Advertisement

சொல்லுங்க அன்னைக்கு என்ன பாத்தீங்க கடத்திட்டு போனவங்கள அவங்க என்ன பண்ணாங்க சதீஷ்என்று விஷ்ணு ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் கேட்க

சொல்றேன் சார் சொல்றேன் சாக போற நேரத்துல நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா சொல்றேன் அந்த அரக்கன கைது பண்ணி தூக்கு தண்டனை வாங்கி கொடுங்க சார் என்னோட தங்கைய காப்பத்துங்க சார் அவளையும் அவன் அந்த மாதிரி ஒரு நிலைமைக்கு தள்ளிருவான்என்று அழுதவன்அன்னைக்கு நைட்டு..! அன்னைக்கு நைட்டு…!” என்றவனுக்கு ஏசி அறையிலும் முகமெல்லாம் வியர்க்க தொடங்கியது கைகால்கள் நடுக்க முற்றன 

அவன் நிலை உணர்ந்த விஷ்ணுவிஜி சீக்கிரம் டாக்டர கூட்டிட்டு வாஎன்று அனுப்பி விட்டு  “சொல்லு சதீஷ் என்ன நடந்துச்சு! அன்னைக்கு நைட்டுஎன்று பரபரப்புடன் கேட்க 

 “அதுஅது..” என்று பயத்தில் சதீஷ் திணறி கொண்டிருக்க எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவன் மூளையை பதம் பார்த்து உயிரை எடுத்து கொண்டது, துவாரகா விஷ்ணு இருவரும் திடுக்கிட்டு ஜன்னல் வழியே பார்க்க உள்ளே நுழைந்த மருத்துவர் அவனை பரிசோதித்து பார்த்துவிட்டுஇறந்துட்டார் சார்என்று ஏமாற்றமான முகபாவனையுடன் கூறவும் மூவரும் ஒருவரை ஒருவர் திகைப்பை அகற்றமால் பார்த்து கொண்டனர்

விஷ்ணுவிற்க்கோ துவாரகேஷ் மீது எல்லையில்லாத கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் உண்டானது பளார் என துவாரகாவை அறைந்தவன்நாங்க வர்ற வரைக்கும் ஏன் வெய்ட் பண்ண! என்ன சொல்ல வாறான்னு நீயே கேட்டு ரெக்கார்ட் பண்ணிருக்க வேண்டியது தானே? எதையும் ஒழுங்கா உருப்படியா பண்ண மாட்டியா? நீயும் போலீஸ் தானே! துணைக்கு ஆள் வேணுமா என்ன! கடைசியில அவன் யாருன்னு சொல்லாமலே செத்து போய்ட்டான், ச்சே முகத்துலயே முழிக்காத உன்ன பாக்க பாக்க ஆத்திரமா வருதுஎன்று கூறிவிட்டு வேகமாக வெளியேறிவிட

விஜயன் துவாரகாவின் முகத்தை சங்கடமாய் பார்த்தான் கண்கள் கலங்கி கன்னம் சிவந்திருந்ததுசரி விடு அவன் கோபத்துல அடிச்சிட்டான் பெருசா எடுத்துக்காத அவன் கோபத்தை பத்தி உனக்கு தெரியாதா என்ன? அடிச்சிட்டு அப்றம் பீல் பண்ணுவான் சரி வா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்என்று ஆறுதல் கூறி அழைத்து செல்ல

வீட்டில் வைஷாலி பெண்கள் இருவரையும் பாடாய்படுத்தி கொண்டிருந்தாள்அத்தை  குருமாவுக்கு தக்காளிய கட் பண்ணி போடனுமா இல்ல அப்டியே போடனுமா?” என்று கேட்க

அடியே நீ எதுவும் பண்ண வேணாம் எல்லா வைத்தியும் நானும் பாத்துக்குறோம் நீ போய் பொம்மை டிவி பாரு அதுக்கு தான் லாயக்கு என்னத்த வளத்து வாச்சுறுகளோ சாரதா சமையல் கூட தெரியாம ஏண்டி சுடு தண்ணீ வைக்க தெரியுமா? இல்ல அதுவும் தெரியாத?” என்று சாவித்ரி கேலியாய் பேச

அத்தை ரொம்ப கிண்டல் பண்றிங்க நா ரொம்ப நல்லா சமைப்பேன் அம்மாகிட்ட கேட்டு பாருங்க என்னோட கைப்பக்குவம் எப்டி இருக்கும்னுஎன்று பேசிக் கொண்டிருக்கும் போதே விஜயனும் விஷ்ணுவும் வந்துவிட்டனர், விஷ்ணு வேகமாக அறைக்குள் சென்றுவிட 

அவன் வேகமாக செல்வதை கண்ட வைதேகிஎன்னாச்சுண்ணா கோபமா போறாரு?”

அது வேற விஷயம்மாஎன்றவன்அது இருக்கட்டும் இதை சமையல் கட்டுக்குள்ள விட்டிங்க ஒண்ணுவிடாம எல்லா..த்தையும் வயித்துக்குள்ள தள்ளி முடிச்சிரும் இதுல நல்லா சமைப்பேன்னு பில்டப் வேற எங்க அத கூப்பிடுங்கஎன்றதும் 

வேகமாக முன்னே வந்தவள்இங்க பாரு விஜி கண்ணா எனக்கு பேர் வச்சுருக்காங்க அழகா வைஷாலின்னு ! அதவிட்டுட்டு அது இதுன்னு கூப்பிடுற, நா என்ன ஆடா மாடா? அப்டி கூப்டறதுக்கு ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடு ஏன் எனக்கு சமைக்க தெரியாத? அன்னைக்கு நல்லா இருக்குன்னு மிச்சம் வைக்காம கொட்டிக்கிட்டயே அப்ப தெரியல நா நல்லா சமைப்பேனா இல்லையான்னு?” என்று தாளிக்காமலேயே கடுகாய் பொறிய 

அம்மா தாயே அன்னைக்கு உங்க அம்மா முன்னாடி நல்லா இல்லன்னு சொல்ல மனசு வரல அதான்! வேற வழியில்லாம  உன்னோட அம்மா கேட்டதும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டேன்! அதுவும் உங்க அம்மா செஞ்சுருப்பாங்கன்னு நினைச்சு தான் சொன்னேன், தெரியாம சொல்லிட்டேன் அத நினைச்சு நிறைய நாள் தூங்காம ஃபீல் பண்ணிருக்கேன் கேவலமான சாப்பாட நல்லா இருக்குன்னு பொய் சொல்லிட்டோமேன்னு ஆள விடு விட்டா பேசிட்டே போவஎன்று கையை தலைக்கு மேல் தூக்கி பெரிதாய் கும்பிடு போட்டவன் பின்னே திரும்பி பார்க்க துவாரகேஷ் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் 

ப்ச் இவன் வேறடேய் உள்ள வாடா ஆரத்தி எடுத்து அழைக்கணுமா என்ன?” என்று அலுத்து கொள்ள 

தயங்கி கொண்டே உள்ளே வந்தவன் அமைதியாய் இருக்கஎன்னடா இவன் முகம் இப்டி இருக்கு யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று சாவித்ரி கேட்கவும்

இல்ல ஆன்ட்டி வீட்டுக்கு போறேன்னு சொன்னான் நான் தான் வம்படியா பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டேன் அதுக்கு தான் முகத்தை தூக்கி வச்சுருக்கான் வேற ஒன்னுமில்லஎன்று சமாளித்த விஜயன்ஆன்ட்டி ரொம்ப பசிக்கிது சமையல் ஆச்சா!” என்று வயிற்றை தடவி கொண்டே கேட்க

என்ன பையண்டா நீ! வீட்டுக்கு கிளம்பும் போதே சொல்றது இல்லையா?” என்று நொடித்து கொண்டவர்இன்னும் சமையல் முடியல அதுவரைக்கும் பசி தாங்குற மாதிரி ரெண்டுபேருக்கும் காஃபி கொண்டுவறேன்என்றவர்ஏம்மா வைத்தி அவனுக்கு காஃபி வேணுமான்னு கேட்டுட்டு வாஎன்று அனுப்பி வைக்க விஜயன் பசி என்றதும் வைஷாலியும் சாவித்ரியுடன் சென்று உதவளானாள் 

சரி விடுடா எப்பவும் நடக்குறது தானே! என்னஎப்பவும் வாய் பேச்சோட நின்னுடும் இன்னைக்கு கொஞ்சம் மேல போய் கை நீட்டிட்டான் ஃபீல் பண்ணாதஎன்று தேற்றி கொண்டிருக்க வேகமாக உள்ளே வந்த சஞ்சளா விஜயன் பேசியதை கேட்டு விட்டு துவாரகாவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே சமையலறைகுள் நுழைந்தாள்

வாடி நீயும் வந்துடயா? என்னடா பேச்சு துணைக்கு ஓர் ஆள் குறையிதேன்னு நினைச்சேன் நீயே வந்துட்ட சரி இந்த காஃபிய கொண்டு போய் முணுபேருக்கும் கொடு! கேட்டுட்டு வர சொன்னவள இன்னும் காணோம்என்றபடியே டிரேயை நீட்ட

 டிரேயை வாங்கி கொண்டு வந்தவள் விஜயனுக்கு எடுத்து  கொடுத்துவிட்டு துவாரகாவை பார்க்க தலையை தொங்கபோட்டு முகம் வாடி அமர்ந்திருந்தான் எப்போதும் வம்பிழுத்து சீண்டுபவன் இன்று அமைதியாய் இருப்பது சஞ்சளாவின் மனதில் நெருடலை ஏற்படுத்தஏங்க காஃபி எடுத்துகோங்க ரொம்ப நேரமா குனிஞ்சிட்டு இருக்கேன்என்று எப்போதும் போல துடுக்காய் பேசியவள் டிரேயை அவன் முன் நீட்ட

அங்க வச்சுட்டு போஎன்று முகம்பாராமல் அவன் கூறவும் அவள் முகம் வாடி போனது அவள் முகமாற்றத்தை குறித்து கொண்ட விஜயன்நீ வச்சுட்டு போம்மா அவன் குடிப்பான்என்று விட அமைதியாக விஷ்ணுவின் அறைக்கு சென்றாள் 

அறையில் வைதேகி விஷ்ணுவிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தாள்என்னாச்சு விணு உங்க முகமே சரியில்ல இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்திருந்திருந்திங்களாமே! என்ன விஷயம் என்கிட்ட சொல்ல கூடாதா?, துவா அண்ணனுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? அவரு முகமே சரியில்ல சொல்லுங்க விணு நியூஸ்ல என்னென்னமோ சொன்னாங்க ஏன் எதுவுமே பேச மாட்டிங்கிறீங்க நா கேட்டுகிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்என்று கேள்வியாய் கேட்டு நச்சரித்தவள் அவனை தன் புறம் திருப்ப

பொறுமை தாளாமல்கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுறயா?” என்று கத்தவும்

உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க என்ன சொல்லணும் எப்போ எந்த மூட்ல இருக்கிங்கன்னே தெரியல? சிடுமூஞ்சி எப்டியோ போங்க, சாரி தேவிம்மான்னு வருவீங்கள அப்போ வச்சுக்கிறேன்என்று கறுவிக்கொண்டே சென்றுவிட

வைதேகி சென்றதும் அதுவரை வெளியே நின்று கொண்டிருந்த சஞ்சளா உள்ளே நுழைந்துஅண்ணா காஃபிஎன்று கூற

டேபிள் மேல வச்சுட்டு போம்மாஎன்று ஜன்னலின் வழியே வெளியே பரந்து கிடந்த நீல வானத்தை வெறித்தபடி கூறினான்

டேபிள் மேல் வைத்தவள்அண்ணாஎன்று தயங்கி அழைக்கவும் திரும்பியவனிடம்உங்களுக்கும் அவருக்கும் அதான்.. து..துவாரகா..”என்று அவன் பெயரை கூறும் போது வார்த்தைகள் சீராய் இல்லாமல்  திக்கி திணறி வெளிவந்தன 

என்ன பிரச்னைன்னு தெரியிது நீங்க அவர அடிச்சிருக்கிங்க? ஆனா எதுக்காக அடிச்சிங்க அவரு என்ன பன்னாருன்னு எனக்கு தெரியாது!, ஒன்னு மட்டும் சொல்றேன் நீங்க அவர்கிட்ட பேசலன அவரால தாங்கிக்க முடியாது, அவரு பீல் பண்ணாஎன்னால தாங்கிக்க முடியாது கோபத்த விட்டுட்டு அவர் கூட பேசுங்கண்ணா ப்ளீஸ்என்று கவலையுடன் கூறியவள்காஃபி ஆறிட போகுது சீக்கிரம் குடிசிறுங்கஎன்று விட்டு சென்று விட அவள் கூறியதை அதிர்ச்சியுடனும் அதே நேரம் ஆச்சர்யத்துடனும் பார்த்து கொண்டு நின்றிருந்தவன் இதழில் மெலிதான புன்னகை தவழ்ந்தது..

தொடரும்

விழுந்தேன் உனக்குள் நானே நானே

கனிந்தேன் கலந்தேன் நானே நானே

கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ

நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ

Advertisement