Advertisement

“எல்லா அப்பா கொடுக்குற செல்லம் அம்மா இல்லாத பையன்னு ரொம்ப கெடுத்து வச்சுருக்காங்க எப்டியோ போய் தொலை பணம் இருக்குற திமிருல ரெண்டுபேரும் ஆடுறீங்க எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்ன்னு நானும் பாக்குறேன்” 

“உனக்கு பிழைக்க தெரியல அடுத்தவன் கிட்ட போய் கைகட்டி வேலை பாக்குற! எனக்கு என்ன தலையெழுத்தா? உன்ன மாதிரி அடுத்தவனுக்கு சேவகம் பண்றதுக்கு” 

“டேய் கார்த்தி உன்ன விட ஆறு வயசு பெரியவன் உன்னோட கூட பிறந்தவன் ஒழுங்கா பேசு, வார்த்தை தடுக்குது அப்றம் நானும் பேச வேண்டியது வரும் பாத்துக்கோ!” என்று ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாய் கூறினான்

“ஆமா பெரிய அண்ணே நீ பிறக்கலையேன்னு யாரு அழுதாங்க? இப்டி எனக்கு மூத்தவன பிறந்து உயிர வாங்குற உண்மைய சொன்னா கோபம் வருதோ!, அப்டி கோபப்படுறவன் எதுவும் கேக்காம பேசாம போகணும் அத விட்டுட்டு பேச வந்தா இப்டி தான் ஆகும்! நா இப்டி தான் பேசுவேன்” என்று ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணவம் கலந்து அழுத்தமாய் வெளிவர

“ச்சீ வாய மூடு நா அடுத்தவன் கிட்ட வேலை பாத்தாலும் நியாயமா சம்பாதிக்கிறேன் உன்ன மாதிரி ஊர் சுத்திட்டு அடுத்தவன ஏமாத்தி பிழைக்கலையே! நீ எனக்கு தம்பியா ஏன் பிறந்தன்னு இருக்கு! இந்நேரம் அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தாங்கன்னா நீ பண்ற கோல்மால் தனத்துக்கு இப்டி ஒரு பையனே வேணாம்னு உன்ன கொன்னுருப்பாங்க” என்றதும் 

சீறிபாய்ந்தவன் தமையனின் சட்டையை கொத்தாக பற்றி “என்னடா சொன்ன என்னோட வீட்டுலயே இருந்துகிட்டு என்னயே ஏமாத்தி பிழைக்கிறேன்னு சொல்றயா?, அப்டி கௌரவம் பாக்குறவன் இந்த வீட்டுல ஏன் இருக்கணும்” என்று கண்கள் பளபளக்க உறுமினான் கார்த்திக்

சட்டையிலிருந்து கையை வெடுக்கென்று உதறிதள்ளியவன்“எனக்கென்ன தலையெழுத்தா இந்த வீட்டுல இருக்க!, அப்பா சொன்னாறேன்னு தான் இத்தனை நாள் இங்க இருந்தேன் இனி இந்த வீட்டுல இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல நா கிளம்புறேன் இந்த நரகத்தில இருந்து எப்படா விடுதலை கிடைக்கும்னு இருந்தேன்”

“இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் மூச்சு முட்டுது ரெண்டுபேரும் எந்த வழியில இப்டி லட்சம் லட்சமா சம்பதிக்கிறீங்களோ தெரியல? அந்த காசுல வாழ கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் அதுக்கான வழிய நீயே உருவாக்கி கொடுத்துட்ட ரொம்ப நன்றி” என்று இத்தனை நாள் அடைக்கலம் கொடுத்ததற்கு இரு கைகளையும் மேலுயர்த்தி பெரிதாய் கும்பிடு போட்டவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்று சூட்கேசில் துணிகளையும் முக்கியமான அலுவலக கோப்புகளையும் எடுத்து கொண்டு டிராலியுடன் கிளம்பி கீழே வந்தான் 

“நல்ல முடிவு போய் தொலை உன்ன பாக்க பாக்க ஆத்திரமா வருது” என்று வெறுப்பை உமிழ்ந்த தமயனை கவலையோடு பார்த்தவன்

“ஒரு நாள் இல்ல ஒருநாள் அப்பாவும் பையனும் ஜெயில் கம்பி எண்ண போறீங்க பாருங்க! அதுவும் என்னோட கையாலேயே பிடிச்சு கொடுப்பேன் ரெண்டுபேரும் ஏதோ தில்லுமுல்லு பண்றிங்க ஆனா என்னன்னு தா தெரியல, எல்லாம் ஒரு நாள் வெளிய வரும் பாத்துகிட்டே இரு” என்றவன்

“இந்தா இந்த மாசம் இந்த வீட்டுல ஸ்டே பண்ணதுக்கான பணம்” என்று அவன் கையில் திணித்துவிட்டு “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பானாம்? புது பணக்காரங்க இல்லையா? எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்ன்னு நானும் பாக்குறேன்” என்று ஏளனமாக மொழிந்து விட்டு திரும்பிபாராமல் சென்று விட அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக் 

“ஆ..ஆ..ஆ..ஆ… எல்லாம் உன்னால தாண்டா உன்ன கொல்லாம விட மாட்டேன்” என்று கத்தியவனின் கோப பார்வையிலிருந்து தப்பிய பூ ஜாடி ஒன்று கையில் அகப்பட்டு கொண்டது வேகமாக எடுத்து முன்னே இருந்த மீன் தொட்டியின் மேல் எறிய தொட்டி உடைந்து கண்ணாடி சில்லுகள் நாலாபுறமும் சிதறி தண்ணீர் திபுதிபுவென வழிந்தோட மீன்களெல்லாம் பரிதாபமாய் தரையில் துடித்து உயிரை மெல்ல மெல்ல மாய்த்து கொண்டிருந்தன “இதே மாதிரி உன்ன கொல்லுவேண்டா இந்த மீன் மாதிரியே நீயும் துடி துடிச்சு சாக போற அதுவும் என்னோட கையாலயே” என்று கண்களில் ரௌத்திரம் தெறிக்க மீன்கள் துடித்து இறப்பதை குரூர புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தான் 

விஜயன் தனியாக நின்றிருப்பதை கண்ட வைஷாலி அவன் அருகில் சென்று “என்ன விஜி கண்ணா இப்டி தனியா வந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க! என்ன நினைச்சு தானே ஃபீல் பண்ற!” என்று அவன் மனநிலை தெரியாமல் அவனிடம் வம்பளக்க

“தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு செம்ம கடுப்புல இருக்கேன் அடிச்சாலும் அடிச்சுறுவேன் மரியாதையா போயிரு” என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்

“நீ அடிச்சா நா சந்தோஷமா ஏத்துப்பேன்டா” என்றவள் “நீ ஏன் எப்ப பாரு மூஞ்சிய உர்ருன்னு வச்சுருக்க உனக்கு பொண்ணுங்க கிட்ட சிரிச்சு பேச தெரியாதா? இல்ல.. என்கிட்ட சிரிச்சு பேச கூடாதுன்னு வைராக்கியதோட இருக்கியா? உன்னோட மனசுல என்ன தான் இருக்கு அதையாவது சொல்லேன்” என்று துறுதுறுவென பேசியவள் சற்று தயங்கி “நீ வேற யாரையாவது லவ் பண்றயா விஜி?” என்று கேட்க 

தகிக்கும் கோபத்தை இமைகள் மூடி அடக்கியவன் “உனக்கு அவ்ளோ தான் மரியாதை முன்னாடியே சொல்லிருக்கேன் என்கிட்ட லவ்வு கிவ்வுன்னு பைத்தியம் மாதிரி புலம்புற வேலை வச்சுக்காதன்னு, தயவு செஞ்சு என்ன விட்டுரு எனக்கு உன்மேல லவ் வராது! என்ன டிஸ்டப் பண்ணாத உனக்கு புண்ணியமா போயிரும்” என்று கையெடுத்து அவளுக்கும் அவள் காதலுக்கும் கும்பிடு போட்டவன் விஷ்ணுவின் அருகில் சென்று நின்று கொண்டான் 

அவளின் நேசம் அவனுக்கு புரியாமல் இல்லை முத்துகுளித்தவனுக்கு சிப்பியின் தவமும் வலியும் புரியமால போகும்? காதலில் தோற்றவனுக்கு காதலை நிராகரிப்பதன் வலி என்னவென்று தெரியாமலா இருக்கும்? ஆனால் அவளை ஏற்று கொள்வதில் ஒருவித தயக்கம் தடுமாற்றம் இனம் புரியா தவிப்பு அவனுக்கு, இல்லை இல்லை என்று மெல்ல மெல்ல அவனுள் அவளுக்கு அடைக்கலம் கொடுக்க தொடங்கினான் விஜயன்

அவன் பேசி சென்றதும் கண்களில் ஈரம் கோர்த்து வரவா? வேண்டாமா? என்று கண்ணீர் துருத்தி கொண்டிருந்தது கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் “உன்ன விட மாட்டேன் விஜி கண்ணா நீ எனக்கு வேணும் உன்ன அந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்னோட அப்பா அம்மாக்கு அப்றம் நீ தாண்டா என்னோட உலகம்! உனக்கு புரிய வைப்பேன் என்னோட காதல, அதுவரைக்கும் நீ என்ன திட்டினாலும் சரி அடிச்சாலும் சரி நா எதுக்கும் பின் வாங்க மாட்டேன்” என்று மனதில் தீர்மானம் எடுத்து கொண்டவள் வைதேகியின் அருகில் சென்று நின்று கொண்டாள்  

விஷ்ணு வைதேகி இருவரும் வாய் திறந்து பேசவா? வேண்டாமா? என்று தயங்கி கொண்டிருக்க “சரி விஷ்ணு நா கிளம்புறேன் ரொம்ப நேரம் ஆச்சு அம்மா வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க” என்ற துவாரகேஷிடம்

“சரிடா பாத்து போய்ட்டு வா” என்றவன் சில விஷயங்களை பேசிவிட்டு சஞ்சளாவை கடை கண்ணால் பார்த்துவாறே எதுவும் சொல்லாமல் சென்றுவிட

“தத்தி தத்தி ஒரு வார்த்தை போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போகுதான்னு பாரு இதையெல்லாம் எப்டி சஞ்சு லவ் பண்ற!” என்று நினைத்து கொண்டவள் “அம்மா துக்கம் வருது வீட்டுக்கு போலாமா? நாளைக்கு எக்ஸாம் இருக்கு அதுவும் கடைசி எக்ஸாம் காலையில சீக்கிரம் எந்திரிச்சு படிக்கணும்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே மின்சாரம் வந்து விட்டது 

“சரிக்கா போய்ட்டு வறேன் ரொம்ப நேரம் ஆச்சு போட்டது போட்டபடியே கிடக்கு எந்த வேலையும் செய்யல பசிக்கிதுன்னு சொன்னதும் அவசர அவசரமா சமையல் பண்ணிட்டு இவள கூப்பிட வந்துட்டேன்” என்று தன்னிலை விளக்கம் அளித்தவர் கிளம்பி தன் இல்லம் சென்றுவிட 

“சரி சவி நா தூங்க போறேன் ரொம்ப நேரம் ஆச்சு எல்லாம் காலையில பாத்துக்கலாம் எடுத்து வச்சுட்டு வந்து படு”என்று கூறிவிட்டு ஜெகநாதனும் இடத்தை காலி செய்ய பாத்திரங்களை எடுத்து  கொண்டு பெண்கள் மூவரும் கீழே சென்றதும் கவலையோடு விஷ்ணு விஜயனை பார்த்து கொண்டிருந்தான் மனதில் உள்ளதை மறைக்கும் திறமையில் கெட்டிகாரன் என்ற ரீதியில்.

தொடரும்…

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

Advertisement