Advertisement

காக்கி உடையில் தன்னை புகுத்தி கொண்டவன் கம்பிரமாய் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து துருத்தி கொண்டிருந்த மீசையை நீவி விட்டவன் முகத்தில் தெரிந்த கம்பிர புன்னகை ஏந்தியபடியே சாவித்திரியின் அறையை நாட அவர் அறையில் இல்லை மாடியில் இருந்து பேச்சு சத்தம் கேட்கவே படியேறி சென்றான் விஷ்ணு

பக்கத்து வீட்டு பரிமளம் மாமியிடம் பேசி கொண்டே துணிகளை உலர வைத்து கொண்டிருந்தார் சாவித்ரி “அத்தை” என்றழைத்தவனை சட்டை பண்ணாமல் தன் வேலையை கண்ணும் கருத்துமாய் செய்து கொண்டிருக்க

“அத்தை நா கிளம்புறேன் டியூட்டிக்கு டைம் ஆச்சு” என்றதும் அவனை திரும்பி பார்த்தவர் “சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் வேணுன்னா சாப்ட்டு போ” என்று சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் கூற

“இல்ல அத்தை எனக்கு பசிக்கல நீங்க என்கிட்ட பேசுனதே வயிறு நிறைஞ்ச மாதிரி தான் இருக்கு நா கிளம்புறேன் நைட்டு எப்ப வருவேன்னு சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு சென்று விட, அவன் செல்வதை கவலையுடன் பார்த்து கொண்டிருந்தவர் அலைபேசியை எடுத்து தன் அண்ணன் பரமசிவனுக்கு மகன் வந்த விஷயத்தை தெரிவித்து விட்டு தன் அன்றாட பணியை தொடங்கினார்

காவல் அதிகாரிக்கே உரிய கம்பிரமான தோரணையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாவனை கண்டு காவல் உதவிஆய்வாளர் முதல் கான்ஸ்டபிள் வரை எழுந்து மரியாதை செலுத்திவிட்டு தத்தம் பணிகளில் மூழ்கிட தனது இருக்கையில் சென்று அமர்ந்தவன் “துவாரகேஷ்” என்றதும் விரைப்பாய் வந்து நின்றவனிடம் “குடிக்க கொஞ்சம் தண்ணி கொடு” என்று அதிகாரிக்கே உரிய தோரணையில் பணிக்க 

தண்ணிரை கொண்டு வந்து கொடுத்தவன் வீற்றிருந்தவன் குடித்து முடிக்கும் வரை மௌனம் காத்தவன் பேச தொடங்கினான் “ஏண்டா நாளைக்கு வந்து ஜாய்ன் பண்றேன்னு தான சொன்ன எதுக்கு இன்னைக்கு வந்த உடம்பு முடியல்லன்னா ஹாஸ்பிடல் போய்ட்டு வீட்டுலயே ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே” என்று பரிவும் அக்கறையும் கலந்த கண்டிப்புடன் கூற

வெற்று புன்னகை புரிந்தவன் “உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போகலாம் மனசு சரியில்லயே எந்த டாக்டர் கிட்ட போக சொல்ற வீட்டுல இருந்து அத்தைக்கு சங்கடத்தை கொடுக்க விரும்பல அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று வருத்தத்துடன் கூறியவன் டேபிள் மேல் அடுக்கி வைக்க பட்டிருந்த கோப்புகளில் பார்வையை செலுத்தினான்

துவாரகேஷ் விஷ்ணு விஜயன் வைஷாலி நால்வரும் இணைப்பிரியா தோழர்கள் போலீஸ் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற போது நால்வருக்குள்ளும் இணக்கம் ஏற்பட்டு, இன்று வரை நட்பை தொடர்கின்றனர், விஜயன் வைஷாலி இருவரும் திருச்சியில் பணிபுரிய நண்பனின் மனநிலை அறிந்து பணியிடை மாற்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் துவாரகேஷ்

 “உன்ன எதுக்காக சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வர சொன்னேன் தெரியுமா?” 

சொன்னா தானே தெரியும்? வர சொன்ன வந்துட்டேன் என்று மேம்போக்காக கூற

தன் டேபிள் மேல் இருந்த நீல நிற பைலை எடுத்து அவன் முன் நீட்டி “இத படிச்சு பாரு விஷ்ணு உனக்கு ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பாக்கலாம் நா விசாரிச்சு பாத்த அளவுல எந்த எவிடன்சும் கிடைக்கல எங்க ஆரம்பிச்சேனோ அந்த இடத்துலயே தான் வந்து நிக்கிறேன்” என்று நிறுத்தியவன் “எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இப்ப வரைக்கும் புரியல இந்த மாதிரி சம்பவம் நடந்ததா எந்த நீயூஸ்லயும் வரல சம்பந்தப்பட்டவாங்க சைட்டுல இருந்து நேரடியா எந்த புகாரும் வரல அது தான் எனக்கு பெரிய சந்தேகமா இருக்கு” என்று தீவிரமாக யோசனை செய்த வண்ணம் கூற

“என்ன துவா சொல்ற ஒருத்தர் கூடவா புகார் கொடுக்கலா” 

“ஒருத்தரும் புகார் கொடுகலன்னு சொல்ல முடியாது விஷ்ணு ஆனா அட்ரஸ் இல்லாம கடுதாசி ஒன்னு வந்துச்சு அத யார் எதுக்காக எழுதுனாங்க என்னன்னு இது வரைக்கும் தெரியல” என்றவன் சுற்றி முற்றிலும் பார்த்துவிட்டு “இந்த கேஸ்ஸ நா எடுத்து நடத்துறேன்னு இங்க இருக்குற யாருக்கும் தெரியாது தெரியவும் கூடாது” என்று கிசுகிசுப்பாய் கூற 

“ஏண்டா இது ஒன்னும் சீக்ரெட் ஆப்ரேஷன் இல்லையே யாருக்கும் தெரியாம நடத்துறதுக்கு என்னமோ பெரிய  ஆளுங்க சம்பந்தப்பட்ட மாதிரி இவ்ளோ ரகசியமா பேசுற என்று சிரித்து கொண்டே கூற 

இந்த கேஸ்ஸை அவ்ளோ சாதாரணமா எடை போட்டுறாத விஷ்ணு ரொம்ப பெரிய சீக்ரெட் மே பி நீ சொல்ற மாதிரி பெரிய தலைகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம்? இதுக்கு முன்னாடி இங்க வேலை பாத்த கருணாகரன் சார் தான் இந்த கேஸ்ஸ பர்சனலா எடுத்து விசாரிச்சாரு, அவருக்கு ஏதோ ஒரு க்ளூ கிடைச்சிருக்கு அது என்ன ஏதுன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியல அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினாரு லிகளா இல்ல இல்லிகளா யாருக்கும் தெரியாம” 

இந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்து மேல சந்தேகம் வந்து விசாரணைய இன்னும் தீவிரமா ஆரம்பிக்கும் போது தான் அவர காணோம்” என்று மெல்லிய குரலில் அதி தீவிரமாக கூறி முடிக்க

அதுவரை நிதானமாய் கேட்டுக்கொண்டிருந்தவன் “இவ்ளோ சாதரணமா சொல்ற காணாம போனது ஒரு உயர் அதிகாரி, டிப்பார்ட்மெண்ட் எந்த ஆக்சனும் எடுகளையா?, அந்த குடும்பம் என்னாச்சு அவங்க கிட்ட விசாரிச்சா பாதி கிணத்தை தாண்டுன மாதிரி தானே” என்றவன் சட்டென துளிர்த்த யோசனையில் எழுந்து கொள்ள

 “நீ நினைக்கிற மாதிரி இல்ல விஷ்ணு ரிஸ்கான வேலைய அசால்டா ரஸ்க் சாப்பிடுற கேப்புல பண்ணிருக்கான்னா அவன் எவ்ளோ பெரிய தலையா இருப்பான், எனக்கென்னமோ மேலிடத்தில யாரோ ஒருத்தர் அந்த கிரிம்னலுக்கு சப்போர்ட்டா இருபாங்கன்னு தோணுது கேஸ் எடுத்து விசாரிச்சவர என்ன பண்ணாங்கண்ணே தெரியல? அவருக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்ல அதுவே அவனுக்கு சாதகமா போயிருக்கலாம் யாரும் கம்பலைண்ட்டும் கொடுக்கல, கருணாகரன் சார் காணாம போன அன்னைக்கு நைட்டே அந்த குடும்பத்தையும் காணோம் எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு இதுவரைக்கும் தெரியல ஒரே குழப்பமா இருக்கு, அதே சமயம் மர்மாவும் இருக்கு அதான் உன்ன உடனே சென்னைக்கு கிளம்பி வர சொன்னேன் உனக்கும் கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸா டைவைட் பண்ண மாதிரியும் இருக்கும்” என்று  நிறுத்தியவன்

“நடந்த எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் விஷ்ணு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா! வைத்திக்கிட்ட.. உண்மைய.. சொல்லிட்டயா…?” என்று தயங்கி கேட்க 

அதுவரை இருந்த தீவிரம் மறைந்து போக “இல்லடா சொல்லல! சொல்லவும் முடியல எந்த முகத்தை வச்சுக்கிட்டு அவகிட்ட போய் பேசுவேன் நா கஷ்டபடுறதும் இல்லாம அவளையும் சேத்து கஷ்டப்படுத்துறேன்” என்று வருத்தத்துடன் இயம்பியவன் “வைதேகி சென்னையில தான் இருக்கா துவா” 

“எனக்கு தெரியும் எப்போயாவது போய் பார்ப்பேன் அவளும் கொஞ்சம் கொஞ்சமா அந்த சம்பவத்துல இருந்து வெளிய வர ஆரம்பிச்சுருக்கா “என்றவன் அவன் முகம் சோர்ந்து போய் இருப்பதை கண்டு

” முதல நீ சாப்டயா” என்று கேட்க

“ப்ச் இல்ல பசிக்கல” என்றவனை முறைத்த துவாரகேஷ் “கொஞ்சமாவது அறிவிருக்கா டேப்லெட் போடணும்னு தெரியாது இவ்ளோ கேர்லஸ்ஸா இருக்க” என்று ஆத்திரம் கொண்டவன் “சரி வா கேஸ் விஷயமா ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் அப்டியே வீட்டுக்கு போய்ட்டு சாப்டுட்டு டேப்லெட் போட்டுக்க மாத்திரை எடுத்துட்டு வந்துருக்க தானே”

“ம்ஹும் அது இல்லாம எப்டி இன்னும் கொஞ்ச நாள் வாழ வேணாமா” என்று விரக்தியாய் புன்னகைத்தவனை கண்டு கண்கள் கலங்கிட நிதானித்து கொண்டவன் “சரி வா போலாம்” என்று அழைக்க 

“வீட்டுக்கு போக வேணாம் ப்ளீஸ்டா ஹோட்டல்ல சாப்ட்டுகிறேன்” என்று சங்கடமாக மறுப்பு கூற

“ப்ச் அம்மா உன்ன பாக்கணும்னு சொன்னாங்க நீ வறேன்னு சொன்னதும் கையோட உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க எதுவும் பேசாம என்கூட வா” என்று வற்புறுத்தி வெளியே அழைத்து வந்தவன்

காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை மறுத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினர் எதையோ சிந்தித்து கொண்டு வந்தவனை அடிக்கொருமுறை  கண்ணாடியின் வழியே பார்த்த துவாரகேஷ் “என்னடா என்ன யோசனை பண்ணிட்டு வர” 

“ப்ச் ஒண்ணுமில்லடா இந்த கேஸ்ஸ பத்தி தான் யோசனை பண்ணிட்டு வறேன்” என்று சிந்தனை கலையாமல் கூற  

மெலிதாய் புன்னகைத்தவன் “நீ தான் ஃபைல படிக்கவே இல்லையே, என்கிட்டயே உன் வேலைய காட்டுற பாத்தியா, உன்னோட முகமே சொல்லுது நீ எதை நினைச்சுட்டு வரேன்னு நீ இன்னும் மாறவே இல்லடா ட்ரைனிங் பீரியட்ல எப்டி இருந்தயோ அப்டியே.. தான் இருக்க! எதையும் வெளிப்படையா சொல்றதில்ல மனசுக்குள்ளேயே வச்சு கஷ்டப்படுற, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டி உண்மைய மறைச்சுவச்சுருப்ப எல்லார்க்கிட்டயும் சொல்லிற வேண்டியது தானே” என்று ஆற்றாமையோடு கூற

 

Advertisement