மீண்டும் கேட்கும் குழலோசை – 19 2 2169 “சரி வா போய் வேற வேலை ஏதாவது இருக்கான்னு பாப்போம் கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும் அவனே என்ன விஷயம்னு சொல்லுவான்” என்று குழப்பத்தில் இருந்தவனை கைபிடித்து அழைத்து சென்றான் “ம்மா ம்மா” என்று குரல் கொடுத்து கொண்டே அடுக்களைக்குள் நுழைந்த மகனை கண்கொட்டாமல் பார்த்தார் அன்னம் ஆச்சர்யத்தின் குறிகள் முகத்தில் தென்பட “என்னம்மா என்னமோ புதுசா பாக்குற மாதிரி பாக்குற இந்த உடுப்புல நா நல்லா இருக்கேனா” என்று முதன் முறையாக தாயிடம் அபிப்பிராயம் கேட்க “ஒனக்கென்னடா ராசாகனக்க ஜம்முன்னுல இருக்க” என்று நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர் மகனின் முகத்தில் தெரிந்த வேறுபாட்டை கவனிக்க தவறவில்லை என்றுமில்லாத உற்சாகம் ஒருவித பூரிப்பு என்று ஆராய்ந்தவரை உலுக்கி சிந்தனை கலைத்தவன் “என்னம்மா என்ன ஆராய்ச்சி பண்ணுற?” “இல்ல என்னைக்குமில்லாம இன்னைக்கு பளிச்சிண்டு இருக்கியா? அதான் பாத்துட்டு கெடக்கேன் ஏண்டா ஓம் மனசுல எது இல்லையா இப்டி சிரிச்ச மொகமா சித்தரமா இருக்க“” என்று வருத்தம் தேய்ந்த குரலில் கேட்க “இப்போ தான்ம்மா சந்தோஷமா இருக்கேன் நடக்க போறதை மட்டும் பாருங்க” என்று அன்னத்தின் கன்னம் தட்டி கள்ள சிரிப்புடன் அங்கிருந்து அகன்றவனை பார்த்து கொண்டிருந்தவர் அடுப்பில் வைத்த பாலை மறந்து போனார், பால் பொங்கி வழிய அவசர அவசரமாக அடுப்பை அணைத்து விட்டு “என்னமோ போ” என்று அலுத்து கொண்டே அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினார் ஏழு மணியாக மாப்பிளை வீட்டார் வரும் முன்பே கல்யாண போர்வையை விரித்து அனைத்தும் தயராய் எடுத்து வைத்திருக்க வருவார்கள் வருவார்கள் என்று கண்கள் பூத்து காத்து கொண்டிருக்க கூடத்தில் சிறு சலசலப்பு தொடங்கியது “ஏய் என்னப்பா மணி என்னாகுது இன்னும் மாப்பிள்ளை வீட்டுகாரகல காணோம் ஏய் பரமு அவுக எங்கன வாராகன்னு கேட்டு சொல்லுப்பா எம்புட்டு நேரம் தான் காத்து கொடக்க” என்று கூட்டத்தில் பெரிய தலை சத்தம் போட அவசரமாக பட்டன் வைத்த கைபேசியில் இருந்து அழைப்பு விடுக்க சென்றவரை வேண்டாம் என்று இடைமறித்தவனை திகைத்து பார்த்தார் பரமசிவம் “அவங்க வர மாட்டாங்க“ “வரமாட்டாகன்னா புரியலை” என்றவரிடம் “அப்பா என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வர வேணாம்னு நான் தான் சொல்லிட்டு வந்தேன்” என்றதும் கோபம் உச்ச தலைக்கு ஏற கொத்தாக மகனின் சட்டையை பற்றி கொண்டார் அனைவரும் திடுக்கிட்டு பதறிபோயினர் “ஏண்டா அவளுக்கு நல்லது நடக்க விட மாட்டியா நீ தான் அவள வேணாமுன்னு நத்தாதுல விட்டு போயிட்ட இப்போ என்னத்துக்கு அவுகள வர வேணாமுன்னு சொல்லிட்டு வந்துறுக்க ஓம் பவுசு எல்லாம் ஒன்னோட வச்சுகனும் சர்க்கார் உத்தியோகம் பாத்தா ஓ இஷ்டத்துக்கு பண்ணுவியோ” என்று கன்னம் இரண்டிலும் மாறி மாறி அறைய “யாத்தே எம்புள்ளைய போட்டு அடிக்கிறாறே” என்று அலறிய அன்னம் ஓடிவந்து இருவருக்கும் நடுவில் நின்று கொண்டு “விட்டுருங்க சாதி சனமெல்லாம் பாக்குது” என்று அழுது கொண்டே கணவனை அடக்க முற்பட கூடிட்டிருந்த கூட்டத்தில் ஒரு சில ஆண்கள் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் பிரித்து நிறுத்தினர் “ஏப்பா என்ன தான் இருந்தாலும் பெத்த புள்ளைய போட்டு இப்டியா அடிக்கிறது அவனும் ஏதோ தர்ம கொடுக்குற மகராசங்கனக்க கன்னத்தை காட்டிகிட்டு நிக்கான்” என்று கூட்டத்தில் சத்தம் எழுப்பிய வெள்ளை தலை விஷ்ணுவிடம் திரும்பி “ஏலே கோட்டிபயலே நேரத்துக்கு ஒன்ன பேசுத அன்னைக்கு பொண்ண புடிக்கலன்னு சொல்லிட்டு போன இன்னைக்கு எதுக்குல இப்டி பண்ண அவுகள வர வேணாம்னு சொல்லிட்ட சரி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன பதிலலே சொல்ல போற” என்று கேள்வி கேட்டு நிறுத்த கூடத்தில் ஏற்பட்ட சலசலப்பில் அறையில் இருந்த பெண்கள் மூவரும் என்னவென்று வெளியே வந்து எட்டி பார்த்தனர் குற்றவாளியாய் அனைவரின் முன்னிலையிலும் நின்றிந்தவன் வாய் திறந்து பேச தொடங்கினான் “பெரியப்பா அன்னிக்கு நா நடந்துகிட்டது தப்பு தான் ஒத்துக்கிறேன் அப்ப இருந்த நிலமை வேற இப்போ இருக்குற நிலமை வேற” என்று வேதம் பேசியவனை கண்டு பரமசிவத்திற்கு கோபம் இன்னும் அதிகமானது “என்ன அன்னிக்கு இன்னிக்குன்னு கதை அளந்துட்டு கெடக்க இப்போ என்ன தா.. சொல்லவர தெளிவா சொல்லு” என்று சீற்றத்துடன் பேச “முதல நிச்சயம் முடியட்டும் பெரியப்பா அப்றம் பேசிக்கலாம்” என்ற மகனிடம் “என்ன பொறவு இப்போன்னு இழுத்துக்கிட்டு எதுனாலும் இப்பவே சொல்ல சொல்லுங்க” என்று சற்றும் கோபம் தணியாமல் பரமசிவம் கேட்க “ஏம்பா பரமு அவன் தான் இம்புட்டு தூரம் சொல்லுதான்ல தட்டை மாத்திட்டு மத்தத பேசலாம்ப்பா நல்ல நேரம் முடியப்போகுதா இல்லையா?” என்றதும் சற்று கோபத்தை தணித்து கொண்டவர் அமைதியாக தூணுக்கு முட்டு கொடுத்தபடி நின்று கொள்ள “ஏத்தா நீங்க என்னத்துக்கு இப்டி நிண்டுகிட்டு இருக்கீக மசமசன்னு நிக்காம ஆக வேண்டிய வேலைய பாருங்கத்தா நேரம் போவுதா இல்லையா மனுஷன் மக்க பசியில பாதியில எந்திச்சு போயிர போறாணுக“என்ற அதட்டலில் நடப்பது எதுவும் புரியாமல் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்களாய் இந்திராணி பெருமாள் சாமி இருவரும் அமர முறுக்கி கொண்டு நின்ற பரமசிவத்தை பேசி புரிய வைத்து தம்பதியராய் சபையில் அமர வைத்தனர் பேசவேண்டியதை பேசிவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்று இருவீட்டாரும் மனமகிழ்வுடன் தட்டை மாற்றி கொள்ள அத்தனைக்கும் காரணமானவனோ அமைதியாக தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தான் அதுவரை நடந்தவைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வைதேகியை அழைத்து சென்று மிஞ்சிய அலங்காரத்தை செய்து முடித்து அழைத்துவர, வந்தவள் அனைவரையும் வணங்கி எழவும் புடவையை கொடுத்தனுப்பினர் எந்த சலனமுமில்லாமல் வாங்கி சென்றவளை புடவை மாற்றி அழைத்துவர அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் தான் ஒரு இரவில் என்ன நடந்தது என்று மாப்பிளை பெண் இருவரையும் ஒன்றாய் நிற்க வைத்து மாலை மாற்ற சொல்லி பின் உறவினர்கள் ஒவ்வொருவராய் மணமக்களுக்கு பொட்டு வைத்து ஆசீர்வதிக்க மெலிதான புன்னகையை இதழில் தாங்கியபடி நின்று கொண்டிருந்தான் விஷ்ணு துவாரகா விஜயன் இருவரும் என்ன நடந்தது என்பதை உணர்ந்து கொள்ளவே சற்று நேரமாயிற்று வைஷாலிக்கு காரணம் தெரியவில்லை என்றாலும் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி எண்ணியவை ஈடேறிவிட்டது என்று, ஏதோ பெயருக்கு முகத்தில் புன்னகையை ஏந்தி கொண்டு நின்றவளை அவ்வப்போது அருகில் இருந்தவனின் விழிகள் தீண்டி சென்றது இரவு கடுமையாக பேசிவிட்டு சென்றதை எண்ணி மருகினான் விஷ்ணு சொந்த பந்தங்கள் நடந்த நிகழ்வை பற்றி பலவாறு பேசிகொண்டே உணவை முடித்துவிட்டு ஒவ்வொருவராய் அகல பரமசிவம் என்ன நடந்தது என்று புரியாமல் ஓர் ஓரமாக முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தார் “இப்ப என்னத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்கீக அதா நல்லாபடியா முடிஞ்சிருச்சுல பொறவு என்ன?” என்று கணவனின் அருகில் வந்து அமர குடும்பத்தில் இருந்தவர்கள் கூடத்தில் கூடினர் “டேய் மருமகனே எதிர்பாக்கவே இல்ல இப்டி ஒரு டுவிஸ்ட் வைப்பன்னு சந்தோஷம் தாங்க முடியல எது எப்டியோ இனி கல்யாணத்துக்கான வேலைய பாக்க வேண்டியது தான் ஒரு வாரம் தங்கிட்டு போகலாம்னு வந்தோம் இப்போ எக்ஸ்ட்ரா ஒரு வாரம் தங்கனும் டபுள் டமாக்க தான்! அய்யோ.. இந்த நல்ல விஷயத்தை கொண்டாடியே ஆகணும்” என்ற சாவித்ரி நிலைகொள்ளாமல் குத்துகலித்தவர் இனிப்பு செய்ய வேண்டி சமையல் அறை நோக்கி சென்றார் இந்திராணி பெருமாள் சாமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை “அத்தை இப்போ சந்தோஷம் தானே?” என்று புருவம் உயர்த்தி புன்னகைத்தவனை “போடா யார்கிட்டயும் சொல்லாம இம்புட்டு வேலை பாத்துருக்க என்ன நடந்துச்சுன்னு நா எதும் கேக்க மாட்டேன் இந்த கல்யாண நடந்தா போதும்டா” என்று இந்திராணி நெகிழ்ச்சியுடன் பேச மனதை மாற்ற வேண்டி “என்ன போடாவா நா உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையாக போறேனாக்கும் மருமகனுக்கு கொடுக்குற மரியாதை கொஞ்சம் குறைஞ்சாலும் அப்றம் தாலி கட்ட மாட்டேன் பாத்துக்கோங்க” என்று போலியாய் மிரட்ட “சரிங்க மாப்ள இந்த மருவாதை போதுமான்னு பாருங்க ” என்று பவ்யமாய் கூறவும் விஷ்ணு சிரித்து விட்டான்