? வான் பண்ணி அனுப்புனது தப்பா போச்சு அன்னைக்கே அவன கம்பி எண்ண விட்டுருக்கணும் தப்பு பண்ணிட்டேன் அவன என்ன பண்ணுறேன்னு மட்டும் பாருஎன்று ஆத்திரத்துடன் பேசியவனை அடக்கியவள்

ரிலாக்ஸ் விஷ்ணு உண்மை தான் தெரிஞ்சிருச்சே பின்ன என்ன? இனி ஆக வேண்டியதை பாருஎன்றவள் தன் அண்ணனின் சூழ்ச்சியை பற்றியும் அதற்கான காரணத்தையும் விளக்கலானாள்நீ குவாரிய சீல் வச்ச கோபத்துல தான் லாரியவிட்டு உனக்கு ஆக்சிடன்ட் ஆகிற மாதிரி பண்ணான் அது தனா நடந்த விபத்து இல்ல விச்சு அவனோட ஏற்பாடு தான்! அதுமட்டுமில்ல,

நீ குணமானதும் வைதேகிக்கு உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணணும்னு பேசிகிட்டது எப்டியோ அவனுக்கு தெரிஞ்சிருக்கு அவகிட்ட இருந்து உன்ன பிரிக்கிறதுக்கு நேரம் பார்த்து இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ண சொல்லி டாக்டரை ஆள்விட்டு மிரட்டிருக்கான் அவரு முடியாதுன்னு சொல்லவும் பொய் கேஸ் பைல் பண்ணி ஹாஸ்பிடல இழுத்து மூட வச்சுறுவேன்னு சொன்னதால அவரும் உன்கிட்ட அப்டி சொல்ல வேண்டியதா போச்சு

உன்ன உங்க குடும்பத்துகிட்ட இருந்து பிரிச்சு உங்கப்பாகிட்ட பேசி வைதேகிய கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தான் ஆனா வைதேகி சென்னைக்கு போனதால முடியாம போச்சுஎன்று ஏமாற்றத்தின் சுவடு அப்பட்டமாய் தெரிந்தது அவள் முகத்தில்அப்பவும் அவன் சும்மா இருக்கல உங்கள வேவு பாக்க ஆள் செட் பண்ணி அப்றம் வைதேகிய கடத்தி கல்யாணம் பண்ண நினைச்சது நீ போய் தடுத்ததுன்னு அதெல்லாம் உனக்கே தெரியும் தானே?” என்று ஒன்றுவிடாமல் தன் தமையனின் சூழ்ச்சிகள் அத்தனையும் விலாவரியாய் விளக்கி முடிக்க

இத்தனைக்கும் காரணம் கதிரேசன் தான் என்று எண்ணியவனின் முகம் கோபத்தில் கடுமையை பூசிக்கொண்டது கைமுஸ்டிகள் இறுக கோபத்தை அடக்க பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான் விஷ்ணு ரௌத்திரத்தில் கண்கள் தணலாய் ஜொலிக்க அவன் உடலின் அங்க அசைவுகளை கவனித்தவள் 

அவன் கோபத்தை தணிக்கும் விதமாய்நீ எதுவும் பண்ண தேவையில்ல விச்சு அவனுக்கான தண்டனை கிடைச்சுருச்சு வினை விதைச்சவன் வினைய அனுபவிச்சு தானே ஆகணும்! ஆக்சிடன்ட் ஆகி இப்போ ஹாஸ்பிடல்ல படுத்துருக்கான் எந்திரிக்க முடியலை ஒரு கால எடுக்கணும்னு டாக்டர் பேசிட்டு இருக்காங்கஎன்று உணர்ச்சியற்று கூறியவள் அவன் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று பார்க்க எந்த சலனமும் இல்லை அதே அமைதி 

ரொம்ப தங்க்ஸ் கவி இப்டி ஒரு திருப்பம் அதுவும் எனக்கு சாதகமா வரும்னு நா நினைச்சு கூட பாக்கல என்ன சொல்றதுன்னு தெரியல அவ்ளோ சந்தோஷமா இருக்கு! தேவிம்மா எப்பவும் எனக்கு தான்என்று குரலிலும் முகத்திலும் பலவித உணர்ச்களை காட்டி படபடவென பேசினான் விஷ்ணு 

அதை காணவே அவளுக்குள் அத்தனை சந்தோஷம் இமைக்காமல் இதழ் விரியா புன்னகையுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள் கவிதா, மருத்துவ அறிக்கையை முன்னும் பின்னும் புரட்டி புரட்டி பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தவன் எதிரில் இருப்பவளை கண்டு சற்று உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி கொண்டு பேச தொடங்கினான்சரி கவி நீ கிளம்பு யாராவது பாத்தா ஏதாவது கதை கட்டி விட்டுருவாங்க நீயா போயிருவியா இல்ல நா துணைக்கு வரவா?” என்று அக்கறையுடன் கேட்க

அவன் கரிசனத்தில் வெறுமையான புன்னகை உதிர்த்தவள்வீடு வரைக்கும் தானே துணைக்கு வர முடியும் வாழ்க்கை முழுக்க முடியாதேஎன்றவளுக்கு தொண்டை அடைத்ததுதயக்கத்துடன்நிஜமாவே என்மேல உனக்கு கொஞ்சம் கூட லவ் இல்லையா விச்சு அது கூட வேணாம் ஒரு சின்ன அட்ராக்சன் கூட வரலையா?” என்று வினவியவளின் குரலில் தெரிந்த மாற்றத்தை கண்டு சலனமில்லாமல் நிதானமாக பதில் கூறினான்

ப்ளீஸ் கவி அத பத்தி பேச வேணாம் காதல் கேட்டு வர கூடாது அது தானா வரணும் அப்றம் அட்ராக்சன் இஸ் நாட் லவ்! நீ என்னோட பிரெண்ட் அவ்ளோ தான் அந்த எல்லைக்குள்ளயே இருந்துக்குவோமே அது தான் நல்லது எனக்குன்னு ஒருத்தி பிறந்திருக்கா அதே மாதிரி உனக்குன்னு ஒருத்தன் பிறந்திருப்பான் நீ எதிர்பார்த்த குணங்களோட!, நாம நினைச்சது கிடைக்கலன்னா கிடைச்சத வச்சு வாழ பழகிகனும் அது தான் நல்லதுஎன்று அவளுக்கு புரிய வைக்கும் எண்ணத்துடன் கூற

போலீஸ் ஆனதும் ரொம்ப நல்லா பேச ஆரம்பிச்சிட்டஎன்று மெலிதாக புன்னகை சிந்திவைதேகிய நாளைக்கு நிச்சயம் பண்ண வர்றாங்கலாமே?” 

ஆமா ஆனா நிச்சயம் நடக்கப்போறது எனக்கும் அவளுக்கும் தான் இத்தனை நாள் உண்மை என்னன்னு தெரியாம குற்றவுணர்ச்சியில தவிச்சிட்டு இருந்தேன் அதனால தான் கல்யாணத்தை அன்னைக்கு நிறுத்துனேன் இப்போ தான் உண்மை தெரிஞ்சு போச்சே இதுக்கு பிறகு அவள வேற ஒருத்தனுக்கு விட்டு கொடுக்க என்னால முடியாது அவகிட்ட கடுமையா நடந்துகிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன்என்று பூரிப்புடன் கூறியவனின் உள்ளத்தில் சொல்ல முடியாத பலவகையான உணர்வு கலவைகள் எழுந்தது

கல்யாணத்துக்கு என்ன கூப்பிடுவ தானே?” 

கண்டிப்பா உன்ன இன்வைட் பண்ணுவேன் கவி உன்ன ரொம்ப எதிர்பாப்பேன்என்று சிறு புன்னகையுடன் கூற

நா இல்லாம நடந்துருமா என்ன?” என்று புருவம் உயர்த்தி கூறியவள்சரி நா கிளம்புறேன் ரொம்ப நேரமாச்சுஎன்று விடைபெற்று செல்ல

வண்டியின் விளக்கு கண் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு

பள்ளி பருவத்தில் இருவரும் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் பார்ப்பதோடு சரி சரியாக பேசி கொண்டதில்லை பார்க்கும் போது சிறு புன்னகை சுருக்கமான பேச்சுகளோடு முடித்து கொள்வார்கள் கல்லூரி சென்ற பின்பு தான் அவனிடம் சகஜமாக பேச தொடங்கியது அவனின் கலகலப்பான பேச்சும் துணிந்து செய்யும் நடவடிக்கையும் எதையும் எதிர்த்து கேட்கும் குணமும் பிடித்து போக அது காதல் தானா என்பதை அவளால் அறுதியிட்டு ஒரு முடிவிற்கு வர முடியவில்லை

ஆரம்பத்தில் மனதில் எந்தவித சலனமுமில்லாமல் பழகியவள் போக போக அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காதலாய் மாறிட அவனிடம் எதையும் வெளி காட்டி கொண்டதில்லை கல்லூரி இறுதியாண்டு படிப்பு முடியும் தருவாயில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியவள் பதில் ஏதும் கூறாமல் சன்ன சிரிப்புடன் நகர முற்பட்டவனை தடுத்து நிறுத்தி

எனக்கு பதில் சொல்லிட்டு போ விச்சு எதுவும் சொல்லாம சிரிச்சிட்டு போனா என்ன அர்த்தம்வார்த்தையில் ஏமாற்றத்தின் கோபம் தென்பட்டது

சொல்றதுக்கு எதுவும் இல்லன்னு அர்த்தம்என்றான் நிதானமான குரலில்

இத நா எப்டி எடுத்துகிறதுஎன்று தவிப்புடன் கேட்க

எப்டி வேணாலும் எடுத்துக்கலாம் அது உன்னோட மனச பொறுத்து! பட் எனக்கு உன்மேல அந்த மாதிரியான எண்ணம் இல்ல வீ ஆர் பிரெண்ட்ஸ் அவ்ளோ தான் அதுக்கு மேல எதுவும் இல்லஎன்றான் அழுத்தமான பார்வையில் 

என்ன பிடிக்கலையா?” வார்த்தையில் சிறு கோவல் வெளிப்பட

பிடிச்சிருக்கு ஒரு பிரெண்டா! ஆனா.. லைஃப் பாட்னரா நினைச்சி பாக்க முடியாது, எனக்குன்னு சில லட்சியம் இருக்கு அத அடையிற வரைக்கும் இந்த காதல் கத்திரிக்கா எதுவும் இல்ல அப்டியே இருந்தாலும்! உன்மேல இல்ல கவி சாரி எனக்கு எதையும் ஒளிச்சு வச்சு பேச தெரியாதுஎன்று வெளிப்படையாக கூறியவனிடம்

உணர்ச்சியற்று புன்னகைத்தவள் அதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை என்ன பேசுவது ஜஸ்ட் பிரெண்ட் என்று போகிற போக்கில் அலட்சியமாய் கூறுபவனிடம் தன் காதலை ஏற்று கொள்ளுமாறு யாசகம் கேட்பது தனக்கும் தன் காதலுக்கும் இழுக்காக போய்விடும் என்று எண்ணியவள் அதற்கு மேல் ஒன்றும் பேசமால் மௌனமாய் கண்ணீர் வடித்தபடி கடந்து சென்று விட்டாள் அதன் பின்னான சந்திப்புகளில் பொதுவான சிரிப்பு மட்டுமே இருந்தது

Advertisement