Advertisement

நடந்த நிகழ்வை விதிர்விதிர்த்தவாறு பார்த்து கொண்டிருந்த பெண்கள் இருவரையும் கண்டு சுள்ளென்று கோபம் எழஏய் அவ தான் அழுதுகிட்டே போறாள செக்கு மாடு மாதிரி நின்னுட்டு இருக்கீங்க போய் என்னன்னு கேட்டு சமாதனம் பண்ணுங்க நின்னு வேடிக்கை பாத்துகிட்டுஎன்று எரிந்து விழுந்தவன்

இந்தநேரத்துல எங்க போய் தொலைஞ்சானோஎன்று விஷ்ணுவிற்கு அழைப்பு விடுத்தான் விஜயன்

அலைபேசி முழுதும் அடித்து ஓய்ந்தது தான் மிச்சம்டேய் நீ போன் போட்டு பாருடாஎன்று எரிச்சலுடன் கூற

ஆமா என்னோட நம்பர பாத்து டக்குன்னு எடுத்துருவான் பாரு? எடுத்து பேசுனா என்ன மாதிரி கழுவி ஊத்துவானோஎன்று முணுமுணுத்து கொண்டே அழைப்பு விடுக்க

அழைப்பை ஏற்றவன்கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்களேன் எப்ப பாரு ஒட்டுண்ணி மாதிரி கூடவே திரியணுமா? எங்கயும் போயிற கூடாது உடனே போன் போட்டு எங்க இருக்கன்னு கேட்டு நச்சரிக்க வேண்டியது போன வைடாஎன்று காரசாரமாக கடிந்து விட்டு அழைப்பை துண்டித்துவிட

எதிர்முனையின் கோபம் துவாரகாவின் முகத்தை வாட்டமுற செய்ததுகொஞ்ச நேரம் இருந்துட்டு அவனே வருவானாம் நம்மள படுக்க சொன்னான்என்றுவிட்டு கீழே சென்றுவிட்டான் 

என்னாச்சு இவனுக்கு எதுக்கு இவ்ளோ கோபமா பேசிட்டு போறான்என்று விஷ்ணுவின் மனநிலை அறியாது குழப்பத்துடன் அறைக்கு சென்றான் விஜயன்

மிரட்டினாலும் அவள் நிச்சயத்திற்கு ஒருக்காலும் சம்மதிக்க போவதில்லை என்று தெரியும்! வைதேகியின் மேல் அவனுக்கும் நேசம் உண்டு அவளை விட்டு தர மனம் சிறிதும் இடம் கொடவில்லை பிரியம் வைத்த மனம் பிரிவை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்?, இன்று தனக்காக பார்த்தால் நாளை அவள் துன்பத்தில் தள்ளாடுவாள்  அதுவும் ஆயுள் முழுவதும் அது தேவையா? என்று மனம் அவன் முடிவை எண்ணி சாதகமாக வாதம் செய்தது 

தன் காதலை பணயம் வைத்து திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க அங்கேயே இருந்தால் நிச்சயம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி தன் நிலையை கூறிவிடுவேனோ என்ற பயம் தொற்றி கொண்டது இதுவரை மென்மையாக அனுசரணையாக நடந்து கொண்டவளிடம் கை ஓங்கிவிட்டோமே என்று முகம் கசங்கி அவள் கன்னத்தை பதம் பார்த்த கையை வெறுப்போடு பார்த்தவனின் மனதில் என்ன வாழ்க்கை என்ற வெறுமை படர்ந்தது 

தோட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டவனுக்கு நினைவு அவளை விட்டு அகலவில்லை கண்ணாடி சில்லுகளை இதயத்தில் வைத்து அழுத்துவது போன்று ஏதோ ஒரு வலி உயிரை வதைத்து பிசைந்தது கன்னத்தில் வழிந்த கண்ணீர் இடகையில் பட்டு தெறிக்க அவன் கண்ணீரை கண்டு வருணதேவனின் மனம் கணத்ததோ என்னவோ சத்தமில்லாமல் வரும் மின்னலாய் திடீரென எந்த திசையில் இருந்து வந்ததோ சடசடவென ஆர்ப்பரிக்கும் ஒலியோடு மழை நீர் மண்ணை தொட மழையின் வேகம் உணர்ந்து மோட்டார் அறைக்குள் சென்று தஞ்சம் புகுந்தான் விஷ்ணு, சற்று நேரத்தில் ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு சுவடு தெரியாமல் மறைந்து போக

விஷ்ணுவின் அலைபேசி சிணுங்கியது புதிய எண்ணை கண்டு புருவம் சுருங்க அலைபேசியை வெறித்தவன்  “இந்த நேரத்துல யாரு..?” என்ற யோசனையுடன் உயிர்பித்து காதில் வைக்க 

மறுமுனையில் பேசிய பெண் குரலுக்கும் தோட்டத்துல தான் இருக்கேன் ம் சரி வெய்ட் பன்றேன்என்று பதில் அளித்துவிட்டு காத்திருப்பில் கரைந்தான்

தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தவளை அமைதிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்ஏய் அழுகாத வைதேகி உன்னோட நல்லதுக்கு தானே சொன்னான் பெரியப்பா பெரியம்மா பாவம் இல்லையா? அவங்களுக்காக யோசிச்சு பாரு இப்டி பிடிவாதம் பண்ணாத சரின்னு ஒத்துக்கோ யாரும் விரும்புன வாழ்க்கைய வாழ்ந்திர முடியாது எதார்த்தத்தை புரிஞ்சு நடந்துக்க பாருஎன்று வைஷாலி புரியவைக்கும் எண்ணத்துடன் வருத்தம் தேய்ந்த குரலில் கூற

என்ன எதார்த்தம் வைசு உன்னால விஜி அண்ணாவை விட்டு வேற ஒரு வாழ்க்கைய நினைச்சு பாக்க முடியுமா சொல்லு? என்று ஆவேசமாக கேட்கவும் கப்சிப்பென்று அடக்கி கொண்டாள்,வெறும் வாய் வார்தைகள் மட்டும் அவள் மனதிற்கு ஆறுதலாக அமையாது என்று இருவரும் படுத்து கொண்டனரே தவிர உறக்கம் வரவில்லை 

கண்களில் நீர் வழிய யோசனையுடன் படுத்தவள் நிச்சயம் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் நாணல் நுனியாய் துளிர் விட அதையே கெட்டியாக பிடித்து கொண்டவள்வழி கிடைக்கும் கிடைக்கும்என்று மனதில் உறுபோட்டு கொண்டே தன்னையும் மறந்து அயர்ச்சியில் உறங்கி போனாள்.

மாலை நிச்சயம் செய்ய வருவதாக இருக்க அதற்கான ஏற்பாடுகளை காலையிலேயே கவனிக்க ஆரம்பித்திருந்தனர் ஒரு பக்கம் தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, மறுபக்கம் வந்தவர்களை சாவித்ரியும் இந்திராணியும் கவனித்து கொண்டனர், விமரிசையாக நடந்த வேண்டும் என்று முடிவு செய்து ஊரார் அனைவரையும் அழைத்திருந்தனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை கையில் எடுத்து கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர் 

எப்போது வீடு வந்து சேர்ந்தானோ உறங்கி எழுந்தவன் அவசர அவசரமாக எங்கேயோ கிளம்பி கொண்டிருந்தான் உறக்கம் கலைந்து கண்விழித்த துவாரகா விஷ்ணுவை கண்டு விழிகளை கசக்கி பார்த்தவன்நீ எப்போட வந்த இப்போ எங்க கிளம்பிட்ட இருக்க ஒரு அஞ்சு நிமிஷம் இரு நானும் கூடவறேன்என்று அவசரமாக படுக்கையை விட்டு எழ

இல்ல நானே போய் பாத்து பேசி முடிச்சுட்டு வறேன் இப்போ போனாதான் ஈவ்னிங் சீக்கிரம் வர முடியும்என்று இயல்பாக கூறிவிட்டு வேகமாக அறையைவிட்டு வெளியேறினான்

இவன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் கொஞ்சமாவது பீல் பண்றான்னான்னு பாரு எதுவுமே நடக்காத மாதிரி எந்த கவலையும் இல்லாம அவளோட நிச்சயத்துக்கு சீக்கிரம் வரணும்னு சொல்லிட்டு போறான்என்று புலம்பியபடி எழுந்தவன் பின்பக்கம் இருந்த குளியலறைக்கு சென்று முகம் கழுவிவிட்டு வர

இந்தாங்க சார் உங்களுக்கு காஃபிஎன்று நீட்டினாள் சஞ்சளா 

அமைதியாக வாங்கி கொண்டவன்உங்கம்மா கால் பண்ணாங்களா?”என்று ஒரு மிடறு பருகியபடி கேட்க

ம் பண்ணாங்க பேசிட்டேன் இன்னும் ரெண்டு நாள்ல கிளப்பி வந்துருவோம்னு சொல்லிட்டேன் சார்என்று உற்சக்கத்துடன் கூற 

அவன் இதழில் லேசாய் புன்னகை அரும்பியது

ம் சரி வைத்தி எங்க?”

அக்கா ரூம்ல இருக்காங்க இன்னும் எந்திரிக்கல நைட் ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்தாங்க அப்றம் தான் தூங்கவே ஆரம்பிச்சாங்கஎன்று வாடிய முகத்துடன் கூறியவள்

இந்த விஷ்ணு அண்ணா ஏன் இப்டி இருக்காங்க அக்காவ கட்டிக்க கொடுத்து வச்சுறுக்கணும் நீங்க அவரோட பிரெண்ட் தானோ இதெல்லாம் எடுத்து சொல்ல கூடாதா? கூடவே சுத்துறதுக்கு தான் லாயக்கு உருப்படியா எந்த வேலையும் செய்யிறது இல்லை ம்ஹும்என்று உதட்டை சுளித்து நொடித்து கொண்டவள் டம்ளரை வாங்கி கொண்டு செல்ல

எல்லாரும் நம்மலயே டார்கெட் பண்றாங்க நானா வேணாம்னு சொல்றேன் அவனோட நிலைமை அவனுக்கு தான் தெரியும்என்று எண்ணி கொண்டே விஜயனை எழுப்பியவன் தோட்டத்தில் சென்று குளிக்க அழைத்து சென்றான்

மாலை நேரம் நெருங்க நெருங்க வைதேகிக்கு ஒரு வித படபடப்பு தொற்றி கொண்டதுகடவுளே  நிச்சயம் நடக்க கூடாதுஎன்று மனதிற்குள் வேண்டாத தெய்வமில்லை ஊரார் ஒவ்வொருவராக வர தொடங்கினர்

வெளியே போடபட்டிருந்த நாற்காலியில் ஒருசிலர் அமர்ந்து கொள்ள ஒரு சிலர் உள்ளே கூடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர், பெண்கள் அனைவரும் கிளம்பி தயாராகி இருக்க வைதேகியை  வைஷாலி அழகு படுத்த சஞ்சளா உதவி செய்து கொண்டிருந்தாள்

ஏய் எதுக்குப்பா எனக்கு இதெல்லாம் வேணாம் புடவையும் ரெண்டு செயின் மட்டும் போதும் விருப்பமில்லாத கல்யாணத்துக்கு இவ்ளோ அலங்காரம் தேவையா? ஏற்கனவே நொந்து போயிருக்கேன் இதுல நீங்க வேற படுத்தாதீங்கஎன்று செய்த அலங்காரத்தை கலைக்க

ஏய் என்ன பண்ற நீ? எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணிருக்கேன் எல்லாத்தையும் கலைச்சிட்டு இருக்க இப்டியெல்லம் பண்ண சொன்னது விஷ்ணு தான் அவன்கிட்ட பேசிக்கோஎன்றவள் பூவை வைத்து அழுத்தமாய் கேர் பின்னை கொண்டு குத்த அந்த வலியை விட அவனது உத்தரவு என்ற வலிதான் அதிகமாய் இருந்தது

நமக்கு என்ன வேலைஎன்று நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு ஓரமாக அமர்ந்து விஜயனும் துவாரகாவும் கதை அளந்து கொண்டிருந்தனர்

என்னடா இவன இன்னும் காணோம் என்ன பண்ணிட்டு இருக்கான் நம்மள வெளிய அனுப்பிட்டுஎன்று தீவிரமான பாவனையுடன் பேசி கொண்டிருக்க

வெள்ளை நிறத்தில் உயர்தரமான பிராண்டட் சட்டையும் அதற்கு ஏற்றார் போல நிறத்தில் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கொண்டு  கதவை திறந்து கம்பிரமாக அதே சமயம் வசீகர புன்னகையை இதழில் தேக்கி வைத்து நடந்து வர

நண்பர்கள் இருவரும் பார்த்த விழி பார்த்தபடி பூத்து கிடைக்க என்ற ரீதியில் வாய்பிளந்து நின்றனர் அருகில் வந்தவன் சொடுக்கிட்டு கவனத்தை கலைத்துஎன்ன அப்டி பாக்குறிங்க?”

டேய் நீ நல்லா தானே இருக்க உனக்கு எதுவும் ஆகிடலயே?” என்று துவாரகா அச்சத்தை முகத்தில் காட்டி கேட்க

வெடி சிரிப்பு சிரித்தவன்நா நல்லா தான் இருக்கேன் போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க நா அம்மாகிட்ட பேசிட்டு வேறேன்என்று புன்னகை மறையாமல் கூறிவிட்டு நகன்றுவிட

டேய் இவன் என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கான் என்னமோ மாப்பிள்ளை மாதிரில நடந்து போறான் நேத்து நைட்டு அவ்ளோ பேசிட்டு இப்போ எதுவுமே நடக்காத மாதிரி சிரிச்சுக்கிட்டு போறான்என்ற துவாரகாவிற்கு விஷ்ணுவின் எண்ணம் என்னவென்று தெரியாமல்  மண்டை காய்ந்தது  

Advertisement