Advertisement

புன்னகைத்து கொண்டே வெளியே வந்த விஷ்ணு துவாராகேஷின் அருகில் அமர்ந்து கைப்பற்றியவன் “சாரிடா கோபத்துல அடிச்சிட்டேன் மன்னிச்சிறு” என்று வேண்ட வேகமாக முகத்தை திருப்பி கொண்டான் துவாரகேஷ் 

“ப்ச் அதான் சாரி கேக்குறேன்ல அப்றம் என்ன? இங்க பாரு!” என்று அவன் முகத்தை திருப்பி “யார் மேலயோ இருக்குற கோபத்தை உன்மேல காட்டிட்டேன் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையேன்ற கோபம் அதான்… அவசரப்பட்டு கை ஓங்கிட்டேன் மன்னிச்சிருடா!” என்று  இறைஞ்ச

“ஓங்கி அறைஞ்சேன்னு வை பேசுறதுக்கு வாய் இருக்காது உனக்கு மட்டும் தான் அடிக்க தெரியுமா? எனக்கும் தெரியும் நா உன்கிட்ட கேட்டேனா! மன்னிப்பு கேக்க சொல்லி என்ன அடிக்கிற உரிமை உனக்கு இருக்குடா! நீ என்னோட நண்பன் என்னோட வெல்விசர் எனக்குன்னு பாத்து பாத்து பண்ணுறவன் உன்மேல எனக்கு கோபமே இல்ல என்மேல தான் கோபம், நீ சொன்ன மாதிரி நானே அவன்கிட்ட பேசி அவன் யாரு என்னனு கேட்டுருக்கணும் அத பண்ணாம உன்ன வர சொல்லி நீ வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி கிடைச்ச நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டேன்” என்று வருத்தத்துடன் கூற

“சரி விடு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்! இவனோட கோபம் தீர்ந்ததே பெரிய விஷயம் இல்லன்னா அவனோட கோபம் குறையிற வரைக்கும் உன்னோட முகத்தை பாக்க சகிக்காது” என்று விஜி கேலி பேச 

“ஹப்பா.. என்ன பிரெண்சிப் டா சாமி! தாங்க முடியல சூர்யா விஜய் ரமேஷ்கண்ணா முணுபேரையும் கண்ணுமுன்னாடி கொண்டு வந்துட்டீங்க அப்படியே பிரெண்ட்ஸ் படம் பாத்த பீலிங் உடம்பெல்லாம் புல்லரிக்குது உங்க நட்ப பாத்து” என்று ரோமங்கள் சிலிர்ப்பது போல பாவனை செய்து சிலாகித்தவளை முறைத்து பார்த்த விஜயனை சற்றும் பொருட்படுத்தவே இல்லை நெருப்பு என்றால் சுட்டுவிடுமா என்ன? அவன் எப்போதும் பார்க்கும் பார்வை தானே! நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்து பார்த்து சலித்து போனதாலோ என்னவோ உதட்டை சுளித்து கொண்டே அடுகளைக்குள் சென்றுவிட்டாள் வைஷாலி  

அவள் சென்றதும் விஷ்ணுவிடம் பேச்சை தொடர்ந்தான் விஜயன் “என்னடா திடீர்னு வந்து சாரி கேக்குற எப்டியும் கோபம் போக ரெண்டு நாள் ஆகும், முழுசா ரெண்டு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள வந்து சாரி கேக்குற அதுவும் சிரிச்சுகிட்டே! என்ன விஷயம் யாராவது சாரி கேக்க சொன்னங்களா என்ன?” என்று ஓரமாக தனக்கும் அவ்விடத்திற்கும் சம்பந்தமே இல்லாது போல் நின்று கொண்டிருந்த சஞ்சளாவை பார்த்தவாறே கேட்க

“அய்யா வேதனைபடுறத பாக்க முடியலையாம் மேல் இடத்துல இருந்து ரெக்கமென்டேஷன் பேசுங்கன்னு!, அடிச்சது கூட அவங்களுக்கு வருத்தம் இல்லையாம் இவர் கூட பேசலன்னு தான் அவங்களுக்கு வருத்தமாம்! ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னாங்க சரி மேல் இடத்து ரெக்கமென்டேஷன மீற முடியுமா! அதான் மன்னிப்பு கேட்டு பேசலான்னு முடிவு பண்ணி வந்தேன்” என்று விஷ்ணுவும் சஞ்சளாவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே குறுநகை புரிய கூறினான்

“யாரை குறித்து பேசுகின்றனர்” என்று பாஷை புரியதாவனை திருதிருவென விழித்து கொண்டே இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “என்னடா சொல்றிங்க கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க நீங்க ரெண்டுபேரும் பேசுறது சுத்தமா எனக்கு புரியல, நா வருத்தப்படுறேன் என்கிட்ட பேசுணு சொன்னது யாரு?” என்று துவாரகேஷ் கேட்க

“ம்..ம் நேரம் வரும் போது நீயே தெரிஞ்சுக்கோ நாங்க சொல்ல மாட்டோம்! யார் சொல்லணுமோ அவங்க சொல்லுவாங்க அப்ப கேட்டுக்கோ” என்றவன் “நா ட்ரெஸ் மாத்திட்டு வறேன்!” என்று விஷ்ணு சென்று விட 

அவன் செல்லும் வரை அமைதி காத்தவர் ஹாலில் அமர்ந்திருந்த மற்ற இருவரிடமும்” டேய் ரெண்டுபேரும் கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் அவனையும் கூட்டிட்டு வாங்க” என்று சாவித்திரி கூறவும்

சிந்தையை கசக்கி சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவனிடம் “ஒரேடியா இப்பவே மூளைய போட்டு கசக்காத சாப்ட்டுட்டு யோசி இப்போ வா ரூமுக்கு போலாம்!” என்று அழைத்து சென்றான் விஜயன்

பெண்கள் மூவரும் உணவு பாத்திரங்களை எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையின் மேல் வைத்து கொண்டிருக்க “சரிங்க ஆன்ட்டி நா கிளம்புறேன் அம்மா தேடிட்டு வந்துருவாங்க” என்றவளை

“இருடி சாப்ட்டு போ உங்க அம்மாகிட்ட நா சொல்லிக்கிறேன்” என்று சாவித்ரி சஞ்சளாவிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே ” ஏய் சஞ்சு! சஞ்சு!” என்று அழுத்தமாக குரல் கொடுத்து கொண்டே வந்தார் அமிர்தம் 

“சொல்லல தேடி வருவாங்கன்னு அவங்களுக்கு நா பக்கத்துலயே இருக்கணும்” என்றாள் கிசுகிசுப்பான குரலில்

“பசிக்கிதுன்னு சொல்லிட்டு இங்க வந்து என்னடி கதை பேசிட்டு இருக்க வா சாப்பாடு ஆறிட போகுது” என்றதும்

“அமிர்தா அவ இன்னைக்கு இங்க சாப்டட்டும் நீயும் இங்கயே சாப்பிடு எல்லாருக்கும் சேத்து தான் சமைச்சிருக்கேன்” என்று சாவித்ரி கூற 

“ஹப்பா இன்னைக்கு உன்னோட உப்புமால இருந்து தப்பிச்சேன்” என்று பெருமூச்சை வெளியிட்டவளின் காதை வலிக்காது திருகியவர் “ஏண்டி சொல்ல மாட்ட மூணுவேளையும் மூக்கு பிடிக்க நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு கொட்டிக்கிறல நீ இப்படியும் சொல்லுவா இதுக்கு மேலயும் சொல்லுவ” 

“ஆ…ஆ வலிக்கிது அம்ரு ப்ளீஸ் விடு சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நிஜமாவே நீ ரொம்ப நல்லா சமைக்கிற விடு அம்ரு செல்ல குட்டில” என்று தாயிடம் செல்லமாக கெஞ்சியவள் கன்னம் இரண்டையும் பற்றி இதழில் ஒற்றி கொள்ள

“சரி விடு அமிர்தா உப்புமா தானே பண்ணிருக்க நேத்தும் உப்புமா இன்னைக்கும் உப்புமாவா? அத காலையில சாப்ட்டுக்கலாம்” என்று கூறி கொண்டிருக்கும் போதே மின்சாரம் போய் விட்டது 

“அட கடவுளே! இது என்ன கொடுமை சாப்பிட போற நேரத்துல இப்டி பண்ணிட்டானே” என்று அங்கலாய்த்து கொண்டவர் “கரண்ட் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான்” என்றுவிட்டு “வைத்தி மெழுகுவர்த்தி ஏத்தி வைம்மா இருட்டுல யாராவது விழுந்துற போறாங்க” என்றதும் ஆங்காங்கே அறைக்கு ஒன்று என ஏற்றி வைத்துவிட்டு வைதேகி வர

உடைமாற்றி கொண்டு ஆடவர் மூவரும் வெளியே வந்தனர் “என்னடா கரண்ட் போயிருச்சு இரு பக்கத்து விட்டுல கரண்ட் இருக்கான்னு பாக்குறேன்” என்ற துவாரகேஷை 

“என்ன ஒரு அறிவு! கரண்ட் போச்சுன்னா இபி க்கு போன் பண்றதா விட்டுட்டு அடுத்த வீட்டுல கரண்ட் இருக்கா இல்லையான்னு பாக்குறயே மாடு முதல இபிக்கு போன் பண்ணு மாடு” என்று வைஷாலி வசைபாட

“இங்க பாரு வைசு என்ன திட்டுற வேலை வச்சுக்காத சொல்லிட்டேன்” என்று சிடுசிடுக்கவும் எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றனர்

“வைசு அவன் சொல்றது சரி தான் அவன திட்டாத இங்க அடிச்ச வேற இடத்துல வலிக்கும் சோ கோபமும் வரும்! எதுக்கும் பாத்து இரு இப்போவே புகைய ஆரம்பிச்சுருச்சுன்னு நினைக்கிறேன்” என்று விஷ்ணு கேலி இழையோடும் குரலில் கூற விஜயன் சஞ்சளாவை தவிர மற்றவர்களுக்கு அவன் கூறியதன் பொருள் விளங்கவில்லை துவாரகா விஷ்ணுவை பார்க்க நமட்டு சிரிப்புடன் விஜியின் மேல் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான் 

“இவனுங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு! அப்ப இருந்து பொடி வச்சே பேசுறான்களே நம்மள வச்சு ஏதோ ஒன்னு செய்றானுங்க என்னனு தான் தெரிய மாட்டிங்கிது என்னவா இருக்கும்! நம்மள திட்டுனா வேற யாருக்கு கோபம் வரும் ம்ம்…” என்று முறைப்பை விடுத்து தீவிர சிந்தனையில் இறங்க

“ஆன்ட்டி நா ஒரு யோசனை சொல்றேன்” என்ற சஞ்சளா “மாடியில வச்சு சாப்பிடலாமா? நிலா சோறு! அம்மா அடிக்கடி சொல்லுவாங்க அப்பாவும் அம்மாவும் அந்த மாதிரி சாப்பிடுவாங்கன்னு எனக்கும் ஆசையா இருக்கு “என்றவள் “இன்னைக்கு பௌர்ணமி ஆன்ட்டி நல்லா இருக்கும் எல்லாரும் வட்டமா உக்காந்து சாப்பிடுறது, சாப்பிடலாமா…?” என்று முகம் சுருக்கி அனுமதி கேட்க

“சூப்பர் ஐடியா!” என்று மெச்சி கொண்ட வைஷாலி”எனக்கும் அந்த மாதிரி சாப்பிடனும்னு ஆசை அத்தை ப்ளீஸ் சாப்பிடலாமே! எல்லாரும் ஒண்ணா” என்று விழிகள் விரித்து ஆசையாக கூறவும் 

சிரித்து கொண்டே “சரி..” என்று சாவித்ரி கூற அடுத்த நொடி தாமதிக்காமல் “அப்டின்னா ஓகே சித்தி ஆன்ட்டிய கூட்டிட்டு மாடிக்கு போங்க எல்லாத்தையும் நாங்க எடுத்துட்டு வர்றோம்” என்ற வைதேகி ஹாட் பாக்ஸை வைஷாலியிடம் நீட்ட அதை வாங்கி விஜயனிடம் நீட்டினாள், என்னவென்று திருதிருவென விழித்தவனை 

“என்ன அப்டி பாக்குற! கல்யாணம் ஆனா நாளைக்கு செய்ய வேண்டியது தான் கொண்டு போ” என்றதும் அவளை மேலும் தீவிரமாக முறைத்து பார்த்தான் விஜயன் 

“ஆ உனா முறைச்சு பாத்துருவயே! நீ இப்டி முறைக்கிறதுனால நா ஒன்னும் எறிஞ்சு சாம்பலாகிற மாட்டேன் விஜி கண்ணா! போ பாக்குறத விட்டுட்டு மேல கொண்டு போய் வை!” என்று அதிகாரமாய் கூறிட

“நீயெல்லாம் வேலை சொல்ற  நிலைமைக்கு வந்துட்டேன்ல நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்கிறேன்!” என்று பற்களுக்கு இடையே வார்த்தைகளை பிரயோகித்துவிட்டு சென்றான் விஜயன் 

ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்து கொண்டு மூவரும் முன்னே செல்ல “எத எடுத்துட்டு போக எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டானுங்க!” என்று யோசித்து கொண்டிருந்தவனை தொண்டையை கனைத்து அவன் கவனத்தை ஈர்த்தவள் “ஏய் தொங்கா என்ன யோசனை இந்தா இந்த சொம்ப கொண்டு போங்க நா தண்ணி குடத்தை எடுத்துட்டு வறேன்” என்று சஞ்சளா வேலை ஏவ 

“புரியாத பாஷையில என்னமோ சொல்லி திட்டுற அப்றம் கவனிச்சுக்கிறேன்” என்றவன் “நா தண்ணி எடுத்துட்டு வறேன் நீ சொம்பு கொண்டு போ” 

“ஏன் சொம்பு எடுத்துட்டு வர்றதுல அய்யாவுக்கு கௌரவ குறைச்சலோ..” என்று நக்கல் பேசியவள் “கொண்டுவா மேன்!” என்று அலட்சியமாய் மொழிந்து விட்டு முன்னே சென்று விட 

“இப்டி சொம்பு தூக்க வச்சிட்டாளே பக்கி என்னமோ கட்டிகிட்டவ மாதிரி உரிமையா எடுத்துட்டுவான்னு வேற சொல்லிட்டு போறா!” என்று நொந்து கொண்டே அவள் பின்னே சென்றான்

Advertisement